Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு

Featured Replies

தமிழக முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு

 

 
சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ
சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ
 
 

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வி.கே.சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர்.

முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

பின்னணி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.

கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடப்பதாக தகவல் வெளியானது. ஊருக்குச் செல்ல இருந்த எம்.எல்.ஏக்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியது. ஊருக்குச் சென்றவர்களை உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டது. எம்.எல்.ஏக்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, விரைவில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவே இந்த நடவடிக்கை என கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதிமுக தலைமையின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் நிலைப்பாடு?

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவானால், சக்தி அளிப்பதாக திமுகவின் துரைமுருகன் பேசியது, சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், ''தமிழக அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. எந்த ஒரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே திமுக எடுக்கும்'' என்று கூறியுள்ளார்.இதனால் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://tamil.thehindu.com/tamilnadu/தமிழக-முதல்வராகிறார்-சசிகலா-அதிமுக-சட்டப்பேரவை-குழு-தலைவராகவும்-தேர்வு/article9522730.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
முதல்வராக என்னை பன்னீர் வலியுறுத்தினார்: சசிகலா

 

சென்னை: அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது: ஜெ., மறைவுக்கு பின், நான் தான் பொது செயலாளராக பொறுப்பேற்க வேண்டுமென பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். தற்போது நான் முதல்வராக பதவியேற்க வேண்டுமென அவர் தான் வலியுறுத்தினார். ஜெ.,வின் கொள்கைகளை கட்டிகாக்கும் வகையில் அரசு செயல்படும். மக்களுக்கான அரசாக அதிமுக அரசு செயல்படும் எனக்கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704847

  • தொடங்கியவர்
கவர்னர் திடீர் டில்லி பயணம்?

 

கோவை: சென்னையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் , சட்டசபை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர், கோவையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.
ஆனால், டில்லியில் இருந்து வந்த அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. மும்பை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இண்டிகோ விமானம் மூலம் டில்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704848

  • தொடங்கியவர்
துணை முதல்வராகிறார் ஓ.பி.எஸ்.,?

 

சென்னை: அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் 7 அல்லது 9ம் தேதி முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்னவென்று தகவல் வெளியாகவில்லை. எனினும், அவர் துணை முதல்வராக வாய்ப்பு உள்ளது என்ற கருத்து வேகமாக பரவி வருகிறது. இது தவிர, கட்சியில் அமைப்பு செயலாளர் பொறுப்பு கொடுத்த பிறகும் அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் உள்ளிட்ட சிலருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என தகவலும் வெளியாகி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704849

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

’தமிழகத்தை இருள் சூழ்ந்தது’ : குஷ்பு

Khushbu

தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க போவதாக இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தை இருள் சூழ்ந்துவிட்டதாக    குஷ்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜனநாயகம் கொல்லப்பட்டுவிட்டது. அரசியல் அமைப்பில் என்ன நடந்தாலும் மக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும்’, என்று கடுமையாக சாடியுள்ளார். 

 

TN is doomed.

 
 

Democracy was just murdered..whatever happened 2 the constitution where the CM was elected by the people..

http://www.vikatan.com/news/tamilnadu/79843-tn-is-doomed---khushbu.art

  • தொடங்கியவர்
மக்களின் எண்ணத்திற்கு மாறாக சசிகலா தேர்வு: ஸ்டாலின்

 

திருவாரூர்: அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: மக்கள் சசிகலாவிற்கு ஆதரவாக ஓட்டுப்போடவில்லை. சசிகலாவிற்கு கடசியிலும், ஆட்சியிலும் ஜெ., பொறுப்பு வழங்கியதில்லை. தற்போது நிகழ்ந்த மாற்றத்தை தி.மு.க., ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும். மக்கள் எண்ணத்திற்கும், ஜெயலலிதா எண்ணத்திற்கும் விரோதமாக அறங்கேறிய செயல் இது. இவ்வாறு அவர் கூறினார்.

 

அவசரம் ஏன்?

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது: சசிகலா தேர்வு செய்யப்பட்டது அ.தி.மு.க.,வின் உரிமை. எம்.எல்.ஏ.,க்கள் அவசரப்படாமல் இருந்திருக்கலாம். அவசர அவசரமாக சசிகலாவை ஏன் தேர்வு செய்தனர் என புரியவில்லை. அவர் தற்போது முதல்வராக வேண்டிய அவசியமில்லை. ஜெ.,க்கு நிகராக சசிகலாவை கருதமுடியாது. சவாலான சூழல்களை பன்னீர்செல்வம் திறம்பட கையாண்டார். ஆட்சி என வரும்போது மற்ற கட்சி தலைவர்கள் கேள்வி கேட்டார்கள். தமிழக மக்களும் கேள்வி கேட்பார்கள் என்பது எனது கணிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: சசிகலாவை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்வது என்பது அ.தி.மு.க.,வின் உரிமை.

 

பொறுத்திருங்க...:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன்: சசிகலா எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சசிகலாவை மக்கள் ஏற்கிறார்களா என்பது 6 மாதத்தில் தெரிந்துவிடும் .

 

வரவேற்பு:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: சசிகலாவை சட்டசபை குழு தேர்வு செய்தது வரவேற்கத்தக்கது. ஆட்சியை மக்கள் அ.தி.மு.க.,விடம் ஒப்படைத்துள்ளனர்.

 

சந்தேகம்:

முன்னாள் தமிழக காங்., தலைவர் இளங்கோவன், சசிகலா தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகம் தான் எனக்கூறியுள்ளார்.
நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது: மீண்டும் பதற்றம் தொற்றி கொண்டது. விறுவிறுப்பு ஜூரம் வந்துள்ளது. சசிகலா தேர்வு ஏன் அவசரம் என தெரியவில்லை. எதற்கு இந்த அவசரம். யாருக்காக அவசரம் என புரியவில்லை எனக்கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704851

 

  • தொடங்கியவர்

'தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி' : அன்பழகன்

Anbazhagan

 ’இன்னும் சில நாட்களில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி’, என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்  ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சசிகலா முதல்வராக பதவியேற்க போவதை விமர்சித்துள்ள அன்பழகன்,’சசிகலா நினைத்ததை நிறைவேற்றி வருகிறார். ஜெயலலிதாவினுடைய மரணத்திற்கு விசாரனைக் கமிஷன் அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்’, என்று தெரிவித்துள்ளார்.

சசிகலா நினைத்ததை நிறைவேற்றி வருகிறார்.

ஜெயலலிதாவினுடைய மரணத்திற்கு விசாரனைக் கமிஷன் அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

http://www.vikatan.com/news/tamilnadu/79844-dmk-to-form-the-government-in-few-days---anbazhagan.art

  • தொடங்கியவர்

ஓபிஎஸ் ராஜினாமா; பிப்.9-ம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் சசிகலா

சசிகலா | படம்: பிடிஐ
சசிகலா | படம்: பிடிஐ
 
 

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். வரும் 9-ம் தேதி ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 21-வது முதல்வராக சசிகலா பதவியேற்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அன்றைய இரவே அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா தோழியான சசிகலா கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர்.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவை தேர்வு செய்யும் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து, சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் போயஸ் தோட்டத்துக்கு சசிகலா திரும்பினார்.

சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர் தமிழகத்தின் 21-வது முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா, வரும் 9-ம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடக்கும் என்றும், இதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓபிஎஸ் ராஜினாமா

இந்நிலையில், தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், ''தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது தலைமையிலான அமைச்சரவையையும் விடுவிக்க வேண்டும்'' என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரும் 7-ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார். அதன்பின்னர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோருவார் சசிகலா. அதன்பின் ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

http://tamil.thehindu.com/tamilnadu/ஓபிஎஸ்-ராஜினாமா-பிப்9ம்-தேதி-முதல்வராகப்-பதவியேற்கிறார்-சசிகலா/article9522865.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

பேருந்து ஓட்டுனர் வேலை - ரூபாய் 3 லட்சம்
பேருந்து நடத்துனர் வேலை - ரூபாய் 4 லட்சம்
கல்லூரி பேராசிரியர் வேலை - ரூபாய் 33 லட்சம்
கல்லூரி துணைவேந்தர் வேலை - ரூபாய் 3 கோடி
........
இன்னும் பல வேலையிடங்கள் சலுகை விலையில் ..மேலும்

பாலில் தண்ணீர் கலந்து கொள்ளை அடிக்கும் ஆவின் பால் ஒப்பந்தம் ..
மலையை குடைந்து கொள்ளை அடிக்கும் கிரானைட் ஒப்பந்தம் ..
வெளிநாட்டுக்கு தாது மணலை கொள்ளை அடித்து அனுப்பும் ஒப்பந்தம் ..
கர்நாடாகவிற்கு காவிரி ஆற்று மணலை கொள்ளை அடித்து அனுப்பும் ஒப்பந்தம்..

மேலும் பணியிட மாற்றம் குறித்து ..

கஞ்சா கடத்தும் தேனீ  ரூ கேரளா சோதனை சாவடி ஆய்வாளர் ..
ஆற்று மணல் கடத்தும் ஒசூர் ரூ பெங்களூர் சோதனை சாவடி ஆய்வாளர்..
பாலாற்று மணல் கடத்தும் தமிழ்நாடு ரூ ஆந்தரா சோதனை சாவடி ஆய்வாளர்.
மேலும் ஆசிரியர், தாசில்தார்,வி.எ.ஒ,பொறியாளர் அனைத்தும்..

மொத்தமாகவும் சலுகை விலையில் பெற்று கொள்ளலாம்.முதலில் வருபவர்களுக்கு தள்ளுபடி உண்டு .!

டிஸ்கி :

 வேலையும் .. வேணாம் ஒரு கூந்தலும் வேணாம் .. நான் சசிகலா வீட்டு வேலை செய்ய போறன் ..ஓட்டடை அடிக்க.. செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற.. இந்தா கிளம்பிட்டன் .. :cool:

  • தொடங்கியவர்

#சிடி டூ சி.எம்

டிசம்பர் 5-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த செய்தி வெளியானது. தற்போது பிப்ரவரி 5-ம் தேதி  சசிகலா, அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் தோழி என்ற ஒரு அடையாளத்துடன் மட்டுமே இருந்த சசிகலா, இந்த இரண்டு மாதங்களில் சின்னம்மா, அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்றக் கட்சி தலைவர், விரைவில் முதல்வர் என பல அடையாளங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை குறித்த குட்டி ரீ-வைண்ட்.

Sasikala with Jayalalithaa


1956 -  விவேகானந்தன்-கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.

1973 - அரசு துணை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜனை திருமணம் செய்தார்.

1980- ஜெயலலிதா அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்து வளர்ந்து கொண்டிருந்த நேரம். அப்போது ஜெ.,வுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைத்தது. பின், அவரது பிரசார சுற்றுப் பயணங்களை படம் பிடிக்கும் வாய்ப்பை  ‘வினோத் வீடியோ விஷன்’ மூலம் நடராஜன்-சசிகலா பயன்படுத்திக் கொண்டனர். ஜெயலலிதாவின் பிரசார கேசட்டுகளை கொடுப்பதற்காக, வேதா இல்லத்துக்குள் அடிக்கடி நுழைந்தார் சசிகலா. அப்போதே ஜெயலலிதாவுடன் அறிமுகம் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூரு சென்றார். அவருக்கு துணையாக யாரை அனுப்புவது? என்று பேச்சு எழுந்தபோது, சசிகலா பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. சசிகலா என்றதும் ஜெயலலிதாவும் க்ரீன் சிக்னல் காட்டினார்.

1984- தேர்தல் நேரம். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் பிரசாரங்களுக்கு கூட்டம் அள்ளியது. இதனால், பாதுகாப்பை பலப்படுத்த மன்னார்குடியில் இருந்து சசிகலாவின் தம்பி திவாகரன் வரவழைக்கப்படுகிறார். பின் ஜெ., கூட்டங்களுக்கு திவாகரனும் செல்ல துவங்கினார். இதையடுத்து தனி உதவிக்கு சசிகலா, பாதுகாப்புக்கு திவாகரன், அரசியல் ஆலோசனைக்கு நடராஜன் என கார்டனை, மன்னார்குடி ஆக்கிரமிக்க துவங்கியது

கார்டனில் மட்டுமல்ல, ஜெயலலிதா டெல்லியில் ராஜ்யசபாவுக்கு சென்றாலும் சசிகலா உடன் சென்றார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு ஜெயலலிதாவுக்கு எதிர்ப்புகள் கிளம்ப, அவருக்கு ஆறுதல் கூறினார்கள் சசிகலா மற்றும் நடராஜன். 

1989- திவாகரனின் நடவடிக்கைகள் ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் திவாகரன் வெளியேற்றப்படுகிறார்.  அதற்கு பிறகு, நடராஜன் உடனும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஆனால், சசிகலா தொடர்ந்து ஜெயலலிதா அருகிலேயே இருந்து வந்தார்.

1991- ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரான பிறகு, கார்டன் வீட்டுக்குள்ளேயே குடிபுகுந்தார் சசிகலா. சட்டசபைக்கு சென்றாலும், கார்டன் சென்றாலும் ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்தார் சசிகலா. ஒரு கட்டத்தில் 'உடன் பிறவா சகோதரி சசிகலா' என ஜெயலலிதா அறிக்கை விட்டார். பின்னர், மன்னார்குடி குடும்பம் ஆதிக்கம் செலுத்த துவங்கியது.


1996- சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது.  ஃபெரா வழக்கில் சசிகலா கைதானார். அதே ஆண்டு, சசிகலாவை நீக்கினார் ஜெயலலிதா. இதையடுத்து 1997-ம் ஆண்டு மீண்டும் சசிகலாவை சேர்த்துக்  கொண்டார்.

Sasikala with Jayalalithaa

2001- ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். ஜெயலலிதாவை யார் சந்திக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யும் அளவுக்கு வளர்ந்தார் சசிகலா. மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தது.

2011- சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கூண்டோடு நீக்கினார் ஜெயலலிதா. சிறிய இடைவெளிக்கு பிறகு சசிகலா மீண்டும் கார்டனுக்குள் நுழைந்தார்.

2014- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் கைதாகினர். 

2016- செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்படுகிறார். ஜெயலலிதா உடல்நலன் குறித்து அறிக்கைகள் வந்து கொண்டிருந்தன. அப்போலோவும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் சசிகலாவின் உத்தரவுகளை பின்பற்றுகிறார்கள். 

டிசம்பர் 5-ம் தேதி இரவு ஜெயலலிதா மரணமடைந்தார். 

டிசம்பர் 6-ம் தேதி ஜெயலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதல் கூறினார். சசிகலா கட்சி பொறுப்பை ஏற்க வேண்டும், ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ர.ர -க்கள் கோஷங்களை எழுப்பினர்.

Sasikala

டிசம்பர் 29-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 

டிசம்பர் 31- அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றார்.

2017- இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், முதல்வர் ஓ.பி.எஸ் முன்மொழிய அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


30 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்ததால் கட்சிப் பொறுப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் சசிகலாதான் கவனிக்க வேண்டும் என்கின்றனர் அதிமுகவினர். ஆனால், ஜெயலலிதாவிற்கு துணையாக இருந்தார் என்பதற்காகவே, சசிகலாவை மக்கள் ஏற்பார்களா?

http://www.vikatan.com/news/tamilnadu/79856-from-cd-to-cm-sasikalas-history.art

  • தொடங்கியவர்
சசிகலாவுடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை!

 

சென்னை:முதல்வராக பதவியேற்கவுள்ள சசிகலாவை தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்தார். அவருடன் உயர் அதிகாரிகளும் சசிகலாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.அதிமுக சட்டசபைக்குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று தேர்வு செய்யப்பட்டார்.
சசிகலா, 9ஆம் தேதிக்குள் முதல்வராக பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந் நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சசிகலாவுன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவீன் வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. அரசு உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பதவியேற்பு விழா குறித்து சசிகலா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704864

முதலமைச்சராக ஒப்புக்கொண்டது ஏன்? - சசிகலா விளக்கம்

 

"கட்சியின் பொதுச் செயலராகவும் தமிழக முதலமைச்சராகவும் ஒருவரே இருக்க வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தி வந்ததன் விளைவாக, உங்கள் அனைவரின் கோரிக்கைகளையும் நான் ஏற்கிறேன்," என்று அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாபடத்தின் காப்புரிமைAIADMK Image captionதேர்வு மேடையில்

கட்சித் தலைமைமையகத்தில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒரு மனதாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, ஏற்புரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஜெயலலிதா மறைந்த உடனே, கட்சியின் பொதுச் செயலராகவும், முதலமைச்சராகவும் நானே பொறுப்பேற்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் முதன் முதலில் வலியுறுத்தினார். ஆனால், அப்போது எதையும் ஏற்கும் மன நிலையில் நான் இல்லை," என்றார் சசிகலா.

"அதிமுகவினர் தொடர்ந்து என்னைச் சந்தித்து கோரிக்கை வைத்ததால் கட்சியின் பொதுச் செயலராகப் பொறுப்பேற்றேன். அதேபோல், இப்போதும், கட்சியின் பொதுச் செயலராகவும், முதலமைச்சராகவும் ஒருவரே இருக்க வேண்டும் என்ற உங்கள் அனைவரின் கோரிக்கையையும் நான் ஏற்கிறேன்," என்றார் சசிகலா

"ஜெயலலிதா அவர்களின் கனவை முழுமையாக நிறைவேற்றுவேன். மக்களுக்காக இந்த ஆட்சி செயல்படும்," என்று சசிகலா உறுதியளித்தார்.

கட்சிக்கு சோதனை வந்த போதெல்லாம், ஜெயலலிதா அவர்கள் முதல்வராகத் தொடர முடியாத போதெல்லாம், கட்சித் தலைமைக்கு விசுவாமாகத் திகழ்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம் என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் விரிசல் வராதா என்று கனவு கண்ட அரசியல் எதிரிகளின் எதிர்பார்ப்புகளைப் பொடிப்பொடியாக்கிய நிர்வாகிகளுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சசிகலா தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-38873641

  • தொடங்கியவர்

தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வராகிறார் சசிகலா .....!!

சசிகலா

மிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக விளங்கிய இரு திராவிட கட்சிகளிலும் தலைமை மாறிவிட்டது. அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் 31 -ம் தேதி பதவி ஏற்றார். அதன் பின்னர் விரைவில் முதலமைச்சராகவும் சசிகலா பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது.அதனை உறுதிப்படுத்தும் விதமாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம். எல். ஏக்கள்  கூட்டம் நடைபெறும் என்று (4.2.2017) சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு இந்த கூட்டத்தில் எம். எல்.ஏ-க்களின் ஆதரவை கோருவார் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.அதில் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.பின்னர் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தனது முதல்வர் பதவியை  பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ததாகவும் தகவல் வெளியானது.சசிகலா சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு போயஸ் கார்டனில் ஓ பன்னீர் செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.அதன் பின்னர் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 


இதன்மூலம் தமிழகத்தின் மூன்றாவது பெண் முதலமைச்சர் என்கிற தகுதியைப்  பெறுகிறார் சசிகலா நடராஜன். தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக அ.தி.மு.க-வின் ஜானகி ராமச்சந்திரன் 1988 - ம் ஆண்டு பதவி ஏற்றார்.பதவி ஏற்ற 23  நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஆட்சி பொறுப்பை இழந்தார்.இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெண் முதலமைச்சராக அதே கட்சியை சேர்ந்த ஜெயலலிதா 1991 - ல் பதவியேற்றார்.ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த டிசம்பர் 5 -தேதி மறைந்தார்.

அவருடைய  மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று ஆட்சி பொறுப்பை வழிநடத்தினார். கடந்த டிசம்பர் 31 -ம் தேதி சசிகலா பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 61 வயதாகும் இவர் மன்னார்குடியில் பிறந்தவர். 

 

விவேகானந்தன்-கிருட்டிணவேணி தம்பதியனருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் சசிகலா ஐந்தாவதாக பிறந்தவர். ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனுக்கு  கேசட் கொடுக்க வந்தபோது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.அதன் காரணமாக ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக அவரது இறப்பு வரை இணை பிரியா தோழியாக இருந்தார்.பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றபோது இதனை அவரே கூறியுள்ளார்.ஜெயலலிதாவுடன் இருந்த நாட்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றார். பின்னர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை நீதிபதி குமாரசாமி வழக்கில் இருந்து விடுவித்தார்.சொத்துக்குவிப்பு வழக்கு ,அன்னிய செலாவணி  மோசடி வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கின்ற சூழலில் தற்போது தமிழகத்தின் மூன்றாவது  பெண்  முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் வி.கே.சசிகலா (எ) திருமதி.சசிகலா நடராஜன்.

http://www.vikatan.com/news/coverstory/79851-sasikala-likely-to-be-sworn-in-as-third-women-chief-minister-of-tamilnadu.art

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் சிகிச்சை ரகசியங்களை வெளியிடுவாரா சசிகலா?'

 
 

தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெறுவதைவிட, அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையைப் பெறுவதே சசிகலாவின் முதல் சவாலாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர் ஞாநி தெரிவித்துள்ளார்.

சசிகலாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை சசிகலா பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் ஞாநி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க தயாராகிவிட்ட நிலையில், அவரது இந்த நியமனம், எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று தெரிவித்தார். ஏற்கெனவே கட்சி அவரது பிடியில் இருந்து வந்த நிலையில், ஆட்சியும் மறைமுகமாக இருந்து வந்தது. நேரடியாக இரண்டையும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஞாநி சுட்டிக்காட்டினார்.

பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஆகிய இரண்டு பதவியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தியதால்தான், முதலமைச்சர் பொறுப்பையும் ஏற்க முன்வந்ததாக சசிகலா கூறியிருப்பது ஒரு சமாதானம்தான் என்று குறிப்பிட்ட ஞாநி, அப்படியென்றால், ஓ. பன்னீர் செல்வத்தையே கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆக்கியிருக்கலாமே என்று கருத்துத் தெரிவித்தார்.

சசிகலாவின் கணவர் நடராஜன், ஆட்சியில் மறைமுகமாக ஆளுமை செலுத்துவார் என்ற கருத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்று குறிப்பிட்ட ஞாநி, அவர் மட்டும்தான் ஆளுமை செலுத்துவாரா அல்லது குடும்பத்தில் உள்ள பலர் ஆளுமை செலுத்துவார்களா என்பதைப் போகப் போகத்தான் பார்க்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதா முடிவுக்கு மாறாக...

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கம், ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட கட்சியினருக்கு முக்கியத்துவம் என சசிகலா எடுக்கும் நடவடிக்கை, தான் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, முக்கியப் பதவிகளில் தனக்கு இணக்கமானவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளது என்றார் ஞாநி.

ஞாநி Image captionஞாநி

"தற்போது, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதை விட, அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையைப் பெறுவதே அவரது முதல் சவாலாக இருக்கும். பெரும்பான்மையான தொண்டர்களுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. அதைப் பெற வேண்டுமானால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தரப்பட்டது? ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? எவ்வாறு அவர் கவனித்துக் கொள்ளப்பட்டார் என்பதை எல்லாம் சசிகலா பகிரங்கமாக வெளியிடவில்லை. அவற்றையெல்லாம் பகிரங்கப்படுத்தி, தன் மீது எந்தக் குற்றத்துக்கும் வாய்ப்பில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போது, அதிமுக தொண்டர்களுக்கும்அவர் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையின்மை குறையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது," என்று ஞாநி கருத்துத் தெரிவித்தார்.

சசிகலாவின் முன் உள்ள மூன்று முக்கிய சவால்கள் என்று எடுத்துக் கொண்டால், அதிமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க நடவடிக்கை எடுப்பது, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2019-ஆம் ஆண்டு வரை மத்திய பாரதீய ஜனதா ஆட்சியோடு இணக்கமாக இருந்து கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்பவைதான் அவருக்கு முக்கிய சவால்களாக இருக்கும் என்று ஞாநி தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-38873642

  • தொடங்கியவர்

கமலின் கருத்து என்ன?

KamalHaasan tweet

ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் முதலே கமலின் ட்வீட்கள் வைரலாகி வந்தன. இந்நிலையில், சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வாகியுள்ளார். இந்த சூழலில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். குறள். புரியாதோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' எனக்கூறியுள்ளார். இந்நிலையில் இந்த ட்வீட்டில் எழுத்துப்பிழை ஏற்படவே, இரண்டு முறை அதை எடிட் செய்து மீண்டும் போஸ்ட் செய்தார் கமல். 

இதற்கிடையே கமலின், இந்த ட்வீட்டை சூர்யா ரீ-ட்வீட் செய்தார்.

http://www.vikatan.com/news/viral-corner/79857-kamalhaasans-timing-tweet-goes-viral.art

  • தொடங்கியவர்
'குறுக்கு வழியில் பதவியை பிடிக்கிறார்'

 

''மக்களை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக முடியாது என்பதால், சசிகலா குறுக்கு வழியில் முதல்வராகிறார்,'' என, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.சென்னையில் உள்ள தன் வீட்டின் முன், நேற்று குவிந்த தொண்டர்களிடம், தீபா பேசினார்.


பின், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், சுதந்திரம் பறிபோன சூழல் உருவாகி உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே, அரசாள வேண்டும். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், உழைத்தவர்கள் மட்டுமே, பதவிக்கு வர வேண்டும்; சுயநலவாதிகள் அரசாளக்கூடாது.


தகுதி உள்ளோர், தேர்தலில் போட்டியிட்டு, முறைப்படி தேர்வாக வேண்டும். அந்த சுதந்திரம், தற்போது பறிபோய் உள்ளது. அந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்க, மக்களுடன் பேசி, அவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்பட உள்ளேன்.


கட்சியையும், முதல்வர் பதவியையும் கைப்பற்ற, சசிகலா ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். அதற்கு, எப்படி செயல்பட வேண்டும் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தி வருகிறார். மக்களை சந்தித்து முதல்வராக முடியாது என்பது தெரிந்ததால், குறுக்கு வழியை பின்பற்றுகிறார்.


இதை எதிர்க்க வேண்டியது மக்கள் தான்; 'நாங்கள் யாருக்காக ஓட்டு போட்டோம்' என, அவர்கள் கேட்க வேண்டும். என்னை ஆதரித்த தொண்டர்களை கைவிட மாட்டேன். அவர்களின் நம்பிக்கைக்கேற்ப செயல்படுவேன். ஜெ., பிறந்த நாளில், முக்கிய முடிவுகளை அறிவிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704962

  • தொடங்கியவர்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம. நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம. நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதி
 
சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு காரணமாக ம.நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை அப்பல்லோவின் நான்காவது மாடியில் உள்ள 'எல்' வார்டில் ம.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து சிறிது நேரத்தில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா இன்று அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வராக பதவி வகிக்கும் ஓ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/05225037/1066470/AIADMK-chief-Sasikalas-husband-M-Natarajan-hospitalised.vpf

  • தொடங்கியவர்
சசிகலா முதல்வரா? பொதுமக்கள் கொந்தளிப்பு
 
 
 

சசிகலா நடராஜன், உடன் பிறவா சகோதரி, முதல்வரின் தோழி, சின்னம்மா என்று, அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்த சசிகலா, இப்போது, முதல்வரின்இருக்கையையும் தட்டி பறித்து விட்டார். இது குறித்து, தமிழகம் முழுவதும், மக்களின் கருத்துக்களை கேட்டோம்.

 

Tamil_News_large_170496920170205232441_318_219.jpg

அதன் விபரம்:

அரசியலுக்கு வருவதற்கான எந்த தகுதியும், சசிகலாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதாவுடன், 30 ஆண்டுகளாக இருந்தார் என்பது, பதவிக்கான தகுதியா? அவர் மீது நம்பிக்கை இருந்திருந்தால், ஏதாவது பொறுப்பையோ, பதவியையோ ஜெயலலிதா கொடுத்திருப்பாரே.

-எம்.ஹேமந்த் குமார், 29, மென்பொறியாளர், திருவொற்றியூர்.

எங்களை ஆட்சி செய்வது யார் என, நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் ஓட்டளித்து, ஜெ.,வை தேர்ந்தெடுத்தனர். அவர், எங்களை ஆட்சி செய்தார். ஜெ., உயிருடன் இருந்தபோது, ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக்கினார். சசிகலாவைசீண்டவே இல்லை. எங்களை ஆட்சி செய்ய, இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

-ஜின்னா, 32,ஓட்டல் உரிமையாளர், கள்ளக்குறிச்சி.

ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், சசிகலா முதல்வராவது வரை, அனைத்தும் திட்டமிடப்பட்ட திரைப்படம் போலவே, செயற்கையாக உள்ளது. இதில், ஒன்றைக்கூட நம்ப முடியவில்லை. சசிகலா, மத்திய அரசையும், நீதிமன்றத்தையும் எப்படி சமாளிப்பார் என்பதில் தான், அவரின் உண்மை முகம் வெளிப்படப் போகிறது.

-பி.ரேணுகாதேவி, 22,ஐ.டி., ஊழியர், காட்டுப்பாக்கம்.

சசிகலாவை முதல்வராக தேர்வு செய்ததன் மூலம், அ.தி.மு.க.,வின் எதிர்காலம் படு குழியில் தள்ளப்பட்டுள்ளது. பன்னீர் செல்வத்தை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. சசிகலாவை ஜெயலலிதா ஒரு போதும் பதவிக்கு கொண்டு வர விரும்பியதில்லை. சசிகலாவின் சொந்த பந்தங்கள், அல்லக்கைகளின் ஆட்சியாகவே திகழும்.

-வி.டி.என்.பிரபாகரன் அ.தி.மு.க., உறுப்பினர், மதுரை.

ஜெ., முதல்வராக இருந்தபோது, பல்வேறு நலத் திட்டங்களை செய்துள்ளார். அவர் மறைவிற் குப் பின், தமிழகமே மறைந்தது போல் உள்ளது. சசிகலாவை முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்தாலும், மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ஜெ., இடத்திற்கு சசிகலாவால் வர முடியாது; மக்களும் அவரை விரும்பவில்லை.

-பாக்கியம், 45,ஓய்வு பெற்ற ஆசிரியர், விருத்தாசலம்.


ஜெ., மறைவுக்கு பின் கட்சியை சசிகலாவும், அவரது உறவினர்களான ஊழல் கும்பலும் கைப்பற் றியதை, தொண்டர்கள், பொதுமக்கள் எதிர்க்கின்ற னர். இனி, தமிழகம் ஊழலில் மிதக்கும். சசிகலா முதல்வராவதால், இனி தமிழகத்தை கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது.

-பி.ஜி.சேகர், அ.தி.மு.க., 4வது வார்டு செயலர், ராமேஸ்வரம்.

பணம், செல்வாக்கை பயன்படுத்தி, எம்.எல். ஏ.,க் களை மிரட்டி சசிகலா பதவிக்கு வந்து உள்ளார். அவரை தவிர வேறு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். மக்களும், கட்சியின் கடைக்கோடி தொண்டனும் இவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டர்; அ.தி.மு.க,வுக்கு இது பின்னடைவே.

எ-ஸ்.ஆரியக்கண்ணன் ஜெ., பேரவை நகரசெயலர், பள்ளத்துார்.

ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி, அதன் அடிப்படையில், ஆட்சி அமைப்பது தான் ஏற்புடை யது. அதை தவிர்த்து, தனி மனித ஆராதனை அடிப்படையில், ஆட்சியாளர்களை தேர்வு செய்வதுஜனநாயகத்திற்கும், மாநில வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான விஷயம் அல்ல.

-வேணுகோபால் பிரவுசிங் சென்டர் உரிமையாளர், ஊட்டி

எந்த அனுபவமும் இல்லாத சசிகலா அரசியலுக்கு வரும்போது, ஏன் இளைஞர்கள் வரக்கூடாது? ஜெ., போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலாவை ஜெயிக்க சொல்லுங்க; பிறகு முதல்வராக ஏற்றுக் கொள்கிறோம்.

-கலைச்செல்வி கல்லுாரி மாணவி, கோவை.

ஜெயலலிதாவுக்கு தான் நாங்கள் ஓட்டு போட்டு, முதல்வராக தேர்வு செய்தோம். அவர் மறைந்ததும், கட்சியில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. தகுதியற்ற சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்ள, நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

-மோகன், 45,பெட்டிக்கடைக்காரர், பெண்ணாடம்.

ஜெ.,யின் உண்மையான தோழியாக இருந்தால், சசிகலாவிற்கு பதவி ஆசை வரக்கூடாது. பொதுச்செயலராக பதவியேற்ற போது, நிர்பந்தத்தால் பதவி ஏற்றதாக கூறிய சசிகலா, முதல்வர் பதவிக்கு அவசரப்படுவது ஏன்?

-காந்தி, 48,ரியல் எஸ்டேட் உரிமையாளர், செஞ்சி.

ஜெ., மரணத்திற்கு காரணமான சசிகலாவை, அ.தி.மு.க., தொண்டர்களும், மக்களும் ஏற்க மாட்டார்கள். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. சசிகலா முதல்வரானால், தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம்.

-கம்சலா, 51,குடும்பத் தலைவி, கடலுார்.

அ.தி.மு.க.,வின் தேர்தல் விதிப்படி, தொண்டர்க ளால் தேர்வு செய்யப்படுபவர் தான் பொதுச் செயலர் ஆக முடியும். பொதுச் செயலர் தேர்வே செல்லாது என்கிற நிலையில், தற்போது,முதல்வராகவும் சசிகலா தேர்வு செய்யப்பட்டுள் ளார். ஜெ.,யின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.

தற்போது அந்த சந்தேகம் வலுக்கிறது. சசிகலாவை சொத்து குவிப்பு வழக்கு துரத்தி வருகிறது. எனவே, அவர் விரைவில் சிறை செல்வார்; தமிழகத்தில் மாற்றங்கள் வரும்.

-துரையப்பா, 67, வாசுதேவநல்லுார் தொகுதி - அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,

பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு சசிகலா முதல்வ ராவதை ஏற்க முடியாது. மக்கள் ஜெயலலிதாவிற்கு தான் ஓட்டளித்தனர். போயஸ் தோட்டத்து வேலை காரர்களுக்கு அல்ல. தமிழகத்தில் ஏற்கனவே,

தி.மு.க., குடும்ப ஆட்சி நடந்தது; இனி மன்னார்குடி குடும்ப ஆட்சி நடக்கும் நிலை ஏற்படஉள்ளது. ஜெயலலிதா இறப்பில் மர்மம் நீங்காத நிலையில், இரண்டே மாதத்தில், அவர் வகித்த பொதுச் செயலர், முதல்வர் பதவியை சசிகலா கைப்பற்றியது, ஏற்கனவே திட்டமிட்ட செயலா என்றசந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

-குணசேகரன், மானாமதுரை தொகுதி முன்னாள் - எம்.எல்.ஏ., மற்றும் ஒன்றிய செயலர்.

மக்கள் தேர்ந்தெடுத்தது ஜெயலலிதாவை தான். தற்போது நடந்துள்ள இந்த செயல், மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத, மக்களை முட்டாள் களாக்கும் செயல்; மீண்டும் தேர்தல் நடந்தால்
அ.தி.மு.க.,வுக்கு பெரும் அடி கிடைக்கும்.

-விஜு, இன்டீரியர் டெக்கரேட்டர், குன்னுார்.

ஜெயலலிதா இருந்த இடத்தில், வேறொரு பெண்ணை எங்களால், நினைத்துக்கூட பார்க்க முடியாது. தேர்தலில் நின்று எம்.எல்.ஏ., ஆகும் வரை கூட பொறுத்துக்கொள்ள முடியாமல், சசிகலா முதல்வராக வருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

ஜெ., மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவசரமாக பதவி யேற்கக்கூடாது. தேர்தல் மூலம் மக்களின் ஆதரவு கிடைத்தால், அதற்கு பிறகு முதல்வ ராக சசிகலா பொறுப்பேற் கட்டும்.

-சிவகாமி, இல்லத்தரசி, திருப்பூர்-.

அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் யாரும் சசிகலாவை இன்னும் கட்சி பொதுச் செயலாளராகக்கூட ஏற்றுக்கொள்ளாத போது, முதல்வராக எப்படி பார்ப்பார்கள்? தனிப்பட்ட முறையில் அதிகாரத்தை வைத்து முதல்வ ராகும் சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகளே அதிகம்.

-ஆறுச்சாமி, டாக்சி டிரைவர், கோவை.

கட்சியில் மூத்த அமைச்சர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஏன், செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்தே கட்சியில் சிறப்பாக பங்காற்றியுள்ளார். அவர்களுக்கு மத்தியில் எந்த அனுபவமும் இல்லாமல், தகுதியற்ற ஒருவர் தலைமை பொறுப்பில் வருவது என்பது நம் துரதிர்ஷ்டம்.

-ஆறுமுகம், தனியார் நிறுவன ஊழியர், கோவை.

எந்த அனுபவமும் இல்லாத சசிகலா அரசிய லுக்கு வரும்போது, ஏன் இளைஞர்கள் வரக் கூடாது? ஜெ., போட்டியிட்ட ஆர்.கே., நகர் தொகுதியில் போட்டியிட்டு சசிகலாவை ஜெயக்க சொல்லுங்க! பிறகு முதல்வராக ஏற்றுக் கொள்கிறோம்.

-கலைச்செல்வி, கல்லுாரி மாணவி, கோவை .

- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704969

  • தொடங்கியவர்

நடராஜன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

nataraj_23020.jpg

 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவர் நடராஜன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8 மணியளவில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் தமிழக முதல்வராகவும் அவர் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அவரின் கணவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், அதேபோல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சை குறித்து நாளை மதியம் ரிச்சர்ட் பீலே செய்தியாளர்களை சந்திக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/politics/79867-sasikalas-husband-natarajan-admitted-in-apollo-hospital.art

முதல்வராக சசிகலா தேர்வு: கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு

 

சென்னை:தமிழக முதல்வராக, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலாவை தேர்வு செய்ததற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்:

சொத்து குவிப்பு வழக்கினால், ஜெயலலிதா பதவி விலகிய போதும் சரி, உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதும் சரி, பன்னீர்செல்வத்தை தான் முதல்வராக தேர்வு செய்தார். சசிகலாவிற்கு கட்சியில், எந்த பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் வழங்கவில்லை. சசிகலாவை, அ.தி.மு.க.,வினர் தேர்வு செய்தது, ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு எதிரானது. மக்கள் எண்ணத்திற்கு விரோதமான செயல்.

ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் முதல்வராக மக்கள் ஓட்டளிக்கவில்லை. தமிழக
அரசியல் சூழ்நிலையை தி.மு.க., உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது உள்ள அரசியல்
சூழ்நிலையில், தி.மு.க., எந்தவொரு முடிவையும் ஜனநாயகவிதிகளுக்குட்பட்டே எடுக்கும்.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

சசிகலா முதல்வராவதற்கான அவசியம் தற்போது இல்லை. ஜெயலலிதாவிற்கு நிகராக சசிகலாவை கருத முடியாது. முதல்வர் என, வரும்போது, தமிழகத்தையே நிர்வகிக்க வேண்டும். அதனால், இது உட்கட்சி பிரச்சனை என, ஒதுக்கித்தள்ளி விட முடியாது. ஜெயலலிதா மரணம் அடைந்த இரவே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒருமித்த கருத்துடன், ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தனர்.

சவாலான சூழல்களை பன்னீர்செல்வம் திறம்பட கையாண்டார். பின், இரண்டு மாதங்களுக்குள் இதற்கு என்ன அவசியம் வந்திருக்கிறது; என்ன தேவை வந்திருக்கிறது. பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் கொஞ்ச காலம் பணியாற்றிவிட்டு அனுபவம் வாய்ந்து, முதல்வர் பதவியை தேர்ந்தெடுத்திருக்கலாம். அவசர அவசரமாக ஏன் தேர்ந்தெடுத்தனர் என, புரியவில்லை. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அவசரப்படாமல் இருந்திருக்கலாம்.

ஆம் ஆத்மி கட்சி யின் தேசியக்குழு உறுப்பினர் லெனின்:

தமிழகத்தில், சசிகலாவை முதல்வராக அறிவித்த நாள், அ.தி.மு.க.,வின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு கரும்புள்ளியாக, ஆம் ஆத்மி கட்சி தருகிறது.ஊழல் கறை படிந்து மக்கள் பணத்தில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்று, அது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நேரத்தில் சசிகலா, அ.தி.மு.க., செயலராகவும் பின், முதல்வராக வும் பதவி ஏற்க இருப்பது, 'ஆட்டுக்கு ஓநாய் பாதுகாவல்' என்றே கருத தோன்றுகிறது. ஜெயலலிதா, டிச., 5ல் மரணமடைந்த பின், பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்று, மக்கள் ஏற்றுக் கொள்ள தக்க வகையில் நற்பெயரை உருவாக்கி விடுவார்.

பின், தன்னை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டர் என்ற அச்ச உணர்வு மேலோங்கிய விளைவு தான், இன்று குறுக்கு வழியில் முதல்வராக தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ளார்.
அவர் பதவி ஏற்கும் நாளில் அனைத்து தமிழக மக்களும் பொது இடங்களிலும் தத்தம் வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்றி, எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

தமிழக முதல்வராக வேண்டிய கிட்டத்தட்ட, 50 எம்.பி.,க்களையும், 134 எம்.எல்.ஏ.,க்களையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பை, குறுக்கு வழியில் பெறுவது, அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்னையாக பார்க்க முடியாது. தமிழக அரசியல் பிரச்னையாக தான் பார்க்க முடியும்.

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு:

ஜனநாயகம் கொல்லப்பட்டு விட்டது. அரசியல் அமைப்பில், என்ன நடந்தாலும் மக்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்:

தேர்தலில் சசிகலா வெற்றி பெறுவதுசந்தேகம் தான்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன்:

சசிகலா எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சசிகலாவை மக்கள் ஏற்கிறார்களா என்பது ஆறு மாதத்தில் தெரிந்துவிடும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன்:

சசிகலாவை, அ.தி.மு.க.,வின்சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

த.மா.கா., தலைவர் வாசன்:

தமிழகத்தில், இரண்டு மாதங்கள் முதல்வராக இருந்த, பன்னீர்செல்வத்தை மாற்ற வேண்டிய அவசரம், அவசியம் என்ன என்பதன் உண்மை நிலையை, அ.தி.மு.க., மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.முதல்வராக இருந்த, ஜெ., இறந்ததில் உள்ள மர்மம் குறித்து, மத்திய - மாநில அரசுகளும், மருத்துவமனை நிர்வாகமும் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் அதை எதிர்பார்க்கின்றனர். சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதை, அவர் தேர்தலை சந்தித்த பின் தான் சொல்ல முடியும்.இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704982

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம. நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம. நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதி
 
சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் சோர்வு காரணமாக ம.நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை அப்பல்லோவின் நான்காவது மாடியில் உள்ள 'எல்' வார்டில் ம.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து சிறிது நேரத்தில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலா இன்று அதிமுகவின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வராக பதவி வகிக்கும் ஓ. பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/05225037/1066470/AIADMK-chief-Sasikalas-husband-M-Natarajan-hospitalised.vpf

Quote

கொலையும் செய்வாள் பத்தினி ..

அப்போலோ தானே நடக்கட்டும் நடக்கட்டும் !!

டிஸ்கி :

வரே வா .. என்னா பழமொழி .. என்ன தீர்க்கதரிசனம் ..   !! கலிகாலம் குறித்து சந்தேகம் இருப்பவர்கள் அப்புறம் தொடர்பு கொள்ளவும் ..:cool:

 

  • தொடங்கியவர்

அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்ப்பை மீறி முதல்வராகிறார்... சசிகலா!:எம்.எல்.ஏ.,க்கள் ஏகமனதாக தேர்வு செய்ததாக அறிவிப்பு :பிடரியில் பின்னங்கால் பட, ஓ.பி.எஸ்., ஓட்டம்

 

 

தொண்டர்கள் எதிர்ப்பை மீறி, முதல்வராகிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா. அதற்கு வசதியாக, கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை குழு தலைவராக அவரை தேர்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எளிமையான முதல்வர் என, பெயர் எடுத்த முதல்வர் பன்னீர்செல்வம், பிடரியில் பின்னங்கால் பட, ஓட்டம் பிடித்துள்ளார்.

முதல்வராக இருந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்து வந்த, முதல்வர் பதவி மற்றும் அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவியை கைப்பற்ற, சசிகலாவும், அவரின் சொந்தங்களும் முயற்சி எடுத்தனர். முதல்வராகும் முயற்சிக்கு, மத்திய அரசு, உடனே முட்டுக்கட்டை போட்டதால், பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்.

அதே நேரத்தில், கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்டுப்பாட்டில், மன்னார்குடி குடும்பம் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார்.

மீண்டும் சேர்ப்பு

கட்சி விதிகளின் படி, பொதுச் செயலர் பதவிக்கு தேர்வாக, ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக கட்சியில் இருக்க வேண்டும். ஆனால், இடையில் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டவர் என்பதால், பொதுச்செயலராக நியமனம் தான் செய்யப்பட்டார்.
இதற்கு, கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகம் முழுவதும், சசிகலா போஸ்டர்களை கிழித்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சசிகலாவின் கொடும்பாவியையும் எரித்தனர். நடிகர் ஆனந்தராஜ், கட்சியில் இருந்து விலகினார். மன்னார்குடி ஆதிக்கம், கட்சியில் அதிகமாகிறது என, முன்னாள் அமைச்சர் முனுசாமி, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

நோட்டீஸ்

மேலும், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பாவின் புகாரை, தேர்தல் கமிஷன் ஏற்றது. பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சசிகலாவிற்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது. முதல்வராக, பன்னீர்செல்வத்தின் சிறப்பான செயல்பாடு, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. அவர் நீடித்தால், எப்போதும் தான் முதல்வராக முடியாது என, சசிகலா கணக்கு போட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில், எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது.
அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்க, உடனே முதல்வராவதே நல்லது என, சசிகலா முடிவு செய்தார். எனவே, அதற்கான பணிகளை அடுத்தடுத்து துவக்கினார். அதன்படி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் அவசர கூட்டம், நேற்று மதியம், 2:00 மணிக்கு நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.

அந்த கூட்டத்திற்கு முன், முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அவசரமாக, போயஸ் கார்டன் அழைக்கப்பட்டனர். அங்கு, தன்னை முதல்வராக தேர்வு செய்ய, அவர் உத்தரவிட்டார். அதை, முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, அமைச்சர்கள் ஏற்றனர். 'முதல்வர்
பதவியை, ராஜினாமா செய்யுங்கள்' என, பன்னீர்செல்வத்திற்கு, சசிகலா உத்தரவிட்டார்; அதை, அவரும் ஏற்றுக் கொண்டார்.

பின், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக, சசிகலா பெயரை, முதல்வர் பன்னீர்செல்வம் முன் மொழிந்தார். அதை, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

சசிகலா, சட்டசபை குழு தலைவராக, 2:25 மணிக்கு தேர்வானார். இதன்பின், கட்சி அலுவலகம் வந்த சசிகலாவிடம், சட்டசபை குழுத் தலைவராக, தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் வழங்கப்பட்டது. இதை, இன் முகத்தோடு அவர் பெற்றுக் கொண்டார். அவருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:

முதல்வராக பொறுப்பேற்ற, குறைந்த காலத்தில், பன்னீர்செல்வம், எளிமையான முதல்வர் என, பெயர் எடுத்தார். அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் பணியாற்றினார். அதனால், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார்; விடாப்பிடியாக இருந்து, சாதிப்பார் என, எதிர்பார்த்தோம். ஆனால், சசிகலாவின் உத்தரவை ஏற்று, பிடரியில் பின்னங்கால் பட, ஓட்டம் பிடித்து விட்டார். இதை, கட்சியின் சாதாரண தொண்டர்கள் எதிர்பார்க்கவில்லை.

கட்சியின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு, கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சசிகலாவின் குடும்பத்தினர் ஆதிக்கத்தால், எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. அந்த எதிர்ப்பையும் மீறி, சசிகலா முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார். இது, எங்கு போய் முடியும் என, தெரியவில்லை.இவ்வாறு, கட்சியினர் கூறினர்.

பிப்., 9ல் பதவியேற்பு

கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக தேர்வான சசிகலா, வரும், 9ம் தேதி, முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா, சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் என, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவரது மனைவி ஜானகி முதல்வரானார்; 23 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தார். 1991ல், ஜெயலலிதா முதல்வரானார். அவரது மறைவுக்கு பிறகு, மூன்றாவது பெண் முதல்வராக, சசிகலா
பொறுப்பேற்க உள்ளார்.

பிரதமருக்கு பன்னீர் கடிதம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், நேற்று மாலை, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அதில், 'முதல்வராக இருந்த எனக்கு, ஆதரவும், ஒத்துழைப்பும் தந்ததற்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704974

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்கும் காரணம்  தம்பிதுரை ..


அம்மாவுக்கு பிறகு சின்னம்மா என்றால் ..
அண்ணத்துரைக்கு பிறகு நீ தான்ட வரணும்  ..
@தம்பிதுரை ..! என் சிப்சு ...:cool:

  • தொடங்கியவர்
10 மாதங்களில் 3வது முதல்வர்:
சசி பதவியும் நித்திய கண்டம் தான்
 
 
 

தமிழகம், 10 மாதங்களில், மூன்றாவது முதல்வரை சந்திக்கப் போகிறது.

 

Tamil_News_large_170497520170205232844_318_219.jpg

கடந்த, 2016, மே மாதத்தில், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயலலிதா; உடல் நலம் சரியில்லாமல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்கு பின், அவரது உடல் தான், போயஸ் தோட்டத்துக்கு திரும்பியது.
 

இரண்டு மாதங்கள்


ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, 2016, டிசம்பர் 5 நள்ளிரவு, முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற் றது முதல், 'சசிகலா தான் முதல்வராக வர வேண்டும்' என, கட்சியின் முன்னணி தலைவர் கள், ஆளாளுக்கு பேட்டி கொடுத்து வந்தனர்.

எதிர்ப்புகளை மீறி, இரண்டு மாதங்கள் மட்டுமே, பன்னீரால் தாக்கு பிடிக்க முடிந்தது. தன் பதவியை, நேற்று ராஜினாமா செய்தார். 10 மாதங்களில், மூன்றாவது முதல்வராக, சசிகலா பொறுப்பேற்க உள்ளார். இந்த

முதல்வ ரும், பதவியில் நீடிப்பாரா, இல்லையா என்பது, நீதிமன்றங்களின் கையில் தான் உள்ளது. அதற்கு காரணம், சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, எந்த நேரத்திலும் பிறப்பிக்கப்படலாம் என்பது தான்.

வருமானத்துக்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக, ஜெயலலிதா மீது,1996ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சசிகலா, அவரது நெருங்கிய உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
 

நான்கு ஆண்டுகள்


ஜெயலலிதா மீது, கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும், சசிகலா உள்ளிட்ட மூவர் மீது, கூட்டு சதி, சொத்து சேர்த்ததற்கு உடந்தையாக இருந்ததாகவும், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதி மன்ற நீதிபதி குன்ஹா, 2014, செப்டம்பரில் தீர்ப்பளித் தார். ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி ரூபாய் அபராதம், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.

இதையடுத்து, நான்கு பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாராசிறையில் அடைக்கப்பட்டனர். சில நாட்கள் கழித்து, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

பின், மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த, கர்நாடக உயர் நீதிமன்றம், நான்கு பேரையும் விடு தலை செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத் தில் கர்நாடக அரசு, 'அப்பீல்' செய்தது. இந்த

வழக்கை, உச்ச நீதிமன்றநீதிபதிகள், பி.சி. கோஷ், அமித்வராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, 2016, ஜூனில் தீர்ப்பை தள்ளி வைத்தது.

எனவே, சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் எந்த நேரமும் தீர்ப்பு வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. சாதகமாக வந்தால், முதல்வர் பதவியில் சசிகலா நீடிக்க முடியும்; இல்லையென்றால், 'முன்னாள்' ஆக மாறுவார்; பழைய கதை திரும்பும்.

இது தவிர, மத்திய அமலாக்கப்பிரிவு, சசிகலா மீது தொடுத்த நான்கு வழக்குகள், சென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ளன. அமலாக்கப்பிரிவு வழக்கில், சசிகலா கைது செய்யப்பட்டு, 11 மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704975

  • தொடங்கியவர்
அடுத்தகட்ட விசாரணையை சந்திக்க உள்ள
சசி மீதான அன்னிய செலாவணி வழக்குகள்
 
 
 

சொத்து குவிப்பு வழக்கு கடைசி கட்டமாக, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்கிறது. அதே நேரத்தில், சசிகலா மீது மத்திய அமலாக்கப் பிரிவு தொடுத்த வழக்குகள்,சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணையை சந்திக்க உள்ளன.

 

Tamil_News_large_170498720170206001514_318_219.jpg

கொலை, கொள்ளை வழக்குகளை விட, பொருளாதார குற்ற வழக்குகள் கடுமையாக கருதப்படுகின்றன. இந்த குற்றங்கள், நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் என்பதால் நாட்டுக்கு எதிரான குற்றமாக சித்தரிக்கப் படுகின்றன.

வெளிநாடு வாழ் இந்தியரான சுசீலா என்பவர் அளித்த உத்தரவாதத்தின் படி, இந்தியன் வங்கியிலிருந்து, சென்னையை சேர்ந்த, பரணி பீச் ரிசார்ட்ஸ் நிறுவனம், மூன்று கோடி ரூபாய் கடன் பெற்றது. இதில், 2.20 கோடி ரூபாயை

எடுத்து,கொடநாடு எஸ்டேட் வாங்க, சசிகலா பயன் படுத்தியதாக கூறப்பட்டது. இந்த பரிவர்த்தனை யில், அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாக, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், சசிகலா மீது அமலாக்கப் பிரிவு வழக்கு தொடுத்தது.

அத்துடன், ஜெ.ஜெ., 'டிவி'க்கு, 'அப்லிங்'வசதிகளை ஏற்படுத்த வும், கருவிகளை வாடகைக்கு எடுத்ததி லும், அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறிய தாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வெளிநாட்டு நிறுவனங்களான, ரிம்சாட் மற்றும் சுபிக்பேக்கு, ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்களை மாற்றியதாகவும், அப்பூப்ஸ் என்ற நிறுவனத்துக்கு, 10.45 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை மாற்றியதாக வும், அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், சசிகலா மீது நான்கு வழக்குகளும், சசிகலாவின் நெருங்கிய உறவின ரான டி.டி.வி.தினகரன் மீது, இரண்டு வழக்குகளும் தாக்கல்செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில், பரணி ரிசார்ட் வழக்கில் இருந்து மட்டும் சசிகலாவை விடுவித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மூன்று வழக்கு களிலும் விடுவிக்க மறுத்து விட்டது. அதே நேரம், தினகரன் மீதான இரண்டு வழக்குகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.சசிகலா, தினகரன்

விடுவிப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் அமலாக்கப் பிரிவு மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிகலா, தினகரன் விடுவிப்பை ரத்து செய்து, வழக்கை எதிர்கொள்ளும் படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் விசாரணையை, சசிகலா சந்திக்க வேண்டி உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யலாம். உச்ச நீதிமன்றத் தில் சாதகமான உத்தரவு வரவில்லை என்றால் எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1704987

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.