Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலத்தை காண்பிப்பதற்கு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்ட கட்சிகள்

Featured Replies

பலத்தை காண்பிப்பதற்கு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்ட கட்சிகள்

01-e3908e76f6c62a5afb7147442f42e7aa71e5c1b5.jpg

 

கொழும்பிலும் கண்டியிலும் கரைபுரண்ட மக்கள் வெள்ளம்
(நமது அலுவலக, பிராந்திய நிருபர்கள்)

தொழிலாளர் தினமான நேற்று தமது மக்கள் பலத்தை காண்பிக்கும் நோக்கில் பிரதான அரசி யல் கட்சிகள் உட்பட தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் என்பன கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டன.

அரசியல் கட்சிகள் மாபெரும் பேரணிகளை யும், பிரதான கூட்டங்களையும் நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் நடத்தியிருந்தன. அரசியல்  கட்சிகளின் பேரணிகளிலும் கூட்டங்களிலும் தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் என பல்வேறு 

 தரப்பினரும் பங்கேற்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நாடாளவிய ரீதியில் உள்ள தமது ஆதரவாளர்களை ஆயிரக்கணக்கான பஸ்கள் மற்றும் வாகனங்களில் அணிதிரட்டியிருந்தனர்.

கொழும்பில் மட்டும் 15 பிரதான மே தின நிகழ்வுகளும் கண்டி உட்பட மலையகத்தில் நான்கு மேதின நிகழ்வுகளும் வடக்கு கிழக்கில் 5 பிரதான கூட்டங்களும் இடம்பெற்றன.

இவற்றை விடவும் தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் ஆகியவற்றின் மேதின நிகழ்வுகளும் நடாளவிய ரீதியில் நடைபெற்றிருந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின பேரணியும் பிரதான கூட்டமும் அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி - கெட்டம்பே யில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முற்பகல் கண்டிக்கு சென்றதோடு பேரணி ஆரம்பிப்பதற்கு முன்பதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று ஆசி பெற்றுக்கொண்டார்.

கண்டியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்திற்கு தென் பகுதியில் இருந்து மட்டும் பல நூற்றுக்கணக்கான பஸ் வண்டிகளில் மக்கள் கண்டிக்கு பயணித்திருந்தனர். ஜனாதிபதியின் சொந்த ஊரான பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து மட்டும் 162 பஸ் வண்டிகள் கண்டி நோக்கி மக்களை அழைத்துச் சென்றிருந்தன.

ஒட்டுமொத்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாடாளவிய ரீதியில் 2 ஆயிரம் பஸ் வண்டிகளில் கட்சியின் ஆதரவாளர்கள் கண்டிக்கு சென்றிருந்தனர். அதனை விடவும் ரயில் ஊடகவும் கண்டி நகருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் சென்றிருந்தனர்.

கண்டி, கண்ணொருவையில் இருந்து ஒரு தொகுதி ஆதரவாளர்களும் கண்டி மகளிர் உயர் கல்லூரி அருகில் இருந்தும் மற்றொரு தொகுதி ஆதரவாளர்களும் பிரதான கூட்டம் நடைபெறும் கெட்டம்பே மைதானத்தை நோக்கி 2மணியிலிருந்து நகர ஆரம்பித்தனர்.

இரு பேரணிகளும் கண்டி கெட்டம்பே நோக்கி கண்ணொருவ - கண்டி பிரதான வீதி ஊடாகவும், பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை ஊடாகவும் கெட்டம்பே மைதானத்தை 3 மணியளவில் கொட்டும் மழைக்கு மத்தியில் வந்தடைந்தன.

இந்தப் பேரணியில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கள் , பெண்கள் அமைப்புக்கள், இளைஞர் அணியினர் என 20இற்கும் மேற்பட்ட தரப்புக்கள் பங்கேற்றிருந்தன. அத்துடன் வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த மக்களுமாக மூவின மக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் முன்னணியின் ஏற்பாடில் ஒரே அணியில் சரியான பாதையில் எனும் தொனிப்பொருளில் பிரதான கூட்டம் ஆரம்பமானது. கொட்டும் மழைக்கும் மத்தியிலும் சுதந்திரக் கட்சியின் கூட்டம் தடைகளின்றி இடம்பெற்றது. கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் என பெருமளவான கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசிய கட்சியின் மே தின ஊர்வலமானது மருதானைப் பகுதியில் ஆரம்பமானது. மாளிகாவத்தை, - பிரதீபா மாவத்தை, மருதானை பாலம் சந்தி முதல் காமினி சுற்றுவட்டம் வரையிலான பகுதியில் ஒன்று சேர்ந்த தொழிலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான கபீர் கசீம் தலைைமையில் பிற்பகல் 12.40 மணியளவில் பேரணி நகர ஆரம்பித்தது.

மருதானை பாலம் சந்தியில் இருந்து மருதானை வீதி ஊடாக புஞ்சி பொரளை, பொரளை சந்தி நோக்கி பேரணி சென்றபோது கொழும்பு பேராயர் இல்லத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வருகை தந்திருந்தார். அவருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் அமைச்சர்கள் என பலரும் அச்சமயத்தில் அம்மேடைக்கு வருகைதந்திருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழவினர் அம்மேடையில் நின்றவாறு பேரணியை அவதானித்ததோடு பேரணியில் கலந்து கொண்ட தொழிற்சங்கங்கள், பெண் அமைப்புக்கள், இளைஞர் அணியினர் உள்ளிட்ட அனைத்து தரப்புக்களையும் கை அசைத்து வரவேற்றனர்.

இதன்போது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே, எமது தலைவர் எமக்கு வேண்டும், ஐ.தே.க. வின் யுகம் இது. தொழிலாளர்களுக்காகவே மே தினம், தொழிலாளர்களுக்காகவே ஐ.தே.க., வெல்லும் மக்களின் மே தினம் இதுவே என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் பேரணி இடம்பெற்றது.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாரிய புகைப்படத்தை தாங்கியவாறும் தொழிலாளர்களின் சேவைகளை பிரதிபலிக்கும் வகையிலுமான வாகன ஊர்திகளும் தொடர்ச்சியாக வருகைதந்தன.

இந்த பேரணி பேராயர் இல்லத்தைக் கடந்து பெரளை சந்தியூடாக பேஸ்லைன் வீதியை அடைந்து பின்னர் பிரதான கூட்டம் இடம்பெறும் கெம்பல் மைதானத்தை வந்தடைந்தது. கெம்பல் மைதானத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் வெற்றி பெறும் மக்களின் மே தினம் எனும் தொனிப்பொருளில் அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான இக்கூட்டத்தில் ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், மத்திய குழு மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் எம்.பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூர்தீன் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மே தினக்கூட்டம் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் காலை 9.30 மணிக்கு விசேட பூஜை இடம்பெற்றதையடுத்து பேரணி ஆரம்பமானது.

பண்பாட்டு நடனங்கள், விவசாயிகளை பிரதிபலிக்கும் காட்சிப்படுத்தல்கள், பெண்கள் அமைப்புக்கள் உட்பட தொழிலாளர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான கோரிக்கைகளை மையப்படுத்திய தரப்புக்களின் பங்கேற்புடன் நகர ஆரம்பித்த பேரணியானது அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக சென்று மேதினம் நடைபெறும் மைதானத்தினை முற்பகல் 11 மணிக்கு வந்தடைந்தது.

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம், இலங்கை திருநாட்டில் பாரபட்சம் அகன்று சமத்துவம், சகோதரத்துவம் தோன்றிட உழைத்திடுவோம், தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம் எனும் தொனிப்பொருளில் பிரதான கூட்டம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், வியாழேந்திரன், ஸ்ரீநேசன், யோகேஸ்வரன், துரைரெட்ணசிங்கம், மாகாணசபை அமைச்சர்களான தண்டாயுதபாணி, துரைராஜசிங்கம் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் பெருமளவானோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

எதிர்கட்சித்தலைவர் உட்பட முக்கியஸ்தர்களின் உரைகளையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினத் தீர்மானங்களை அனைவரும் முன்னிலையில் தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் பகிரங்கமாக வாசித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் உட்பட கூட்டத்தில் பங்கு கொண்ட அனைவரினதும் ஏகமனதான ஒப்புதலுடன் அவை நிறைவேற்றப்பட்டமை குறிப்பித்தக்கது

த.தே.கூ.வின் கிளிநொச்சி மே தினம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு மே தினம் வடமாகாணத்தை பிரபலிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யயுமாறு வலியுறுத்தும் வகையில் இந்த மே தினம் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்ட மே தின ஊர்வலம் டிப்போச் சந்தியை சென்றடைந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உணர்வுகளை வௌிப்படுத்தும் வகையிலும் இரகசிய சிறைக்கூடங்கள், விமானத்தாக்குதல்கள் உள்ளிட்ட தமிழர்கள் மீது இறுதியுத்தத்தின் போதும் அதற்குப்பின்னரும் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை சித்தரிக்கும் ஊர்திகள் பேரணியில் காணப்பட்டன.

குறித்த பேரணியானது ஏ-9 வீதிவழியாக டிப்போச்சந்தி வரை சென்று அங்கு மே தினக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ் கந்தராசா, சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டதோடு பல நூற்றுக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் நேற்று 71ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொது எதிரணி

ஸ்ரீ லங்க பொது ஜன பெரமுன உள்ளிட்ட 7 கட்சிகள் ஒன்றிணைந்த, பொது எதிரணியின் மே தின நிகழ்வுகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை சோஷலிஷ தொழிலாளர் சங்கம், தேசிய சுதந்திர முன்னணி, வர்த்தக மற்றும் தொழில் ஊழியர் சங்கம் ஆகிய ஏழு கட்சிகள் மற்றும் சங்கங்கள் இணைந்து நடத்திய பேரணி பிற்பகல் 2.30 மணியளவில் யூனியன் பிளேஸில் இப்பன்வல சந்தி மற்றும் கொம்பனி வீதி சந்தி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து ஆரம்பமானது.

இந்த பேரணியானது கொம்பனி வீதி சந்தி ஊடாக நீதிபதி அக்பர் மாவத்தை, மாகான் மாக்கார் மாவத்தை, காலி முகத்திடல் சுற்று வட்டம் ஊடாக காலி முகத்திடலை வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து கோசமெழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் அணிவகுத்துச் சென்றனர்.

விசேடமாக நாட்டின் வளங்களை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றார்கள், இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற மோசடிகளை இனங்காணுங்கள், இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்காதீர்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் வளமான எதிர்காலத்திற்காக மீண்டும் மகிந்த ராஜபக்ஷவின் கையிலேயே ஆட்சியை ஒப்படையுங்கள் போன்ற கோசங்களையும் எழுப்பினர்.

பேரணியானது காலி முகத்திடலை அடைந்து அங்கு அங்கு பிரதான மே தின கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் 51 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். காலிமுகத்திடல் முழுவதும் மக்கள் கூடிநின்றதை காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணியின் மே தின பேரணியானது தெஹிவளை டி.எ.ஸ் கல்லுரி மைதானத்தில் ஆரம்பித்தது. பேரணியில் ஆயிரக்கணக்கிலான மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்துக்கொண்டிருந்த நிலையில் ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துனெத்தி ஆகியோரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் லால்காந்த, பொதுச் செயளாலர் டில்வின் சில்வா ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினப் பேரணியில் விசேடமாக மூவின சமூகங்களை சேர்ந்தோரும் கலந்துக்கொண்டிருந்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் , ஆசிரியர் சங்கம், அரச தொழிலாளர்கள், தோட்ட தொழிலாளர்களைப் பிரதித்துவப்படுத்தும் சமூகத்தினர், விவசாயிகள், உட்பட பல்வேறு தொழிற் சங்கங்கங்களும் பங்கேற்றிருந்தன.

பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்தின் அரச வளங்களை விற்பனை செய்யும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் சென்றனர்.

பாண்ட் வாத்திய குழுக்களும், மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலான தொழிலாளர்களின் அர்ப்பணிப்புக்களை வெளிப்படுத்தும் வகையிலான அலங்கரிக்கப்பட்ட ஊார்திகளும் பேரணியில் இடம்பிடித்திருந்தன. போதைப்பொருள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் பாதாகைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் பேரணியானது களுபோவில வைத்தியசாலை வீதி, சரணங்கர வீதி, பாமன்கடை பாலம், ஸ்டெபர்ட் அவனியூ, ஹெவெலக் வீதி ஊடாக பீ.ஆர்.சி. மைதானத்தை வந்தடைந்தது.

பேரணியில் பங்கேற்ற சகலரும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருக்க பீ.ஆர்.சீ. மைதானம் சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இந்த சிவப்பு தொழிலாளர் தினக் கூட்டத்தின்போது சமூகம் நியாயம், பொருளாதார சமவுடைமை, மற்றும் போராட்டம் இல்லாத வெற்றியில்லை உள்ளிட்ட காரணங்கள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள்.

அதேபோல் வடக்கு கிழக்கு மக்களை ஒன்றுபடுத்தி ஒற்றுமையான மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சியை நிலைநாட்டுவதே தமது இலக்கு என்றும் சூளுரைத்தனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம் தலவாககலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான அமைச்சர் களான பி. திகாம்பரம், வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. அரவிந்த்குமார், எம். திலகராஜ், வேலு குமார், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், சிங். பொன்னையா, ஆர். இராஜாராம், சரஸ்வதி சிவகுரு, எம். ராம், ட்ரஸ்ட் நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி, மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. குருசாமி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், மலையக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் ஏ. லோறன்ஸ், ஜனநாயக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சண். குகவரதன், அட்டன் டிக்கோயா நகர சபை முன்னாள் தலைவர் டாக்டர் அழகமுத்து நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற ஊர்வலம் நகர சபை மைதானத்தை வந்தடைந்தது. சுமார் 10 ஆயிரம் பேர் வரையில் மக்கள் கலந்து கொண்டார்கள். நகர சபை மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொடிகளும் பதாதைகலுமே வைக்கப்பட்டிருந்தன. வேறு எந்தவொரு கொடியும் இடம்பெறவில்லை. அதேபோல், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்படவில்லை. மாலை அணிவிக்க யாரும் வர வேண்டாம் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் நேற்று கினிகத்தேனையில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கினிகத்தேனை மங்கல விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்து நேற்று காலை 11.00 மணியளவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின ஊர்வலம் ஆரம்பமானது. பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா. வின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா.வின் முக்கியஸ்தர்கள் பலரும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமெழுப்பினர். ஊர்வலம் கினிகத்தேனை மத்திய பஸ் நிலையத்தை வந்தடைந்ததும் கூட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆறுமுகன் தொண்டமான் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். காங்கிரஸ் கீதமும் இசைக்கப்பட்டது.

பின்னர் மேடையேறிய ஆறுமுகன் தொண்டமானை பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மக்கள் வரவேற்றனர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் அமைச்சகளான தயாசிறி ஜயசேகர, அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரும் இ.தொ.கா.வின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கமும் மேடைக்கு வருகை தந்தனர்.

இ.தொ.கா. முக்கிய நான்கு தீர்மானங்களையும் முன்வைத்தது. மத்திய மாகாண சபை உறுப்பினர் துரை மதியுகராஜா இ.தொ.கா. வின் தீர்மானங்களை விழா மேடையில் முன்வைத்தார். மேதின விழா நிகழ்வுகள் பிற்பகல் 2.30 மணியளவில் நிறைவடைந்தன.

ஜாதிக ஹெல உறுமய

அடிப்படை வசதிகளற்ற தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் ஜாதிக ஹெல உறுமயவின் மேதின கூட்டம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்றுக் காலை 10 மணியளவில் ஆரம்பமானது. மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஜாதிக ஹெல உறுமயவின் மேதின கூட்டம் ஆரம்பமானது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மேதின பேரணி ஆரம்பமாகி புறக்கோட்டை குணசிங்கபுர சந்தை வரையில் சென்றிருந்தது. ஜாதிக ஹெல உறுமய கட்சி சார்பாக புறக்கோட்டை வர்த்தக சந்தை ஊழியர்கள் சங்கம், ஒன்றிணைந்த தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்ககங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இப்பேரணியில் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் பேரணியில் கலந்துக்கொண்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் மேல்மாகாண சபை உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, பிரதியமைச்சர் கருணாதிலக பரணவிதாரண மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், மாதர்சங்கங்களை பிரதிநிதித்துவப்டுத்தும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இடதுசாரிகள் அமைப்பின் பேரணி

தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிகள் அமைப்பின் மேதினப் பேரணி நாவல சந்தியில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சியின் பெரும்பான்மைக் குழு, புரவசி அமைப்பு,இலங்கை புகையிரத சேவையாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இதில் பங்கெடுத்தன.

இப்பேரணியானது நுகெகொட ஆனந்த சமரக்கோன் மைதானத்தினை அடைந்து அங்கு பிரதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சமன் விக்கிரமரட்ன, நிமல்கா பெர்ணான்டோ ஆகியோர் உரைநிகழ்த்தினார்.

முன்னிலை சோஷலிச கட்சி

ஏகாத்திபத்திய நவ தாராளமய திட்டத்திற்கு எதிராக உழைக்கும் மக்களே எழுவீர் எனும் தொனிப்பொருளில் முன்னிலை சோஷலிஸக்கட்சியின் மேதின கூட்டமானது கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் தலைமையில் நேற்று பிற்பகல் 3மணிக்கு கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் சந்தை கட்டிடத்தொகுதிக்கு அருகாமையில் நடைபெற்றது.

கொழும்பில் நடைபெற்ற ஏனைய கூட்டங்கள்

இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம், இலங்கை விற்பனை தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ஆகியவற்றின் மே தின நிகழ்வு ஸ்டென்லி ஜோன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஐக்கிய சோஷலிஷ கட்சியின் மே தின நிகழ்வுகளானது கிராண்பாஸ் - பலாமரச் சந்தியிலும், ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் மே தின நிக்ழ்வுகள் விஹாரமஹாதேவி வௌியக திடலிலும் இடம்பெற்றது.

கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மே தின நிகழ்வுகள், நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அத்துடன் சோஷலிஷ சமத்துவ கட்சியின் மே தின நிகழ்வுகள் கொழும்பு நகர மண்டபத்திலும், கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவத்தின் மே தின நிகழ்வுகள் கொள்ளுபிட்டிய - பொல்வத்த பரிசுத்த மிகேய்ல் தேவாலயத்திலும் இடம்பெற்றன.

ஈழமக்கள் புரட்சிகர முன்னணி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்(ஈ.பி.ஆர்.எல்.எவ்) மேதினக் கூட்டம் வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெற்றது.

செட்டிக்குளம் வீரபுரம் பிள்ளையார் ஆலய முன்றலில் அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று முற்பகல் 10 மணியளவில் மேதின ஊாவலம் ஆரம்பமானது.

இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் பொருத்து வீடுகள் வேண்டாம், காணிகளை விடுவியுங்கள், காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டும், தொழிலாளர் உரிமைகள் வழங்கப்படவேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைளை தாங்கியிருந்தனர். இந்த பேரணி சுமார் மூன்று கிலோமீற்றர்கள் தூரம் சென்று வீரபுரம் விளையாட்டு மைதானத்தில் பிரதான கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி, வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, சர்வேஸ்வரன், இந்திரராஜா, வவுனியா பிரஜைகள் குழுவின் ஸ்தாபக தலைவர் தேவராஜா, ரஜரட்ட சகோதர அமைப்பின் தேசிய அமைப்பாளர் திலக் மடபாத்த உட்பட சுமார் ஐந்நூறு பேர் வரையிலானவர்கள் பங்கேற்றிருந்தனர்.

வடமாகாண கூட்டுறவாளர் மே தினம்

வடமாகாண கூட்டுறவாளர் மேன தின பேரணியை புதுக்குடியிருப்பு சிவன் ஆலய முன்றலில் வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

முல்லைதீவு பரந்தன் வீதி வழியாக சென்ற பேரணியில் 50க்கும் மேற்பட்ட வாகன ஊர்திகள் அணிவகுத்து சென்றன. இந்த பேரணி புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரியை நோக்கிச் சென்றது.

இராணுவசமுள்ள காணிகளை விடுவிக்கவேண்டுமெனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு விரைவில் நல்ல முடிவைத்தா என்ற தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற இந்த பேரணியானது புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி கலைவிழா அரங்கில் முடிவடைந்து அங்கு பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இந்தப் பேரணியில் வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,பாராளுமனற உறுப்பினர்களான ஸ்ரீதரன்,மற்றும் சிவசக்தி ஆனந்தன் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்,கல்வி அமைச்சர் குருகுலராசா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன்,துரைராசா ரவிகரன், புவனேஸ்வரன், சிவநேசன், இந்திரராசா, தியாகராசா, கஜதீபன், சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டதோடு நூற்றுக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

தமிழத் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின பேரணியானது நேற்று பிற்பகல் 3 மணிக்கு கைதடியில் இருந்து ஆரம்பமானது. மோட்டார் சைக்கிள் பேரணியுடன் ஆரம்பமான இப்பேரணியானது சாவகச்சேரி நகரசபை மண்டபத்திற்கு அருகில் வந்தடைந்து அங்கு பிரதான பேரணி ஆரம்பமாகி வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் பிரதான அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் விசேட உரைகளை நிகழ்த்தினார்கள்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

ஈழமக்கள் ஜனநாயக்கட்சி (ஈ.பி.டி.பி.) இம்முறை தனது மேதினத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும் சுவரொட்டி மூலம் பிரசாரத்தினை முன்னெடுத்திருந்தது.

சமத்துவம் சமுக நீதிக்கான அமைப்பு

சமத்துவம் சமுக நீதிக்கான அமைப்பின் மேதினக் கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமானது பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அண்டன் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் விசேட உரையாற்றியதோடு பத்தம்ச கோரிக்கைகளும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-02#page-1

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நவீனன் said:

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

ஈழமக்கள் ஜனநாயக்கட்சி (ஈ.பி.டி.பி.) இம்முறை தனது மேதினத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும் சுவரொட்டி மூலம் பிரசாரத்தினை முன்னெடுத்திருந்தது.

Image result for comedy images

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.