Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கிளைமோர் தாக்குதல் - 2 இராணுவம் பலி - 12 பேர்ககாயம்.

Featured Replies

யாழில் கிளைமோர் தாக்குதல் - 2 இராணுவம் பலி - 12 பேர்ககாயம்.

இன்று காலை 11.45 மணியளவில் ஏ-9 பாதையில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் யாழ்செயலகத்தில் இருந்து 300 மீற்றர் தொலைவில் வீதித்துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை பலாலி இராணுவ வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது.இத் தாக்குதலின் இராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில் போது ஒருபொதுமகன் கொல்லப்பட்டும் மற்றும் 3 வர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

காயமடைந்தவர்கள் அரியாலையை சேர்ந்த 24 அகவையுடைய ஏ.சந்திரா, 46 அகவையுடைய கே.மோகன், 55 அகவையுடைய ஜேசுதாசன் என இனம்காணப்பட்டுள்ளார்கள்.

-Pathivu-

2ND LEAD

2 SLA soldiers killed, 12 wounded in Claymore attack in Jaffna

[TamilNet, Saturday, 17 February 2007, 08:00 GMT]

Two Sri Lanka Army soldiers of the 51-2 brigade were killed and 12 troopers wounded in a road side Claymore ambush along the A9 road inside SLA High Security Zone, 300 meters from Jaffna District Secretariat in Jaffna city Saturday around 12:10 p.m. A child, believed to be around 5 years, was rushed to Jaffna Hospital with shrapnel wounds, but died at the hospital. SLA soldiers opened fire, cordoned off the area and launched a search operation. Three civilians were wounded.

The attack took place at A9 - Somasunderam Avenue interception in Jaffna city.

The injured soldiers were admitted to Jaffna Teaching hospital. They were identified as Soorasinghe,32 and Premadasa,42, of SLA's 51-2 brigade.

The injured civilians were identified as A.Chthra,24, of Ariyalai, K.Mohan,46, and E.Jesuthasan,55.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21282

-----------------------------

2 ராணுவத்தினரைக் கொல்வதற்காக சொந்த மக்கள் சிறுவர்கள் என்ற உணர்வோ மனிதாபிமானமோ இன்றி அவர்களையும் சேர்த்து சிதறடிப்பவர்கள்தான் மானத்திற்கும் வீரத்திற்கும் வரைவிலக்கணங்களா?

இணையத்தளம் நடத்துபவர்களின் கஷ்டங்கள் பற்றி சிந்திக்கும் இந்த யாழ்கள கனவான்கள், மக்களின் அவலம் குறித்து வாய்திறப்பார்களா?

செய்தியின் தலைப்பில் கூட வராத அளவிற்குத்தான் புலத்தில் உள்ள தமிழர்களின் உயிர் புலம் பெயர்ந்தவர்களால் மதிக்கப்படுகிறதா?

பதிவு இணையத்தளம் தன் பங்கிற்க்கு தமிழ்தேசிய நலன் கருதி (???) குண்டுச் சிதறல்களினால் சிதறடிக்கப்பட்ட சிறுமியின் செய்தியையும் வயதையும்(5) மறைத்து அவளை பொதுமகனாக்கி ராணுவத்தின் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு சாகடித்துள்ளது.

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சாணக்கியம்!

எனக்கு உமதும், தமிழ்மகன் போன்ற சிலரின் பதிவுகளில் இருந்தும் நான் விளங்கிக் கொள்வது,

உங்கள் கருத்துக்கள் எல்லாம் ஒரு உறுதியான கொள்கைத்தளத்தில் இருந்து வருவதில்லைப் போல்த் தெரிகிறது.

அண்மையில் பஸ் குண்டுதாக்குதலில் கொல்லப் பட்ட அப்பாவி சிங்கள மக்களின் மரணங்களை, உமது சிந்தனை தமிழ்தேசியத்தின் தேவை என்று காட்ட முற்பட்டதும், அதை புலிகளின் கரத்தில் பழியைக் கொடுத்து கொண்டாடவும் ஆசைப் பட்டது.

அடுத்து இராணுவ ஆக்கிரமிப்பு தமிழ் பிரதேசங்களை அபகரித்துக் கொண்டு வரும் போது,

புலிகளின் போர்மௌனம் கலைக்க வேண்டும் என்று வசை பாடுகிறது.

நீர் புலிகளை ஆதரிப்பதும் , எதிர்ப்பதும் உமது விருப்பம் அதை எமது விருப்பம் ஆள விருப்பவில்லை ஆக உமது கொள்கைகளுக்கு ஒரு முகத்தைக் காட்டுவது இங்கே அவசியமாகிறது.

மேல் நிகழ்ந்த அசம்பாவிதத்தின் சரியான தகவல்கள் தெரியாமையினால் அதைப் பற்றி வாதாட விரும்ப வில்லை. இராணுவத்தின் மனிதக் கேடைய உபயோகம் ஒன்றும் புதியதல்ல, இருந்தும் இப்படியான குண்டுகள் தன்னியக்க பொறிமூலமே அதிகமாக வெடிக்க வைக்கப் படுகிறது,

இருந்தும் ஐதுவயதுக் குழந்தை எப்படி இராணுவத்தின் வீதிதுப்பரவுச் சோதனை பிரதேசத்துக்குள் பிரசன்னமானது. இது புரியாமலே இருக்கிறது. உமக்கோ இலங்கை வானொலியின் பாணியில் ஒப்பாரிதானே உண்பனவுகளை செரிமானம் செய்துதரும். அதை நீர் செய்து கொண்டே இரும் குற்றமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

2ND LEAD

2 SLA soldiers killed, 12 wounded in Claymore attack in Jaffna

[TamilNet, Saturday, 17 February 2007, 08:00 GMT]

Two Sri Lanka Army soldiers of the 51-2 brigade were killed and 12 troopers wounded in a road side Claymore ambush along the A9 road inside SLA High Security Zone, 300 meters from Jaffna District Secretariat in Jaffna city Saturday around 12:10 p.m. A child, believed to be around 5 years, was rushed to Jaffna Hospital with shrapnel wounds, but died at the hospital. SLA soldiers opened fire, cordoned off the area and launched a search operation. Three civilians were wounded.

The attack took place at A9 - Somasunderam Avenue interception in Jaffna city.

The injured soldiers were admitted to Jaffna Teaching hospital. They were identified as Soorasinghe,32 and Premadasa,42, of SLA's 51-2 brigade.

The injured civilians were identified as A.Chthra,24, of Ariyalai, K.Mohan,46, and E.Jesuthasan,55.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21282

-----------------------------

2 ராணுவத்தினரைக் கொல்வதற்காக சொந்த மக்கள் சிறுவர்கள் என்ற உணர்வோ மனிதாபிமானமோ இன்றி அவர்களையும் சேர்த்து சிதறடிப்பவர்கள்தான் மானத்திற்கும் வீரத்திற்கும் வரைவிலக்கணங்களா?

இணையத்தளம் நடத்துபவர்களின் கஷ்டங்கள் பற்றி சிந்திக்கும் இந்த யாழ்கள கனவான்கள், மக்களின் அவலம் குறித்து வாய்திறப்பார்களா?

செய்தியின் தலைப்பில் கூட வராத அளவிற்குத்தான் புலத்தில் உள்ள தமிழர்களின் உயிர் புலம் பெயர்ந்தவர்களால் மதிக்கப்படுகிறதா?

பதிவு இணையத்தளம் தன் பங்கிற்க்கு தமிழ்தேசிய நலன் கருதி (???) குண்டுச் சிதறல்களினால் சிதறடிக்கப்பட்ட சிறுமியின் செய்தியையும் வயதையும்(5) மறைத்து அவளை பொதுமகனாக்கி ராணுவத்தின் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு சாகடித்துள்ளது.

அண்ணாச்சி ஏற்கனவே தமிழ் நெற் இல் உண்மை செய்தி வந்தது தானெ. பிறகு என்ன பதிவும் கத்தரிக்காயும்? ஏற்கனவே தமிழ் மக்களை மனித கேடயங்களாக பாவிப்பது தெரியாதா குஞ்சு பவாவுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன்!

அந்த 5 வயதுக் குழந்தை, உற்பட்ட பொதுமக்கள் அனைவரும் இராணுவத்தின் துப்பாக்கி வேட்டுக்களால் தான் காயமடைந்தனர். மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்ட நேரத்தில் வீதியில் எவ்வாறு, பொதுமக்கள் நின்றிருப்பார்கள் என்பதை உணரவில்லையா? அது உயர்பாதுகாப்பு வலையம் மட்டுமல்ல, அந்த நேரப்பகுதி சிறிலங்கா இராணுவம், இடம்மாறும் வேளை என்பதால் ஏ9 பிரதான வீதியில் மக்கள் போகவும் தடை விதிக்கப்பட்டிருந்தனர் நீர் கத்த வேண்டுமானால் சிறிலங்கா அரசின் கொடூரச் சிந்தனை பற்றிக் கத்தும். சிங்கத்தின் குகைக்குள்(பாதுகாப்பாகவா?) வாழ்கின்ற உமக்கு அப்படி ஒன்றும் தோன்றாதே!

என்ன இருந்தாலும் மக்கள் வாழும் பகுதிகளில் கிளைமோர் தாகுதல்கள் நடத்தப்படுவது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்! இவ்வாறு தாக்குதல் நடத்தினால் சிங்களக் குண்டர்கள் சம்பவ இடத்தில் காணப்படும் பொதுமக்களை நோக்கித் திருப்பித் தாக்குவார்கள் என்பது தெரியாதா? இவ்வாறு பொதுமக்கள் வாழும் பகுதிகளில் சிங்களக் குண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதால் ஒருவித பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. மாறாக தமிழ் மக்கள் தான் இதனால் பாதிக்கப்படுவார்கள். சிங்களக் குண்டர்கள் மீதான தாக்குதல் தமிழ் மக்களை இயன்றளவு பாதிக்காத வண்ணம் சன நடமாட்டம் அற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் குண்டர்கள், கொடூரமானவர்கள் என்று தெரிந்து கொண்டது ஒகே! அந்தக் குண்டர்கள், நம் இடத்தில் ஆக்கிரமிக்கும்போது, பேசாமல் இருப்பது சரியா என்று கேட்கின்றபோது இணைந்து போராட போகாத, புலத்துக்கு ஓடிப் போன அனைவரும் குற்றவாளியவார்கள்.

ஆக, விமர்சனம் செய்பவர்கள், தாங்கள், குற்றவாளியற்றவனா என்று நினைத்துக் கொண்டு விமர்சனம் செய்வது சரியானது.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரையும் குற்றம் சுமத்தவில்லை

அமெரிக்கப் படைகளைக் கொல்வதற்காக வைக்கும் கார்க் குண்டுகளில் ஒரேதடவையில் நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் போகும் அவலம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தினமும் நடக்கிறது.

Have we become that desperate?

சிங்களக் குண்டர்கள், கொடூரமானவர்கள் என்று தெரிந்து கொண்டது ஒகே! அந்தக் குண்டர்கள், நம் இடத்தில் ஆக்கிரமிக்கும்போது, பேசாமல் இருப்பது சரியா என்று கேட்கின்றபோது இணைந்து போராட, புலத்துக்கு ஓடிப் போன அனைவரும் குற்றவாளியவார்கள்.

ஆக, விமர்சனம் செய்பவர்கள், தாங்கள், குற்றவாளியற்றவனா என்று நினைத்துக் கொண்டு விமர்சனம் செய்வது சரியானது.

நாம் சமாதானம் மற்றும் இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுபவன் போல் விமர்சனம் செய்யவில்லை. எமது ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதுகின்றோம். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எம்மாலான உதவிகளையும் தமிழர் போராட்டத்திற்கு செய்கிறோம். எனவே நாம் எம்மை குற்றவாளியாகக் கருதவில்லை.

மக்கள் குடியிருப்புக்கள் உள்ள இடங்களில், மக்கள் நடமாடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக தாக்குதல் நடத்தப்படும் போது ஈராக்கில் 100 பொதுசனம் சாகின்றார்கள் தானே, நம்மில் பொது சனம் ஆக ஒருவர், இருவர் தானே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தின் அடக்குமறைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் தெரியும். அவனால் தினமும் கடத்தல், கொலை நடக்கின்றது என்பதும் தெரியும்(83இல் இருந்து) ஆனால் மக்கள் தங்கள், தங்கள் வேலையைச் செய்வினம். போராடுகின்றவை மட்டும், மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குள், அவர்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இடையூறு விளைவிக்காமல் போராட வேண்டும். இப்படித் தானே சொல்ல வருகின்றீர்கள்?

95ம் ஆண்டு யாழ்பாணத்தில் 500 000 பேர் இருந்தோம், ஆனால் 40 000 பேர் உள்ள இராணுவத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? ஏன் ஒவ்வொருவவரும் தங்களின் குடும்பத்தைப் பார்க்க, நேரம் காணாது.

போராளிகள் போராட கைதட்ட மட்டும் முடியும். களத்தில் இறங்க இயலாது.

இண்டைக்கு கூட, தமிழனுக்கு அநீதி நடக்கின்றது என்று அனைவரும் கிளந்து எழுந்தாலே, சிங்களத்தால் தாக்குப்பிடிக்க முடியாது. இல்லாவிட்டால், தினமும், 4,5 பேராகக் கொல்லுவான், உங்களுக்கு அது பெரிசாகத் தெரியாது, கடைசியில் கூட்டிப் பார்த்தால், லட்சத்தை எட்டும்.

இப்போது கூட, யாழ்பாணத்தைப் பிடிக்க வேண்டும் என்று கூச்சல் போடுகினம். அதற்கு மக்கள் எவ்வகை ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று யாராலாவது முடிகின்றதா? இல்லை. தங்கள், தங்களின் குடும்ப சுகங்கள் பாதிக்காமல் தமிழீழம் பெற வேண்டும் என்றால், இழுத்துக் கொண்டு தான் போகும்.

இங்கே, யார் நல்லவர், கெட்டவர் என்று யாரையும் சொல்லவரவில்லை. போராளியாகாத அனைவரும் குற்றவாளிகள் தான். ஆனால் அதை விடக் குற்றவாளித்தனம், போராட்டத்தில் மயிர் புடுங்குபவன் போலக் காட்டுவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் குடியிருப்புக்கள் உள்ள இடங்களில், மக்கள் நடமாடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக தாக்குதல் நடத்தப்படும் போது ஈராக்கில் 100 பொதுசனம் சாகின்றார்கள் தானே, நம்மில் பொது சனம் ஆக ஒருவர், இருவர் தானே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது!

மாப்பிளை, நான் சொன்னதை தவறாக கணித்து விட்டீர்கள்.

1) ஒரு எதிரியைக் கொல்வதற்காக நூறு எம்மவரைக் கொல்லுமளவிற்கு நங்கள் desperate ஆகிவிட்டோமா? என்பதே எனது கேள்வியாகவிருந்தது.

2)அண்மையில் பொது மகன் காட்டிக்கொடுத்ததாக அரியாலையி ஆயுதங்கள் எடுத்தது நினைவிருக்கலாம்.

3) காட்டிக் கொடுப்பவர்கள் கொல்லப்படுவதாக - அடிக்கடி கேள்விப்படுகிறோம்

1) 2) 3) ஒன்றுக்கொன்று தொடர்பானவையே!

நாம் எங்கே போகிறோம்?

ஐயோ!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சமாதானம் மற்றும் இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுபவன் போல் விமர்சனம் செய்யவில்லை. எமது ஆக்கபூர்வமான கருத்துக்களை எழுதுகின்றோம். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எம்மாலான உதவிகளையும் தமிழர் போராட்டத்திற்கு செய்கிறோம். எனவே நாம் எம்மை குற்றவாளியாகக் கருதவில்லை.

மக்கள் குடியிருப்புக்கள் உள்ள இடங்களில், மக்கள் நடமாடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படுவது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக தாக்குதல் நடத்தப்படும் போது ஈராக்கில் 100 பொதுசனம் சாகின்றார்கள் தானே, நம்மில் பொது சனம் ஆக ஒருவர், இருவர் தானே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது!

மக்களால் ஒத்துழைப்புக் கொடுக்க இயலாது என்றால், யாழ்பாணத்தைப் பிடிப்பம்! திருகோணமலையைப் பிடிப்பம் என்று கனவு காண்பதை நிறத்துதுங்கோ! புலி ஏன் பாயவில்லை எண்டோ, பதுங்கவில்லை எண்டோ விமர்சனம் செய்வதையும் விடுங்கோ!

யாழ்பாணமும் சரி! எந்த இடத்திலும் சரி! உங்களின் கருத்துப்படி, மக்களின் நடமாட்டம் இருக்கின்றபோது, எதிரியை இலக்கு வைக்க முடியாது. இதற்கு மக்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். யாழ்பாணத்தில் இத்தனை பிரச்சனைக்குள்ளும், கறண்ட் கட்டை தானாம் பலர் விமர்சித்தவை. ஏன் எண்டால் ராமா பார்க்க முடியாமல் போகுதாம்.

இப்படி மக்கள் ஒத்துழைக்காமை, நிலமை தொடர்ந்தால் மேலே சொன்ன கனவுகளை நிப்பாட்டிப் போட்டு, வேற வேலை பாருங்கோ!

அனைவரும் இந்த சமயத்தில் போராட வேண்டிய நிலையில் இருந்தால் தான், தாயகத்தை இலகுவாக பெற முடியும்.

Edited by தூயவன்

யாழ்பாணமும் சரி! எந்த இடத்திலும் சரி! உங்களின் கருத்துப்படி, மக்களின் நடமாட்டம் இல்லாதபோது?, எதிரியை இலக்கு வைக்க முடியாது. இதற்கு மக்கள் தான் ஒத்துழைக்க வேண்டும்.

அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் முன்பு மக்களின் இழப்புக்களின்றி குண்டர்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததே! அது எவ்வாறு சாத்தியமானது? ஏன் அவ்வாறான தாக்குதல்களை குண்டர்கள் மீது தற்போது மேற்கொள்ள முடியாதுள்ளது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இருந்தாலும் மக்கள் வாழும் பகுதிகளில் கிளைமோர் தாகுதல்கள் நடத்தப்படுவது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்! இவ்வாறு தாக்குதல் நடத்தினால் சிங்களக் குண்டர்கள் சம்பவ இடத்தில் காணப்படும் பொதுமக்களை நோக்கித் திருப்பித் தாக்குவார்கள் என்பது தெரியாதா? இவ்வாறு பொதுமக்கள் வாழும் பகுதிகளில் சிங்களக் குண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதால் ஒருவித பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. மாறாக தமிழ் மக்கள் தான் இதனால் பாதிக்கப்படுவார்கள். சிங்களக் குண்டர்கள் மீதான தாக்குதல் தமிழ் மக்களை இயன்றளவு பாதிக்காத வண்ணம் சன நடமாட்டம் அற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தனக்கு தனக்கு என்றால் சுழகு படக்கு படக்கு எண்டுமாம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் முன்பு மக்களின் இழப்புக்களின்றி குண்டர்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததே! அது எவ்வாறு சாத்தியமானது? ஏன் அவ்வாறான தாக்குதல்களை குண்டர்கள் மீது தற்போது மேற்கொள்ள முடியாதுள்ளது?

அப்படியில்லை. முன்பு எதிரி அவதானம் குறைவாக இருந்தான். அதை விட இப்போது குழுவாக அவன் செல்வது எல்லாம் குறைவு. மற்றும்படி தாக்குதல் நடத்துபவர்கள், பொதுமக்கள் வருகின்றபோது, எச்சரிக்கை செய்து திருப்பி, அனுப்பி வைக்கின்ற செய்தியை சில பகுதிகளில் அறிந்திருக்கின்றேன்.

மற்றும்படி, மக்களின் அவதானமான நடமாட்டமும், ஒத்துழைப்பும் தான் வெற்றிக்கு உதவும்.

தனக்கு தனக்கு என்றால் சுழகு படக்கு படக்கு எண்டுமாம்

உண்மைதான்! அதிலென்ன சந்தேகம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியில்லை. முன்பு எதிரி அவதானம் குறைவாக இருந்தான். அதை விட இப்போது குழுவாக அவன் செல்வது எல்லாம் குறைவு. மற்றும்படி தாக்குதல் நடத்துபவர்கள், பொதுமக்கள் வருகின்றபோது, எச்சரிக்கை செய்து திருப்பி, அனுப்பி வைக்கின்ற செய்தியை சில பகுதிகளில் அறிந்திருக்கின்றேன்.

உண்மை தான். நானும் அறிந்திருக்கின்றேன். இதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது. நடந்ததை யாரும் நேரில் காணவில்லை.

போராளிகளுக்கும் மக்களுக்குமுள்ள உறவு வார்த்தைகளுக் கப்பாற்பட்டது.

இப்படியான இழப்புச் செய்திகளைக் கேள்விப்படும் போது நான் எண்ணுகிறேன்: போராட்டம் என்று வந்தால் இழப்புக்கள் வரும். தாயகத்தில் மக்கள் போராடுகிறார்கள். இழப்புக்கள் வருகிறது. அதேபோல இறுதி வெற்றி என்று ஒன்று, புலம் பெயர்ந்த மக்கள் ஒன்றுபட்டுப் போராடாத வரை கிடைக்காது என்கிறார்கள்.

நாங்கள் போராடுகிறோமா?

அப்படிப் போராடியிருந்தால் எங்களுக்கும் இழப்புக்கள் வந்திருக்கும். சின்னக் குச்சி பெரிய குச்சி கதை போல ஒரு கொஞ்சம் ஆறுதல், அல்லது, குற்ற உணர்விலிருந்து விடுதலை கிடைத்திருக்கும்.

புலத்துக்கு ஓடிப் போன அனைவரும் குற்றவாளியவார்கள்.

ஆம். ஆனால் இந்தக் குற்றத்திற்குப் பரிகாரம் புலத்திலேயே இருக்கிறது. அது தான் புலத்தில் நடக்கவிருக்கும் இறுதி யுத்தம். (இங்கு புலம் என்று நான் குறிப்பிடுவது வெளிநாடுகளை)

கடந்த ஐந்து வருட சமாதான காலத்தில் எல்லாம் "புதினப்" பேப்பர்களில் ஒவ்வொரு படையணி களாக புலிகள் தம்மைப் பலப்படுத்துவதை "படம்" போட்டுக் காட்டினார்கள். இது எங்களுக்கு, சமாதானப் பேச்சுவார்த்தை தோற்றாலும் சிங்களவன் எம்மை வெருட்டிப் பணிய வக்க முடியாது என்ற ஒரு நிம்மதியைத் தந்தது உண்மை.

அப்படிப் பார்த்தால், வெளிநாட்டிலுள்ளவர்களுக்கு இது சமாதனக் காலம் (அதாவது சண்டைக்கு முந்தின காலம்).

"அவர்கள் சண்டைக்கு என்னென ஆயத்தங்களை செய்கிறார்கள் எண்டு மக்களுக்குத் தெரியப்படுத்தாமலிருப்பதற்க

Edited by balapandithar

  • கருத்துக்கள உறவுகள்

"பாரதப் போரில் குருஷேத்திரத்தை சண்டைக்களமாக தேர்ந்தெடுத்தது போல் மக்கள் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில்தால் போர் நடைபெறவேண்டும். இரு தரப்பினரும் பொருதி ஒருவரை ஒருவர் வெல்ல முயலவேண்டும்.." :lol:

இப்படி முட்டாள்தனமாக அறிவுரை சொல்லும் கூட்டமாக வந்துவிட்டோம்.. :angry:

மக்கள் குடியிருப்புக்குள் இருக்கும் இராணுவத்தைத் தாக்க அவர்கள் வெளியிலும், வெட்டையிலும் வரும் வரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லுவதை முதலில் நிறுத்தவேண்டும்.. பொதுமக்களின் உயிரழப்புக்களை தவிர்க்கவே கூடியவரை போராளிகள் முயல்கின்றார்கள் என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.