Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

Featured Replies

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

 
 

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 10 பேர் இறந்திருக்கலாம் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த ரயில் நிலையம்படத்தின் காப்புரிமைEVN Image captionசெயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னயா லோஸ்சத் மற்றும் அருகிலுள்ள டெக்னாலஜி இன்ஸ்டிடியூஷன் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நடந்ததாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

அந்த ரயில் நிலையத்திலுள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தேசமடைந்த ரயில் பெட்டிகளையும், ரயில் மேடையில் காயமற்றோர் விழுந்து கிடப்பதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

புகை நிறைந்த மண்டபம் வழியாக மக்கள் வெளியேறுவதை நிகழ்நேர படங்கள் காட்டுகின்றன.

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுக்கான பின்னணி காரணம் தெரியவில்லை.

மேலதிக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

http://www.bbc.com/tamil/global-39481716

  • தொடங்கியவர்

குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை - புதின்

 
 

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

வெடித்து சிதறிய கதவுபடத்தின் காப்புரிமைEVN

செயின்ட் பீட்டஸ்பெர்க் நகரின் மையத்திலுள்ள சென்னாயா பிலோசாட் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதம் உள்பட எல்லா காரணங்களும் புலனாய்வு செய்யப்படும்” விளாடிமிர் புதின்

சென்னயா மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் அருகில் விழுந்து கிடக்க, வெடித்து சிதறிய ரயிலின் கதவுகளை காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

 

இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதம் உள்பட எல்லா காரணங்களும் புலனாய்வு செய்யப்படுவதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக இன்டர்ஃபாக்ஸ் மற்றும் ஆர்ஐஏ செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

காயமுற்றோரக்கு சிகிச்சைபடத்தின் காப்புரிமைREUTERS

உலோகத்துகள்கள் வெடித்து சிதறக்கூடிய வெடிக்குண்டு கருவி இந்த குண்டுவெடிப்புக்கள் ஒன்றில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

திங்கள்கிழமை காலையில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் இருந்த அதிபர் விளாடிமிர் புதின் இப்போது நகரத்தின் வெளியே இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் திமிட்ரி பஸ்கோஃப் தெரிவித்திருக்கிறார்.

புதின்படத்தின் காப்புரிமைMIKHAIL SVETLOV/GETTY IMAGES

"எமது சிறப்பு சேவைகள் தலைவரோடு ஏற்கெனவே பேசியுள்ளதாகவும், இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தை அவர்கள் உறுதி செய்து வருவதாகவும் பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் கூறினார்.

 

இந்த குண்டுவெடிப்பு காரணமாக மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவதாக மாஸ்கோ மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காயமுற்றோரை உடனடியாக எடுத்துசெல்ல ஒரு ஹெலிகாப்டர் சாலையில் இறங்கியதுபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionகாயமுற்றோரை உடனடியாக எடுத்துசெல்ல ஒரு ஹெலிகாப்டர் சாலையில் இறங்கியது

ஒன்று மற்றும் இரண்டாம் மெட்ரோ தடம் எண்களுக்கு டெக்னாஜிசெஸ்கி நிறுவனம் சேவை வழங்கி வருகிறது.

மெட்ரோ ரயில் தடம் எண் இரண்டுக்கு அடுத்த ரயில் நிலையமான சென்னயா லோஸ்சத் மெட்ரோ ரயில் நிலையம் 1963 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

 

http://www.bbc.com/tamil/global-39482261

  • தொடங்கியவர்

பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலென சந்தேகம்

 
 
பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ராயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலா?படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகியுள்ளதாக செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ராயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலா?படத்தின் காப்புரிமைREUTERS

37 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலோர் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ரஷ்ய சுகாதர துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் முயன்று வருவதாக இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.

பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ராயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரண்டு மத்திய மெட்ரோ நிலையங்களுக்கு இடையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

 

வெடித்து சிதறிய ரயில் பெட்டி, ரயில் மேடைகளில் கிடக்கும் காயமுற்றோர் மற்றும் புகை நிறைந்த சாளரங்கள் வழியாக பயணிகள் வெளியேறுவதை இந்த சம்பவத்தின் புகைப்படங்களும், காணொளிகளும் காட்டுகின்றன.

பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ராயில் நிலைய தாக்குதல் தீவிரவாத தாக்குதலா?படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள வோஸ்டானியா என்ற இன்னொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் கண்டுபிடித்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு படைப்பிரிவுகள் செயலிழக்க செய்துள்ளன.

 

அந்த மெட்ரோ வலையமைபிலுள்ள எல்லா நிலையங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அவை மூடப்பட்டுள்ளன.

http://www.bbc.com/tamil/global-39486189

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டு வெடிக்கிறது இப்ப நோர்மல்........:cool:

எல்லா இடமும் குண்டு வெடிக்குது தானே. :338_boom:

அந்தப்பெரீய ரஷ்யாவிலை ஒரு இடத்திலை மட்டும் குண்டு வெடிச்சால் என்ன குறைஞ்சே போவினம்.:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

குண்டு வெடிக்கிறது இப்ப நோர்மல்........:cool:

எல்லா இடமும் குண்டு வெடிக்குது தானே. :338_boom:

அந்தப்பெரீய ரஷ்யாவிலை ஒரு இடத்திலை மட்டும் குண்டு வெடிச்சால் என்ன குறைஞ்சே போவினம்.:mellow:

சிவப்பு நாட்டில இப்படி நடந்ததையிட்டு வன்மையாக கண்டிக்கிறேன்(கண்ணடிக்கிறேன்)உது எகாதிபத்திகளின் நாசவேலையாகத்தான் இருக்கும்.....:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, putthan said:

சிவப்பு நாட்டில இப்படி நடந்ததையிட்டு வன்மையாக கண்டிக்கிறேன்(கண்ணடிக்கிறேன்)உது எகாதிபத்திகளின் நாசவேலையாகத்தான் இருக்கும்.....:10_wink:

நாங்கள் இப்போ ஒன்றுக்குள் ஒன்றாகிவிட்டோம் 
நாங்கள் நண்பர்கள் ! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.