Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகரிக்கும் நெருக்கடி

Featured Replies

அதிகரிக்கும் நெருக்கடி

 

பொது­மக்­க­ளு­டைய  காணி­களை உள்­ள­டக்­கிய கேப்­பாப்­புலவு கிரா­மத்­தையும், அதனைச் சூழ்ந்த பிர­தே­சத்­தையும் அடாத்­தாகக் கைப்­பற்றி நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு கால அவ­காசம், பெருந்­தொகை நிதி என்­பன தேவை என நிபந்­த­னைகள் விதிப்­பது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. 

நாட்டில் யுத்த மோதல்கள் கிடை­யாது. தேசிய பாது­காப்­புக்கு நெருக்­க­டி­யான நிலை­மைகள் இருக்­கின்­றன. நெருக்­க­டி­யான சூழல் நில­வு­கின்­றது என்றும் சொல்­வ­தற்­கில்லை. இந்த நிலையில் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் வரு­டந்­தோறும் தேசிய பாது­காப்­புக்­காக அதிக அள­வி­லான நிதி வரவு செலவுத் திட்­டத்தின் ஊடாக ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. யுத்த காலத்தைப் போலவே இரா­ணு­வத்தின் நலன்­க­ளுக்கே நாட்டில் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கின்­றது. 

 

யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்ள போதிலும், சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­களின் மனித உரிமை நிலை­மை­களில் எதிர்­பார்க்­கப்­பட்ட முன்­னேற்றம் ஏற்­ப­ட­வில்லை. அவர்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வு­மில்லை. இது குறித்து சர்­வ­தேச மன்­னிப்புச் சபை, சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு மற்றும் உண்­மைக்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச திட்டம் ஆகிய அமைப்­புக்கள் கவ­லையும் கரி­ச­னையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றன.

யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் இருந்து இரா­ணு­வத்­தினர் கணி­ச­மான அளவில் அகற்­றப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை. நாட்டில் பயங்­க­ர­வாதம் நில­விய கார­ணத்­தி­னா­லேயே யுத்தம் ஒன்று ஏற்­பட்­டி­ருந்­த­தாக அரச தரப்பில் காரணம் கூறப்­ப­டு­கின்­றது. அதே­வேளை 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, பயங்­க­ர­வாதம் இல்­லாமல் செய்­யப்­பட்­டது. பயங்­க­ர­வா­தி­க­ளாக அரச தரப்­பி­னரால் வேண்­டு­மென்றே அடை­யாளம் காட்­டப்­பட்ட விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டது.

இறுதி யுத்­தத்­தின்­போது விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்கள் அழிக்­கப்­பட்­டார்கள். பல முக்­கிய தலை­வர்கள் கைது செய்­யப்­பட்­டதன் ஊடா­கவும், அர­சாங்­கத்தின் வேண்­டு­கோளை ஏற்று இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­ததன் கார­ண­மா­கவும் இரா­ணு­வத்­தி­னரின் பொறுப்பில் ஏற்­கப்­பட்டு அவர்­களில் பலர் இன்று காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். சிலர் கொல்­லப்­பட்­ட­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

நாட்டில் யுத்தம் உருவாவதற்கு, விடு­த­லைப்­பு­லி­களே கார­ண­மாக இருந்­த­தாக சிங்­கள பேரின அர­சியல் தலை­வர்கள் கூறு­கின்­றனர். ஆனால், தமிழ் மக்­க­ளின் அர­சியல் உரி­மை­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள், தொடர்ச்­சி­யாகத் தோல்­வியைச் சந்­தித்­த­தை­ய­டுத்து, முன்­னெ­டுக்­கப்­பட்ட சாத்­வீகப் போராட்­டங்கள் ஆயுத முனையில் அடக்­கப்­பட்­டதன் கார­ண­மா­கவே அர­சுக்கு எதி­ரான ஆயுதப் போராட்டம் தலை­தூக்­கி­யது.

அந்த ஆயுதப் போராட்­டத்­தையும் பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கு­ரிய முறை­யான இரா­ஜ­தந்­திர நகர்­வு­களைத் திசை­தி­ருப்பி, தமிழ் மக்­களின் அர­சியல் உரிமைப் போராட்­டத்தை உல­கத்­திற்குப் பயங்­க­ர­வா­த­மாகத் திரித்­துக்­காட்டி, இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளுக்கு சர்­வ­தேச நாடு­களின் துணையைப் பெற்­றதன் ஊடா­கவே யுத்­தத்தை அர­சாங்கம் முடி­வுக்குக் கொண்டு வந்­தது.

அந்த யுத்தச் செயற்­பா­டு­களில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருந்­தன. சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட நடை­மு­றைகள் புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்­தன. எந்த வகை­யி­லா­வது விடு­த­லைப்­பு­லி­களை ஒழித்துக் கட்­டி­விட வேண்டும் என்று கங்­கணம் கட்­டிய ரீதி­யி­லேயே யுத்தச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்­ன­ரும்­கூட, நாக­ரி­க­மான அர­சியல் முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்டு, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

நீண்­ட­தொரு யுத்­தத்தின் பின்னர் அர்த்­த­முள்ள வகையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய நல்­லி­ணக்க முயற்­சிகள், வெறும் கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­க­ளா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. யுத்­த­மோ­தல்­களில் சிக்கி மோச­மாகப் பாதிக்­கப்­பட்டு, இடை­ய­றாத இடப்­பெ­யர்­வு­களைச் சந்­தித்து அவ­ல­முற்­றி­ருந்த அப்­பாவிப் பொது­மக்­களை மேலும் மேலும் இரா­ணுவ நெருக்­கு­வா­ரத்­திற்கு உட்­ப­டுத்தி அவர்­க­ளுக்குப் பல்­வேறு நெருக்­க­டி­களைக் கொடுப்­ப­தி­லேயே யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்­தி­யி­ருந்­தது.

யுத்­தத்தில் அடைந்த வெற்­றியைத் தனது அர­சியல் முத­லீ­டாகப் பயன்­ப­டுத்­திய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ யுத்தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு சம உரி­மை­களை வழங்கி நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்டுச் செல்­வ­தற்குத் தவ­றி­யி­ருந்­தார்.

இந்தத் தவற்றைச் சரி­செய்­வ­தாகக் கூறி, ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்டப் போவ­தாக உறு­தி­ய­ளித்து, ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றிய மைத்­திரி –- ரணில் அர­சாங்­கமும் மனித உரி­மைகள் நிலை­மையை மேம்­ப­டுத்­து­வ­திலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும் போதிய ஈடு­பாட்டைக் காட்­ட­வில்லை. இது தொடர்பில் பாதிக்கப்­பட்ட மக்கள் தரப்பில் இருந்து நேர­டி­யா­கவே குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை உறு­தி­ப்ப­டுத்தும் வகையில், சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு விடுத்­துள்ள அறிக்­கையில் விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. அதே­வேளை, உண்­மைக்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச திட்­டத்தின் பணிப்­பாளர் யஸ்மின் சூக்கா முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் செயற்­பா­டுகள் தொடர்பில் முல்­லைத்­தீவு பொலி­ஸா­ரினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தடை நட­வ­டிக்கை குறித்து விடுத்­துள்ள அறிக்­கையும் மனித உரி­மைகள் இந்த ஆட்­சி­யிலும் மீறப்­ப­டு­வதை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது.

நெருக்­க­டிகள் அதி­க­ரிக்­கின்­ற­னவே தவிர பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வில்லை 

யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் மீள்­கட்­ட­மைப்­புக்­கான பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றது. அதனை எவரும் மறுப்­ப­தற்­கில்லை. ஆனால் அந்த நட­வ­டிக்­கைகள் தொடர் செயற்­பா­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­க­ளுக்கும் நீடித்து நிலைத்து நிற்­கின்ற வகை­யி­லான செயற்­பா­டு­க­ளாக அமை­ய­வில்லை என பல­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்டு வந்­துள்­ளது.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் சிவில் நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளிலும், பொது­மக்­க­ளுக்­கான மறு­வாழ்வு நட­வ­டிக்­கை­க­ளிலும் இரா­ணு­வத்தின் தலை­யீடு தொடர்ந்த வண்­ணமே உள்­ளது. யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, படிப்­ப­டி­யாக இரா­ணு­வத்தின் எண்­ணிக்­கையைக் குறைத்­தி­ருக்க வேண்டும். படை முகாம்­களின் எண்­ணிக்­கையும் குறைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இந்த இரண்டு நட­வ­டிக்­கை­க­ளுமே பாதிக்­கப்­பட்ட பொது­மக்­களின் நலன்­களைக் கருத்­திற்­கொண்ட வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இரா­ணுவ முகாம்கள் குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்­கமும், இரா­ணு­வமும் கூறு­கின்ற போதிலும், ஓரி­டத்தில் இருந்து மற்றோர் இடத்­திற்கு அவைகள் மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­ற­னவே தவிர, சம்­பந்­தப்­பட்ட பிர­தே­சத்தில் இருந்து இரா­ணு­வமும், இரா­ணுவ முகாம்­களும் முற்­றாக அகற்­றப்­ப­ட­வில்லை.

இதனால் மக்கள் வீதி­களில் இறங்கி இரா­ணுவ பிர­சன்­னத்­திற்கு எதி­ராகக் குரல் கொடுக்­கவும் போரா­டவும் நேர்ந்­தி­ருக்­கின்­றது. அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்ற நம்­பிக்­கையை அந்த மக்கள் இழந்­துள்­ளார்கள். அர­சாங்கம் தம்மை ஏமாற்றி காலத்தைக் கடத்­து­வதில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றது என்று அவர்கள் உணரத் தலைப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இது கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பா­கிய நிலையை ஒத்­த­தாகத் தோற்றம் தரு­கின்­றது. இதனை சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு தனது அறிக்­கையில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

வேடிக்­கை­யான நிலைமை

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலில் கலந்து கொண்டு இறுதி யுத்­தத்­தின்­போது படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களை நினை­வு­கூர்ந்து தீப­மேற்றி அஞ்­சலி செலுத்­திய பின்னர், காணி உரி­மைக்­கான போராட்டம் நடை­பெறும் இடத்­திற்குச் சென்று போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­களை எதிர்க்­கட்சித் தலை­வரும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் சந்­தித்துப் பேச்­சுக்கள் நடத்­தி­யி­ருக்­கின்றார். அந்தச் சந்­திப்­பை­ய­டுத்து அவர் கேப்­பாப்­பு­லவு இரா­ணுவ முகாம் பொறுப்­ப­தி­கா­ரி­யான பெர்­னாண்­டோ­வையும் சந்­தித்து காணிகள் விடு­விப்­பது தொடர்­பாக பேச்­சுக்கள் நடத்­தி­ய­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

கேப்­பாப்­பு­லவில் 432 ஏக்கர் காணியை ஒரு மாதத்­திற்குள் விடு­விப்­ப­தா­கவும், இன்­னு­மொரு 111ஏக்கர் காணியை விடு­விப்­ப­தற்கு ஆறு மாத கால அவ­காசம் தேவை என இரா­ணு­வத்தின் தரப்பில் தம்­மிடம் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் கூறி­யுள்­ள­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இந்த 432 ஏக்கர் காணியில் 243 ஏக்கர் காணி உட­ன­டி­யாக விடு­விப்­ப­தற்­கு­ரிய சூழல் காணப்­ப­டு­வ­தா­கவும், மிஞ்­சிய 189 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு ஒரு மாதம் கால அவ­காசம் தேவை என இரா­ணுவம் தெரி­வித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­யுள்ளார். இதை­விட 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு 6 மாதங்கள் ஆகும் என்றும், அதற்கு 100 மில்­லியன் ரூபா நிதி தேவைப்­ப­டு­வ­தா­கவும் இரா­ணுவ தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

அது மட்­டு­மல்­லாமல் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய முக்­கிய முகாம் கட்­டி­டங்கள் அமைந்­துள்ளதாக தெரி­விக்­கப்­ப­டு­கின்ற 70 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இரா­ணுவம் தயா­ராக இல்லை என தெரி­வித்­துள்ள இரா.சம்­பந்தன், இந்தக் காணியை விடு­வ­தாக இருந்தால் இரா­ணு­வத்­திற்கு 400 மில்­லியன் ரூபா நிதி தேவைப்­ப­டு­வ­தாக இரா­ணு­வத்­தினர் தனி­னிடம் தெரி­வித்­த­தாக கூறி­யி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. பொது­மக்­க­ளு­டைய காணி­களை உள்­ள­டக்­கிய கேப்­பாப்­புலவு கிரா­மத்­தையும், அதனைச் சூழ்ந்த பிர­தே­சத்­தையும் அடாத்­தாகக் கைப்­பற்றி நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தினர் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு கால அவ­காசம், பெருந்­தொகை நிதி என்­பன தேவை என நிபந்­த­னைகள் விதிப்­பது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது.

நாட்டில் யுத்த மோதல்கள் கிடை­யாது. தேசிய பாது­காப்­புக்கு நெருக்­க­டி­யான நிலை­மைகள் இருக்­கின்­றன. நெருக்­க­டி­யான சூழல் நில­வு­கின்­றது என்றும் சொல்­வ­தற்­கில்லை. இந்த நிலையில் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் வரு­டந்­தோறும் தேசிய பாது­காப்­புக்­காக அதிக அள­வி­லான நிதி வரவு செலவுத் திட்­டத்தின் ஊடாக ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. யுத்த காலத்தைப் போலவே இரா­ணு­வத்தின் நலன்­க­ளுக்கே நாட்டில் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த நிலையில் பொது­மக்­களின் காணி­க­ளிலும், அவற்றைச் சூழ்ந்த பகு­தி­க­ளிலும் அடாத்­தாக நிலை­கொண்­டுள்ள இரா­ணுவம் வெளி­யேற வேண்­டு­மானால், அதற்கு நட்­ட­யீடு கோரு­வது போன்று நிதி தேவைப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான நிதி வழங்­கப்­பட வேண்டும் என இரா­ணுவ அதி­கா­ரிகள் கோரு­வது ஒரு ஜன­நா­யக நாட்­டிற்கு அழ­கா­ன­தாகத் தெரி­ய­வில்லை. அது மட்­டு­மல்­லாமல், யுத்தச் சூழ­லற்­றதும், தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லற்­ற­து­மான ஒரு நிலையில் இரா­ணுவம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளு­டைய மீள்­கு­டி­யேற்­றத்­திற்கும் அவர்­க­ளு­டைய மறு­வாழ்­வுக்கும் இடைஞ்சல் ஏற்­ப­டுத்தும் விதத்தில் காணி­களைக் கைப்­பற்றி நிலை­கொண்­டி­ருப்­பது என்­பது முறை­யான ஜன­நா­ய­க­மா­காது. அது மட்­டு­மல்ல. அத்­த­கைய நட­வ­டிக்கை என்­பது அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னையே சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு தனது அறிக்­கையில் வேறு வடி­வத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. புதிய அர­சாங்­கத்தின் மீள்­கட்­ட­மைப்பு மற்றும் புனர்­வாழ்வுச் செயற்­பா­டு­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்கள் மந்த கதியில் இருப்­பது மட்­டு­மல்ல, அவற்றில் இருந்து பின்­வாங்­கு­கின்ற ஒரு போக்கில் சென்று கொண்­டி­ருக்­கின்­றது என்று அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலில் உரிமை மீறல்

முள்­ளி­வாய்க்கால் படு­கொ­லையின் எட்டாம் ஆண்டு நிறைவை பாதிக்­கப்­பட்ட மக்கள் நினை­வு­கூர்ந்து மன ஆறுதல் அடை­வ­தற்கு முற்­பட்­ட­போது, நினை­வேந்தல் நிகழ்வு ஒன்­றிற்கு பொலிஸார் நீதி­மன்­றத்தின் மூலம் தடை­யுத்­த­ரவைப் பெற்­றி­ருந்­தார்கள். முள்­ளி­வாய்க்கால் கிழக்கில் அமைந்­துள்ள புனித சின்­னப்பர் தேவா­லய வளவில் அமைக்­கப்­பட்­டுள்ள நினைவுச் சின்­னத்தைச் சுற்­றிலும் முள்­ளி­வாய்க்­காலில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒரு தொகு­தி­யி­ன­ரு­டைய பெயர்கள் பொறிக்­கப்­பட்ட நினை­வுக்­கற்­களைப் பதிப்­ப­தற்கு நினை­வேந்தல் ஏற்­பாட்டுக் குழு­வினர் ஏற்­பா­டுகள் செய்­தி­ருந்­தனர்.

இது குறித்து அறிந்த பொலிஸார் வடக்கு கிழக்கு சிவில் அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­த­ரா­கிய அருட்­தந்தை எழில்­ரா­ஜனை இரவு நேரத்தில் பொலிஸ் ­நி­லை­யத்­திற்கு அழைத்து விசா­ரணை நடத்­தி­யி­ருந்­தனர். அந்த விசா­ர­ணையின் பின்­னரும், பதிக்­கப்­ப­டு­வ­தற்­காக ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த நினைவுக் கற்­களில் பொறிக்­கப்­பட்­டி­ருந்த பெயர்கள் யாரு­டை­யவை என்­பதை பொலி­ஸா­ரினால் உறுதி செய்ய முடி­ய­வில்லை. ஆயினும் அந்தப் பெயர்கள் கொல்­லப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளு­டை­யவை என்ற சந்­தே­கத்தின் பேரில், அந்த ஆலய வளவில் இடம்­பெ­ற­வி­ருந்த நினை­வேந்­த­லுக்கு நீதி­மன்­றத்தின் ஊடாக 14 நாட்­க­ளுக்கு தடை­யுத்­த­ரவு பெற்­றி­ருந்­தனர். இங்கு இடம்­பெ­று­கின்ற நினை­வேந்தல் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும், தேசிய பாது­காப்­புக்கும் குந்­தகம் விளை­விப்­ப­துடன், நாட்டின் அமை­திக்கும் பங்கம் ஏற்­ப­டுத்த வல்­லது என்ற கார­ணத்தைக் காட்­டியே பொலிஸார் நீதி­மன்­றத்தில் தடை­யுத்­த­ரவு பெற்­றி­ருந்­தனர்.

இந்தத் தடை­யுத்­த­ர­வை­ய­டுத்து 17 ஆம் திகதி புதன்­கி­ழமை இரவு அந்தப் பிர­சேத்தில், நீதி­மன்றம் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தி­ருப்­ப­தனால் அங்கு நினை­வேந்தல் நிகழ்வில் கலந்து கொள்­ப­வர்கள் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என்று பொலிஸார் ஒலி­பெ­ருக்கி மூல­மாக எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தனர்.

எனினும் மறுநாள் 18 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை, நீதி­மன்­றத்தின் தடை­யுத்­த­ரவு தொடர்பில் நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கிய அருட்­தந்தை எழில்­ராஜன் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்து நினை­வேந்தல் நடத்­தப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து தெரி­விக்­கப்­பட்­டது. இந்த மனு­வை­ய­டுத்து, நினை­வுக்­கற்கள் பதிக்­கப்­ப­ட­வி­ருந்த முள்ளிவாய்க்கால் நினை­வேந்­த­லுக்­கான நினை­வுச்­சின்னம் அமைந்­துள்ள இடத்­திற்குள் செல்லக் கூடாது என்று உத்­த­ர­விட்ட நீதி­மன்றம், ஆல­யத்­திற்­குள்­ளேயும், ஆலய வளவின் ஏனைய இடங்­க­ளிலும் நினை­வேந்தல் நிகழ்­வு­களை நடத்த முடியும் என தெரி­வித்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து புனித சின்­னப்பர் ஆல­யத்தில் திட்­ட­மிட்­ட­வாறு நினை­வேந்தல் நிகழ்­வுகள் 18 ஆம் திகதி பிற்­ப­கலில் நடை­பெற்­றன. அத்­துடன் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் பெயர் பொறிக்­கப்­பட்­டி­ருந்த நினை­வுக்­கற்­களை நிலத்தில் அடுக்கி அவற்­றுக்­கி­டையில் மலர்­களைத் தூவி நினை­வேந்­த­லுக்­காக ஆல­யத்தில் கூடி­யி­ருந்த பொது­மக்­களும் அருட்­தந்­தை­யர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­களும் அஞ்­சலி செலுத்­தினர்.

இந்த நிகழ்­வுக்கு நீதி­மன்­றத்தின் ஊடாக பொலிஸார் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­ததை உண்­மைக்கும் நீதிக்­கு­மான சர்­வ­தேச திட்­டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா 17 ஆம் திகதி வெளி­யிட்ட அறிக்­கை­யொன்றில் முள்­ளி­வாய்க்­காலில் இறந்­த­வர்­க­ளு­டைய குடும்­பத்­தினர் அனுஷ்ட்­டிக்­க­வி­ருந்த நினை­வேந்தல் நிகழ்வை அரசு தடை செய்­தி­ருப்­பதைக் கண்­டித்­தி­ருந்தார். அத்­துடன் அந்தத் தடை­யுத்­த­ரவை அர­சாங்கம் உட­ன­டி­யாக நீக்க வேண்டும் என்றும் அந்த அறிக்­கையில் அவர் கோரி­யி­ருந்தார்.

இறந்­த­வர்­களை உற­வி­னர்கள் நினை­வு­கூர்­வ­தென்­பது மனி­தரின் கலா­சாரம் சார்ந்த தமது அன்புக்குரியவர்களை நினைந்து அழுகின்ற பெற்றோரின் அழுகை எந்த வகையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் தனது அறிக்கையில் அரசாங்கத்தை நோக்கி கேள்வியெழுப்பியிருந்தார்.

நியாயமானது என ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையானது, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்களைப் பாதிக்கத்தக்க வகையில் தொடர்கின்ற இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பின் அடையாளமாகும் என்றும் யஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் சாடியிருந்தார்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுச் செயற்பாடுகளும், சிவில் வாழ்க்கைச் செயற்பாடுகளும் இராணுவ மயப்படுத்தல் மற்றும் ஏனைய எரியும் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் கவனம் செலுத்தி தீர்வு காண முன்வராத அணுகுமுறைகளும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்பது சர்வதேச அமைப்புக்களினால் சுட்டிக்காட்டப்பட்டி

ருக்கின்றது. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்காமல் ஒன்றரை வருட காலத்தை இழுத்தடித்திருந்த பின்னரும், ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரேரணையொன்றின் மூலம் அமெரிக்காவின் தலைமையில் சர்வதேச நாடுகள் மேலும் இரண்டு வருட காலம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் மனித உரிமைகள் குறித்து சர்வதேச நெருக்கடிகள் குழு மற்றும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம், சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கின்ற தமிழ் மக்களுடைய அரசியல் தலைமைகளுக்கும் ஒர் எச்சரிக்கையாகவே அமைந்திருக்கின்றன.

இந்த எச்சரிக்கையானது உதாசீனப்ப டுத்தப்படத்தக்கதல்ல என்பதை சம்பந்தப்ப ட்டவர்கள் கவனத்திற் கொள்வது நல்லது.

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.