Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

நியூசிலாந்து இன்று வெற்றி பெற்றால் மாப்பிள்ளை முதல் இடத்தில் இருப்பார். இல்லாவிடில் ஈழவன் முதலிடம் வகிப்பார். பல சூதாட்ட நிறுவனங்கள் நியூசிலாந்து தான் இன்று வெற்றி பெறும் என்று தீர்மானித்து சூதாட்டத்தினை நடாத்துகிறார்கள். என்றாலும் நான் இப்போட்டியில் இங்கிலாந்து தான் வெற்றி அடையும் என்று பதில் அளித்திருந்தேன். அவுஸ்திரெலியாவில் நடை பெற்ற முக்கோண ஒரு நாள் போட்டியில் ஆரம்பத்தில் நன்றாக விளையாடாவிட்டாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியமைக்காக இங்கிலாந்தினை தெரிவு செய்தேன். அரை இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை நான் தெரிவு செய்யததற்கு காரணம் கடந்த 12 மாதகாலமாக அவர்கள் விளையாடி வெற்றி பெற்ற போட்டிகள் தென்னாபிரிக்காவிலே நடந்தன.

இங்கிலாந்தை விட நியூசிலாந்து பலமாகவே இருப்பதாக தொண்றுகின்றது, ஆனலும் நியூசிலாந்து பலமான அவுஸ்ரேலியாவை வீழ்த்தினாலும், பங்களாதேஷோடு தோல்வி கண்டுள்ளது. கிரிக்கட்டை பொறுத்த வரை இறுதி வரை முடிவு சொல்ல முடியாது, பொறுத்ட்திருந்து பாக்கலாம்

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை விட நியூசிலாந்து பலமாகவே இருப்பதாக தொண்றுகின்றது, ஆனலும் நியூசிலாந்து பலமான அவுஸ்ரேலியாவை வீழ்த்தினாலும், பங்களாதேஷோடு தோல்வி கண்டுள்ளது. கிரிக்கட்டை பொறுத்த வரை இறுதி வரை முடிவு சொல்ல முடியாது, பொறுத்ட்திருந்து பாக்கலாம்

உண்மையில் நியூசிலாந்து பல மான அணிதான். ஆனால் நியூசிலாந்து அவுஸ்திரெலியாவை தனது சொந்த மண்ணில் அதுவும் பொன்ரிங், சைமன்ட், கில்கிறிஸ்ட், கிளாக் விளையாடத போதுதான் வீழ்த்தியது.

உண்மையில் நியூசிலாந்து பல மான அணிதான். ஆனால் நியூசிலாந்து அவுஸ்திரெலியாவை தனது சொந்த மண்ணில் அதுவும் பொன்ரிங், சைமன்ட், கில்கிறிஸ்ட், கிளாக் விளையாடத போதுதான் வீழ்த்தியது.

ஆமாம் அதில் சைமன்ட்ஸ் மற்றும் கிளாக் இருவரும் பகுதி நேர பந்து வீச்சாளர்கள், அவர்களை விட சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தும் நியுசிலாந்த்து வெற்றி பெற்றது அதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். துடுப்பாடத்தில் பலமாகத்தான் இருந்தனர் அவர்கள் யாரும் இல்லாமலும் அவுஸ்ரேலியா அணி பலமாகத்தான் இருந்த்து

  • தொடங்கியவர்

கந்தப்பு கடந்த கால போட்டி முடிவுகளின் புள்ளி விபரங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து தான் கேள்விகளுக்கு விடையளித்துள்ளார் அது தான் அவருடைய விடைகள் மற்றவர்களுடைய விடைகளில் இருந்து சற்று வேறுபட்டு காணப்படுகின்றது ஆனால் வானவில் சொல்லுவது போல் துடுப்பாட்டத்தில் எதுவும் நடக்கலாம் இருந்தாலும் இன்றைய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையான போட்டியில் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெறும்.

மேற்கிந்தியா- பாகிஸ்தான் பங்கு பற்றிய உலகக் கிண்ணப் போட்டியில் சில முக்கிய அம்சங்கள்.

* தனது 49 ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய மேற்கிந்தியா 32 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. தவிர 8 உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானை எதிர்கொண்டு 6 ஆவது வெற்றியை பெற்றது.

* 54 ஓட்டங்களில் தோல்வியடைந்த பாகிஸ்தான் தனது 54 ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் 23 ஆவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் முதன் முறையாக 10,000 ஓட்டங்களைக் கடந்த இரண்டு அணிகளை சேர்ந்த கப்டன்கள் நாணயச் சுழற்சியில் பங்கேற்றனர். லாரா (10,173), இன்சமாம் (11,701).

* மேற்கிந்தியாவின் முன்னணி வீரர் கெய்ல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடைசியாக விளையாடிய 7 ஒரு நாள் போட்டிகளில் 6 போட்டிகளில் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றமளித்துள்ளார்.

* மேற்கிந்தியாவுக்கு எதிரான போட்டியில் 3 கேட்ச் 1 ஸ்ரெம்பிங் செய்து 4 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான கம்ரான் அக்மல் உலகக் கிண்ணத்தில் ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான மூன்றாவது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் பாகிஸ்தானின் ரசித் லத்தீப் (5 விக்கெட், எதிர் நியூசி., 1996), வாசிம் பாரி (4 விக்கெட், எதிர் நியூசி., 1983).

* டுவைன் ஸ்மித்தின் பந்து வீச்சில் எல்.பி. டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த பாகிஸ்தான் கப்டன் இன்சமாம் ஒரு நாள் அரங்கில் எல்.பி. டபிள்யூ. முறையில் அதிக முறை வெளியேறிய வீரர் என்ற சாதனையை இலங்கையின் ஜெயசூரியாவுடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் 39 முறை இவ்வாறு ஆட்டமிழந்துள்ளனர்.

கந்தப்புவுக்கு வேற என்ன வேலை இருக்கிறது,கிரிக்கட்டை பற்றி கதைப்பினம் சில பேர் துடுபாட்ட மட்டையை கொடுத்தா,பிற பக்கத்தாலே அடிப்பினம்,கந்தப்பு இந்த ஞாயிற்றுகிழமை ஓபர்ன் கிரிக்கட் போட்டி நீங்களும் வாறீங்களா,நீங்கள் பந்துவீசாளரா அல்லது துடுபாட்டாமா நான் பந்து பொறுக்கிறது தான்............

:lol:

  • தொடங்கியவர்

முதல் மூன்று இடத்தில் இருக்கும் ரைகர் பமிலியை சேர்ந்தவர்களும் Within 24 Hours தரவரிசை பட்டியலில் பின் தள்ளப்படலாம். மாப்பு முதலிடத்தில் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. :lol:

24 மணி நேரம் ஆகியும் நாங்கள் தான் முதல் மூன்று இடங்களிலும் இருக்கிறோம்

:angry:

நான் அந்த Post இணைத்த நேரம் இலங்கை நேரப்படி 2-37 Am (16-03-2007)சரியோ. ஆகவே 2-37 Am (17-03-2007) வரைக்கும் காத்திருங்கோ. :lol:

ரைகர் பமிலியினருக்கு கோவிந்தா!! :)

நேற்றைய ஆட்டங்களில் :

தென்னாபிரிக்கா - நெதர்லாந்து

தென்னாபிரிக்கா 3 விக்கட் இழப்பிற்கு நாற்பது ஓவர்களில் 353 ஓட்டங்களை பெற்றது. நடை பெற்ற போட்டிகளில் அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை இது.

Kallis ஆட்டம் இழக்காமல் 124 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் 11 நான்கு (4s) ஓட்டங்களும் 5 ஆறு (6s) ஓட்டங்களும் அடங்கும்.

நேற்றைய ஆட்டத்தில் தென்னபிரிக்க அணி 18 ஆறு (6s) ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 30 நான்கு (4s) ஓட்டங்களையும் பெற்றது.

Gibbs 40 பந்துகளில் 7 ஆறு (6s) ஓட்டங்களுடன் 72 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

நெதர்லாந்து 9 விக்கட்டுக்களை இழந்து 40 ஓவர்களில் 132 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது.

221 ஓட்ட வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிக்கிடையிலான போட்டியில் :

இங்கிலாந்து 209 ஓட்டங்களை 7 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் பெற்றது.

210 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணியினர் 41 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 210 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்தின் Styris ஆட்டம் இழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜானா

  • தொடங்கியவர்

ஜனா, இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தென்னாபிரிக்கா - நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டம் கால தாமதமாக தொடங்கிய காரணத்தினால் அந்த ஆட்டம் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு 40 ஓவர்களை கொண்ட ஆட்டமாக தான் நடைபெற்றது அந்த 40 ஓவர்களில் தான் தென்னாபிரிக்கா அணியினர் 3 விக்கெற் இழப்பிற்கு 353 ஓட்டங்கள் எடுத்தார்கள். ஒரு வேளை அந்த போட்டி 50 ஓவர்களை கொண்ட போட்டியாக அமைந்திருந்தால் நேற்று புதிய உலக சாதனைகள் நிகழ்ந்திருக்கும். :huh:

  • தொடங்கியவர்

இன்று இந்தியா - பங்களாதேஷ் பலப்பரீட்சை.

உலகக் கிண்ண தொடரில் "பி' பிரிவுக்காக இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி டிரினிடாட்டின் குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகிறது.

உலகக் கிண்ண பயிற்சி போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் பங்களாதேஷ் அணி இன்று களமிறங்குகிறது. அதேபோன்று தொடர்ச்சியான வெற்றிகளின் பின்னரே இந்திய அணி பங்களாதேஷை சந்திக்கிறது. இந்நிலையில் உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 பிரிவுக்குள் நுழைய இரு அணிகளும் மும்முரமாக முயற்சித்து வரும் நிலையில் இன்றைய போட்டியை இரு அணிகளும் கடைசிவரை விட்டுக் கொடுக்காது என எதிர்பார்க்கலாம்.

இதேவேளை "டி' பிரிவுக்காக பாகிஸ்தான் அயர்லாந்து அணிகள் இன்று மோதவுள்ளன. ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 7.45 மணிக்கு ஆரம்பமாகிறது.

-Virakesari-

ஆமாம் வினோ தாங்கள் சொல்வது உண்மைதான். அது 50 ஓவர்களாக இருந்திருப்பின் மற்ற 10 ஓவர்களில் இவர்கள் ஓட்ட எண்ணிக்கை 400 தாண்டியிருக்க முடியும். கவனித்தீர்களா எதிரி நாட்டு வெற்றியை எமது கள உறவுகளில் யாரும் துக்கிப் பிடிக்காமல் விட்டதை. பலராலும் பேசப்பட்ட சனத் போன்ற முன்னனி நட்சத்திர வீரர்களை கூட ஆட்டமிழக்கச் செய்த பெர்மூடா பந்துவிச்சாளர்களைப் பாரட்டாமல் இருக்க முடியாது. :huh:

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

_42692425_gibbs_sixthsix_getty203.jpg

Gibbs smashes his sixth six off Daan van Bunge's final delivery

Details of Gibbs' six sixes

Balls 1,2 & 3 - Driven straight over the bowler

Ball 4 - Full toss pulled over midwicket

Ball 5 - Flat-batted long hop over long-on

Ball 6 - Short ball smashed over long-off

நேற்றைய ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி வீரர் கிப்ஸ் ஒரு ஓவரில் உள்ள 6 பந்துக்கும் சிக்ஸர் அடித்து புதிய உலக கிண்ணப் போட்டிக்கான வரலாற்றை எழுதினார். மார்க் பைசரும் 21 பந்துகளில் 50 அடித்து உலகக் கிண்ணப் போட்டி சாதனை படைத்தார். 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் புதிய சாதனையும் தென்னாபிரிக்காவால் பதியப்பட்டது..! இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா 18 சிக்ஸர்களை அடித்தது.

மில்லியன் டொலர்களை வென்ற சிக்ஸ் சிக்ஸர் கிப்ஸ் பரிசை மனிதாபிமான அமைப்புக்கு வழங்கவும் உள்ளார். பாராட்டுக்கள் கிப்ஸ்..! மனிதாபிமானம் நிறைந்த வீரர்ககள் விளையாட்டுக்களிலும் உருவாக்கப்பட வேண்டும்..! விளையாட்டு மனிதனை வளப்படுத்தும் களமாக வேண்டும்..!

மொத்தத்தில் நெதர்லாந்து - தென்னாபிரிக்கப் போட்டி சாதனைப் போட்டியாகி விட்டது..!

Edited by nedukkalapoovan

ரைகர் பமிலியினருக்கு கோவிந்தா!! :huh:

யாழ்வினோ வாழ்கை என்பது வட்டம் மாதிரி அதில மேலே இருக்கிறவன் கீழே வாரதும் கீழே இருக்கிறவன் மேலே வாரதும் சகஜம்,எங்கன்ட தலை டைகர்பமிலியின் மானத்தை காப்பாத்துவார்

:rolleyes:

யாழ்வினோ வாழ்கை என்பது வட்டம் மாதிரி அதில மேலே இருக்கிறவன் கீழே வாரதும் கீழே இருக்கிறவன் மேலே வாரதும் சகஜம்,எங்கன்ட தலை டைகர்பமிலியின் மானத்தை காப்பாத்துவார்

:rolleyes:

தத்துவம் எல்லாம் சொல்ல தொடங்கீட்டீங்க போலயிருக்கு :huh:

தத்துவம் எல்லாம் சொல்ல தொடங்கீட்டீங்க போலயிருக்கு :huh:

இது ஏற்கனவே ஒருத்தர் சொல்லிட்டார் நான் ரிப்பிட்

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.இந்தியா பஙங்களாதேசத்துக்கெதிரான போட்டியில் வெற்றிபெறுமா? இந்தியா இரண்டாவது ஓவரிலேயே தனது ஆரம்பவீரரை இழந்துவிட்டது அது மட்டுமல்லாமல் அவர்கள் பங்களாதேச வீரர்களின் பந்துவீச்சுக்கு தடுமாறுகிறார்கள் அவாகள் எடுக்கும் ஓட்டங்கள் மிகவும் குறைவாகவேயுள்ளது

Edited by ganesh

  • தொடங்கியவர்

அரவிந்தன் எங்கே புதிய தரவரிசை பட்டியலை காணவில்லை?? :rolleyes:

அரவிந்தன் எங்கே புதிய தரவரிசை பட்டியலை காணவில்லை?? :rolleyes:

அப்ப 24 மணி நேரம் ஆகியும் யாழில் நாங்கள் தான் முதல் மூன்று இடங்களிலும் நிற்கிறோம்

:rolleyes::D:D

  • தொடங்கியவர்

அப்ப 24 மணி நேரம் ஆகியும் யாழில் நாங்கள் தான் முதல் மூன்று இடங்களிலும் நிற்கிறோம்

:rolleyes::rolleyes::D

லஞ்ச ஊழல் இடம் பெற்றிருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு :D

Edited by யாழ்வினோ

தற்போதைய நிலவரப்படி இந்தியா 42.5 ஓவர்களுக்கு ஐந்து விக்கட் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Mashrafe Mortaza ஏழு ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கட் வீழ்த்தியுள்ளார். வங்கப் புலிகள் சாதிக்குமா?

ஜானா

  • தொடங்கியவர்

இப்ப 154 ஓட்டங்களுக்கு 9 விக்கெற் இழந்துள்ளார்கள். மைதானத்தில் இருக்கும் இந்தியா ஆதரவாளர்கள் வைத்திருக்கும் சுலோக அட்டைகளில் "Tendulkar Is Our God" என்று எழுதி வைத்துள்ளார்கள் அது தான் இந்த கெதியோ?? :rolleyes:

Sehwag - 02 Out

Tendulkar - 07 Out

Dravid - 14 Out

Dhoni - 00 Out

Harbhajan Singh - 00 Out

Agarkar - 00 Out

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் எங்கே புதிய தரவரிசை பட்டியலை காணவில்லை?? :rolleyes:

ஆள் நியூசிலாந்துக்கு எஸ்கேப்.

மற்றுமோர் ஆச்சரியம் Ireland உடனான போட்டியில் பாகிஸ்தானம் 6 விக்கட் இழப்பிற்கு 27.5 ஓவாகளில் 93 ஓட்டங்களை எடுத்து தாடுமாறிக் கொண்டிருக்கின்றது.

தென்டுல்கரை இந்திய இரசிகர்கள் கடவுள் என்கின்றார்களா செம்மறி ஆடு என்கின்றார்களா???? :P

ஐயா 26 பந்துகளை அநியாயமாக்கி வெறும் 7 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுள்ளார். அதில் ஒரு 4s அடங்கும்.

கங்கூலி 129 பந்துகளை வீணாக்கி 66 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்துவிட்டார். கிரிக்கட் ஜம்பவான்கள் மண்கவ்வுவார்களா?

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது பங்காளதேஸ் சக்கை போடு போடுது.2/74 15overs

Edited by eelapirean

இந்தியா வாங்கிக் கட்டியது. நேற்றைய போட்டியில் :

இந்தியா - பங்களதேச அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா தனது சகல விக்கட்டுக்களைளும் 49.3 ஓவர்களில் பறிகொடுத்து 191 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதற்கு பதிலாக 192 ஓட்ட எண்ணிக்கை இலக்காகக் கொண்ட வங்கப் புலிகள் 5 விக்கட் இழப்பிற்கு 48.3 ஓவர்களில் தமது இலக்கை எட்டி ஐந்து விக்கட்டுக்களினால் வெற்றி வாகை சூடிக் கொண்டது.

மற்றைய ஆட்டத்தில்

சுருண்டது பாகிஸ்தான்

பாகிஸ்தான் - ஐஸ்லாந்து

பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களி தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. 133 ஓட்ட இலக்கை கொண்டு துடுப்பெடுத்தாடாடிய ஐஸ். அணியினர் தமது வெற்றிக் கனியை 7 விக்கட்டை இழந்து 41.4 ஓவர்களில் பெற்று கொண்டது.

இந்திய அணியில் கங்கூலி மட்டுமே ஓரளவு நன்றாக விளையாடியுள்ளார். வஙகத்தின் 3 வீரர்கள்

அரைச் சதம் எடுத்தை கூறிப்பிட்டுக் கூறலாம்.

கிரிக்கட் உலகின் ஜம்பவான்களை மூக்குடைத்து வெற்றி பெற்ற இவ் விரு அணியினருக்கும் எனது வாழ்த்துக்கள்.

ஜானா

Edited by Janarthanan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.