Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் எழுக தமிழ் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

Featured Replies

கிழக்கின் எழுக தமிழ் பேர­ணியில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் பங்­கேற்பு

p12-c1fd02fc19adf008356a08d3cdf7a4d1a9e9e352.jpg

 

வடக்கு, கிழக்கு இணைப்பு உட்­பட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணு­மாறு கோஷம்

(பட்­டி­ருப்பு, காங்­கே­ய­னோடை நிரு­பர்கள்)

தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் மட்­டக்­க­ளப்பில் நேற்று நடத்­தப்­பட்ட மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்­வான 'எழுக தமிழ்' நிகழ்வில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்­து­கொண்டு தமது உள்ளக் குமு­றல்­களை வெளிப்­ப­டுத்­தினர்.

மட்­டக்­க­ளப்பில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை நடை­பெற்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில்  மூவா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் கலந்­து­கொண்­டனர். சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தை திணிக்க வேண்டாம், விடு­தலை செய் விடு­தலை செய் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்..., நிறுத்து நிறுத்து பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை நிறுத்து, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டித்­துத்தா, போர்க்­குற்றம் மற்றும் இன அழிப்பு போன்­ற­வற்­றுக்கு சர்­வ­தேச நீதி விசா­ரணை வேண்டும், வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும் போன்ற கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் பதா­கைகள் மற்றும் சுவோக அட்­டை­களைத் தாங்­கி­ய­வாறும் மக்கள் இந்த எழுச்சிப் பேர­ணியில் கலந்­து­கொண்­டனர்.  

மட்­டக்­க­ளப்பு அ கல்­லடி மணிக்­கூட்டு கோபு­ரத்­திற்கு அருகில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளுடன் வட­மா­காண முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மான சி.விக்­னேஸ்­வரன் தலை­மையில் இந்த எழுச்சிப் பேரணி ஆரம்­ப­மா­னது.

இந்த எழுச்சிப் பேர­ணியில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், எஸ்.வியா­ழேந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சியின் செய­லாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம், செய­லாளர் கஜேந்­திரன், கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் இரா.துரை­ரெட்னம், வட­மா­காண சபை உறுப்­பினர் அனந்தி சசி­கரன், விந்தன் கன­க­ரட்ணம் உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர்.

கல்­ல­டியில் இருந்து ஆரம்­ப­மான பேர­ணியில் காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்கள், விசேட தேவை­யு­டைய அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் உட்­பட பல்­வேறு அமைப்பின் உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டனர். காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் காணாமல் ஆக்­கப்­பட்ட தமது உற­வு­களின் புகைப்­ப­டங்­களைத் தாங்­கி­ய­வாறு பேர­ணியில் கலந்­து­கொண்­டனர்.

நாவற்­குடா விவே­கா­னந்தா விளை­யாட்டு மைதா­னத்தை பேரணி வந்­த­டைந்­ததும் அங்கு எழுக தமிழ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இதன்போது தமிழ் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு முன்னாள் போராளியினால் ஈகச்சுடர் ஏற்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள் உரையாற்றினர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-11#page-1

  • கருத்துக்கள உறவுகள்
மிகப்பெரிய சாதனை கிழக்கில் நிகழ்ந்துள்ளது சித்தார்த்தன் எம்பி பெருமிதம்
 
13399.jpg
கிழக்கில் இன்று தமிழ் மக்களுடைய சரித்திரத்திலே ஒரு மிகப் பெரிய சாதனையொன்றே நிகழ்த் தப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய அளவிலே தங்களுடைய அடிப்படை உரிமைகளை என்றுமே விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக மிக உரத்த குரலிலே கூறியிருக்கின்றார்கள். 
 
எவ்வ ளவோ இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் இங்கு நீங்கள் கூடியிருக் கின்றீர்கள் என்றால் நிச்சயமாகஉங்களுடைய குரல்கள் சர்வதேசத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசுக்கும் மிகத் தெளிவாகக் கேட்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 
கிழக்கில் எழுக தமிழ் பேரணியில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
  • தொடங்கியவர்

இணைந்த வடக்கு, கிழக்கில் சுயாட்சி அலகு வேண்டும்

 

மட்டக்களப்பில்  நேற்று நடைபெற்ற  ‘எழுக தமிழ்’ நிகழ்வில் வெளியிடப்பட்ட பிரகடனம்

 

2017ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 10ஆம் நாள், கிழக்கு மாகா­ணத்தின் மட்­டக்­க­ளப்பு நகரில் முன்­னெ­டுக்­கப்­பட்ட எழுக தமிழ் பேர­ணி­யா­னது, தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் - பொது அமைப்­புக்கள் மற்றும் அர­சியல் கட்­சி­களின் பங்­கு­பற்­ற­லுடன் எழுப்­பப்­படும் தமிழ் தேச இறை­யாண்­மையின் குர­லாகும்.

சிங்­கள பௌத்த மேலா­திக்க ஒடுக்­கு­முறைக்கு எதி­ராகப் போரா­டி­வரும் தமிழ் தேச­மா­னது - தனது அடிப்­ப­டை­யான அர­சியல் உரி­மை­களில் எப்­போ­துமே உறு­தி­யாக இருக்கும் என்ற செய்­தியைச் சிங்­கள தேசத்­திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்­டி­ருக்கும் சர்வதேச சக்­தி­க­ளுக்கும் வலி­யு­றுத்­து­வதே இந்த எழுக தமிழ் பேர­ணியின் நோக்­க­மாகும்.

இலங்கைத் தீவின் வடக்­கு-­, கி­ழக்கு பிராந்­தியம் தமி­ழர்­களின் பூர்­வீகத் தாயக பூமி ஆகும். மாறி மாறி ஆட்­சி­ய­மைத்த இலங்கை அர­சாங்­கங்கள் - குறிப்­பாகக் கிழக்கை இலக்கு வைத்து மேற்­கொண்ட திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்­க­ளி­னூ­டாகத் தமிழ் மக்­களின் நிலத்­தையும், பொரு­ளா­தா­ரத்­தையும், பண்­பாட்­டையும், மொழி­யையும் அழித்து வரு­கின்­றன. எல்­லா­வற்­றுக்கும் உச்­ச­மாக - தமிழர் தேசத்தைச் சிங்­கள மய­மாக்கி, அதன் அடை­யா­ளத்­தையும் கூட்­டி­ருப்­பை­யுமே சிதைத்து வரு­கின்­றன. இதுவே தொடர்ச்சியாக அரங்­கேற்­றப்­பட்­டு­வரும் ஒரு நீண்ட வர­லாற்றுப் பின்­ன­ணியில் தமிழர் தேசம் காக்­கப்­பட வேண்­டு­மாயின், தமி­ழி­னத்தின் நிலம், மொழி, பொரு­ளா­தாரம், பண்­பாடு, அதன் தனித்­து­வ­மான அடை­யாளம் என்­பன - ஒட்­டு­மொத்­த­மாக - ஒரே­ய­டி­யாகக் காக்­கப்­பட வேண்டும் என்­பதே இந்த பேர­ணியின் தீர்­மா­ன­மாகும். இந்த தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் - எமது இனத்தின் சமூக, பொரு­ளா­தார, - அர­சியற் தனித்­துவம் காக்­கப்­பட வேண்­டு­மாயின், கிழக்கின் தமி­ழர்­க­ளா­கிய நாம், எம்­மி­லி­ருந்து வடக்கு பிரிக்­கப்­ப­டா­த­வா­றான சுயாட்­சி­ய­லகு ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தையும் இந்த நிலைப்­பாடு எந்­த­வித விட்­டுக்­கொ­டுப்­பிற்கும் அப்­பாற்­பட்­டது என்­ப­த­னையும் மட்­டக்­க­ளப்பில் நடை­பெறும் இந்த எழுக தமிழ் பேர­ணியின் ஊடாக குறிப்­பா­கவும் திட்­ட­வட்­ட­மாகம் பிர­க­ட­னப்­ப­டுத்­து­கின்றோம்.

மேல­தி­க­மாக வடக்கில் - யாழ்ப்­பா­ணத்தில் -2016ஆம் ஆண்டு, செப்டெம்பர் 24ஆம் நாள் முன்­னெ­டுக்­கப்­பட்ட எழுக தமிழ் பேர­ணியின் போது பல்­லா­யிரம் தமிழ் மக்கள் திரண்டு மேற்­கொண்ட கீழ்­வரும் பிர­க­ட­னத்­தினை - அதன் ஒவ்­வொரு அம்­சங்­க­ளையும் - அவற்றின் அதே அர­சியல் அர்த்­தங்­க­ளோடு - இந்த பேரணி மீளவும் வலி­யு­றுத்­து­கின்­றது.

1. வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தை வலிந்து பௌத்த சிங்­கள மய­மாக்கும் நோக்­குடன் சிங்­களக் குடி­யேற்­றங்­களும், பௌத்த விகா­ரை­களும், புத்தர் சிலை­களும் இவ்­வாட்­சி­யிலும் அரசின் அனு­ச­ர­ணை­யு­டனும், இரா­ணு­வத்தின் உத­வி­யு­டனும் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன. தமி­ழர்­க­ளு­டைய இன அடை­யா­ளத்தை அழிக்­கவும், வட கிழக்கு தமிழர் தாயகப் பிர­தே­சங்­களின் குடிப்­ப­ரம்­பலை வலிந்து மாற்­றவும் அரசு எடுத்து வரும் இவ்­வா­றான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் உடன் நிறுத்­து­மாறு இம் மக்கள் பேரணி வலி­யு­றுத்­து­கின்­றது.

2. யுத்தம் நிறை­வ­டைந்து ஏழு வரு­டங்கள் ஆகிய நிலை­யிலும் இரா­ணுவம் மிகச் செறி­வாக வட கிழக்கில் குவிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இரா­ணுவம் தமிழர் தாயக பிர­தே­சங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணியை சுவீ­க­ரிப்பு செய்­தது மாத்­தி­ர­மல்­லாமல், தொடர்ந்தும், தமிழ் மக்­களின் காணி­களை கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்டு வரு­கின்­றது.

மேலும் உல்­லாச விடு­திகள், விவ­சாய பண்­ணைகள், இதர வர்த்­தக நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­வ­துடன், வடக்கு, கிழக்கு நிர்­வா­கத்­திலும் தொடர்ந்தும் தலை­யிட்டு வரு­கின்­றது. வட கிழக்கு தமிழர் தாயக பிர­தே­சங்­களில் தமிழர் தமது வாழ்­வா­தா­ரத்­திற்­காக தொடர்ந்தும் ஆக்­கி­ர­மிப்பு இரா­ணு­வத்தில் தங்கி தமது பொரு­ளா­தா­ரத்தை தாமே பொறுப்­பேற்க முடி­யாத நிலை­யையும், இரா­ணு­வ­ம­ய­மாக்­க­லி­னூடு தமிழ் சமூ­கத்­தினை பிள­வு­ப­டுத்தி, சமூக உற­வு­மு­றை­களை சிதைத்து, தமிழர் கூட்­டாக ஜனநாயக ரீதியில் அணி திரள்­வ­தற்கு இடையூறாகவும் இராணுவம் நிலவி வருகிறது. பெண்கள் சிறு­வர்­க­ளுக்­கெ­தி­ரான இரா­ணு­வத்­தி­னரின் பாலியல் வன்­முறை சம்­ப­வங்­களும் தமிழ் தேசத்தின் இருப்பை சிதைக்கும் வழிவகைகளே. இதனால் வட கிழக்கு தாயகத்திலிருந்து உட­ன­டி­யாக இரா­ணு­வத்தை வெளியேற்­று­மாறு இப்­பே­ரணி வலி­யு­றுத்­து­கின்­றது.

3. தமிழ் இனப் படு­கொ­லைக்­கான நீதித் தேடலில் - உள்­ளகப் பொறி­முறை பய­னற்ற சாத்­தி­ய­மற்ற - ஒன்று எனத் தமிழ் மக்கள் தொடர்ச்­சி­யாக நிரா­க­ரித்­து வரு­கின்­றனர். ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் செப்­டெம்பர் 2015 அறிக்கை மிகத் தெளிவாக இலங்­கையின் நீதித்­துறை யுத்­தத்தின் போது இழைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுக்கு நீதி வழங்க தகைமை­யற்­றது எனக் கூறி­யது. இருப்­பினும் ஐ. நா.வின் அங்­கத்­துவ நாடுகள் இணைந்து கலப்பு பொறி­முறை ஒன்றை இலங்­கைக்கு பொருத்­த­மா­னது என தமது செப்­டெம்பர் 2015 பிரே­ரணை மூலம் விதந்­து­ரைத்­தனர். அதனை ஆரம்­பத்தில் ஏற்றுக் கொண்ட இலங்கை அர­சாங்கம் தற்­போது வெளிநாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்க முடி­யாது எனத் தெளிவாக அறி­வித்­து­விட்­டது. கலப்பு பொறி­மு­றையை நிரா­க­ரித்து, மீள உள்­ளகப் பொறி­மு­றையை மட்­டுமே முன்­வைக்­கின்­றது. அத்­தோடு, அதனைச் செய்­வ­தற்கு ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்ட கால அவ­கா­சத்தை மேலும் நீடித்­துத்­த­ரு­மாறும் தற்­போது கோரி நிற்­கின்­றது. இந்த பின்­ன­ணியில், இலங்கை அர­சாங்­கத்­திற்கு எத்­த­கைய கால நீடிப்பும் வழங்கப்படக்கூடாது என வலியுறுத்துவதோடு தமிழ் இனப்­படு­கொலைக்­கான சர்­வ­தேச விசா­ர­ணை­யே மட்­டுமே தமிழ் மக்­களின் ஏகோ­பித்த நிலைப்­பா­டாக இந்த பேரணி வலி­யு­றுத்தி நிற்­கின்­றது.

4. கடந்த 35 வரு­டங்­க­ளுக்கு மேலாக நிலவி வரும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் இளை­ஞர்­களும் யுவ­தி­களும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களுள் சிலர் 15 – 20 வரு­டங்­க­ளுக்கு மேலாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு விசா­ரணை செய்­யப்­பட்டு வந்­தனர். 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படும் என்று ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­ய­கத்­திற்கு உறுதி மொழி கொடுத்தும் இது­வரை பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­ப­ட­வில்லை என்­ப­துடன் தொடர்ந்தும் பல இளை­ஞர்கள் அச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு வரு­கின்­றனர். இச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு சிறை­களில் வாழும் அர­சியல் கைதிகள் அனை­வரும் நிபந்­த­னை­யின்றி உட­ன­டி­யாக விடு­விக்­கப்­ப­ட­வேண்­டு­மென்­ப­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் உட­ன­டி­யாக விலக்கிக் கொள்­ளப்­பட வேண்­டு­மெ­னவும் இப்­பே­ரணி வலி­யு­றுத்­து­கின்­றது.

5. போர் நிகழ்ந்த கால கட்­டத்­திலும், அர­சியற் கார­ணங்­க­ளுக்­கா­கவும் கடத்­தப்­பட்டும், சர­ண­டைந்த பின்பும் காணாமல் போகச்­செய்­யப்­பட்ட ஒவ்­வொரு தமிழ் மகனும், தமிழ் மகளும் எங்கு இருக்­கின்­றார்கள் அல்­லது அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என உட­ன­டி­யாகக் கண்­ட­றிந்து பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டவும் வேண்டும்.

6. யுத்தம் நடந்த கால­கட்­டங்­களில் கடற்­ப­டை­யி­னரின் தடை உத்­த­ரவு காரணமாக வடக்கு – கிழக்கு மீனவர்கள் தமது வாழ்­வா­தா­ரங்­களை இழந்­தி­ருந்­தனர். ஆனால் யுத்தம் நிறை­வ­டைந்து ஏழு வரு­டங்கள் ஆகிய நிலை­யில் இன்றும் கூட வடக்கு, கிழக்கு மீன­வர்கள் தொடர்ச்­சி­யான பாதிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்­றனர். தென்­னி­லங்கை மீன­வர்கள் வட கிழக்கு கடற்­பரப்­பினுள் அத்­து­மீறி நுழை­வது மாத்­தி­ர­மின்­றி, வடக்கு, கிழக்கு மீன­வர்­களின் பட­கு­களை சட்ட விரோ­த­மாக கைப்­பற்­று­வ­தா­லும் நிரந்­தர தங்­கு­மி­டங்­களை அத்­து­மீறி அமைப்பதனாலும் தமிழ் மீனவர்கள் தமது சொந்த மீன்­பிடி இடங்­களில் இருந்தே விரட்­டப்­ப­டு­கின்ற சூழல் உரு­வாகி வரு­கின்­றது. மேலும் தென்­னி­லங்கை மீன­வர்கள், வட கிழக்கு கடற் பிர­தே­சங்­களில் சட்ட விரோ­த­மான மீன்­பிடி முறை­களை கையாள்­வதால் தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்தும் வரு­கின்­றார்கள். இதன் கார­ண­மாக ஒட்டு மொத்­த­மான தமிழ் மக்­களின் பொரு­ளா­தா­ரமும் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை நிறுத்துவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்­டு­மென இப்­பேரணி வலி­யு­றுத்­து­கின்­றது.

இந்­திய மீன­வர்­களின் சட்ட விரோத மீன்­பிடி முறை­க­ளாலும் தமிழ் மீன­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். அன்­றாடத் தொழில் செய்து பிழைக்கும் மீன­வர்­களின் வாழ்­வா­தார உரி­மைகள் பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்­ப­துடன், தமிழ் மீன­வர்­களின் கடல் வளங்கள் அத்­து­மீறி, சட்­டத்­துக்கு புறம்­பாக சூறை­யா­டப்­ப­டு­வதை இப்­பே­ரணி வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது.

7. விடு­த­லைக்­காக போரா­டிய தேசிய இனங்கள் மத்­தியில் அவர்­களின் விடுதலை வேட்கையை அழிக்கும் பொருட்டு போதை வஸ்­துக்­களை இளை­ஞர்கள், யுவ­திகள் மத்­தியில் பரப்பும் வழி­மு­றை­களை பல நாடு­களின் அர­சுகள் கையாண்­டுள்­ளன. தமிழர் தாய­கத்தை ஆழ­மான இரா­ணுவ கண்­கா­ணிப்­புக்குள் வைத்­தி­ருக்­கின்ற போதிலும் பெரு­ம­ள­வான போதை­வஸ்து பொருட்கள் எமது பிர­தே­சங்­க­ளினுள் ஊடு­ருவ விடப்­ப­டு­கின்­றன. மேலும்இ ஹெரோயின் போன்ற போதைப் பொருட்­களும், வடக்கு, கிழக்கில் வேக­மாகப் பரவி வரு­வ­துடன், வட- கிழக்கில் இரா­ணு­வத்­தினால் நடத்­தப்­படும் விளை­யாட்டு விழாக்­களின் போது தமிழ் இளை­ஞர்­க­ளி­டையே மதுபாவனையை இராணுவம் நேரடியாக ஊக்கப்படுத்துவது ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இவை அனைத்தும் எமது இளம் சந்­த­தியின் எதிர்­கா­லத்தை திட்­ட­மிட்டு அழிக்கும் நட­வ­டிக்­கை­க­ளா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது. இவற்றை நிறுத்­தவும்,கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்­டு­மென இப்­பே­ரணி வலி­யு­றுத்­து­கின்­றது.

அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக:-

இன்­ன­மும் தீர்வு காணப்படாத தமிழ் தேசிய இனப் பிரச்­ச­ினை­யி­னதும் நடந்து முடிந்த போரி­னதும் - நேரடி மற்றும் நேர­டி­யற்ற விளை­வு­க­ளான - மேற்­கூ­றப்­பட்ட அர­சி­யற்-­பா­த­கங்கள் எதுவும் மீண்டும் நிக­ழா­த­வாறு தமிழ் மக்கள் பேர­வை­யினால் முன்­வைக்­கப்­பட்ட அர­சியற் தீர்வு முன்­மொ­ழிவின் அடிப்­ப­டையில் ஒரு சுயாட்சித் தீர்வு காணப்­பட வேண்டும் என்று இந்தப் பேரணி பிர­க­டனம் செய்­கின்­றது.

தமி­ழர்­களின் தேசிய பிரச்­ச­ினைக்கு தீர்வு காணப்­படும் எனும் நோக்கில் 3ஆவது குடி­ய­ரசு அர­சியல் யாப்பை கொண்டு வருவோம் என்று இவ்­வ­ர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு கூறி வரு­கின்­றது. ஆனால், இலங்கை அரசின் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்­றை­யாட்­சிக்­குள்­ளேயே தீர்வு வரும் எனவும் பௌத்­தத்­திற்கு கொடுக்­கப்­பட்­டுள்ள முன்­னு­ரி­மையில் மாற்றம் வராது எனவும் தொடர்ந்­தேர்ச்­சி­யாக கூறி வரு­கின்­றனர். ஒற்­றை­யாட்­சிக்குள் ஒரு குறைந்த பட்ச அதி­காரப் பகிர்வை தமி­ழ­ருக்­கான தீர்வாக திணிக்க இவ்­வ­ர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அவ­சர அவ­ச­ர­மாக ஓர் அர­சி­ய­ல­மைப்பை பாரா­ளு­மன்றில் நிறை­வேற்றி பொது­சன வாக்­கெ­டுப்பு ஒன்றின் மூலம் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றிற்கு அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற அர­சாங்கம் முயற்­சிக்க இருக்­கின்­றது. தமிழ் மக்­களில் பெரும்­பான்­மை­யி­னரின் வாக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு கிடைத்தால் அதை வைத்து தமிழ் மக்­க­ளிற்கு அர­சியல் தீர்­வொன்றை வழங்கி விட்­ட­தாக அர்த்­தப்­ப­டுத்­து­வதே அர­சாங்­கத்தின் நோக்கம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்கை. தமி­ழர்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு எப்­ப­டி­யாக இருக்க வேண்டும் எனக் கருத்துக் கூறு­வதோ, கூட்­டாக நிலைப்­பாடு எடுப்­பதோ, அது தொடர்பில் ஜன­நா­யக ரீதி­யாக அணி­தி­ரள்­வதோ அர­சி­ய­ல­மைப்­பாக்க முயற்­சியை குழப்ப எடுக்கும் நட­வ­டிக்­கை­யாக சித்­த­ரிப்­பதை நாம் கண்­டிக்­கின்றோம். அந்த வகையில் பின்­வரும் நிலைப்­பா­டு­களை இப்­பே­ரணி எடுக்­கின்­றது:

எனவே,

அ. தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் 13ஆம் திருத்தம் எமக்கு தந்த படிப்­பி­னையின் அடிப்­ப­டை­யிலும் இலங்கை அர­சி­யலின் சிங்­கள பௌத்த மேலா­திக்க அர­சியல் கலா­சா­ரத்­தில்த தமி­ழர்­களின் கடந்த 68 ஆண்டு கால கூட்­ட­னு­ப­வத்தின் பிர­கா­ரமும் ஒற்­றை­யாட்­சிக்குள் அர­சியல் தீர்வு எந்த வடி­வத்­திலும் சாத்­தியம் இல்லை என நாம் வலி­யு­றுத்திக் கூறு­கின்றோம்.

ஆ. தமிழ் மக்கள் பேர­வை­யினால் தயா­ரிக்­கப்­பட்ட தீர்­வுத்­திட்­டத்தின் அடிப்­ப­டையில், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான நடை­முறை சாத்­தி­ய­மான தீர்வு, தமி­ழர்­களை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தேச­மாக, அவர்­க­ளது சுய­நிர்­ணய உரி­மையை மதிக்கும், தன்­ன­ளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டுகள் மூல­மா­கவே அடை­யப்­படும் எனக் கூறு­கின்றோம்.

இ. தமி­ழர்­களின் சுய­நிர்­ணய உரி­மை­யையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறை­மை­யையும், நிறுவன ரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகின்றோம்.

ஈ. தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரை குறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என இப்பேரணி கூறுகின்றது.

உ. புதிய அரசியலமைப்பு மிகவும் இரகசியமான முறையில் உருவாக்கப்­படுகின்றது. புதிய அரசிய­லமைப்பு தொடர்பிலாக நடத்தப்பட்ட பொது மக்கள் கலந்தாய்வு தொடர்பிலான அறிக்கை தமிழ் மக்களின் முன்வைப்புக்களை புறந் தள்ளியே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு நகல் தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் வெளிப்படையானதும் ஜனநாயக ரீதியானதுமான கலந்துரையாடல் ஒன்று மக்கள் மத்தியில் இடம் பெற போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அடக்குமுறையின் கீழ் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடலை நடத்த முடியாது. வடக்கு, கிழக்கில் கருத்துச் சுதந்திரத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான திறந்த விவாதம் நடைபெற பயங்கரவாதத் தடைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், இராணுவமய நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாம் கூறுகின்றோம்.

தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில், தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்தது. அதன் அடிப்படையில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு அடையப்பட வேண்டும் என இந்தப் பேரணி பிரகடனப்படுத்துகின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-11#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.