Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்தேவி புகையிரத விபத்து : ஸ்தலத்திலேயே இராணுவ வீரர் பலி.! நடந்தது என்ன.?

Featured Replies

யாழ்தேவி புகையிரத விபத்து : ஸ்தலத்திலேயே இராணுவ வீரர் பலி.! நடந்தது என்ன.?

 

 

யாழ்தேவி புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றும் ஒரு இராணுவ வீரர்  படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

jaffna.jpg

எனினும் அவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை 10.00 மணியளவில் அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், அரியாலைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர்களே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதம் வருகின்றதென சமிஞ்கை போடப்பட்டிருந்த நிலையில், குறித்த இராணுவ வீரர்கள் தாம் பயணித்த ஜீப் வண்டியை புகையிரத கடவையில் கடந்துசெல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

jaffna2.jpg

இந்த விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் மற்றும் படுகாயமடைந்த இராணுவ வீரரையும் எடுத்துக் கொண்டு புகையிரதம் மீண்டும் யாழ். புகையிரத நிலையத்தினைக் நோக்கி சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவ ஜீப்-ரயில் விபத்து; இராணுவத்தினர் இருவர் உயிரிழப்பு
 
13382.jpg
யாழ்ப்பாணம் அரியாலை நெடுக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இராணுவத்தினர் பயணித்த ஜீப் ரக வாகனத்துடன் புகையிரதம்  மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு இராணுவ வீரர் பலியாகியதுடன் மேலும் ஒரு இராணுவ வீரர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
 
இயக்கச்சி 513ஆம் டிவிசன் - விஜயபாகு ரெஜிமென்ட் இராணுவ முகாமில் கடமைபுரியும் மதவாச்சியை சேர்ந்த ஏகநாயக்க (வயது 26) சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் கண்டி வீதி மாவட்டஹமவை சேர்ந்த புஸ்பகுமார (வயது 34) என்பவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவராவார். 
 
நேற்றைய தினம் காலை வாகன சுத்திகரிப்பை மேற்கொள்வதற்காக இயக்கச்சி இராணுவ முகாமில் இருந்து இரு இராணுவ வீரர்களும் நெடுங்குளம் பகுதியில் உள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி ஜீப் ரக வாகனத்தில் பயணித்துள்ளனர்.
 
காலை 10 மணியளவில் மேற்படி பாதுகாப்பற்ற புகையிரத கட வையை அவர்கள் கடக்க முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்தேவி புகையிரதம் ஜீப் ரக வாகனத்தை மோதியதுடன் சுமார் 300 மீற்றர் தூரம் வரை வாகனத்தை இழுத்துச் சென்றுள்ளது. 
 
இதில் சம்பவ இடத்திலேயே சாரதியான ஏகநாயக்க பலியாகியதுடன் மற்றைய வீரர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.