Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டாம் இலங்கைக்கு ஐ.நா. பிரதிநிதி அறிவுறுத்தல்

Featured Replies

பாதிக்­கப்­பட்ட மக்­களை புறக்­க­ணித்து அபி­வி­ருத்­தியை மேற்­கொள்ள வேண்டாம்

sP20-3744f0395fcf7b1a3a6967fa5ef1b47d70db38b4.jpg

 

இலங்­கைக்கு ஐ.நா. பிர­தி­நிதி அறி­வு­றுத்தல்

(எம்.எம்.மின்ஹாஜ்)

பாதிக்­கப்­பட்ட மக்­களை புறக்­க­ணித்து அபி­வி­ருத்­தியை மேற்­கொள்ள வேண்டாம் என ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நி­தி­யும் ஐ.நா அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித்­திட்­டத்தின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான உனா மெக்­கோலி கோரிக்கை விடுத்தார்.

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பேண்­தகு இலங்கை அபி­வி­ருத்தி நிகழ்ச்சி திட்­டத்­திற்­கான கண்­காட்­சியின் ஆரம்ப நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில். பொது­வான மனி­தா­பி­மான செயற்­பா­டு­க­ளி­ன­டிப்­ப­டையில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து    செயற்­பட வேண்­டிய காலம் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. 2030 ஆம் ஆண்டு நிலை­யான அபி­வி­ருத்தி திட்­டத்­துக்­கான பல தெளி­வான பாதை­களை இலங்கை வரை­ய­றுத்­துள்­ளது. குறிப்­பாக வறுமை ஒழிப்பு பொரு­ளா­தார வளர்ச்சி வேகம்இ சுகா­தாரம் போன்­ற­வற்றில் இலங்கை பல முன்­னேற்­ற­க­ர­மான பாதை­களை வெளிக்­காட்டி வரு­கின்­றது. 

மக்­க­ளுடன் மக்­க­ளுக்­காக மக்­களால் செய்­யப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்­தியே நிலைத்து நிற்கும் என்­பதில் நாம் உறு­தி­யாக உள்ளோம். இலங்­கையும் அனைத்து இன மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து அபி­வி­ருத்­தியை அனைத்து மக்­க­ளுக்கும் பொது­வா­ன­தாக முன்­னெ­டுக்க வேண்டும். ஆவ்­வா­றின்றேல் குறிப்­பிட்ட சில மக்கள் அசா­தா­ரண சூழ்­நி­லைக்கு உள்­ளா­கி­வி­டுவர்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­னதும் அடிப்­படை வச­தி­க­ளற்ற மக்­க­ளி­னிதும் தேவைகள் முழு­மை­யாக பூர்த்தி செய்­யப்­பட வேண்டும். 17 நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடைய தேவை­யான செயற்­பாட்டு ரீதி­யான இலக்­கு­களை இலங்கை வரை­ய­றுக்க வேண்டும்.

குறிப்­பாக உலக சந்­தையில் இலங்­கைக்­கான வாய்ப்­புகள் அதி­க­மா­க­வுள்­ளன. அதனை தக்­க­வைத்­துக்­கொள்ள தேவை­யான நட­வ­டிக்­கை­களை இனி­வரும் காலங்­களில் சிந்­திக்க வேண்டும். இதற்கு ஐக்­கிய நாடுகள் சபை தனது முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கும்.

அத்­தோடு நிலை­யான அபி­வி­ருத்­தியின் பொது­வான கடப்­பா­டுகள் மற்றும் பொறுப்­பு­ணர்வு தொடர்பில் நாம் அதிகம் சிந்­திக்க வேண்டும். இலங்­கை­யிலும் ஒரு தாய் மக்­க­ளாக சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ வேண்­டிய காலம் இது­வாகும். ஆகவே நாம் மக்­களின் நன்­மைக்­கா­கவே செயற்­பட வேண்டும். ஆந்த பொது­வான இலக்­கு­களை அடைய தேவை­யான செயற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும்.

அனைத்து மக்­களும் அனைத்து இன மதம் சாராத மக்­களும் அபி­வி­ருத்­தியில் ஒன்­றி­ணை­ணய வேண்டும். அபி­வி­ருத்தி இலக்கு என்­பது மிகவும் கடி­ன­மா­னது என்­பதை நாம் அனை­வ­ருமே உணர்ந்­துள்ளோம். ஆனால் அந்த இலக்கை அடைய தேவை­யான அனைத்து சாத்­தி­யக்­கூ­று­களும் இலங்­கை­யிடம் உள்­ளன. தெற்­கா­சி­யா­வி­லேயே இலங்­கையின் அபி­வி­ருத்தி மார்க்­கங்கள் வித்­தி­யா­ச­மா­னவை. அது மிகவும் வரவேற்கத்தக்கது

அந்த பயணத்தை அடைய கூட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகின்றது. வரலாற்றில் இது தீர்க்கமான காலமாக உள்ளது. ஜனாதிபதியின் உரையில் காலநிலை மாற்றம் தொடர்பில் அதிகமாக கதைத்திருந்தார். உண்மைதான் காலநிலை மாற்றமே நமக்குள்ள பெரிய சவாலாக உள்ளது. அந்த சவாலை அடைய நாம் ஒன்றிணைவோம் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
பாதிக்கப்பட்ட மக்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்! - ஐ.நா தூதுவர் வேண்டுகோள் 
[Saturday 2017-04-01 14:00]
பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து அபிவிருத்தியை மேற்கொள்ளாதீர்கள், அவர்களைக் கவனத்தில் கொண்டு செயற்படுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான உனா மக்கோலி கோரிக்கை விடுத்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து அபிவிருத்தியை மேற்கொள்ளாதீர்கள், அவர்களைக் கவனத்தில் கொண்டு செயற்படுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான உனா மக்கோலி கோரிக்கை விடுத்தார்.  

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பேண்தகு இலங்கை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-

பொதுவான மனிதாபிமான செயற்பாடுகளின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. 2030ம் ஆண்டு நிலையான அபிவிருத்தி திட்டத்துக்கான பல தெளிவான பாதைகளை இலங்கை வரையறுத்துள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு பொருளாதார வளர்ச்சி வேகம், சுகாதாரம் போன்றவற்றில் இலங்கை பல முன்னேற்றகரமான பாதைகளை வெளிக்காட்டி வருகின்றது.

மக்களுடன் மக்களுக்காக மக்களால் செய்யப்படுகின்ற அபிவிருத்தியே நிலைத்து நிற்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இலங்கையும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியை அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக முன்னெடுக்க வேண்டும். அவ்வாறின்றேல் குறிப்பிட்ட சில மக்கள் அசாதாரண சூழ்நிலைக்கு உள்ளாகி விடுவர்.பாதிக்கப்பட்ட மக்களினதும் அடிப்படை வசதிகளற்ற மக்களினிதும் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

17 நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைய தேவையான செயற்பாட்டு ரீதியான இலக்குகளை இலங்கை வரையறுக்க வேண்டும். குறிப்பாக உலக சந்தையில் இலங்கைக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. அதனை தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் சிந்திக்க வேண்டும். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். அத்தோடு நிலையான அபிவிருத்தியின் பொதுவான கடப்பாடுகள் மற்றும் பொறுப்புணர்வு தொடர்பில் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.

இலங்கையிலும் ஒரு தாய் மக்களாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டிய காலம் இதுவாகும். ஆகவே நாம் மக்களின் நன்மைக்காகவே செயற்பட வேண்டும். அந்த பொதுவான இலக்குகளை அடைய தேவையான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அனைத்து மக்களும் அனைத்து இன மதம் சாராத மக்களும் அபிவிருத்தியில் ஒன்றிணைணய வேண்டும். அபிவிருத்தி இலக்கு என்பது மிகவும் கடினமானது என்பதை நாம் அனைவருமே உணர்ந்துள்ளோம். ஆனால் அந்த இலக்கை அடைய தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளும் இலங்கையிடம் உள்ளன.

தெற்காசியாவிலேயே இலங்கையின் அபிவிருத்தி மார்க்கங்கள் வித்தியாசமானவை. அது மிகவும் வரவேற்கத்தக்கது.அந்த பயணத்தை அடைய கூட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகின்றது. வரலாற்றில் இது தீர்க்கமான காலமாக உள்ளது.ஜனாதிபதியின் உரையில் காலநிலை மாற்றம் தொடர்பில் அதிகமாக கதைத்திருந்தார்.உண்மைதான் காலநிலை மாற்றமே நமக்குள்ள பெரிய சவாலாக உள்ளது.அந்த சவாலை அடைய நாம் ஒன்றிணைவோம் என்றார்.http://www.seithy.com/breifNews.php?newsID=179583&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.