Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி –

Featured Replies

ஊர்காவற்துறையில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் மயக்க மருந்து விசிறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி –

 

jaffna-rounup_CI.jpg
ஊர்காவற்துறை பகுதியில் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,  வீட்டில் தனித்திருந்த பெண்ணை மயக்க மருந்து விசிறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வேளை ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, நயப்புடைக்கப்பட்ட பின்னர் காவல்துறையினரிடம்  ஒப்படைக்கபட்டார்.

குறித்த சந்தேக நபர்  மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் எனவும், தற்போது ஊர்காவற்துறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மான பணியில் ஈடுபட்டு வருபவர் எனவும் , குறித்த நபர் காவல்துறை சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் ,  ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் புகுந்த சந்தேக நபர் அங்கு தனித்திருந்த 18 வயதுடைய யுவதி தூக்கத்தில் இருந்த வேளை அவரது வாயை கைகளினால் பொத்தியவாறு அவர் மீது மயக்க மருந்தை விசிறியுள்ளார்.

அவ்வேளை சுதாகரித்த யுவதி சந்தேக நபரின் பிடியில் இருந்து திமிறி கூக்குரல் எழுப்பியுள்ளார். யுவதியின் கூக்குரலை கேட்ட அயலவர்கள் திரண்டு சந்தேக நபரை மடக்கி பிடித்துள்ளனர். அதன் பின்னர் சந்தேக நபரை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து முறையான கவனிப்பின் பின்னர் , ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் சந்தேக நபரை கையளித்தனர்.

அதனை அடுத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை சந்தேக நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கமாறு நீதிவான் உத்தரவு இட்டுள்ளார்.

https://globaltamilnews.net/archives/24890

16 hours ago, நவீனன் said:

ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் சந்தேக நபரை கையளித்தனர்.

இதுபோன்ற காடையர் கும்பலின் தோழர்களான சிங்கள-போலீஸ் பயங்கரவாதிகளிடம் கையளித்து எந்த நீதியும் கிடைக்காது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.