Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சிகளின் செயற்பாடுகள் சந்தேகத்தைத் தருகின்றன, பாரதப்பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறினோம் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக்கட்சிகளின் செயற்பாடுகள் சந்தேகத்தைத் தருகின்றன,

Leed-news-7e426c86ced6bf27d0f87c38f5c2a44e7e3a8927.jpg

 

பாரதப்பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறினோம் என்கிறார் சம்பந்தன்
ஆர்.பி

இந்தியப் பிரதமர் மோடியுடனான பேச்சுக்கள் மிகவும் சாதக மாகவும் மகிழ்ச்சிதரும் வகையிலும் அமைந்திருந்தன. எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் நாம் தொடர்ந்தும் செய்வோமென பிரதமர் மோடி எமக்கு உறுதியளித்தார். அத்து டன் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்ப டுத்த ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்தி ரக்கட்சியும் ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லை யென்றும் அவர்களின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினோம். நாம் கூறியவற்றை மிகுந்த அக்கறையுடன் அவர் செவிமடுத்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று வீரகேசரி வார வெளியீட்டுக்கு தெரிவித்தார். 

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு வௌ்ளிக்கிழமை மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான பகுதியில் இடம்பெற்றது.

பிரதமர் நரேந்திரமோடி இந்தியா புறப்பட்டுச் செல்வதற்கு சற்று முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பு தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கூட்டமைப்பின் சார்பில் பேசப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்துக்

 கேட்டபோது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் விளக்குகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வின் அவசியம் குறித்து நாம் எடுத்து விளக்கினோம். உறுதியான அரசியல் தீர்வொன்றைக் காணாத பட்சத்தில் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைக் காணமுடியாதுபோகும் என்றும் எடுத்துக் கூறினோம்.

நிலையான சமாதானம் ஏற்பட வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் காலதாமதமின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென எடுத்துரைத்தோம். அத்துடன் இரு பிரதான கட்சிகளும் இது விடயத்தில் ஒத்துழைத்து செயற்படுவதாகத் தெரியவில்லை என்பதையும் அவர்களின் ஒருமித்த நிலைப்பாடு தொடர்பில் சந்தேகமே மேலோங்கியுள்ளதாகவும் நாம் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தோம். அத்துடன் மாநில சுயாட்சி, காணி விவகாரம், சட்டம் ஒழுங்கு, மீள்குடியேற்றம், வீட்டு வசதி தொடர்பிலும் இந்திய பிரதமரிடம் தெளிவாக எடுத்து விளக்கினோம்.

வட கிழக்கில் இந்திய முதலீடுகளின் அவசியம் தொடர்பிலும் அவற்றின் மூலம் தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் எடுத்துரைத்தோம். அதற்கு தாம் கவனம் செலுத்துவதாக தெரிவித்ததுடன் தம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்தார்.

அவருடனான சந்திப்பு மிகவும் திருப்தி தரும் வகையில் அமைந்திருந்தது. என தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-05-14#page-1

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விவகாரத்தில் சந்தேகத்துக்கிடமாக செயல்படுபவது  ஐ.தே.கட்சியையும் சு.கட்சியையும் என மோடிக்கு இனங்காட்டி
முட்டுக்கட்டைகளும் தடைகளும் கட்சிமட்டத்தில் தான் உள்ளதாக பொருள்பட கூறியிருப்பது சம்பந்தரின் மடைத்தனம். திட்டமிட்ட
இழுத்தடிக்குகளும் தடைகளும்சம்பந்தனும் ஒரு அங்கமாக இருக்கும் அரசமட்டத்தில் இருந்துதான் போடப்படுகின்றன என்று சொல்வதற்கு என்ன தயக்கம்? வயது ஏற ஏற அனுபவம் கூடும் என்று சொல்வார்கள் இங்கு தமிழர் அரசியலில் அது உண்மையா என்பது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதை மோடியிடம் கூறி ..............???

ஒழிக்க தெரியாமல் போய் விதானை வீட்டில ஒழிக்கிற மாதிரி எல்லோ இருக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, vanangaamudi said:

தமிழர் விவகாரத்தில் சந்தேகத்துக்கிடமாக செயல்படுபவது  ஐ.தே.கட்சியையும் சு.கட்சியையும் என மோடிக்கு இனங்காட்டி
முட்டுக்கட்டைகளும் தடைகளும் கட்சிமட்டத்தில் தான் உள்ளதாக பொருள்பட கூறியிருப்பது சம்பந்தரின் மடைத்தனம். திட்டமிட்ட
இழுத்தடிக்குகளும் தடைகளும்சம்பந்தனும் ஒரு அங்கமாக இருக்கும் அரசமட்டத்தில் இருந்துதான் போடப்படுகின்றன என்று சொல்வதற்கு என்ன தயக்கம்? வயது ஏற ஏற அனுபவம் கூடும் என்று சொல்வார்கள் இங்கு தமிழர் அரசியலில் அது உண்மையா என்பது தெரியவில்லை.

 

1 hour ago, Maruthankerny said:

இதை மோடியிடம் கூறி ..............???

ஒழிக்க தெரியாமல் போய் விதானை வீட்டில ஒழிக்கிற மாதிரி எல்லோ இருக்கு. 

ராசாமாரே! கதை சொல்லிச்சொல்லியே காலத்தை கடத்துற கோஷ்டியைப்பற்றி என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறியள்? :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.