Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்த எசமாடன் கேக்கட்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு.

நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வேலை பாக்குறா. என்னய மாரி நல்ல கலர்ரா ரெண்டு பசங்க. கறுப்புத்தா நைனா அள்கு… இந்தக் கசுமாலங்களுக்கு இன்னா தெர்யும்… செவப்பா பாச்சை மாரி இருக்கறதெல்லாம் அள்கா சொல்லு… ஆங் எங்க வுட்டேன்…?

அல்லாம் இந்தக் கக்கூசால வந்த வெனை நைனா…. ஒரு மன்சனுக்கு கட்ன பொண்டாட்டியால பிரச்னை வர்லாம். புள்ளைகுட்டியால பிரச்னை வர்லாம். அட… வேல பாக்குற எடத்ல பிரச்னை வர்லாம். கக்கூசால பிரச்னை வர்லாமா…? இந்த ஒலகத்துல யாரு கக்கூசுக்குப் போகல சொல்லு… எல்லாப் பயபுள்ளகளும் தலைல தூக்கி வைச்சு கரகாட்டம் போட்ற ஒலக அழகிகளுந்தா போறாங்க. நம்மள மாரி வக்கு வசதி இல்லாதவம் போனா தப்புங்கறாங்க…! இன்னா நா அந்த நாத்தம் புடிச்ச பயலுக மாரி வூட்டுக்குள்ளாற கக்கூஸ் போகல. நம்ம கன்ஸ்டரக்சன் சைடு பக்கத்ல ஒரு பட்டா நெலம் கெடக்கு. அத்த எந்தப் பொறம்போக்கு வாங்கிப் போட்டிச்சோ… அந்தப் பக்கமே தலையக் காட்றதில்ல. பில்டிங்கு கட்ற பன்னாடை குட்சைதான் போட்டுக் குட்த்திச்சு. தின்னு தின்னுப்புட்டு கழிக்கிறது எங்ஙனன்னு அந்த நாதாரிப் பயலுக்குத் தோணவே இல்ல பத்தியா…!

சர்தான்னுட்டு நம்ம பயபுள்ளகல்லாம் விடியறதுக்குள்ளாற அங்ஙன போயி கழிச்சிட்டு வந்துடறது வழக்கமாயிப் போச்சு. சும்மா சொல்லப்படாது நைனா…! கடல் வேற பக்கத்துல இருக்கா… காத்து பிச்சு ஒதறிக்கினு வரும். ஆளு ஒயரத்துல ரெண்டு மூணு ஆமணக்கஞ்செடி வேற அங்ஙன இருக்கு. அதைச் சுத்தி ரவுண்டு கட்டி இருந்துப்புடறது. இந்த தெரு நாய் இருக்குல்ல அது மட்டும் நம்மள சுத்திச் சுத்தி வராம இருந்திச்சுன்னா நல்லாருக்குமேன்னு நெனைச்சுக்குவேன். அப்றம் அதும் பழகிப் போச்சு. இப்பல்லாம் நாய் பக்கத்ல இல்லேன்னா ஒளுங்கா போமாட்டேங்குது. இதுல நம்ம பொண்ணுங்க வேற வாளியும் கையுமா போனாளுகன்னு வையி… லேசில எந்திரிக்க மாட்டாளுங்க. இவ அவனோட படுத்தா… அவென் இவளோட எந்திரிச்சான்னு ஒரே கும்மி. வேல பாக்குற அல்லாரும் போய்ட்டு வர்றதுக்குள்ற சொய்ங்குன்னு விடிஞ்சுரும். பால்காரன்,பேப்பர்காரன், தொப்பை கொறைக்க நடக்கிறவன் அவென் இவென்னு றோட்டு முச்சூடும் களேபரமா ஆய்ப்போய்டும். அதுக்கோசரம் பயந்துக்கிட்டு வர்தோ இல்லியோ காலங்காத்தால போயி ஒரு தபா குந்திக்கினு வர்றது….

இன்னாயா ஒங் கதை முச்சூடும் ஒரே கக்கூசு நாத்தமா இருக்கும் போல்ருக்குன்னு நீங்க சொல்றது பிரியுது. நம்ம பில்டிங்கு பக்கத்ல ஒரு பிளாட்டு இருக்கு. அல்லாரும் கார் வைச்சிக்னு…புசுபுசுன்னு இங்கிலிசிலை பேசிக்னு…நம்ம கமல்ஹாசன் ரேஞ்சுல இருப்பாங்கன்னு வைச்சுக்கயேன். கொஞ்சம் பக்கத்ல வா நைனா… அதுலயும் இந்தப் பொண்ணுங்க இருப்பாளுங்க பாரு… செம கலரு… செம பிகருங்க. அல்லாம் வெண்ணெய உருட்டி உருட்டி வாய்க்குள்ளாற எறிஞ்சுட்டிருப்பாளுகளோ என்னவோ… தொடற வெரல் வளுக்கிடுமோங்கற மாரி கும்முன்னு இருப்பாளுங்க. ஜீன்ஸ் தொப்பூளுக்குக் கீழை ரெண்டிஞ்சி எறங்கித்தான் நிக்கும். சர்ட்டுங்கற பேர்ல ஒண்ணு மாட்டிருப்பாளுங்க. அதென்னமோ இடுப்பை மறைக்கற வேலையெல்லாம் செய்யாது… ஒப்புக்கு இறுக்க்க்கமா ஒட்டிக்கிட்டிருக்கும். அப்டியே பாக்கறவன காலி பண்ணிடுவாளுக. எங்க பொண்ணுகளே தொறந்த வாய்ல எலையான் போற மாரி அவளுகள ‘ஆ’ன்னு பாப்பாளுங்க. யேண்டி அவ தலயப் பாத்தியா யேண்டி அவ காலப் பாத்தியான்னு பேன் பாக்கிறப்பல்லாம் பேசிக்குவாளுங்க.

ம்… அந்த பிளாட்டுல இருக்கற பேமானிங்களுக்கு நாங்க அந்த நெலத்ல கக்கூஸ் போறது பிடிக்கலன்னு வைச்சுக்க. நாத்தமடிக்குதாம். வூட்டுக்குள்றயே நாறுதாம். கக்கூஸ்னா நாறத்தாஞ் செய்யும். அவெங் கக்கூசு மட்டும் நாத்தமடிக்காதா… சாப்டப்றம் சென்ட்டையா குடிக்கிறாங்க… இவங்க மூத்ரம்லாம் பன்னீராவா போகுது… நாம பள்ளிக்கொடம்னு ஒரு மண்ணும் பாத்ததுல்ல தான். கிராமத்துல சத்துணவு போட்றாங்களேன்னு கெய்வி கொண்டுபோய் உட்டுட்டு வர பின்னாடியே ஓட்யாந்து வாய்க்கால்ல உழுந்து கொளப்பிக்கிட்டிருந்தவன்தான

தீவிர இலக்கியம் என்று அடிக்கடி பேசுகின்றீர்கள். கதை கொச்சைத்தமிழில் எழுதப்படுள்ளதே? கொச்சைத்தமிழில் எழுதுவதுதான் தீவிர இலக்கியமா? :icon_idea::rolleyes:<_<

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தம் சுகாதாரம் பேசப் பலர் வரப்போகின்றார்கள்.. <_< நாத்தம் பிடிச்ச பயலுவ எழுதின கதையை யாரைய்யா இலக்கியம் என்று கதைகள்/நாடகங்கள் பகுதிக்குள் விட்டது.. :lol: எப்படியாவது தீவிர இலக்கியம் என்ற பகுதிக்குள் கடாசிவிடுங்கள்.. ஊத்தையங்கள் அங்க போய் வாசிக்கட்டும்.. :icon_idea:

தீவிர இலக்கியம் என்று அடிக்கடி பேசுகின்றீர்கள். கதை கொச்சைத்தமிழில் எழுதப்படுள்ளதே? கொச்சைத்தமிழில் எழுதுவதுதான் தீவிர இலக்கியமா? :):):)

யோவ்.. மாப்பிளை.. இது கொச்சைத் தமிழ் அல்ல. வட்டாரத்தமிழ்.. :rolleyes: யாழ்ப்பாணத் தமிழ், தீவுப் பகுதித் தமிழ், வன்னித் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ் என்று இருக்கின்றன.. அவற்றைக் "கொச்சைத் தமிழ்" என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.. :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு எந்த வகையில் கொச்சைத் தமிழ் என்கிறீர்..

இத சென்னையின் ஒரு பிரிவினர் பேசும் மொழி வழக்கு. இது அவர்களுடைய தமிழ். இது கொச்சைத் தமிழ் என்றால் யாழ்ப்பாணத்தமிழ் மட்டக்களப்புத் தமிழ் எல்லாமே கொச்சை தான்.

உமக்குப் புரியாவிட்டால் கொச்சைத் தமிழ் என்றால்.. ஒரு சென்னை வாசிக்குப் புரியாத யாழ்ப்பாண மொழி வழக்கும் கொச்சைதான்.

சுத்தம் சுகாதாரம் பேசப் பலர் வரப்போகின்றார்கள்.. :( நாத்தம் பிடிச்ச பயலுவ எழுதின கதையை யாரைய்யா இலக்கியம் என்று கதைகள்/நாடகங்கள் பகுதிக்குள் விட்டது.. :o எப்படியாவது தீவிர இலக்கியம் என்ற பகுதிக்குள் கடாசிவிடுங்கள்.. ஊத்தையங்கள் அங்க போய் வாசிக்கட்டும்.. :lol:

யோவ்.. மாப்பிளை.. இது கொச்சைத் தமிழ் அல்ல. வட்டாரத்தமிழ்.. :lol: யாழ்ப்பாணத் தமிழ், தீவுப் பகுதித் தமிழ், வன்னித் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ் என்று இருக்கின்றன.. அவற்றைக் "கொச்சைத் தமிழ்" என்று கொச்சைப்படுத்த வேண்டாம்.. :angry:

:o :P :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நீர் கேட்ட விளக்கமெல்லாம் கிடைச்சிட்டுதே.. திருப்தியோ.. இல்லாட்டி இன்னொரு தடவை கதையை போடுவீரோ..

இனி வேறை கதையைப் போடும்.. ஒரே கதையை திரும்பத் திரும்ப வாசித்து போரடிக்குது. கிளு கிளுப்பு காட்சிகளுக்கு பஞ்சம் வைக்கமாட்டீர் எண்டு நம்புறன்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இலக்கியம் படைக்க விரும்பும் பலர் மற்றவர்களின் எழுத்துக்களைப் படிக்காமல் இருப்பது பிழையான விடயம்.. தமிழில் என்ன முயற்சிகள் நடைபெறுகின்றன, என்னென்ன விவாதிக்கப்படுகின்றன என்று தமிழ் இலக்கிய சூழலைப் பற்றி அறியாமல், தாம் தெரிந்தவற்றைக் கொண்டு மற்றவர்களின் எழுத்துக்களை அளவெடுப்பது எவ்வளவு முட்டாள்தனம்.. சாதாரண மட்டும் படித்த தமிழும் அதன்பின்னர் படிக்கும் மூன்றாம் தர ஏடுகளும்தான் தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தி நிற்பதாக நம்புவர்களுடன் வெட்டிப் பேச்சைத் தவிர வேறொன்றும் பேசமுடியாது! :lol:

:D என்ன காவடி ஆ யூ ஓல்ரைட்?? இந்தக்கதையை ஏற்கனவே சின்னக்குட்டி பெப்ரவரி 6 போஸ்ட் பண்ணீட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.