Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த உலக கிண்ணத்தில் இறுதி ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவுடன் மோதிய பாகிஸ்த்தான் அணி இந்த உலக கிண்ணத்தில் மேற்கிந்திய, அயர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவி முதல் சுற்றிலேயெ உலக கிண்ண போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.

குறூப் ஏ யில் தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லப்போகின்றது.

குறுப் பி யில் இலங்கை, பங்களாதேஸ் செல்லும் என எதிர்பார்க்கலாம், (இந்தியாவும் முதல் சுற்றிலே வெளியேறும் நிலை வந்துவிட்டது என்றே தெரிகிறது, காரணம் இலங்கை பங்களாதேஸ் அணியை தோற்கடிக்கும் வல்லமை உண்டு, பங்களாதேசை எதிர் கொண்ட போட்டிகள் அனைத்திலும் இலங்கை சுலபமான வெற்றிகளை பெற்றிருக்கிறது, அதைவிட ஜெயசூர்யா, சங்கக்காரா அதிரடியில் மலிங்க, வாஸ், வேகத்தில், முரளியின் சுழலில் பங்களாதேஸால் வெற்றி பெறுவது கடினமே. தற்பொழுது இலங்கையின் துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது, தரங்க தொடக்கத்தில் ஜெயசூர்யா விலாசலில், ஜெயவர்த்தனே, சங்கக்கார, அத்தப்ப்பத்து, சில்வா, ஆர்னல்ட், மஹ்ரூவ் (முரளியை தவிர) அனைவரும் துடுப்பாட்டம் செய்கிறார்கள், பந்துவீச்சில் மலிங்க, வாஸ், மஹ்ரூவ் முரளி ஆகியோர் சிறப்பாக வீசுகிறார்கள்.

குறூப் சி யில். நியுசிலாந்த், கென்யா அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

குறூப் டி யில், மேற்கிந்திய, அயர்லாந்த் அணிகள் செல்லப்போகின்றது.

தலைக்கனம் பிடித்த இந்திய, பாகிஸ்த்தான் அணிகள் இந்த உலக கிண்ணப்போட்டியில் நன்றாக பாடம் கற்றுக்கொள்ளும், கொண்டுவிட்டன.

இந்த கிண்ணம் கூடுதலாக இம்முறையும் அவுஸ்ரேலியாவுக்கு கிடைக்கும், அல்லாதுவிடில் இலங்கை அல்லது அல்லது நியுசிலாந்து அணிக்கும் கிடைக்கும்.

Edited by Danklas

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply

டங்கிளஸ் பங்களாதேசை இலங்கை வெல்லுமென உறுதியாகச் சொல்ல முடியாது.

காரணம் இன்று இந்தியாவிற்கு அது கொடுத்த அதிர்ச்சி வைத்தியம். நீங்கள் சொல்லும் வகையில் பார்த்தால் இதுவரை பங்களாதேஷ் அணியிடம் இந்தியா தோற்கவில்லை. முதல்முறையாக இலங்கையை விட சிறந்த துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட இந்திய ஆட்டக்காரர்கள் பங்களதேசின் பந்து வீச்சிற்கு முகம் கொடுக்க முடியவில்லை.

எனவே பங்களாதேஸ் இலங்கை அணிகளிற்கு இடையேயான ஆட்டம் இறுக்கமாகவே இருக்குமென எதிர்பார்க்கலாம்.

இலங்கை உலகக் கோப்பையை வெல்லுவதற்குக் காரணமான பயிற்சியாளர் வட் மோர் பங்களாதேஸ் அணியையும் சிறந்த முறையில் வளர்த்து விட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் பங்களாதேஸ் அணியும் உலகில் சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கும்.

என்னைப் பொறுத்தவரை

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து - இந்த முறையின் அடிப்படையிலேயே வெற்றி வாய்ப்பு தங்கியிருக்கிறது. ஆனால் சிறிலங்கா கால் இறுதிவரை சிலவேளைகளில் போகலாம் ஆனால் இறுதிப் போட்டிக்குச் செல்வது கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னா நைனா லொள்ளா? இந்தியா பங்களாதேசிடம் தோற்கவே இல்லையா?? கடந்த ஆண்டு பங்களாதேசிற்கு சென்று ஒரு போட்டியில் தோற்று, அடுத்த போட்டியில் மயிரழையில் வென்றார்கள் தெரியாதோ? :lol:

இருந்து பாருங்கள், இலங்கை அணி பங்களாதேசை வென்றுகாட்டும், 21ம் திகதி இதே நேரம் இலங்கை வென்றுவிட்டது என்று கருத்து எழுதுவேன், அப்படி இல்லையே சுவிஸ் கிங்க் சின்னப்பு எனக்காக மொட்டைபோடுவார். :D:lol: :angry: :angry: :angry:

இந்திய அணியை பலம் வாய்ந்த அணி என்று சொல்லமுடியாது, அவர்களும் பாகிஸ்த்தான் அணிமாதிரித்தான், சில நேரங்களில் எல்லோரும் நன்றாக விளையாடுவார்கள், அல்லது எல்லோரும் ஒன்றாக மட்டை போடுவார்கள், தற்போதைய இலங்கை அணி அப்படியில்லை, ஜெயசூர்யா 15 ஓவர்கள் நின்றாலே இலங்கை அணியின் வெற்றி 75% வெற்றிபெறும், அதைவிட இலங்கை அணிக்கு இரண்டு துடுப்பாட்டவீரர்களும் (சில்வா, தரங்க), இரண்டு சிறந்த பந்துவீச்சாளர்களும் (மலிங்க, மஹ்ரூவ்) கிடைத்துள்ளார்கள், தூள் கிளப்புவார்கள்.

மறந்திடாதேங்க 21ம் திகதி டன் கருத்து எழுதுறான் இல்லையேல் 22ம் திகதி விடிய 8-10க்குள்ள சின்னப்புவுக்கு மொட்டை போடுறன். அட்லீஸ் சாஸ்த்துக்காவது ஒரு பக்க மீசையை எடுப்பன், இது எனது குரு கொழுப்பு கமாலாக்கா மேல் ஆணை. :angry: :angry:

இந்தியாவை வென்ற பங்களாதேஷ்யுக்கு எனது வாழ்த்துகள்

:lol::D

  • தொடங்கியவர்

Group - C இல் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் தான் "Super 8" போட்டிகளுக்கு தெரிவாகும். கென்யாக்கு வாய்ப்புக்கள் மிக குறைவு.

Group - D இல் பாகிஸ்தான் - சிம்பாவே அணிகளுக்கிடையாக போட்டியில் (21 - March - 2007) பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அயர்லாந்து அணி "Super 8" போட்டிகளுக்கு செல்ல முடியும்.

ஆனால் நேற்று நடை பெற்ற போட்டி முடிவுகளின் படி பாகிஸ்தான் அணி "Super 8" போட்டிகளுக்கு தெரிவாகும் தகுதியை இழந்து விட்டது ஆகவே (21 - March - 2007) அன்று நடை பெறும் போட்டி முடிந்ததும் அவர்கள் பெட்டி படுக்கைகளை எடுத்து கொண்டு அவர்களுடைய நாட்டுக்கு போக வேண்டி வரும்.

அத்துடன் இன்று நடை பெறும் போட்டிகள் முடியும் நேரத்தில் நெதர்லாந்து, கனடா ஆகிய அணிகளும் "Super 8" போட்டிகளுக்கு தெரிவாகும் தகுதியை இழக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Edited by யாழ்வினோ

லஞ்ச ஊழல் இடம் பெற்றிருக்குமோ என்று சந்தேகமாக இருக்கு :lol:

:lol::D:lol:

பாகிஸ்தான் இந்திய அணிகளின் வீரமாண துடுப்பாட்டத்தைப் பார்ப்பதற்க்கு

அமத்துக

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க வீரர்களின் சாதனைகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொன்னாபிரிக்கா- நெதர்லாந்து அணிகள் இடையேயான ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது. இதில் 3 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் அதிரடியாக ஆடினார். ஆட்டத்தின் 30 ஆவது ஓவரை அயர்லாந்து வீரர் வான் புங்கா வீசினார்.இதில் ஒவ்வொரு பந்துகளையும் கிப்ஸ் அசுர வேகத்தில் சிக்சர்களாக தூக்கினார். ஒன்றல்ல , இரண்டல்ல அந்த ஓவரில் வீசிய 6 பந்தையும் இமாலய சிக்சர்களாக மாற்றி ரசிகர்களுக்கு அற்புதமான விருந்து படைத்தார்.

சாதனை முறியடிப்பு

இதன் மூலம் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் (36 ஓட்டங்கள்) அடித்த முதல் வீரர் என்ற சாதனையை 33 வயதான கிப்ஸ் நிகழ்த்தினார். இதற்கு முன்பு இலங்கை வீரர் ஜெயசூரிய 1995-96 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் 2000-01 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராகவும் ஒரே ஓவரில் தலா 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை கிப்ஸ் நேற்று தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் கிப்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 72 ஓட்டங்கள் குவித்தார்.

பவுச்சர்

தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் பவுச்சர் 21 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் குறைந்த பந்தில் அரைச் சதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுத் தலைவர் பிரையன் லாரா கனடாவுக்கு எதிராக 23 பந்துகளில் அரைச் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இதனை பவுச்சர் முறியடித்தார்.

புதிய சாதனை

மொத்தம் இந்த ஒருநாள் போட்டியில் 18 சிக்சரும் 30 பவுண்டரிகளும் எடுக்கப்பட்டன. ஒரு நாள் போட்டியில் ஒரு போட்டியில் ஒரு அணி வீரர்கள் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் இது தான். இதற்கு முன்பாக 2005 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி சிம்பாப்வேக்கு எதிராகவும் அவுஸ்திரேலிய அணி 2006-2007 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் தலா 16 சிக்சர்கள் விளாசியதே ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்சர்களாக இருந்தன. இதனை தென்னாபிரிக்க அணி நேற்று முன்தினம் தூள் தூளாக்கியது.

இன்றைக்கு யாருக்கும் யாருக்கும் போட்டி???

கடந்த உலக கிண்ணத்தில் இறுதி ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவுடன் மோதிய பாகிஸ்த்தான் அணி இந்த உலக கிண்ணத்தில் மேற்கிந்திய, அயர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவி முதல் சுற்றிலேயெ உலக கிண்ண போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.

டன் ஒரு சிறு திருத்தம் கடந்தமுறையல்ல அதற்க்கு முந்திய முறைதன் (99இல்தான்) பாகிஸ்தான் இறுதியாட்டத்திற்க்கு முன்னேறியது. கடந்த முறை இந்திய அணிதான் இறுதியாட்டத்தில் ஆடியது.

எனது கருத்துப் படி இறுதியாட்டத்திற்க்கு வரும் ஆசிய அணிகள் அடுத்து வரும் உலக கிண்ணத்தில் முதல் சுற்று அல்லது 2ம் சுற்றிலேயே வெளியேறிவிடுவார்கள். 83ம் ஆண்டு உல கிண்ணத்தை எடுத்த இந்திய அணி 87ம் ஆண்டு முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது, 92ம் ஆண்டு உலக கிண்ணத்தை கைப்பற்றிய பாக் அணி 96இல் 2ம் சுற்றில் இந்தியாவிடம் தோற்று வெளியேறினது, 96ம் ஆண்டு சம்பியன் இலங்கை 99இல் சுப்பர் சிக்ஸ் கூட போகவில்லை, 99இல் ஆஸியுடன் மோதிய பாகிஸ்தான் 2003இல் சுப்பர் சிக்ஸோடு வெளியேறியது, 2003ம் ஆண்டு இறுதியாட்டத்தைல் மோதிய இந்திய அணி என்னாகும்.......?

குறூப் ஏ யில் தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லப்போகின்றது.

குறுப் பி யில் இலங்கை, பங்களாதேஸ் செல்லும் என எதிர்பார்க்கலாம், (இந்தியாவும் முதல் சுற்றிலே வெளியேறும் நிலை வந்துவிட்டது என்றே தெரிகிறது

குறூப் சி யில். நியுசிலாந்த், கென்யா அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

குறூப் டி யில், மேற்கிந்திய, அயர்லாந்த் அணிகள் செல்லப்போகின்றது.

குறுப் C யில் கென்ய அணிக்கு 2ம் சுற்றுக்கு போவதற்க்கான சந்தர்ப்பம் குறைவு அதைவிட இங்கிலாந்திற்க்குதன் அதிகம்

தலைக்கனம் பிடித்த இந்திய, பாகிஸ்த்தான் அணிகள் இந்த உலக கிண்ணப்போட்டியில் நன்றாக பாடம் கற்றுக்கொள்ளும், கொண்டுவிட்டன.

இந்த கிண்ணம் கூடுதலாக இம்முறையும் அவுஸ்ரேலியாவுக்கு கிடைக்கும், அல்லாதுவிடில் இலங்கை அல்லது அல்லது நியுசிலாந்து அணிக்கும் கிடைக்கும்.

  • தொடங்கியவர்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க வீரர்களின் சாதனைகள்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொன்னாபிரிக்கா- நெதர்லாந்து அணிகள் இடையேயான ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது. இதில் 3 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க வீரர் கிப்ஸ் அதிரடியாக ஆடினார். ஆட்டத்தின் 30 ஆவது ஓவரை அயர்லாந்து வீரர் வான் புங்கா வீசினார்.இதில் ஒவ்வொரு பந்துகளையும் கிப்ஸ் அசுர வேகத்தில் சிக்சர்களாக தூக்கினார். ஒன்றல்ல , இரண்டல்ல அந்த ஓவரில் வீசிய 6 பந்தையும் இமாலய சிக்சர்களாக மாற்றி ரசிகர்களுக்கு அற்புதமான விருந்து படைத்தார்.

சாதனை முறியடிப்பு

இதன் மூலம் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் (36 ஓட்டங்கள்) அடித்த முதல் வீரர் என்ற சாதனையை 33 வயதான கிப்ஸ் நிகழ்த்தினார். இதற்கு முன்பு இலங்கை வீரர் ஜெயசூரிய 1995-96 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் 2000-01 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராகவும் ஒரே ஓவரில் தலா 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை கிப்ஸ் நேற்று தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் கிப்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 72 ஓட்டங்கள் குவித்தார்.

பவுச்சர்

தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் பவுச்சர் 21 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் குறைந்த பந்தில் அரைச் சதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுத் தலைவர் பிரையன் லாரா கனடாவுக்கு எதிராக 23 பந்துகளில் அரைச் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இதனை பவுச்சர் முறியடித்தார்.

புதிய சாதனை

மொத்தம் இந்த ஒருநாள் போட்டியில் 18 சிக்சரும் 30 பவுண்டரிகளும் எடுக்கப்பட்டன. ஒரு நாள் போட்டியில் ஒரு போட்டியில் ஒரு அணி வீரர்கள் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் இது தான். இதற்கு முன்பாக 2005 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி சிம்பாப்வேக்கு எதிராகவும் அவுஸ்திரேலிய அணி 2006-2007 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் தலா 16 சிக்சர்கள் விளாசியதே ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்சர்களாக இருந்தன. இதனை தென்னாபிரிக்க அணி நேற்று முன்தினம் தூள் தூளாக்கியது.

ஓவர்கள் குறைக்கப்பட்டு 40 ஓவர்களாக மட்டுப்படுத்திய போதே இவளவு சாதனைகள் என்றால் அந்த போட்டி 50 ஓவர்களை கொண்ட போட்டியாக அமைந்திருந்தால் கதை வேற. :D

இன்று அவுஸ்ரேலியா - நெதர்லாந்து அணிகளுக்கிடையான போட்டியில் அவுஸ்ரேலியா முதலில் துடுப்பாடினால் சில சமயங்களில் சாதனைகள் இடம் பெறும். :lol:

Edited by யாழ்வினோ

England 62/0 (12.2 ov)

Canada

Canada won the toss and elected to field first

England RR 4.96

Last 5 ovs 15/0 RR 3.00

Refresh scorecard

ODI career

EC Joyce (lhb) 26runs from 39

MP Vaughan (rhb) 22runs from39

-------------------------

Australia 88/1 (15.0 ov)

Netherlands

Australia won the toss and elected to bat first

Australia RR 5.86

Last 5 ovs 30/1 RR 6.00

Refresh scorecard

ODI career

AC Gilchrist (lhb) 40runs from 44

RT Ponting (rhb) 13runs from 13

England 151/1 (32.2 ov)

Canada

England RR 4.64

EC Joyce (lhb) 62runs 93 balls

IR Bell (rhb) 28runs 41 balls

---------------------------------------------------------------------------------------

Australia 169/3 (31.3 ov)

Netherlands

Australia RR 5.36

BJ Hodge (rhb) 26runs 36 balls

MJ Clarke (rhb) 20runs 35balls

  • தொடங்கியவர்

இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்ததும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இந்திய கிரிக்கெற் ரசிகர்கள்.

indiaam5.jpg

இந்திய வீரர் டொனி புதிதாக கட்டும் வீட்டினை அடித்து உடைக்கும் இந்திய கிரிக்கெற் ரசிகர்கள்.

pic2zy0.jpg

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா - 358 ஓட்டங்கள் - 5 விக்கெற் (50 ஓவர்கள்)

Hodge - 123 Out (7 சிக்சர்கள்)

Clarke - 93 Not Out (3 சிக்சர்கள்)

Gilchrist - 57 Out

இங்கிலாந்து - கனடா அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 279 ஓட்டங்களைப் பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி இங்கிலாந்தை முதலில் ஆட பணித்தது.

ஓஸ்ரேலியா - நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓஸ்ரேலியா அணி 5 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 358 ரன்களைப் பெற்றது. இதில்

Hodge 89 பந்துகளில் 123 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 8 - 4s களுடன் 7 - 6s அடங்கும்.

Clarke 85 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பெற்றார் இதில் 6 - 4s ம் 3 - 6s ம் அடங்கும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஜானா

பாகிஸ்தான் கீரிக்கட்டு அணிபயிற்றுவிப்பாளர் இன்று மரணம்!

92dbdee153bb0a.jpg

பாவிகளா! கடைசியில பாகிஸ்தான் கீரிக்கட்டு வியாதிக் காரனுகள் பாகிஸ்தான் கீரிக்கட்டு அணி பயிற்றுவிப்பாளர் இறப்பதற்கு காரணமாக இருந்துவிட்டான்களே! விளையாட்டு இந்தக்காலத்தில் விளையாட்டாக எடுக்கப்படவில்லை மாறாக வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது என்பதற்கு பாகிஸ்தான் கீரிக்கட்டு அணி பயிற்றுவிப்பாளரின் திடீர் மரணம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த மரணம் ஒரு தற்கொலையாகவோ அல்லது ஒரு கொலையாகவோ கூட இருக்கலாம். இந்த மரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ள அதேவேளை கிரிக்கட்டு மீதுள்ள வெறுப்பை மேலும் கூட்டியுள்ளது. மரணமடைந்த பாகிஸ்தான் கீரிக்கட்டு அணி பயிற்றுவிப்பாளரும் ஒரு மனிதன் தானே! இவருக்கும், இவரது பிரிவால் துயர் அடைந்திருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்!

s353183c5b15diz4.jpg

Pakistan coach Woolmer dies

Cricinfo staff

March 18, 2007

Woolmer has been Pakistan's coach since

Bob Woolmer, the Pakistan coach, has died in a Kington hospital after being found unconscious in his hotel room hours after his side's elimination from the World Cup. He was 58.

Although Woolmer played 19 Tests for England, it was as an international coach he really made his mark, first with South Africa and then, after a spell as the ICC's High Performance Manager, with Pakistan.

Born in India, Woolmer made his mark in a strong Kent side in the 1970s as an allrounder, a pugnacious middle-order batsman and medium-paced seamer. Although his England career was just getting started when he joined World Series Cricket, like so many who threw their lot in with Kerry Packer, when he returned he was not the player he had been.

Called up to an England side in crisis in 1975, in only his second Test he staged a great rearguard innings to save his side when they followed on against Australia, holding out for 499 minutes against Dennis Lillee and Jeff Thomson to score 149. Although he added two more hundreds, also against Australia, World Series Cricket checked his career in 1977, and he effectively ended it forever by joining the rebel South African tour of 1981-82.

His coaching career started at Warwickshire, and he immediately made an impact as the county won a string of trophies in the early 1990s. That led to him being appointed by South Africa in 1994.

As a coach, his pioneering use of computers to show, for example, where opposing batsmen scored their runs may have stemmed from an experience of his own, batting against Mike Brearley's Middlesex. "Knowing I liked the cover-drive, he had Mike Selvey bowling at me wide of off stump, with two slips and two gulleys. In 45 minutes, I scored 12. Then I chased another wide one from Selvey and was caught at second slip."

In the 1996 World Cup, Graeme Hick was a notable victim of Woolmer's computer-based analysis, which revealed that if Hick could be kept scoreless for a spell, he tended to flick an off-stump ball in the air to midwicket. The trap was sprung by Fanie de Villiers, and Brian McMillan took the catch. Woolmer was creative and adventurous. But his coaching was based on a simple premise: the more enjoyable he could make the game, the better his players would respond. No two fielding practices were alike when Woolmer was in charge.

After a spell as the ICC's high-performance manager, he was announced as Pakistan's new coach in June 2004, and signed a contract to remain in charge until the 2007 World Cup. However, Pakistan's form leading up to the tournament was poor, and when they lost their first two matches - the second to Ireland - it appeared unlikely that his tenure would be extended. He had been mentioned as a possible successor to Duncan Fletcher as England coach.

He made 1059 runs at 33.09 in Tests, with three hundreds, and also took four wickets at 74.75. In all first-class cricket, mainly with Kent but also in South African state cricket, he scored 15772 runs at 33.55 and took 420 wickets at 25.87.

© Cricinfo

http://content-usa.cricinfo.com/wc2007/con...ory/285940.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளையாட்டில் தோற்றால் கூட இந்தியாவில் ஆர்ப்பாட்டமும்,ஊர்வலமுமா?????

யாழ்களப்போட்டியில் நியூசிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடந்த போட்டியும், இந்தியாவுக்கும் பங்களதேச அணிக்கும் இடையில் நடந்த போட்டியும் முடிவில் வழங்கப்பட்ட புள்ளிகளுக்கு பிறகு தற்பொழுது மாப்பிள்ளை முதல் இடத்திலும், யாழ்வினோ 2ம் இடத்திலும், கறுப்பி 3ம் இடத்திலும், வாசகன் 4ம் இடத்திலும், சிவராஜா 5ம் இடத்திலும் உள்ளார்கல். 11ம் இடத்தில் இருந்த வானவில் 6ம் இடத்துக்கும்,13ம் இடத்தில் இருந்த வெண்ணிலா 7ம் இடத்துக்கும், 14ம் இடத்தில் இருந்த ஜனார்த்தனன் 11ம் இடத்துக்கும்,15ம் இடத்தில் இருந்த சின்னக்குட்டி 12ம் இடத்துக்கும்,16ம் இடத்தில் இருந்த ராஜன் 15ம் இடத்துக்கும் 17ம் இடத்தில் இருந்த மணிவாசகன் 16ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=271988

நேற்றைய போட்டிகளின் விபரம் :

ஓஸ்ரேலியா - நெதர்லாந்து

ஓஸ்ரேலியா 5 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 358 ஓட்டங்கள்

நெதர்லாந்து சகல விக்கட்டுக்களையும் இழந்து 26.5 ஓவர்களில் 129 ஓட்டங்களைப் பெற்றது

ஒஸ்ரெலியா 229 ஓட்டத்தால் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - கனடா

இங்கிலாந்து 6 விக்ட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 279 ஓட்டங்களைப் பெற்றது.

கனடா அணியினர் 7 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 228 ரன்களை எழுத்தது.

இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் Bob Woolmer ன் மரணத்திற் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாகிஸ்தானுக்கு சோதனை மேல் சோதனை.

ஜானா

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் Bob Woolmer ன் மரணத்திற் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால் இங்கிலாந்து வீரரும் முன்னால் தென்னாபிரிக்கா பயிற்சியாளரும், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளருமான பொப் வூள்மருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். பாகிஸ்தான் அணித்தலைவர் இன்சமாம் உல் காக் சிம்பாவே போட்டியுடன் ஒரு நாள் உலகக்கிண்ணப்போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இப்பொழுது உலககிண்ண சூதாட்டவிபரம்

Australia 2.75 Bet

South Africa 5.00 Bet

West Indies 7.00 Bet

Sri Lanka 7.50 Bet

New Zealand 7.50 Bet

England 11.00 Bet

India 12.00 Bet

Bangladesh 41.00 Bet

Kenya 301.00 Bet

Ireland 301.00 Bet

Zimbabwe 501.00 Bet

Scotland 1501.00 Bet

Canada 2001.00 Bet

Bermuda 3001.00 Bet

இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே பல ஊகங்கள் முன் வைக்கப்பட்டன. கிண்ணத்தை கைப்பற்றும் சந்தர்ப்பம் என்ற வகையில் தென்னாபிரிக்கா, நீயூசிலாந்து, இந்தியா என்று பெயர்கள் அடிபட்டன. ஆனால் இப்போ நடந்து முடிந்த போட்டிகளைப் பார்த்தால் நம்ப முடியாமல் இருக்கிறது. எதுவும் நடக்கலாம் என்ற் மாதிரி.. Minnows என்று கேலி செய்யப்பட்ட இரண்டாம் தர அணிகளாகக் கருதப்பட்ட பங்களாதேஷ் அணி இந்தியாவை தோற்கடித்ததும், அயர்லாந்து அணி முன்னாள் உலகச்சாம்பியனான பாகிஸ்தானை தோற்கடித்ததோடு பாகிஸ்தான் அணி இம்முறை முதல் றவுண்டிலேயே நாடு திரும்ப நேர்ந்துள்ளதை நினத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வசீம் அக்றம், இம்றான் கான், முகமெட் யூனூஸ் விளையாடிய காலத்தை நினைக்க..

அயர்லாந்து-பாகிஸ்தான் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன். மனத்தளவில் எப்போதும் எதிர்பாராத சிறிய அணி வெல்லவேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும் - பாகிஸ்தான் அணியை குறிப்பாக அவர்களது Coach(பயிற்சியாளர்) Bob Woolmer ஐப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இடிந்து போய் இருந்தர்ர். அயர்லாந்து அணி வெற்றிக்கான ஒட்டத்தை எடுத்ததும் அவரைக் காட்டினார்கள். அவர் தனது கைப்பையில் ஏதோ பேப்பர்களை வைத்துக் கொண்டிருந்தார். நாட்டுக்கு திரும்பிப் போக மூட்டை கட்டுகிறார் என்ற மாதிரி நேர்முக வர்ணனையாளர் சொல்லிகொண்டிருந்தார்.

இன்றைக்கு செய்தி கிடைத்தது. Bob Woolmer ராத்திரி தனது ஹோட்டல் அறையில் மயங்கிக் கிடந்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக மரணமாகிவிட்டார் என்று.

அதிர்ச்சியாக இருக்கிறது..!

post-3518-1174263375_thumb.jpg

post-3518-1174263406_thumb.jpg

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த உலக கிண்ணத்தில் இறுதி ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவுடன் மோதிய பாகிஸ்த்தான் அணி இந்த உலக கிண்ணத்தில் மேற்கிந்திய, அயர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவி முதல் சுற்றிலேயெ உலக கிண்ண போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.

குறூப் ஏ யில் தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லப்போகின்றது.

குறுப் பி யில் இலங்கை, பங்களாதேஸ் செல்லும் என எதிர்பார்க்கலாம், (இந்தியாவும் முதல் சுற்றிலே வெளியேறும் நிலை வந்துவிட்டது என்றே தெரிகிறது, காரணம் இலங்கை பங்களாதேஸ் அணியை தோற்கடிக்கும் வல்லமை உண்டு, பங்களாதேசை எதிர் கொண்ட போட்டிகள் அனைத்திலும் இலங்கை சுலபமான வெற்றிகளை பெற்றிருக்கிறது, அதைவிட ஜெயசூர்யா, சங்கக்காரா அதிரடியில் மலிங்க, வாஸ், வேகத்தில், முரளியின் சுழலில் பங்களாதேஸால் வெற்றி பெறுவது கடினமே. தற்பொழுது இலங்கையின் துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது, தரங்க தொடக்கத்தில் ஜெயசூர்யா விலாசலில், ஜெயவர்த்தனே, சங்கக்கார, அத்தப்ப்பத்து, சில்வா, ஆர்னல்ட், மஹ்ரூவ் (முரளியை தவிர) அனைவரும் துடுப்பாட்டம் செய்கிறார்கள், பந்துவீச்சில் மலிங்க, வாஸ், மஹ்ரூவ் முரளி ஆகியோர் சிறப்பாக வீசுகிறார்கள்.

குறூப் சி யில். நியுசிலாந்த், கென்யா அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும்.

குறூப் டி யில், மேற்கிந்திய, அயர்லாந்த் அணிகள் செல்லப்போகின்றது.

தலைக்கனம் பிடித்த இந்திய, பாகிஸ்த்தான் அணிகள் இந்த உலக கிண்ணப்போட்டியில் நன்றாக பாடம் கற்றுக்கொள்ளும், கொண்டுவிட்டன.

இந்த கிண்ணம் கூடுதலாக இம்முறையும் அவுஸ்ரேலியாவுக்கு கிடைக்கும், அல்லாதுவிடில் இலங்கை அல்லது அல்லது நியுசிலாந்து அணிக்கும் கிடைக்கும்.

கடந்த உலகக்கிண்ணப்போட்டியில் இறுதிச்சுற்றில் அவுஸ்திரெலியாவுடன் விளையாடியது இந்தியா தான். கடந்த உலகக்கிண்ணப் போட்டியில் ஆரம்ப சுற்றிலேயே பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியா அணிகள் முதல் சுற்றில் இருந்து வெளியெறிவிட்டது. பாகிஸ்தான் 99ல் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரெலியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடியது. குறுப் Bயில் இந்தியா இலங்கைக்கு இடையில் நடைபெறும் போட்டியில் இந்தியாவும், இலங்கை பங்களதேசத்துக்கு இடையிலான போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றால், பேர்முடாவுக்கு எதிராகப் போட்டியிடும் அணிகள் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் இலங்கை,இந்தியா,பங்காளதேச அணிகள் ஒரே புள்ளிகள் பெறும் நிலை ஏற்படும். அச்சமயத்தில் ஒட்ட விகிதத்தின் மூலம் இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்படும். குறுப் சியில் இங்கிலாந்து கென்யா போட்டிகளில் வெற்றி பெறும் அணி தான் அடுத்த சுற்றுக்கு நியூசிலாந்து உடன் தெரிவாகும். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுப் டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிம்பாவே வெற்றி பெற்றால் அயர்லாந்து சிம்பாவே நாடுகளில் ஒன்று ஒட்ட விகித அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்படும்( மேற்கிந்தியாத்தீவுகள் அயர்லாந்து சிம்பாவேயிடம் எதாவது ஒரு போட்டியில் தோல்வி உற்றால் நிலைமே வேறு விதமாகிப் போகும்)

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் இன்று நடை பெறும் போட்டிகள் முடியும் நேரத்தில் நெதர்லாந்து, கனடா ஆகிய அணிகளும் "Super 8" போட்டிகளுக்கு தெரிவாகும் தகுதியை இழக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் கனடா அடுத்த சுற்றுக்கு செல்ல சந்தர்ப்பம் உள்ளது. அதாவது கென்யா நியூசிலாந்தினையும், இங்கிலாந்தையும் வென்றால் கென்யாவுக்கு 6 புள்ளிகள். கனடா நியூசிலாந்தினை வென்றால் கனடா, நியூசிலாந்து,இங்கிலாந்து அணிகள் 2 புள்ளிகள் மட்டுமே பெறும். அப்பொழுது ஒட்ட விகிதம் பார்க்கப்படும். இப்படி எல்லாம் நடக்காது என்றாலும் கனடா அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இப்படி நடந்தால் தான் செல்லும் என்பதற்காக இவ்வாறு பதில் அளித்தேன்.இதுவரை பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளே அடுத்த சுற்றுப் போட்டிக்கு செல்லும் சந்தர்ப்பத்தினை இழந்துள்ளார்கள்.

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.