Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழி சிங்கள, தமிழ் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்

Featured Replies

நாவற்குழி சிங்கள, தமிழ் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்
 
நாவற்குழி சிங்கள,  தமிழ் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல்
யாழ்.நாவற்குழியில் தமிழ், சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் யாழ்மாவட்ட  அரசாங்க அதிபர் நா. வேதநாயகனால்  நாட்டிவைக்கப்பட்டது. 
 
நாவற்குழி பகுதியில் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து சில குடும்பங்கள் அத்து மீறி குடியிருந்தன. அதனை தொடர்ந்து   யாழ் .மாவட்டத்திலும் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் அத்துமீறி கடந்த காலத்தில் குடியம ர்த்தப்பட்டனர். 
 
அதனைத் தொடர்ந்து  குறித்த பிரதேசத்தில்  உள்ள மேலதிக காணிகளில் மேலும் சில காணிகள் அற்ற  குடும்பங்கள் குடியேற்ற ப்பட்டு தற்போது அப்பகுதியில் 200 சிங்களக் குடும்பங்களும், 53 தமிழ் குடும்பங்களும் வசித்து வருகின்றன. இந் நிலையில் வீட மைப்பு  அதிகார சபையினால் இந்த வருடம் 200 சிங்களக் குடும்பங்களுக்கும் ம் 50 தமிழ் குடும்பங்களுக்கும்   காணிகள்   பகிர்ந்த ளிக்கப்பட்டு 5 இலட்சம் ரூபா‌ய் பெறுமதியில் வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டது.
 
இந் நிலையிலேயே மேற்படி வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்  இன்று முற்பகல் 10.30 மணியளவில்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் நாட்டி வைத்தார். இந் நிகழ்வில் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள போதும் அவர்கள் கல ந்து கொள்ளவில்லை.
 
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்,  உதவி  அரசாங்க அதிபர் செந்தில்நந்தன் , தென்மராட்சி பிரதேச செயலாளர் மற்றும்  அரச  அதிகாரிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
16426804_844825488989868_1755170045_n.jpg
 
1485756247_16426804_844825488989868_1755170045_n.jpg

http://onlineuthayan.com/news/23284

  • கருத்துக்கள உறவுகள்

200 தமிழ் 50 சிங்களம் என்றார்கள் இப்போ மாறிவிட்டதே 

  • தொடங்கியவர்
நாவற்குழி வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிவைப்பு
 
article_1485757564-3.jpg

-எஸ்.நிதர்சன்

நாவற்குழியில் உள்ள, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள 250 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, இன்று காலை இடம்பெற்றது.

யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

பல வருடங்களாக, அடிப்படை வசதிகள் அற்ற நிலையில்,  குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நாவற்குழியில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 250 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், 200 தமிழ்க்குடும்பங்களுக்கும் 50 சிங்கள குடும்பங்களுக்குமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

“நாவற்குழியில் சிங்கள மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட கூடாது. தமிழ் மக்கள் காணிகளற்று இருக்கும் போது, சிங்கள குடும்பங்களுக்கு காணிகள் வழங்க கூடாது” என, அண்மையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/190690/ந-வற-க-ழ-வ-ட-ட-த-த-ட-டத-த-க-க-அட-க-கல-ந-ட-ட-வ-ப-ப-#sthash.8rO1edOx.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

நவீனன் இந்த இரண்டு செய்திகளிலும் எதை நம்புவது? ஏனெனில் இரண்டாவதாக இணைத்த செய்தியில் bolt செய்திருக்கிறீர்கள். சுட்டிக் காட்டவே அவ்வாறு செய்திருக்கிறீர்கள்.

1 hour ago, நவீனன் said:
இந்த வருடம் 200 சிங்களக் குடும்பங்களுக்கும் ம் 50 தமிழ் குடும்பங்களுக்கும்   காணிகள்   பகிர்ந்த ளிக்கப்பட்டு 5 இலட்சம் ரூபா‌ய் பெறுமதியில்.

9 minutes ago, நவீனன் said:
இதனடிப்படையில், 200 தமிழ்க்குடும்பங்களுக்கும் 50 சிங்கள குடும்பங்களுக்குமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Edited by MEERA

  • தொடங்கியவர்

பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற நாவற்குழியில் வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 

Published by Priyatharshan on 2017-01-30 18:17:49

யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள மக்களுக்காக புதிதாக அமைக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed.jpg

நாவற்குழியில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் குடியமர்ந்திருக்கின்றனர். இதில் அங்கு குடியமர்ந்திருக்கின்ற சிங்கள மக்கள் அத்து மீறிக் குடியமர்ந்துள்ளதாகவும் அவர்களுக்கு காணிகளையோ அல்லது வீடமைப்புத் திட்டங்களை வழங்கக் கூடாதென்றும் மக்கள் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

unnamed-_3_.jpg

அங்கு குடியமர்ந்திருக்கின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்களும் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் இதற்கு தமிழ்த் தரப்புக்களிடமிருந்து எதிர்ப்புக்கள் வெயளியிடப்பட்டிருந்ததுடன் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed-_2_.jpg

இந் நிலையில் அங்கு குடியமர்ந்திருக்கின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய தமிழ் மக்களுக்கு 200 வீடுகளும் சிங்கள மக்களுக்கு 53 வீடுகளும் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வு இன்று காலை 10 .30 மணிக்கு நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் இரு பிரிவுகளாக தமிழ் மக்களுக்கான வீடமைப்பு திட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் என்றும் சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் என்றும் இரு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தன.

unnamed-_1_.jpg

ஆயினும் முதலாவதாக சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கே அரச அதிபரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இந் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் அங்கு இரானுவப் பிரசன்னமும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/16021

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி பொருத்து வீட்டை இங்கு ஏன் பொருத்தவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறி குடியிருந்தவர்களுக்கும் அத்துமீறி குடியேற்றப்பட்டவர்களுக்கும் கல் வீடு மற்றவர்களுக்கு பொருத்து எனும் உருக்கு.

16 hours ago, MEERA said:

அது சரி பொருத்து வீட்டை இங்கு ஏன் பொருத்தவில்லை?

நெல்லுக்கிறைத்த நீர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.