Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு விஷமானதில் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதி - 3 பேர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணவு விஷமானதில் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதி - 3 பேர் உயிரிழப்பு

அம்பாறை பகுதியில் உணவு விஷமானமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர். 

அம்பாறை - தமன - வானேகமுவ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவே இவ்வாறு விஷமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உணவு விஷமானமையினால் மேலும் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் 120 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அம்பாறை, சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அம்பாறை - இறகாமம் பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.ஹலீமா (45), மொஹமட் காசிம் (53) மற்றும் கலன்தர் மாரியன் (63) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். 

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடாத்தப்படவுள்ளதுடன், அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். 

எவ்வாறாயினும், உணவு விஷமானமையினால் மேலும் 29 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அம்பாறை வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=90158

 

இலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

 
 

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றில் வழங்கபட்ட கந்தூரி உணவு விஷமானதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

சிறுவர்கள் , பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், இதுவரையில் 3 மரணங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சகம் கூறுகின்றது.

சிகிச்சை பெற வந்தவர்களில் சுமார் 350 பேர் வரை வைத்தியசாலைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தற்போது 75 - 80 பேர் வரை தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார் மாகாண சுகாதார சேவைகள் துனை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் இடம்பெற்ற வருடாந்த கந்தூரி நிகழ்வில் பிரதேச முஸ்லிம்கள் மட்டுமன்றி சமீபத்திய பிரதேச முஸ்லிம்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

மாட்டிறைச்சி மற்றும் நெய் கலந்த கந்தூரி சோறு இவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த உணவை உட் கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

கந்தூரி உணவு உட் கொண்டவர்களிடம் வாந்தி, மயக்கம் , தலையிடி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் வரை 4 மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் 3 மரணங்கள் மட்டுமே உணவு விஷமானதால் ஏற்பட்ட மரணங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அழகையா லதாகரன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டோரின் வாந்தி . குருதி, மலம் மற்றும் உட் கொண்ட உணவு மாதிரிகள் ஆகியன பெறப்பட்டு இரசாயன மற்றும் உயிரியல் பகுபாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது"என்றும் அவர் கூறுகின்றார்..

இலங்கை: கந்தூரி நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு நஞ்சானதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

''நோயுற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சம்பவத்திற்கு முதல் நாள் மாலை சமைக்கப்பட்டு பொதியிடப்பட்டு மறுநாள் காலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றுக்குள்ளாகி உணவு நஞ்சாகியிருக்கலாம்" அவர் குறிப்பிடுகின்றார்.

இறக்காமம் , சம்மாந்துறை , அக்கரைப்பற்று , கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இன்று வெள்ளிக்கிழமை நாடு தழுவியதாக அரச மருத்துவர்கள் முழுநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் குறித்த வைத்தியசாலைகளில் இந்நோயாளர்களுக்கான சிகிச்சை வழங்கும் பணிகளில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தனர்

http://www.bbc.com/tamil/sri-lanka-39532254

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.