Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியைக் கூட்டமைப்பு வரவேற்பது வெட்கக்கேடு சீறுகின்றார் நாமல் எம்.பி.

Featured Replies

மோடியைக் கூட்டமைப்பு வரவேற்பது வெட்கக்கேடு

சீறுகின்றார் நாமல் எம்.பி.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாகப் பன்னாடு வரை சென்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அரசியல் வாதிகளும், மனோ கணேசன் போன்றவர்களும் இரத்தக்கறை படிந்த மோடியுடன் கைகுலுக்க இன்று தயாராகிவிட்டார்கள். இது பெரும் வெட்கக்கேடான செயல்.

இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இறுதிப் போரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாகப் பன்னாடு வரை சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளும், மனோ கணேசன் போன்றவர்களும் இரத்தக்கறை படிந்த மோடியுடன் கைகுலுக்க இன்று தயாராகிவிட்டார்கள்.

நாம் ஓர் அரசாக இருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டோம். ஆனால், மோடி ஓர் இனத்தின் மீது நேரடியாகப் போர் தொடுத்தவர். இப்போதும் தொடுத்துக்கொண்டிருப்பவர்.

2002ஆம் ஆண்டு இந்தியாவின் குஜராத்தில் உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதன் பின்னணியில் மோடி இருந்தார் என்று நேரடியாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் அவருக்கு எதிராகப் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அப்படியான ஒருவர் இன்று பன்னாட்டு வெசாக் தினத்துக்காக இலங்கை வருகின்றார். ஓர் ஆன்மீக நிகழ்வுக்கு இப்படியான ஒருவரை அழைத்து வருவது வேடிக்கையான விடயம்.

நாம் வெள்ளை வான்களில் ஆள்களைக் கடத்தியதாகக் கூறி அரசியல் இலாபம் தேடிய மனோ கணேசன் போன்றவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியை வரவேற்கச் செல்கின்றார்கள் என்பது எமக்குத் தெரியவில்லை. இன்று காஷ்மீரில் தினம் தினம் அப்பாவி சிவிலியன்கள் கொல்லப்படுகின்றார்கள்.

ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. பல அப்பாவிப் பெண்களின் கற்பை இந்திய இராணுவம் சூறையாடியுள்ளது. பலரின் கண்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பின்னால் மோடி அரசும் அவரின் இராணுவமும் உள்ளது. எமக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள் இதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றார்கள்.

மோடியின் வருகையால் இலங்கைக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. மாறாக எமது நாட்டு சொத்துக்கள் இந்தியாவுக்குத் தாரைவார்க்கபடுவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது- என்றார்.

http://uthayandaily.com/story/2484.html

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

நாம் வெள்ளை வான்களில் ஆள்களைக் கடத்தியதாகக் கூறி அரசியல் இலாபம் தேடிய மனோ கணேசன் போன்றவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மோடியை வரவேற்கச் செல்கின்றார்கள் என்பது எமக்குத் தெரியவில்லை. இன்று காஷ்மீரில் தினம் தினம் அப்பாவி சிவிலியன்கள் கொல்லப்படுகின்றார்கள்.

ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. பல அப்பாவிப் பெண்களின் கற்பை இந்திய இராணுவம் சூறையாடியுள்ளது. பலரின் கண்கள் பறிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பின்னால் மோடி அரசும் அவரின் இராணுவமும் உள்ளது. எமக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள் இதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றார்கள்

 

.

மகிந்தவும் அவரது சகோதரர்களும் தமிழ் மக்களுக்கு செய்ததை தான் மோடி இந்திய மக்களுக்கு செய்தார், செய்கிறார். ஆயுதங்களும் உதவியும் பெறும் மட்டும் தான் இந்தியாவும் மோடியும் தேவை. இப்போ சொத்துக்கள் தாரைவார்க்கப்படுகிறதாம்.மனோ கணேசனும் ரவிராஜும் உங்களை தோலுருத்து காட்டியதால் தான் ரவிராஜை கொன்றீர்கள். மனோ அதிஸ்டவசமாக கொல்லப்படவில்லை.இன்றும்  அவரை ஏதாவது வழியில் பழிவாங்க வேண்டும் என்று இனவாத ராஜபக்சக்கள் முயல்கிறார்கள்.

குட்டிமணியின் கண்பறிக்கப்பட்டதற்கு சிங்கள அரசுகள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு நியாயம் கற்பித்தார்கள் என்று ராஜபக்சக்களால் சொல்ல முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொய்யால...

யாரு என்ன பேசுறது என்ற விவஸ்தயே இல்லாமப் போயிருச்சு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.