Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாளுடன் வந்த ரவுடிகளால் யாழ்.நகரில் நேற்று பதற்றம்

Featured Replies

வாளுடன் வந்த ரவுடிகளால் யாழ்.நகரில் நேற்று பதற்றம்

 

யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவ­ரைத் துரத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. வாளு­டன் வந்த இரு­வ­ரும் நக­ரில் சாதா­ர­ண­மாக நட­மா­டி­னர்.

மானிப்­பாய் பகு­தி­யைச் சேர்ந்த 21 வயது இளை­ஞன் ஒரு­வ­ரின் பெய­ரில் பதிவு செய்­யப்­பட்ட மோட்­டார் சைக்­கி­ளி­லேயே அவர்­கள் வாளு­டன் நக­ரில் சுமார் 15 நிமி­டங்­கள் நட­மா­டி­னர். அந்­தப் பகு­தி­யால் மற்­றொரு மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த 2 இளை­ஞர்­களை அவர்­கள் துரத்­திச் சென்­ற­னர். வாளு­டன் நட­மா­டிய இரு­வ­ரும் 20 வயது மதிக்­கத்­தக்­க­வர்­கள்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸா­ருக்­கும் தக­வல் வழங்­கப்­பட்­டது. எனி­னும் பொலி­ஸார் குறித்த பகு­திக்கு வரு­வ­தற்கு முன்­னரே அவர்­கள் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­று­விட்­ட­னர். சினி­மாப் பாணி­யில் இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தால் ஸ்ரான்லி வீதி­யால் பயணித்தவர்கள் பதற்றமடைந்தனர்.

unnamed-28.jpg

http://uthayandaily.com/story/2869.html

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள போலிஸ் ,ஆமிக்கு கூட இவர்களை கண்டால் பயமாம் :rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்

எமது பொறுப்பைத் தட்டிக்கழிக்கலாமா

யாழ். நக­ரில் நேற்­று­முன்­தி­னம் பட்­டப்­ப­க­லில் இரு இளை­ஞர்­கள் வாள்­க­ளு­டன் மோட்­டார் சைக்­கி­ளில் வந்து அட்­ட­கா­சம் புரிந்­து­விட்­டுப் போனார்­கள். தமிழ்த் திரைப்­ப­டங்­க­ளில் வரும் காட்­சிக்கு ஒப்­பாக அவர்­கள் இரு­வ­ரும் தெரு­வில் வாளு­டன் நின்று சண்­டித்­த­னம் புரிந்­த­னர். அங்கு நின்­றி­ருந்­த­வர்­களை வெருட்­டி­னர். பின்­னர் பொலி­ஸார் வரு­வ­தற்கு முன்­னர் தப்­பி­யோ­டி­விட்­ட­னர்.

நக­ரின் இத­யத்­தில் -ஸ்ரான்லி வீதி­யில் -இந்­தச் சம்­ப­வம் நடந்­தே­றி­யது. அந்த வீதி எப்­போ­துமே நெரி­சல் மிகுந்­தது. பல கடை­கள், வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் என எப்­போ­தும் கூட்­டம் நிரம்பி வழி­யும் பகுதி. பல நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­ ­களு­டன் பகல் பொழு­து­க­ளில் பர­ப­ரப்­பாக இயங்­கிக் கொண்­டி­ ருக்­கக்­கூ­டிய இடம்.

பல தரப்­பட்­ட­வர்­க­ளும் வந்­து­போ­கும் ஒரு தளம். அங்­கு­தான் சுமார் 20 வயது மதிக்­கத்­தக்க இரு இளை­ஞர்­கள் கையில் வாளு­டன் வந்­தி­றங்கி அத­னைச் சுழற்­றிக்­காட்டி அட்­ட­கா­சம் புரிந்­த­னர். ஆனால், அவர்­க­ளைத் தடுக்­கவோ, பிடிக்­கவோ எவரும் முன்­வ­ர­வில்லை. ஏன்?

பயம் மற்­றும் நமக்­கேன் வீண் வம்பு என்று ஒதுங்­கிச் செல்­லும் மனப்­பாங்கு. ஸ்ரான்லி வீதி­யில் அன்று நின்­றி­ருந்த பல­ரும் அந்த இளை­ஞர்­க­ளை­வி­டப் பல­சா­லி­க­ளா­க­வும், வயது அதி­க­மா­ன­வர்­க­ளா­க­வும் துணிவு மிக்­க­வர்­க­ளா­க­வும் இருந்­தி­ருப்­பார்­கள். ஆனால், அவர்­களை மடக்­கவோ, பிடிக்­கவோ எவரும் விரும்­ப­வில்லை.

அப்­படி ஏதா­வது முயற்சி செய்­தால் அந்த இளை­ஞர்­க­ளின் கைக­ளில் இருக்­கும் வாள்­க­ளுக்கு இரை­யா­கி­வி­டு­வோம் என்­கிற அச்­சம் சில­ருக்கு. வேறு பல­ருக்கோ அந்த அச்­சம் இல்லை என்­றா­லும், இந்­தப் பிரச்­சி­னை­யில் தலை­யி­டப்­போய் நானும் என் குடும்­ப­மும் ஏதா­வது சிக்­க­லில் மாட்­டிக்­ கொண்டு பின்­னர் பொலிஸ் நிலை­யத்­திற்­கும் அலை­ய­வேண்­டியி­ருக்­கும்; எதற்­குத் தேவை­யில்­லாத வேலை என்று ஒதுங்­கிப் போகும் மனோ­நிலை.

இந்த இரண்­டும்­தான் சண்­டித்­த­னத்­தின் மூல­த­னம். எல்­லாத் தமிழ்த் திரைப்­ப­டங்­க­ளி­லும் சொல்­வ­தைப் போல மக்­க­ளி­டம் உள்ள பயம்­தான் சண்­டித்­த­னத்­தின் மூல­த­னம். அது­போய்­விட்­டால் சண்­டி­யர்­களை எவரும் சட்டை செய்­யப்­போ­வ­தில்லை.

இப்­போது எம்­முன் உள்ள கேள்வி, இது­போன்ற சண்­டி­யர்­களை அப்­ப­டியே விட்­டு­விட்டு -பொறுப்­பான ஒரு பொது­ம­கன் என்­கிற எம் ஒவ்­வொ­ரு­வ­ரது பொறுப்­பை­யும் தட்­டிக் கழித்­து­விட்டு – சண்­டி­யர்­க­ளை­யும் சண்­டித்­த­னத்­தை­யும் வளர்த்­து­வி­டப்­போ­கி­றோமா என்­ப­து­தான்?
அன்று ஸ்ரான்லி வீதி­யில் நின்­றி­ருந்­த­வர்­க­ளில் மூன்­றி­லொரு பகு­தி­யி­ன­ரா­வது அந்­தச் சண்­டி­யர்­க­ளின் முன்னே வீதி­யில் இறங்­கி­யி­ருந்­தால் அவர்­க­ளால் நிச்­ச­யம் தப்­பிச் சென்­றி­ருக்க முடி­யாது. அத்­தோடு அவர்­க­ளைப் போன்­ற­வர்­க­ளுக்கு அது ஒரு தெளி­வான செய்­தி­யா­க­வும் இருந்­தி­ருக்­கும்.

சண்­டி­யர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை, சண்­டித்­த­னத்­தைத் தடுக்­க­வில்லை என்று பொலி­ஸார் மீதும், நீதி­மன் றங்­கள் மீதும் விமர்­ச­னங்­களை வைத்­து­விட்டு, எமது பொறுப்­பி­லி­ருந்து ஒதுங்­கிக் கொள்­வது இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வா­காது. இந்­தச் சமூ­கத்­தைப் பாது­காக்க வேண்­டிய பொறுப்பு எம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் உள்­ளது.

ஒன்­றி­ணைந்த மக்­கள் சக்­தி­யின் முன்­பாக இவர்­க­ளைப் போன்ற சண்­டி­யர்­கள் தூசுக்­குச் சமா­னம். ஆனால், நாம் எப்­போ­துமே எமது ஒன்­றி­ணைந்த சக்­தி­யைத் திரட்­டு­வ­தற்­கும் பயன்­ப­டுத்­து­வ­தற்­கும் தவ­று­கி­றோம். தனி­யன்­க­ளா­கவே நின்று எமது பாது­காப்பு, குடும்­பம் என்­கிற வட்­டத்­திற்­குள் அணுகி பல விட­யங்­க­ளை­யும் கோட்­டை­விட்­டு­வி­டு­கி­றோம்.

அப்­படி எமது கட­மையை நாம் தட்­டிக்­க­ழித்­துக்­கொண்டு பொலி­ஸார் மீதும் நீதித்­துறை மீதும் குற்­றஞ்­சாட்­டு­வது முறை­யா­னது அல்ல. சட்­டத்­தை­யும் ஒழுங்­கை­யும் பாது­காப்­ப­வர்­கள் அவர்­கள்­தான் என்­கி­ற­போ­திலும், அவர்­க­ளுக்கு உத­வி­க­ர­மா­ன­வர்­க­ளாக நாம் இருப்­ப­தும் அவ­சி­யம். ஒவ்­வொ­ரு­வ­ரும் தமது சமூ­கக் கூட்­டுப் பொறுப்­பு­ணர்வை உணர்ந்து இத்­த­கைய சம­யங்­க­ளில் செயற்­ப­ட­வேண்­டும். அப்­போ­து­தான் இது­போன்ற தேவை­யற்ற செயல்­க­ளை­யும் குற்­றங்­க­ளை­யும் களைய முடி­யும்.

http://uthayandaily.com/story/3038.html

3 minutes ago, நவீனன் said:

பல தரப்­பட்­ட­வர்­க­ளும் வந்­து­போ­கும் ஒரு தளம். அங்­கு­தான் சுமார் 20 வயது மதிக்­கத்­தக்க இரு இளை­ஞர்­கள் கையில் வாளு­டன் வந்­தி­றங்கி அத­னைச் சுழற்­றிக்­காட்டி அட்­ட­கா­சம் புரிந்­த­னர். ஆனால், அவர்­க­ளைத் தடுக்­கவோ, பிடிக்­கவோ எவரும் முன்­வ­ர­வில்லை. ஏன்?

பயம் மற்­றும் நமக்­கேன் வீண் வம்பு என்று ஒதுங்­கிச் செல்­லும் மனப்­பாங்கு. ஸ்ரான்லி வீதி­யில் அன்று நின்­றி­ருந்த பல­ரும் அந்த இளை­ஞர்­க­ளை­வி­டப் பல­சா­லி­க­ளா­க­வும், வயது அதி­க­மா­ன­வர்­க­ளா­க­வும் துணிவு மிக்­க­வர்­க­ளா­க­வும் இருந்­தி­ருப்­பார்­கள். ஆனால், அவர்­களை மடக்­கவோ, பிடிக்­கவோ எவரும் விரும்­ப­வில்லை.

அப்­படி ஏதா­வது முயற்சி செய்­தால் அந்த இளை­ஞர்­க­ளின் கைக­ளில் இருக்­கும் வாள்­க­ளுக்கு இரை­யா­கி­வி­டு­வோம் என்­கிற அச்­சம் சில­ருக்கு. வேறு பல­ருக்கோ அந்த அச்­சம் இல்லை என்­றா­லும், இந்­தப் பிரச்­சி­னை­யில் தலை­யி­டப்­போய் நானும் என் குடும்­ப­மும் ஏதா­வது சிக்­க­லில் மாட்­டிக்­ கொண்டு பின்­னர் பொலிஸ் நிலை­யத்­திற்­கும் அலை­ய­வேண்­டியி­ருக்­கும்; எதற்­குத் தேவை­யில்­லாத வேலை என்று ஒதுங்­கிப் போகும் மனோ­நிலை.

சாதாரண மக்களின் சக்திக்கு அப்பாற்பட்ட இதை தடுக்க வேண்டிய பொறுப்பு காவலர்களுக்கு உரியது!
ஆனாலும் தமிழின விரோத சிங்கள-பௌத்த காடையர்கள் தமிழ் மண்ணில் போலீசாக இருக்கும் வரை இது தொடரும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இதுபோன்ற கும்பல்கள்  உருவாகியிருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, பெருமாள் said:

அங்குள்ள போலிஸ் ,ஆமிக்கு கூட இவர்களை கண்டால் பயமாம் :rolleyes::rolleyes:

எண்டாலும் றோட்டிலை நிக்கிற அப்பாவியளை புலி எண்டு சொல்லி கொண்டுபோய் மறியல்லை அடைக்கிற விண்ணர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.