Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணையின் மூலம் தீர்வுகாண அரசாங்கம் தயாரில்லை மோசமான படிப்பினையை நாம் பெற்றுள்ளோம் என்கிறார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க

Featured Replies

சர்வதேச விசாரணையின் மூலம் தீர்வுகாண அரசாங்கம் தயாரில்லை

Mahinda-Samarasinghe-f3d79f71964574458056a5f701c41dcca3f48ba6.jpg

 

மோசமான படிப்பினையை நாம் பெற்றுள்ளோம் என்கிறார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க

(ஆர்.யசி)

சர்­வ­தேச விசா­ர­ணையின் மூலம் இலங்கை விவ­கா­ரங்­களில் தீர்வு காண அர­சாங்கம் ஒரு­போதும் தயா­ராக இல்லை. சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களை நாட்டில் அனு­ம­தித்து கடந்த காலத்தில் மோச­மான படி­ப்பினை பெற்­றுள்ளோம் என அமைச்சர்    மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.  

இலங்­கையில் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் சிவில் அமைப்­பு­களின் பங்­க­ளிப்பும் அவ­சி­ய­மா­னது. மாற்றுக் கருத்­துக்­களும் முன்­வைக்­கும்­போதே உண்­மைகள் வெளி­வரும் எனவும் அவர் தெரி­வித்தார். தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், இலங்­கையின் போர்க்­குற்ற விட­யங்கள் தொடர்பில் உட­லா­கம அறிக்கை இலங்கை அர­சாங்­கத்தின் மூலம் மேற்­கொள்­ளப்­பட்­ட­போதும் அதன் தரம் தொடர்பில் பாரிய கேள்வி எழுந்­தது. அவ்­வா­றன நிலையில் சர்­வ­தே­சத்தின் அழுத்தம் இருந்த கார­ணத்­தினால் சர்­வ­தேச கண்­கா­ணிப்பு ஒன்றை நாம் ஏற்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. ஆகவே சர்­வ­தேச கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள நாம் குறித்த சில நாடு­க­ளுக்கு தெரி­வித்தோம். 

அதன் பின்னர் அவர்கள் உரு­வாக்­கிய விசா­ர­ணைக்­கு­ழுவே தருஸ்மான் குழு­வாகும். மூன்­றுபேர் கொண்ட இக்­குழு முழு நேரமும் இலங்­கையில் வந்து கண்­கா­ணிப்பை மேற்­கொள்ள கால அவ­காசம் இல்­லாத கார­ணத்­தினால் அவர்­களின் உப குழு­வொன்றை இங்கு அனுப்பி வைத்­தனர். எனினும் இந்த உப­குழு கண்­கா­ணிப்பை தவிர்ந்து தமக்­கான ஒரு விசா­ர­ணையை மேற்­கொள்ள ஆரம்­பித்­தனர். அதை நாம் தடுத்தோம். அதன் பின்னர் அவர்கள் உரு­வாக்­கிய தருஸ்மான் அறிக்­கையை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யாக சமர்ப்­பிக்க பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டனர். திரை­ம­றைவில் இந்த அறிக்­கையை சட்­ட­பூர்­வ­மாக்க பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டது.  

எனினும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் நாம் ஜெனிவா சென்று இந்த அறிக்­கையை ஏற்­று­கொள்ள போவ­தில்லை என தெரி­வித்தோம். இந்த அறிக்கை நியூ யோர்க்கில் இருந்து உரு­வாக்­கப்­பட்ட ஒரு அறிக்கை என்­பதை தொடர்ச்­சி­யாக நாம் சுட்­டிக்­காட்­டினோம். அதேபோல் ஜெனிவா மனித உரி­மைகள் ஆனைக்­கு­ழ­விற்கும் இது உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை இல்லை.

 அவ்­வாறு இருக்­கையில் இதை நாம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என தெரி­வித்தோம். அதன் பின்னர் தருஸ்மான் குழுவில் அங்கம் வகித்த இந்­திய முன்னாள் நீதி­பதி பக­வ­தியை சந்­தித்து உண்­மை­களை எடுத்­து­ரைத்து அவரின் அறிக்கை ஒன்றை பெற்று இந்த நிலை­மை­களை தடுக்க முன்­வந்தோம். இந்த உண்­மை­களை இப்­போது என்னால் மட்­டுமே தெரி­விக்க முடியும். நானே அப்­போது இலங்கை தொடர்பில் இந்த நிலை­மை­களை கையாண்டேன். மனித உரி­மைகள் விட­யத்தில் ஜெனிவா சென்று நானே பல்­வேறு கார­ணி­க­ளுக்கு பதில் சொல்­ல­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

ஆகவே கடந்த காலத்தில் சர்­வ­தேச தரப்பி அனு­ம­தித்து நாம் எதிர்­கொண்ட சிக்­கல்கள் தொடர்பில் எமக்கு நல்ல அனு­பவம் உள்­ளது. பக்­க­சார்­பான ஒரு நகர்­வுக்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க கூடாது என்­பதில் நாம் உறு­தி­யாக உள்ளோம். எமது வெளி­வி­வ­கார கொள்­கையும் அது­வா­கவே உள்­ளது. ஆகவே சர்­வ­தேச விசா­ர­ணை­களை ஏற்­ப­டுத்தி நாட்டில் தீர்வை நோக்கி நகர நாம் ஒரு­போதும் தயா­ராக இல்லை. நாம் எமது பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளக விசா­ரணை பொறி­முறை மூல­மாக தீர்வை காண முடியும். எமது சட்டம் மிகவும் பல­மான ஒரு சட்­ட­மாகும். அதேபோல் எமது அர­சியல் அமைப்பில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனு­ம­திக்க எந்த ஏற்­பா­டு­களும் இல்லை. அதேபோல் புதிய அர­சியல் அமைப்­பிலும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனு­ம­திக்கும் எந்த ஏற்­பா­டு­க­ளையும் நாம் ஏற்­று­கொள்ள மாட்டோம். அவ்­வாறு எந்த முயற்­சி­களும் மேற்­கொள்ளப் படு­மாயின் அதை நாம் எதிர்ப்போம்.

அதேபோல் சிவில் அமைப்­பு­களின் பங்­க­ளிப்பை நாம் ஆத­ரிக்­கின்றோம். மாற்றுக் கருத்­துக்­களும் மாறு­பட்ட சிந்­த­னை­களும் முன்­வைக்­கப்­படும் போதே உண்­மை­களை கண்­ட­றிய மாற்று பாதை ஒன்று உரு­வாகும். ஆகவே உண்­மை­களை கண்­ட­றியும் பொறி­மு­றையில் சிவில் அமைப்­பு­களின் பங்­க­ளிப்பை நாம் வர­வேற்கக் வேண்டும். 

ஆனால் மறு­புறம் புலி­களை நியா­யப்­ப­டுத்தும் சிவில் அமைப்­பு­களை இணைத்­துக்­கொண்டு பய­ணிப்­பது எந்­த­வித நன்­மை­க­ளையும் அடை­யப்­போ­வ­தில்லை. அதேபோல் இறுதி யுத்­தத்தில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் எமது பாது­காப்பு படை­யினர் பொது­மக்­களை இலக்கு வைத்து யுத்­தத்தை மேற்­கொள்­ள­வில்லை. இந்த உண்­மை­களை புரிந்­து­கொள்ள வேண்டும். எனினும் இங்கிருந்து பயணிக்கும் சிவில் அமைப்புகள் இலங்கையின் இராணுவ போர்க்குற்றங்களை பற்றி பேசுகின்றனர். 

ஆனால் புலிகளை செய்த எந்த குற்றங்களும் இவர்களின் அறிக்கைகளில் முன்வைக்கப்படவில்லை. எனவே நாம் எப்போதும் நாட்டை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம். ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டை காப்பாற்றும் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.    

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-01#page-1

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கோ, நீதிபதிகளுக்கோ சிறிலங்கா அரசு இடமளியாது – மகிந்த சமரசிங்க

 

Mahinda Samarasingheபோரின் இறுதிக்கட்டம் தொடர்பாகவோ, போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ, விசாரணை செய்வதற்கு, எந்தவொரு வெளிநாட்டு தீர்ப்பாயத்தையோ, நீதிபதியையோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது என்று சிறிலங்காவின் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்கியதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக மகிந்த ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.

‘வெளிநாட்டு நீதிபதிகளோ, தீர்ப்பாயங்களோ போருடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விசாரிக்க அரசாங்கம் அனுமதிக்காது என்று சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தெளிவாக கூறியுள்ளனர்.

இவர்கள் இருவரும், இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள். எனவே, வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைக்கு வழியே இல்லை.

வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை.

தருஸ்மன் குழுவின் அறிக்கையை அப்போதைய அரசாங்கம் நிராகரித்திருந்தது. முறையற்றவகையில் நியமிக்கப்பட்டிருந்த அந்தக் குழுவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஒப்பிட முடியாது. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/04/01/news/22281

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.