Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தில்: மூன்று அமைச்சர்கள் பதவிநீக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தில்: மூன்று அமைச்சர்கள் பதவிநீக்கம்!

[வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2007, 21:32 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களைத் தொடர்ந்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகிய உட்பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலைமையில் மூன்று மூத்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்துள்ள அரசுத் தலைவர் மகிநத ராஜபக்ஷ, குறிப்பிட்ட அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றார். அமைச்சர்களான அநுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராட்சி ஆகியோரே இன்றிரவு அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள

ஆனால் யாரோ சொன்னார்கள் இவர்கள் வெளிநாடு ஒன்றில் புலிகளிடம் பயிற்சி பெற்றதாக உண்மையோ? யாராலும் உறுதிப்படுத்த முடியுமா?

மங்கள, அனுரா, சிறீபதி அமைச்சர் பதவிகள் பறிப்பு

தற்போதைய மகிந்த அரசின் மூத்த அமைச்சர்களான மங்கள சமரவீர, அனுரா பண்டாரநாயக்க, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரின் அமைச்சுக்களை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பறித்துள்ளார்.

இவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டனரா, கட்சியிலிருந்து விலத்தப்பட்டனரா போன்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை

மங்கள, அனுரா, சிறீபதி அமைச்சர் பதவிகள் பறிப்பு

தற்போதைய மகிந்த அரசின் மூத்த அமைச்சர்களான மங்கள சமரவீர, அனுரா பண்டாரநாயக்க, சிறீபதி சூரியாராச்சி ஆகியோரின் அமைச்சுக்களை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பறித்துள்ளார்.

இவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டனரா, கட்சியிலிருந்து விலத்தப்பட்டனரா போன்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை

அப்ப லக்சபாணா மின்கம்பமொண்டு நெளியபோறது உண்மைதான்போல....

அனுரா வெட்கம் மானம் ரோசம் எல்லாத்தையும் விட்டு ரணிலோடு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தெருநாய்கள் ஜாக்கிரதை!

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா வெட்கம் மானம் ரோசம் எல்லாத்தையும் விட்டு ரணிலோடு சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அனுரா பண்டாராநாயக்கா, ரணில் கூடத்தான் இருந்தவர். முன்பு சொல்வார்கள் இவர் எந்தக் கட்சியில் இருக்கின்றதோ, அந்தக் கட்சி எதிர்கட்சியாகவே இருக்கின்றது என்று. ரணிலிடம் ஆட்சியைப் பறிக்கும் வரை அவரது அரசியல் வாழ்வு முழுக்க, அந்த நிலை தான் இருந்தது. இப்போது தான் கொஞ்சக்காலம் அமைச்சராக. இருந்தாலும் அதையும் மகிந்த விட்டு வைக்க மாட்டேன் என்கின்றாரே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா தம்பிக்கு ராஜபக்ஷே "ஆப்பு"

பிப்ரவரி 10, 2007

கொழும்பு: தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய, முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பி அனுரா பண்டார நாயகே உள்ளிட்ட 3 அமைச்சர்களை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே நீக்கியுள்ளார்.

இலங்கையில் தற்போது சுதந்திராக் கட்சி, கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. தனது கட்சி அரசை பெரும்பான்மை பலம் கொண்ட அரசாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அவர்.

இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியை துண்டு துண்டாக உடைத்து வருகிறார் ராஜபக்ஷே.

முதலில் 18 எம்.பிக்களை ரணில் கட்சியிலிருந்து இழுத்து அவர்களை அமைச்சராக்கினார். தற்போது மேலும் 10 பேர் விலகவுள்ளனர். இவர்களையும் அமைச்சர்களாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ராஜபக்ஷேவின் இந்தப்போக்குக்கு அமைச்சர்கள் அனுரா பண்டாரநாயகே, மங்கள சமரவீரா, ஸ்ரீபதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சமரவீராவை மாற்றிய ராஜபக்ஷே, அவருக்கு உப்புச் சப்பில்லாத துறையை கொடுத்தார்.

ஸ்ரீபதிக்கு எந்த இலாகாவும் கொடுக்காமல் சும்மா வைத்திருந்தார். அனுராவை மட்டும் விட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் அனுரா உள்ளிட்ட 3 பேரின் பதவிகளையும் பறித்துள்ளார் ராஜபக்ஷே.

ராஜபக்ஷேவின் இந்த அதிரடி நடவடிக்கையால் இலங்கை அரசியலில் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது. அனுரா தலைமையில் ராஜபக்ஷேவுக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் தொடங்கும், இலங்கையில் பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புலிகளுடன் பேச்சு நடத்தியது தவறு: ராஜபக்ஷே

இதற்கிடையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தவறு என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

கொழும்புவில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது தவறு. அவர்கள் வன்முறையை கைவிடுவதாக இருந்தால் மட்டுமே அடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/10/lanka.html

front2we1.gif உந்த மூணு மாத்தயாக்களையும் "புலிகளின் பெயரில்" தட்ட வெதமாத்தயா குடும்பம் வெளிக்கிட்டதாம். அது இரகசியமாக இந்த மாத்தயாக்களுக்குத் தெரிய வரத்தானாம், அவையள் உரக்க சவுண்ட் விடத் தொடங்கினவையளாம்!!!

வெதமாத்தயாக்கள் ராஜபக்ஸ குடும்பத்தின் கெட்ட காலம், உலகம் இன்னொரு வெதமாத்தயாக்களின் நாடகத்தை காணத் தவறி விட்டது!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று அமைச்சர்களின் பதவிகள் பறிமுதல் தீர்மானத்தினை அக் கட்சியின் செயற்க்குழு அங்கிகரித்து

வீரகேசரி இணையத்தளப்பிரிவு

அநுரபண்டாரநாயக்க , மங்களசமரவீர , சூரியராச்சி ஆகியோரின் அமைச்சு பதவிகள் நேற்று இரவு உடன் அமுல் படுத்தும் வகையில் ஜனாதிபதி மகிந்தவினால் பறிக்கப்பட்ட தீர்மானத்தினை சுந்திர கட்சியின் செயற்க்குழு அங்கரித்துள்ளது.

ஜனாதிபதி இன்று அவசரமாக கூட்டப்பட்ட மத்திய செயற்குழு கூட்டத்தில் பதவி இழந்த அமைச்சர்கள் சட்ட விதிகளை பல தடவை மீறையுள்ளதாகவும் , பாரளுமன்ற அவசரகால சட்ட நீடிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள தவறியமையும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது - இந்த தகவலை அமைச்சர் அலவி மெளலான உறுதிப்படுத்தியுள்ளார்.

நீக்கப்பட்ட அமைச்சர்களின் பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டுள்ளன

கடந்த வெள்ளிக்கிழமை சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவினால் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களின் உயர் பாதுகாப்புக்களும் அரசினால் விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தமது பாதுகாப்பை அதிகரிக்கும் படியும் அனுரா பண்டாரநாயக்கா, மங்களா சமரவீரா, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசிடம் வேண்டுகோள் விடுத்த 48 மணிநேரத்தில் அவர்களின் பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இரவுடன் இந்த மூன்று மூத்த அமைச்சர்களினதும் பாதுகாப்புக்கள் விலக்கப்பட்டதுடன் அவர்களின் பாதுகாப்பிற்கு இரு காவல்துறை உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று அமைச்சர்களின் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினரும், மேலதிகமாக பின்தொடர்ந்து செல்லும் வாகனங்களும் முன்னர் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவினால் தான் மேற்படி அமைச்சர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் மீளப்பெறப்பட்டதாகவும். தமது அறிவித்தல்கள் இல்லாது இந்த அமைச்சர்களின் பாதுகாப்பில் தலையிட வேண்டாம் என்று இராணுவத்தினரும் பணிக்கப்பட்டுள்ளனர்.

எனது பிரச்சாரங்களால் தான் விடுதலைப்புலிகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தது, எனவே எனக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து ஏற்படலாம். எனது பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என மங்களா பெப்ரவரி 7 ஆம் நாள் சிறீலங்கா காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேரா மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்த மங்களாவின் பாதுகாப்பு உறுப்பினர்களை நீக்கிவிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் தனது உயிருக்கு வேறு அரசியல் கட்சிகளாலும் ஆபத்து நேர்ந்துள்ளதாகவும், அரச அதிபர் தேர்தலின் போது மகிந்தவின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தான் பிரதான இணைப்பாளராக இருந்ததாலும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் அதனால் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் அனுரா பண்டாரநாயக்கா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அவரது பாதுகாப்பை அதிகரிக்கும்படி கடந்த வாரம் உத்தரவிட்ட மகிந்த தற்போது பாதுகாப்பை விலக்கிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களை அரசு உள்வாங்கியதற்கு எதிர்ப்புக்களை தெரிவித்தால் தான் இந்த மூன்று அமைச்சர்களும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவர்களது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.eelampage.com/?cn=30755

p1-l.jpg

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கூடியபோது கட்சியின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கு முக்கியஸ்தர்கள் கையுயர்த்தி ஆதரவு தெரிவிப்பதையே காணலாம். ...

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் காலில் விழுவது போன்று, மகிந்தவின் கால்களிலும் ஒருவர் விழுகின்றார். உறுப்பினராக யாரும் சண்டே லீடரில் இருந்தால் முழுமையான படத்தைப் பிரசுரியுங்கள்.

page%201-panel-pic.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயலலிதாவின் காலில் விழுவது போன்று, மகிந்தவின் கால்களிலும் ஒருவர் விழுகின்றார். உறுப்பினராக யாரும் சண்டே லீடரில் இருந்தால் முழுமையான படத்தைப் பிரசுரியுங்கள்.

அதே படம் தான் உள்ளேயும் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷே அரசுக்கு புதிய ஆபத்து!

பிப்ரவரி 12, 2007

கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பி தலைமையில் சில கட்சிகள் முடிவு செய்துள்ளதால் ராஜ பக்ஷே அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், தமிழர்கள் மீது ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. வாகரை உள்ளிட்ட சில இடங்களில் வசித்து வந்த தமிழர்களை விரட்டி அடித்து விட்டு அந்தப் பகுதிகளை கைப்பற்றியுள்ளது.

ராணுவத்தின் தொடர் தாக்குதல் காரணமாக பல்லாயிரணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் தனது அரசுக்கு பெரும்பான்மை பலத்தை சேர்க்கும் முயற்சியில் அதிபர் ராஜபக்ஷே இறங்கியுள்ளார்.

முதல் கட்டமாக முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்து 18 எம்பிக்களை இழுத்து அவர்களை அமைச்சராக்கினார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சிங்களக் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளைக் கொடுத்தார்.

இதற்கு ராஜபக்ஷேவின் கட்சிக்குள் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக முன்னாள் அதிபர் சந்தி>காவின் தம்பி அனுரா பண்டாரநாயகே தலைமையில் 3 அமைச்சர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து அவர்களை அதிரடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.

போர்க்கொடி உயர்த்தியவர்களில் அனுரா தவிர முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவும் முக்கியமான நபர் ஆவார். இந் நிலையில் ராஜபக்ஷேவுக்கு எதிராக கட்சிகளை திரட்டும் வேலையில் அனுரா இறங்கியுள்ளார்.

மற்றொரு முக்கிய சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவும் இப்போது ராஜபக்ஷேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது. ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர இந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.

இதேபோல மேலும் சில சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ்க் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற 113 ஓட்டுக்கள் தேவை. தற்போது அரசுக்கு எதிராக 102 பேர் உள்ளதாக தெரிகிறது. எனவே மேலும் 11 பேரை சேர்த்துக் கொண்ட பின்னர் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர அனுரா மற்றும் பிற அதிருப்தி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அனுரா மற்றும் பிற அதிருப்திக் கட்சிகளின் தீவிர நடவடிக்கையால் விரைவில் ராஜபக்ஷே அரசு கவிழக் கூடிய ஆபத்து அதிகரித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/02/12/lanka.html

  • கருத்துக்கள உறவுகள்

பல அமைச்சர்கள் அநுராவை ஹொரகொல்லையில் சந்திப்பு

- ப.பன்னீர்செல்வம் -

அமைச்சர் பதவிகளிலிருந்து அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் முக்கிய அமைச்சர்கள் பலர் ஹொரகொல்லையில் அநுரா பண்டாரநாயக்காவை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு சென்ற நிலையில் ஹொரகொல்லையில் அநுரா பண்டாரநாயக்காவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு முற்பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெற்றதாகவும் தெரியவரும் அதேவேளை, இவ்வாரம் நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையில் புதிய அணியொன்று உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் நேற்று முற்பகல் ஹொரகொல்லைக்குச் சென்று முன்னாள் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்காவை சந்தித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளதாக அறியவரும் அதேவேளை, இது சமரசப் பேச்சுவார்த்தையா அல்லது புதிய அணியொன்றை சுதந்திரக் கட்சிக்குள் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையா என்பது தொடர்பில் எதுவிதத் தகவல்களும் உடனடியாக வெளியாகவில்லை.

இப்பேச்சுவார்த்தைகள் சுமார் 5 மணிநேரம் நடைபெற்றுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடுத்த சில தினங்களில் நாடு திரும்பவுள்ளதாகத் தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் வருகையின் பின்னர், அமைச்சுப் பதவிகள் நீக்கப்பட்ட எம்.பி.க்களான அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் இணைந்தும் சுதந்திரக் கட்சியில் குறிப்பிட்டளவானோரையும் வேறு பல கட்சிகளையும் இணைத்து பரந்துபட்ட ரீதியிலான புதிய கட்சியொன்றை உருவாக்கும் திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அக்கட்சி நாட்டில் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுத்து நிறுத்தவும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முன்னிற்குமென்றும் தெரியவருகிறது.

இதேவேளை, பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான ஷ்ரீபதி சூரியாராச்சி இது தொடர்பாக தினக்குரலுக்கு தெரிவிக்கையில்,

நான் உட்பட எம்.பி.க்களான அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்ட பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை யார் மேற்கொண்டார்கள், எதற்காக? என்ற கேள்விகளுக்கு நாளை செவ்வாய்க் கிழமை நாமனைவரும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பகிரங்கமாக பதிலளிப்போம்.

எம்மை வெளியேற்றியது திட்டமிட்ட செயலே, நாம் எதுவித சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவுடன் கடந்த பல மாதங்களாக எனக்கு எதுவித தொடர்பும் கிடையாது. தொலைபேசியூடாகவும் உரையாடியதில்லை.

கடந்த சில நாட்களாக ஒரு சில ஆங்கில வாரப்பத்திரிகைகளில், நான் நாட்டின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் புலிகளுடன் தொடர்பு கொண்டுள்ள தாகவும் தொடர் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் என்னை கொலை செய்வதற்கு புலிகள் குண்டு வைத்தனர். இதனை அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவே தெரிவித்தார்.

இந்நிலையிலேயே இவ்வாறு சோடிக்கப்பட்ட கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன.

இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளேன், இதன் பின்னணியில் என்னை கொலை செய்வதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை நடத்தி பின்னணியில் உள்ளோரை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளேனென்றும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு திரும்பவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க மறைந்த தனது கணவர் ஸ்தாபித்த "மக்கள் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து தனது தம்பியையும் ஏனைய அதிருப்தியாளர்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றும் தெரியவருகிறது.

இது தொடர்பாக, விஜயகுமாரதுங்க கொலை செய்யப்பட்ட தினமான எதிர்வரும் 16 ஆம் திகதி பாரியதொரு நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தி தனது பகிரங்க மீள் அரசியல் பிரவேசிப்பை அறிவிப்பார் எனவும் தெரியவருகிறது.

அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேற்றப்பட்டோரை மீண்டும் இணைத்துக் கொள்வதில்லையென்றும் கட்சிக்குள்ளிருந்து குழிபறித்தால் இதே பாடம் புகட்டப்படுமென்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

- தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.