Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் வரலாற்றை இழப்பதில்லை. -வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PEOPLE NEVER LOST HISTORY
மக்கள் வரலாற்றை இழப்பதில்லை.
-வ.ஐ.ச.ஜெயபாலன்

Dr. Alush Gashi who played a Major role in the independence of Kosovo to Deliver Mullivaikal Memorial Lecture: TGTE
.
மேற்படி மின்னஞ்சல் அனுப்பியவருக்கு நான் எழுதிய பதிலை இணைத்துள்ளேன். 
கோசோவோ, எரித்தியா, கிழக்கு ரீமோர், தென் சூடான் போன்ற நாடுகளின் இராச தந்திரத்தை பின்பற்றியிருந்தால் பேச்சுவார்த்தை வடகிழக்கு மாகாண தேர்தல் இணைப்பட்ச்சி சிக்கினால் சுயாட்ச்சி தனிநாடு என்கிற பாதையில் முன்னேறி இருக்கலாம். எங்களுக்கும் விடிந்திருக்கும். நான் அனுப்பிய பதில் இதுதான். “உருப்பட அவசியமான திசை. சமாதான ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டு சுயநிர்ணய உரிமை நோக்கி இயன்றவரை முன்னேறுதல் பற்றிய அடிப்படை இராஜதந்திர அறிவு நமக்கு இல்லை. கொசோவா எரித்திரியா ஈஸ்ரிமோர் தென்சூடான் போன்ற தேசிய இனங்கள் சமாதான ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டு சுயநிர்ணய உரிமை நோக்கி இயன்றவரை முன்னேறுதல் பற்றிய அறிவை வளர்த்துக்கொண்டதால் வென்றார்கள். இதுபற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.
ஜெயபாலன்”
.
இதுதொடர்பாக 1996ல் இருந்தே வன்னியை வலியுறுத்தி வந்தேன். என்னை விடுங்கள். 1990களின் முடிவில் இருந்தே திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களும் ஈரோஸ் பாலகுமாரன் அவர்களும் மிக தெளிவாக தென்ஆபிரிக்கா, கொசோவா. கிழக்கு தீமோர், எரித்திரியா தென்சூடான் விடுதலை அரசியலின் வரலாற்றுப் போக்கையும் மேற்படி நாடுகள் மேற்க்கு நாடுகளோடு அவர்களது சமாதானப் பேச்சுவார்த்தை அழுத்தத்துக்கு அமைய பேணிய அதிதீவிரமற்ற உறவுகளின் இயங்கியலையும் சர்வதேச நிலமைகளையும் 
நன்கு உணர்ந்திருந்தனர். 
.
தமிழ் மக்களதும் புலிகளின் ஆதரவுடன் தரை இந்திய அமைதிப் படை மோதல்வரை திருமலையில் சிக்களக் குடியேற்றங்களை அகற்றுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டுவந்தது. ஏனினும் மோதல் ஏற்பட்டபின் அவர்கள் ஆக்கிரமிப்பு படைபோல நடந்து கொண்டனர். புலிகள் இந்தியப் படையை வெளியேற்ற முதல் எதிரியான பிரேமதாசாவுடன் இணைந்து செயல்பட்டார்கள். இந்திய அமைதிப்படை வெற்றியின்றி வெளியேறும்வரைக்கும் பிரேமதாசா ஈழம் எனப்படும் வட கிழக்கு மாகாணங்களை அதிக அதிகாரங்களோடு புலிகள் வசம் கொடுக்க சம்மதித்திருந்ததாக கருதப் படுகிறது. ஆனால் இந்திய படை வெளியேறிய பின்னர்வடக்கை மட்டும் அதிக அதிகாரங்களுடன் தரலாம் கிழக்கை தரமுடியாது என்கிற நிலைபாட்டை பிரேமதாச அரசு எடுத்தது. 
.
மேற்படி காலக்கட்டத்தில் மேற்குலகம் விடுதலைப்புலிகள் மீது காட்டிய புதிய அக்கறை இந்திய அரசால் புரிந்துகொள்ளப் பட்டிருந்தது. இணைப்பாட்ச்சி அடிப்படையிலான ஒரு தீர்வுபற்றி புலிகளோடு பேசுவதில் ஆர்வமுள்ள சமிக்ஞைகளை 1991 ஆரம்ப காலக்கட்டங்களில் இராஜீவ் காந்தி வட்டாரம் வெளியிட்டது. இலங்கையில் அதிகரிக்கும் சீன சார்பும் இனப்பிரச்சினைக்கு மேற்குலக சார்பு அல்லது சீனசார்பு தீர்வு உருவாகக்கூடிய சூழலும் இந்தியாவால் உணரபடுவது தவிர்க்க முடியாததாகும். அண்மைய நிகழ்வுகள் இதனையே உணர்த்துகின்றன. 
.
அப்போது லண்டனில் இருந்து செயல்பட்ட கிட்டுவின் அனுமதின்பெயரில் 1991 மார்ச் 5ம் திகதி கவிஞர் காசி ஆனந்தனும் மார்ச் 15ல் டாக்டர் அஜித் சித்தம்பலமும் ரஜீவ்காந்தியுடன் பேசினார்கள். ”ஈழத்துக்கு ஆதரவில்லை போராட்டத்துக்கு ஆதரவு” என்பதே ராஜிவ் காந்தியின் பொடிவைத்த நிலைபாடாக இருந்தது. கொசோவோ, கிழக்குதீமோர், தெற்க்கு சூடான். எரித்திரியா போன்ற நாடுகளுடன் “பிரிவினைக்கு ஆதரவில்லை போராட்டத்துக்கு ஆதரவு” என்கிற மேற்குநாடுகளின் நிலைபாடு இங்கு கருத்தில் கொள்ளத்தக்கது.

தகவல்களை வைத்து ஊகிக்கும்போது 
 ”இந்திய அமைதிப்படை 2 நடவடிக்கைகளின் அழுத்தத்தில் புலிகளைகளைக்கொண்டு இணைந்த வடகிழக்கு மாகாணசபையை உயிர்பிக்கும் நோக்கிலேயே ராஜீவ் காந்தி அவர்கள் 1991 முற்பகுதியில் சிந்தித்தாக தெரிகிறது. அத்தகைய ஒரு இடைக்கால தீர்வை புலிகள் ஏற்றிந்தால் மாத்தையாவே முதல் அமைச்சர் ஆகி இருப்பார். மாத்தையா கிட்டு மோதலை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.
.
போரின்பின் மேற்க்குலகில் ஏற்பட்ட எழுச்சியையும் வடகிழக்கு சரணாகதியடையாமல் தேர்தல் அரசியலில் நிமிர்ந்துவந்தையும் பொருட்படுத்தவே செய்தது. அக்காலக் கட்டத்தில் தம்மால் தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடிகள் மீண்டும் உயர்வதை மேற்குலகம் வரவேற்க்கவில்லை. ”இலங்கை தமிழர்களுக்கான மேற்க்கு நாடுகளின் ஆதரவின் கனிகள் தடைசெய்யபட்ட அமைப்புக்கு கிடைக்காது என்கிற பட்சத்தில் மட்டும்தான் மேற்க்குநாடுகளின் ஆதரவு தீவிரமாக தொடரும்” என்கிற கருத்தை மேற்க்கு நாடுகளின் ராசதந்தரிகள் ஆய்வாளர்கள் சிலர் மறைமுகமாக வெளிப்படுத்தவே செய்தனர். வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளும் மரவு இனியாவது ஈழத் தமிழர் அரசியலில் உருவாகிட வேண்டும். 
.
வரலாறு கொசோவோ, கிழக்குதீமோர், தெற்க்கு சூடான். எரித்திரியா போன்ற நடுகளுக்கு கிட்டிய வாப்புகள் எங்களுக்கும் இருந்தது என்பதையே சொல்லாமல் சொல்கிறது. ஈழ மண்ணில் வாழும் மக்களின் தெரிவு செய்த தலைமைக்கு விமர்சன நீதியான ஆதரவு சக அழுத்தம் கொடுக்கும் சக்திகளாக புலம்பெயர்ந்த அமைப்புகளும் தமிழக ஆர்வலர்களும் செயல்பட்டால் ஈழத் தமிழரது சுயநிர்ணய உரிமைக்கான கொசோவோ பாணிச் சூழல் மீண்டும் உருவாக்கப் படக்கூடிய வாய்ப்புகள் தென்படுகிறது.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 20.5.2017 at 11:05 PM, poet said:


வரலாறு கொசோவோ, கிழக்குதீமோர், தெற்க்கு சூடான். எரித்திரியா போன்ற நடுகளுக்கு கிட்டிய வாப்புகள் எங்களுக்கும் இருந்தது என்பதையே சொல்லாமல் சொல்கிறது. ஈழ மண்ணில் வாழும் மக்களின் தெரிவு செய்த தலைமைக்கு விமர்சன நீதியான ஆதரவு சக அழுத்தம் கொடுக்கும் சக்திகளாக புலம்பெயர்ந்த அமைப்புகளும் தமிழக ஆர்வலர்களும் செயல்பட்டால் ஈழத் தமிழரது சுயநிர்ணய உரிமைக்கான கொசோவோ பாணிச் சூழல் மீண்டும் உருவாக்கப் படக்கூடிய வாய்ப்புகள் தென்படுகிறது.

உருவாக்கப் படக்கூடிய வாய்ப்புகள் வந்தால் இந்தப்பூனைகளுக்கு யாராம் மணிகட்டுவது என்பதே இன்றைய நிலை. எங்குமே (தமிழரிடையே) ஆயந்து அமர்ந்து ஒத்திசைவாகத் தமிழினம் சிந்திக்காதவரை நிமிர்வே ......................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.