Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றிவைத்து ஆரம்பித்து வைத்தார்:-

Featured Replies

  • தொடங்கியவர்
 

ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு வடக்கில் படையினர் ஏன்?

 

நினைவேந்தல் நிகழ்வில் முதலமைச்சர் சி.வி.

(முள்­ளி­வாய்க்­கா­லி­ருந்து ஆர்.ராம்)

போரின் போது அல்­லது போர் முடிவின் போது மனித உரி­மை­க­ளுக்கு மாறான போர்க்­குற்­றங்­களை இழைத்­த­வர்கள் படை­யினர். போர் முடிந்து நாட்டின் ஐக்­கி­யத்­தையும் ஒரு­மைப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்­தப்­போ­கின்றோம் என்று கூறும் அர­சாங்கம் தொடர்ந்து படை­வீ­ரர்­களை வட­மா­கா­ணத்தில் நிறுத்தி வைத்­தி­ருப்­பதன்  காரணம் என்ன? என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். 

தற்­போது மக்கள் ஜன­நா­யக போராட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ளனர். ஆகவே எமது மண்ணில் தங்­கி­யி­ருக்கும் இரா­ணு­வத்­தி­னரே, கடற்­ப­டை­யி­னரே வான்­ப­டை­யி­னரே வௌியேறு என்று எம்­மக்கள் ஒன்று சேர்ந்து குர­லெ­ழுப்பும் நன்நாள் வெகு தூரத்தில் இல்லை எனச் சுட்­டிக்­காட்­டிய முத­ல­மைச்சர் அதற்­காக எங்கள் ஒரு­மித்த குரல் ஒலிக்க வேண்­டிய கட்­டாயம் உண்டு என்­பதை மற­வா­தி­ருக்க வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலின் எட்டாம் ஆண்டு நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை மாபெரும் கொடூரம் நிகழ்ந்­தே­றிய முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் திடலில் நடை­பெற்­றி­ருந்­தது. இந்­நி­கழ்வில் பங்­கு­பற்றி பிர­தான அஞ்­சலி உரையை ஆற்­று­கை­யி­லேயே வடக்கு முதல்வர் மேற்­கண்­ட­வறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், எமது வட­மா­கா­ண­சபை தொடர்ந்து மூன்­றா­வது முறை­யாக நடாத்தும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் சோக நாள் இன்று. 2009ஆம் ஆண்டில் இறுதி யுத்­தத்தின் போது போரா­ளிகள் சில­ரையும் அப்­பாவி மக்கள் பல­ரையும் பாகு­பா­டின்றி கொன்­றொ­ழித்த ஒரு துயர நாளின் நினைவு நாளே இன்று. இந் நாள் எமது இலங்கை வாழ் தமிழ்­மக்கள் வாழ்­விலும் புலம்­பெயர் தமிழ் மக்கள் வாழ்­விலும் ஒரு மறக்க முடி­யாத துயரம் தோய்ந்த துன்­பியல் நாள். இந் நாள் தொடர்ந்து எம் மக்­க­ளி­டையே ஒரு துக்க நாளாக அனுஷ்டிக்­கப்­ப­ட­வேண்டும். எமது துய­ரத்தை வேத­னையை பிர­தி­ப­லிக்கும் இந் நாள் அதே நேரம் எமது ஒற்­று­மை­யையும் ஒரு­மித்த எதிர்­பார்ப்­புக்­க­ளையும் உல­க­றிய உதவும் நாளா­கவும் பரி­ண­மிக்க வேண்டும். எமது உற­வு­களின் அநி­யாய இன அழிப்பே எமது இனத்தின் ஒற்­று­மைக்­கான வித்­தாக அமைய வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றேன்.  

ஒன்­று­ப­ட­வேண்டும்

தமிழ்ப் பேசும் மக்கள் எங்­கி­ருந்­தாலும் ஒன்­று­பட வேண்டும் என்ற கருத்தை நான் அண்­மைக்­கா­லங்­களில் வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்றேன். எமக்குள் கட்சி பேதம் உண்டு் வர்க்க பேதம் உண்டு் சாதி பேதம் உண்டு் சமய பேதம் உண்­டு்­இன்னும் பல முரண்­பா­டுகள் உண்டு. ஆனாலும் நாம் யாவரும் தமிழ்­மொ­ழியைப் பேசு­கின்­ற­வர்கள் அல்­லது அதைப் பேசி­ய­வர்கள் வழி­வந்­த­வர்கள் என்ற பொது­வான அடை­யாளம் எமக்­குண்டு. உள் நாட்­டிலும் புலம் கடந்தும் நாம் பிரி­பட்டு நிற்­கின்றோம். ஆனாலும் எம்மை எல்லாம் ஒற்­று­மைப்­ப­டுத்தக் கூடிய ஒரு நிகழ்வு இந்த நினை­வேந்தல் நிகழ்வே என்­பது எனது கருத்து. ஏனென்றால் அநி­யா­ய­மாக கார­ண­மின்றி அப்­பாவி மக்கள் கொல்­லப்­பட்ட நாள் இது. அவர்கள் எல்­லோரும் போரா­ளிகள் என்று பிதற்­று­வோரும் உண்டு. அவர்­க­ளுக்கு எமது அனு­தா­பங்கள். கைக்­கு­ழந்­தை­களும் வலு­வி­ழந்த வயோ­தி­பர்­களும் போரா­ளி­களே என்று கூற இவர்­க­ளுக்கு எப்­படி மனம் வந்­ததோ! சமய ரீதி­யான சம்­ப­வங்கள் உண்டு. அவை மதம் சார்ந்­தவை. சமூ­க­ரீ­தி­யான சில பண்­டி­கைகள் உண்டு. அவை யாவ­ரையும் உள்­ள­டக்­க­மாட்டா. ஆனால் எமது மக்­களின் உற­வுகள் அநி­யா­ய­மாக உயிர் நீத்த இந்ந நாள் எம்­மெல்லோர் நினை­விலும் என்­றென்றும் இருக்க வேண்­டிய சோக நாள். எமது சிந்­தையில் கரும்­புள்­ளி­யொன்றை இட்­டுச்­சென்ற இந்த நாள், எம் எல்லோர் மன­தையும் உலுக்­கிய இந் நாள், சோகம் தந்த இந் நாள் எம்­மெல்­லோ­ரையுஞ் சேர்க்கும் நாளாக அமைய வேண்டும். எமது வேத­னை­களின் அடிப்­ப­டையில் எமது பரந்து வாழும் தமிழ்ச்­ச­மூகம் தமிழ் மொழி பேசும் சமூ­கங்கள் ஒன்­று­ப­ட­வேண்டும்.

புதிய ஆட்­சியில் உத்­வேகம்

2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி நாட்டின் புதிய ஜனா­தி­பதி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டதும் புதிய உற்­சா­கமும் உத்­வே­கமும் எமது மக்கள் மனதில் ஏற்­பட்­டது. காரணம் அவரின் தேர்­வுக்கு நாமும் ஒரு முக்­கிய கார­ண­மா­க­வி­ருந்தோம். எனவே அவ்­வ­ரு­டத்தைத் தொடர்ந்து வந்த மே மாதம் 18ஆந் திகதி முன்­னை­ய­வ­ருட அந்நாள் போலல்­லாது அவ் வருடம் எம்­மவர் எல்­லோ­ரையுஞ் சேர்த்து முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்­தலில் ஈடு­ப­ட­வைக்க வேண்டும் என்ற கருத்து எம்முள் மேலோங்­கி­யது. அதற்­கான புர்­வாங்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன.

நினை­வேந்­தலை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள்

நினை­வேந்தல் நிகழ்­வுக்கு முதல் நாள் வட­மா­காண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜய­சிங்­கவை தொலை­பே­சியில் நான் தொடர்பு கொண்டேன். "நாளை நான் இந்த நினை­வேந்தல் நிகழ்ச்­சியில் கலந்­து­கொள்ள உள்ளேன். உங்­க­ளுக்கு ஏதேனும் ஆட்­சே­பனை உண்டா?" எனக் கேட்டேன். "உண்டு" என்றார். ஏனென்றால் "முல்­லைத்­தீவு நீதி­மன்றம் கூட்­டங்­க­ளுக்குத் தடை விதித்­துள்­ளது" என்றார்."கூட்­டங்­க­ளுக்கு அல்­லவே" என்றேன். தன்­னிடம் நீதி­மன்றக் கட்­டளை இருப்­ப­தாக கூறினார். என்­னி­டமும் இருப்­ப­தாகக் கூறினேன். ஆராய்ச்சி செய்த போது "பெல­பாளி" என்ற பேர­ணிக்­கான சிங்­களச் சொல்­லுக்குப் பதில் "ரஸ்வீம்" என்ற கூட்­டங்­க­ளைக்­கு­றிக்கும் சொல் பிழை­யாக மொழி­பெ­யர்ப்பில் இடம்­பெற்­றமை தெரி­ய­வந்­தது. திரு.ஜய­சிங்க அவர்கள் இதைத் தெரிந்து கொண்­ட­போது எமது பிரார்த்­தனைக் கூட்­டத்­திற்கு தமக்கு ஆட்­சே­பனை இல்லை என்றார்.

அவ்­வாறு தான் வட­மா­கா­ணத்தின் முதல் நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெற்­றது. சுமார் 1500 பொலிசார் முல்­லைத்­தீவில் எம்­முடன் முரண்­பட ஆயத்­த­மாக்­கப்­பட்டு கொண்­டு­வந்து குவிக்­கப்­பட்டும் சிரேஸ்ட பொலிஸ்மா அதி­பரின் கட்­டளை எம்மை அவர்கள் வழி­விட அடி­ச­மைத்­தது.ஒரு சொல்லின் சரி­யான மொழி பெயர்ப்பில் இருந்தே அந்த முதல் நினை­வேந்தல் நிகழ்ச்சி பிரச்­சனை இன்றி நடை­பெற்­றது. சென்ற வருடம் முள்­ளி­வாய்க்கால் சூழலில் மட்டும் பொலிசார் நின்­றார்கள். வழி­நெ­டுக பொலி­சாரைக் கொண்­டு­வந்து குவிக்­க­வில்லை. ஆகவே உயிர் நீத்­தோ­ருக்­கான எமது பிரார்த்­தனை நிகழ்வு தற்­போது அர­சாங்­கத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தா­கவே நான் காண்­கின்றேன்.

ஒன்­றி­ணைக்கும் நிகழ்­வாக வேண்டும்

எனவே இந்த நிகழ்வு வரு­டந்­தோறும் எமது மக்­களை ஒன்­றி­ணைக்கும் ஒரு நிகழ்­வாக மாற­வேண்டும். அஹிம்சை முறையில் எமது எண்­ணப்­பாடைத் தெரி­விக்கும் ஒரு நாளாக மாற­வேண்டும். அந்த வகையில் எமது வருத்­தந்­தெ­ரி­விக்கும் ஏகோ­பித்த எண்­ணக்­கி­டக்­கை­களை வௌிப்­ப­டுத்தும் ஒரு நாளா­கவும் இந் நாளை அடை­யாளம் காண்­பதில் ஒரு பிழையும் இல்லை என்று கரு­து­கின்றேன்.

பிரச்­சி­னைக்கு அடிப்­படை

தற்­போது எம் மக்கள் ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் அமை­தி­யான போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். காணி­களைத் திருப்­பித்­தா­ருங்கள் என்­கின்­றார்கள். காணா­த­வர்­களின் கதி என்­ன­வென்று உரக்கக் கேட்­கின்­றார்கள். சிறையில் வாடும் அர­சியல் கைதி­களை பொது­மன்­னிப்பில் விடு­விக்கக் கோரு­கின்­றார்கள். வேலை­யற்­ற­வர்கள் வேலை­கோரி நிற்­கின்­றார்கள். மீன­வர்கள் கடற்­ப­டை­யி­னரின் காரி­யங்கள் பற்றி கார­சா­ரமாய்க் கதைக்­கின்­றார்கள். இவற்­றிற்கு அடிப்­ப­டைக்­கா­ரணம் என்ன என்று பார்த்தால் போர் முடிந்து எட்டு வரு­டங்­க­ளுக்­குப்­பின்­னரும் எந்­த­வித அர­சியல் ரீதி­யான வன்­மு­றைகள் தலை­தூக்­காத நிலை­யிலும் 150000க்கு மேலான படை­யினர் வட­மா­கா­ணத்தில் குவித்­து­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கனடா நக­ர­பி­தாவின் கேள்வி

அண்­மையில் இந்த இடத்­திற்கு பிரார்த்­த­னைக்­காக வந்த கன­டாவின் ஒன்­டா­ரியோ மாநி­லத்தின் நகர பிதா ஜோன் டொரி இதான் செல்லும் வழியில் இருக்கும் ஒவ்­வொரு இரா­ணுவ முகாம்­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­திச்­சென்றார். போருக்­குப்பின் ஏன் இத்­தனை படை முகாம்கள் என்று இங்குங் கேட்டார் கன­டா­விலும் கேட்டார். அதற்குப் பதில் சொல்ல வேண்­டிய காலம் இப்­பொ­ழுது கனிந்­துள்­ளது. போரின் போது அல்­லது போர் முடிவின் போது இழைக்­கப்­பட்ட மனித உரி­மை­க­ளுக்கு மாறான போர்க்­குற்­றங்­களை இழைத்­த­வர்கள் படை­யினர். போர் முடிந்து நாட்டின் ஐக்­கி­யத்­தையும் ஒரு­மைப்­பாட்­டையும் ஏற்­ப­டுத்­தப்­போ­கின்றோம் என்று கூறும் அர­சாங்கம் தொடர்ந்து படை­வீ­ரர்­களை இங்கு நிறுத்தி வைத்­தி­ருப்­பதன் காரணம் என்ன?

நவீ­னத்­துவம் உண்டு

அண்­மையில் நாம் பழைய வட­மா­காண இரா­ணு­வத்­த­ள­ப­தி­யிடம் இந்த எட்­டு­வ­ரு­டங்­களில் அர­சியல் ரீதி­யான முறையில் எமது மக்கள் ஏதா­வது வன்­மு­றை­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள் என்று உங்­க­ளுக்கு அறி­ய­வந்­துள்­ளதா என்று கேட்டோம். "இல்லை! ஆனால் பிரான்­சிலும் நோர்­வே­யிலும் இருந்து வந்த தொலை­பேசி அழைப்­புக்கள் ஊடாக புலிகள் இன்­னமும் சுறு­சு­றுப்­பாக உள்­ளார்கள் என்று தெரி­ய­வந்­துள்­ளது" என்றார். "அந்தத் தொலை­பேசி பரி­மாற்­றங்கள் தான் உங்­களை இங்கு தொடர்ந்து வைத்­துள்­ளதா?" என்று கேட்டோம். "ஏதேனும் வரு­மெனில் அவற்றைத் தடுக்க நாம் இங்­கி­ருக்க வேண்டும்" என்றார். இத்­தனை ஆயிரம் போர் வீரர்கள் அதற்­கா­கவா இங்­கி­ருக்­கின்­றார்கள் எனக் கேட்­ட­தற்கு "ஆம்" என்றார்.

போர் முறைகள் தற்­போது மாற்­ற­ம­டைந்­துள்­ளன. ஒரு அறைக்குள் இருந்­து­கொண்டே வட­மா­காணம் புரா­கவும் என்ன நடக்­கின்­ற­தென்­பதை நவீனத் தொழில்­நுட்ப அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

எந்­த­வி­த­மான நியா­மு­மில்லை

அதற்­காக எமது காணி­களைச் சுவீ­க­ரித்து, வீடு­க­ளைக்­கை­ய­கப்­ப­டுத்தி, தொழில்­களைத் தம்­வ­சப்­ப­டுத்தி, எமது நீர்­நி­லை­களைக் கைப்­பற்றி, வௌிமா­காண மீன­வர்­களை வருந்­தி­ய­ழைத்து எம்­மக்­களின் வாழ்­வா­தா­ரங்­களை முடக்கச் செய்து, எம் பாதிக்­கப்­பட்ட பெண்­களின் பாது­காப்­புக்­களை கேள்­விக்­கு­றி­யாக்கி, வருந்­தி­ய­ழைத்து வௌிமா­காண மக்­களை எம்­மா­கா­ணங்­களில் குடி­யி­ருத்தி, பௌத்­தர்கள் இல்­லாத இடங்­களில் புத்த உரு­வச்­சி­லை­களை உரு­வ­மைக்க உத­வி­செய்­து­வ­ர­வேண்­டுமா என்ற கேள்வி எழு­கின்­றது. இரா­ணு­வமே வௌியேறு! கடற்­ப­டையே வௌியேறு! வான்­ப­டை­யி­னரே வௌியே­றுங்கள்! என்று எம்­மக்கள் சேர்ந்து குர­லெ­ழுப்பும் நன்நாள் வெகு தூரத்தில் இல்லை என்று எண்­ணு­கின்றேன். கார­ண­மின்றி காழ்ப்­பு­ணர்ச்­சி­யுடன் இங்கு அவர்கள் காலங்­க­டத்­து­வதைக் கார­சா­ர­மாக விவா­திக்­கப்­போகும் நாள் தொலைவில் இல்லை.

படை­யி­ன­ருக்க வடக்கில் வேலை­யில்லை

உண்­மையில் இரா­ணு­வத்­திற்கும் கடற்­ப­டைக்கும் வான்­ப­டைக்கும் இங்கு வேலை­யில்லை. பாது­காப்பைப் பொலிஸ் படை­யினர் செய்­யலாம். வான்­ப­டை­யினர் வானூர்தி சேவை­களைத் தாம் நடாத்­து­வ­தற்குப் பதி­லாக தனி­யார்­க­ளுக்கு அந்தப் பொறுப்பை ஒப்­ப­டைத்­து­விட்டு அவர்கள் தமது தலை­மை­யக முகாம்­க­ளுக்குச் சென்­று­வி­டலாம். இரா­ணு­வத்­தினர் காணி­களை விட்­டுச்­சென்றால், வீடு­களை விட்டுச் சென்றால், வர்த்­த­கங்­களை எம்­ம­வ­ருக்கு வழி­விட்டுச் சென்றால், கடற்­க­ரை­களை கடிந்து அவர்கள் விட்­டுச்­சென்றால் வேலை­யில்லா எம் இளை­ஞர்­க­ளுக்குக் கூட வேலை­வாய்ப்­புக்கள் கிடைப்­பன. தமது சொந்தக் காணி­களில் பயி­ரிட முடி­யா­த­வர்கள் கூட எம்மைத் தேடி வேலை வாய்ப்­புக்­காக வரு­கின்­றார்கள். ஆகவே இந்தத் தினத்தை நாம் கட்சி, மத, வர்க்க, பிராந்­திய பேதங்கள் இன்றி ஒரு­மித்து நினை­வேந்­துவோம்!

ஒரு­மித்த குரல்

எங்கள் ஒரு­மித்த குரல் ஒலிக்க வேண்­டிய கட்­டாயம் உண்டு என்­பதை மற­வா­தி­ருப்­போ­மாக! வட­மா­கா­ண­ச­பை­யா­கிய எமக்கு அதி­கா­ரங்கள் போதிய அளவு இருக்கின்றதோ இல்லையோ வடமாகாண மக்களின் வாக்குகளின் பிரதிபலிப்பே நாங்கள். ஜனநாயக ரீதியாக எமது மக்கள் யாவரையும் ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பே வடமாகாணசபை. அதன் தலைமகன் என்ற முறையிலேயே நான் இந்த நினைவேந்தலில் கலந்துகொண்டுள்ளேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் ஏகோபித்த குரலாக, கரமாக, அதிகாரமாக நான் செயற்பட்டே இந்தச் சுடரை ஏற்றியுள்ளேன். இதே போன்று இந்த நிகழ்வு தொடர்ந்தும் எம் மக்களின் துயரத்தையும் சோகத்தையும் அதே நேரம் எமது ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கும் நாளாக வருடாவருடம் மிளிர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இன்றைய தினத்தில் 2009ம் ஆண்டு அநியாயமாக மரணத்தைத் தழுவ வேண்டி நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட எமது உறவுகள் அத்தனை பேரினதும் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்போமாக! அவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எமது உளமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உங்களின் மனச்சுமைகளை நாம் சுமக்கமுடியாதவிடத்தும் எமது பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் உங்கள் சோகப்பட்ட உள்ளங்களை ஒரு அளவிற்கு நெகிழவைக்கும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-19#page-1

  • தொடங்கியவர்

அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!

அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!
  •  

முள்­ளி­வாய்க்­கா­லில் நேற்­றைய தினம் நினை­வேந்­தல் நிகழ்வு இடம்­பெற்­ற­போது திடீ­ரென உணர்ச்­சி­வ­சப்­பட்ட பெண் ஒரு­வர் அங்கு கூடி­யி­ருந்த அர­ சி­யல்­வா­தி­க­ளைப் பார்த்து ‘‘இங்கு வந்து அர­சி­யல் செய்­யா­தீர்­கள்!’’ என்று கோபா­வே­சத்­து­டன் விரல்­களை நீட்­டிக் கொந்­த­ளித்­தார்.

நினை­வேந்­தல் நிகழ்­வில் முத­லா­வ­தாக அமை­தி­யாக இருந்து மூன்று நிமி­டங்­கள் அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் மற்­றும் இலங்­கை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் ஆகி­யோ­ரின் உரை­கள் இடம்­பெற்­றன.

 

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் உரை முடிந்­த­தும் முதன்­மைச் சுடர் ஏற்­றப்­பட இருந்த பீடத்­திற்­குள் நுழைந்த பெண் ஒரு­வர் கோபா­வே­ச­மா­கக் கத்­தி­னார்.

‘‘நாங்­கள் இங்கே எங்­கள் உற­வு­க­ளை­யும், குழந்­தை­க­ளை­யும், கண­வர்­க­ளை­யும் இழந்து பரி­த­வித்­துப்­போய் வந்­தி­ருக்­கி­றோம். இங்கே வந்து நீங்­கள் உங்­கள் அர­சி­ய­லைப் பேசிக் கொண்­டி­ருக்­கா­தீர்­கள்.

வந்­தீர்­களா, அஞ்­சலி செய்­தீர்­களா, உணர்­வோடு நடந்­து­கொண்­டீர்­களா என்று இருங்­கள். அதை­வி­டுத்து உங்­கள் அர­சி­யல் இங்கே தேவை­யில்லை’’

முத­ல­மைச்­சர் முதன்­மைச் சுடரை ஏற்­று­வ­தற்கு வந்த சம­யத்­தில் அந்­தப் பெண்­மணி அவ­ரை­யும் ஏனைய அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் பார்த்­துச் சுட்­டு­வி­ரலை நீட்டி இவ்­வாறு உணர்ச்­சி­யோடு கொந்­த­ளித்­ததை அடுத்து அந்த இடத்­தில் பதற்­றம் தொற்­றிக் கொண்­டது.

எனி­னும் ‘‘நீங்­கள் சொல்­வ­தைப் போன்­று­தான் அஞ்­சலி செலுத்­தப்­போ­கி­றோம். அமை­தி­ய­டை­யுங்­கள்’’ என்று அந்­தப் பெண்­ணைச் சிலர் அமை­திப்­ப­டுத்­தி­யைத் தொடர்ந்து முத­ல­மைச்­சர் சுடரை ஏற்றி வைத்­தார்.

http://uthayandaily.com/story/3426.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.