Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...

Featured Replies

  • தொடங்கியவர்

எமக்கு எதிரான போட்டி பயிற்சி போட்டி போன்றது என இந்திய அணியினர் தெரிவித்திருந்தனர் : ஆதங்கத்தை வெளிப்படுத்தி டிக்வெல்ல

 

தென்னாபிரிக்காவுடனான தோல்வியின் பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும். இதே திறமையுடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற முயற்சி செய்வோம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்ல தெரிவித்துள்ளார்.Niroshan-Dickwella-great-joy.jpg

எமக்கு எதிரான போட்டி, பயிற்சி போட்டி போன்றது என இந்திய வீரர்கள் தெரிவித்திருந்தனர். இது எம்மை காயப்படுத்தியிருந்தது. இவ்வாறான கருத்துக்களை நாம் கணக்கில் கொள்ளவில்லை. எனினும் சிறப்பான ஆட்டத்தால் பதிலடி கொடுத்துள்ளோம்.

மைதானத்தில் இந்திய ரசிகர்கள் நிரம்பி காணப்பட்ட போதும் இலங்கை ரசிகர்கள் எமக்கு ஆதரவை நல்கியிருந்தனர். இந்நேரத்தில் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் இந்தியாவுக்கு எதிரான வெற்றி எம் அனைவருக்கும் மிகுந்த சந்தோசத்தையளிக்கின்றது என்றார்.

http://www.virakesari.lk/article/20755

 

  • Replies 236
  • Views 21.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
சாம்பியன்ஸ் டிராபி: நியூசி.,யை வீழ்த்தியது வங்கதேசம்

பங்களாதேஸிடம் சுருண்டு மடிந்தது நியூசிலாந்து

 
பங்களாதேஸிடம்  சுருண்டு மடிந்தது  நியூசிலாந்து
 

மினி உலகக்கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை வெற்றிபெற்றது பங்களாதேஸ். இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஸ் அணி அரையிறுதிக்கான வாய்ப்பைத் தக்கவைக்க நியூசிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து 8 இலக்குகள் இழப்புக்கு 265 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ரெய்லர் 63 ஓட்டங்களையும், வில்லியம்சன் 57 ஓட்டங்களையும், புறூம் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஸ்டக் கொசைன் 3 இலக்குகளையும், தஸ்கின் அகமட் 2 இலக்குகளையும், ரகுமான், ரூபல் கொசைன் இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குக் களமிறங்கிய பங்களாதேஸ் அணிக்கு ஆரம்ப வீரர் இக்பால் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். சர்கர் 3, சபிர் ரகுமான் 8, ரகிம் 14 என சொற்ப ஓட்டங்களுடன் பவிலியன் திரும்ப 33 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை இழந்தது அந்த அணி. எனினும் சகிப் அல் ஹசன், மகமதுல்லா இணை சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தியது. போல்ட், சவுத்தி, மில்லி என்று மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சுக் கூட்டணியைக் கொண்ட நியூசிலாந்தால் இலக்குச்சரிவை ஏற்படுத்த இயலவில்லை. இணைப்பாட்டமாக 100 ஓட்டங்கள் பகிரப்பட்டன. இருவரும் அரைச்சதம் கடந்து படிப்படியாக அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சதம் கந்தார் சகிப் அல் ஹசன். அவர் 114 ஓட்டங்களுடன் அட்டமிழந்தார். இந்த இலக்குச் சரிவு ஏற்பட்டபோது பங்களாதேஸின் வெற்றிக்கு 22 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது. மகமதுல்லாவும் சதம் கடந்தார். முடிவில் 5 இலக்குகளால் வென்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது பங்களாதேஸ்.

264164.jpg

264173.jpg

264183.jpg

264184.jpg

264186.jpg

18954712_1626857350666688_6110808457666737011_o-1024x599.jpg

http://uthayandaily.com/story/5850.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஷகிப் அல்-ஹசன், மஹமதுல்லா அதிரடி சதம்: நியூசிலாந்தை வெளியேற்றியது பங்களாதேஷ்- (Highlights)

 

 

ஷகிப் அல்-ஹசன், மஹமதுல்லா ஆகியோரின் அதிரடி சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அணி, முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து வெளியேற்றியது.New-Zealand-v-Bangladesh.jpg

சாம்பியன்ஸ் கிண்ணம்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 8ஆவது சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் கார்டிப்பில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்து- பங்களாதேஷ் அணிகள் தங்களின் இறுதி லீக்கில் மோதின. மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது என்றாலும் ஓவர் குறைக்கப்படவில்லை.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லுக் ரோஞ்ச் (16 ஓட்டங்கள்), மார்ட்டின் குப்தில் (33 ஓட்டங்கள்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 

 

 

 

இதன் பின்னர்  கனே வில்லியம்சனும், ரோஸ் டெய்லரும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினர். 

ஒரு கட்டத்தில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்களை (29.4 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 300 ஓட்டங்களை நெருங்கும் போல் தோன்றியது. 

அரைசதம் விளாசிய வில்லியம்சன், சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

 

நியூசிலாந்து 265 ஓட்டங்கள்

 

நியூசிலாந்தின் முதுகெலும்பாக விளங்கிய இந்த ஜோடி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. வில்லியம்சன் 57 ஓட்டங்களுடனும் (69 பந்து, 5 பவுண்டரி), ரோஸ் டெய்லர் 63 ஓட்டங்களுடனும்  (82 பந்து, 6 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர். 

இதன் பிறகு ஓட்டவேகம் சற்று தளர்ந்து போனது. நீல் புரூம் (36 ஓட்டங்கள்), கொரி ஹெண்டர்சன் (0), ஜேம்ஸ் நீஷம் (23 ஓட்டங்கள்), ஹெடம் மில்னே (7 ஓட்டங்கள்) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர்.

 

50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்களை பெற்றது.

இறுதி 10 ஓவர்களில் நியூசிலாந்து 62 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. நடப்பு தொடரில் இறுதி 10 ஓவர்களில் குறைந்த ஓட்டங்களை எடுத்த அணி நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஷகிப், மஹமதுல்லா அதிரடி சதம்

 

 266 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களுக்குள் தமிம் இக்பால் (0), சபிர் ரகுமான் (8 ஓட்டங்கள்), சவுமியா சர்கார் (3 ஓட்டங்கள்), முஷ்பிகுர் ரஹிம் (14 ஓட்டங்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

 இந்நிலையில் ஷகிப் அல்-ஹசனும், மஹமதுல்லாவும் கைகோர்த்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். 

நிலைத்து நின்று மிரட்டிய இந்த கூட்டணி நியூசிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது.

ஷகிப் அல்-ஹசன் 7-வது சதத்தை எட்டினார்.

சாதனை

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷகிப்-மக்முதுல்லா ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 224 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சாதனை படைத்தது. 

பங்களாதேஷ் ஜோடி ஒன்று இணைப்பாட்டமாக  200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

வெற்றியை நெருங்கிய போது ஷகிப் அல்-ஹசன் 114 ஓட்டங்களுடன்  (115 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் மஹமதுல்லா (102 ஓட்டங்கள், 8 பவுண்டரி, 2 சிக்சர்) தனது 3ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

பங்களாதேஷ் அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 268 ஓட்டங்களை பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 3 புள்ளியுடன் பங்களாதேஷ் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. 

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவை பொறுத்து பங்களாதேஷின் அரைஇறுதி வாய்ப்பு தெரியவரும். 

அதாவது அவுஸ்திரேலிய அணி தோற்றால் பங்களாதேஷ் அணியின் அரைஇறுதி கனவு நனவாகும். 

இதேவேளை நியூசிலாந்து முதல்அணியாக போட்டியை விட்டு வெளியேறியது.

http://www.virakesari.lk/article/20763

  • தொடங்கியவர்

இங்கிலாந்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா இன்று மோதல்

 

 

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்­றைய போட்­டியில் இங்­கி­லாந்தை வென்­றாக வேண்­டிய கட்­டா­யத்தில் கள­மி­றங்­கு­கி­றது அவுஸ்­தி­ரே­லியா. 

australia-vs-england.jpg

அதே­நே­ரத்தில் அரை­யி­று­திக்கு முன்­னே­றி­விட்ட நிலையில் அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்திவிட வேண்டும் என்­பதில் இங்­கி­லாந்து அணியும் தீவி­ர­மாக இருக்­கி­றது. 

இத்­தொ­டரில் அவுஸ்­தி­ரே­லிய அணி நியூ­ஸி­லாந்து மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­களை எதிர்­கொண்­டது. 

ஆனால் இந்த இரு போட்­டி­களின் போதும் மழை தொடர்ந்து குறுக்­கிட்டு ஆஸி.யை சோதித்­தது. இதனால் அவுஸ்­தி­ரே­லியாவுக்கு இரு போட்­டிகள் மூலம் தலா ஒரு புள்­ளிதான் கிடைத்­தது. 

aus_vs_eng.JPG

அதே­நே­ரத்தில் 'ஏ' பிரிவில் உள்ள இங்­கி­லாந்து அணியோ தொடக்க ஆட்­டத்தில் பங்­க­ளா­தேஷை வீழ்த்­தி­யது. 

நியூ­சி­லாந்து அணியை 87 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வீழ்த்தி வெற்­றி­க­ர­மாக அரை­யி­று­திக்கு அடி­யெ­டுத்து வைத்­துள்­ளது. 

தற்­போது இங்­கி­லாந்து அணியை வென்­றால்தான் தொடரில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் அவுஸ்­தி­ரே­லியா உள்­ளது. 

இல்­லை­யெனில் தொட­ரை­விட்டு வெளி­யேற வேண்­டிய நிலையில் இருக்­கி­றது அவுஸ்­தி­ரே­லியா. 

இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் வீரர் ஹஸி, இரு அணி­க­ளுக்கும் இடை­யே­யான போட்டி எப்­போதும் கடு­மை­யா­ன­தா­கத்தான் இருக்கும். இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெல்ல சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/20766

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் வெற்றியையடுத்து சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பரபரப்பு

 

 

சம்­பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அபார துடுப்­பாட்டத்­தினால் இந்­திய அணி தோல்­வியை தழு­வி­ய­தை­ய­டுத்து இந்தத் தொடர் திறந்த தொட­ரா­கி­யுள்­ளது.

sl_vs_in_2017.jpg

'பி' பிரிவில் இனி நடைபெறவுள்ள போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறு­கி­றதோ அந்த அணி அரை­யி­று­திக்குத் தகுதி பெறு­மாறு தொடர் மாறி­யுள்­ளது. இது அன்று பாகிஸ்தான் தென்­னா­பி­ரிக்­காவை வீழ்த்­தி­ய­தாலும் இலங்கை அணி திட்­ட­மிட்டு முதலில் இந்­தி­யாவை துடுப்­பெ­டுத்­தாட அழைத்து 350 ஓட்­டங்­கள் ­வ­ரையில்  உயர்ந்­தி­ருக்க வேண்­டிய ஓட்ட எண்­ணிக்கையை 321 ஓட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்தி பிறகு இலக்கை வெகு எளி­தாக விரட்டி வெற்றி பெற்­ற­தாலும் ஏற்­பட்­டுள்ள நிலை­யாகும்.

சம்­பியன்ஸ் கிண்ணம், பர­ப­ரப்­பான கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. 'ஏ' பிரிவை விடஇ -'பி' பிரி­வில்தான் அதி­க­மான போட்டித் தன்மை கொண்ட போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இலங்கை, தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணி­க­ளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்­ளி­க­ளுடன் உள்­ளன.

 

இலங்­கை­யு­ட­னான போட்­டியில் எளி­தாக வென்று, -'பி' பிரிவில் முதல் அணி­யாக இந்­தியா அரை­யி­று­திக்குள் செல்லும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. 

ஆனால், அதைத் தவி­டு­பொ­டி­யாக்கி அதிர்ச்­சி­ய­ளித்­துள்­ளது இலங்கை. பலம் வாய்ந்த தென்­னா­பி­ரிக்க அணியை பாகிஸ்தான் அசைத்துப் பார்த்­து­விட்­டது. இந்த இரண்டு திருப்­பு­மு­னை­களும் 'பி' பிரிவில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள போட்­டிகளை பரபரப்பாக்கிவிட்டன.

அடுத்­த­தாக இந்­தியா -– தென்­னா­பி­ரிக்கா, பாகிஸ்தான் –- இலங்கை அணிகள் மோத உள்­ளன. 

இந்த இரண்டு போட்­டி­க­ளுமே, கிட்­டத்­தட்ட காலி­று­திச்­சுற்று போல்தான் அமையும். இந்தப் போட்­டி­களில் வெல்லும் அணிகள் மட்­டுமே அரை­யி­று­திக்குச் செல்ல முடியும்.

 இந்தப் போட்­டிகள் மழையால் பாதிக்­கப்­பட்டால், அரை­யி­று­திக்குச் செல்ல ஓட்ட விகிதம் முக்­கி­ய­மான ஒன்­றாகப் பார்க்­கப்­படும். 

இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு அணி­க­ளுக்கும் எதி­ரான போட்­டி­களிலும் 300 இற்கும் அதி­க­மாக ஓட்டங்களை குவித்­துள்­ளது. இதனால், சிறந்­த­தொரு ஓட்ட விகி­தத்தை இந்­திய அணி தக்­க­வைத்­துள்­ளது. குறிப்­பாக, இலங்கை அணி­யுடன் தோல்­வி­ய­டைந்த போதும் ஓட்ட விகிதம் சிறப்­பாக உள்­ளதால், இந்­திய அணி '-பி' பிரிவில் தொடர்ந்து முத­லி­டத்தில் உள்­ளது.

ஆனால், அரை­யி­று­திக்கு முன்­னேறபலம் வாய்ந்த தென்­னா­பி­ரிக்க அணியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்­டா­யத்தில் இந்­தியா உள்­ளது. 

இரண்டு பிரி­வு­க­ளி­லுமே எஞ்­சிய ஆட்­டங்கள் அனைத்தும் லீக் சுற்றைப்போல் இல்­லாமல், காலி­று­திச்­சுற்­று­போ­லத்தான் இருக்கும். ஒவ்வொரு அணியும் அரை­யி­று­திக்குள் செல்ல கடு­மை­யாகப் போரா­டி­யாக வேண்டும்.

இதில், இங்கிலாந்து அணி மட்டும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சற்று நெருக்கடி இல்லாமல் ஆடலாம். இங்கிலாந்து அணிக்குதான் அது சம்பிரதாயப் போட்டியாக இருக்கும். அவுஸ்திரேலியாவுக்கு அது வாழ்வா... சாவா போட்டிதான்.

http://www.virakesari.lk/article/20769

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குத் தகுதி பெற அணிகள் என்ன செய்யவேண்டும்?

 
rohit6565

 

* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது பாகிஸ்தான். 

* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது இலங்கை.

* சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது வங்கதேசம்.

இந்த மூன்று எதிர்பாராத முடிவுகளால் சாம்பியன்ஸ் டிராபி போட்டி திடீரென பரபரப்பாகியுள்ளது. இந்த நிலையில் லீக் சுற்றின் இறுதிக்கு வந்துவிட்டதால் அரையிறுதிக்குத் தகுதி பெற ஒவ்வொரு அணியும் என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.

குரூப் ஏ

இங்கிலாந்து: 4 புள்ளிகள்

இங்கிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. எனவே அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உற்சாகமாக விளையாடும்.

ஆஸ்திரேலியா: 2 புள்ளிகள்

இங்கிலாந்துடனான கடைசி லீக் போட்டி, ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாகும். அந்த அணி விளையாடிய முதல் இரு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. எனவே இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது ஆஸ்திரேலியா.

வங்கதேசம்: 3 புள்ளிகள்

நேற்று நியூஸிலாந்து அணியை வென்றதன் மூலம் வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் ஆஸ்திரேலியா தோற்கும்பட்சத்தில் வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறும். 

நியூசிலாந்து: 1 புள்ளி

வங்கதேசத்திடம் தோற்ற நியூஸிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

குரூப் பி

இந்தியா: 2 புள்ளிகள்

முதல் போட்டியில் வெற்றி. அடுத்தப் போட்டியில் எதிர்பாராத தோல்வி. எனவே நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். தோற்றுப்போனால் வெளியேறவேண்டியதுதான். 

தென் ஆப்பிரிக்கா: 2 புள்ளிகள்

நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியால் அரையிறுதிக்குத் தகுதி பெறமுடியும். தோற்றுப்போனால் வெளியேறவேண்டியதுதான். குரூப் பி பிரிவில் இந்தியா அல்லது தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என யார் எண்ணியிருக்கமுடியும்? 

பாகிஸ்தான்: 2 புள்ளிகள்

தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்த பாகிஸ்தான் அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. கடைசி லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இதில் வெல்லும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். 

இலங்கை: 2 புள்ளிகள்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றதன் மூலம் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. திங்கள் அன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

மீதமுள்ள லீக் போட்டிகள்

சனி: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

ஞாயிறு: இந்தியா - தென் ஆப்பிரிக்கா

திங்கள்: பாகிஸ்தான் - இலங்கை

http://www.dinamani.com/sports/sports-news/2017/jun/10/சாம்பியன்ஸ்-டிராபி-அரையிறுதிக்குத்-தகுதி-பெற-அணிகள்-என்ன-செய்யவேண்டும்-2718036.html

  • தொடங்கியவர்

ஆடும்போது நாங்கள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை: சாதனைக் கூட்டணி பற்றி மஹமுதுல்லா

 

 
வெற்றியைக் கொண்டாடும் மஹ்முதுல்லா. | படம்.| ஏ.பி.
வெற்றியைக் கொண்டாடும் மஹ்முதுல்லா. | படம்.| ஏ.பி.
 
 

நியூஸிலாந்து அணியை வங்கதேசம் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வெளியேற்றியதற்கு காரணமாக அமைந்த ஷாகிப் அல் ஹசனுடம் அமைத்த சாதனைக் கூட்டணி பற்றி மஹமுதுல்லா சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஆட்டம் முடிந்த பிறகு அவர் கூறியதாவது:

எங்கள் கூட்டணியில் சிறப்பம்சம் நாங்கள் இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. பேட்டிங் செய்தபடி இருந்தோம், ஆனால் தன்னம்பிக்கையுடன் ஆட முடிவெடுத்தோம்.

இன்னிங்ஸின் தொடக்கத்தில் பந்துகள் ஸ்விங் ஆயின. பிறகு ஸ்விங் ஆகவில்லை, இதனையடுத்து பேட்டிங் எளிதானது. இந்தத் தொடரில் தமீம் இக்பால் அருமையாக ஆடிவந்தார், ஆனால் அவரை தொடக்கத்தில் இழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. நானும் ஷகிப் அல் ஹசனும் கள இடைவெளிகளில் பந்தை அடிப்பதிலும், மோசமான பந்தை அடித்து ஆடவும் விரும்பினோம், என்றார்.

ஆட்ட நாயகன் ஷாகிப் அல் ஹசன் கூறும்போது, “மஹமுதுல்லா கூறியது போல் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. நாங்கள் இலக்கை துரத்துவதற்காக திட்டமிடவில்லை, முதலில் 40 ஓவர்கள் வரை பேட் செய்வோம், அப்போது என்ன நிலையில் இருக்கிறோம் என்று பார்த்துக் கொண்டு இலக்கு நோக்கி முயற்சி செய்வோம் என்று நினைத்தோம்.

ஐசிசி தொடரில் ஒரு போட்டியை வெல்வது என்பதே பெரிய விஷயம், இங்கிருந்து முன்னேற்றப்பாதையில்தான் செல்ல முடியும், என்றார்.

http://tamil.thehindu.com/sports/ஆடும்போது-நாங்கள்-அதிகம்-பேசிக்கொள்ளவில்லை-சாதனைக்-கூட்டணி-பற்றி-மஹமுதுல்லா/article9724265.ece?homepage=true

  • தொடங்கியவர்

இங்கிலாந்து வெற்றிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

 

வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி என்ற நிலையில் இங்கிலாந்து வெற்றிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

 
இங்கிலாந்து வெற்றிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா
 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இங்கிலாந்து அணி தனது இரண்டு லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டு போட்டியும் மழையினால் கைவிடப்பட்டது. இதனால் அந்த அணி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் வங்காள தேசம் நியூசிலாந்தை வீழ்த்தியதால் அந்த அணி 3 புள்ளிகள் பெற்றுள்ளது.

ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையோடு ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

201706101851032954_4-rashid-s._L_styvpf.
நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரஷித்

இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 7.2 ஓவரில் 40 ரன்னாக இரக்கும்போது வார்னர் 21 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்தில் வெளியேறினார்.

2-வது விக்கெட்டுக்கு பிஞ்ச் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 22.5 ஓவரில் 136 ரன்னாக இருக்கும்போது பிஞ்ச் 64 பந்தில் 68 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஸ்மித் 77 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்.

201706101851032954_4-wood-s._L_styvpf.gi
3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வுட்

அதன்பின் டிராவிஸ் ஹெட்டை விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது. அடில் ரஷித் பந்தில் ஹென்றிக்ஸ் (17), வடே (2), மிட்செல் ஸ்டார்க் (0), கம்மின்ஸ் (4) ஆகியோர் வெளியேறினாலும், ஹெட் கடைசி வரை நின்று 64 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்தார். இதனால்  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி தரப்பில் ரஷித் நான்கு விக்கெட்டுக்களும், வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/10185102/1090124/ICC-CT17-austarlia-278-runs-target-to-australia-won.vpf

Australia 277/9 (50.0 ov)
England 35/3 (6.0 ov)
England require another 243 runs with 7 wickets and 44.0 overs remaining
Match delayed by rain
  • தொடங்கியவர்

இலங்கை அணியில் குசால் பெரேராவிற்குப் பதிலாக தனஞ்ஜெயா டி சில்வா சேர்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை அணியில் காயம் ஏற்பட்டுள்ள குசால் பெரேராவிற்குப் பதிலாக தனஞ்ஜெயா டி சில்வா சேர்க்கப்பட்டுள்ளார்.

 
இலங்கை அணியில் குசால் பெரேராவிற்குப் பதிலாக தனஞ்ஜெயா டி சில்வா சேர்ப்பு
 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த 8-ந்தேதி இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணியின் 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பெரேரா 44 பந்தில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரமாக இருந்ததால், மாற்று வீரரை தேர்வு செய்ய இலங்கை முடிவு செய்தது.

அதன்படி அவருக்குப் பதிலாக தனஞ்ஜெயா டி சில்வாவை தேர்வு செய்தது. இதற்கு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியின் தொழில்நுட்ப குழு சம்மதம் தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நாளைமறுநாள் கார்டிஃபில் நடைபெறும் போட்டியில் தனஞ்ஜெயா டி சில்வா இடம்பெறுவார். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

25 வயதாகும் தனஞ்ஜெயா டி சில்வா 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் எடுத்ததுடன், நான்கு விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/10200351/1090133/Dhananjaya-De-Silva-replaces-Kusal-Perera-in-Sri-Lanka.vpf

  • தொடங்கியவர்

அஸ்வினை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்

 

அஸ்வின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று இந்தியாவிற்கு எதிரான நாளைய போட்டி குறித்து டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

 
அஸ்வினை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்
 
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நாளைய போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டியாகும்.

நாளைய போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பயிற்சி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கூறுகையில், ‘‘அஸ்வின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், நாளைய போட்டி குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நாளைய போட்டியில் அஸ்வின் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக நாங்கள் அவர் பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

அவர் அணியில் இடம்பெறாமலும் இருக்கலாம். அவர் அணியில் இருப்பதை விரும்புகிறோமா? அல்லது இல்லாததை நாங்கள் விரும்புகிறோமா? என்பதை என்னால் கூற இயலாது.

அஸ்வின் தலைசிறந்த பந்து வீச்சாளர். அவர் எங்களுக்கு எதிராக ஏராளமான விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இந்தியாவில் எங்களுக்கு எதிராக அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியவர். அவர் அணியில் இடம்பிடித்தால், அவருக்கு எதிராக எங்களது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சி செய்வோம்’’ என்றார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/10213721/1090141/India-vs-South-Africa-Preparing-to-Face-R-Ashwin-at.vpf

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸியை வீழ்த்தி, வங்கதேசத்தை அரைஇறுதிக்கு அழைத்து சென்றது இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வீழ்த்தி இங்கிலாந்து அணி, வங்கதேசத்தையும் அரைஇறுதிக்கு அழைந்து சென்றது.

 
சாம்பியன்ஸ் டிராபி: ஆஸியை வீழ்த்தி, வங்கதேசத்தை அரைஇறுதிக்கு அழைத்து சென்றது இங்கிலாந்து
 
பிரமிங்காம்:

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையோடு ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 7.2 ஓவரில் 40 ரன்னாக இருக்கும்போது வார்னர் 21 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்தில் வெளியேறினார்.

201706102320366832_Copy%20of%20aus._L_st

2-வது விக்கெட்டுக்கு பிஞ்ச் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 22.5 ஓவரில் 136 ரன்னாக இருக்கும்போது பிஞ்ச் 64 பந்தில் 68 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஸ்மித் 77 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் டிராவிஸ் ஹெட்டை விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது. அடில் ரஷித் பந்தில் ஹென்றிக்ஸ் (17), வடே (2), மிட்செல் ஸ்டார்க் (0), கம்மின்ஸ் (4) ஆகியோர் வெளியேறினாலும், ஹெட் கடைசி வரை நின்று 64 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்தார். இதனால்  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் ரஷித் நான்கு விக்கெட்டுக்களும், வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜாய் நான்கு ரன்களில் ஸ்டார்க் பந்தில் அவுட்டாக, இவருடன் களமிறங்கிய ஹேல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய  ரூட் 15 ரன்களில் அவுட்டானார்.

இதன் பின் களமிறங்கிய மார்கன் மற்றும் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், மார்கன் ரன் அவுட்டானார். பின் ஸ்டோக்ஸ்-உடன் ஜோடி சேர்ந்த பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்பட்டுத்தினார். பட்லர் 32 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். மறுமுனையில் ஸ்டோக்ஸ் 109 பந்துகளில் 102 ரன்களை குவித்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து அணி 40 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

201706102320366832_england-1._L_styvpf.g

‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி அரைஇறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இரண்டு லீக் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் தொடரின் முதல் அரை இறுதி போட்டி ஜூன் 14-ந்தேதி நடைபெற இருக்கிறது. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/10232035/1090151/England-Beat-Australia-to-enter-semi-finals-in-champions.vpf

  • தொடங்கியவர்

அஸ்வின் ஆட வாய்ப்பு: வாழ்வா, சாவா ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதல்

 
படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.
 
 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் ஞாயிறன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளுமே வாழ்வா, சாவா என்ற போராட்ட நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கின்றன.

பி பிரிவில் உள்ள இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் இந்த 4 அணிகளுக்குமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இவற்றில் ஏதாவது இரு அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும்.

இந்தியா-இலங்கை மோதிய அதே பிட்சில் விளையாடப்படலாம் என்பதால் இரு அணிகளுமே இலக்கை விரட்டுவதையே விரும்பும்.

இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடனும், இலங்கை அணி தனது கடைசி ஆட்டத்தில் 12-ம் தேதி பாகிஸ்தானுடம் மோதுகிறது. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு முன்னேறும்.

கேப்டனாக விராட் கோலி முதன்முறையாக ஒருநாள் போட்டியில் கடினமாக சூழ்நிலையை சந்திக்க உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 321 ரன்களை குவித்த போதும் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணியின் தன்னம்பிக்கையை ஆட்டம் காண வைத்துள்ளது.

அதேவேளையில் தென் ஆப்ரிக்க அணி பெரிய அளவிலான தொடர்களில் முக்கியமான கட்டத்தில் கோட்டை விடும் பழக்கத்தை கொண்டுள்ளது. இந்த துரதிருஷ்டத்தால் அந்த அணி 'சோக்கர்ஸ்' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியடையும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறும்.

இதே நிலைமைதான் தென் ஆப்ரிக்க அணிக்கும். ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறும். மாறாக தோவியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியது தான்.

இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் கேப்டன் மிகுந்த நெருக்கடியை சந்திக்க நேரிடக்கூடும். ஏனேனில் பயிற்சியாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில்தான் கோலி இந்த தொடரை சந்தித்தார்.

மறுபுறம் தென் ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் டெஸ்ட் போட்டிகளை புறக்கணித்தே ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் அஸ்வின் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. தென் ஆப்ரிக்க அணியில் தரம் வாய்ந்த இடது கை மட்டையாளர்களான குயிண்டன் டி காக், டுமினி, டேவிட் மில்லர் உள்ளனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அஸ்வினின் சுழல் ஜாலத்தை கோலி பயன்படுத்தக்கூடும்.

அஸ்வின் இயல்பாகவே பந்து வீச்சில் சில தந்திரங்களை கையாளக்கூடியவர். இரு ஆட்டங்களிலும் அவர் சேர்க்கப்படாததால் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார். இது இந்திய அணிக்கு சாகதமாக அமைய வாய்ப்புள்ளது.

இன்றைய ஆட்டத்துக்கான சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வதில் கோலிக்கு சற்று தலைவலி ஏற்படக்கூடும். வெற்றி கூட்டணியை கோலி தேர்வு செய்தால், அவரது அறிவாற்றல் மற்றும் புரிதல் மேம்பட்டுள்ளதாகவே கருதவேண்டும்.

அஸ்வின் களமிறங்கும் பட்சத்தில் ஜடேஜா, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோரில் யாரேனும் ஒருவர் நீக்கப்படக்கூடும். மெதுவாக வீசப்படும் பந்துகளில் தென் ஆப்ரிக்க வீரர்கள் திணறுவார்கள் என்பதால் இந்திய அணி எப்படியும் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் போட்டியை அணுகக்கூடும்.

இதனால் ஜடேஜா நீக்கப்பட வாய்ப்புகள் இல்லை. மேலும் பீல்டிங்கிலும் ஜடேஜா பலம் சேர்த்து வருகிறார். வலிமையான தோள்களை கொண்டுள்ள அவர் உள்வட்டத்துக்குள்ளும், எல்லைக் கோட்டின் எந்த பகுதியில் இருந்தும் பீல்டிங்கின் போது பந்துகளை விரைவாக எடுத்து த்ரோ செய்வதில் வல்லவர்.

எப்படியும் ஒரு ஆட்டத்தில் தனது அபாரமான பீல்டிங் திறனால் 15 ரன்கள் வரை சேமிக்கும் திறன் கொண்ட அவர், குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு பயனளிக்கக்கூடிய வீரராகவே இருப்பார்.

ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காகவே ஆல்ரவுண்டராக 7-வது இடத்தில் களமிறக்கப்படுகிறார். சூழ்நிலைக்கு தகுந்தபடி அவரது பேட்டிங் வரிசை மாற்றியும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரும் அணியில் நீடிப்பார் என்றே தெரிகிறது.

வேகப் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா இதுவரை பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பதே உண்மை. எனவே அஸ்வினுக்கு இவர் வழி கொடுக்கலாம், அல்லது ஹர்திக் பாண்டியா வழி கொடுக்கலாம், ஆனால் புவனேஷ் குமார் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வைத்துள்ள சிக்கன விகிதம் 7.17 என்பது சிக்கனமற்ற விகிதமாக உள்ளது. உமேஷ் யாதவ்வும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 6.81 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இந்த விதத்தில் மொகமது ஷமி மட்டுமே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிக்கன விகிதத்தை ஓவருக்கு 6 ரன்களுக்குக் குறைவாக வைத்துள்ளார்.

எனவே பவுலிங் வரிசை மொகமது ஷமி, உமேஷ் யாதவ் அல்லது புவனேஷ் குமார், அஸ்வின் ஜடேஜா, பாண்டியா என்பதாக இருக்கலாம்.

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது பவர்பிளேவில் இந்திய அணி ரன்களை தாரை வார்த்தது. தென் ஆப்ரிக்க அணியில் நடுகள வரிசையில் டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் உள்ளதால் இந்திய அணி எச்சரிக்கையுடன் ஆடும் என்று எதிர்பார்க்கலாம்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் இந்திய அணி இரு ஆட்டங்களிலும் முறையே 319, 321 ரன்களை குவித்தது. ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி இரு ஆட்டங்களிலும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது.

ஆனால் இந்த ஜோடி அதிக பந்துகளை எதிர்கொள்வது சற்று பலவீனமாக உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த தாக்கத்தை உணர முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் மொத்தம் 207 பந்துகளை எதிர்கொண்டு 203 ரன்களை சேர்த்தனர்.

புதிய பவர்பிளே விதிகளின்படி 340 ரன்களுக்கு குறைவாக எடுத்தால், நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்கும் உத்திகள் சிறந்த பலன் அளிக்காது. இந்த தொடரில் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி 2-வது பவர்பிளேவில் மந்தமாகவே ரன்கள் சேர்த்தது.

கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் விளாசும் திறன் கொண்ட இந்திய வீரர்கள் 11 முதல் 40-வது ஓவர் வரையிலான காலக்கட்டத்தில் (2-வது பவர்பிளே) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

இந்திய அணி 170 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் இலங்கை அணி 203 ரன்கள் விளாசி மிரட்டியது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த போது கோலி இதை வெகுவாக சுட்டிக் காட்டினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்த விஷயத்தில் இந்திய அணி சிறப்பு கவனம் செலுத்தக்கூடும்.

கடந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆன கோலிக்கு, இந்த ஆட்டத்தில் சவால் கொடுக்க ரபாடா, மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ் தயாராக உள்ளனர். இதேபோல் கூக்ளி பந்துகளை சிறப்பாக கைளாளும் இம்ரன் தகிர், ரோஹித் சர்மாவுக்கு நெருக்கடி தரக்கூடும்.

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா, கூக்ளி பந்துகளை சமாளிக்க முடியாமல் தனது விக்கெட்களை பலமுறை பறிகொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான இரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது.

http://tamil.thehindu.com/sports/அஸ்வின்-ஆட-வாய்ப்பு-வாழ்வா-சாவா-ஆட்டத்தில்-இந்தியாதென்-ஆப்பிரிக்கா-மோதல்/article9724359.ece?homepage=true

  • தொடங்கியவர்

அரையிறுதிக்கு தகுதி பெறப் போவது யார்? : இந்தியா - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை!

 

 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், களைகட்டத் தொடங்கியுள்ளது. ரேங்க்கிங்கில் டாப்பில் இருக்கும் அணிகளை, பெரிதும் எதிர்பார்க்காத அணிகள் அசைத்து பார்த்து வருகின்றன. குறிப்பாக, உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவே, குரூப் சுற்று போட்டிகளுடன் வெளியேறியுள்ளது. குரூப் - ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி விட்டன! 

 

India

 

இந்நிலையில், குரூப் - பி பிரிவில் தற்போது வரை, எந்த அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி மற்றும் தோல்வியைப் பெற்றுள்ளதால், அடுத்து நடக்க உள்ள இரண்டு லீக் போட்டிகளும், காலிறுதிச் சுற்றாக மாறியுள்ளது. ஆகவே நாக் அவுட் ரீதியில் இந்தியா - தென் ஆப்ரிக்காவையும், பாகிஸ்தான் - இலங்கையையும் எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

 

DB_dsZPW0AAY9MX_06130.jpg


இதனிடையே, இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள், இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்ற அதே லண்டன் ஓவல் மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. தொடரின் அரையிறுதிக்குச் செல்ல, இந்தப் போட்டி மிகவும் முக்கியம் என்பதால், இரு அணிகளும் கடுமையாகப் போராடும். தவிர டாஸும், அணிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய விஷயங்களுள் ஒன்றாக இருக்கும்.


குறிப்பாக, இலங்கையுடனான அதிர்ச்சித் தோல்வியால், இந்திய அணியில் இன்று மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன! அதன்படி பார்த்தால், அஸ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்று ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டாலும், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/sports/91941-india-to-face-south-africa-today-in-champions-trophy.html

  • தொடங்கியவர்

இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி : பந்தால் தாக்கப்பட்ட திசார பெரேரா வைத்தியசாலையில்..!

 

 

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடிவரும், இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டக்காரரான திசார பெரேராவின் தலை பகுதியில் பந்தடிப்பட்டுள்ளதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

prv_fa220_1453189520.jpg

பாகிஸ்தானிற்கு எதிராக நாளை களமிறங்கவுள்ள இலங்கை அணி, நேற்று இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் பயிற்சில் ஈடுபட்டிருந்த நிலையில், திசார பெரேரா தலையில் பந்தடிப்பட்டு உபாதைக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசார பெரேராவிற்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும், பந்தடிப்பட்ட பகுதி மாத்திரம் மென்மைநிலை அடைந்துள்ளதாகவும், எவ்வாறாயினும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 8ஆவது சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு, நாளை இடம்பெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20786

  • தொடங்கியவர்

திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டதா? உண்மைச் சம்பவம் இதுதான்

 
Tisara-696x463.jpg
icc-clips-728-90-newest.jpg

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணியினர் நேற்று (சனிக்கிழமை) கார்டிப்பில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, சகலதுறை வீரர் திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் எந்தவித பாரிய உபாதைகளுக்கும் உள்ளாகவில்லை.

 

இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக நாளை பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள குழு மட்டத்திலாக இறுதி ஆட்டம் இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக இலங்கை அணி வீரர்கள் கார்டிப் நகரில் உள்ள சோபியா கார்டன் அரங்கில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இதன்போது திஸர பெரேராவின் தலையில் பந்து தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான செய்தி சேகரிப்பிற்காக இங்கிலாந்து சென்றுள்ள ThePapare.com இன் ஊடகவியலாளர் தமித் வீரசிங்க, சோபியா கார்டன் அரங்கில் இருந்து இந்த விடயம் தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்தார்.

அவர், ”நேற்றைய தினம் இலங்கை வீரர்கள் கார்டிப்பில் தமது முதல் பயிற்சிகளை மேற்கொண்டனர். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்பொழுது பந்து திஸர பேரேராவின் தலையைத் தாக்கியது. எனினும் அதன்மூலம் எந்தவித பாரிய ஆபத்தும் அவருக்கு இல்லை. குறித்த சம்பவத்தின் பின்னரும் அவர் நீண்ட நேரம் வலையில் துடுப்பாட்ட பயிற்சிகளை மேற்கொண்டார்” எனத் தெரிவித்தார்.  

ஏற்கனவே, இலங்கை அணியின் சாமர கபுகெதர உபாதை காரணமாக இந்தியாவுடனான போட்டியில் விளையாடவில்லை. இந்தியாவுடனான போட்டியில் குசல் ஜனித் பேரேரா உபாதைக்குள்ளாகியமையினால், தொடரில் இருந்து நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

 

இவற்றுக்கு மேலதிகமாக, ஏற்கனவே இரண்டு போட்டித் தடைகளுக்கு உள்ளாகியுள்ள உபுல் தரங்கவும் அணியில் இல்லாததால், அதிகமான இளம் வீரர்களுடனேயே பாகிஸ்தான் அணியுடனான நாளைய போட்டியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

இறுதியாக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி இந்தியாவை 7 விக்கெட்டுகளால் அபாரமாக வெற்றி கொண்டது. இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணியே அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்டிப்பில் பயிற்சிகளை மேற்கொள்ளும் இலங்கை

 

http://www.thepapare.com

  • தொடங்கியவர்
 
PAK-vs-SL.jpg

இந்தியாவை வீழ்த்திய இலங்கை பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்?

 
icc-clips-728-90-newest.jpg

இலங்கை அணியானது, இறுதியாக 2015ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் அணியுடன் ஒரு நாள் தொடரொன்றில் விளையாடியிருந்தது. இலங்கை அணியின் சொந்த மண்ணில் இடம்பெற்றிருந்த ஐந்து போட்டிகள் கொண்ட அத்தொடரினை, பாகிஸ்தான் அணி 3-2 என கைப்பற்றியிருந்தது.

அத்தொடர் நடைபெற்று, சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணியானது, அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக வேண்டும் எனில், பாகிஸ்தான் அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டிய நிலையில் திங்கட்கிழமை (12) கார்டிப் நகரில் ஆரம்பமாகும் சமரில் களமிறங்கவுள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை ஒரு நாள் போட்டிகள் வரலாறு

நடைபெறப்போகும் போட்டியானது, இரு அணிகளும் மோதும் 148ஆவது ஒரு நாள் போட்டியாகக் காணப்படுகின்றது. இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டிகளில் 84 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதோடு, 54 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இறுதியாக 2006ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றிருந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழு நிலை ஆட்டமொன்றில் இலங்கையை எதிர்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 விக்கெட்டுகளால் அப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

அணிகளது அண்மைய ஆட்டங்களின் கள நிலவரங்கள்

இலங்கை அணிக்கு, சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இங்கிலாந்து சுற்றுத்தொடர் மிகவும் மோசமானதாகவே ஆரம்பித்திருந்தது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னதாக, ஸ்கொட்லாந்து அணியுடன் பயிற்சிப் போட்டியொன்றில் தோல்வியடைந்திருந்த இலங்கை அதற்கு பின்னர் அவ்வணிக்கு இரண்டாம் போட்டியில் பதிலடி தந்திருப்பினும், தொடர்ந்து சம்பியன்ஸ் கிண்ணப்பயிற்சிப் போட்டிகளில், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக, சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியிலும் 96 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியுடனும் படுதோல்வியடைந்த இலங்கை அணியானது சம்பியன்ஸ் கிண்ணத்திலிருந்து வெளியேறும் அபாயத்திற்கு உள்ளாகியிருந்தது. எனினும், இறுதியாக சம்பியன்ஸ் கிண்ணத்தில் தாம் விளையாடிய போட்டியில் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை சம்பியன்ஸ் கிண்ணத்தின் நடப்புச் சம்பியன்களான இந்திய அணியினை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், சம்பியன்ஸ் கிண்ணத்தில் கத்துக்குட்டியாக நுழைந்திருப்பினும் தாங்கள் பலம் வாய்ந்த எந்த அணியையும் வீழ்த்தும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதனை நிரூபித்திருந்தது.

ஒரு நாள் தரவரிசையில் ஆறாம் இடத்திற்கு மீண்டும் முன்னேறியிருக்கும் இலங்கை அணியானது, 2016ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 29 ஓரு நாள் போட்டிகளில் விளையாடியிருப்பதுடன், அதில் 9 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை சம்பியன்ஸ் கிண்ணத்தினை வெற்றி பெறாத அணிகளில் ஒன்றாகக் காணப்படும் பாகிஸ்தான் அணியின் அண்மைய ஆட்டத்தினை எடுத்து பார்க்கும் போது, சம்பியன்ஸ் கிண்ணத்தில் பலம் குறைந்த பங்களாதேஷ் அணியினை சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் அவ்வணி வீழ்த்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணியுடனும் பயிற்சிப் போட்டியில் மோதியிருப்பினும், அப்போட்டி முடிவு ஏதுமின்றி நிறைவுபெற்றிருந்தது.  

இதனையடுத்து, சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் இந்திய அணியின் மூலம் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் சிதறடிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 124 ஓட்டங்களால் படுதோல்வியடைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் மழை குறுக்கிட்டதன் காரணமாக, 19 ஓட்டங்களால் டக்வத் லூவிஸ் முறையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற காரணத்தினால், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை அதன் மூலம் தக்க வைத்துக்கொள்கின்றது. பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணியுடனான போட்டி அரையிறுதி வாய்ப்பினை தீர்மானிப்பதால் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. 2016ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இன்று வரை 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் பாகிஸ்தான் அணியானது அதில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றது.

இலங்கை அணி

இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் இலங்கை அணியானது சம்பியன்ஸ் கிண்ணத்தில் தமக்கு வாழ்வா? அல்லது சாவா? என்கிற நிலையில் களமிறங்குகின்றது. இலங்கை அணியினை பொறுத்தமட்டில் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இந்த இங்கிலாந்து தொடரினை எடுத்துப் பார்க்கும் போது அனைத்து (தென்னாபிரிக்க அணியுடன் தவிர்ந்த) ஏனைய அனைத்து போட்டிகளிலும், சிறப்பான துடுப்பாட்ட வலிமையினை வெளிக்காட்டியிருந்ததை அவதானிக்க முடிகின்றது. அதிலும், குறிப்பாக இந்திய அணியுடனான போட்டியில் அதிக அழுத்தங்கள் காணப்பட்டிருப்பினும் அனைவரினையும் மலைக்க வைக்கும் விதமாக இலங்கை வீரர்கள் துடுப்பெடுத்தாடியிருந்தனர். எனவே, இதே வகையிலான துடுப்பாடத்தினை இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டும். இலங்கை அணியின் பந்து வீச்சினை எடுத்துப் பார்க்கின்ற போது, அது சற்று மோசமாகவே காணப்படுகின்றது. இலங்கை பந்துவீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை வாரி இறைப்பவர்களாக செயற்படுகின்றனர். இதனை அடுத்த போட்டியில் இலங்கை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

மைதானத்தில் உபாதைக்கு உள்ளாகும் குசல் ஜனித் பெரேரா மைதானத்தில் உபாதைக்கு உள்ளாகும் குசல் ஜனித் பெரேரா

இந்திய அணியுடனான போட்டியின் போது, உபாதைக்கு உள்ளாகியிருந்த குசல் ஜனித் பெரேரா தற்போது சம்பியன்ஸ் கிண்ணத்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார். இதன் மூலம், உபுல் தரங்கவிற்கு அடுத்து பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நல்ல ஆட்டத்தினை வெளிக்காட்டி வந்த மத்திய வரிசை வீரர் ஒருவரிற்கு இலங்கை அணியின் குழாமில் விளையாடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது. இது இலங்கை அணிக்கு ஏற்பட்ட மற்றுமொரு பாரிய இழப்பாகும். இறுதியாக பாகிஸ்தான் அணியினை இலங்கை எதிர்கொண்டிருந்த ஒரு நாள் தொடரில் இலங்கை சார்பாக குசல் பெரேராவினாலேயே அதிக ஓட்டங்கள் (230) குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரேராவிற்கு பதிலாக அணியில், தனன்ஞய டி சில்வா பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்திய அணியுடனான வெற்றியினை கொண்டாடும் மெதிவ்ஸ் இந்திய அணியுடனான வெற்றியினை கொண்டாடும் மெதிவ்ஸ்

எனினும், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக சிறப்பாக செயற்பட கூடிய வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். பாகிஸ்தான் அணிக்கெதிராக இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் மெதிவ்ஸ் 43.90 என்னும் ஒட்ட சராசரியினை வைத்திருக்கின்றார். இது, பாகிஸ்தான் அணிக்கு மெதிவ்ஸ் நெருக்கடி தருவார் என்பதினை அதிகம் பறைசாற்றி நிற்கின்றது.

அதேபோன்று, குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, அசேல குணரத்ன மற்றும் தனுஷ்க குணத்திலக்க போன்ற இளம் வீரர்களும் தற்போது நல்ல ஆட்டத்தினை வெளிக்காண்பித்து வருவதினால் இலங்கை அணியின் துடுப்பாட்டம் இவர்கள் மூலம் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து மைதானங்கள் இம்முறை வேகப்பந்து வீச்சிற்கு சாதமாக அமைகின்ற காரணத்தினால், இலங்கை அணியின் பந்து வீச்சினை பொறுத்தமட்டில், அது லசித் மாலிங்க, சுரங்க லக்மால், நுவன் பிரதீப் மற்றும் திசர பெரேரா ஆகியோரில் தங்கியிருக்கின்றது. இதில், கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஒரு நாள் போட்டிகளின் போது லசித் மாலிங்க (47) மற்றும் திசர பெரேரா (32) ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்தது பதிவுகள் மூலம் அறியக் கிடைக்கின்றது. எனவே, இவர்களின் பந்து வீச்சு மூலம் இலங்கை வலுப்படுமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி – தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டில், தனன்ஞய டி சில்வா, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), அசேல குணரத்ன, திசர பெரேரா, சுரங்க லக்மால், லசித் மலிங்க, நுவன் பிரதீப்


பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, அவ்வணி அனுபவம் குறைந்த பல புதுமுக வீரர்களை கொண்டிருப்பதால் அவ்வணியின் ஆட்டத்தினைப் பற்றி எதுவும் எதிர்வு கூறமுடியாது காணப்படுகின்றது. அண்மைய காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் தத்தளித்து வரும் நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் இந்த சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில், பயிற்சி ஆட்டமாக நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியை தவிர வேறு எந்த போட்டிகளிலும் திறமையான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை. பந்து வீச்சிலும், அவ்வணி இதே நிலைமையில் காணப்பட்டிருப்பினும், அவர்களது கடந்த போட்டியில் ஒரு நாள் தரவரிசையில் பலம்பொருந்திய துடுப்பாட்ட வீரர்களுடன் முதலிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணியை கட்டுப்படுத்தியிருந்தது கவனிக்கத்தக்கவிடயமாகும்.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தினை பொறுத்த மட்டில், இலங்கை அணிக்கெதிராக 40 இற்கு மேலாக ஒரு நாள் போட்டிகளில் ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும், மொஹமட் ஹபீஸ், அஹ்மட் ஷேசாத் மற்றும் அசார் அலி ஆகிய வீரர்கள் முன்னைய காலங்களில் இலங்கை அணிக்கெதிராக சிறப்பாக செயற்பட்டு இருப்பினும் அவர்கள் தொடர்ந்து அவ்வாறு நீடிப்பார்களா என்பது அவர்களது அண்மைய ஆட்டங்கள் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. அசார் அலி இந்திய அணிக்கெதிரான போட்டியில் அரைச்சதம் ஒன்றினைப் பெற்றிருப்பினும், தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் மிக மோசமான ஆட்டத்தினை காட்டியிருந்தார். எனவே, பாகிஸ்தான் அணியின்  துடுப்பாட்டம் இளம் வீரர்களிலேயே பெரிதும் தங்கியிருக்கின்றது.

ஹசன் அலி பந்து வீச்சில் ஈடுபட்டு இருக்கின்ற போது Getty Images ஹசன் அலி பந்து வீச்சில் ஈடுபட்டு இருக்கின்ற போது Getty Images

இவ்வணியின், பந்து வீச்சினை பொறுத்தமட்டில் கடந்த போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு நெருக்கடி தந்திருந்த வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி வரும் போட்டியில் இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் தரும் வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். அதே போன்று, பாகிஸ்தான் குழாம் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் இமாத் வஸீம் மற்றும் சதாப் கான் ஆகியோர் மூலமும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி – அசார் அலி, பக்கார் சமான், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், சொஹைப் மலிக், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாத் வஸீம், மொஹம்மட் அமீர், சதாப் கான், ஹசன் அலி, ஜூனைத் கான்

சம்பியன்ஸ் கிண்ண குழு B இனைப் பொறுத்தவரை எந்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு செல்லப்போகின்றன என்பது, இன்றைய (11) இந்தியா எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவு மற்றும் நாளைய(12) இலங்கை எதிர் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தெரிய வரும், நிறைய போட்டிகளில் மழை குறுக்கிடுகின்ற காரணத்தினால் எதிர்பார்க்க முடியாத முடிவுகளும் சிலவேளை அமைந்துவிடக்கூடிய சாத்தியக்கூறுகளும் அதிகம் உள்ளன.

 

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

#INDvsSA 191 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன் ட்ராபித் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. 

இந்தியா

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று வருகின்றன. இதனிடையே தகுதிச் சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்று இங்கிலாந்து, வங்க தேசமும் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துவிட்டன. இதையடுத்து பி பிரிவில் அரையிறுதிக்குள் நுழையும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இன்று மோதுகின்றன.

 

ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 44.3 ஓவரில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி காக் 53 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அஸ்வின், பாண்டியா, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். இன்றைய ஆட்டத்தில் பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, 3 பேரை ரன்-அவுட் செய்துள்ளது. இதில் அதிரடி வீரர்கள் டி வில்லியர்ஸ் மற்றும் மில்லர் அடங்குவார்கள். இதையடுத்து 192 என்ற எளிய இலக்குடன் களமிறங்கவுள்ளது இந்தியா.

http://www.vikatan.com/news/sports/91978-south-africa-scores-191-runs-against-india.html

  • தொடங்கியவர்

தேவையில்லாத ரன் அவுட்கள்; 75 ரன்களில் 9 விக்கெடுகளை இழந்து தெ.ஆ 191 ரன்களுக்குச் சுருண்டது

 
டிவில்லியர்ஸ் முயற்சி தோல்வி. | தோனி ரன் அவுட் செய்கிறார். | படம்.| ஏ.எஃப்.பி.
டிவில்லியர்ஸ் முயற்சி தோல்வி. | தோனி ரன் அவுட் செய்கிறார். | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

ஓவலில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை முதலில் பேட் செய்ய அழைத்த இந்திய அணி 191 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டியது.

75 ரன்களில் 9 விக்கெட்டுகள்... கடைசி 8 விக்கெட்டுகளை 51 ரன்களுக்குப் பறிகொடுத்தது.

அபாரமான கேப்டன்சி, பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவற்றோடு தென் ஆப்பிரிக்காவின் மோசமான பேட்டிங்கும் இணைந்து கொள்ள 44.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது.

குவிண்டன் டி காக் அதிகபட்சமாக 72 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 53 ரன்களை எடுத்திருந்த போது இந்திய அணி ரன் கொடுக்காமல் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில் ஜடேஜா பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பவுல்டு ஆகி வெளியேற 116/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 75 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களுக்கு மடிந்தது தென் ஆப்பிரிக்கா. தோனி 2 கேட்ச்களோடு 2 ரன் அவுட்களிலும் ஈடுபட்டு அசத்தினார்.

இந்திய அணியில் புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு ஹாட்ரிக் வாய்ப்பிலும் இருந்தார் ஆனால் கைகூடவில்லை. பும்ரா 2 விக்கெட்டுகளை 28 ரன்களுக்குக் கைப்பற்றினார். அஸ்வின் உண்மையில் ஆம்லாவை (35) வீழ்த்தியது ஒரு விதத்தில் திருப்பு முனை என்றே கூற வேண்டும், காரணம் தென் ஆப்பிரிக்கா 76 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து வலுவாகவே சென்று கொண்டிருந்தது.

முதல் 25 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி பவுலர்கள் 75 பந்துகளை ரன் இல்லாத பந்துகளாக வீசி நெருக்கினர். மொத்தம் தென் ஆப்பிரிக்கா விளையாடிய 267 பந்துகளில் 141 பந்துகள் டாட் பால்கள், அதாவது பாதிக்கும் மேல் ரன் இல்லாத பந்துகளே.

தொடக்கத்தில் இந்திய பந்து வீச்சு அவ்வளவு பயங்கரமாகவெல்லாம் இல்லை, ஆனால் தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டி காக் ஆகியோர் ஏனோ பம்மி பம்மி ஆடினர். இதனால்தான் தொய்வு ஏற்பட்டது. முதல் 17 ஓவர்களில் மொத்தம் 4-5 பவுண்டரிகளே அடிக்கப்பட்டது.

ஏ.பி.டிவில்லியர்ஸ் முக்கிய ஆட்டங்களில் ஆடி நீண்ட நாட்களாகிவிட்டது, ஆனால் இன்று நிச்சயம் ஒரு கைபார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவரோ 2015 உலகக்கோப்பையில் மோஹித் சர்மாவின் த்ரோவில் ரன் அவுட் ஆனது போல், இன்றும் டுபிளெசிஸ் பாயிண்டில் ஆடிய பந்தை ஹர்திக் பாண்டியா அபாரமாகத் தடுத்து தோனிக்கு அனுப்ப டிவில்லியர்ஸ் டைவ் அடித்தும் பயனில்லை அதிர்ச்சிகரமாக ரன் அவுட் ஆனார் டிவில்லியர்ஸ். இத்தனைக்கும் 1 பவுண்டரியுடன் அவர் 12 பந்துகளி 16 ரன்கள் என்று நன்றாகவே ஆடிவந்தார். ரன்னே இல்லாததற்கு ஓடியது ஏன் என்று புரியவில்லை, இந்த ரன்னுக்கான அழைப்பும் டிவில்லியர்ஸுடையதுதான்.

ஆனால் இன்னொன்றையும் நாம் கூறியாக வேண்டும், இந்திய அணி பவுண்டரிகள் கொடுக்காமல் ஒன்று இரண்டு ரன்களையும் தடுத்ததால் தென் ஆப்பிரிக்காவுக்கு அழுத்தம் அதிகரித்திருக்கும், அதனால் இந்த ரன் அவுட் சம்பவித்திருக்கலாம். முதலிலிருந்தே தென் ஆப்பிரிக்காவின் கணிப்பு ரன் விஷயத்தில் தவறாகவே இருந்து வந்தது, முதலிலும் ஒரு ரன் அவுட் கோலி த்ரோ ஸ்டம்பிற்குச் சென்றிருந்தால் ஒரு ரன் அவுட் சம்பவித்திருக்கும்.

டேவிட் மில்லர் ஒரு அபாய வீரர். இவரும் மோசமாக ரன் அவுட் ஆனார். இந்த முறை டுபிளேசிஸ், டேவிட் மில்லர் இருவருமே ஒரே முனையில் இருந்தனர் விக்கெட் கீப்பருக்கு அடித்த மோசமான த்ரோ ரன்னர் முனைக்குச் செல்லும் போது இருவரும் பேட்டிங் முனையில் இருந்தனர், யார் ரன் அவுட் என்று நடுவர் தீர்ப்பளித்தார், இம்முறையும் டுபிளசிஸ் கிரீசை தொட்டு விட மில்லர் ஆட்டமிழந்தார்.

36 ரன்கள் எடுத்த டுபிளெசிஸ் 2 ரன் அவுட்களை பார்த்ததனால் பதற்றமடைந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தை ஆடமுயன்று பவுல்டு ஆகி வெளியேறினார். கிறிஸ் மோரிஸ், பெலுக்வயோ, ரபாடா, மோர்கெல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க டுமினி ஒரு முனையில் 20 நாட் அவுட் என்று தனித்து விடப்பட தென் ஆப்பிரிக்கா 191 ரன்களுக்குச் சுருண்டது.

http://tamil.thehindu.com/sports/தேவையில்லாத-ரன்-அவுட்கள்-75-ரன்களில்-9-விக்கெடுகளை-இழந்து-தெஆ-191-ரன்களுக்குச்-சுருண்டது/article9724704.ece?homepage=true

 

  • தொடங்கியவர்
இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராஃபி : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி

 
மீண்டும் தவான் அற்புத ஆட்டம்படத்தின் காப்புரிமைBCCI

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இத்தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

192 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற எளிய இலக்குடன் களத்தில் இறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவை விரைவாக இழந்தது. இலங்கைக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சதமடித்த ஷிகர் தவான் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடினார்.

மீண்டும் தவான் அற்புத ஆட்டம்

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய தவான், ரோகித் சர்மா ஆட்டமிழந்தவுடன் களத்தில் இறங்கிய அணித்தலைவர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணி வெற்றி பெறுவதையும், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதையும் உறுதி செய்தார்.

83 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் ஷிகர் தவான் 78 ரன்கள் எடுத்தார்.

தவான் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் விளையாடி வந்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்தார்.

38 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 193 ரன்களை பெற்ற இந்திய அணி, 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இத்தொடரின் அரையிறுதியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதிபடத்தின் காப்புரிமைAFP Image captionதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி

முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள்

முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்கத்தில் தென் ஆப்ரிக்க மட்டைவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் ஜோடி சேர்ந்த நிலையில், அனுபவம் மிகுந்த தொடக்க ஆட்டக்காரரான ஆம்லாவின் விக்கெட்டை இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார்.

மறுமுனையில் விளையாடிய குயின்டன் டி காக் அரைச்சதமடித்த நிலையில், ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்க கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாக, பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க வீரர்களால் எதிர்பார்த்த அளவு ரன்கள் குவிக்க முடியவில்லை.

சிறப்பான பீல்டிங்கால் இந்திய அணி வெற்றிபடத்தின் காப்புரிமைBCCI Image captionசிறப்பான பீல்டிங்கால் இந்திய அணி வெற்றி

நிச்சயமாக வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியினர், இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்தனர். மூன்று தென் ஆப்ரிக்க வீரர்களை இந்திய அணி ரன் அவுட் செய்ததால் தென் ஆப்ரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையம் இழந்து 191 ரன்களை மட்டுமே பெற்றது.

இந்திய தரப்பில், புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

http://www.bbc.com/tamil/sport-40239538

  • தொடங்கியவர்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்தது இந்தியா?

 

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, இத்தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்து இந்தியா?படத்தின் காப்புரிமைREUTERS

வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில், தென் ஆப்ரிக்காவை மிக எளிதாக இந்தியா வென்றது எப்படி என்று இந்த அலசல் விவரிக்கிறது.

  • நேர்த்தியான மற்றும் சிக்கனமான பந்துவீச்சு

இலங்கை அணிக்கு எதிராக நடந்த முந்தைய போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது இந்திய அணியின் பந்துவீச்சுதான்.

ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பிரதான காரணமே பந்துவீச்சுதான்.

முதல் விக்கெட்டுக்கு தென் ஆப்ரிக்கா 76 ரன்களை சேர்த்த போதிலும், மிகவும் நேர்த்தியாக இந்திய அணியினர் பந்துவீசினர். பின்னர், தென் ஆப்ரிக்க விக்கெட்டுக்கள் சரியத் தொடங்கியவுடன், இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான 'லைன் அண்ட் லென்த்' பந்துவீச்சை தென் ஆப்ரிக்காவால் சமாளிக்க முடியவில்லை.

இந்திய தரப்பில், புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பூம்ராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபூம்ரா
  • களத்தில் 'பாயும் புலிகளாக' அசத்திய இந்திய பீஃல்டர்கள்

நிச்சயமாக வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியினர், இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்தனர்.

சொற்ப ரன்களிலேயே தென் ஆப்ரிக்க கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் ரன் அவுட்டாக, அது தென் ஆப்ரிக்காவின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.

மூன்று தென் ஆப்ரிக்க வீரர்களை இந்திய அணி ரன் அவுட் செய்ததால் தென் ஆப்ரிக்க அணியின் ரன் குவிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது. இறுதியில், அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்கா பெற்றது.

சிறப்பான பீல்டிங்கால் இந்திய அணி வெற்றிபடத்தின் காப்புரிமைBCCI Image captionசிறப்பான பீல்டிங்கால் இந்திய அணி வெற்றி
  • என்ன ஆயிற்று தென் ஆப்ரிக்க மட்டைவீச்சாளர்களுக்கு?

17.2 ஓவர்களில் 76 ரன்களை குவித்து விக்கெட் இழப்பின்றி வலுவான நிலையில் இருந்த தென் ஆப்ரிக்கா, 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே பெற்றது.

தொடர்ந்து விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்ததால், தென் ஆப்ரிக்காவால் விரைவாக ரன் எடுக்க முடியவில்லை. இதனால் தொடக்க ஆட்டக்காரர்கள் ஏற்படுத்திய நல்ல தொடக்கம் வீணானது.

ஏ பி டிவில்லியர்ஸ், மில்லர் போன்ற பல தென் ஆப்ரிக்க மட்டைவீச்சாளர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
  • உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், கோலி

தனது பேட்டிங்கில் இந்திய அணி ரோகித் சர்மாவை தொடக்கத்திலேயே இழந்த போதிலும், ரோகித் சர்மா ஆட்டமிழந்தவுடன் களத்தில் இறங்கிய அணித்தலைவர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து ஷிகர் தவான் இந்திய அணி வெற்றி பெறுவதையும், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதையும் உறுதி செய்தார்.

இலங்கைக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சதமடித்த ஷிகர் தவான், இந்த போட்டியில் 83 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 78 ரன்கள் எடுத்தார்.

தவான் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் விளையாடி வந்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்தார்.

உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், கோலிபடத்தின் காப்புரிமைAFP Image captionஉறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான், கோலி
  • முக்கிய போட்டிகளில் தொடர்ந்து தடுமாறும் தென் ஆப்ரிக்கா

கடந்த 1992, 1996, 1999, 2015 என பல உலககோப்பை போட்டிகளில் காலிறுதி, அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளில், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா தோல்வியையே சந்தித்துள்ளது.

முக்கிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் தொடந்து கோட்டை விட்டு வருவதாக அந்த அணியின் மீது பரவலான குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது.

அதே போல், இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் இந்த அழுத்தமே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறலாம்.

http://www.bbc.com/tamil/sport-40239543

  • தொடங்கியவர்

இலங்கை – பாகிஸ்தான் மோதும் கடைசி லீக் போட்டி இன்று வெல்லும் அணி உள்ளே

சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்­தி­யாவை வீழ்த்­தி­யதன் மூலம் அரை­யி­றுதி வாய்ப்பைத் தக்­க­வைத்துக் கொண்ட இலங்கை அணி இன்று பாகிஸ்தான் அணி­யு­ட­னான கடைசி லீக் போட்­டியில் மோது­கின்­றது.

இந்தப் போட்­டியில் வெற்­றி­பெறும் அணி அரை­யி­றுதிச் சுற்றில் விளை­யாட தகுதி பெறும் என்­பதால் இன்­றைய போட்டி இரு அணி­க­ளுக்கும் மிகவும் முக்­கி­ய­மான போட்­டி­யாக அமைந்­துள்­ளது.கடந்த 8ஆம் திகதி இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் இலங்கை அணி 7 விக்­கெட்­டுக்­களால் அபா­ர­மாக வெற்றி பெற்­றது.

இதற்கு முன் இந்­திய அணி­யுடன் மோதிய போட்­டியில் பாகிஸ்தான் அணி போராட்­ட­மின்றி சர­ண­டைந்­தது.இந்­நி­லையில் இன்­றைய போட்­டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரை­யி­று­திக்கு நுழையும் முனைப்­புடன் இலங்கை அணி இன்று களம் காண்­கின்­றது.

இலங்கை அணியின் துடுப்­பாட் டம் சிறப்­பா­கவே அமைந்­துள்­ளது.ஆனால் இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் அதி­ர­டி­யாக ஆடி 47 ஓட்­டங்­களை விளா­சிய குசல் ஜனித் பெரேரா காயம் காரணமாக வெளியேற அவருக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்­றைய போட்­டியில் பாகிஸ்­தானை வீழ்த்தி அரை­யி­று­திக்கு முன்­னே­றுமா இலங்கை என்­பதை பொறுத்­தி­ருந்து பார்ப்போம்

http://www.virakesari.lk/article/20810

  • தொடங்கியவர்

'என்ன செய்தாலும் தோல்வி துரத்துகிறது...' - நொந்து கொண்ட டிவில்லியர்ஸ்

 

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் தோல்வியடைந்த பின், தென்னாப்பிரிக்கா அணியின் ஆட்டம்குறித்து பேசியுள்ளார், அந்த அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ்.

 

 

 

தென்னாப்பிரிக்கா, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி ஆரம்பிக்கும்போது, சர்வதேச அணிகள் தர வரிசையில் முதலிடத்தில் இருந்தது. மிகவும் வலுவான பேட்டிங் மற்றும் பௌலிங் பலம் பொருந்திய டீமுடன்தான் சாம்பியன்ஸ் ட்ராபியை அந்த அணி ஆரம்பித்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிர்ச்சிகரமான வகையில் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது தென்னாப்பிரிக்கா. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியாக பெரிய தொடர்களின் முக்கியமான போட்டிகளில் தோல்வியடைவதுகுறித்து அந்த அணியின் கேப்டன் டிவிலியர்ஸ், 'எங்கள் அணிக்கு அனைத்து திறமையும் அதிகமாகவே உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நெட் பயிற்சிகளைக் கடுமையாக மேற்கொள்கிறோம். மிகக் கடுமையான பிற பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம். ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக தோல்வி துரத்துகிறது.' என்று கவலைததும்பப் பேசியுள்ளார். 

 

இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, தலைமைப் பதவியிலிருந்து விலகுவீர்களா என்று கேள்வி எழுப்பியபோது டிவில்லியர்ஸ், 'அப்படி நான் விலக மாட்டேன். நான் ஒரு நல்ல கேப்டன். இந்த அணியை என்னால் முன்னோக்கி வழிநடத்த முடியும். இந்த அணிக்கு தலைமை வகித்து உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். நான் கேப்டன் பொறுப்பில் மிகவும் விருப்பப்பட்டே இருக்கிறேன்.' என்று கூறியுள்ளார். 

http://www.vikatan.com/news/sports/91992-things-like-that-just-keep-happening-ab-de-villiers-after-match-loss-against-india.html

  • தொடங்கியவர்

வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் மனம் புண்படும் வகையில் பேசுவதும் அவசியம்: கோலி

 

 
VIRATKOHLI_3174136f.jpg
 
 
 

"வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் மனம் புண்படும் வகையில் பேசுவதும் அவசியம்" என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.

கிரிக்கெட் போட்டிகளில் பின்னடைவு ஏற்படும்போதெல்லாம் அதை சீர்செய்ய கேப்டன்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் சில முறைகளை கையாள்கின்றனர். அந்தவகையில் இந்திய கேப்டன் விராட் கோலியின் தோல்வியில் இருந்து மீண்டெழுவதற்கான தாரக மந்திரம் மிகவும் எளிமையானது என்றே கூறவேண்டும். "வெற்றி பெற வேண்டுமானால் சில நேரங்களில் மனம் புண்படும் வகையில் பேசுவதும் அவசியம்" எனக் கூறுகிறார் கோலி.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தோல்வி கோலியை சுயபரிசோதனை செய்துகொள்ள உந்தியுள்ளது.

அதன் வெளிப்பாடகவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோலி கேப்டன் பதவி குறித்து சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.

பேட்டியில் விராட் கோலி, "நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். சிலநேரங்களில் மனம் புண்படும் என்று தெரிந்தாலும்கூட சில விஷயங்களை சொல்லியே ஆக வேண்டும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருவரும் என்ன தவறு செய்தார்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இது எனக்கும் பொருந்தும். பட்டியலிடப்பட்ட தவறுகளை திருத்துவதை சவாலாக ஏற்றுக்கொண்டு நம்மை நிரூபிக்க வேண்டும். அதற்காகத்தான் கோடிக்கணக்கான மக்களில் நாம் தேர்வு செய்யப்பட்டு இங்கு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

நாட்டுக்காக இதை நீங்கள் செய்தே ஆகவேண்டும். ஒரு தவறில் இருந்து மீண்டெழுவதில் சிறப்பாக செயல்படவேண்டும். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்க முடியாது. இது ஏதோ ஒருசில வீரர்களுக்கான அறிவுறுத்தல் அல்ல. அனைத்து வீரர்களிடமும் இதை வலியுறுத்துகிறோம். அனைவருமே நன்கு ஒத்துழைக்கின்றனர். இன்றைய போட்டி அணியின் சிறப்பான வெளிப்படுத்ததல் என்றே சொல்வேன்.

கேப்டனாக இருப்பதற்கு மதிப்பீடு செய்வதில் நேர்மையாக இருத்தல் மட்டும் போதாது. மனிதவள மேலாண்மைத் திறனும் தேவை. யாராவது ஒரு குறிப்பிட்ட நபரை மட்டுமே தொந்தரவு செய்யாமல் மனித வளத்தை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

சில நேரங்களில் மனம் புண்படும் வகையில் பேசுவதும் அவசியமே. ஆனால், அதற்காக ஒரே நபரையே குறிவைத்து தொந்தரவு செய்வதும்கூடாது. ஏனெனில் இங்கு விளையாடும் அனைவரும் சர்வதேச வீரர்கள். அவர்களுடன் எப்படி பேச வேண்டும், அவர்களை எப்படி அணுக வேண்டும் அவர்களுடன் எதை விவாதிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்குமே சுய உந்துதல் இருக்கும். ஒவ்வொருவருக்குமே எதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்; அணிக்கு தன்னிடம் இருந்து என்னமாதிரியான பங்களிப்பு தேவைப்படுகிறது என்பது தெரியும். அவர்கள் தேவையான அளவு ஊக்கம் பெற்றிருக்கின்றனர். அவ்வப்போது ஏற்படும் சில பின்னடைவுகளை ஓரணியாக நாங்களே சீர் செய்து கொள்கிறோம். அதற்காகத் தான் கடினமான பயிற்சியை மேற்கொள்கிறோம். அந்தப் பயிற்சி இக்கட்டான சூழலில் எங்களுக்கு கை கொடுக்கிறது.

இலங்கையுடனான தோல்வி மன உறுதியை நிச்சயம் நொறுக்கியிருக்கும் அத்தகைய தோல்விக்குப் பின் அமைதியாக சலனமற்று இருப்பது எளிதல்ல. ஆனால், அணியினர் அத்தகைய அமைதியை கடைபிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி.

ஒரு கேப்டனாக நான் முழுமையாக மன சாந்தியடைந்துவிடவில்லை. எனக்கு எந்தப் பிரச்சினையுமே ஏற்படவில்லை எனக் கூறமாட்டேன். அணியை சீர்படுத்த முயற்சித்தேன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அணியினர் அதற்கேற்ப நடந்துகொண்டனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா பெற்றுள்ள வெற்றி அணியின் மிகவும் முழுமையான செயல்திறனின் வெளிப்பாடு.

ஒரு பெரிய போட்டியை எதிர்கொள்ள தீட்டிய திட்டத்தின்படி இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியதில் எனக்கு பெருமகிழ்ச்சி. தென் ஆப்பிரிக்கா போன்ற அணிக்கு எதிரான விளையாட்டில் இத்தகைய பந்துவீச்சு நம்பிக்கையை அதிகரிக்கிறது. இந்த பந்துவீச்சு ஏற்படுத்தியுள்ள நம்பிக்கை எங்கள் அனைவரிடமும் பரவியிருக்கிறது. இதே நம்பிக்கையை அரையிறுதிக்கும் எடுத்துச் செல்ல முயற்சிக்கிறோம்" என்றார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற க்ரூப் பி பிரிவு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கிட்டத்தட்ட காலிறுதி போல அமைந்த இந்த ஆட்டத்தின் வெற்றியால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஜூன் 15 அன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

http://tamil.thehindu.com/sports/வெற்றி-பெற-வேண்டுமானால்-சில-நேரங்களில்-மனம்-புண்படும்-வகையில்-பேசுவதும்-அவசியம்-கோலி/article9725136.ece?homepage=true

  • தொடங்கியவர்

குசல் ஜனித் பெரேரா நாடு திரும்பினார்

இந்திய அணிக்கிடையிலான போட்டியின் போது உபாதைக்குள்ளான இலங்கை அணியின் துடுப்பாட்டவீரர் குசல் ஜனித் பெரேரா நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Perera-123.jpg

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை குழு “பி” யில் இடம்பெற்ற இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியின் போது துடுப்பபெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 44 ஓட்டங்களைப்பெற்றபோது உபாதை காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

 

இந்நிலையில் அவரின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக தனஞ்சய டி சில்வா அணில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் குசல் ஜனித் பெரேரா நாடுதிரும்பியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணிக்கிடையிலான குறித்த போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20817

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.