Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் ‘வெடிப்பு’களுக்கும் விடுதலைப்புலிகள் காரணமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ‘வெடிப்பு’களுக்கும் விடுதலைப்புலிகள் காரணமா?

எந்தவொரு சம்பவம் இடம்பெற்றாலும் அதை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டுவது இலங்கை அரசியலில் ஒரு மரபாகவே மாறிவிட்டது. ஜ.தே.க ஆட்சியின் போது சரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின் போதும் சரி இதுதான் வழக்கம்.

மங்கள சமரவீர, அநுரா பண்டாரநாயக்க அணியின் நடவடிக்கையின் பின்னணியில் புலிகளே இருப்பதாகவும் அவர்களின் திட்டப்படியே இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது அரச தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும்.

கடந்த மாதம் வரை வெளிவிவகார அமைச்சராக எந்த அரசில் மங்களசமரவீர அங்கம் வகித்து சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்தாரே – அதே அரசுதான் இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது.

எங்காவது தாக்குதல், குண்டு வெடிப்பு, படுகொலை இடம்பெற்றால்தான் புலிகள் மீது குற்றச்சாட்டு அடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது அரசியல் வெடிப்புகளுக்கு புலிகளைக் குற்றம் சாட்டும் புதியபோக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பதவி நீக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர இந்தியாவிற்குச் சென்றிருந்தபோது புலிகள் தொடர்பான காட்டமான கருத்துக்களை அவர் வெளியிட்டிருந்தார்.

அது மட்டுமன்றி புலிகளின் முக்கிய தாக்குதல் இலக்காக அமைச்சர் மங்கள சமரவீர இருப்பதாக சொல்லி அவருக்கு பாதுகாப்பை அதிகரித்தது அரசாங்கம் தான். ஆனால், கடைசியில் அவரையே புலிகளுடன் தொடர்புபடுத்தி அரசால் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

அவசர காலச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறியமை பயங்கரவாதத்துக்கு துணை போனதான செயல் என்ற ஜனாதிபதி சொல்கின்ற அதேவேளை எதிர்கட்சியான ஜ.தே.கவோ இலங்கையில் அரச பயங்கரவாதம் உச்சக் கட்டத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஜ.தே.க கொறடா ஜோசப் மைக்கல் பெரோரா - இலங்கையில் அரச பயங்கரவாதம் இருப்பதாகவும் - ஜனநாயகக் கட்சிகளை அழித்தொழிக்க அரசு முனைவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அரச பயங்கரவாதம் தொடர்பாக தமிழர் தரப்புக்களில் இருந்து நீண்ட காலமாகவே குற்றச் சாட்டுக்கள் இருந்து வருகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாகவே மறுத்தன.

ஆனால் இப்போது தமக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருக்கின்றபோது தான், அரச பயங்கரவாதம் பற்றி எதிர்க்கட்சி நாடாளுமன்றத்திலேயே குரல் எழுப்பியிருக்கின்றது.

இதற்கிடையில் இலங்கையில் நடைபெற்று வரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக அரசுக்கு எதிரான பிரசாரங்களில் இறக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலும் 2004 முதல் 2007 வரையிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்களில் முக்கிய பதவிகளை அலங்கரித்தவர் மங்கள சமரவீர.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், படுகொலைகள் குறித்து இவர் வாய் திறக்காமல் இருந்தவர்.

சந்திரிக்காவின் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் எதுவும் இடம்பெறவில்லை என இவரால் அடித்துச் சொல்ல முடியாது. யுனெஸ்கோவின் ஆலோசகர் பதவி கைநழுவிப் போனதே சந்திரிக்காவுக்கு எதிராக இருந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களால்தான்.

ஆட்கடத்தல், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் தொடர்பான விடயங்களை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலனுக்காகப் பயன்படுத்துகின்றார்களே தவிர இத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்படுவோரின் நலனுக்காக செயற்படுவது அரிது என்பதே யதார்த்தம்.

எனினும் இதே அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள் சமரவீர ஆட்கடத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்களை சர்வதேசம் இலகுவில் உதாசீனம் செய்துவிடவும் மாட்டாது.

அநுராவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் மட்டுமன்றி பெருமளவில் இடம்பெறும் அதுவும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் இப்போது சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ந்தும் கடும் விசனம் வெளியிட்டு வருகின்றன. இத்தகையதொரு சூழலில் அரச பயங்கரவாதம் குறித்த ஜ.தே.க வின் குற்றச்சாட்டும் அநுரா-மங்களவின் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும், இலங்கை அரசுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியவை.

இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்திலேயே சிரேஷ்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் வாகனத்தை, இன்னொரு அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த பொலிஸார் எட்டி உதைத்து ஏசி விட்டுச் சென்றதான சம்பவம் தொடர்பான சர்ச்சை எழுந்திருந்தது.

ஒரு சிரேஷ்ட அமைச்சருக்கே இந்தக் கதி என்றால் சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும் என அவர் நாடாளுமன்றத்தில் அழாத குறையாக முறையிட்டிருந்தார்.

சாதாரண மக்களின் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது என்பது இப்போது அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட வேண்டியதொன்றாகியிருக்கின்ற

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசர காலச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறியமை பயங்கரவாதத்துக்கு துணை போனதான செயல் என்ற ஜனாதிபதி சொல்கின்ற அதேவேளை எதிர்கட்சியான ஜ.தே.கவோ இலங்கையில் அரச பயங்கரவாதம் உச்சக் கட்டத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஜ.தே.க கொறடா ஜோசப் மைக்கல் பெரோரா - இலங்கையில் அரச பயங்கரவாதம் இருப்பதாகவும் - ஜனநாயகக் கட்சிகளை அழித்தொழிக்க அரசு முனைவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அரச பயங்கரவாதம் தொடர்பாக தமிழர் தரப்புக்களில் இருந்து நீண்ட காலமாகவே குற்றச் சாட்டுக்கள் இருந்து வருகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாகவே மறுத்தன.

ஆனால் இப்போது தமக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருக்கின்றபோது தான், அரச பயங்கரவாதம் பற்றி எதிர்க்கட்சி நாடாளுமன்றத்திலேயே குரல் எழுப்பியிருக்கின்றது.

இலங்கை அரச பயங்கரவாதம் பற்றி விக்கிபீடியாவில் ஒரு பதிவு உள்ளது. அதற்கு வலுச் சேரக்கும் முகமாக மேற்ப்டி செய்தியை ஆதாரங்களுடன் சேர்க்கவேண்டும்.

என்ன நினைக்கிறீர்கள்?

இலங்கை அரச பயங்கரவாதத்தை அம்பலப் படுத்த வேறு என்ன செய்யலாம்?

தொடரும் கொலைகளை தடுக்கும் பலம் ஊடகங்களிடம் இருக்கு

அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் .......

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜயா மீண்டும் நான் தான்

இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் தமிழர்கள் நெருக்கமாக வாழுகின்ற எந்த நாட்டிலாவது ஏதாவது அசம்பாவிதங்கள் அல்லது அரசியல் மாற்றங்கள் எங்கள் சமூகத்தில் நடந்துவிட்டால் முதலில் பெரியவை பக்கம்தான் திசை திரும்புகின்றன. இதற்கு பல காரணங்கள் சொல்லலாம் இதில் ஒன்று நாங்கள் பெருமைப்படவேண்டியது அதாவது தமிழ் மக்கள் மத்தியில் பெரியவைக்குள்ள செல்வாக்கு சம்பத்தப்பட்டது.

அடுத்ததாக ஒவ்வொரு தமிழ் மகனும் கவலைப்படக்கூடியதும் சிந்தித்து செயல்படவேண்டியதுமான முக்கிய விடயம் என்னவென்றால் தமிழீழ விடுதலைக்கான எதிர் பரப்புரை. இந்த பரப்புரைக்கு சார்பாகவும் ஆதரவாகவும் பல சிதறுண்ட உதிரிகள் இணைந்து செயல்படுகின்றன இவைகள் தான் இலங்கையில் ஆகட்டும் அல்லது வேறு எந்த புலம்பெயர்ந்த நாடுகளிலாகட்டும் கட்சி உடைவு அல்லது அரசாங்க முறிவுகளிற்கும் தழிழீழ விடுதலை அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி அமைப்புக்கும் விடுதலைக்கும் தமிழ் இனத்திற்கும் ஒரு இக்கட்டான நெருக்கடியை உருவாக்கு கின்றனர் என்பது தான் உண்மை. இந்த நிலைமைகளை புரிந்து ஒவ்வொரு தமிழ் மகனும் விழிப்பாக இருக்கவேனும் என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகிறேன்

இப்படி கவலைப்பட்டு மகிந்தவுக்கு மாரடைப்பு வரப்போகுது அப்பலோவில ரூம் ஒண்டு போட்டு வச்சிருக்கிறாராம் உண்மையா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசர காலச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறியமை பயங்கரவாதத்துக்கு துணை போனதான செயல் என்ற ஜனாதிபதி சொல்கின்ற அதேவேளை எதிர்கட்சியான ஜ.தே.கவோ இலங்கையில் அரச பயங்கரவாதம் உச்சக் கட்டத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய ஜ.தே.க கொறடா ஜோசப் மைக்கல் பெரோரா - இலங்கையில் அரச பயங்கரவாதம் இருப்பதாகவும் - ஜனநாயகக் கட்சிகளை அழித்தொழிக்க அரசு முனைவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அரச பயங்கரவாதம் தொடர்பாக தமிழர் தரப்புக்களில் இருந்து நீண்ட காலமாகவே குற்றச் சாட்டுக்கள் இருந்து வருகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாகவே மறுத்தன.

ஆனால் இப்போது தமக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருக்கின்றபோது தான், அரச பயங்கரவாதம் பற்றி எதிர்க்கட்சி நாடாளுமன்றத்திலேயே குரல் எழுப்பியிருக்கின்றது.

அரச பயங்கரவாதம் பற்றிய மேலுள்ள செய்திபற்றி எங்காவது நம்பத்தகுந்த ஆங்கில இதழ்களில் (BBC, Yahoo, Reuters, or some Sri Lankan English dailies) இருக்கிறதா? இருந்தால் யாராவது தாருங்கள் விக்கிபீடியாவில் update செய்துவிடுவோம்.

அன்புமிக்க வன்னிமைத்தன் கனபேரை பார்த்து விட்டேன். உங்கள் கருத்து எங்கேயோ இடிக்குதே எப்படி. தெரிந்தோ தெரியாமலோ பணக்காரன், மேல்யாதி, ஏழை, கீழ் யாதி, என்று எமது மக்களுக்குள் புழ்ங்கிப்போன ஒரு வெட்கக்கேடான ஒரு பிரச்சனை. அதனால் தானோ என்னவோ உலகம் பூரா வெவ்வேறு இனங்கள் தனித்துவத்துடன் சொந்த நாட்டில வாழேக்க நாம் சுதந்திரமான் காற்றை சுவாசித்த படி கார் கூட தாயாரிக்கும் அளவுக்கு வெளிநாட்டுக்காரனோடு அப்படி தொடர்புகள் உள்ள சிங்களவனோடு 50 வருடங்கள் பின் தங்கி நிற்கின்றோம். ஆக இலங்கையில் தான் இந்த நிலைமை. நீங்க எங்க இருக்கிறீர்களோ, என்ன வேலை செய்கிறீர்களோ என்பதல்ல பிரச்சனை எப்படி மனிதனை மனிதன் மதிக்கவேண்டும் என்ற அந்த முதல் தத்துவத்தினை விளங்க வேண்டும். ஒருவன் தன் திறமையினால் முன்னேறிக்கொண்டு வந்து பெரிய வீடு கட்டி பிள்ளைகளை ஸ்கொலசிப்பில படிக்க பிராய்சித்தம் பண்ணி கஸ்டப்பட்டு அவன் முன்னேறேக்க நான் போய் எடேய் மவனே அங்க பார் எங்கட புலிகள் முல்லைத்திவினை அடித்துவிட்டார்கள் எங்கட பொடியள், பெட்டயள் அங்க போராடி தமிழீழம் வேண்டி சாகேக்க நீங்க உங்க பிள்ளைகளை பெரிய பள்ளிக்குடத்தில விட்டு படிப்பிக்கிறியள் நல்லா உழைக்கிறீயள் என்று போய் கேட்டா பிழை. அவனை அனுகிறமாதிரி அனுகி காரீயம் பார்க்க்கத்தெரியாத படியால் தான் எமது தலைவரின் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக கனடாவில் இன்று இருக்கிறது. ஆக எமது தலைவரின் தலைமை பிழை அல்ல எமக்கு கதைக்க பேச் தெரியாது. இப்ப நான் எழுதிறது கனபேருக்கு பிடிக்காது. முந்திஎண்டா கிழிப்பீனம். இப்ப என்னை கண்டு கொள்ளுரதே இல்லை. நானெண்ட படியால் என்ன தான் அடி பிடி குத்துப்பட்டாளும் இவகளும் எம் கூடப்பிறவாத தமிழ்ச்சனம் என்று பார்ப்பதால் நான் அவர்கள் வர வேண்டாம் என்றாலும் வேறு பெயரில வ்ந்து நாய் மாதிரி நிப்பன், விருப்பம் எண்டா கதையுங்கோ அல்லாட்டி மவனே பொறன் எண்டு போயிரமாட்டன். துரும்பும் பல்லுக்குத்த உதவும் ஆகவே. எம்து அனுகு முறை மாற்றப்படவேண்டும். ஏழை பணக்காஅர வர்க்கத்தை உதறி எறிந்து விட்டு போராடி தமிழ்ழீழம் காணவும் முடியாது அதே நேரம் பணக்காரன் ரொம்ப நாட்களா ஏழையைச் சுரண்டி தமிழீழம் கணவும் முடியாது. ஆக வெளிநாட்டில வந்து நல்ல வேலையை எடுத்தவன் தான் பணக்காரன் என்று நினைத்து பேதலித்து எல்லாம் நிரந்தரம் என்பது என்னைப்போல நிரந்தரமாய் பணக்காரணாகவே பிறந்து ஏழைகளின் உண்மையான அன்பினை என் மனைவி மூலமாக அறிந்து இன்று எல்லோரும் மணிதர்கள் ஜாதி, பணக்காரன், மேலோன். கீழோன் என்பதுவே இல்லாத ஒரு சமுதாயத்துக்காக போராடும் ஒரு தலைவனுக்க்காஅ எதையும் செய்ய ஆசைப்ப்படுகிறேன். அப்படி வேலை செய்ய அனும்திக்கப்படாதவர்கள் பணக்காரன் எண்ற ஒரு காரணத்தால் ....அவன் வேறு திசையில் போக எத்தனிக்கின்றான். அவனை நாங்கள் அன்னியப்படுத்துகிறோம். இதுகள் எமக்கும் வெள்ளைக்கும் உள்ள வித்தியாசம். வெள்ளை எம்பேச்சை கேட்பான் ஏன் நாம் படித்த படிப்புக்காக அல்ல. அவனி நாம் மதிக்கிறோம். ஆகவே அவன் எங்களை மதிக்கிறான். இது தான் இன்று என் தலைவருக்கு கட்டாயம் தேவை. இயக்கப்பொருப்பாளராக நியமித்திருந்தால் சனம் எல்லாம் தேடி வர வைத்டிருக்கோணும். அப்படி ஒன்றுமே நடை பெற்றதாக என் 15 வாழ்க்கையில் அறிந்ததிலை.

உது யாருக்கு எழுதப்பட்ட அறிவுரை? வன்னி மைந்தனுக்கா அல்லது வல்வை மைந்தனுக்கா?

வன்னிமைந்தன் எழுதியதில் நான் குற்றம் காணவில்லை. அவர் சரியானதைத்தான் சொன்னார். ஒரே ஒரு இடி. தமிழர்கள் வெளிநாடுகளில் ஆதரவு குறைகிறது பிரச்சனை வருகுதோ இல்லையோ புலிகளைப் பற்றி ஒருவருமே வேலை நாட்களில் நினைப்பதுவுமில்லை ஆக இலங்கையில் என்ன நடக்குது என்று அறிவதே. பேத்டே பாட்டிகளில குடிக்கேக்க தான். அவர் கேட்பார். என்னவாம் புலிகள் அடிப்பீனமே என்று. இவர் இங்கால சொலுவார் அவன் ஆமி சாத்திறான் பாவம் சனம் தான் மிடிலில என்று சொல்ல..அவர் சொல்லுவார் அப்ப இவ(ர்)ங்கள் பின்ன ஏன் இந்த மணலாறு அனையைப்போய் அடைத்தவங்கள். பேசாம் இருந்திருந்தா பிரச்சனையை வெளிநாட்டுக்காரன் தீர்த்துவைத்து விட்டிருப்பான். உதுகள் தாங்களும் வாழேழாது எண்டு பொது சனத்துக்கும் அரிகண்டம் கொடுக்குது. இங்கையும் இவன் கனகேசன்ட பொடியன் வீடு வீடா ஏறி காசு கேட்கிறானாம் அவை வந்தவை அனா நான் இல்லை எண்டு நிண்டுகொண்டு பொய்சொல்லி அனுப்பிப்போட்டன்.

ஏன் இப்படி சனங்கள் கதைக்குது எதற்காக கதைக்குது. ஏன் முன்பொரு காலதில காசு இல்லாம் இருந்தவை படிச்சு இப்ப வசதியா இருக்கிறீனம். இந்த வசதி மனம் சரியில்லாட்டி போயிடும் என்பது தெரியாமல் ஏதேதோ தங்களுக்கும் போராட்டதுக்கும் சம்பந்தமே இல்லை என்ற மாதிரி கதைக்கிறீனம். தமிழீழ சன்ட்

அதற்குள்ள அவன் செல்வராசாவுக்கு புரோமசநாமே அவனை இனி பிடிக்கேலாது. எங்க அவனைக்கூப்பிடேலேயோ? அவன் விசரன் அவனை இந்தமுறை கூப்பிடேல.

இப்படி கதைப்பவர்களிடம் அண்ணை இறகு போடுங்கோ எண்டா போடாயினம் அப்ப என்ன வழி இவர்களை மடக்க. அவர்களிட்கு பின்னால திரிந்து மைதுனருக்கு எந்த பக்கத்தால உதவி செய்தா மனம் கசிவார் எண்டு பார்க்கோணும். ஒரு இறந்த வீடு அதற்கு செலவுகளுக்கு பணம் நான் குடுக்கிறன். தோளோடு தோள் நின்று அவரின் துக்கத்தில பங்குபற்றுறன் அவரின் இறுகிய மனம் இறங்கிவிடாதா. அதன் பின்பு அவருக்கு விளங்கும் உறவுகள் பணம் இருந்தாத்தான் வரும் இவன் கனேசனிட பொடியன் எல்லே வந்து நிண்டு எனக்கு எவ்வளவோ உதவி. அவன் முந்திவரேக்க எத்தனை தூரம் திருப்பி அனுப்பியிருப்பன். இப்படி ஒவ்வொரு ஏரியாவிலேயும் தமிழனில இருக்கிற குறைகளை தெரிந்தும் தெரியாதமாதிரி பிந்தொடர்ந்து

வேலை செய்திருந்தோமென்றால். இன்று வெளிநாடு புலிகளை வேண்டாம் எண்டு சொன்னாலே பெரிய புரட்சியெலோ நடந்திருக்கும். அப்படியொன்றும் நடக்கம இப்ப புலிகள் அங்க அடிக்கேல அவன் அதைச்செய்யேல. உவன் பிளேனில உளவு பார்க்கிறான். அது ஜெற் என் ஜினோ இல்லை புரொப்பலரோ எண்டு நாம் 22 ம் திகதி கணக்கு பார்க்கிறமே அங்க தலைவர் என்னவெல்லாமோ யோசித்திருப்பார். நம்ம பொடியள் அங்க பிச்சு வாங்கிப்போடுவாங்கள் வெளிநாட்டுத்தூதரங்களை எண்டு. அனா நாமோ அட சனத்தினை கூப்பிட இந்த தினமுரசில ஒரு முன்பக்கமா பெருசா ஒரு விளம்பரம் போடுங்கோ என்டு கேட்க பதில் ஒண்டு வந்ததே நீ சொல்லி நான் போடோனும் எண்டு இல்லை. விருப்பமெண்டா நீ ஒரு பேப்பரை தொடங்கி விளம்பரம் போடு என்று. அதுக்குப்பிறகு நான் விசர் புடிச்சு கண்டவன் நிண்டவன் எல்லாருக்கும் இதை சொல்ல பின்பு ஒரு கிழமைக்கு முதல் வந்தது கன சனம் பேப்பரை பாக்காமலேயே கொஞ்ச சந்தோட சிலர் விலாசம் காட்டி பஸ் புடிச்சு வந்தீனம்.கன சந்திற்கு பஸ் போறதே தெரியாது. அப்ப பாருங்களன் எப்படி தலைவர், நீங்கள் எதிர்பார்க்கிறீயள் எப்படி காரீயம் நடக்குது எண்டு. வேறொண்றுமிலை ஊர்ச்சோலி. பணம் வேற உழைக்கோணும். இதுதானே வாழ்க்கைக்கு தேவை பின்பு தானே தமிழீழம் சம்பந்தப்பட்டது எல்லாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.