Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

ஒரு காலத்தில இலங்கை கிரிக்கட்டில் பேபியாக இருக்கேக்க எங்கட பாஸ்ட் போலேர்ஸ் யாழ் மத்திய கல்லூரி சாந்திக்குமார், ஸ்பின் 6 போலும் ஆறு விதமாக போட்டு நாளந்தா, றோயல் கல்லூறிகளினை திணரப்பண்ணிய நகுலேஸ்வரன் என்பவர்கள் அப்பவே உலக அரங்கில் பிரகாசிக்கவேண்டியவர்கள்.

நான் முன்பு 1973- 74 களில் சாந்திக்குமார் போல் போடேக்க பார்த்திருக்கிரன் நாளந்தாவின் விக்கட்டுகள் பறக்கும். இப்படியே கனபேர் திறமை இருந்தும் தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக புறக்கணிக்கப்பட்டார்கள்.

இதனால் நான் கிறிக்கட் பார்க்கவே இப்ப விருப்பமில்லை. இம்முறை பொக்ஸ்டல் இருந்தும் ஒரு மட்ச்சும் பார்க்காம விட்ட ஒரே ஒரு தமிழன் நான் ஆகத்தான் இருக்கும்.புறக்கணிப்பு. பொக்ஸ்டலுக்கே விளங்கவேணும் ஏன் எண்டு? :angry:

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

மீண்டும் எங்கள் ஒசி வெற்றி ஓசி ஒசி ஒய் ஒய் ஒய்

Edited by Jamuna

நீங்கள் சொன்னது சரி.. ஆனால் பார்க்காமல்விட மனம் கேட்குதில்லையே..

சாந்திகுமார் கனடாவில் இருக்கிறார்..

நகுலேஸ்வரன் அகில இலங்கை கல்லூரி குழுவுடன் ஆஸ்திரேலியாவில் விளையாடினவர்.

டொனல்ட் கணேஷ்குமார்(சாந்தியின் சகோதரர்), அம்பலவாணர், எம். தெய்வேந்திரா ஞாபகம் இருக்கிறதா?

<_<:lol:

மீண்டும் எங்கள் ஒசி வெற்றி ஓசி ஒசி ஒய் ஒய் ஒய்

ஒசி சரி..அது என்ன ஒய்..ஒய்.. ஓய் எண்ணும்..ஓய்..

:P :P

Edited by Ponniyinselvan

டொனல்ட் கணேஷ்குமார்(சாந்தியின் சகோதரர்), அம்பலவாணர், எம். தெய்வேந்திரா ஞாபகம் இருக்கிறதா?

<_<:lol:

ஒசி சரி..அது என்ன ஒய்..ஒய்.. ஓய் எண்ணும்..ஓய்..

:P :P

அது நம்ம கீதம்

:lol:

பங்களதேஷ் தென்னாபிரிக்காவை தோல்வியுறச் செய்த போட்டியின் வீடியோ இதோ..

தென்னாபிரிக்காவின் இன்னிங்ஸ் மட்டும்

: :lol:

Edited by Ponniyinselvan

அவுஸ்திரெலியா, இங்கிலாந்தினை வெற்றி பெறும் என்பதினை ஒரு போட்டியாளரைத்தவிர எல்லோரும் சரியாகக் கணித்துள்ளார்கள். யாழ்வினோ தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=284289

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான இன்றைய சுப்பர் 8 போட்டியில் முதலில் துடுப்பாடும் தென்னாபிரிக்கா அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 115 ஓட்டங்களுக்கு 1 விக்கெற்றை இழந்த நிலையில் தொடர்ந்து சிறப்பாக ஆடுகின்றனர்.

  • தொடங்கியவர்

தென்னாபிரிக்கா அணியினர் 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெற்றுக்களை இழந்து 356 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

வில்லியஸ் - 146 ஓட்டங்கள்

கலிஸ் - 81 ஓட்டங்கள்

ஜிப்ஸ் - 61 ஓட்டங்கள்

பவுச்சர் - 52 ஓட்டங்கள்

@ ஆட்டத்தில் மொத்தம் 14 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

@ ஆட்டம் நடைபெற்ற St George's, Grenada மைதானத்தில் இன்று பெறப்பட்டுள்ள 356 ஓட்டங்கள் தான் அதி உயர் ஓட்டங்கள். இதற்கு முன் 288 ஓட்டங்கள் தான் மைதானத்தில் பெறப்பட்டுள்ள அதி உயர் ஓட்டங்களாக இருந்துள்ளது.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியா அரை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற இப்படி போட்டி முடிவுகள் இனி முடிந்தால் சந்தர்ப்பம் இருக்கிறது. அதாவது அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய 3 அணிகளும் முன்னிலை வகிக்க, தற்பொழுது தென்னாபிரிக்கா அணி 6 புள்ளிகளுடன் இருப்பதினால் , தென்னாபிரிக்கா அடுத்த இரு போட்டிகளிலும் ( நியூசிலாந்து, இங்கிலாந்து) தோல்வி பெற்றால் சுப்பர் 8 போட்டி முடிவில் தென்னாபிரிக்கா 6 புள்ளிகளுடன் இருக்கும். மேற்கிந்தியா அணி இனி வரும் போட்டிகளில் இங்கிலாந்து, பங்காளதேச அணியினை வென்றால் அவ் அணியும் 6 புள்ளிகள் பெறும். இங்கிலாந்து அணிக்கு இனி மூன்று போட்டிகள் இருக்கிறது. அவ் அணி மேற்கிந்தியா அணியிடம் தோற்க வேண்டும், தென்னாபிரிக்கா அணியை வெல்ல வேண்டும். பங்காள தேசம் அணியை வென்றால் , தென்னாபிரிக்கா,மேற்கிந்தியா,

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.10 Bet

Sri Lanka 4.50 Bet

New Zealand 5.00 Bet

South Africa 5.00 Bet

England 19.00 Bet

Bangladesh 101.00 Bet

West Indies 251.00 Bet

Ireland 5001.00 Bet

தென்னாபிரிக்கா அணி மேற்கிந்திய அணியினைத் தோற்கடித்ததினை சரியாக 4 போட்டியாளர்கள் பதில் அளித்துள்ளார்கள். யாழ்வினோ தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். ஆனால் 2ம் இடத்தில் உள்ள வாசகனும் இப்பொழுது யாழ்வினோவும் ஒரே புள்ளிகளுடன் இருக்கிறார்கள். 7ம் இடத்தில் இருந்த ஈழவன் 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=284576

  • தொடங்கியவர்

யாழ்வினோவும் வாசகனும் இப்பொழுது ஒரே புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=284576

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே புள்ளிகள் பெற்றிருந்தாலும் நீங்கள் தானே போட்டி விதிப்படி முதல் நிலை யாழ்வினோ. அடுத்த போட்டி நியூசிலாந்து இலங்கைக்கு இடையில் நடைபெறும் போட்டி அதிலும் நீங்களும் வாசகனும் நியூசிலாந்துக்கு தானே பதில் அளித்துள்ளீர்கள். அப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும் நீங்கள், வாசகன், வானவில், ராஜன், மணிவாசகன் ஆகியோர் ஒரே புள்ளிகள் இருந்தாலும் முதலில் பதில் அளித்ததினால் நீங்கள் தான் முதலாவதாக இருப்பீர்கள். அதாவது 14ம் திகதி நடைபெறும் போட்டியான தென்னாபிரிக்கா, நியூசிலாந்து அணிப் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால் 14ம் திகதிவரை நீங்கள் தான் முதலிடம் வகிப்பீர்கள். நியூசிலாந்து வெற்றி பெற்றால் அதற்குப்பிறகும் சில நாட்களுக்கு முதலாம் இடத்தில் இருப்பீர்கள்

கந்தப்பு அண்ணா, இந்த போட்டியில் நான் மிகவும் சிறந்த முறையில் ஊகித்து பதில்களை எழுதியிருந்தேன் அதனால் தான் கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு மேல் முதலாவது இடத்தில் இருக்கிறேன். ஆனால் உலக கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் நடைபெற்ற ஆட்டங்களில் மேற்கிந்திய அணி சிறப்பாக விளையாடிய காரணத்தினாலும் போட்டி அவர்களுடைய நாட்டில் நடைபெறுக்கின்ற காரணத்தினாலும் எப்படியும் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்து இலங்கை - மேற்கிந்தியா மற்றும் தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா இடையேயான போட்டிகளில் மேற்கிந்தியா அணி வெற்றிபெறும் என்று விடையளித்தேன் ஆனால் மேற்கிந்தியா யாருமே எதிர்பார்காத அளவுக்கு மிக மோசமாக விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது இதனால் தற்சமயம் நான் 4 புள்ளிகளை இழந்துள்ளேன் இனியும் தொடர்ச்சியாக புள்ளிகளை இழப்பேன் என்று நினைக்கிறேன். மேற்கிந்தியா அணி சிறப்பாக விளையாடி இருந்தால் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்காது.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மேற்கிந்தியாவை நம்பி மோசம் போய்விட்டேன். என்ற பதிலைப்பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

மேற்கிந்தியா அணி சிறப்பாக விளையாடி இருந்தால் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்காது.

ஐயோ ஐயோ செந்தில் கவுண்ட மணிய விடா ஓவரா காமடி பண்ணுறாரு அண்ணாச்சி

உலகக் கிண்ணப் போட்டியை பார்க்க ரசிகர் கூட்டம் வரத் தொடங்கியது

[11 - April - 2007] [Font Size - A - A - A]

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தற்போதைய உலகக் கிண்ணத் தொடரின் பெரும்பாலான போட்டிகளை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. மேற்கிந்திய அணி பங்கேற்ற போட்டிகளில் கூட அரங்கங்கள் நிரம்பவில்லை. டிக்கெட்டுகளின் அதிக விலை, இசைக் கருவிகளுக்கு மைதானத்தில் அனுமதி மறுப்பு போன்றவற்றால் ரசிகர்கள் போட்டியைக் காண மைதானத்திற்கு அதிகளவில் வரவில்லை.

தற்போது இசைக்கருவிகளை அரங்கினுள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் முறைப்படி எழுத்து பூர்வமாக அனுமதி பெற வேண்டும். ஒரு முறை மைதானத்திற்குள் நுழைந்தால் போட்டி முடிந்த பின்தான் வெளியே வர வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பங்களாதேஷ், தென்னாபிரிக்கா இடையிலான போட்டிகளில் ரசிகர்கள் இசை வெள்ளத்தில் மிதந்தனர். இது பற்றி உலகக் கிண்ண அமைப்புக் குழுச் செயலர் கிறிஸ் டெரிங் கூறுகையில்,

பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவமளித்து வருகிறோம். அதே நேரத்தில் போட்டிகளை ரசிகர்கள் கும்மாளத்துடன் பார்த்து ரசிக்க வழி செய்துள்ளோம் என்றார்.

அரங்கம் நிறைந்த ரசிகர்கள் முன்னிலையில் போட்டியில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதுவரை அவுஸ்திரேலிய அணி பங்கேற்ற எந்தவொரு போட்டிக்கும் ரசிகர்கள் அதிகளவில் வரவில்லை. இசையை கேட்டபடி விளையாடுவது தான் கரீபிய மண்ணின் தனிச்சிறப்பு என்று கூறுகிறார் அவுஸ்திரேலிய அணிக் கப்டன் பொண்டிங்.

thinakkural.com

சுப்ப - 8' இல் இன்றைய போட்டி

[11 - April - 2007] [Font Size - A - A - A]

`சுப்ப - 8' இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள், பிரிட்ஜ் டவுனில் மோதுகின்றன.

`சுப்ப - 8' இல் இங்கிலாந்து இதுவரை பங்குபற்றிய மூன்று போட்டிகளில் அயர்லாந்து அணியுடனான போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஏனைய இரு போட்டிகளிலும் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளிடம் தோல்வியையே தழுவியது.

பங்களாதேஷ் அணியும் இதுவரை பங்குபற்றிய மூன்று போட்டிகளில், ஆரம்பத்தில் பங்குபற்றிய இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்து தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த முடிவுகளின் நிமித்தம் இவ்விரு அணிகளும் தற்போது தலா 2 புள்ளிகளைப் பெற்று சமநிலையிலுள்ளன. இதனால், இன்றைய ஆட்டத்தில் இவ்விரு அணிகளிடையே கடும் போட்டி நிலவக்கூடுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளிடையே இன்று நடைபெறவிருக்கும் போட்டி, பிரிட்ஜ் டவுன் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் முதலாவது ஆட்டம் இதுவாகும். இவ்விளையாட்டு அரங்கு துடுப்பாட்ட வீரர்களுக்கே கூடுதலாக சாதகமாக இருப்பதினால், இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணியினருக்கு வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்குமென்றும் கூறப்படுகின்றது.

thinakkural.com

கந்தப்பு அண்ணா, இந்த போட்டியில் நான் மிகவும் சிறந்த முறையில் ஊகித்து பதில்களை எழுதியிருந்தேன் அதனால் தான் கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு மேல் முதலாவது இடத்தில் இருக்கிறேன். ஆனால் உலக கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் நடைபெற்ற ஆட்டங்களில் மேற்கிந்திய அணி சிறப்பாக விளையாடிய காரணத்தினாலும் போட்டி அவர்களுடைய நாட்டில் நடைபெறுக்கின்ற காரணத்தினாலும் எப்படியும் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்து இலங்கை - மேற்கிந்தியா மற்றும் தென்னாபிரிக்கா - மேற்கிந்தியா இடையேயான போட்டிகளில் மேற்கிந்தியா அணி வெற்றிபெறும் என்று விடையளித்தேன் ஆனால் மேற்கிந்தியா யாருமே எதிர்பார்காத அளவுக்கு மிக மோசமாக விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது இதனால் தற்சமயம் நான் 4 புள்ளிகளை இழந்துள்ளேன் இனியும் தொடர்ச்சியாக புள்ளிகளை இழப்பேன் என்று நினைக்கிறேன். மேற்கிந்தியா அணி சிறப்பாக விளையாடி இருந்தால் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்காது.

இவர் படிக்கின்ற காலத்திலும் பரீட்சை எழுதி முடிய இப்படித்தான் ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருப்பார் போலிருக்கிறது. வேறொன்றுமில்லை Ego பிரச்சினை..

B)

இவர் படிக்கின்ற காலத்திலும் பரீட்சை எழுதி முடிய இப்படித்தான் ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருப்பார் போலிருக்கிறது. வேறொன்றுமில்லை Ego பிரச்சினை..

B)

சரியாகச் சொன்னீர் பாவம்

  • தொடங்கியவர்

இவர் படிக்கின்ற காலத்திலும் பரீட்சை எழுதி முடிய இப்படித்தான் ஆசிரியருக்கு கடிதம் எழுதியிருப்பார் போலிருக்கிறது. வேறொன்றுமில்லை Ego பிரச்சினை..

B)

சரியாகச் சொன்னீர் பாவம்

கிண்டல் பண்ணியது போதும். என்ன இருவருக்கும் அவுஸ்ரேலியா - இலங்கை ஆட்டம் நெருங்க நெருங்க ரென்ஷன் கூடுது போல இருக்கு. :lol:

கிண்டல் பண்ணியது போதும். என்ன இருவருக்கும் அவுஸ்ரேலியா - இலங்கை ஆட்டம் நெருங்க நெருங்க ரென்ஷன் கூடுது போல இருக்கு. :lol:

நமக்கு ரென்ஷன் இல்லை, நாங்கள் இதுவரை அவுஸ்டேலிய அணியை குறைத்து சொல்லவில்லை.......... நீர்தான் பாவம் இலங்கை அணியை குறைத்து சொல்வதிலையே இருக்கிறீர்

வீரன் ஒரு நாளும் மற்றவனை குறைத்து மதிப்பிடமாட்டான், கோழைதான் மற்றவரும் தன்னைப் போலவே கோழையாக இருப்பான் என்று சிந்திப்பான். இப்போ உமக்கு புரிந்திருக்குமே.............. :lol:

நம்பர் வண் கிறிக்கற் ரீமை யாராவது குறைத்து சொல்லுவார்களா? அப்படி சொன்னாலும் அதை மற்றவர்கள் ஏற்பார்களா? ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அவுஸ்ரேலியா அணிக்கு இலங்கை அணி எல்லாம் தூசு மாதிரி. ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணியினர் இலகுவாக வென்றிடுவார்கள். :lol:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவோம் நியூசிலாந்தின் மக்மிலன் நம்பிக்கை.

உலகக் கிண்ணத்தை நியூசிலாந்து கைப்பற்றும் என்று தான் நம்புவதாக அந்த அணியின் சகலதுறை வீரர் மக்மிலன் கூறியுள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இதுவரை ஒரு தோல்வியையும் சந்திக்காமல் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. `சுப்ப-8' சுற்றில் 6 புள்ளிகளை பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி இலகுவில் அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக நியூசிலாந்து அணி வெல்லும் என்று அந்த அணியின் சகலதுறை வீரர் மக்மிலன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;

இந்த முறை நாங்கள் உலகக் கிண்ணத்தை வெல்வோம் என்று நான் மிகவும் நம்புகிறேன். கடந்த இரண்டு உலகக் கிண்ணப் போட்டியில் எங்களது அணி கிண்ணத்தை கைப்பற்ற ஆசைப்பட்டது. ஆனால், சிறப்பாக ஆடி உலகக் கிண்ணத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை வீரர்களுக்கு அப்போது இல்லை.

ஆனால், இந்தத் தடவை அப்படியில்லை. அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். அணியில் ஒரு வீரர் காயமடைந்தாலும் அவருக்குப் பதிலாக வரும் மாற்று வீரரும் சிறப்பாக விளையாடுகிறார். எங்களது அணி வலுவாக இருக்கிறது. அணி எந்த ஒரு தனி வீரரை நம்பியுமில்லை. சில அணிகள் ஒன்று அல்லது இரண்டு வீரர்களை நம்பியிருக்கும். அதனால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்படும்.

ஆனால், எங்கள் அணியில் ஒன்று முதல் கடைசி வீரர்கள் வரை அணியின் வெற்றிக்கு வழி வகுக்கும் திறமை படைத்தவர்களாக உள்ளனர். பெரும்பாலான ஆட்டங்களில் கடைசி 10 ஓவர்கள் தான் அணியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன.

இந்தப் பணியை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும் என்றார்.

-Thinakkural-

Edited by யாழ்வினோ

ஆளுக்கு ஆள் கோப்பை தங்களுக்கு என்றால் றிக்கி பொன்டிங் என்ன செய்வது.

போய் வீட்டில உக்காந்து டீ கப்ப வச்சு விளையாடட்டும் :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.