Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண குடிநீர் பிரச்சனை. முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நீண்ட விவாதம்.

Featured Replies

வடமாகாண குடிநீர் பிரச்சனை. முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் நீண்ட விவாதம்.

CV-Vikneswaran-thavarajah.jpg
 
வடமாகணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் நீர்வழங்கல் தொடர்பிலான பிரச்சனைகள் தொடர்பில் விசேட விவாதம் எதிர்வரும் 23ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
 
வடமாகாண சபையின் 84 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது.  அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் வடமாகாண குடிநீர் பிரச்சனை மற்றும் நீர் வழங்கல் தொடர்பிலான பிரச்சனைகள் குறித்து விவாதம் நடாத்த ஒரு நாள் அமர்வு நடாத்தப்பட வேண்டும் என எழுத்து மூலம் அவைத்தலைவரிடம் கோரி இருந்தனர்.
 
சட்டத்திற்கு முரணானது.
 
அவ்வாறு விவாதம் நடாத்துவது சட்டத்திற்கு முரணானது. குடிநீர் பிரச்சனை தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகின்றது. அந்நிலையில் அது தொடர்பில் விவாதம் நடாத்துவது நீதிமன்றை அவமதிக்கும் செயலாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
சட்டத்திற்கு முரணானது இல்லை. 
 
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா இங்கே நாம் யாழ்ப்பாணத்தில் உள்ள குடிநீர் பிரச்சனை என குறிப்பிடவில்லை , வடமாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை என குறிப்பிட்டு உள்ளோம். அதேபோன்று நீர்வழங்கல் தொடர்பிலான பிரச்சனை எனவும் குறிப்பிட்டு உள்ளோம். அதில் எவ்வாறு நீதிமன்ற அவமதிப்பு உள்ளது என கேள்வி எழுப்பினார்.
 
விவாதிப்பது தொடர்பில் முன்னரே அறிவியுங்கள்.
 
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், அவ்வாறு எனில் எந்த எந்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்க போகின்றீர்கள் என முன்னரே அறிவித்தால் , அது நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்பு பட்டதா இல்லையா என தீர்மானித்து அது தொடர்பில் விவாதம் நடாத்துவோம் என கூறினார்.
 
வரையறைக்குள் விவாதம் நடாத்த முடியாது. 
 
அதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர் வரையறைக்குள் விவாதம் நடாத்த முடியாது. விவாதம் நடாக்கும் போது வழக்குடன் தொடர்பு பட்ட விடயம் தொடர்பில் விவாதம் நடந்தால் அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் அவைத்தலைவருக்கு உண்டு அவர் அதனை கட்டுப்படுத்தலாம். என தெரிவித்தார்
 
 23ம்  திகதி விவாதம்.
 
இவ்வாறாக வடமாகாண முதலமைச்சருக்கும் , எதிர்கட்சி தலைவருக்கும் இடையில் நடைபெற்ற நீண்ட விவாதத்தின் பின்னர் எதிர்வரும் 23ம்  திகதி வடமாகணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை மற்றும் நீர் வழங்கல் தொடர்பிலான பிரச்சனைகள் தொடர்பில் விவாதிக்க என விசேட அமர்வு நடாத்த தீர்மானிக்கப்பட்டது

http://globaltamilnews.net/archives/16981

10 minutes ago, நவீனன் said:

well-done

திறமையான செயல் - வாழ்த்துக்கள்

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்

சுன்னாகம் குடிநீர் பிரச்சனை தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்கு.

thavarasa.jpg
 
சுன்னாகம் குடிநீர் பிரச்சனை தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெறுவதாக முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் எது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. குறித்த வழக்கு தொடர்பில் எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என வடமாகான எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்து உள்ளார்.
 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
 
சுன்னாகம் குடிநீர் பிரச்சனை தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகள் தொடர்பில் எனக்கு தெரியும் ஆனால் உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
 
உயர் நீதிமன்றில் நடைபெறும் வழக்கு தொடர்பில் எனக்கு எந்த விபரமும் தெரியாது. அந்த வழக்கு தொடர்பான தகவல்களை தனக்கு தர வேண்டும் என சி.தவராசா கோரிக்கை விடுத்தார்

http://globaltamilnews.net/archives/16997

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.