Jump to content

இன்று சர்வதேச தாய்மொழித் தினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச தாய்மொழித் தினம்

[21 - February - 2007] [Font Size - A - A - A]

பெப்ரவரி 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக பெப்ரவரி 21 சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ அமைப்பு பெப்ரவரி 21 , 1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய் மொழித்தினமாக பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழித்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த தினத்தில் , உலகில் உள்ள 6000-7000 வரையான மொழிகளுள் ஒன்றாக உள்ள தமிழ்மொழியினைப் பேசிவரும் நாம், தமிழ் மொழியை இன்றைய சர்வதேச ரீதியான சவால்களுக்கு மத்தியில் எத்தகைய நோக்கில் முன் கொண்டு செல்லப்போகின்றோம் என்பது, ஆக்கபூர்வமான உரையாடலுக்குரிய விடயமாக அமைகின்றது .

கடந்த நான்கு வருடங்களாக சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடிவரும் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் இன்றைய சூழலில் தமிழ் மொழி பற்றிய எமது கருத்துகளை ஆக்கபூர்வமான உரையாடலுகளுக்காகப் பகிர்ந்து கொள்ள முனைகின்றோம்.

இன்று உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் தாம் வாழும் நாடுகளின் சுதேச மொழிகளில் தமது இரண்டாவது தலைமுறையினரைப் பரிச்சயப்படுத்தி வரும் நிலையில்; இவ்விதம் உலகின் வித்தியாசமான மொழிகளின் ஆளுமைகளுடன் வளரும் தலைமுறையினருக்கான தொடர்பு மொழியாகத் தமிழை, உலகத்தமிழருக்கான இணைப்பு ஊடகமாக நாம் பயன்படுத்துவது ஆக்கபூர்வமான முன்னெடுப்பாக இருக்கும்.

இதனைச் சாத்தியமாக்குவதற்குரிய வகையிலேயே இன்றைய தகவல் தொழில்நுட்ப வலையமைப்பு "தமிழ் இணையம்" அமைந்துள்ளது . கணினித் தமிழுக்கூடாக உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தொடர்ந்து தமிழர்களாக வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கிட முடியும்.

இத்தகைய செயற்பாடுகள் ஊடாக இதுவரை ஆங்கில மூடாக மட்டும் ஒரு பரிமாணத்தில் தரிசித்து வந்த உலகப்பார்வையினை நாம் பலபரிமாணத்தில் தரிசித்திட முடியும். அதாவது நேரடியாக ஜேர்மன் மொழியிலிருந்தும் பிரான்சிய மொழியிலிருந்தும் டச்சு மொழியிலிருந்தும் நோர்வீஜிய மொழியிலிருந்தும் ஸ்பானிய மொழியிலிருந்தும் தமிழுக்கு மொழி பெயர்ப்புகள் வரும்போது உலகம் பற்றிய பல பரிமாணங்களையும் நாம் தரிசிக்க முடியும்.

இதே போல் தமிழில் உள்ளதை உலகம் முழுவதும் பரவலாக்கவும் முடியும். இதனூடாக பலபரிமானங்களில் உலகப் பார்வையை வழங்கும் மொழியாகவும், உலகம் முழுவதும் பரவலாக்கிய மொழியாகவும் தமிழ் செழுமை அடையும் என்பது எமது எதிர்பார்ப்பு.

இன்று சுதேசிய மொழிகள் அனைத்தும் தாய்மொழிகள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் இந்த மொழிகள் அனைத்தும் ஆண்களின் மொழியாகவே அமைந்திருக்கின்றன.

உதாரணத்திற்கு எமது தமிழ்மொழியினை எடுத்துக் கொண்டால் இம் மொழியில் கோபத்தினை,வெறுப்பினை வெளிக்காட்டுவதற்கான சொற்களாக பெண்களின் பாலுறுப்புக்களோடு தொடர்புபட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காணலாம்.

இத்துடன், சாதியடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் சமூகங்களின் சாதிப் பெயர்களும் தமிழில் கோபம் வெறுப்புக்கான மொழிகளாக அமைந்திருக்கின்றன.

இதே போல ஆணாதிக்க அதிகார ஒடுக்குமுறைச்சிந்தனைகளை மொழியூடாகக் கட்டமைத்துள்ள நிலையினைக்களைந்து. ஆணுக்கும் பெண்ணுக்கும் அனைத்து மனிதர்களுக்கும் உரிய சமத்துவத்தை வழங்கும் ஆக்கபூர்வமான மொழியாகத் தமிழை மீளமைத்துக் கொள்ளுதலே ஆக்கபூர்வமான தமிழ்மொழியின் நிலைப்பிற்குச் செய்யும் பணியாக அமையும்.

"மூன்றாவது கண் " (உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு)

தினக்குரல்

Link to comment
Share on other sites

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்கும் காணோம்,

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்!

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்

வள்ளவர்போல், இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்ற வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகிமை யில்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்!

உள்ளத்தில் உண்மையளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவு மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெலாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்;

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்!

- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மாரே தந்தைமாரே உலகில் எங்கிருந்தாலும் உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் தாய் மொழியை முதலில் கற்றுக் கொடுங்கள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கில மோகத்தில் தாய் மொழியில் கற்ற அம்மாவை அப்பாவை மம்மி டாட் என்று அழைப்பதோடு தொடங்கி வாரிசுகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுப்பதையே அவமானமாக அந்தஸ்துக்குறைவாகக் கருதுகின்றனர். ஆனால் என்ன சிறு குழந்தைகள் மூளையோ தாய் மொழிக்கு மட்டுமன்றி குறைந்தது 8 மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடிய தன்மைகளைக் கொண்டுள்ளது. ஆகவே தயவு செய்து தாய் மொழியை வீட்டில் தூயதாகப் பேசுங்கள் வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுங்கள். அது அவர்களை இரண்டாம் மொழி கற்பதைக் கூட இலகுவாக்கும். :icon_idea: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமயம், நடனம், சங்கீதம் என்பவற்றுக்கு முக்கியம் கொடுக்கும் பெற்றோர்களில் சிலர் 'எமது கலாச்சாரத்தினை பிள்ளைகளுக்கு பழக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள்'. நல்லவிடயம். ஆனால் பிள்ளைகளுடன் தமிழில் இவர்கள் கதைப்பதில்லை. தமிழை மறந்தால் அடையாளத்தினை இழக்கப்படுவார்கள் என்பதினை இவர்கள் நினைப்பதில்லை. சிங்களவன் அழிக்காமல் நீர்கொழும்புத் தமிழர்கள் (ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை) சிங்களவராக மாறிவிட்டார்கள். சிங்களவன் வேண்டுமென்றே தென்பகுதியில் உள்ள தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களை நியாமிக்காததினால் , அங்குள்ள தமிழ்ப்பிள்ளைகள் சிங்களப் பாடசாலையில் படித்து சிங்களவராக மாறும் நிலையில் இருக்கிறார்கள். சிங்களவனின் விருப்பத்திற்கேற்ப புலம் பெயர்ந்த நாட்டிலும் சிறுவர்கள் தமிழை மறந்து அடையாளத்தினை இழக்கிறார்கள்.புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசியப் பற்றுள்ளவர்களின் சிலரின் பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை. அவுஸ்திரெலியாவில் சில தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழைச் சொல்லிக்கொடுக்காமல் பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகள் கற்பிக்கிறார்கள். எனக்கு ஒரு ஆசை வெளினாட்டில் வெள்ளைக்காரன் எல்லொரையும் அடிக்க, இவர்கள் எல்லோரும் ஈழத்துக்கு அகதியாகச் செல்ல வேண்டும். அப்பொழுது தமிழ் தெரியாமல் இவர்கள் படும் கஸ்டத்தினை பார்த்து ரசிக்கவேணும்.

Link to comment
Share on other sites

சமயம், நடனம், சங்கீதம் என்பவற்றுக்கு முக்கியம் கொடுக்கும் பெற்றோர்களில் சிலர் 'எமது கலாச்சாரத்தினை பிள்ளைகளுக்கு பழக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள்'. நல்லவிடயம். ஆனால் பிள்ளைகளுடன் தமிழில் இவர்கள் கதைப்பதில்லை. தமிழை மறந்தால் அடையாளத்தினை இழக்கப்படுவார்கள் என்பதினை இவர்கள் நினைப்பதில்லை. சிங்களவன் அழிக்காமல் நீர்கொழும்புத் தமிழர்கள் (ஜெயராஜ் பெர்ணாண்டோ பிள்ளை) சிங்களவராக மாறிவிட்டார்கள். சிங்களவன் வேண்டுமென்றே தென்பகுதியில் உள்ள தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களை நியாமிக்காததினால் , அங்குள்ள தமிழ்ப்பிள்ளைகள் சிங்களப் பாடசாலையில் படித்து சிங்களவராக மாறும் நிலையில் இருக்கிறார்கள். சிங்களவனின் விருப்பத்திற்கேற்ப புலம் பெயர்ந்த நாட்டிலும் சிறுவர்கள் தமிழை மறந்து அடையாளத்தினை இழக்கிறார்கள்.புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசியப் பற்றுள்ளவர்களின் சிலரின் பிள்ளைகள் தமிழ் கதைப்பதில்லை. அவுஸ்திரெலியாவில் சில தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழைச் சொல்லிக்கொடுக்காமல் பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகள் கற்பிக்கிறார்கள். எனக்கு ஒரு ஆசை வெளினாட்டில் வெள்ளைக்காரன் எல்லொரையும் அடிக்க, இவர்கள் எல்லோரும் ஈழத்துக்கு அகதியாகச் செல்ல வேண்டும். அப்பொழுது தமிழ் தெரியாமல் இவர்கள் படும் கஸ்டத்தினை பார்த்து ரசிக்கவேணும்.

இலங்கையிலும் இது நடக்கிறது..நானும் இதற்ற்கு ஒரு பலி ஆடு ஆக்கபட்டேன்..அறியாவயதில், ஆங்கிலமொழி பாடசாலயில் தள்ளிவிடபட்டேன்..எமக்கு இரண்டாம் மொழியாகவேனும் தமிழ் படிப்பிக்கவில்லை..இது நடந்தது இலங்கையில்...இருந்தாலும், எனக்கு தமிழ்மீது உள்ள ஆர்வத்தால், கிடைத்தெல்லாத்தயும் வாசித்து, என் தமிழை வளர்கிறேன்..

...அங்குள்ள தமிழ்ரின் போகும் மிகவும் மாறி தான் வருகிறது..

நான் A/L படிக்கும் போது அரசாங்க பாடசாலயில் இருந்து ஒரு நண்பி O/L எடுத்துவிட்டு வந்தா..ஒருநாள் எமது பாடசாலையில் அபூர்வமாக ஒரு தமிழ் புத்தகம் கிடைத்தது, நானும் படித்துகொண்டிருந்தென்.என்னி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.