Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய் தந்தையரின் கல்லறைகளை புனரமைத்த கோத்தா! படையெடுத்த விசாரணைப்பிரிவினர்

Featured Replies

மெதமுலனவில் அமைந்துள்ள மஹிந்தவின் தந்தை “டி.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியகம்” மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரச மதிப்பீட்டு அதிகாரிகள் இணைந்து நேற்று காலை குறித்த பகுதியை சோதனையிட்டுள்ளனர்.

இறுதி மதிப்பீட்டு அறிக்கையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த தேடுதலை முன்னெடுத்திருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“வீரகெட்டிய திட்டம்” என்ற பெயரில் திட்டமொன்றை ஆரம்பித்து தமது தாய் தந்தையரான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதிகளின் கல்லறைகளைப் புனரமைத்தல் மற்றும் அருங்காட்சியகமொன்றை நிர்மாணிப்பதற்காக 9 கோடி ரூபா செலவிடப்பட்டதாக கடந்த காலத்தல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விசாரணைகளுக்காகவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் அந்த அமைச்சுக்கு சொந்தமான காணிகளை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபனத்தின் ஊடாக குறித்த நிதி ராஜபக்ஸ அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/132483?ref=home

  • தொடங்கியவர்
9 hours ago, போல் said:

“வீரகெட்டிய திட்டம்” என்ற பெயரில் திட்டமொன்றை ஆரம்பித்து தமது தாய் தந்தையரான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதிகளின் கல்லறைகளைப் புனரமைத்தல் மற்றும் அருங்காட்சியகமொன்றை நிர்மாணிப்பதற்காக 9 கோடி ரூபா செலவிடப்பட்டதாக கடந்த காலத்தல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு அரச அதிகாரியாக இருந்துகொண்டு பொதுபலசேனா, ராவணபலய போன்ற சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்களை உருவாக்கியது மட்டுமல்ல, பல்லாயிரம் மக்களின் படுகொலைகளை செய்த, பலகோடி கப்பங்களைப் பெற்ற மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதி கோத்தபாயா பல ஊழல்களைச் செய்தாலும் இன்னமும் சுதந்திரமாக உலாவருவது நல்லாட்சி என்ற பெயரில் நடைபெறுவது சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதமே என்பதை தெளிவாக சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.