Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலைமாற்று நீதி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்; யதார்த்த ரீதியான ஆய்வொன்று

Featured Replies

ஆயுதப் போராட்டத்தில் அல்லது அரசாங்கத்தின் அடக்குமுறையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நாடுகளில் நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை குறிப்பதே நிலைமாற்று நீதியாகும்.சமாதானம் மற்றும் நல்லாட்சியுடன் மாற்றமடைவதை  இது சுட்டி நிற்கின்றது.

இழைக்கப்பட்ட தவறுகளை நிவர்த்தி செய்தலை இந்த நிலைமாற்று நீதி நடவடிக்கைகள் நாடி நிற்கின்றன. இழப்பீடுகளை வழங்குதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மீள இடம்பெறாமையை உறுதிப்படுத்துதல் போன்றவை நிலைமாற்று நீதி நடவடிக்கைகளாகும்.

இந்த நடவடிக்கைகளில் நிறுவன ரீதியான சீர்திருத்தங்களும் உள்ளடங்குகின்றன. துஷ்பிரயோகங்களை தடுக்க முடியாத அல்லது அவற்றில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதே நிறுவன ரீதியான  சீர்திருத்த நடவடிக்கைகளாகும். உண்மை ஆணைக்குழுக்கள், குற்றவியல் விசாரணைகள், இழப்பீட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன இவற்றில் உள்ளடங்கும்.


யுத்தத்திற்குப் பின்னர் எட்டு வருடங்கள் கடந்துள்ளன. இந்நிலையில், இந்த நடவடிக்கைகள் எவ்வளவு தூரத்திற்குச் சென்றுள்ளன என்ற கேள்வி மேலெழுகின்றது.  எமது நாட்டில் இந்த நடவடிக்கைகளில் எவையாவது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்வியும் மேலெழுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா அமர்வில் ஒவ்வொரு தடவையும் கவனம் செலுத்தப்படுகின்றது. 2015 மற்றும் 2017 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகள் குறித்ததாக இந்தக் கவனம் அமைந்திருந்தது. தமிழ் அரசியல் தரப்பினர் இந்த விடயம் குறித்து தமது கவனத்தை செலுத்தியிருந்தனர். சர்வதேச சமூகம் தமது தேவதைகளாக விளங்கும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசாங்கம் ஜெனீவா அமர்வுகளை நெருக்கடி முகாமைத்துவ விடயமாக, நிகழ்வாக பார்க்கின்றது. இனிமையான பேச்சுடன் அது நெருக்கடி முகாமைத்துவ  நிகழ்வாக நோக்குகின்றது. குறிப்பிட்ட ஒரு காலத்திற்கான அவகாசத்தை பெற்றுக்கொண்ட பின் அடுத்த பேரவையின் அடுத்த அமர்வு வரை அரசின் செயற்பாடின்மை இருந்து வருகிறது.

எந்தத் தரப்பும் நாட்டின் பிரஜைகள் தொடர்பாக அதிகளவில் ஈடுபடுவது அல்லது விடயங்களை தெரிவிப்பது என்பதற்கான தேவை குறித்து பார்ப்பதாக தென்படவில்லை. அத்துடன், தண்டனை விலக்கீட்டு சிறப்புரிமைக் கலாசாரத்தை இல்லாமல் செய்வதற்கான தமது உறுதிப்பாடு நோக்கி செயற்படுதல், எமது கலாசார விழுமியங்களை மீள நிலைநிறுத்துதல் போன்ற விடயங்களை கொண்டிருத்தல் தொடர்பாகவும் எந்தத் தரப்பும் செயற்படுவதாகத் தென்படவில்லை.

வெளிநாட்டு நீதிபதிகள், உள்நாட்டு நீதிபதிகளுடன் உள்ளக நீதிமன்றங்கள்/ விசேட நீதிமன்றங்களில் அமர்ந்திருக்க வேண்டுமா என்பது தொடர்பான கேள்வியே சூடான விவாதத்துக்கான விடயமாக இதுவரை காணப்படுகிறது. ஆனால்,  இந்த நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பான ஆயத்தப்பாடுகள் அல்லது கலந்துரையாடல்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல்கள் எவையும் கிடைப்பதாக காணப்படவில்லை.

அத்துடன், அந்த நீதிமன்றங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பது குறித்தோ நிலைமாற்று நீதி தொடர்பான ஏனைய விடயங்களை வழங்குவது குறித்தோ இழப்பீடு உண்மையைத் தேடுதல், மீள இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதோ அல்லது அவை தொடர்பான விடயங்களோ பொதுமக்களுக்கு கிடைப்பதாக தென்படவில்லை. 


பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக கவனத்திற்கெடுத்தால் எமக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் தேவைப்படும். ஜெனீவா சாசனங்களை தேசிய சட்டத்தில் உள்ளீர்த்துக் கொள்ள வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.  

அத்துடன், சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பாகவும் தேசிய சட்டத்தில் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது. உதாரணமாக பொதுமக்களை மனிதக் கேடயமாக அல்லது வேண்டுமென்றே பொதுமக்கள் நிலைகள் மீது சாட்டுதல்களுக்கு வழிநடத்தல் போன்ற குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சட்டங்களை தேசிய சட்டத்தில் உள்ளீர்த்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

ஆஸ்பத்திரிகள் மீதான தாக்குதல்களும் பொதுமக்கள் நிலைகளில் உள்ளடங்கும். ஆனால், இவை யாவும் இலங்கைச் சட்டத்தில் குற்றங்களாக உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. நீதி விசாரணைக்கு புறம்பான கொலைகள் அல்லது பலவந்தமாக காணாமல் போதல் போன்ற குற்றங்களில் விசாரணையாளர் சாதாரணமான தண்டனைக்குரிய குற்றங்களில் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

அதாவது கொலை, கடத்தல் போன்ற தண்டனைக்குரிய சாதாரண சட்டங்களில் விசாரணையாளர் சார்ந்திருக்க வேண்டியதாக இருக்கும்.  இவை இந்த மாதிரியான குற்றங்களின் பாரதூரத் தன்மையை பிரதிபலிக்க மாட்டாது. யாவற்றுக்கும் மேலாக இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்பாக தேசிய சட்டத்தில் உள்ளீர்த்துக் கொள்ளப்படாவிடில் கட்டளைக்கான பொறுப்பு அல்லது இணைந்த குற்றவியல் நடவடிக்கை தொடர்பான செயற்பாட்டை மேற்கொள்ளுதல் சாத்தியமாக அமையாது. 


மற்றொரு சிறிய ஆசிய நாடொன்றிலிருந்து உதாரணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். கிழக்கு திமோரில் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னர் திமோர் கிளர்ச்சியாளர்களுக்கும் இந்தோனேஷிய இராணுவத்திற்குமிடையில் விசேட குற்றவியல் தீர்ப்பாயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. கிழக்குத் திமோரிலும் இந்தோனேஷியாவிலும் அவை ஏற்படுத்தப்பட்டன. இதன்விளைவாக கிழக்குத் திமோரின் புதிய தண்டனைக்  கோவை உள்ளீர்க்கப்பட்டது.

இதில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விரிவான பிரிவொன்று உள்ளடக்கப்பட்டது. 2009 இல் திமோர் பாராளுமன்றத் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கான தேவையை அழுத்தி உரைப்பதாக அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. இவை நாங்கள் பின்பற்றக்கூடிய உதாரணங்களாகும்.

இழப்பீடுகள் விவகாரம் போதியளவுக்கு இலங்கை விவகாரத்தில் கையாளப்பட்டிருக்கவில்லை. இந்த பொதுமக்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பொதுமக்கள் விசேட தேவை உள்ளவர்களாக அல்லது காயங்களால் பீடிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

அவர்களில் அநேகமானோர் நஷ்ட ஈட்டையோ அல்லது இழப்பீட்டையோ பெற்றுக் கொள்ளவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களும் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவினால் திரட்டப்பட்ட ஆதாரங்களின் ஊடாக நிரூபிக்கப்பட்ட விடயங்களுக்காவது குறைந்தது இந்த நட்டஈடு வழங்கப்பட வேண்டியுள்ளது.

பரணகம ஆணைக்குழு மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு என்பன ஏற்கனவே செயற்பட்டிருந்தன. இதேவேளை நீண்டகாலமாக காத்திருந்த காணாமல் போனோர் அலுவலகம் இறுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. காணாமல்  போதல் சம்பவங்களுக்கு அரசாங்கமும் அரச சார்பற்ற தரப்பினரும் பொறுப்பாளிகளாக இருப்பதாக இந்த ஆணைக்குழுக்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் காணாமல் போனோர் அலுவலகம் (இன்னமும் இயங்கவில்லை) சரியான பாதையில் செல்வதற்கான நடவடிக்கையாக அமைந்திருக்கிறது.  அத்துடன் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தையும் அமைப்பதில் இது சம்பந்தப்பட்டுள்ளது. இதில் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் என்பன குறித்தும் கவனத்தை செலுத்த வேண்டும்.

அத்துடன் பிள்ளைகளுக்கான கல்வி ஆதரவு பொறிமுறைகள், பாடசாலைக்கான போக்குவரத்து என்பனவும் உள்ளீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். வீடுகள் அழிக்கப்பட்டு கிணறுகள் நிரப்பப்பட்டு காணப்படும் நிலையில், திரும்பிச் செல்வோருக்கு அவர்களின் வசிப்பிடங்களையும் ஏனைய வசதிகளையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவி வழங்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் இழப்பீடு வழங்குதலை அதிகளவுக்கு அர்த்தபுஷ்டியானதாக உருவாக்கும்.  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் நிறுவன ரீதியான மறுசீரமைப்பின் தேவை பற்றியும் குறிப்பிடுகிறது. இவற்றை நிலைமாற்று 
நீதி என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல் நாட்டின் நல்லாட்சியின் நலன்கள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சர்வதேச யூதர்கள் ஆணைக்குழு பயிற்சிப் பட்டறையொன்றை கொழும்பில் அண்மையில் சட்டத்தரணிகளுடன் நடத்தியிருந்தது.

(2016 நவம்பரில்) அச்சமயம் அந்த ஆணைக்குழு சட்ட மறுசீரமைப்புகளுக்கான பரிந்துரைகள் மற்றும் இத்தகைய மறுசீரமைப்புகளை உருவாக்குவதற்கான அடையாளம் காணப்பட்ட மூலோபாயங்கள் என்பனவற்றை பரிந்துரைத்திருந்தது. சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், நீதித்துறை என்பனவற்றை சுட்டிக்காட்டுபவையாக அவை அமைந்திருந்தன. 


இந்த கண்டுபிடிப்புகள் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பின்மையை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாட்டை அழுத்தி வலியுறுத்துகின்றன. அத்துடன் சட்டரீதியான ஆராய்ச்சி, விசேடமான விடயங்களுக்கான விசேட நீதிமன்றங்கள் என்பனவற்றுக்கு ஆதாரத்தையும் வளங்களையும் வழங்குவதற்கான தேவையை வலியுறுத்தியுள்ளன.

அத்துடன் சிறப்பான மொழி மற்றும் உரைபெயர்ப்பு வசதிகளை நீதிமன்றங்களில் கொண்டிருப்பதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சந்தேக நபர்களும் பிரதிவாதிகளும் தமது சொந்த மொழியில் அமர்வுகளின் போது தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடியதாக அமையும்.  

அத்துடன்  சட்டரீதியான முன்முனைப்புகளை பொதுமக்கள் அதிகளவுக்கு மேற்பார்வை செய்வதற்கு இடமளிக்கும் குற்றவியல் நீதி முறைமையை வலுப்படுத்துவதற்கான ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. இந்த நகல்வரைபைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் சிவில் சமூகத்தை  உள்ளீர்த்துக் கொள்வது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சாட்சிப் பாதுகாப்பு சட்டமூலத்தைப் போன்று நகல் வரைபைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் அதிகளவுக்கு சிவில் சமூகத்தை உள்ளீர்த்துக் கொள்ளும் விடயம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.


இந்த விடயங்கள் யாவும் அரசாங்கம் மற்றும் தமிழ் அரசியல் தரப்பு என்பனவற்றுக்குள் நல்லிணக்கத்திற்கான அமைப்புகளுக்கு தேவைப்படும் விடயங்களாகும். உண்மை, நீதி, இழப்பீடு, மீள இடம்பெறாமை என்பனவற்றை உள்ளடக்கிய நிலைமாற்று நீதி நடவடிக்கைகளை அமுல்படுத்துவது தொடர்பாக இவை உதவியாக அமையும். அத்துடன் அரசியல்வாதிகளும் சாதகமான முறையில் பொதுமக்கள் மத்தியிலான அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதற்கு உதவ முடியும்.

நாட்டின் நல்லாட்சியை அதிகளவில் மனதில் கொண்டு இவற்றை மேற்கொள்ள முடியும். நல்லாட்சியில் தண்டனை விலக்கீட்டு சிறப்புக் கலாசாரத்தை இல்லாதொழிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. நிலைமாற்று நீதி சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த பிரஜைகள் நம்பிக்கையை கொண்டிருப்பதுடன் குற்றவியல் நீதி முறைமையிலும் அரசாங்க அதிகாரிகளின் பக்கச்சார்பின்மை தொடர்பாகவும் நம்பிக்கையை கொண்டிருப்பார்கள். இதற்கு சட்ட மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

துஷ்பிரயோகங்கள் அல்லது தவறான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் என்பனவற்றிற்கு நிவாரணமளிப்பதனூடாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக அமையும். தேவைப்படும் சட்ட மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்களை உருவாக்கும் போதும் துஷ்பிரயோகங்கள் தவறாக செயற்பட்டதால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் போதும் சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் போதும் நாட்டின் பிரச்சினைகளுக்கு  சமாதான முறையில் தீர்வு காணும் போதும் நிலைமாற்று 


நீதி தொடர்பான நம்பிக்கையை வெளியார் தலையீடின்றி கட்டியெழுப்ப இயலும். 
டெய்லி மிரர் 

http://www.thinakkural.lk/article.php?article/gsu0dammsk87934fc7e9c4df18374ntxse30aafd8b7e1ab324f27712vktaq#sthash.UyW84Cpl.dpuf

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.