Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

Featured Replies

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

 
 
பாகுபலி திரைப்படம் குறித்த சுவாரஸ்ய 10 தகவல்கள்படத்தின் காப்புரிமைBAAHUBALI

இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

•பாகுபலி 1 மற்றும் 2 இரண்டு பாகங்களின் மொத்த பட்ஜெட் தொகை 450 கோடி ரூபாய். முதல் பாகம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகிறது.

•இந்தியா முழுக்க சுமார் 6,500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது.

•பாகுபாலி 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் ஈட்டிவிட்டது.

•உலகளவில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பாகுபலி 2 வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

•இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பானிய, ஃபிரெஞ்சு மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

பாகுபலி திரைப்படம் குறித்த சுவாரஸ்ய 10 தகவல்கள்படத்தின் காப்புரிமைBAAHUBALI

•தெலுங்கு திரைப்படத்துறையில் 4K எச் டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும்.

•உலகளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தென்னிந்திய திரைப்படம் பாகுபலி 1.

•முதல் பாகம் வெளியான பிறகு பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஹேஷ்டேக்குகள், மீம்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாக வலம் வந்தன.

•இந்தியாவில் பிரபல காமிக் புத்தகமான அமர சித்ர கதைகள் மீதான ஈர்ப்பு பாகுபலி என்ற திரைப்படத்தை எடுக்க இயக்குநர் எஸ் எஸ் ராஜமெளலிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

•பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக தெலுங்கு நடிகர் பிரபாஸ் தன்னுடைய எடையை 120 கிலோவில் இருந்து 150 கிலோவாக கூட்டினார்.

http://www.bbc.com/tamil/india-39742927

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

 
 
 
படம் பாகுபலி
 
நடிகர்கள் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரோகிணி, நாசர்
 
இசை கீரவாணி
 
இயக்குனர் ராஜமெளலி
பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியிருக்கும் பாகுபலி - 2ஆம் பாகம், உண்மையில் முதல் பாகத்திற்கு முந்தைய கதையைச் சொல்கிறது. ஒரு வகையில் பார்த்தால் Prequel என்று சொல்லலாம்.

முதலாவது பாகத்தில், மகிழ்மதி தேசத்தின் அரசனாக வேண்டிய அமரேந்திர பாகுபலியை, அவனுக்கு விசுவாசமாக இருந்த கட்டப்பா கொல்கிறான். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான் என்ற கேள்விக்குப் பதிலாக விரியும் படம் அமரேந்திர பாகுபலியின் கதையைச் சொல்கிறது. சிவகாமியால் வளர்க்கப்படும் அமரேந்திரன், தாயின் சொல்லை மீறி தேவசேனாவை திருமணம் செய்வதால், பல்லாள தேவன் மகிழ்மதியின் அரசனாக முடிசூடப்படுகிறான். இருந்தும் மக்கள் ஆதரவு அமரேந்திரனுக்கே இருக்கிறது. எதிர்காலத்தில் தன் சிம்மாசனத்திற்கு ஆபத்து வராமல் இருக்க, ஒரு திட்டம் தீட்டுகிறான் பல்லாள தேவன். அதன்படியே அமரேந்திரன் கொல்லப்படுகிறான். முடிவில், பல்லாள தேவனை வென்று, தாயை மீட்பதோடு, மகிழ்மதியின் அரசனாகிறான் மகேரந்திர பாகுபலி.

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

பாகுபலியின் முதலாவது பாகத்தைப் பார்க்காவிட்டால்கூட, புரிந்துகொண்டு ரசிக்கும் வகையில் இந்த இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மகிழ்மதி நகரம், குந்தள தேசம் ஆகியவற்றின் நகர அமைப்பு, யுத்தக் காட்சிகள், எருமைகள் இழுத்துச் செல்லும் ரதம், உடைந்து சிதறும் பொற்சிலை, வில் சண்டை என முதல் பாகத்தைப் போலவே, இந்த பாகமும் சினிமா ரசிகர்களின் கண்களுக்கு விருந்துதான்.

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

முதல் பாகத்தில் வயதான பெண்ணாக அனுஷ்காவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்களுக்கு, இந்த பாகம் ஆறுதலாக இருக்கும். தேவசேனா - அமரேந்திர பாகுபலி இடையிலான முற்பகுதி காட்சிகள், சினிமா ரசிகர்களின் நெஞ்சில் இருந்து நீண்ட நாட்களுக்கு அழியாது. தேவசேனையின் பாத்திரத்தை அனுஷ்காவைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும் என்று எண்ண வைக்கின்றன இந்தக் காட்சிகள். பல இடங்களில் இவரது கம்பீரமான ஓவியங்கள் வந்துபோவது, ஒரு காப்பியத் தன்மையை இவரது பாத்திரத்திற்கு கொடுக்கிறது.

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

தந்தை - மகன் என இரு பாத்திரங்களில் நடித்திருக்கும் பிரபாஸ், பல்லாள தேவனாக வரும் ராணா, அவரது தந்தையாகவரும் நாசர் ஆகியோர் முந்தைய பாகங்களிலும் வந்தவர்கள் என்பதால், புதிதாக ஆச்சரியப்படுத்தவில்லை.

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

முதல் பாகத்தையும் இரண்டாவது பாகத்தையும் இணைக்கும் புள்ளியான கட்டப்பாவாக வரும் சத்யராஜ், படம் நெடுக ஒரு நன்மையின் அடையாளமாக வந்துகொண்டேயிருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு.

39742927 - பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் காட்சியும் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருக்கும் பிரம்மாண்டமும் நுணுக்கமும் வண்ணக்கலவையும் பார்ப்பவர்களை அசரவைக்கிறது. எந்த இடத்திலும் தவறே இல்லாத ராஜமவுலியின் திரைக்கதை, படத்தின் மற்றுமொரு தூண். ஆனால், முதல் பாகத்தில் இருந்த ரசிக்க வைத்த பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை.

39742927 - பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

சிறந்த நடிகர்கள், திகைக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், துல்லியமான திரைக்கதை என பல ஆண்டுகளுக்கு நினைவுகூரத்தக்க படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் சற்றே நெருடலான அம்சம் அரண்மனையில் நடக்கும் சதிகள்தான். சிறுபிள்ளைத்தனமான திட்டங்களை பல்லாள தேவன் தீட்டுவதும், அதற்கு சிவகாமி, அமரேந்திரன் உள்ளிட்டவர்கள் பலியாவதும் படத்தின் பலவீனமான பகுதி. படத்தின் பிற்பகுதியில், பல்லாள தேவனும் மகேந்திரனும் மோதும் காட்சிகள் பிரம்மாண்டமானவை என்றாலும் சுமார் அரை மணி நேரம் அவை நீள்வது சற்றே அலுப்பைத் தருகின்றன.

39742927 - பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

ஆனால், இதையெல்லாம் மீறி இந்தப் படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான படம். இதிகாச பாணியிலான திரைப்படங்களை இந்தியாவிலும் உருவாக்கி, உலகம் முழுவதும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது இந்தப் படம். மேலும் பாகுபலியை திரையரங்கில் பார்ப்பதென்பது, ஒரு திரைப்படத்தை பார்ப்பதாக இல்லை, அனுபவிப்பது என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்.

http://www.bbc.com/tamil/india-39747501

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: பாகுபலி 2 - பெருமித சினிமா!

தன் வரலாறு அறிந்த இளைஞன் படையைத் திரட்டி, பழி தீர்த்து தலைவன் ஆகும் கதையே 'பாகுபலி 2'.

பங்காளிச் சண்டையில் அரியாசனத்தை இழந்து உயிரை விடுகிறார் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்). கணவர் இறந்ததும் தன் மகன் வருவான், பழி தீர்ப்பான், மகிழ்மதியை ஆள்வான் என சபதம் எடுக்கிறார் தேவசேனை (அனுஷ்கா). இந்த வரலாறு மகன் மகேந்திர பாகுபலிக்கு (பிரபாஸ்) தெரிய வருகிறது. அதற்குப் பிறகு எப்படி படைபலம் திரட்டுகிறார், பல்வாள்தேவனை (ராணா) எப்படி எதிர்கொள்கிறார், பகையை முடித்தாரா என திரைக்கதை விரிகிறது.

முதல் பாகத்தில் மிகப் பெரிய ட்விஸ்ட் வைத்து அடுத்த பாகத்துக்காக காத்திருக்க வைத்த விதத்திலும், அதை சரியாக சினிமா மொழியில் கச்சிதமாக வெளிப்படுத்திய விதத்திலும் இயக்குநர் ராஜமௌலி நிமிர்ந்து நிற்கிறார்.

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார், சிவகாமி ஏன் அந்தப் பச்சிளம் குழந்தையை ஆற்றில் தத்தளித்தபடி வந்து உயிர்த் தியாகம் செய்து காப்பாற்றுகிறார் என்பதே பாகுபலி முதல் பாகம் எழுப்பும் இரு முக்கிய கேள்விகள். அதற்கான பதிலை சூழலுடன் பொருந்துகிற மாதிரியும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இயக்குநர் ராஜமௌலி பதிவு செய்திருக்கிறார்.

பிரபாஸ் இரண்டு தோற்றங்களிலும் மிகச் சரியான பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடை, உடை, பாவனையில் காட்டும் கம்பீரம், பெண்மையை மதிக்கும் குணம், அறிவுரை சொல்லும் நிதானம், வாள் சுழற்றும் வீரம், வாக்கை காப்பாற்றப் போராடும் மன உறுதி, எதிர்த்து நிற்கும் துணிச்சல் என கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறார். மகன் பிரபாஸ் உணர்வுகளின் சிக்கலையும், விவேகத்தையும் வெளிப்படுத்துகிறார்.

தேவசேனை கதாபாத்திரத்தில் அனுஷ்கா வசீகரிக்கிறார். ரம்யா கிருஷ்ணனுடன் அரண்மனையில் பேசும் காட்சி, பிரபாஸிடம் கைதியாக வர மாட்டேன் என தன் ஆளுமையை நிறுவும் காட்சி, தனக்கு வேண்டிய பரிசை சொல்லும் காட்சி என கதாபாத்திரமாகவே மாறி நிற்கிறார்.

தன்னை எதிர்க்கும் பிரபாஸை ரம்யா கிருஷ்ணன் அணுகும் விதம், மகன் பிரபாஸ் களங்கமற்றவன் என உணரும் விதம் இரு விதமான பரிமாணங்களில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி மிளிர்கிறார்.

வழக்கமான கொம்பு சீவி விடும் கதாபாத்திரம்தான் என்றாலும் அதில் ராஜதந்திரத்துடன் செயல்படுவது, வஞ்சகத்துடன் அணுகுவது என நாசர் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார்.

கள்ளம் கபடமில்லாமல் பிரபாஸுடன் பழகுவது, அவர் காதலுக்கு உதவுவது, சூழ்ச்சி, சதித் திட்டம் என எதுவுமே செய்யாமல் கட்டளைக்குப் பணிவது, அதற்காக கலங்குவது என எல்லா தருணங்களிலும் பல பரிமாணங்கள் தாண்டி அநாயசமான நடிப்பில் சத்யராஜ் கவர்கிறார். ரம்யாகிருஷ்ணனை 'சிவகாமி' என பெயர் சொல்லி அழைக்கும் அந்த இடத்தில் சத்யராஜூக்கு கிடைக்கும் கரவொலிகள் கணக்கில் அடங்காது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் சத்யராஜூக்கு விருதுகள் நிச்சயம்.

பலம் பொருந்திய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ராணா நிறைவான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். குமார வர்மாவாக வரும் சுப்பாராஜூவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

தமன்னா, ரோகிணிக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை.

இதிகாசம், சரித்திரம் என்று கதைக்கான பின்னணியோ, சம்பவங்களோ நினைவூட்டுவதாக அல்லது தொடர்புபடுத்திக்கொள்வதாக இருந்தாலும் அதை ஒரு கதையாக வடிவமைத்து, திரைக்கதையாக செதுக்கி, நுட்பமாகவும் துல்லியமாகவும் திரைமொழியில் வெளிப்படுத்துவது சாதாரணமல்ல. அந்த விதத்தில் இயக்குநர் ராஜமௌலி சாதித்திருக்கிறார்.

ஒரு சாகச வீரனின் கதை என்று படத்தின் துவக்கத்திலேயே இயக்குநர் நிறுவுவது அவரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. ஒற்றை நபராக தேர் இழுப்பது என மக்கள் ரசனையை அத்தோடு நிற்க விடாமல், மதம் கொண்ட யானையை அடக்க செய்யும் முயற்சிகளும், அதற்கான துல்லியமான காட்சிப் பதிவுகளும் ஆச்சரியத்தை வரவழைக்கின்றன. பிரபாஸ் அம்பு எய்தும் சாகசம், அனுஷ்கா பிரபாஸ் தோள்களில் ஏறி படகில் ஏறும் லாவகம் உட்பட பல்வேறு அம்சங்கள் ரசனைக்குரியவை. சறுக்கல், சரிவு இல்லாமல் நேர்த்தியான நம்பகத்தன்மை வாய்ந்த திருப்பங்களுடன் திரைக்கதை பயணிக்கிறது.

செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், மரகதமணியின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. தேவையில்லாத ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வெங்கடேஸ்வர ராவ் செதுக்கி இருக்கிறார்.

ஆக்‌ஷன் படத்துக்கான சங்கதிகளை அப்படியே அள்ளி வந்து சண்டைக் காட்சிகளில் கொட்டியிருக்கிறார் பீட்டர் ஹெய்ன். சாபுசிரிலின் அரங்க அமைப்பும், கமலக் கண்ணனின் கிராபிக்ஸும் அசத்தல்.

திக் விஜயம் செய்வது, பட்டாபிஷேகம், போர் வியூகம், பெண்ணின் சபதம் என நுட்பமான பதிவுகள் அர்த்தமும் அழுத்தமும் மிக்கவை.

பட்டாபிஷேகத்தின் போது சத்யராஜ் எங்கே போனார், நாசரின் நிலைக்கான காரணம் என்ன, தமன்னாவின் வரலாறு ஆகியவற்றை போகிற போக்கில் காட்சிப்படுத்தியிருந்தாலோ அல்லது வசனமாக சொல்லியிருந்தாலோ இன்னும் நிறைவு பெற்றிருக்கும்.

இதை தவிர்த்துப் பார்த்தாலும் 'பாகுபலி 2' பெருமித சினிமாவாக ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/முதல்-பார்வை-பாகுபலி-2-பெருமித-சினிமா/article9670589.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

பாகுபலி-1 Vs பாகுபலி-2.... எது பெஸ்ட்? - பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி... சூப்பர்ப் சினிமா. அப்போ, பாகுபலி-2 எப்படி இருக்க வேண்டும்..? அதுவும் இரண்டு வருட எதிர்பார்ப்புக்குப் பின் படம் வெளியாகும்போது, எப்படி இருக்க வேண்டும்!? ‘எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?’ என்று நீங்கள் நினைத்த மாதிரியும், அதற்கு மேலுமாகக் கவர்கிறது படம். ஹாட்ஸ் ஆஃப் ராஜமெளலி அண்ட் டீம்! 

வழக்கமாக இது கதை, இதிது இப்படி இப்படி இருந்தது என்று சொல்வதை விட, பாகுபலி-2-வைக் கொஞ்சம் வேறுவிதமாக அலசுவோம்.

முதல் பாகம் Vs இரண்டாம் பாகம்!

 

பாகுபலி 2

முதல் பாகத்திற்கு தமிழில் இந்த அளவு எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கவில்லை. அக்கட தேசத்தில் அசால்ட் காட்டும் எஸ்.எஸ்.ராஜமௌலியை அதிகம் அறியாதவர்கள் ‘ஈய வெச்சே அப்படி ஒரு படம் குடுத்தவர்’ என்ற ஒரே ஒரு அடையாளத்தோடுதான் அணுகினார்கள். ஆனால் படத்தின் ட்ரீட்மென்ட் தந்த பிரமிப்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் அள்ளியது. படத்தையும், ராஜமௌலியையும் கொண்டாடினார்கள். முதல் பாகத்தின் க்ளைமாக்ஸ் ‘அச்சச்சோ... பாகுபலி சாகறானா.. அப்பறம்?’ என்று பதற்றப்பட வைத்தது.  

இரண்டாம் பாகம், அகில உலகத்துக்குமான எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தது. ப்ரமோஷன், மார்க்கெட்டிங் என்று எல்லாவிதத்திலும் எல்லா தரப்பினரையும் மனதில் வைத்து இறங்கினார்கள் படக்குழுவினர். இயக்குநரே எதிர்பார்க்காத வண்ணம் #WhyKattappaKilledBaahubali ட்ரெண்டிங் ஆனது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று மூன்று அம்புகளை, ஒரே வில்லில் பூட்டி வைத்து சக்ஸஸைக் குறிவைத்து இறங்கினர். ‘அதெப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அம்புகள் ஒரே வில்லில்?’ என்று கேட்பவர்களுக்கு.. இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் பதில் சொல்லியிருக்கார் பாஸ்!

அமரேந்திர பாகுபலி Vs மகேந்திர பாகுபலி

பிரபாஸ்

இரண்டுமே பிரபாஸ்தான். அப்பா, மகன். ரிவர்ஸாக முதலில் மகன், இரண்டாம் பாகம் அப்பா என்று  ஒரு சுவாரஸ்யம் கூட்டியிருப்பார் எஸ்.எஸ்.ராஜமௌலி. முதல்பாகத்தில் முழுவதும் மகன், மகேந்திர பாகுபலிதான். இந்த இரண்டாம் பாகத்தில், கட்டப்பா ஃப்ளாஷ்பேக் சொல்வதால் முழுக்க முழுக்க அப்பா அமரேந்திர பாகுபலியாக அள்ளுகிறார் ப்ரபாஸ். அதுவும் அந்த அறிமுகக் காட்சி... ஆஸம் கற்பனை! புகழும் பெருமையும் வரும்போதும், அவை இல்லாதபோதும் எப்போதுமே சலனமற்று இருக்கும் ஜென் முக பாவத்தை அருமையாகக் காட்டுகிறார் பிரபாஸ். முறுக்கேறிய அவர் உடலமைப்பு நம்புகிறபடியே இருக்கிறது. கதைப்படி சில காட்சிகளில் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கும்போதும் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். க்ளைமாக்ஸில் பல்வாள்தேவன் ராணா டகுபதியுடன் மோதும் காட்சிகளில் வலி, வெறி, வீரம் என்று சகல ஃபீலிங்ஸிலும் வெளுத்துக் கட்டுகிறார் பிரபாஸ். அனுஷ்காவை அத்தனை காதலோடு பார்ப்பதும் பிரபாஸ்தான், அம்மாவாகப் பாசத்துடன் பார்ப்பதும் பிரபாஸ்தான் என்பதை படம் முடிந்தபிறகுதான் உணரமுடிகிறது. அப்படி வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.

அனுஷ்கா Vs தமன்னா

அனுஷ்கா

முதல் பாகம் முழுவதும் தமன்னா என்றால் இரண்டாம் பாகம் அனுஷ்காவுக்கானது. ‘நான் சீனியராக்கும்’ என்று நடிப்பிலும் அழகிலும் கில்லியடித்திருக்கிறார் அழகி. படத்தில் ராஜமாதா சிவகாமியைக் கேள்வி கேட்கும் ஒரே கேரக்டரும் இவரே. அதை நம்பும்விதத்தில் கம்பீரம் காட்டியிருக்கிறார் அனுஷ்கா. அதே சமயம் கண்களில் காதல் காட்டுவதில் குறைவைக்கவில்லை. தமன்னாவுக்கு இதில் கெஸ்ட் ரோல்தான்.      

 

கட்டப்பா Vs பிங்களத்தேவன்

kattappa

சத்யராஜும் நாசரும். அனுபவ நடிப்பு என்பதற்கு லைவ் உதாரணங்களாக நடித்துத் தள்ளியிருக்கிறார்கள் இருவருமே. கிட்டத்தட்ட படத்தைத் தோள்மாற்றித் தாங்கிக் கொள்பவராக படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் சத்யராஜ். ஆரம்ப காட்சியில் நாசருக்கும், சத்யராஜுக்குமான வசனமோதல் காட்சி ஒன்றுண்டு. மதன்கார்க்கி வசனம். நாசரிடம் அவரை ஏன் மன்னனாக்கவில்லை என்பதற்கு ஒரு காரணம் சொல்வார் சத்யராஜ்.  அப்ளாஸ் அள்ளுகிறது. அந்தக் காட்சி முடிந்து சத்யராஜ் வெளியேற முற்பட, ‘ஒட்டுக்கேட்டாயா?’ என்பார் நாசர், அதற்கன பதிலும்தான்!      

வெறி, துரோகம், சூழ்ச்சி எல்லாமுமாய் நாசர் வலம்வர, அதற்கு நேரெதிராக விசுவாசத்தின் மொத்த உருவமாய் வலம்வருகிறார் சத்யராஜ். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் இவர்களை விடுத்து ஒருவரை நினைக்க முடியவில்லை. அப்புறம் ஒருவிஷயம்; கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது இருக்கட்டும், கட்டப்பா ஏன் பிங்களத்தேவனைக் கொல்லவில்லை?’

ராஜமாதா ரம்யாகிருஷ்ணன்! 

Ramya krishnan

படத்தின் அல்டிமேட் கதாபாத்திரமும், நடிப்பும் இவருடையதுதான். இவர் கட்டளையே சாசனம் என்றானபின், அந்த கம்பீரம் நடிப்பில் இருக்க வேண்டுமல்லவா? அது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது! அவரது குரலும் பெரிய ப்ளஸ். பாசத்துக்கும், ஆட்சிக்குமிடையே அவர் மனம் அலைபாயும்போது முகமும் அதற்கேற்ப பாவங்களை வெளிப்படுத்துகிறது.   

சரி, இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும்?  

இந்தியத் திரையுலகின் பெருமைமிகு படைப்புகளில் ஒன்றாக இப்படம் நிச்சயம் இடம்பிடிக்கும். பழகிய கதையாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு நிமிடங்களிலும் ஒரு உணர்வைக் கடத்துவதும், கிராபிக்ஸ் கற்பனைகளில் அவ்வளவு சுவாரஸ்யம் சேர்த்திருப்பதுமாக... ஆஸம்!   

Dot ஆரம்ப காட்சியில் ரம்யாகிருஷ்ணன் அடிதப்பாமல் நடக்க வேண்டும். ஆனால் யானை ஒன்றுக்கு மதம் பிடிக்கிறது, இரண்டையும் சமாளிக்கும் ஒரு விஷயத்தைச் செய்கிறார் பிரபாஸ்.   

 Dot அனுஷ்கா படகில் ஏறிச் செல்லும் காட்சி ஒன்றில், எதன்மீது ஏறிச் செல்கிறார் என்பது... கெத்து!

Dot அனுஷ்காவும், பிரபாஸும் மகிழ்மதிக்கு வரும் அந்த அன்னப்படகு அழகிய கற்பனை. தண்ணீரில் படகாகச் சென்று, வானத்தில் பறந்து மேகங்கள் குதிரைகளாக.. சபாஷ்!

Dot ஓப்பனிங் காட்சி போலவே, க்ளைமாக்ஸில் அனுஷ்கா அடிதப்பாமல் நடக்க இருக்கும்போதும் ஒரு தடை வருகிறது. அதற்கும் ஒரு வயலன்ட் கற்பனையில் தீர்வு தருகிறார்கள். 

Dot படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்ல... தலைகாட்டும் ஒவ்வொரு துணை கதாபாத்திரமும் சூழ்நிலையின் தன்மைக்கேற்ப உருக்கமும் மூர்க்கமுமாக அசர வைக்கிறார்கள். 

இப்படிப் பல காட்சிகள். போலவே, படத்தின் டீட்டெய்லிங். திரையில் ஒரு காட்சி ஓடும்போது, மையக் காட்சியத் தவிர்த்து எதைக் கவனித்தாலும் அதில் ஒரு டீட்டெய்லிங். அந்த பெர்ஃபெக்‌ஷன்.. ராஜமௌலியின் பெஸ்ட்

சில சுட்டிக்காட்டல்கள்!

Dot காதலிக்கும் பெண்ணைக் கவர ஹீரோ கோழையாக நடிக்கிறான் என்பது பல படங்களின் டெம்ப்ளேட் அல்லவா? இதிலுமா? 

Dot எதை எடுப்பது, எதை விடுவது, எப்படி நேரத்தைக் குறைப்பது என்று எடிட்டர் குழம்பியிருப்பது ஆங்காங்கே தெரிகிறது. சில காட்சிகளின் Ending  சட்டென்று முடிகிறது.

Dot பாடல்கள்.... இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்!  

 இடைவேளைக்கு முன் பரபர, விறுவிறுவென இருக்கும் படம்.... அதன் பின் சற்றே வேகம் குறைத்துக் கொள்கிறது   

எது எப்படியோ, இந்திய சினிமாவின் கதை சொல்லலையே வேறு தளத்துக்குக் கொண்டு சென்ற வகையில் பாகுபலி-2-வுக்கு சொல்லலாம் ஜெய் மகிழ்மதி! 

 

http://www.vikatan.com/cinema/movie-review/87862-baahubali-2-the-conclusion-review.html

பாகுபலி- 2 திரையில் மட்டுமே காண வேண்டிய பிரமாண்டம்  அதை எல்லாம் ஒன்லைன் பார்ப்பம்  என்டு இருந்தீங்க கொம்பியூட்டரேகாறிதுப்பும்

  உங்களின் பிள்ளைகளிற்காகவது தியேட்டரிற்கு கூட்டிட்டு போங்க விரிந்த கண் மூடாது ரசிப்பார்கள் 

 

 

பொன்னியின் செல்வனை ராஜமௌலியிடம் கொடுத்தால் 5 பாகமாகவே எடுத்து அதகளபடுத்துவார் :)

 

அனுஷ்காவின் மிடுக்கும் அழகும் குந்தவையை நினைவுபடுத்தியது ?

 

தேவசேனாவும் பாகுபலியும் பன்றி  வேட்டைக்கு செல்லும் காட்சி அப்படியே வந்தியத்தேவனும் ஆதித்தகரிகாலனும் வேட்டைக்கு சென்ற காட்சியை நினைவுபடுத்தியதுஇ (அந்த வேட்டையில் காட்டுப்பன்றி அவர்கள் இருவரையும்  தாக்கும் ஒரு காட்சி வருகிறது அதை ராஜமௌலி 

எப்படி எடுப்பார் என்று கற்பனை பண்ணி பார்க்கிறன் :)

 

சந்தேகமே வேண்டாம் பழுவேட்டரையருக்கு நம்ம கட்டப்பா சத்தியராஜ்  இருக்கவே இருக்கார்  :னு என்ன உடம்பு தான் கொஞ்சம் ஏத்தணும்

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வனை சிலர் எடுக்க முயற்சித்தார்கள் இதுவரை நடக்கவில்லை..... ஒருவேளை இன்றைய தொழில் நுட்பத்துடன் ஒரு பிரமாண்டத்துக்காக காத்திருக்கிறதோ என்னமோ....!  tw_blush:

  • தொடங்கியவர்

ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

 
201705071211568016_Baahubali-2-crosses-r
 
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்த முடியாத சாதனையை சாதனையை பெற்றுள்ளது. படம் வெளியான 6 நாட்களிலேயே ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

201705071211568016_baahubali-223-X._L_st

அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. தற்போது 9 நாட்களில் இந்த படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவிலேயே ரூ.1000 கோடியை எட்டிய முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. இனிமேல், இந்தியாவில் வெளிவரும் படங்கள்கூட இந்த சாதனையை எட்டுமா? என்பது சந்தேகம்தான். 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/07121155/1083962/Baahubali-2-crosses-rs-1000-crore.vpf

  • தொடங்கியவர்

'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொலை செய்தார்' என்பதை முன்பே கணித்த பலே கில்லாடி!

 

கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என பாகுபலி-2 வெளியாகும் முன்பே மிகச் சரியாக கணித்திருக்கிறார் சுஷாந்த் தஹால் என்ற இளைஞர். படம் பார்க்காதவர்கள் இதை படிப்பதை தவிர்க்கலாம்! ( Spoilers Ahead)

பாகுபலி

2015-ல் வெளியான பாகுபலி முதல் பாகத்தின் வெற்றியைவிட அது விட்டுச் சென்ற கேள்விதான் பாகுபலி-2க்கான விளம்பரம். அது 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்' என்பது தான். இந்தக் கேள்விக்கு விடைக்காணவே தற்போது வெளியாகியுள்ள பாகுபலி-2-ம் பாகத்தை முந்திக்கொண்டு பார்க்கிறார்கள் சினிமா ரசிகர்கள். அதன் விளைவாக 1000 கோடி வசூல் சாதனையையும் பாகுபலி படைத்துவிட்டது.

இதனிடையே பாகுபலி 2-ம் பாகம் வெளியாகும் முன்னரே ஏன் கட்டப்பா அப்படி செய்தார்? என சரியாக கணித்திருக்கிறார் சுஷாந்த் தஹால். கோரா இணையதளத்தில் அவரது பதிவில் 'ராஜ்ஜியத்தையும் தேவசேனாவையும் இழந்த பல்வாள் தேவன், சூழ்ச்சி செய்து சிவகாமி மூலமே பாகுபலியைக் கொள்ள கட்டப்பாவுக்கு உத்தரவிட்டிருக்கலாம்' என கணித்திருக்கிறார் அவர். அண்மையில் வெளியான பாகுபலி 2-ம் பாகத்தில் இவரின் கணிப்பு மிகச் சரியாக ஒத்துப்போயிருப்பது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

http://www.vikatan.com/news/cinema/88887-this-guy-predicted-why-kattappa-killed-bahubali-before-release.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.