Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குப்பை மலையை அகற்றுவதற்கு ‘3 ஆர்’ முறை

Featured Replies

குப்பை மலையை அகற்றுவதற்கு ‘3 ஆர்’ முறை
 

article_1493047123-aa.jpgமீதொட்டமுல்ல குப்பை மலையை அப்புறப்படுத்துவதற்கு, குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால யோசனைகள் அடங்கிய பரிந்துரைகளை, ஜப்பானிய நிபுணர்குழு கையளித்துள்ளது.  

Reduce -குறைத்தல், Reuse -மறுபயன்பாடு மற்றும் Recycle  - மீள்சுழற்சி ஆகிய, 3 ஆர் (R) பரிந்துரை மிகவும் முக்கியமானது என்றும் அந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.  

மீதொட்டமுல்ல, குப்பைமலை சரிந்து அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பான் அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட நிபுணர்குழு, அந்த குப்பைமலையில், பல்வேறான மட்டங்களில், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.  

அந்தச் சோதனைகளின் பின்னர், அந்த நிபுணர் குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அதன் பிரதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நேற்று (24) கையளிக்கப்பட்டது. 

ஜனாதிபதியிடம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்தும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அலரிமாளிகையில் வைத்தும் அவ்வறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டது.  

நிபுணர் குழுவின் தலைவரான மிற்சுடேக் நுமஹடாவினால் அறிக்கை கையளிக்கப்பட்டதுடன், விளக்கப்பட காட்சியளிக்கை மூலம் தமது பரிந்துரைகளையும் அந்த நிபுணர் குழுவினர் முன்வைத்தனர். 

குறுகியகால நடவடிக்கையாக குப்பையை நிலைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 

‘பருவமழைக்கு முன்னர், குப்பை மேட்டின் வடிவம் ஒழுங்காக்கப்பட்டு, அது பொலித்தீனால் மூடப்பட வேண்டும். குப்பை மேடாக அல்லாமல் தரையுடன் சமாந்தரமாகக் கொட்டப்பட வேண்டும்’ எனவும் அவர் கூறினார். 

குறைத்தல், மறுபயன்பாடு, மீள்சுழற்சி ஆகிய நீண்டகால நடவடிக்கைகள் மூலம் குப்பைமலையை அகற்றுவதற்கான பரிந்துரைகளையும் நிபுணர் குழுவினர் முன்வைத்தனர். 

குறுகிய காலத்துக்குள் விரிவான ஆய்வை மேற்கொண்ட குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் பிரதான பிரச்சினையான திண்மக்கழிவகற்றலுக்கு ஜப்பானின் நிபுணத்துவம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

குப்பைமலையின், அளவை படிப்படியாகக் குறைத்து மீள்சுழற்சி, மின்சக்தி உற்பத்தி மற்றும் இயற்கை உர உற்பத்திக்காகவும் பயன்படுத்துவது நீண்டகால விதந்துரையாக முன்வைக்கப்பட்டது.  

இவ்வனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர், மிகவும் குறுகிய காலத்தினுள் நாட்டுக்கு வருகைதந்து விரிவான ஆய்யை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தமைக்காக நிபுணர்கள் குழுவுக்கும், ஜப்பானிய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.  

ஜப்பானிய மக்களும் குப்பைக்கு, 1960ஆம் ஆண்டில் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜப்பானிடமிருக்கும் சிறந்த அனுபவங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாகுமென அங்கு கருத்துத் தெரிவித்த ஜப்பானியப் பிரதிநிதிகளின் தலைவர் குறிப்பிட்டார். 

மனித அவலமாக இருந்த மீதொட்டமுல்ல அனர்த்தம், இப்பொழுது அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

அத்துடன், இந்தப் பிரச்சினைக்கான தேவையாக உள்ள நீடித்த தீர்வினை வழங்குவதற்கான ஆதரவை ஜப்பானிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

ஜப்பானிய மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்கம். 

1. மீதொட்டமுல்லயிலுள்ள அவ்விடத்தை மதிப்பீடு செய்தல். 

2. குப்பை மலைச் சரிவுக்குச் சாத்தியமான காரணம். 

3. அவ்விடத்தின் பாதுகாப்பை முகாமை செய்தல். 

4. நீண்டகால, குறுகியகால உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள். 

5. பின்வரும், இலங்கை அரசாங்க அதிகார பீடங்களுடன் தொழில்நுட்ப கருத்துகளைப் பரிமாறுதல்: 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு. 

6. பிலியந்தலை கரடியான குப்பை மீள்சுழற்சி இடம்பெறும் இடத்தை பார்வையிடல் 

தொழில்நுட்பப் பரிந்துரைகள்: மீதொட்டமுல்லைக்கான குறுகியகாலப் பரிந்துரைகள். 

குறுகியகால நடவடிக்கைகள்: பாதுகாப்பு முகாமைத்துவம் மற்றும் இரண்டாம் கட்ட அனர்த்தத்தைத் தடுத்தல். 

1. மழைவீழ்ச்சி அடிப்படையிலான எச்சரிக்கை முறைமை முக்கியம். 

2. குவியலின் வடிவத்தை குறுகிய காலத்தில் பேணுதல். 

3. கழிவுத் தட்டுகளின் வடிவத்தை மாற்ற வேண்டாம். மேற்பார்வைச் சுட்டிகள் யாவும் குவியலின் உறுதிப்பாட்டை, இந்தத் தட்டுகளே பேணுவதாகக் காட்டியுள்ளன. இதற்குக் காலம் எடுக்கும். 

தொழில்நுட்பப் பரிந்துரைகள்: மீதொட்டமுல்லைக்கான நடுத்தர காலப் பரிந்துரைகள். 

நடுத்தரகால ஏற்பாடுகள்: அனைத்தையும் அடக்கிய வகையில் இந்த இடத்தின் உறுதிப்பாட்டை பேணுதல். 

1. வாயுக் கட்டுப்பாட்டு மற்றும் நீர் வடிகான். 

2. leachate கட்டுப்பாடும் பதப்படுத்தலும். 

3. குவியல் மண்ணின் பௌதிக இயல்பு மதிப்பீடு. 

4. குவியலின் வடிவத்தை உறுதியான சரிவுக்குக் கொண்டுவருதல். 

தொழில்நுட்பப் பரிந்துரைகள்: நடுத்தர, நீண்ட கால ஏற்பாடுகள். 

எமது அனுபவப்படி நிலம் நிரப்பும் இடத்தை அமைப்பதுடன், மேலும் அவசியமானவை.  

1. கழிவுகளை வகைப்படி பிரித் தெடுத்தல்.  

2. கழிவு எரித்தல் போன்ற இடைக்கால முறையை அறிமுகம் செய்தல்.  

3. 3 R (குறைத்தல், மீளப் பயன்படுத்தல், மீள் சுழற்சி செய்தல்) 

திண்மக் கழிவு முகாமைத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்ளல். 

4. பொதுமக்கள் விழிப்புணர்வு மக்களுடன் கலந்து பேசல். 

- See more at: http://www.tamilmirror.lk/195379/க-ப-ப-மல-ய-அகற-ற-வதற-க-ஆர-ம-ற-#sthash.9QdvZoz6.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

மீதொட்டமுல்லயில் இருந்து 300 வீடுகளை அகற்ற வேண்டியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவிப்பு

 


மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்து இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றன.

இராணுவத்தினர் இன்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டதுடன் குப்பைமேடு மீண்டும் சரிந்து விழாமல் இருக்கும் வகையில் விசேட திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கொலன்னாவ நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தங்கியுள்ளதுடன் களஞ்சியசாலையை புனரமைக்கும் பணிகள் இன்றும் இடம்பெற்றன.

மக்கள் தங்கியிருக்கக்கூடிய வகையில் இந்த களஞ்சியசாலை புனரமைக்கப்பட்டுள்ளதுடன் முதல் கட்டத்தில் 26 குடும்பங்கள் தங்கவைக்கப்படவுள்ளதுடன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை மீதொட்டமுல்ல அபாய வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்தாக கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.

அவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் வரை இந்தக் கொடுப்பணவை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர இது தொடர்பில் பருத்து தெரிவிக்கையில்….

அபாய வலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டிய வீடுகளை அடையாளம் கண்டுவருகின்றோம். குறிப்பாக அவ்விடத்திலிருந்து சுமார் 300 விடுகளை அகற்ற வேண்டும் அத்துடன் வீடுகளை இழந்த மக்களுக்கு அவர்களின் உடமைகளுக்கான இழப்பீடுகளை வழங்கவும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம். வீட்டு உபகரணங்கள் முழுமையாக சேதமடைந்திருந்தால் இரண்டு 250,000 ரூபா வழங்குகின்றோம். விருப்பமானவர்களுக்கு அரசாங்கத்தின் மாடி வீடொன்றும் வழங்கப்படும்.

இதேவேளை கொலன்னாவை ராகுல வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவர்களை டென்ஸ் சில்வா வித்தியாலயத்தில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு 100 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் சோமவங்ச தெரிவித்தார்.

ராகுல வித்தியாலயத்தின் ஆசிரியர்களையும் அதிபரையும் டெரன்ஸ் டி சில்வா வித்தியாலயத்தில் சேர்த்துக்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவர் ரவீந்திர உதயசாந்த இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்திருந்தார்.

http://newsfirst.lk/tamil/2017/04/மீதொட்டமுல்லயில்-இருந்த/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.