Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வில்பத்து விவகாரத்திற்கு இருவாரத்தில் தீர்வின்றேல் பரந்துபட்ட போராட்டம்

Featured Replies

வில்பத்து விவகாரத்திற்கு இருவாரத்தில் தீர்வின்றேல் பரந்துபட்ட போராட்டம்

 

எம். நேச­மணி , எம்.சி.நஜி­முதீன்

*முஸ்லிம் சிவில் அமைப்புகள் எச்சரிக்கை
*சுயாதீனக் குழு அமைக்க கோரிக்கை

வில்­பத்து விவ­காரம் தொடர்பில் அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு பாதிப்­பில்­லாத தீர்வை அர­சாங்கம் இரு­வார காலப்­ப­கு­தியில் முன்­வைக்க வேண்டும். அவ்­வாறு செய்யத் தவ­று­மி­டத்து நாடு தழு­விய ரீதியில் பரந்­து­பட்ட போராட்­டங்­கள் நடத்­தப்­படும் என முஸ்லிம் சிவில் அமைப்­புகள் தெரி­வித்­துள்­ளன.

குறித்த வர்த்­த­மானி தொடர்பில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­ப தியின் செய­லா­ள­ருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்­பு­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது எவ­ருக்கும் பாதிப்­பில்­லாத தீர்­வொன்றை விரைவில் பெற்றுத் தரு­வ­தாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். எனவே அது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் உப தலைவர் ஹில்மி அஹ­ம­டிடம் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,   

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அம்­மக்­களின் காணி­களை அவர்­க­ளுக்கு வழங்­கு­வ­துடன் இடம்­பெ­யர்ந்து வாழும் அப்­பி­ர­தேச மக்கள் மீள்­கு­டி­யே­று­வ­தற்­கான சக­ல­வித ஏற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் செய்­து­கொ­டுப்­ப­தற்குக் கட­மைப்­பட்­டுள்­ளது.

எனினும் ஜனா­தி­பதி கையொப்­ப­மிட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள வில்­பத்து விவ­காரம் தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்­த­லினால் அப்­பி­ர­தேச மக்கள் அதி­ருப்தி அடைந்­துள்­ளனர். மேலும் நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வதில் முஸ்­லிம்கள் மிகுந்த பங்­க­ளிப்பு வழங்­கி­யுள்­ளனர். ஆகவே அம்­மக்கள் இவ்­வாறு பாதிப்­ப­டை­வார்­க­ளாயின் அதனை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

மேலும் குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்ட பின்னர் அப்­பி­ர­தேச மக்கள் அமை­தி­யான முறையில் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். மேலும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நாடு தழு­விய ரீதியில் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை மேற்­கொள்­வ­தற்கும் முற்­பட்­டனர். இருந்­த­போ­திலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன “எவ­ருக்கும் பாதிப்­பில்­லாத வகையில் குறித்த விவ­கா­ரத்­துக்கு தீர்வு வழங்­கு­வ­தாக” தெரி­வித்­த­மை­யினால் அக்­க­வ­ன­யீர்ப்பு போராட்டம் கைவி­டப்­பட்­டது.

ஆகவே அப்­பி­ர­தேச மக்கள் குறித்த விட­யத்தை அமை­தி­யான முறையில் தீர்த்­துக்­கொள்­வ­தற்கே எதிர்­பார்க்­கின்­றனர். மேலும் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற பேச்­சு­வார்­த­தை­யின்­போதும் அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு பாதிப்­பில்­லாத வகையில் தீர்வு பெற்றுத் தரு­வ­தாக செய­லாளர் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார்.

எனவே குறித்த விட­யத்­திற்கு இன்னும் இரு வாரங்­களில் உரிய தீர்வு பெற்­றுத்­த­ரப்­பட வேண்டும். இல்­லா­து­போனால் நீதி­மன்­றத்தை நாட­வுள்­ள­துடன் நாடு தழு­விய ரீதியில் பரந்­து­பட்ட போராட்­டங்­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை

முஸ்­லிம்­களின் பூர்­வீக இடங்­களை வில்­பத்து வன பகு­திக்­கான எல்­லை­யாக இணைத்­துள்­ள­தாக வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலை உட­ன­டி­யாக ரத்து செய்து சுயா­தீன குழு அமைத்து வில்­பத்து விவ­காரம் ஆரா­யப்­பட வேண்­டு­மென ஐக்­கிய தேசிய கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபூர் ரஹ்மான் தெரி­வித்தார்.

யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன நிலையில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் இன்னும் முகாம்­களில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு உரிய தீர்­வினை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை விடுத்து இவ்­வா­றான வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் மிகுந்த விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யுத்த காலப்­ப­கு­தியில் இடம்­பெ­யர்ந்து பல்­வேறு பகு­தி­களில் முகாம் வாழ்க்­கையை மேற்­கொண்­டு­வரும் முஸ்­லிம்­களின் காணிகள் குறித்த பகு­தியில் காணப்­ப­டு­கி­றது. அவ்­வா­றான பூர்­வீக நிலங்­களே காடு­க­ளாக மாறி­யுள்­ள­தா­கவும், பாது­காக்­கப்­பட்ட வனப் பிர­தே­சத்தில் தமது வீடுகள் இல்லை என்றும் அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர். எனவே அது குறித்து ஆராய்ந்து அம்­மக்­க­ளுக்கு உரிய தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் .

கொழும்­பி­லுள்ள சில இன­வாத அமைப்­புக்­களும் பேரி­ன­வாத அர­சியல் தலை­வர்­களும் தமது அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக வில்பத்து விவகாரத்தை திரிபு படுத்தி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே இது தொடர்பிலான உண்மைத்தன்மையை சுயாதீன குழு அமைத்து ஆராய்ந்து அப்பகுதி மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க வேண்டும் என்றார்

கடந்த சில நாட்களாக குறித்த பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்நனர் அதே போன்று கடந்த வௌ்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் முசலி பிரதேசத்திலுள்ள 22 கிராமங்களின் மக்களும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-04-02#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பிரச்சனைக்கு மூல காரணமே றிசாத் பதியுதீன்.

இடம் பெயர்ந்திருந்த அவர்களது காணிகள் பத்தைகள் நிறைந்து காணப்பட்டது. இவர்கள் தமது காணிகளுக்கு மீள செல்ல விரும்பி, அப்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், மகிந்த அரசில் அடாவடி  அமைச்சராயும் இருந்த றிசாத் பதியுதீனை அணுகினார்கள்.

அவர்களுக்கு தேவையான உதவி செய்வதாக, தலையிட்டு இன்று சகலத்தையும் குழப்பி அடித்து, அவர்களை இப்படி நடுத்தெருவில் நிறுத்தி வைத்துள்ளார் அடாவடி அரசியல் வாதி றிசாத் பதியுதீன். 

இன்று அவர்களது 10% காணிகள், அவர் திருட்டு தனத்துடன் ஆட்டையைப் போட முட்பட்ட 90% வில்பத்து வனப் பிரதேசத்தின்  பாதுகாக்கப்புக்கு உரிய பகுதியுடன் சேர்த்து சிக்கிக் கொண்டு விட்டது.

அரசு, வர்த்தமானி மூலம் சகலமுமே பாதுகாக்கப்புக்கு உரிய பகுதி என அறிவித்து விட்டதால் இவர்கள் கையறு நிலையில் உள்ளனர்.

றிசாத் பதியுதீன், முஸ்லீம் கட்சிகளை கூட்டி மகாநாடு போட்டுப் பார்த்தார். முக்கியமான கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் பங்கு கொள்ளவில்லை.

அரசில் பங்கு பெறும், முஸ்லீம் காங்கிரஸ், தமது அரசியல் எதிரியான, தம்மைப் போலவே அரசில் பங்கு பெறும், றிசாத் பதியுதீன் இங்கே அரசியல் லாபம் பெறுவார் என்பதால், இந்த விடயம் அரசினால் கண்டு கொள்ளப் படாமல் கிடப்பில் போடப் படுகிறது.

இவர்கள் சொல்லும் இனவாதம் காரணம் மிக்கது தவறானது. றிசாத் பதியுதீனின், சட்டத்தினை கடாசி ஆட்சி செய்த மகிந்த கொடுத்த துணியினால், பாதுகாக்க பட்ட காடுகளை அழிக்கும், சட்ட விரோத செயல் பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும், இயறக்கை ஆர்வலர்களுக்கு எல்லாம் இனவாத முலாம் போட கூடாது.

இப்போது தான் அரசியல் வாதிகளை விடுத்து, சிவில் அமைப்புக்கள் வெளியே வருகின்றன. 

எனினும், இவர்கள் தமது போராட்டத்தில் தெளிவாக தமக்கு தமது (10%) காணிகள் தான் தேவை, றிசாத் பதியுதீனின் திருட்டு நோக்கத்துக்கும் இந்த போராட்டத்துக்கும் தொடர்ப்பு இல்லை என அறிவிக்கும் வரை, இவர்களது போராட்டம் தவறாக புரியப்பட்டு, தீர்வே கிடைக்காமல் போய்விடும் சந்தர்ப்பம் உள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.