Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களத்தை மெருகூட்ட வாசகர்களின் பரிந்துரைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னைப் பொறுத்தவரைக்கும் புலம் என்பது தற்போது இருக்குமிடம்.புலம் எனும் சொல் ஒருகாலத்தில் பறவைகளின் புலம் பெயருதலுக்காக பாவிக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது மனிதருக்கு தேவைப்படுகின்றளவிற்கு புலம் என்ற சொல் அவசியமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

LIFCO TAMIL-TAMIL-ENGLISH Dictionary இப்படிப் போட்டிருக்கு..

புலம்: (1) வயல், field. (2) இடம், place. (3) திக்கு, direction. (4) இந்திரியம், sense; sense organ. (5) அறிவு, knowledge. (6) துப்பு, clue. (7) நூல், treatise. (8) வேதம், the Vedas.

இவற்றில் இடம் ஒன்றுதான் இந்த விவாதத்திற்குப் பொருத்தமானது.

ஆகவே புலம்பெயர்தல் என்பது இடம்பெயர்தலைக் குறித்திருக்கலாம்.. இடமானது பிறந்த இடமாகக் கருதப்படலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

LIFCO TAMIL-TAMIL-ENGLISH Dictionary இப்படிப் போட்டிருக்கு..

புலம்: (1) வயல், field. (2) இடம், place. (3) திக்கு, direction. (4) இந்திரியம், sense; sense organ. (5) அறிவு, knowledge. (6) துப்பு, clue. (7) நூல், treatise. (8) வேதம், the Vedas.

இவற்றில் இடம் ஒன்றுதான் இந்த விவாதத்திற்குப் பொருத்தமானது.

ஆகவே புலம்பெயர்தல் என்பது இடம்பெயர்தலைக் குறித்திருக்கலாம்.. இடமானது பிறந்த இடமாகக் கருதப்படலாம்..

தகவலுக்கு நன்றி கிருபன்.

புலம் என்பது இருக்கும் இடத்தையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. எனவே அது ஈழத்தையும் குறிக்கலாம், லண்டனையும் குறிக்கலாம். ஆக, புலம் என்ற சொல் வெளிநாடுகளில் வாழ்வோர் இருக்கும் இடங்களினை எல்லாம் பொதுவாக குறிப்பதற்கு பாவிப்பது பொருத்தமற்றதே. வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர் களைக்குறிக்க "புலம்பெயர்ந்தோர்" என்ற அழகான சொல் இருக்கும் அதே வேளை, இந்த இடங்களை எல்லாம் பொதுவாக குறிக்க ஒரு சொல் தமிழில் உள்ளதா என்பதனை அறிய வேண்டும் (இது வரை புலம் என்று பாவித்தார்கள், அது பொருத்தமற்றது என்பது தெரிகிறது).

தாயகத்திற்கு எதிர்ச்சொல் என்ன பேயகமா? :( :( :o:unsure: :unsure: :unsure: :unsure: :unsure: :unsure:

வேறகம்

வேற்றகம்

வெளியகம்

??????

ஆய்வு தொடரட்டும். பார்ப்போம். எல்லோரும் உங்கள் கருத்துக்களை தவறாது தெரிவியுங்கள்.

Edited by balapandithar

செய்திகளுக்கும் செய்தி அலசல்களிற்கும் வேறு வேறு பகுதிகள் ஆரம்பிக்கிறது வேலையை கூட்டும்?

ஒவ்வொரு செய்திப் பதிவிற்கும் அலசல்களை பதிய அனுமதி அளித்தால் போதும். வேறு மூலங்கள், சம்பந்தப்பட்ட செய்திகளையும் அதிலே இணைத்தால் பொருத்தமாக இருக்கும். இதையே 2 வேறு பகுதியில் பிரித்து போட்டால் இங்கு வெட்டி ஒட்டுவதற்கு பயன் இருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளுக்கும் செய்தி அலசல்களிற்கும் வேறு வேறு பகுதிகள் ஆரம்பிக்கிறது வேலையை கூட்டும்?

ஒவ்வொரு செய்திப் பதிவிற்கும் அலசல்களை பதிய அனுமதி அளித்தால் போதும். வேறு மூலங்கள், சம்பந்தப்பட்ட செய்திகளையும் அதிலே இணைத்தால் பொருத்தமாக இருக்கும். இதையே 2 வேறு பகுதியில் பிரித்து போட்டால் இங்கு வெட்டி ஒட்டுவதற்கு பயன் இருக்காது.

நீங்கள் சொல்வது போல ஒரே ஒரு செய்திக்களம் இருந்தால்

1) விவாதத்திற்குரிய செய்திகளை மட்டும் ஒட்டுவதானால், அதை சில தகுதியுள்ள அங்கத்தவர்களே (மட்டுநிறுத்துனர்) செய்ய முடியும்.

2) செய்திகளை தேடி ஒட்டவேண்டியவர்கள் மட்டுநிறுத்துனர்களே - இதனால் அவர்கள் அதிக நேரம் செலவிட வேண்டிவரும்

3) செய்திகளின் பன்முகத் தன்மை (diversity) குறைவடையலாம் (இணையத்தில் 3500 பேர் செய்தி சேகரிப்பதற்கும், ஒரு 10 அல்லது 100 மட்டுநிறுத்துனர் சேகரிப்பதற்கும் வித்தியாசமுள்ளது)

4) மட்டுநிறுத்துனர்களை அதிகரித்தால் தான் செய்திகளின் பன்முகத்தன்மையை கூட்டலாம் என்ற நிலை வரும் போது மட்டுநிறுத்துனர்களை அதிகரிக்க நிர்வாகம் விரும்பாது - இது அவர்களுக்கு நிர்வாகத் தலையிடியைக் கொடுக்கலாம்.

5) பல ஒட்டும்படை வீரர்கள் வேலையிழக்க நேரிடலாம் - இது அவர்கள் விரக்தியடைந்து தற்கொலை செய்ய (யாழ்களத்தை விட்டோடுதல்) வழிவகுக்கலாம்

"செய்திகள் தமிழீழம்", "செய்திகள் உலகம்" , "செய்தி அலசல்" ஆகிய பகுதிகளிருந்தால்

1) யாழ்களம் வழமையான ஒரு செய்திவழங்கும் இடமாகவும் தொழிற்பட முடியும். இது விருந்தினர் எண்ணிக்கையை குறையவிடாது தடுக்கும்.

2) மட்டுநிறுத்துனர்களின் வேலை பெரும்பாலும் "செய்திகள் தமிழீழம்", "செய்திகள் உலகம்" பகுதிகளிலிருந்து அலசலுக்குரிய செய்திகளை "செய்தி அலசல்" பகுதிக்கு மாற்றுவது மட்டுமே. எனவே அவர்களின் வேலை இலகு.

3) குறைந்த எண்ணிக்கையான மட்டுநிறுத்துனர் போதும் - நிர்வாகத்திற்கு நல்ல செய்தி.

4) செய்திகளின் பன்முகத்தன்மை கூடும்.

மேற்சொன்ன காரணிகளைக் கருத்தில்கொண்டே அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டது. உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

Edited by balapandithar

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தள நிர்வாகத்தினர் அவர்கட்கு வணக்கம்,

முதலில் உங்களது இந்த சிந்தனைக்கு எனது பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால் செய்தியை ஒலியமைப்பில் உருவாக்கினீர்கள் என்றால் நல்லாக இருக்கும்.

பாலபண்டிதர்,

யாழ்களத்தின் உறுப்பினர்கள் சொந்தமாக சேகரித்த அல்லது யாழ்களம் ஒரு செய்திச் சேவையை ஆரம்பித்து அதன் செய்தியாளர்கள் செய்திகளை சேகரித்து அனுப்பினால் தான் இங்கு தனியே செய்திகளை வழங்க என்று ஒரு பிரிவு தேவை.

இங்கு இரண்டும் நடக்கவில்லை. வெறுமனே பல்வேறு இடங்களில் கிடைக்கப்படும் அவதானிக்கப்பட வேண்டிய விவாதத்திற்குரிய, விமர்சனத்திற்குரிய, விளக்கங்கள் தரப்படவேண்டிய கேள்விகள் கேட்கப்பட வேண்டிய செய்திகள் கண்ணோட்டங்கள் ஆய்வுகள் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறம். அதற்குரிய பதில்கள் விமர்சனங்களும் அதே பகுதியில் வருவது பொருத்தமாக இருக்கும்.

மற்றும்படி இதற்கு விசேட மடத்துறுத்தினர் என்று எவரையும் பார்க்கவில்லை. புதுத் தலைப்புகளை ஆரம்பிக்க ஒரு அங்கத்துவ நிலை, பதில்கள் விமர்சனங்கள் கேள்விகள் என்று ஆரம்பிக்கப்பட்டவற்றில் பதிவுகளை மேற்கொள்ள இன்னொரு அங்கத்துவ நிலை. 2 ஆவது அங்கத்துவ நிலை 1 ஆவதன் subset ஆக இருக்கும். 2 இல் இருந்து 1 இற்கு காலப் போக்கில் மாற்றப்படலாம் புதியவர்கள்.

தற்போதய advance அங்கத்துவ நிலையில் இருந்து தெரிவு செய்யப்படவர்களே மேற் கூறிய 2 இற்கும் உள்வாங்கப்பட வேண்டும். அதில் உள்வாங்கப்பட்டவர்கள் குப்பை கொட்டினால் வெளியேற்றப்படலாம் என்று இருந்தால் சரி.

யாழ்களம் செய்திச் சேவை வழங்குகிறது என்பது தவறு. இதைத்தான் கண்ணை மூடிக் கொண்டு வெட்டி ஒட்டுபவர்களும் மொழிபெயர்ப்பு செய்பவர்களும் செய்வதாக நினைக்கிறார்கள். யாழ் அடிப்படையில் ஒரு கருத்துக்களம். செய்தியை உருவாக்க மற்றும் காவக் கூடிய வட்டத்திற்கு வெளியில் இருக்கும் சாதாரணமானவர்கள் தமது கருத்துக்கள் விமர்சனங்கள் கேள்விகளை விளக்கங்களை வைக்கும் இடமாக ஆனால் அதையே முன்னுதாரணமாக தேசியத்திற்கு பலம்சேர்க்கும் முறையில் நடந்து காட்டினால் போதும் தானே?

Edited by kurukaalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலை போவான்,

உங்கள் கருத்துக்களை ஏற்று பரிந்துரைகளில் மாற்றங்கள் செய்துள்ளேன்.

அனைவரினதும் கருத்துக்களை வேண்டுகிறேன்.

குறிப்பாக, சிவப்பிலுள்ள, 5) ஐப் பற்றிய உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை நீக்கிவிடலாம்

நான் குறிப்பிடும் " செய்தி ஆய்வு" பிரிவுக்கு கட்டாயம் active மட்டுநிறுத்தினர்கள் அவசியம் தேவை.

இப்பகுதிக்கு மட்டுநிறுத்தினராக நிச்சயமாக நியமிக்கப் பட கூடாதவர் என நான் நினைப்பது

1். குறுக்காலபோவான்

2.நெடுக்காலபோவான்

3.கிருபன்

4.தல

5.வினித்

6.நாரதர்

7.தூயவன்

8.சாணக்கியன்

9.மாப்பிள்ளை

10.பாலபண்டிதர்

இந்த செய்தி ஆய்வுப்பிரிவின் தலைவராக சமாதானத்தை போடலாமா? :P

யாழ்களத்தில் எம் மண்ணிற்காய் எம் இலட்சியங்களுக்காய் போராடி வீரமரணமெய்தும் மாவீர தெய்வங்களுக்கு ஒரு தனியான இடம் நிச்சயமாய் வேண்டும். அதில் அவர்களுக்கு எம் அஞ்சலிகளையும் எம் துயரங்களையும் பகிர்ந்து கொள்ள இடமளிக்கப்படல் வேண்டும்.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

நாம் எமது உணர்வுகளை எப்போதும் உள்ளது போலவே வெளிப்படுத்த முடியாது. ஒரு civilized society யிற்கு அது அழகல்ல. மாவீரர்களை ஏன் மற்றவர்களோடு புதைப்பதில்லை? அவர்கள் ஒருபடி மேலானவர்கள் என்பதால் தானே? துயர்பகிர்வு/நினைவு கூறல் பகுதியில் "தேன்கூடு வலைத்திரட்டிகளின் நிறுவனர் சாகரன்" இன் அறிவித்தலும் உள்ளது. மாவீரர்களினதும் உள்ளது.

மற்றது இது ஒரு திறந்த விவாதக்களம், யாரும் வந்து பார்கலாம். அப்படி வெளியாட்கள் வரும் போது மாவீரர்களுக்கு நாங்கள் தரும் மரியாதையை நினைத்து பயபக்தி வரவேண்டும்.

மாவீரர்களுக்கான அறிவ்வித்தலில் யாராவது தமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால், அவர்கள் அதை ஒரு கவிதையாகவோ அல்லது ஒரு பந்தியாகவோ எழுதி நிர்வாகிக்ளுக்கு அனுப்பலாம். அதன் தரத்தைப் பொறுத்து நிர்வாகிகள் அதை பிரசுரிக்கலாம்.

யாழ்களத்தில் எம் மண்ணிற்காய் எம் இலட்சியங்களுக்காய் போராடி வீரமரணமெய்தும் மாவீர தெய்வங்களுக்கு ஒரு தனியான இடம் நிச்சயமாய் வேண்டும். அதில் அவர்களுக்கு எம் அஞ்சலிகளையும் எம் துயரங்களையும் பகிர்ந்து கொள்ள இடமளிக்கப்படல் வேண்டும்.

ஈழத்திலிருந்து

ஜானா

நாம் வீரவணக்கம், கண்ணீர் அஞ்சலி என்று இனி எழுதக்கூடாதாமே? வெறும் வீரவணக்கச் செய்திகளை மட்டும்தான் நாம் வாசிக்க கூடியதாய் இருக்க முடியுமாம் என்று கூறுகிறார்கள்! இதைப்பற்றி ஈழத்தில் உள்ள தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் வீரவணக்கம், கண்ணீர் அஞ்சலி என்று இனி எழுதக்கூடாதாமே? வெறும் வீரவணக்கச் செய்திகளை மட்டும்தான் நாம் வாசிக்க கூடியதாய் இருக்க முடியுமாம் என்று கூறுகிறார்கள்! இதைப்பற்றி ஈழத்தில் உள்ள தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? :o

தனிய "வீரவணக்கங்கள்" என்று எழுதுவது பார்க்க கொஞ்சம் அந்தரமாக இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து. ஒரு கொஞ்சம் கூட ரைம் எடுத்து (செல்வன் சீரியலிலிருந்து :o ) ஒரு கவிதையோ, உணர்வுகளினை கொட்டும் வரிகளோ எழுதிப் போட்டால் அந்தப்பகுதி கொஞ்சம் தரமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று (பெப்ரவரி 28) பரிந்துரைகள் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டன.

"உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அங்கு நடைபெற்ற கருத்தாடல்களைத் தொடர்ந்து அவதானித்தே வந்திருந்தோம். உடனடியாக இல்லாதுவிடினும் 2-3 வாரங்களில் சிறு மாற்றங்களைக் களத்தில் கொண்டு வர எண்ணியுள்ளோம். அப்போது இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்கின்றோம்"

என்ற பதில் கிடைத்துள்ளது.

நன்றி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் என்று சொல்வது வெளிநாடுகளைமட்டும் குறிக்கப்பயன் படுத்தப்படுவதை தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் அவதானித்தேன். இதன்படி, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளில் கடைசி பகுதியை

(சிறுசிறு மாற்றங்கள் என இருந்தது) அகற்றிவிட்டேன்.

தாயகத்தை குறிக்க தளம் என்று பயன்படுத்துகிறார்கள்.

தளம் <----> புலம் எதிர்ச்சொற்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் அழகான சொல். பலவித அர்த்தங்களை கொண்ட போதிலும், புலம் பெயர்ந்தவர் என்ற கருத்தில் பார்க்கும் பட்சத்தில், இளம்தலைமுறையினரை கருத்தில் கொள்வது மிக மிக அவசியமாக படுகிறது.

ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு இந்த சொல் எத்துனை தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.