Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தம்மை தாமே ஆளும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்-சுமந்திரன்

Featured Replies

தமிழர் தம்மை தாமே ஆளும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்-சுமந்திரன்
 
 
தமிழர் தம்மை தாமே ஆளும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்-சுமந்திரன்
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகை யிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று(19) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.
 
பல்வேறு ஏக்கத்தின் மத்தியிலும் இந்த வருடமும் தீர்வுத்திட்டம் தவறிப் போய்விடுமா என்ற கவலையுடனேயே இந்த தைப்பொங்கலை தமிழர்கள் கொண்டாடினர். சென்றவருடம் பொங்கலைக் கொண்டாடிய போது நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு வருடமாகின்றது. இந்த 2016இல் ஒருதீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்த பொங்கலை கொண்டாடினோம்.
 
பல எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஆண்டு அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்டபோது இரண்டு மாதகால தடங்களும் இருந்தது. இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுடியாமல்,மார்ச்மாதம் 09ஆம் திகதி நிறைவேற்றப்பட்டபோது அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சரித்திர நிகழ்வு நடைபெற்றது.
 
நல்லாட்சி என்ற அடிப்படையில் இரண்டு முக்கிய கட்சிகள் இந்த நாட்டில் புதிய அத்திபாரத்தையிட வேண்டும் என்பதற்காக சரித்திரத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
 
இந்த நிலையில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்படாத நிலையில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நாங்களும் அச்சமடைந்தோம்.ஆனால் இறுதியில் அந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
இதனடிப்படையில் அரசியலமைப்பு கூடி தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியது. அதன்கீழ் உபகுழுக்களின் அறிக்கைகள் ஓகஸ்ட்மாதம் வெளிவந்தது.
 
நடக்குமா நடக்காதா என்ற கருத்துகளும் நடக்காத என்ற விமர்சனங்களும் கூறிக்கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு உப குழுக்களிலும் அனைத்துகட்சி பிரதிநிதிகள் இருக்கத்தக்கதாக வெளிவந்த நிலையில் மக்கள் மத்தியில் சிறு நம்பிகை துளிர்விட்டது.
 
முக்கியமான இடைக்கால அறிக்கையொன்று வரவிருந்தது. அது டிசம்பர் 10வரை பிற்போடப்பட்டது. மீண்டும் 10ஆம் திகதியும் பிற்போடப்பட்டது.
 
இந்த வருடமும் தீர்வுத்திட்டம் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய நிலையில் அது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே நாங்கள் தைப் பொங்கலைக் கொண்டாடிவருகின்றோம்.
 
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா? தமிழ் பேசும் மக்களுடைய அபிலாசைகளை முழுமையாக பூர்த்திசெய்யக்கூடிய வகையில் எங்களது பகுதியை நாங்களே ஆளக்கூடிய வகையில் ஆட்சிமுறையைக்கொண்ட புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று உருவாகுவதற்கான கேள்வி இன்று எழுந்துள்ளது.
 
தீர்வுத்திட்டத்தை நாங்கள் இலகுவாகப்பெற்றுக்கொள்ளமுடியும் என நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அதன் காரணமாகவே மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் எழுந்தன.
 
ஆனால் அதனை நடாத்தி முடிக்கின்ற பொறுப்பு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்தேயாக வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
 
ஒரு தீர்வுக்காக உயிர்களைக்கொடுத்து போராடியுள்ளோம்.போராளிகளை மட்டுமன்றி மக்களின் உயிர்களையும் இதற்காக கொடுத்துள்ளோம். அவ்வாறான தியாகங்களை செய்த எங்களினால் தீர்வினைப் பெற முடியாமல் போகுமா என்ற ஆதங்கம் பலரிடம் உள்ளது.
 
இந்த ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்திய காலம் தொடக்கம். தமிழ் மக்களை அழித்தொழித்துவிடுவார்கள், தமிழர்களுக்கு நியாயமானதை தரமாட்டார்கள் என்ற காரணத்தினால் கடந்த ஆட்சிக்காலத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.
 
அதற்காகவே அவர்கள் அகற்றப்பட்டனர். இந்த நாட்டில் இருந்த சிறுபான்மை மக்களின் வாக்கு பலத்தினால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் வாக்களித்தனர். அதே நம்பிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தொடர்ச்சியாக பாரம் கொடுத்தனர். அதன் மூலமாகவே இந்த நிலைக்கு வந்துள்ளோம்.
 
மற்றைய நாடுகளில் இல்லாத ஒன்றை நாங்கள் கேட்கவில்லை.உலகில் உள்ள எந்த தனி தேசத்திற்கும் எந்த தனி மக்களுக்கும் உரித்துடையதை பெற்றுக் கொடுக்கவேண்டிய கடப்பாடு உலகத்திற்கு உண்டு என்ற உணர்வுடன் உலக நாடுகள் எங்கள் பின்னால் வந்தது.
 
அதுவரைக்கும் பல்வேறு காரணங்களுக்காக எங்களது போராட்டங்களை அனுபவித்திருக்காத நாடுகளும் கூட எங்களுக்கு பின்னால் அணி திரண்டுள்ளன.
 
தமிழ் மக்களின் சக்தியுடன் தமிழ் மக்களின் ஜனநாயக சக்தியுடன் உலக நாடுகளின் தார்மீக ஆதரவுடன்தான் இந்தளவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
 
தற்போது ஏற்பட்டுள்ள தடங்கலையும் தாண்டி பயணிப்பதற்கு சர்வதேச சக்தியே எங்களுக்கு முக்கியமாக நிற்கின்றது. இதில் இருந்து அரசாங்கம் தவறமுடியாது. இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களும் மறுதலிக்க முடியாது என்கின்ற நிலைப்பாட்டில் இன்று உலகம் இருக்கின்றது.
 
தடங்கல் வரும் என்று எதிர்பார்த்தோம்.அதனை எதிர்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம். அதனைவிட்டு ஓடுவதற்கு யாரும் நினைக்கவில்லை. இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் தடங்கல்களை மீறி தற்போதுள்ள மக்கள் சக்தியோடும்
 
உலக ஆதரவோடும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம். அதனை இந்த பொங்கலில் நாங்கள் எடுக்கும் திடசங்கற்பமாகும். என மேலும் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/22891

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை அரசுடன் சேர்ந்து தயாரித்த வரைபு என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இது வரை அரசுடன் சேர்ந்து தயாரித்த வரைபு என்னவோ?

கேள்வி  கேட்கப்படாது

வரும்

ஆனா  வராது

சொந்தக்கட்சி  எம்பியின் கொலை தீர்வு  போல...

  • தொடங்கியவர்

எம்மை நாமே ஆளும் அர­சி­ய­ல­மைப்பு வரும்

Published by Gnanaprabu on 2017-01-20 10:14:15

 

தடைகளையும் மீறி இந்த ஆண்டு தற்­போ­துள்ள மக்கள் சக்­தி யோடும் உலக ஆத­ர­வோடும் தமிழ் மக்­க ளின் அபி­லா­ஷை களை நிறை­வேற்றும் வகை­யிலும் எமது மக்­கள் தங்­களைத் தாங்­களே ஆளக்­கூ­டிய வகை­யி­லான உரித்­தினை ஏற்­ப­டுத்தும் ரீதி­யிலும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­குவோம் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் யாழ் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.சுமந்­திரன் தெரி­வித்தார்.

நேற்று வியா­ழக்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு தேவ­நா­யகம் மண்­ட­பத்தில் நடை­பெற்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பொங்கல் விழாவில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே   அவர் இதனை தெரி­வித்தார்.

இங்கு தொடர்ந்து  உரை­யாற்­று­கையில் 

பல்­வேறு ஏக்­கத்தின் மத்­தி­யிலும் இந்த வரு­டமும் தீர்­வுத்­திட்டம் தவ­றிப்­போ­யி­வி­டுமோ என்ற கவ­லை­யு­ட­னேயே இந்த தைப்­பொங்­கலை தமி­ழர்கள் கொண்­டா­டினர். சென்­ற­வ­ருடம் பொங்­க­லைக்­கொண்­டா­டி­ய­போது நாட்டில் ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி ஒரு வரு­ட­மா­கின்­றது இந்த 2016இல் ஒரு­தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்­கை­யுடன் அந்த பொங்­கலை கொண்­டா­டினோம்.

உங்­க­ளுக்­காக போரா­டி­வரும் தமிழ் அர­சியல் தலை­வர்கள் ஒரு தீர்­வைப்­பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்ற முனைப்­புடன் செயற்­பட்­ட­தையும் நீங்கள் அவ­தா­னித்­தி­ருப்­பீர்கள். இந்த தடவை தமக்கு தீர்­வு­கி­டைக்­கா­விட்டால் எத்­தனை தசாப்தம் செல்­லுமோ என்ற கவ­லை­யுடன் மக்கள் இருந்­தனர்.

பல எதிர்­பார்ப்­பு­க­ளுடன் கடந்த ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு பேரவை உரு­வாக்­கப்­பட்­டது. அது உரு­வாக்­கப்­பட்­ட­போது இரண்டு மாத­கால தடங்­களும் இருந்­தது. இரண்டு தட­வைகள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­ப­ட­மு­டி­யாமல்,மார்ச்­மாதம் 09ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்­ட­போது அது ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்ட சரித்­திர நிகழ்வு நடை­பெற்­றது.

நல்­லாட்சி என்ற அடிப்­ப­டையில் இரண்டு முக்­கிய கட்­சிகள் இந்த நாட்டில் புதிய அத்­தி­பா­ரத்­தை­யி­ட­வேண்டும் என்­ப­தற்­காக சரித்­தி­ரத்தில் இரண்டு கட்­சி­களும் ஒன்று சேர்ந்­துள்­ளன. இந்த நிலையில் குறித்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் பல்­வேறு கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டன. நாங்­களும் அச்­ச­ம­டைந்தோம். ஆனால் இறு­தியில் அந்த தீர்­மானம் எந்­த­வித எதிர்ப்பும் இல்­லாமல் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

இத­ன­டிப்­ப­டையில் அர­சி­ய­ல­மைப்பு சபை  கூடி தீர்­மா­னங்­களை ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றி­யது.அதன்கீழ் உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் ஆகஸ்ட்­மாதம் வெளி­வந்­தன. அவை நட­வ­டிக்கை குழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன.அந்த உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் வெளி­வந்­த­போ­துதான் தமிழ் மக்­களின் மனதில் நம்­பிக்கை துளிர்­விட்­டது.

நடக்­குமா நடக்­காதா என்ற கருத்­து­களும் நடக்­காதா என்ற விமர்­ச­னங்­களும் கூறிக்­கொண்­டி­ருந்த நிலையில் ஒவ்­வொரு உப குழுக்­க­ளிலும் அனைத்­து­கட்சி பிர­தி­நி­திகள் இருக்­கத்­தக்­க­தாக வெளி­வந்த நிலையில் மக்கள் மத்­தியில் சிறு நம்­பிகை துளிர்­விட்­டது.

முக்­கி­ய­மாக இடைக்­கால அறிக்­கை­யொன்று வர­வி­ருந்­தது.அது டிசம்பர் 10 வரை பிற்­போ­டப்­பட்­டது.மீண்டும் 10ஆம் திக­தியும் பிற்­போ­டப்­பட்­டது.இந்த வரு­டமும் தீர்­வுத்­திட்டம் இல்­லா­மல்­போ­யி­டுமோ என்று அஞ்­சிய நிலையில் அது கால­வ­ரை­ய­றை­யின்றி பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.இந்த நிலை­யி­லேயே நாங்கள் பொங்­க­லைக்­கொண்­டா­டி­வ­ரு­கின்றோம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டுமா?தமிழ் பேசும் மக்­க­ளு­டைய அபி­லா­சை­களை முழு­மை­யாக பூர்த்­தி­செய்­யக்­கூ­டிய வகையில் எங்­க­ளது பகு­தியை நாங்­களே ஆளக்­கூ­டிய வகையில் ஆட்­சி­மு­றை­யைக்­கொண்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்டம் ஒன்று உரு­வா­கு­வ­தற்­கான கேள்வி இன்று எழுந்­துள்­ளது.தீர்­வுத்­திட்­டத்தை நாங்கள் இல­கு­வா­கப்­பெற்­றுக்­கொள்­ள­மு­டியும் என நாங்கள் நம்­பிக்­கை­கொள்­ள­வில்லை. அதன்­கா­ர­ண­மா­கவே மக்கள் மத்­தியில் பல்­வேறு கருத்­துகள் எழுந்­தன.

ஆனால் அதனை நடாத்­தி­மு­டிக்­கின்ற பொறுப்பு தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­திகள் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது.அதனை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு செய்­தே­யா­க­வேண்­டிய பொறுப்பு இருக்­கின்­றது.வட­கி­ழக்கு மக்கள் தமது அபி­லா­சை­களை பூர்த்­தி­செய்யும் மாபெரும் பணியை தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பிடம் வழங்­கி­யுள்­ளனர். அதனை முழு­மை­யாக நிறை­வேற்றும் பொறுப்பு எங்­க­ளுக்கு உள்­ளது.அதனை எமது தலைவர் நடாத்­தி­மு­டிப்பார்.

ஒரு தீர்­வுக்­காக உயிர்­க­ளைக்­கொ­டுத்து போரா­டி­யுள்ளோம். போரா­ளி­களை மட்­டு­மன்றி மக்­களின் உயிர்­க­ளையும் இதற்­காக கொடுத்­துள்ளோம்.அவ்­வா­றான தியா­கங்­களை செய்த எங்­க­ளினால் தீர்­வி­னைப்­பெ­ற­மு­டி­யா­மல்­போ­குமா என்ற ஆதங்கம் பல­ரிடம் உள்­ளது.

 தமிழ் மக்­களை அழித்­தொ­ழித்­து­வி­டு­வார்கள்,தமி­ழர்­க­ளுக்கு நியா­ய­மா­னதை தர­மாட்­டார்கள் என்ற கார­ணத்­தினால் கடந்த ஆட்­சிக்­கா­லத்தை மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நாங்கள் மேற்­கொண்டோம். அதற்­கா­கவே அவர்கள் அகற்­றப்­பட்­டனர்.இந்த நாட்டில் இருந்த சிறு­பான்மை மக்­களின் வாக்கு பலத்­தினால் அவர்கள் வீட்­டுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டனர்.நம்­பிக்­கை­யுடன் தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தனர்.அதே நம்­பிக்­கை­யினை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிடம் தொடர்ச்­சி­யாக பாரம்­கொ­டுத்­தனர்.அதன் மூல­மா­கவே இந்த நிலைக்கு வந்­துள்ளோம்.

தொடர்ச்­சி­யாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கு மக்கள் வழங்­கிய ஆத­ரவு உல­கத்­தி­லேயே மிகப்­பெரும் ஆத­ரவு சக்­தி­யாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு பின்னால் கொண்­டு­வந்­தது.

மற்­றைய நாடு­களில் இல்­லாத ஒன்றை நாங்கள் கேட்­க­வில்லை.உலகில் உள்ள எந்த தனி தேசத்­திற்கும் எந்த தனி மக்­க­ளுக்கும் உரித்­து­டை­யதை பெற்றுக்கொ­டுக்­க­வேண்­டிய கடப்­பாடு உல­கத்­திற்கு உண்டு என்ற உணர்­வுடன் உலக நாடுகள் எங்கள் பின்னால் வந்­தது.

இது­வ­ரைக்கும் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக எங்­க­ளது போராட்­டங்­களை அனு­ப­வித்­தி­ருக்­காத நாடு­களும் கூட எங்­க­ளுக்கு பின்னால் அணி­தி­ரண்­டுள்­ளன.

தமிழ் மக்­களின் சக்­தி­யுடன் தமிழ் மக்­களின் ஜன­நா­யக சக்­தி­யுடன் உலக நாடு­களின் தார்­மீக ஆத­ர­வு­டன்தான் இந்­த­ள­வுக்கு நாங்கள் வந்­துள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள தடங்கலையும் தாண்டி பயணிப்பதற்கு சர்வதேச சக்தியே எங்களுக்கு முக்கியமாக நிற்கின்றது. 

இதில் இருந்து அரசாங்கம் தவறமுடியாது.இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களும் மறுதலிக்கமுடியாது என்கின்ற நிலைப்பாட்டில் இன்று உலகம் இருக்கின்றது. தடங்கல் வரும் என்று எதிர்பார்த்தோம். அதனை எதிர்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம். அதனைவிட்டு ஓடுவதற்கு யாரும் நினைக்கவில்லை.

இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் தடங்கல்களை மீறி தற்போதுள்ள மக்கள் சக்தியோடும் உலக ஆதரவோடும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்.அதனை இந்த பொங்கலில் நாங்கள் எடுக்கும் திடசங்கற்பமாகும்.

http://www.virakesari.lk/article/15594

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.