Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலமத்தை கொண்டுவருவதற்கு கடும் முயற்சி : மகிந்த குற்றச்சாட்டு

Featured Replies

சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலமத்தை கொண்டுவருவதற்கு கடும் முயற்சி : மகிந்த குற்றச்சாட்டு

 

 

(ஆர்.யசி)

mahinda.jpg

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நபர்களை யுத்த குற்றவாளிகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் உரிமையை வழங்கும் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. 

புலம்பெயர் அமைப்புகளினதும் சர்வதேச நாடுகளின் தேவைக்கு அமைய எம்மை தண்டிக்க முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். 

காணாமல்போனோர் தொடர்பிலான காரியாலையம் உருவாக்கப்பட்டமையும் எமக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். 

கம்பகா மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

அரசியல் தலைமைத்துவம் மற்றும் முப்படை தலைமைத்துவதை பலிகொடுக்கும் வகையிலும் எமது படையினரை தண்டிக்கும் குற்றங்களை முன்வைக்கும் நீதி பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் இப்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்ற பொறிமுறை ஒன்றை உருவாக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவர அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. 

இந்த நீதிமன்றத்தில் முன்வைக்கும் எந்தவொரு மனுவையும் அதேபோல் உலகில் எந்தவொரு நாட்டில் இருந்தும் முன்வைக்கும் குற்றங்கள் தொடர்பிலான அறிக்கையையும், புலம்பெயர் அமைப்புக்களின் மூலம் முன்வைக்கப்படும் போர்க்குற்ற கடிதங்களை எந்தவித தடைகளும் இன்று விசாரிக்கும் சட்ட மூலம் உருவாக்கப்பட்ட முயற்சித்து வருகின்றனர். 

இந்த சட்டமூலத்தின் மூலம் எந்தவொரு நாட்டில் இருந்தும் இலங்கை இராணுவத்தை விசாரிக்க கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் எந்தவித அனுமதியும் இன்றி எமது இராணுவத்தை உரிய நாடுகளின் விசாரணைக்கு அனுப்ப முடியும் என்ற வகையில் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டு வருகின்றது. 

ரோம உடன்படிக்கை செய்யவில்லை என பிரதமர் தெரிவிக்கின்றனர். அதேபோல் யுத்த குற்றத்தின் பிரகாரம் எவரையும் தண்டிக்க இடமளிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர். 

ரோம உடன்படிக்கையில் கைச்சாத்திடாத போதிலும் எமது ஒருவரை அங்கு பிரதிநிதியாக்கி அவர் மூலமாக எமது இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கும் பாதையை இவர்கள் உருவாக்கி வருகின்றனர். இத்தோடு முடிவடையவில்லை.  இங்கு காணமல் ஆகப்பட்டோர் தொடர்பிலான காரியாலயம் ஒன்று உருவாக்கப்பட பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் எமது அதிஷ்டம் இன்னும் அந்த உடன்படிக்கையில் ஜனாதிபதி கைச்சாத்திடவில்லை. ஆனால் இந்த காரியாளையத்தின் மூலம் என்னால் ஒருவரது உறவினர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டால் ஆனால் அந்த நபர் வேறு ஒரு நாட்டில் உயிருடன்  உள்ளார் என்பதை நான் அறிந்து அதற்கான சாட்சியங்களை முன்வைத்தாளும் குற்றம் சுமதியவரின் அனுமதி இன்றி எனது வாதம் விசாரணைக்கு எடுக்கப்டாடது என்ற நியதிக்கு அமைய இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

யுத்தத்தை முன்னெடுத்த தலைமைகள், அதற்கு கட்டளையிட்ட இராணுவ தலைமைகள் மற்றும் போராடிய எமது இராணுவத்தை பழிவாங்கவே அரசாங்கம் இந்த நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றது. எவரதும் அனுமதி இல்லாது இந்த நடவடிக்கைளை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை அமைதியான வகையில் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்த எம்மைத்தான் இன்று போர் குற்றவாளிகள் என்ற பெயரில் சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. 

இன்று சர்வதேச நாடுகளுடனான அரச சந்திப்புகளில் இலங்கை இராணுவம் தொடர்பில் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அவற்றை நிவர்த்தி செய்து உண்மையான கருத்துக்களை தெரிவிக்க இன்று எவரும் இல்லை. இந்த ஆட்சி முடிவுக்குள் எமது இராணுவம் தண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல் பொது எதிரணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவ்வாறான  எந்தவொரு உடன்படிக்கையும் எம்மிடம் இல்லை. என்னால் அதை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/19331

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பாராளுமன்றத்துக்குள்ள இருப்பதே குடும்பத்தை காப்பாத்த தான். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.