Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Featured Replies

வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

 

 

கேரள கஞ்சாவுடன் யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.D05d40fdfd.jpg

இந்தியாவிலிருந்து கடல் வழியாக படகு ஒன்றில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சாவுடனே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக ஏனைய மாவட்டங்களுக்குக் கேரள கஞ்சா கடத்தல் நடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை தொடர்ந்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/16525

  • கருத்துக்கள உறவுகள்

குமுளி செக் போஸ்டில் நேர்மையான அதிகாரிகளை போடுங்க ..! !:cool:

  • தொடங்கியவர்

கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான கஞ்சா

ddd-copy-56bcb2f23aa418c87c26716df9266004480ac212.jpg

 

வல்வெட்டித்துறையிலும் தலை மன்னாரிலும் மீட்பு  ஐந்து பேர் கைது    

ரி.விரூஷன், மன்னார் நிருபர்

யாழ்ப்­பாணம் வல்­வெட்­டித்­து­றை­யிலும், தலைமன்னார் பகு­தி­யிலும் நேற்று சனிக்­கி­ழமை பல கோடி ரூபாய் பெறு­ம­தி­யான கேரளா கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­துடன், வல்­வெட்­ டித்­து­றையில் மூவரும், தலை­மன்­னாரில் இரு­வ­ரு­மாக ஐவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.    

யாழ்ப்­பாணம் வல்­வெட்­டித்­துறை பிர­தே­சத்தில் 120 கிலோ கேரள கஞ்­சா­வினை கைப்­பற்­றி­யுள்­ள­தா­கவும், அதனை கடத்தி வந்த மூன்று நபர்­ களை கைது செய்­துள்­ள­தா­கவும் வல் வெட்­டித்­துறை பொலிஸ் நிலை­யத் தின் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­துள் ளார். இது குறித்து அவர் கூறு­கையில்,    நேற்­றைய தினம் காலை இந்­தி­யா வில் இருந்து கடல்  மார்க்­க­மாக பட­கொன்றில் குறித்த கேரள கஞ்­சா­வா­னது கடத்தி வரப்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு கடத்தி வரப்­பட்­டி­ருந்த கஞ்­சா­வா­னது காட்­டு­புலம் இந்து மயா­னத்­திற்கு அண்­மை­யாக வெளி மாவட்டம் ஒன்­றுக்கு கடத்தி செல்­வ­தற்­காக தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது இதன்­போதே எமது விஷேட பொலிஸ் குழு­வி­னனர் இவர்­களை கைது செய்­தனர். .   

இவ்­வாறு சுமார் 120 கிலோ கேரள கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. அதன் மொத்த பெறு­மதி 1கோடியே 20 இலட்சம் ரூபா ஆகும். அத்­துடன் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் அவர்கள் மூவரும் வல்­வெட்­டித்­துறை பகு­தியைச் சேர்ந்­த­வர்­க­ளாவர் என்றார்

இதே வேளை மன்­னார்-­த­லை­மன்னார் பிர­தான வீதி 2 ஆம் கட்டை சந்தி பகு­தியில் வைத்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறு­ம­தி­யான கேரள கஞ்­சாப்­பொ­தி­களை நேற்று சனிக்­கி­ழம அதி­காலை மன்னார் பொலிஸ் நிலைய போதைப்­பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

தலை­மன்­னாரில் இருந்து தென் பதிக்கு கொண்டு செல்லும் வகையில் ஹயஸ் ரக வாக­னத்தில் பதுக்கி கொண்டு செல்­லப்­பட்ட சுமார் 110 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்­சாப்­பொ­தி­களே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளன.

மன்னார் பொலிஸ் நிலைய போதைப்­பொருள் தடுப்பு பிரிவு பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற இர­க­சிய தக­வ­லை­ய­டுத்து துரித நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட பொலிஸார் தலை­மன்­னாரில் இருந்­து­மன்னார் நோக்கி வந்த ஹயஸ் ரக வாக­னத்தை 2 ஆம் கட்டை பகு­தியில் நேற்று அதி­காலை இடை மறித்து சோதனை செய்­துள்­ளனர்.

இதன் போது சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறு­ம­தி­யான 110 கிலோ கிராம் எடை கொண்ட கேர­ளக்­கஞ்­சாப்­பொ­திகள் மீட்­கப்­பட்­டுள்­ள­தோடு அனு­ரா­த­புரம் மற்றும் கொழும்பைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

தலை­மன்­னாரில் இருந்து தென் பகு­திக்கு கடத்திச் செல்­லப்­பட்ட கேர­ளக்­கஞ்­சாப்­பொ­தி­கலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-02-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.