Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் உரையாற்றிய மோடி : மேலும் 10 ஆயிரம் வீடுகள் !! .

Featured Replies

தமிழில் உரையாற்றிய மோடி : மேலும் 10 ஆயிரம் வீடுகள் !! .

 

 

மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

18426042_254892564979208_502544226_n.jpg

அங்கு மோடி, அங்கு உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளிரே” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார். இதனால், அரங்கத்தில் அவருக்கு பாரிய வரவேற்பு  ஏற்பட்டுள்ளது.

மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதிமொழியளித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரணடுயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19932


'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மண்ணில் பிறந்தவர்'
 
12-05-2017 01:32 PM
Comments - 0       Views - 93

article_1494576671-mg.jpg"தமிழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இந்த மண்ணில் பிறந்தவர். அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும், தமிழகத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது" என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நோர்வூட்டில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிகொண்டிருக்கின்றார். அதன் போதே, அவர் மேற்கண்டவாறு இருவரையும் புகழ்ந்து பேசினார்.

- See more at: http://www.tamilmirror.lk/196506/-ப-ரட-ச-த-தல-வர-எம-ஜ-ஆர-இந-த-மண-ண-ல-ப-றந-தவர-#sthash.L0ZjspSp.dpuf
சௌமியமூர்த்தி தொண்டமானை மறக்கமாட்டோம்: மோடி
 
12-05-2017 01:24 PM
Comments - 0       Views - 79

article_1494576877-43A.jpg"உங்களுடைய வளர்ச்சிக்காகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்கும் போராடிய, உங்களுடைய தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானை, நாங்கள் என்றும் மறக்கமாட்டோம்" என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நோர்வூட்டில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிகொண்டிருக்கின்றார். அதன் போதே, அவர் மேற்கண்டவாறு புகழ்ந்து பேசினார்.

- See more at: http://www.tamilmirror.lk/196505/ச-ம-யம-ர-த-த-த-ண-டம-ன-மறக-கம-ட-ட-ம-ம-ட-#sthash.CCnWXb5C.dpuf
  • தொடங்கியவர்

“1990” அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் : நரேந்திர மோடி

 

 

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990” அம்யூலன்ஸ்கள் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

asfasfa1.jpg

இன்று நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990”அம்புயூலன்ஸ்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாத்திரம் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19934

 

 

 

கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை : மோடி அறிவிப்பு

 

 

கொழும்பிலிருந்து - வாரணாசிக்கான நேரடி விமானசேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடம்பெறுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

18470909_10207302190467748_1514798872_n.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐக்கிய நாடுகள் செவாக் தின நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் இந்தியா நம்பிக்கையுடன் இருக்கின்றது. மேலும் கொழும்பிலிருந்து - வாரணாசிக்கான நேரடி விமான சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகும். இதன் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இலகுவாக சென்று தரிசிக்க முடியும்.

மேலும் பௌத்த மதத்தின் தெய்வீக நறுமணம் இந்தியாவின் பல பகுதிகளிலும் பறந்துள்ளது. பௌத்த மதத்தின் நற்செய்திகளை உலக நாடுகள் பின்பற்றுமாயின், உலக நாடுகளில் தற்போது வளர்ந்துவரும்  வன்முறைகள் குறைந்துவிடும் என நான் நம்புகின்றேன்.

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு எமக்கு சிறந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. நட்பு ரீதியில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கு உதவுவதற்கு தயாராகவுள்ளோம்.

அதுமாத்திரமின்றி இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்புக்கு வழிசமைக்கும் முகமாக நாம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/19933

 

  • தொடங்கியவர்
“மலையக மக்கள் அயராது உழைக்கும் உழைப்பாளிகள்”
 
12-05-2017 04:24 PM
Comments - 0       Views - 8

article_1494586732-modi.jpg"உலகத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த  'சிலோன் டீ' தேயிலைக்குப் பின்னால், மலையக மக்களின் வியர்வையும் உழைப்பும் இருப்பது பலரும் அறிந்திடாத உண்மை" என, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இன்று (12) தெரிவித்தார்.

நோர்வூட் மைதானத்தில், இன்று (12) இடம்பெற்ற பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "இந்த அழகிய மலையகப் பிரதேசத்துக்கு வருகைத் தரும் முதலாவது இந்தியப் பிரதமர் என்பது எனக்கு மிகப்பெரிய கௌரவமாகும். மலைநாட்டில் தான் தேயிலை உற்பத்தி இடம்பெறுகின்றது என்பது உலகமக்கள் அனைவரும் அறிந்த
ஒன்றாகும்.

உலகில்   தேயிலை ஏற்றுமதியில் இலங்கை 3ஆவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் தேயிலை தேவைப்பாட்டின் 17 சதவீதத்தினை பூர்த்தி செய்து, அந்நியச் செலவாணி 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு உந்து சக்தியாக திகழ்வது மலையக மக்களின் அயராத உழைப்பாகும். இவர்களின் உழைப்பை உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் மதிக்கின்றனர்.

இந்தத் தேயிலைக்கும் எனக்கும் நெருங்கிய ஒற்றுமை உள்ளது. அதனைப் பெரும்பாலானோர்கள் கேள்விபட்டிருப்பீர்கள். தேநீருடன் கலந்த உரையாடல் உன்னதமான உழைப்பின் மரியாதையை குறிக்கிறது.

உங்களுடைய முன்னோர், வலுவான மன தைரியத்துடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து பல இன்னல்களை எதிர்நோக்கிய போதும் மனம் தளராது தமது பணியை விடாது தொடர்ந்தனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்தபோதும் மலைநாட்டு மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக, அமைதியான முறையில் போராடினர். அதனை நாங்கள் மறக்கமாட்டோம். உங்களின் உரிமைகள், பொருளாதார மேன்மை ஆகியவற்றுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கருத்துக்கு அமைய எமது செயல்களை முன்கொண்டு செல்வோம்.

நீங்கள் அனைவரும் முதன்மையான பழமையான பாரம்பரிய செம்மொழியான தமிழ்மொழியை பேசுவதுடன் சிங்கள மொழியையும் பேசுகின்றமையானது பெருமைக்குரிய விடயமாகும்.

மொழி என்பது மற்றவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்ல சிறந்த ஐக்கியத்தினை வலுப்படுத்துவதற்கும் உகந்ததாகும்.

நாம் சமூகத்தில் மாற்றத்தினைக் கொண்டுவருவதற்கு வழிவகுக்க வேண்டுமே ஒழிய, பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. நாட்டில் ஒற்றுமை, நல்லிணக்கம் என்பற்றை எந்ததொரு தடையும் இல்லாமல் கொண்டு செல்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

நான், மகாத்மா காந்தி பிறந்த குஜாரத் மாநிலத்தில் பிறந்தேன். 90 ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மா காந்திகூட  நுவரெலியா, கண்டி, ஹட்டன், பண்டாரவளை ஆகிய மலைநாட்டு் பகுதிகளுக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். அவரின்  நோக்கம் தோட்ட தொழிலாளர்களின் சமூக பொருளாதாரத்தினை மேன்மைப்படுத்துவதாகும்.

அந்தவகையில் நாங்களும் கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் மலையக மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக உள்ளோம்.

வருடந்தோரும் 700க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளி மாணவர்கள், கல்விக்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இனிவரும் காலங்களிலும் மலைநாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் பொருளாதாரம் போன்றவற்றுக்கு எங்களது பங்களிப்பினை வழங்குவோம்" என, அவர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/196515/-மல-யக-மக-கள-அயர-த-உழ-க-க-ம-உழ-ப-ப-ள-கள-#sthash.WKOUs1Tt.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நவீனன் said:

“1990” அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் : நரேந்திர மோடி

 

 

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990” அம்யூலன்ஸ்கள் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

asfasfa1.jpg

இன்று நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990”அம்புயூலன்ஸ்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாத்திரம் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19934

 

 

 

கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை : மோடி அறிவிப்பு

 

 

கொழும்பிலிருந்து - வாரணாசிக்கான நேரடி விமானசேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடம்பெறுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

18470909_10207302190467748_1514798872_n.

 

இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் இந்தியா நம்பிக்கையுடன் இருக்கின்றது. மேலும் கொழும்பிலிருந்து - வாரணாசிக்கான நேரடி விமான சேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகும். இதன் மூலம் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை இலகுவாக சென்று தரிசிக்க முடியும்.

 

 

http://www.virakesari.lk/article/19933

 

ஆ...ஹா.. விங்கிட்டுதுtw_blush:
மொத்தமா எல்லா தமிழர்களுக்கும் மொட்டை   தான்:100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஹிந்திய வால்பிடி ஊடகங்களுக்கு செருப்பால மக்கள் அடிக்கனும். தமிழில பேசிட்டாரிய்யா.. ஐயா நல்லவரு.. வல்லவருன்னு.. சொல்லிக்கிறது. தமிழில பேசிப் பேசியே ஒருத்தர் இனப்படுகொலையே செய்து முடித்தார்..அவரைப் போய் குஜராத்தில் முஸ்லீம்கள் மீது வன்முறையை படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்ட இவர்.. சந்தித்து குசலம் விசாரிச்சிருக்கிறார்.. அதை எவனும் சொல்லமாட்டான்.

இவர் எதுக்கு சொறீலங்காவுக்கு பெளத்த சாயத்தை நல்லாப் பூசிறார்..??! சிங்களவன் மனம் குளிர்வானுன்னா. அவர் இவருக்கு தலையும்.. சீனாவுக்கு வாலும் காட்டுவான். tw_blush::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்திலிருந்து அம்பாந்தொட்டையை பார்க்கிற பிளான் போல கிடக்கு....எது நடக்க இருக்குதோ அது நல்லாவே நடக்குது

16 minutes ago, வாத்தியார் said:

ஆ...ஹா.. விங்கிட்டுதுtw_blush:
மொத்தமா எல்லா தமிழர்களுக்கும் மொட்டை   தான்:100_pray:

மொத்தமா எல்லா லங்கன்ஸுக்கும் மொட்டை தான்.....மகிந்தாவுக்கே மொட்டை போட்டவர்கள்

  • தொடங்கியவர்
மோடியின் ஹெலியினால் பெண்ணுக்கு காயம்
 
12-05-2017 05:02 PM
Comments - 0       Views - 27

article_1494589239-g2.jpg

-மு.இராமச்சந்திரன்

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி வந்திறங்கிய ஹெலியினால் பெண்ணொருவர் காயத்துக்கு உள்ளாகிய நிலையில், டிக்கோயா-கிளங்கன்  மாவட்ட வைத்தியசாலையில், இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன்,டன்பார் மைதானத்தில் வந்திறங்கிய  மோடியின் ஹெலியில், அதிகவலு கொண்ட காற்று வீசியமையினால், மைதானத்தை அண்மித்த சமனகம பகுதி குடியிருப்பொன்றில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், அந்தப்பெண்  காயத்துக்கு உள்ளாகிய நிலையில், டிக்கோயா  மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக, டிக்கோயா வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/196519/ம-ட-ய-ன-ஹ-ல-ய-ன-ல-ப-ண-ண-க-க-க-யம-#sthash.1C5ilem1.dpuf
  • தொடங்கியவர்

தமிழில் உரையாற்றிய மோடி : சமூகத்தின் வேறுப்பாடுகள் நிரந்தர முரண்பாடுகளுக்கு வித்திட கூடாது என தெரிவிப்பு (Video)

 

 

ஓற்றுமையுடன் வாழும் ஒருபன்முக சமூகத்தை விட சிறந்த பார்வை உலகில் வேறு இல்லை. சமூகத்தின் வேறுப்பாடுகள் நிரந்தர முரண்பாடுகளுக்கு வித்திட கூடாது. அதேபோன்று பாராம்பரியமாக காணப்படுகின்ற தமிழ் சிங்கள ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நாம் மேம்படுத்தவேண்டுமே தவிர பிரித்தாழ கூடாது. 

 

இலங்கையின் பன்முக வளர்ச்சியில் இந்தியா என்றும் நேசகரம் கொண்டு ஒத்துழைப்புகளை வழங்கும் என இந்தியபிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். 

நோர்வூட் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றமக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டுஉரையாற்றும் போதே இந்திய பிரதமர் நரேந்திரமோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'உங்கள் முன்னிலையில் எனக்கு பேச கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியமாக நினைக்கின்றேன்' என தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி உரையை ஆரம்பித்த போது மக்கள் கைதட்டி வரவேற்பளித்தனர்.

http://www.virakesari.lk/article/19938

  • தொடங்கியவர்

மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள்

P18-952ff7fb9fde67ca5abf430b8cd42ee3b5c55dd1.jpg

 

தமிழ்,சிங்கள ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும்  மேம்படுத்த வேண்டும் என்கிறார் இந்தியப் பிரதமர் மோடி

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஒற்­று­மை­யுடன் வாழும் ஒரு­பன்­மு­க­ ச­மூ­ கத்­தை­வி­ட ­சி­றந்­த­ பார்­வை­ உ­லகில் வேறு இல்லை. சமூ­கத்தின் வேறு­பா­டுகள் நிரந்­த­ர­ மு­ரண்­பா­டு­க­ளுக்­கு­வித்­திடக் கூடாது. அதே­போன்­று­ பா­ரம்­ப­ரி­ய­மா­க­ கா­ணப்­ப­டு­கின்­ற­ தமிழ் – சிங்­க­ள­ ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் நாம் மேம்­ப­டுத்­த­வேண்­டு­மே­த­வி­ர­ பி­ரித்­தாளக் கூடாது. இலங்­கையின் பன்­மு­க­ வளர்ச்­சியில் இந்­தியா  என்றும் நேச­கரம் கொண்டு ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும் என்று இந்­தி­ய­பி­ர­தமர் நரேந்­தி­ர­மோ­டி­தெ­ரி­வித்தார்.   

இந்­திய வம்­சா­வளி மக்கள் தொடர்பில் நான் பெரு­ம­ய­டை­கின்றேன். இலங்­கை மற்றும் இந்­திய அர­சாங்­கங்­க­ளுக்­கிடை யேயுள்ள முக்­கிய இணைப்­பாக நீங் கள் திகழ்­கின்­றீர்கள். இரு நாட்டு பந்தங்  களின் தொடச்­சி­யா­கவே நாம் உங்­க­ளைப் பார்க்­கின்றோம். இலங்கை மக்க ளுக்கு உதவும் வகையில் இந்தக் கூட்டு  றவை மேம்­ப­டுத்­து­வதே எமது நோக்­கமா  கும். மலை­ய­கத்தில் இந்­திய அரசின்  நிதி­யு­த­வி­யுடன் தற்­போது நடை­முறைப் படுத்­தப்­படும் நான்­கா­யிரம் வீடு­க­ளுக்கு மேல­தி­க­மாக 10 ஆயிரம் வீடு­களை  நிர்­மா­ணிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அவர் உறு­தி­ய­ளித்தார். 

நோர்வூட் டன்பார் மைதா­னத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மாபெரும் பொதுக்­கூட்­டத்தில் கலந்துக் கொண்டு உரை­யாற்றும் போதே இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்­சர்­க­ளான மனோ கணேசன் , பி.திகாம்­பரம், ராஜித சேனா­ரத்ன, மலிக்­ச­ம­ர­விக்­கி­ரம, லக்ஷ்மன் கிரி­யெல்ல, நவீன் திஸா­நா­யக்க, ,இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் , இதொ..கா. செய­லாளர் ஆறு­முகன் தொண்­டமான் உட்­பட பெரு­ம­ள­வானோர் கலந்­து­கொண்ட இந்தக் கூட்­டத்தில் தொடர்ந்தும் உரை­யாற்­றிய இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கூறி­ய­தா­வது ;

மலை­யக மக்­களின் இன்­னல்கள்

மலை­ய­கத்­திற்கு விஜயம் செய்த முத­லா­வது இந்­திய பிர­தமர் என்ற வகையில் பெரு­மிதம் கொள்­கின்றேன். உலகப் புகழ்­பெற்ற தேயிலை மலை­யக மண்ணில் தான் விளை­கின்­றது என்­பது உலக மக்கள் அறிந்­த­தொன்­றாகும். ஆனால் இந்த தேயி­லையை உலக மக்கள் அனை­வரும் விரும்­பு­வ­தற்கு உங்­க­ளது உழைப்பும் வியர்­வையும் தான் காரணம் என்­பது அறிந்­தி­ராத உண்­மை­யாகும். இலங்கை உலகில் மூன்­றா­வது தேயிலை ஏற்­று­மதி செய்யும் நாடாக இருப்­ப­தற்கு உங்­க­ளது கடின உழைப்பே காரணம். உலக தேயிலை ஏற்­று­ம­தியில் 17 வீதத்தை இலங்கை பூர்த்தி செய்­வ­துடன் அந்­நிய செலா­வ­ணி­யாக 150 கோடி அமெ­ரிக்க டொலர்­களை ஈட்­டு­வ­தற்கு கார­ண­மாக இருப்­பது உழைப்பின் மீதுள்ள உங்­க­ளது ஈடுப்­பா­டாகும்.

உல­கெங்கும் வெற்றி நடைப்­போட்டு பரந்து வளர்ந்து வரு­கின்ற இலங்கை தேயி­லையின் முது­கெ­லும்­பாக திகழ்­வது நீங்கள். உங்­க­ளது இந்த கடின உழைப்பை மன­தார பாராட்­டு­கின்றேன். உங்­க­ளுக்கும் எனக்கும் இடையில் ஒரு பொது­வான ஒற்­று­மை­யுள்­ளது.தேயி­லைக்கும் எனக்கும் தனிப்­பட்ட நெருங்­கிய உறவு உள்­ளதை அறி­வீர்கள். தேனீ­ருடன் கலந்­து­ரை­யாடல் என்­பது ஒரு சுலோகம் மட்­டு­மல்ல மாறாக அது உன்­ன­த­மான உழைப்பின் மரி­யா­தையை குறிக்­கின்­றது.

மலை­ய­கத்தின் முன்­னோர்­களை இந்த சந்­தர்ப்­பத்தில் நினைவுக் கூரு­கின்றேன். வலு­வான மனோ­தை­ரி­யத்­துடன் அவர்கள் அன்று இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொண்­டார்கள். அந்த கடி­ன­மான பய­ணத்தில் அவர்கள் பல இன்­னல்­க­ளையும் போராட்­டங்­க­ளையும் சந்­தித்­தனர். ஆனால் பய­ணத்தை அவர்கள் கைவி­ட­வில்லை. எனவே இந்த சந்­தர்ப்­பத்தில் அவர்­களின் தியா­கங்­க­ளுக்கு தலை வணங்­கு­கின்றேன். உங்கள் தலை­மு­றையும் தொடர்ச்­சி­யாக பிரச்­சி­னை­களை சந்­தித்­தது.புதி­தாக சுதந்­திரம் பெற்ற நாட்டில் சொந்த அடை­யா­ளத்­திற்­காக போரா­டீ­னீர்கள். அமை­தி­யாக போராடி உரி­மை­கனை வெற்றி கொண்­டீர்கள்.

சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான்

அந்த வகையில் உங்கள் போராட்­டத்­திற்கு தலைமை தாங்­கிய சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் போன்ற தலை­வர்­களை எளிதில் மறந்து விட முடி­யாது. அவர்­களை இந்­தியா ஒரு­போதும் மறக்­காது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொன்­மொ­ழிக்கு நிக­ராக வாழ்ந்­துள்­ளீர்கள். இலங்­கையில் ஐக்­கி­யப்­பட்டு இந்த சமூக வலைப்­பின்­னலில் பிரிக்க முடி­யாத ஒன்­றாகி , ஒன்­றிட கலந்­துள்­ளீர்கள். நீங்கள் அனை­வரும் தமிழ் தாயின் பிள்­ளைகள். உலகில் வாழும் மொழி­யான செம்­மொ­ழியை பேசு­கின்­றீர்கள். அத்­தோடு சிங்­கள மொழி­யையும் பேசு­கின்­றமை பெரு­மைக்­கு­ரிய விட­ய­மாகும்.

மொழி என்­பது மற்­ற­வர்­க­ளுடன் தொடர்பு கொள்­வ­தற்­கான ஒரு கருவி மாத்­திரம் அல்ல. அது ஒரு கலா­சா­ரத்தை வரை­ய­றுக்­கின்­றது. உற­வு­களை அனைத்து சமூ­கங்­களை ஒற்­று­மைப்­பத்­து­கின்­றது. சமா­தா­னத்­தோடும். ஒற்­று­மை­யு­டனும் வாழும் ஒரு பன்­முக சமூ­கத்தை விட சிறந்த பார்வை வேறு இல்லை. சமூ­கத்தின் வேறுப்­பா­டுகள் கொண்­டாட்­டங்­க­ளுக்கு வழி­கோல வேண்­டுமே தவிர முரண்­பா­டு­க­ளுக்கு வித்­திட கூடாது.

இலங்கை – இந்­திய உறவு காலா­கா­ல­மாக பின்­னிப்­பி­ணைந்­தது. கண்­டியை சேர்ந்த நாயக்க அரச பரம்­ப­ரை­யினர் மதுரை மற்றும் தஞ்­சாவூர் நாயக்க மன்­னர்­க­ளிடம் பெண் கொடுத்து பெண் எடுத்­தார்கள். சிங்­க­ளமும் தமிழும் அவர்­க­ளது அரச மொழி­க­ளாக காணப்­பட்­டது. இந்த ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் நாம் மேம்­ப­டுத்த வேண்­டுமே தவிர பிரித்­தாள கூடாது. இந்த ஒற்­று­மையை பாது­காக்க நீங்கள் தகு­தி­யா­ன­வர்கள் .

மகாத்மா காந்­தியின் இலங்கை விஜயம்

மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநி­லத்தை சேர்ந்­தவன் என்ற வகையில் , 90 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அவர் கண்டி , நுவ­ரெ­லியா , மாத்­தளை , பண்­டா­ர­வளை மற்றும் ஹட்டன் உள்­ளிட்ட இந்த அழ­கிய பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்தார்.

அவ­ரது விஜ­யத்தின் நோக்கம் சமூக, பொரு­ளா­தார மேம்­பாட்டு செய்­தியை பரப்­பு­வ­தாக இருந்­தது. இவ­ரது விஜ­யத்தை நினைவு கூரும்­வ­கையில் மாத்­த­ளையில் மகாத்மா காந்தி மையம் இந்­தி­யாவின் நிதி­யு­த­வி­யுடன் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

 

சிறந்த தலை­வர்­களை உரு­வாக்­கிய மலை­யகம்

இந்­தி­யாவின் புரட்சி தலை­வர்­களில் ஒரு­வ­ரான எம்.ஜி.ஆர் இந்த மண்ணில் பிறந்­தவர். அதே போன்று முத்­தையா முர­ளி­தரன் என்ற கிரிக்கெட் வீரரை உல­கிற்கு தந்­துள்­ளீர்கள். இந்­நி­லையில் உங்கள் முன்­னேற்றம் எங்கள் நோக்­க­மாகும்.பல்­வேறு துறை­களில் மலை­ய­கத்தின் சாத­னை­களை அறிந்து வியக்­கின்றோம். வடக்­கா­யினும் கிழக்­கா­யினும் ஒரு அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்தும் புலம்­பெயர் இந்­திய வம்­சாளி மக்­களின் வெற்­றியில் நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம்.

இலங்கை மற்றும் இந்­தி­யா­விற்கு இடை­யி­லான முக்­கிய இணைப்பே மலை­யக மக்கள். பந்­தங்­களின் தொடர்ச்­சி­யா­கவும் தொப்­புள்­கொ­டியின் அடை­யா­ள­மா­கவும் உங்­களை பார்க்­கின்றோம். இந்த இணைப்பை மேலும் வலுப்­ப­டுத்­து­வது எனது நோக்­க­மாகும். இரு தரப்பு கூட்­டு­ற­வினை வலுப்­ப­டுத்­து­வது எனது அர­சாங்­கத்தின் முக்­கிய விட­ய­மாகும்.

இந்­தி­யா­வு­ட­னான பிணைப்பை நீங்கள் இன்னும் தக்­க­வைத்துக் கொண்­டுள்­ளீர்கள். உங்­க­ளது உற­வுகள் இன்னும் இந்­தி­யாவில் வாழ்­கின்­றனர். இந்­திய பண்­டி­கை­களை உங்கள் பண்­டி­கை­க­ளாக கொண்­டா­டு­கின்­றீர்கள். இந்­தியா உங்கள் உள்­ளங்­களில் இன்றும் நிற்­கின்­றது. இந்த ஆழ்ந்த உணர்வை உணர்ந்து இந்­தியா பிர­தி­ப­லிக்­கின்­றது. இன்னும் சில தினங்­களில் உங்கள் முதா­தை­யர்கள் இலங்கை வந்து 200 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றது. இந்த தரு­ணத்­திலும் இந்­தியா உங்­க­ளுடன் இருக்கும்.

பொரு­ளா­தாரம் அர­சியல் மற்றும் காலாசாம்

பொரு­ளா­தாரம், அர­சியல் மற்றும் காலா­சாரம் உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்­காக இந்­தியா உங்­க­ளுக்­காக செயற்­படும். இலங்கை அர­சாங்கம் 5 ஆண்டு திட்­டத்தில் உங்­களை உள்­வாங்கி பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. இதற்கு தேவை­யான ஒத்­து­ழைப்­ப­க­ளையும் இந்­தியா வழங்கும்.

கல்வி, சுகா­தாரம் மற்றும் பொரு­ளா­தார திட்­டங்­களில் அர­சாங்­கத்­துடன் இணைந்து இந்­தியா ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும். இந்­திய புல­மைப்­ப­ரி­சில்­களில் உங்கள் குழந்­தைகள் பய­ண­டைந்­தி­ருப்­பார்கள் என நம்­பு­கின்றேன். தோட்ட பாட­சா­லை­களில் பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.

இந்­திய அம்­பி­யுலன்ஸ் சேவை விஸ்­த­ரிப்பு

சற்று நேரத்­திற்கு முன்பு 150 படுக்கை வச­தி­களை கொண்ட நவீன நரக கிளங்கன் வைத்­தி­ய­சா­லையை திறந்து வைத்தோம். மலை­யக மக்­களின் சுகா­தார தேவையை பூர்த்தி செய்ய கூடிய வகையில் இந்த வைத்­தி­ய­சாலை அமையும் என நம்­பு­கின்றேன். மேலும் இந்­திய நிதி­யு­த­வியில் தென் மற்றும் மேல் மாகா­ணங்­களில் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற அவ­சர அம்­பி­யுலன்ஸ் சேவையை அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் விஸ்­த­ரிக்­கு­மாறு பணித்­துள்ளேன்.

யோகா மற்றும் ஆயுர்­வேதம்

யோகா மற்றும் ஆயுர்­வேத பாரம்­ப­ரி­யங்­களை உங்­க­ளுடன் பகிர்ந்துக் ்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். அண்மையில் நடைப்பெறவுள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் போது உங்களின் பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றோம்.

இந்திய வீட்டத்திட்டம்

அத்துடன் இந்திய வீட்டத்திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படுள்ளது. இதன் நில உரிமையும் பயணாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நேரடி விமான சேவை

கொழும்பு - – வாரணாசிக்கான நேரடி ஏயார் இந்தியா விமான சேவையை இன்று காலை அறிவித்தேன். இதன் மூலம் சிவபெருமானின் அருளை பெற கூடியதாக உள்ளது. இந்திய அரசும் மக்களும் என்றும் உங்களுடன் உள்ளனர். உங்கள் முன்னேற்றத்திற்கு நாங்கள் துணையாக நிற்கின்றோம். உங்களது ஒளிமையமான எதிர்காலத்திற்கு என்றும் துணை நிற்போம் என குறிப்பிட்டார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-13#page-1

  • தொடங்கியவர்

உண்­மை­யான பங்­காள­ராக இந்­தியா இருக்கும் கொழும்பில் உறு­தி­ய­ளித்த இந்­தியப் பிர­தமர்  

Published by Priyatharshan on 2017-05-13 10:32:24

 

இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான உறவில் முக்­கி­ய­மான ஒரு சந்­தர்ப்­பத்தில் நாம் இப்­போது உள்ளோம். பல்­வேறு துறை­க­ளிலும் காணப்­படும் எமது பங்­கு­ட­மையில் உயர்­வான நிலையை எட்­ட­ வேண்­டிய வாய்ப்பு தற்­பொ­ழுது கிட்­டி­யுள்­ளது. அத்­துடன் எம்மைப் பொறுத்­த­வரை எமது நட்பின் வெற்­றி­யாக தங்­களின் முன்­னேற்­றத்­தையும் வெற்­றி­யை­யுமே கரு­து­கின்றோம் என்று இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி  தெரி­வித்தார். 

unnamed__1_.jpg

எந்­த­வி­த­மான கட்­டுப்­பா­டு­களும் இன்றி வர்த்­தகம், முத­லீ­டுகள், தொழில்­நுட்பம், சிந்­த­னைகள், எல்­லை­களைக் கடந்து பரஸ்­பர நலன்­க­ளுக்­காக பய­ணிப்­ப­தனை நாம் நம்­பு­கின்றோம். இந்­தி­யாவின் துரி­த­மான வளர்ச்சி மூலம்  இலங்கை உட்­பட முழுப் பிராந்­தி­யமும் நன்­மை­ய­டைய வேண்டும். மேலும்  இந்து சமூத்­தி­ரத்தின் நீர்­நி­லை­யாக இருக்­கலாம் அல்­லது பூமி­யாக இருக்­கலாம். எவ்­வாறு இருப்­பினும் எமது சமூ­கங்­க­ளி­னதும் பாது­காப்பு பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

உங்கள் சமூ­கத்தின் முன்­னேற்றம் மற்றும் அமைதி ஆகி­ய­வற்­றுக்­கான உண்­மை­யான தெரி­வு­களை மேற்­கொள்ளும் நிலையில் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் உங்கள் பெரும் முயற்­சிக்கு ஆத­ரவு வழங்கும் உண்­மை­யான பங்­க­ளா­ராக நண்­ப­ராக நீங்­களே இந்­தி­யாவை கண்­டு­கொள்­வீர்கள் என்றும்  இந்­திய பிர­தமர் சுட்­டிக்­காட்­டினார்.  

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த  இந்­திய பிர­தமர் மோடி பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று நடை­பெற்ற சர்­வ­தேச வெசாக் தின நிகழ்­வு­களில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

புனி­த­மான ஒரு தினத்தில் இங்கு உரை­யாற்­று­வ­தற்கு என்னை அழைத்­த­மைக்­காக இலங்கை மக்­க­ளுக்கும் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கும் நான் நன்றி தெரி­விக்­கின்றேன். அதே­வேளை, கௌர­வ­மா­கவும் இதனைக் கரு­து­கின்றேன்.

பௌத்தம் பிறந்த மண்ணில் வாழும் 1.25 பில்­லியன் மக்­களின் வாழ்த்­துக்­க­ளையும் உங்­க­ளுக்கு இந்தச் சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்துக் கொள்­கிறேன். எமது பிராந்­தியம் உலகில் மிகவும் பெறு­மதி நிறைந்த புத்­தரின் பரி­சையும் அவரின் போத­னை­க­ளையும் பெற்­றி­ருப்­பது சிறந்த அதிஷ்­ட­மாகும். 

எமது ஆட்சி, கலா­சாரம்  ஆகிய அனைத்­திலும் பௌத்தம் ஆழ­மாக பதிந்­துள்­ளது. எமது தேசிய இலட்­சி­னையின் முக்­கி­ய­மான பகு­திகள் பெள்­தத்தின் உள்­ளீ­டு­களில் இருந்து பெறப்­பட்­ட­வை­யாகும். உலகின் ஏனைய பகு­தி­க­ளுக்கு இந்­தி­யாவில் இருந்து பௌத்தம் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தது. மகிந்­தவும் சங்­க­மித்­தையும் இந்­தி­யாவில் இருந்து இலங்­கைக்கு தமது பய­ணத்தை மேற்­கொண்டு பௌத்த மதத்தின் பெரு­மையை இங்கும் சேர்த்­தி­ருந்­தனர். 

பௌத்­தத்தை போதிக்கும் அல்­லது கற்­பிக்கும் முக்­கிய மைய­மாக இலங்கை இன்று அமைந்­தி­ருக்­கின்­றது. பல நூற்­றாண்­டு­களின் பின்னர் அந­ரா­க­ரீக தர்­ம­பா­லவும் இதே­போன்ற ஒரு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். எனவே  இம்­முறை இலங்­கை­யி­லி­ருந்து பௌத்­தத்தின் உத்­வே­கத்தை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலையில் இந்­தி­யா­வுள்­ளது. மாற்று வழியில் நீங்கள் எம்மை எமது சொந்த வழி­களில் வழி­ந­டத்­து­கின்­றீர்கள் என்­றுதான் கூற­மு­டியும்.

பௌத்­த­மா­னது இலங்கை மற்றும் இந்­திய  உறவின் முக்­கிய கருப்­பொ­ரு­ளாக காணப்­ப­டு­கின்­றது. அய­ல­வர்­க­ளாக இருக்கும் எமது இரு நாடு­க­ளி­னதும் உற­வு­முறை பல்­வேறு படி­மங்கள் ஊடாக சென்­றி­ருக்­கின்­றது.

சமூ­கங்­க­ளி­னதும் மக்­க­ளி­னதும் இத­யங்­களில் வாழும் உயர்ந்த நட்­பாக எமது நட்பு இன்று காணப்­ப­டு­கின்­றது. எமது பௌத்த பெறு­மா­னங்­களின் தொடர்­பு­களை கௌர­வப்­ப­டுத்தி மேலும் ஆழ­மாக்கும் வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் முதல் கொழும்­புக்கும் வார­ணா­சிக்கும் இடை­யி­லான நேரடி விமான சேவைகள் ஏயார் இந்­தியன்ஸ் விமான சேவை­யினால்   ஆரம்­பிக்­கப்­படும். 

அத­னூ­டாக  இலங்­கையை சேர்ந்த சிங்­கள சகோ­தர சகோ­த­ரிகள் பௌத்­தரின் புனித பூமிக்கு இல­கு­வான பய­ணத்­தினை மேற்­கொள்ள முடியும்.  அதே­போல தமிழ் சகோ­தர சகோ­த­ரி­களும் வார­ணா­சிக்கும் காசி விஸ்­வ­நா­தரின் புனித பூமிக்கும் செல்­ல­மு­டியும்.    

எமது உறவில் முக்­கி­ய­மான ஒரு சந்­தர்ப்­பத்தில் நாம் தற்­பொ­ழுது உள்ளோம். பல்­வேறு துறை­க­ளிலும் காணப்­படும் எமது பங்­கு­ட­மையில் உயர்­வான நிலையை எட்­ட­வேண்­டிய வாய்ப்பு தற்­பொ­ழுது கிட்­டி­யுள்­ளது. அத்­துடன் எம்மைப் பொறுத்­த­வரை எமது நட்பின் வெற்­றி­யாக தங்­களின் முன்­னேற்­றத்­தையும் வெற்­றி­யை­யுமே கரு­து­கின்றோம்.

இலங்­கையில் உள்ள சகோ­தர சகோ­த­ரி­களின் பொரு­ளா­தார செழு­மையை உறு­திப்­ப­டுத்­து­வதில் நாம் அர்ப்­ப­ணிப்­புடன் உள்ளோம். எமத அபி­வி­ருத்தி ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்­கை­களை மேலும் ஆழ­மாக்­கு­வ­தற்­காக  நேர­டி­யான முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

எமது மூல­தனம் செழுமை புலமை ஆகி­ய­வற்­றையும் பகிர்ந்து கொள்­வதில் தான் எமது பலம் தங்­கி­யுள்­ளது. முத­லீடு மற்றும் வர்த்­த­கத்தில் ஏற்­க­னவே நாம் மிக முக்­கி­ய­மான பங்­க­ளா­ராக இருக்­கின்றோம். மிகவும் அதி­க­ளவில் எந்­த­வி­த­மான கட்­டுப்­பா­டு­களும் இன்றி வர்த்­தகம், முத­லீ­டுகள், தொழில்­நுட்பம், சிந்­த­னைகள், எல்­லை­களைக் கடந்து பரஸ்­பர நலன்­க­ளுக்­காக பய­ணிப்­ப­தனை நாம் நம்­பு­கின்றோம். இந்­தி­யாவின் துரி­த­மான வளர்ச்சி மூலம் குறிப்­பாக இலங்கை உட்­பட முழுப் பிராந்­தி­யமும் நன்­மை­ய­டைய வேண்டும். 

உட்­கட்­ட­மைப்ப மற்றும் தொடர்­பாடல், போக்­கு­வ­ரத்து மற்றும் சக்தி ஆகிய துறை­களில் எமது ஒத்­து­ழைப்­பினை மேலும் அதி­க­ரிப்­ப­தற்கு இந்­தியா திட்­ட­மிட்­டுள்­ளது.

அதே­போல, விவ­சாயம், கல்வி, சுகா­தாரம், மீள்­கு­டி­யேற்றம், போக்­கு­வ­ரத்து, மின்­சக்தி, கலா­சாரம், நீர், வதி­விடம், விளை­யாட்டு மற்றும் மனித வளங்கள் போன்ற மனித செயற்­பா­டு­களின் ஒவ்­வொரு பிரி­வு­க­ளிலும் எமது அபி­வி­ருத்தி பங்­கு­டமை பரந்து காணப்­ப­டு­கின்­றது.

இன்று இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான அபி­வி­ருத்தி ஒத்­து­ழைப்பு 2.6 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை எட்­டி­யி­ருக்­கின்­றது. இலங்கை மக்கள் சமா­தானம்இ செழுமை மற்றும் பாது­காப்பு நிறைந்த எதிர்­கா­லத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தனை இலக்­காகக் கொண்டே இந்­தியா தொடர்ந்தும் ஆத­ரவு வழங்­கி­வ­ரு­கின்­றது. ஏனென்றால் இந்­தி­யாவில் வாழும் 1.25 பில்­லியன் மக்­க­ளுடன் இலங்கை மக்கள் நேர­டி­யான தொடர்­பினை கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­களின் பொரு­ளா­தார சமூக நலன்­பு­ரி­களும் பிணைந்தே காணப்­ப­டு­கின்­றது. 

இந்து சமூத்­தி­ரத்தின் நீர்­நி­லை­யாக இருக்­கலாம் அல்­லது பூமி­யாக இருக்­கலாம். எவ்­வாறு இருப்­பினும் எமது சமூ­கங்­க­ளி­னதும் பாது­காப்பு பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கஇ ஜனா­தி­பதி சிறி­சேன ஆகி­யோ­ருடன் மேற்­கொண்­டி­ருந்த சந்­திப்பின் போது எமது பொது­வான இலக்­கு­களை எட்­டிக்­கொள்­வ­தற்­காக இரு தரப்பும் கரம் கோர்க்க வேண்­டிய தேவை­யி­ருப்­ப­தனை மீண்டும் வலி­யு­றுத்தி கூறி­யி­ருந்தேன்.  உங்கள் சமூ­கத்தின் முன்­னேற்றம் மற்றும் அமைதி ஆகி­ய­வற்­றுக்­கான உண்­மை­யான தெரி­வு­களை மேற்­கொள்ளும் நிலையில் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் உங்கள் பெரும் முயற்­சிக்கு ஆத­ரவு வழங்கும் உண்­மை­யான பங்­க­ளா­ராக நண்­ப­ராக நீங்­களே இந்­தி­யாவை கண்­டு­கொள்­வீர்கள்.

சமூக நீதி­யா­னது சமூ­கங்­க­ளுக்கு  இடை­யி­லான முரண்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். இவ்­வா­றான நிலையில் வெசாக் தினத்­துக்­கான தொனிப்­பொ­ரு­ளாக சமூக நீதி மற்றும் ஸ்திர­மான உலக சமா­தானம் என்­பது தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் ஸ்திர­மான உல­கத்தின் சமா­தானம் இரண்டு சேதங்­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பா­டு­களில் அடிப்­ப­டை­யாக தங்­கி­யி­ருக்­க­வில்லை. சிந்­தனைஇ மன­நிலைஇ வெறுப்பு மற்றும் வன்­முறை போன்ற சிந்­த­னை­களில் ஊடு­ரு­வி­யி­ருக்கும் மறை பொருட்கள் ஆகி­ய­வற்­றில்தான் உலக சமா­தானம் தங்­கி­யுள்­ளது.

எமது பிராந்தியத்தில் காணப்படும் பயங்கரவாதத்தின் தோற்றத்தின் மூலம் இந்த கொடூரமான உணர்வின் பலமான பிரசாரத்தினை காணமுடியும். மிகவும் கவலை தரும் விடயமாக வெறுப்பு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் மூலம் பேச்சுக்களுக்கு அவர்கள் தயாராகியிருக்கவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. மாறாக அழிவையும் மரணத்தையும் ஏற்படுத்துவதற்காக அவை காணப்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் பரவிக் காணப்படும் வன்முறையினை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்லது அதற்கு விடையளிப்பதற்கு  பௌத்தத்தின் செய்தியான சமாதானமே சிறந்த விடையாக இருக்குமென்று நான் நம்புகின்றேன். சமாதானத்தை விட சிறந்த உயர்பெறுமானம் ஒன்றினை காணமுடியாது. இவ்வாறான நிலையில்  இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்பட்டு சமாதானம், உபசரிப்பு, இணக்கம் மற்றும் எமது அரசாங்கங்களின் செயற்பாடுகள்  கொள்கைகள் ஆகியவற்றினை ஊக்குவிப்பதற்காக  புத்தரின் சிந்தனையை பின்பற்ற வேண்டிய தேவையுள்ளது என்றார். 

http://www.virakesari.lk/article/19951

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.