Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை நெருங்கவிட மாட்டேன்...' ரஜினிகாந்த் பரபர பேச்சு!

Featured Replies

  • தொடங்கியவர்

'ரஜினியின் மனம் பகல் இரவு போல் மாறிக்கொண்டே இருக்கும்!' - பெயரியல் நிபுணர் கருத்து #Nameology

 
 

ஜினிகாந்த் என்னும் பெயர் தமிழ் திரையுலக வரலாற்றில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'அபூர்வ ராகங்கள்' தொடங்கி  கபாலி வரை அவரது படங்களுக்கு  ஓர் எதிர்பார்ப்பு இருந்தே வருகின்றது. இந்தக் 'காந்தம்' தமிழக மக்களை எப்படி எதனால் ஈர்த்தது? அப்படியென்ன வசியம் இவரது பெயரில் ஒளிந்துள்ளது. ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் பற்றி பெயரியல் நிபுணர் சி.வி.ராஜராஜனிடம் கேட்டோம்.

ரஜினி

அதேவேளையில் அரசியலில் இவர் எழுப்பிய 'எழுச்சிக்குரல்கள்' எங்கேயோ கேட்ட குரலாக இருந்துவந்து இப்போது நான் போட்ட சவாலாக மாறி இருக்கிறது. அரசியலில் இவரது நிலையை ஆய்வு செய்வதற்கு முன், இவரது பிறந்த தேதியின் பலம், பலவீனத்தைப் பார்ப்போம்.

ரஜினிகாந்த் பிறந்த தேதி 12-12-1950
1+2+1+2+1+9+5+0= 21
2+1=3
பிறந்த தேதி 1+2= 3

ரஜினிகாந்தின் பிறந்த தேதியை வைத்துப் பார்க்கும்போது அவரது உடல் எண், உயிர் எண் எல்லாமே 3 தான் வருகின்றது.
3 ஆம் எண்ணுக்குரிய காரகன் குரு. குருவின் ஆதிக்கத்தை வலிமையை முழுவதுமாகப் பெற்றவர். ஆனால், இந்த குருவின் சிறப்பம்சம் என்னவென்றால், பள்ளிக்கூட ஆசிரியர், கல்லூரி பேராசிரியர் போல், மற்றவர்களுக்கு ஆசோனைகள். அறிவுரைகள் கூற முடியும் மற்றவர்களை, நல்ல முறையில் உருவாக்க முடியும். அதாவது ஒரு ஆசிரியர், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற படிப்புகள் படித்த அதிகாரியாக தன் மாணவனை உருவாக்க முடியும். ஆனால், அவரால் கலெக்டராகவோ, காவல்துறை உயர் அதிகாரியாகவோ ஆக முடியாது. நம் இந்தியாவின் ஜாதகமும் இப்படித்தான் இருக்கின்றது. INDIA
1+5+4+1+1+=12= 3

உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. ஆனால், எல்லா மதங்களும் தோன்றுவதற்கு முன்பே, இந்தியா மதரீதியான நாடாக, 'மதங்களின் தாய் நாடாக' இருந்திருக்கிறது. இந்து மதம், சமணம். பௌத்தம் சீக்கிய மதம் என்று இங்கு தோன்றிய அளவு மதங்களும் மத போதகர்களும் ஆன்றோர்களும் சான்றோர்களும் வேறு எங்குமே தோன்றவில்லை. ராஜராஜன்சகலருக்கும் உபதேசம் வழிகாட்டுதல்களை தானே முன்வந்து வழங்கிய நாடு. ஆனால், அது வல்லரசாக என்றும் ஆகவில்லை. மற்ற நாடுகளுக்கு நல்லரசாகத்தான் இருந்து வருகிறது. 

எதற்கு இதைச் சொல்கின்றேனென்றால், 3ஆம் எண் மற்றவர்களுக்குத்தான் வழிகாட்டும். இப்போது குருவின் ஆதிக்கம் பெற்ற ரஜினிகாந்த்தின் கலையுலக அரசியல் உலக வாழ்க்கையைப் பார்ப்போம். சிவாஜிராவ் கெய்க்வாட்டாக, அடையாறு நடிப்புப் பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவரை கே.பாலச்சந்தர் தனது படத்தில் அறிமுகம் செய்துவைத்து 'ரஜினிகாந்த்' என்ற பெயரை வைக்கிறார்.

RAJINIKANTH
2+1+1+1+5+1+2+1+5+4+5 = 28

2+8=10=1
மூன்றாம் எண் ஆதிக்கம் பெற்ற ரஜினிகாந்துக்கு சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள 1ஆம் எண் பெயரை மிகப் பொருத்தமாக, தன்னை அறியாமலே சூட்டி விடுகின்றார். அன்று தொடங்கிய வெற்றி இன்றுவரை அவருக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது காரணம் தமிழ்நாடுதான்.
TAMILNADU
4+1+4+1+3+5+1+4+6 = 29
2+9=11=2.

3ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்த ரஜினிகாந்துக்கு குருவின் வலிமை உண்டு. இவர் சந்திரனின் வலிமைபெற்ற தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்திட, 'குரு சந்திர யோகம்' ஏற்பட்டு, காந்தம் போல, சந்திரகாந்தம்போல் புகழ் பெற்று விட்டார். அவருக்கு புனர்ஜென்மமான மறுவாழ்வைக் கொடுத்த படத்தின் பெயரும் சந்திரமுகி.

இதே ரஜினிகாந்த் கர்நாடகாவிலோ, மகராஷ்டிராவிலோ இருந்து, அங்குள்ள படங்களில் நடித்திருந்தால், நிச்சயம் புகழ் பெற்றிருக்கமாட்டார். 'குரு சந்திர யோகம்' இருப்பதால்தான் குளிர்ச்சி, மலர்ச்சி, காமெடி, அடிதடி என்று இவரது படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றன .

ரஜினிகாந்த்

குருவை எப்போதும் தேடிக்கொண்டே இருப்பார். ஆனால், சந்திரன் அவரை முழுமையான ஆன்மிகப் பாதைக்குப் போக விட மாட்டார். அரசியலை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் மற்றவர்களுக்காக எந்தவித பிரதிபலனும் நிர்ப்பந்தமும் இல்லாமல் சுயமாக 'வாய்ஸ்' கொடுத்தபோது இவரது வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. பலனும் பன்மடங்காக இருந்தது. 1996 ஆம் ஆண்டில் முதல்முறையாக தி.மு.க + த.மா.கா. கூட்டணிக்கு 'வாய்ஸ்' கொடுக்கின்றார். இவர் ஆதரித்த கூட்டணி அமோகமாக வெற்றி பெறுகிறது.

அதே கூட்டணிக்கு வெளிநாட்டிலிருந்து வந்து, விமானத்திலிருந்து இறங்கியும், இறங்காத நிலையில் நிர்ப்பந்தத்தின் காரணமாக 'வாய்ஸ்' கொடுக்கின்றார். கோவை குண்டு வெடிப்பு நடந்த நிலையில், வாய்ஸ் கொடுக்கின்றார். அப்போது அது பலனற்றுப் போய் விடுகின்றது. அதே ரஜினிகாந்த் 2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த அணிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லை. 'No Voice உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்' என்று கூறி ஒதுங்கிவிட்டார்.

ரஜினிகாந்த்

அதன்பிறகு கால சூழல்களின் மாற்றம், பாபாவின் தோல்வி என்று பல விஷயங்கள் சினிமாவிலும் அரசியலிலும் அரங்கேறி விடுகின்றன. பா.ம.க.வுடன் மோதல் ஏற்பட்டு தனது சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ஸ் கொடுக்கின்றார். பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கின்றார். அப்போது அவரது சொல்லுக்கு மதிப்பின்றி போய்விடுகின்றது. இதற்கெல்லாம் காரணம் குருவின் ஆதிக்கம் பெற்ற அவர், பிரதிபலன் பார்க்காமல், தனது குரலை ஒலிக்கின்றாரோ அப்போதெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்பது தான். 

 

ரஜினியைப் பொறுத்தவரை வழக்கம்போல் சினிமா, லௌகீகம், ஆன்மிகம் என்ற மூன்று முகங்களுடன் இருப்பார். அரசியலில் வழக்கம் போல் பின்னணிக்குரல் கொடுக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். நேரடி அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. லௌகீக சுகங்களைத் துறந்து முழுமையான ஆன்மிகத்துக்கும் அவரால் போக முடியாது. குருசந்திர ஆதிக்கத்தில் அவரது மனம் இருப்பதால், பகல், இரவு போல் இந்த இரண்டும் அவருக்கு மாறி, மாறி வந்துகொண்டுதானிருக்கும். 

http://www.vikatan.com/news/spirituality/90175-rajinis-mind-will-change-like-day-and-night---nameology-experts-opinion.html

  • Replies 66
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

 

 
  • top_3_3167769g.jpg
     
  • top_1_3167767g.jpg
     
  • top_2_3167768g.jpg
     
 

அரசியல் செய்யாமலேயே கட்சி தொடங்காமலேயே தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு நிகராக பேசப்படும் நபராக உருவாகியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

டீசர், ட்ரெய்லர், மெயின் பிக்சர் இப்படி ஒரு படத்துக்கு பரபரப்பு கூட்டுவதுபோல், ரஜினியும் 'ஆண்டவன் நினைத்தால் வருவேன்', 'போர் வரும்போது சந்திப்போம்' என்றெல்லாம் பேசி அவரது அரசியல் பிரவேசத்துக்கான எதிர்பார்ப்பை ஒரு மெயின் பிக்சருக்கான எதிர்பார்ப்பைப் போல் அதிகரித்து வைத்திருக்கிறார். மெயின் பிக்சர் வெற்றி எப்படி ரசிகர்கள் கையில் இருக்கிறதோ அப்படித்தான் ரஜினியின் அரசியல் வெற்றி மக்கள் அளிக்கும் வாக்குகளில் இருக்கிறது.

ரஜினியின் அரசியல் வெற்றி தோல்வி எல்லாவற்றையும் மக்கள் தீர்மானிக்கட்டும். ஆனால், அதற்குள்ளதாகவே அவரை அரசியல்வாதியாகவே தீர்மானித்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.

அதற்கான அச்சாரம்தான் போயஸ் கார்டனை ஆக்கிரமித்து இருக்கும் ரஜினி போஸ்டர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் போயஸ் கார்டன் பரபரப்பு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அதிமுக தொண்டர்கள் இல்லை, ஜெயலலிதாவுடனேயே இருந்த சசிகலாவும் இல்லை அவருடைய உறவினர்களும் அங்கு வருவதில்லை.

தமிழகத்தின் அரசியல் அடையாளமாக இருந்த போயஸ் கார்டன் இப்போது மற்றுமொரு குடியிருப்புப் பகுதியாக மட்டுமே இருக்கிறது.

ஆனால் மே 15-ம் தேதி தொடங்கி மே 20 வரை 5 நாட்கள் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றி பூடகமாக ஒருசில வார்த்தைகள் சொல்லிவைத்ததில் இருந்து மீண்டும் போயஸ் கார்டனில் போஸ்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

போயஸ் கார்டனில் இம்முறை இருப்பவை 'அம்மா' போஸ்டர்களோ அதிமுக போஸ்டர்களோ இல்லை அத்தனையும் ரஜினிகாந்த் போஸ்டர்கள்.

'ஏழைகளின் முதல்வரே.. போருக்கு தயார்... மக்கள் வாழ நீங்கள்தான் ஆள வேண்டும்.. இந்திய அரசியல் வான் கண்ட அற்புதம்' போன்ற வாசகங்களுடன் விதவிதமான போஸ்டர்கள் போயஸ் கார்டனை அலங்கரித்துள்ளன.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தேவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது மீண்டும் பின்னி சாலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கும். போயஸ் கார்டனுக்கு 'தொண்டர்களாக மாறிய ரசிகர்கள்' வந்து செல்ல நேரிடும். கால்ஷீட் தேதி ஒதுக்கிய ரஜினிகாந்த் கட்சி பொதுக்கூட்டத்துக்கான தேதிகளை முடிவு செய்ய வேண்டியிருக்கும். அறிக்கைகள் வெளியிட வேண்டியிருக்கும். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும். போராட்டங்கள் எல்லாம் ஏசி ஹாலில் நடத்த முடியாது என்பதை ரஜினி உணர்ந்திருக்க வேண்டும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் அரசியல் பிரவேசம் தனிக்கட்சியா அல்லது தேசியக் கட்சியுடனான இணைப்பா என்பதைப் பொருத்து ஊடகங்களுக்கான பேட்டியும் மாறும். இவையெல்லாம் அனுமானங்களே.

ஆனால் வெறும் அனுமானங்களைக்கூட உணர்வுபூர்வமாக அணுகும் ரசிகர்களால் தான் இன்று போயஸ் கார்டனுக்கு மீண்டும் ஓர் அரசியல் மேக் ஓவர் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன்னர் தமிழர் முன்னேற்றப் படையினர் ரஜினி உருவ பொம்மையை எரித்துப் போராடியது போயஸ் கார்டன் செல்லும் வழியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா சிறை சென்ற பின்னர் யாரும் கண்டுகொள்ளாத ஏரியாவாக இருந்த போயஸ் கார்டன், பின்னி சாலை பகுதியெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் மீடியா வெளிச்சத்துக்கும் போலீஸ் கவனத்துக்கும் வந்தன.

ஒற்றைக் கருத்தை சூசகமாக ரஜினி சொல்லிச் சென்றுவிட, அது குறித்தே இன்றுவரை எல்லோரும் பேசிக் கொண்டிருப்பது என்னவோ ரஜினி சொன்னது போல், ஒரு விதையை மண்ணில் புதைத்ததோடு நிறுத்தாமல் அது வளர்ந்து துளிர்விட மேல்பரப்பை செம்மைப்படுத்துவதுபோல் அமைந்துள்ளன ரஜினி மீதான விமர்சனங்களும் ரஜினிக்கு எதிரான போராட்டங்களும்.

ஆனால் ஒரு தொண்டனுக்கும் ரசிகனுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. ஓர் இயக்கத்தின் மீதான காதலால் அதனுடன் தனது மூச்சையும் எண்ணத்தையும் செயல்பாட்டையும் இணைத்துக் கொள்பவன் உயிர்த்தொண்டன். அவனை அவ்வளவு எளிதாக அசைத்துப்பார்க்க முடியாது. அந்த இயக்கத்தின் தலைமை மாறினாலும் தொண்டர்களின் பலம் குறையாது.

ஆனால், ரசிகன் தனிப்பட்ட ஆளுமையின் ஈர்ப்பு விசையால் உருவானவம். ரசிகனுக்கு சலிப்பு ஏற்படலாம். ரசிகனின் விருப்பம் மாறலாம். ரசிகனைத் தக்க வைத்துக்கொள்ள அவன் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறெல்லாம் அந்த ஆளுமை வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும்.

எனவே, போயஸ் தோட்டத்தில் திடீரென முளைத்துள்ள போஸ்டர்கள் ரஜினிக்கு அரசியல் உத்வேகம் அளித்தாலும்கூட தொண்டனாக மாறிவரும் ரசிகனை தக்கவைத்துக் கொள்ள ரஜினி நிறையவே மெனக்கெட வேண்டும் என்பது நிதர்சனம்.

ரஜினிகாந்த் போஸ்டர்கள் சில..

rr3_3167728a.jpg

 

rr4_3167729a.jpg

 

rr5_3167733a.jpg

rr6_3167734a.jpg

 
 

http://tamil.thehindu.com/opinion/blogs/அவர்-எப்ப-வருவார்-எப்படி-வருவார்னு-தெரியாது-ஆனால்-போயஸ்-கார்டனில்-போஸ்டர்-வந்தாச்சு/article9711326.ece?homepage=true

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DAgksHRXsAAoSGe.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவிரியிலிருந்து தண்ணீர் வராது.. ஆனால் தலைவர் மட்டும் வரலாமா?.. சீமான் ஆவேசம்

காவிரியிலிருந்து தண்ணீர் வராது. ஆனால் தலைவர் மட்டும் வரலாமா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சென்னை: காவிரியிலிருந்து தண்ணீர் மட்டும் தர மாட்டாங்க. அங்கிருந்து வரும் தலைவர் மட்டும் தமிழகத்தை ஆள வேண்டுமா என்று சீமான் கேள்வி எழுப்பினார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தினத்தந்தி அதிபர் சி.பா. ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Seeman condemns Rajini kanth political entry

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும். தமிழர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியாதா. அன்புமணி, திருமாவளவன், சீமான், கார்த்திக் ஆகியோரும் பச்சைத் தமிழர்களே. காவிரியிலிருந்து தண்ணீர் மட்டும் வராது. தலைவர் மட்டும் வரலாமா? தமிழகத்துக்கு வாழ வந்தவர்கள்தான் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றார் அவர்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/seeman

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DAm7WovXgAA7dRa.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் எச்சரிக்கை!

 
 

நீண்ட காலத்துக்குப் பின்னர், தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் அவர்களிடம் பேசுகையில், ‘தற்போதைய சிஸ்டம் சரியாக இல்லை. அதனால், மக்களுக்கு ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை இல்லாமல்போய்விட்டது. எனவே, சிஸ்டத்தைச் சரிப்படுத்த வேண்டும். நீங்கள் எல்லோரும் ஊருக்குச் செல்லுங்கள். போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’, எனப் பூடகமாகப் பேசினார். அதனால், அவர் அரசியலுக்கு வருவார் என்கிற பேச்சு பலமாக அடிபடுகிறது. அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கின்றன.

Rajinikanth


முக்கியமாக, "அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், ஊழல்வாதிகளைத் தன்னருகே நெருங்கவிட மாட்டேன்" என்று ரஜினி கூறியிருந்தார். மேலும், "அப்படி அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்போதே விலகிவிடுங்கள்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

86fa8c34-29e8-4e90-9570-0769d92acfd1_131

 


இந்நிலையில், ரஜினி தனது ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,"அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும் இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும்  ஒழுக்கத்துக்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/cinema/90326-rajinikanth-warns-his-fans.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மலேசியா நாளிதலில் வந்தசெய்தி...........

DAq3_V-XcAAjN2l.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

ரஜினியை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய மதுரை ரசிகர்கள்

ரஜினியை அரசியலுக்கு வரவேற்று மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

 
201705261659163901_Madurai-fans-poster-r
 

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் “நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.

அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன், ஆண்டவன் கட்டளையிட்டால் அரசியலுக்கு வருவேன். போர் வரும் வரை காத்திருங்கள்” என்றார். மேலும் மு.க.ஸ்டாலின், சீமான், திருமாவளவன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

ரஜினியின் இந்த பேச்சு அவர் அரசியலுக்கு விரைவில் வருவார் என்று பரவலாக பேசப்பட்டது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல் நலக்குறைவு காரணமாக தமிழக அரசியல் மந்தமாக உள்ள சூழ்நிலையில் ரஜினியின் இந்த பேச்சு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வந்து விட்டதாகவே போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள். ரஜினியின் அரசியல் பேச்சுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று சென்னையில் அவ ரது உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக ரஜினி ரசிகர்களும் போராட்டம் நடத்தினர்.

201705261659163901_Md--ph-X._L_styvpf.gi

இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் ரஜினி ரசிகர்கள் “போருக்கு தயார்” என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். அதில் “தர்மத்தின் தலைவா போருக்கு தயார்! எப்போதெல்லாம் ‘தர்மம்’ அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன்” என்று அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை பொது மக்களும், வாகன ஓட்டிகளும் நின்று பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து மதுரை ரஜினி ரசிகர்கள் கூறுகையில், கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காரணத்தால் தமிழக அரசியல் ‘களை’ இழந்து காணப்படுகிறது. நாள்தோறும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்.

போருக்கு (அரசியலுக்கு) தயாராக இருங்கள். போர் வரும்போது அழைக்கிறேன் என்று கூறி உள்ளது எங்களுக்கு உற்சாகத்தை ஏற் படுத்தி உள்ளது என்றனர்.

 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/26165908/1087348/Madurai-fans-poster-rajini-welcome-to-politics.vpf

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்

’வேலை செய்ய விடுங்கள்’, ‘அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்’ - ரஜினி

 

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாக பேசினார். தனது ரசிகர்களிடம் 'போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்' என ரஜினி தெரிவித்தது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. இதையடுத்து, ரஜினிக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. 

Rajinikanth


குறிப்பாக, அமித் ஷா முதல் தமிழிசை செளந்தரராஜன் வரை பலரும் அவரை, பி.ஜே.பி-இல் இணைய அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி தனிக்கட்சி தொடங்க உள்ளார் என்று அவர் சகோதரர் சத்யநாராயண ராவ் கூறியதாக தகவல் வெளியாகியது. ஆனால், தான் அப்படி கூறவில்லை என்று பின் சத்யநாராயண ராவ் மறுத்தார். இதற்கிடையே, காலா பட ஷுட்டிங்கிற்காக, ரஜினிகாந்த், இன்று மும்பை புறப்பட்டுள்ளார்.

அப்போது, தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காலா பட ஷுட்டிங் நாளை தொடங்குகிறது. அதற்காக மும்பை செல்கிறேன். இது என் வேலை. என்னுடைய தொழில். அதைப் பார்க்க போகின்றேன். இது உங்களுடைய வேலை. அதை நீங்கள் பாருங்கள். என்னை, என்னுடைய வேலையை பார்க்க விடுங்கள்" என்று கூறினார்.

பின் சென்னை விமானநிலையத்துக்கு சென்ற அவரிடம், அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "அரசியலுக்கு வருவது தொடர்பாக நேரம் வரும்போது தெரிவிப்பேன்" என்றார்.

 

ஆனால், ‘மாட்டிறைச்சிக்குத் தடை’ உள்ளிட்ட கேள்விகளுக்கு ரஜினி பதிலளிக்கவில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/90569-rajinikanth-speaks-about-political-entry.html

  • தொடங்கியவர்

பிரபாகரனே ரஜினியைப் பாராட்டியிருக்கிறார்: சமூக வலைதளங்களில் பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்

 
ரஜினி | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்
ரஜினி | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்
 
 

'இலங்கை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனே எங்கள் தலைவர் ரஜினியைப் பாராட்டியிருக்கிறார். இதை விட அவர் தன்னை தமிழ் உணர்வுள்ளவராக அறிவித்துக் கொள்ளவும், அரசியல் பிரவேசம் செய்யவும் சிறப்பு தகுதி என்ன வேண்டும்?' என்ற கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள். அது வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகள் சீமான் முதல் கமலஹாசன் வரை மீடியாக்களில் பகிரப்பட்டே வருகின்றன. அதை உன்னிப்பாக கவனித்து வரும் ரசிகர்களும் பதிலுக்கு பதில் சமூக வலைதளங்களில் அவர்கள் கருத்துகளை பதிந்து வருகிறார்கள். குறிப்பாக அவர் தமிழரல்லர்; தமிழரல்லாத அவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என வரும் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய பழைய செய்தி ஒன்றை வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் 'பூநகரியில் இருந்து பின்வாங்கியது போர்த்தந்திரம். கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்ற விடமாட்டோம். பிரபாகரன் சபதம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கொழும்பு பகுதி செய்தியில் ரஜினிகாந்துக்கு பாராட்டு என குட்டித்தலைப்பை சுற்றி சிகப்பு மையால் வட்டமிடப் பட்டிருக்கிறது. அதில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த பிரபாகரன், 'முப்படைகளை வைத்துக் கொண்டு முப்பது வருஷமாக யுத்தம் செய்றீங்க. உங்களால் அவர்களை (புலிகளை) ஜெயிக்க முடியுமா?' என்று திரையுலகினர் நடத்திய போராட்டத்தின் போது கூறியதன் மூலம் எம்முடைய மண்ணின் கள யதார்த்தத்தை நடிகர் ரஜினிகாந்த் அப்படியே பிரதிபலித்து இருக்கிறார்!' என்று கூறியதாக அச்சிடப்பட்டுள்ளது.

'இப்படி அந்தக் காலத்திலேயே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவுக்குரல் கொடுத்தவர் எங்கள் தலைவர். அவரை அரசியலுக்கு வரக் கூடாது; அவர் தமிழர் அல்லர்; ஆட்சி ஆளக்கூடாது என்று சொல்ல இங்குள்ளவர்களுக்கு என்ன தகுதி இருக்கு?' என ஒருவருக்கொருவர் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

அது மட்டுமல்ல; 'ரஜினியும் சில அரைவேக்காடுகளும்...!' என்ற தலைப்பில் தமிழன் என்ற சொல்லுக்கான பதிலடியை ரஜினி ரசிகர்கள் (ஒரு நீண்ட கட்டுரை போல் உள்ளது) பகிர்ந்து கொள்கிறார்கள். 'வெறும் 20 நிமிட பேச்சுக்கு அலறுகிறார்கள்..பல வருங்கால முதல்வர்களுக்கு பீதி கிளம்பிவிட்டது..ஆனால் சில அரைவேக்காடுகள் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது... இதுவரை வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தபின்னரும் நம் அறிவு ஜீவிகளின் கல்லெறிதல் நிற்கவில்லை. அப்பேற்பட்ட உலக மகா யோக்கியர்களுக்குத்தான் இந்த பதிவு..! என்று நீளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, பல்வேறு தரப்பட்ட இளைஞர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பதிலுக்கு பதில் கொடுத்து யாரும் வன்முறையில் இறங்கி விடக்கூடாது என்பதில் எங்கள் தலைவர் கவனமாக இருக்கிறார். உணர்ச்சி வசப்பட்டு களத்தில் இறங்கினால் என்ன நடக்கும் என்பதற்கு சென்னையில் ஒரு நிர்வாகியை மன்றத்தை விட்டும் நீக்கியிருக்கிறார். அதையெல்லாம் உத்தேசித்தே அமைதி காக்கிறார்கள் ரசிகர்கள்.

ராகவேந்திரா மண்டபம் ஒரு மாதம் வரை புக் ஆகியிருக்கிறது. எனவேதான் அவர் அந்த நேரத்தில் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை. அந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்தவே அடுத்த படப்பிடிப்பில் இறங்கி விட்டார். அதுவரை பொறுமையாக இருக்கும்படி அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தது 18 மாவட்டத்து ரசிகர்களை அவர் சந்திக்கும்போது அடுத்த அரசியல் சூடு நிச்சயம் பெரிய அளவில் கிளம்பும்!' என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/பிரபாகரனே-ரஜினியைப்-பாராட்டியிருக்கிறார்-சமூக-வலைதளங்களில்-பதிலடி-கொடுக்கும்-ரசிகர்கள்/article9715010.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

 

ரஜினிகாந்த் எந்திரனா? தந்திரனா?|Socio Talk

ரஜினி ஏன் இவ்வளவு சர்ச்சைகளுக்கு ஆளானார்?
ரஜினி அரசியலுக்கு வருவதில் உள்ள சிக்கல் என்ன?
கமல் மீது இல்லாத விமர்சனம் ரஜினி மீது ஏன்? ரஜினியிடம் சில கேள்விகள்!

  • தொடங்கியவர்

'எம்.ஜி.ஆர் வழி அல்ல; என்.டி.ஆர் வழி!'  -தீவிர ஆலோசனையில் ரஜினிகாந்த்

 
 

நடிகர் ரஜினிகாந்த்

' நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் எப்போது?' என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. " ஆகஸ்ட் மாதத்துக்குள் அவர் உறுதியாகக் கட்சியைத் தொடங்குவார். கடந்த சில நாள்களாக அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்' என்கின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள். 

ஒவ்வொரு காலகட்டத்திலும், அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி பதில் கூறுவதும் பின்னர் அந்த அறிவிப்பு நீர்த்துப் போவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. அதேபோல், கடந்த மாதம் ரசிகர்களை நேரில் வரவழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டவர், ' சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்' என அதிரடியைக் கிளப்பினார். அடுத்து வந்த சில நாட்களில் இயக்குநர் ரஞ்சித்தின் 'காலா' படத்தில் ரஜினி நடிக்கும் தகவல்கள் வெளியானது. தற்போது காலா படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கிறார். அங்கிருந்தபடியே, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். " அரசியல் பயணத்தைத் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. அதற்கான சாதக, பாதகங்களை ஆய்வு செய்து வருகிறார். தற்போதுள்ள மாநில அரசு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதை தனக்கு சாதகமானதாகப் பார்க்கிறார். தற்போது ரசிகர் மன்றங்களை கிராமம்தோறும் வலுப்படுத்தும் வேலைகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார். மன்றத்தின் விதிகளுக்கு முரணாக நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். காலா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அரசியல் பணிகளில் வேகமாக இறங்குவார்" என விவரித்த ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம் சில விஷயங்களைப் பட்டியிலிட்டார். 

" ரசிகர்களுடன் சந்திப்பு முடிவடைந்த நாளில் இருந்தே, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினி. ஓரிரு நாட்களுக்கு முன்பு அரசியல் பிரமுகர் ஒருவரிடம், நாடாளுமன்றத் தேர்தல், மக்கள் செல்வாக்கு உள்பட பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். விவாதத்தில் ரஜினி பேசும்போது, ' அரசியலுக்கு வருவது பெரிதல்ல. மக்களின் பெரும்பான்மை ஆதரவைத்தான் எதிர்பார்க்கிறேன். 50 சதவீதத்துக்கும் மேல் மக்கள் ஆதரவு கிடைத்தால், தலைமைப் பதவியை ஏற்பது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். அதற்கும் குறைவான ஆதரவு கிடைத்தால், என்னுடைய கட்சியின் சார்பில் மற்றவர்களை ஆட்சி அதிகாரத்தில் முன்னிறுத்துவேன். எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிய நேரத்தில் 30 சதவீதம் வரையில் ஆதரவைப் பெற்றார். இந்த அளவு ஆதரவைவிட, என்.டி.ராமாராவைப் போல் 50 சதவீத ஆதரவை எதிர்பார்க்கிறேன். அப்படிக் கிடைத்தால், ஆட்சி பொறுப்பில் அமரவும் தயாராக இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ரஜினியிடம் பேசிய அவரது நண்பர் ஒருவர், ' தேர்தலில் போட்டியிட விரும்பினால், எதிர் எதிர் சமூகங்கள் வலுவாக இருக்கும் பகுதிகளில் போட்டியிடுங்கள். அப்போதுதான் இரண்டு சமூகத்தினரின் வாக்குகளும் சம அளவில் உங்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக, வடக்கே குடியாத்தத்தில் வன்னியர்களும் அட்டவணை சமூகத்து மக்களுக்கு சம எண்ணிக்கையில் உள்ளனர். இங்கே நீங்கள் போட்டியிடும்போது பொதுவான தலைவராக உருவெடுக்க முடியும். கூடவே, தெற்கில் ராஜபாளையம் அல்லது சிவகாசி போன்று ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்யலாம். இரண்டு வெவ்வெறு தொகுதிகளில் ஒரேநேரத்தில் போட்டியிடும்போது, மாநிலம் முழுவதும் உங்கள் ரசிகர்கள் கடுமையாக தேர்தல் வேலை பார்ப்பார்கள். உங்கள் படம் வெளியாகும்போது, என்ன உற்சாகத்தில் இருக்கிறார்களோ, அதே உற்சாகத்தை தேர்தல் பணிகளில் காட்டுவார்கள்' என விவரித்துவிட்டு, ' நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கும்போது, சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதுவே, சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் சரியானதாக இருக்கும். இதே நிலைப்பாட்டைத்தான் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் பல நேரங்களில் எடுத்துள்ளனர்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார் ரஜினி. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அரசியல் பிரவேசம் குறித்த உறுதியான தகவல் வெளியாகும்" என்றார் விரிவாக. 

" தமிழ்நாட்டில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யாத பணிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் ரஜினியின் பார்வையாக இருக்கிறது. மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் தன்னுடைய கால்தடம் வலுவாக பதிய வேண்டும் என ஆசைப்படுகிறார். யாரையும் பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. பாசிட்டிவ் அரசியல் பற்றித்தான் தன்னை சந்திக்க வருபவர்களிடம் பேசுகிறார். ' என்னை எதிரியாக நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். நான் யாருக்கும் எதிரி அல்ல' என்பதுதான் அவருடைய தாரக மந்திரம். மற்றவர்கள் தன்னை எதிரியாக நினைப்பதையே மூலதனமாகப் பார்க்கிறார். 'அனைத்து சமூகத்து மக்களுக்கும் பொதுவான தலைவராகக் காட்டிக் கொள்வதற்கும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த செயல்களைச் செய்வதற்கும் இது சரியான தருணம்' என நினைக்கிறார். அதற்கு வெள்ளோட்டமாக, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் மணிக்கணக்கில் விவாதிக்கிறார்" என்கிறார் ரஜினியை அண்மையில் சந்தித்த அரசியல் பிரமுகர் ஒருவர். 

 

'எந்தவொரு செயலிலும் தீவிரம் காட்டுவதற்கு முன்பு ஆழ்ந்து யோசிப்பவர்கள், அதனை செயல்படுத்துவதிலும் தாமதம் செய்வார்கள்' என்பார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசமும் அதையொட்டியே அமைந்திருக்கிறது. ' இந்தமுறை ரசிகர்களை அவர் ஏமாற்றுவதற்கு வாய்ப்பில்லை' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/91220-time-to-choose-ntr-way-than-mgrs-rajinikanth-plans-bigger-than-expected.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.