Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் 1,800 சட்டவிரோத கட்டடங்கள்

Featured Replies

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் 1,800 சட்டவிரோத கட்டடங்கள்

p27-a97f05007375e67b0f66609a532eaf3c92d6ad23.jpg

 

முறையற்ற கட்டுமானப் பணிகளே 5 மாடிக்கட்டடம் இடிந்து விழக்காரணம்; விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சம்பிக்க ரணவக்க தகவல்

(ந.ஜெகதீஸ்)

வெள்­ள­வத்­தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்­கட்­டடம் முற்­றிலும் சட்­ட­வி­ரோத­மான முறையில் அமைக்­கப்­பட்­டதாகும். குறித்த மாடிக்­கட்­டடம் இடிந்து விழுந்­த­தற்கு அதன் முறை­யற்ற கட்­டு­மா­னப்­ப­ணி­களே கார­ண­மாகும். எனவே சம்பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு 

எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

அத்­துடன் மாடிக்­கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள இரு­வ­ரையும் பாது­காப்­பான முறையில் மீட்­ப­தற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும். இதே­போன்று 1800 சட்­ட­வி­ரோத கட்­ட­டங்கள் அப்­ப­கு­தியில் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்கு எதி­ரா­கவும் விரைவில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

வெள்­ள­வத்தை சார்லிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வர­வேற்பு மண்­ட­பத்தின் பின்னால் அமைந்­தி­ருக்கும் ஐந்து மாடிக்­கட்­டிடம் இடிந்து வீழ்ந்­த­மைக்­கான கார­ணத்தை தெ ளிவுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஊட­க­வி­ய­லாளர்  சந்­திப்­பொன்று பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. 

இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், வெள்­ள­வத்தை சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வர­வேற்பு மண்­ட­பத்தின் பின்னால் அமைந்­தி­ருக்கும் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்­கட்­டி­ட­மா­னது முற்­றிலும் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அமைக்­கப்­பட்­ட­தொன்­றாகும். 

கடந்த 2009 ஆம் ஆண்டில் வெள்­ள­வத்தை சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள குறித்த மாடிக்­கட்­டி­டத்தின் உரி­மை­யா­ளரால் குடி­யி­ருப்­புக்­கான அனு­மதி நகர சபை­யிடம் கோரப்­பட்­டுள்ள நிலையில் குடி­யி­ருப்­புக்­கான அனு­ம­தியே நகர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு குறித்த உரி­மை­யா­ள­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த குடி­யி­ருப்பு பகு­தியில் தற்­போது வர­வேற்பு மண்­டபம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த மண்­ட­பத்­துக்­கான மதிப்­பீட்டு அறிக்­கை­யினை நகர சபை­யி­னூ­டாக அவ்­வு­ரி­மை­யாளர் இது­வ­ரையில் பெற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை.

அத்­துடன் குறித்த மண்­ட­பத்­துக்கு பின்னால் நகர நீரை வௌியேற்றும் கால்வாய் அமைந்­துள்­ளது. அக்­கால்­வாய்க்­கு­ரிய பகு­தியும் குறித்த மாடிக்­கட்­டி­டத்தின் உரி­மை­யா­ளரால் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அப­க­ரிக்­கப்­பட்டு அவ்­வி­டத்­தி­லேயே குறித்த 5 மாடிக்­கட்­டி­டத்தை அமைத்­தி­ருந்தார். இந்த மாடிக்­கட்­டிடம் அமைக்­கப்­ப­டு­வது குறித்து நகர சபையால் அங்­கி­க­ரிக்­கப்­படும் திட்­ட­மிடல் மற்றும் மதிப்­பீட்டு அறிக்­கை­யி­னையோ அல்­லது அதற்­கான அனு­ம­திக்­கான அறிக்­கை­யி­னையோ உரி­மை­யாளர் பெற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. இதே­வேளை குறித்த மாடிக்­கட்­டி­டத்தின் தரை­தோற்றம் மற்றும் முறை­யற்ற கட்­டு­மா­னப்­ப­ணி­களே கட்­டிடம் இடிந்து விழுந்­த­தற்­கான கார­ண­மாகும். ஆரம்­பத்தில் 8 மாடிக்­கட்­டி­டத்தை கட்­டு­வ­தற்­காக திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த போதிலும் கீழ் தளங்கள் இரண்­டுடன் 7 மாடி­யுடன் குறித்த கட்­டு­மா­ணப்­ப­ணிகள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்தக் கட்­டிடம் இடிந்து வீழ்ந்­ததில் ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன் 23 பேர் காய­ம­டைந்­தனர். அத்­துடன் இன்னும் இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்ள இருவர் குறித்து மிகுந்த அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அவர்­களை பாது­காப்­பான முறையில் மீட்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த அனர்த்­த­துடன் தொடர்­பு­டை­ய­தாக கரு­தப்­படும் குறித்த கட்­டி­டத்தின் உரி­மை­யா­ள­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் அவரை கைது செய்­வ­தற்கு பொலி­ஸா­ருக்கும் பணிப்­பு­ரை­வி­டுக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த காலத்தில் எமது நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக யுத்தப் பகு­தி­யி­லி­ருந்த மக்கள் கொழும்பில் குடி­யே­றி­னார்கள் அவர்­களை இலக்கு வைத்தே இச்­சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­புக்கள் பல கொழும்பில் அமைக்­கப்­பட்­டன. இவ்­வாறு அமைக்­கப்­பட்ட சட்ட விரோத குடி­யி­ருப்­புக்கள் தொடர்பில் அமைச்­சி­னூ­டாக தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்­த­வ­கையில் இவ்­வ­ரு­டத்தின் கடந்த ஜன­வரி மாதம் முதல் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் கொழும்பு வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி பகு­தி­களில் 1800 சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­புக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸா ரினது உதவியினையும் பெற்றுள்ளோம். இதற்கான வேலைத்திட்டமொன்றையும் தற்போது ஆரம்பித்துள்ளோம். இதன் முதற்கட் டமாக கொழும்பில் நீரை வௌியேற்றும் கால்வாய் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். வெள்ளவத்தை, பம்பலப் பிட்டி, கொலன்னாவை ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள் ளதுடன் அதனைத்தொடர்ந்து ஏனைய பகுதிகளுக்கும் குறித்த வேலைத்திட்டத்தை விஸ்த்தரிக்கவுள்ளோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.