Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில மீட்புப் போராட்டங்களை ஆதரிப்போம்! மாவை சேனாதிராசா

Featured Replies

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம் இலங்கை தமிழரசு கட்சி துணைத் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில் ஜனநாயக வழிகளில் அரசுப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் சொந்த நிலங்களை மீட்கவும் அந்த நிலங்களில் மீளக்குடியேறி வாழ்வதற்குமான உரிமை மறுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இனவிடுதலைப் போராட்ட காலங்களில் துன்பமான துயரமான இழப்புக்களையும் அனுபவித்த மக்கள் திடசங்கற்பம் கொண்டு நடாத்தும் போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம்.

ஒரு திட்டமிட்ட அடிப்படையில் அனைவரும் ஒருங்கினைந்து இலக்கை எட்டும் வரை போராடுவது நியாயமானதேயாகும்.

இப் போராட்டங்களில் அமைதியான அஹிம்சை வழியிலான வன்முறைகளுக்கு இடமளிக்காத ஜனநாயக வழிப் போராட்டங்களில் நாம் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து அதற்குச் சொந்தமான மக்களைமீளக் குடியமர்த்துவோம் என ஜனாதிபதியும் அரசும் வாக்குறுதி அளித்து இரண்டு வருடங்களாகிவிட்டன.

இக் காலத்தில் ஒருசிறு முன்னேற்றம் ஏற்ப்பட்டதே தவிர மக்கள் நிலங்கள் பெருமளவில் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இவ்விடயங்களில்

2012,2013,2014,2015,ஆம் ஆண்டுகளில் இலங்கையுட்பட அங்கத்துவ நாடுகளினால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைத் தீர்மானங்கள் பெருமளவில் நிறைவேற்றப்படாமல் அரசும் ,ஜனாதிபதியும் இழுத்தடிப்புச் செய்துவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மக்களைப் போராட அரசு நிர்ப்பந்திப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜனாதிபதியும் அரசும் உடன் நேரடியாகக் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த மக்களை மீளத் தங்கள் நிலங்களில் குடியேற்ற வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றோம்.

அனைத்துத் தரப்பு மக்கள் சிவில் அமைப்புக்கள் நிலமீட்புக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவதையும் வரவேற்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்றத்திலும் நேரடியாகவும் ஜனாதிபதியிடமும் அரசிடமும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கவேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் முல்லைத்தீவில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பிலும் ஒத்தி வைப்புப் பிரேரனை கொண்டு வந்து விவாதித்துள்ளனர்.

ஆனாலும் விடிவு இல்லை. எனவே மக்கள் போராட்டங்களை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்கள் சொந்த நிலங்களை விடுவித்து மீளக்குடியிருப்புக்குரித்ததான மக்கள் வாழ்வுரிமைப் போராட்டங்களை ஆதரிப்போம் அப் போராட்டங்களின் பங்காளிகளாவோம்.

இத்தகைய போராட்டங்களை நடாத்தியும் பங்களிப்புச் செய்தும் ஆதரித்தும் வந்த வரலாற்றைக் கொண்ட நான் சென்ற திங்கள் 09.01.2017 அன்று நினைவிழக்கும் வரையிலான கொடிய நோயொன்றினால் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததனால் நான் பங்கு பற்ற முடியவில்லை என எனது மன வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி நோயிலிருந்து தேறுவதற்கு மருந்து உட்கொண்டு வருகின்றேன்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியுள்ளது. இருப்பினும் நான் விரைவாகத் தேறி வருகின்றேன்.

இத்தகைய போராட்டங்களை ஆதரிக்கின்றேன். விரைவில் போராட்டங்களில் பங்கெடுக்க முடியும் என நம்புகின்றேன். அதனாலும் இவ்வறிக்கையை வெளியிடுகின்றேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/community/01/135961

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழர் நலன்சார்ந்து அரசியல்திட்டங்களை முன்னெடுக்கிறோம் என புலுடா விடும் அரசியல்வாதிகள் அனைவருக்கும் நான் கூறவரும் விடையத்தை காதில் போட்டுவிடுங்கோ

மாகாணசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இவைகளின் பிரசாரக்கூட்டங்களின்போது நாம்தான் தமிழர்களது அபிலாசைகளை எவ்விதமேனும் நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய தகுதியுள்ள அரசியல் சக்தி, எம்மை உங்கள் பிரச்சனைபற்றிப் பேசுவதற்கு, போராடுவதற்கு நாடாளுமன்றம் அனுப்புங்கோ எங்களது பிரச்சனைகளை உங்களுடன் வாழும் எம்மால்தான் புரிந்துகொள்ளமுடியும் ஆகையால் மாகாணசபையினது அதிகாரங்களை நாம் பெற்றுக்கொள்ளும்வகையில் எம்மைத் தெரிவுசெய்யுங்கள் எனக்கூறி ஓட்டுக்களைப்பெற்று அதிகாரத்துக்கும் பதவிக்கும் வந்தவர்கள் நீங்கள்,

அதாவது உங்கள் பிரச்சனைகளை நாம் பார்த்துக்கொள்கிறோம் எத்தகைய விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம்தராது நாங்கள் உங்கள் உரிமைகளை இழந்தவைகளைப் பெற்றுத்தருவோம் என கூறியே எங்கள் பிரச்சனைக்கான பிரதிநிதிகளாக எம்மால் உங்களை தெரிவுசெய்யப்பட்டவர்களாக ஆக்கியுள்ளோம்.

ஒரு அரசியல் தலைமை அதனூடான எங்களது விடையங்களை கவனிப்பதற்கான கடப்பாடு மற்றும் அறம் சார்ந்த உணர்வு இருப்பவர்களாக நீங்கள் எங்களது தெரிவுக்குப்பின்பு இருந்திடல் வேண்டும் அதாவது எமது உரிமை கலாச்சாரம் நிலம் கல்வி பொருளாதாரம் சம்பந்தமான தமிழர்க்குப்பொதுவான பிரச்சனைகள் வரும்போது, தமிழ் மக்களது பிரதிநிதிகள் எனப்படும் நீங்கள்தான் உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம் போராட்டம் ஊர்வலம் மாநாடு என முன்னின்று செய்திடல்வேண்டும் தவிர நீங்கள்தான் இப்படியான போராட்டங்களின் மக்கள் ஈடுபடமுன்பே ஈடுபடல்வேண்டும் அதற்கான தார்மீகத் தகுதிகளும் மக்கள் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூடிய அனைத்துத் தரப்பு அங்கீகாரத்தையும் நீங்களேகொண்டுள்ளீர்கள், அதற்கான சட்ட உரிமைகளும் சட்டப்பாதுகாப்பும் அடிப்படை உரிமையும் உங்களுக்கே உள்ளது.

அதைவிடுத்து தமிழர்கள் தங்கள் பிரச்சனைகள், மற்றும் தேவைகளுக்கான தீர்வுக்காக அவர்களே தெருவில் இறங்கிப்போராடவேண்டும் நாம் எமக்கு நேரமிருந்தால் வெயிலோ மழையோ அவ்வேளையில் உங்களது கைகளால் உங்களுக்காகவே பிடிக்கவேண்டிய குடையை உங்களால் உள்வாங்கப்பட்ட ஒரு ஆதரவாளர் கையில் கொடுத்து ஒரு தமிழ் அடிமை எனக்குக் குடைபிடிக்கின்றது நான் அவனது எஜமானர் எனும் மிதப்பில் வெள்ளை வேட்டியை காலநிலைக்கேற்ப உயர்த்தியோ பதிச்சோ கட்டிக்கொண்டு ஒருசில நிமிடங்கள் குறை கேட்பது எனும்கோதாவில் புகைப்படம் எடுத்து அதை ஆவணப்படுத்தி அதையே ஊடகங்களில் வெளியிட்டு அன்று மாலையே கொழும்பு நோக்கிப் பயணமாகி..........

கோப்பாப்பிலவுக்கும் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கும் வெயிலிலும் மளையிலும் தெருப்புழுதியிலும் மளைவெள்ளத்திலும் மரணத்துடன் விளையாடும் உண்ணாவிரதமிருக்கும் தமிழன் நிலை எண்ணிப்பாராது......

நாடாளுமன்ற உணவகத்தில் மானியவிலையில் கிடைக்கும் கட்டு சம்பல், குழைக்கறி, காரல் கருவாட்டுப்பொரியல், மைசூர் பருப்புக்கறி இதனுடன் சூரமாலுக் குழம்பை அள்ளி வாய்க்குள் அதக்கும்போது........

உங்களுக்கு நரகலைத் தின்பதுபோல் இருப்பதில்லையா!

  • கருத்துக்கள உறவுகள்

இவரட்ட ஆராவது இப்ப ஆதரவு கேட்டவையா. களத்தில் நின்று போராட வேண்டியவை.. இப்ப தான் ஆதரவு தெரிவிக்கினமாம். வாக்கு வாங்கேக்க மட்டும்.. பல விதமா வாக்குறுதிகளை சிங்களவனுக்கு பின்னாலும் முன்னாலும் கூனிக் குறுகி வழங்குவார்கள். அப்படி வழங்கினவர்களில் ஒருவர் தான் மாவை. :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.