Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை துணியால் வாயை கட்டி பொதுபல சேனா ஆர்ப்பாட்டம் : ஞானசார கைது செய்யப்பட்டால் என்ன நடக்குமென தெரியாது என எச்சரிக்கை : தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் முறைப்பாடு

Featured Replies

வெள்ளை துணியால் வாயை கட்டி பொதுபல சேனா ஆர்ப்பாட்டம் : ஞானசார கைது செய்யப்பட்டால் என்ன நடக்குமென தெரியாது என எச்சரிக்கை : தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் முறைப்பாடு

 

இனவாதம் பேசுவதாக ஞானசார தேரருக்கு எதிராக மாத்திரம் சட்டநடவடிக்கை எடுக்காமல் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதம் பேசும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் எதிராக சட்டநவடடிக்கை எடுக்க கோரியும், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பது தெரியாது என எச்சரிக்கை விடுத்து பொதுபலசேனா அமைப்பினர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக வெள்ளைத் துணியால் வாயைக் கட்டியவாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.BBS-Protest.jpg

மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் இனவாதமாக செயற்படும், சி.வி. விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம், விஜயகலா மகேஸ்வரன், ரிசாத் பதியுதீன் , ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளே ஞானசார தேரருக்கு எதிராக எடுக்க வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பினர் தெரிவித்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த தேரர் ஒருவர்,

ஞானசார தேரரை கைது செய்ய மறைமுகமான செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஞானசார தேரர் இனவாதமோ மதவாதமோ பேசவில்லை. அவர் தமது இனத்துக்கு எதிரான வேற்று இனத்தவரால் மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவே குரல்கொடுத்தார்.

ஆனால் ஞனசார தேரரை விட இன,மத வாதம் பேசிய தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஈழம் சார்பான தனிப்பட்ட அரசியலை மேற்கொள்கின்றார். விஜயகலா மகேஸ்வரன் இனவாதமே பேசிக்கொண்டிருக்கின்றார். அசாத்சாலி ஞானசார தேரரை அடித்துக் கொல்ல வேண்டும் என்கிறார். கிழக்கில் உள்ள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என ஹிஸ்புல்லா கூறுகின்றார். விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை இனவாதத்தை தூண்டும் வகையில் சிவாஜிலிங்கம் கொண்டாடுகின்றார். காட்டையழித்து முஸ்லிம் குடியேற்றங்களை ரிசாத் பதியுதீன் ஏற்படுத்தி வருகின்றார்.

ஆனால் சிங்களவர்களாகிய நாங்கள் எதனையாவது கூறினால் இனவாதம் பேசுகின்றோம் என்கிறார்கள். எனவே இதற்கு பிறகு நாங்களை எதனையும் கூற மாட்டோம். அதற்காகவே வாயில் வெள்ளை துணியை கட்டியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம். 

சிங்களவர்களுக்கு எதிராக தமிழ், முஸ்லிம் இனவாதிகளால் முன்னெடுக்கப்படும் செய்பாடுகளுக்கு எதிராகவே ஞனசார தேரர் செயற்பட்டார். இதுதொடர்பில் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் தெரியும். ஆனால் இவற்றுக்கு அப்பால் புதிய பிரச்சினையை உருவாக்கி சிங்கள இனத்தை அழிக்க முயற்சி செய்கின்றார்கள். 

எனவே தமிழ் முஸ்லிம் இனவாகதிகளுக்கு எதிராகவும் ஒரு நீதியும் ஞானசார தேரருக்கு எதிராக ஒரு நீதியையும் நடைமுறைப்படுத்த வேண்டாம்.

நீதியை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமல் ஞானசார தேரருக்கு எதிராக செயற்பட்டால் என்ன நடக்கும் என கூறமுடியாது. எமது இளைஞர்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்துள்ளனர் என்றார்.

http://www.virakesari.lk/article/20276

  • தொடங்கியவர்

ஞானசார தேரரை கைது செய்தால் என்ன நடக்குமோ எமக்கு தெரியாது

p19-8418fc8cf80cb09fbc88e32d55462a0633d507c1.jpg

 

பேரணியாக வந்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்த ஆதரவாளர்கள் எச்சரிக்கை
(எம்.எப்.எம்.பஸீர்)

பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை இன, மத­வா­தத்தைத் தூண்­டு­வ­தாக கூறி கைது செய்தால்,  அதனைத் தொடர்ந்து என்ன நடக்கும் என எமக்கே தெரி­யாது என்று ஞான­சார தேரரின் ஆத­ர­வா­ளர்­க­ளுடன் பொலிஸ் தலை­மை­யகம் சென்ற கெம்­பு­ரே­கொட சந்­த­ரத்­தன தேரர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.  

ஞான­சார தேரரை கைது செய்ய எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் அவரை கைது செய்­வ­தற்கு முன்னர் தவ­றி­ளைக்கும் சிறு­பான்­மை­யின தலை­வர்­களை கைது செய்­யு­மாறும் வலி­யு­றுத்தும் வகை­யிலும் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பா­டு­களை பதிவு செய்யும் நோக்கில் பொது­ப­ல­சேனா அமைப்பைச் சேர்ந்த பெரு­ம­ள­வானோர் நேற்று பேர­ணி­யாக பொலிஸ் தலை­மை­ய­கத்­திற்கு வந்­தி­ருந்­தனர்.

கெம்­பு­ரே­கொட சந்­த­ரத்­தன தேரர் தலை­மையில் வந்த இவர்கள் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் 200 இற்கும் மேற்­பட்ட முறைப்­பா­டு­களை சமர்ப்­பித்­தனர். இத­னை­ய­டுத்து கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே கெம்­பு­ரே­கொட சந்­த­ரத்­தன தேரர் இவ்­வாறு கூறினார்.

அவ­ருடன் வந்­தி­ருந்த இளை­ஞர்கள் உள்­ளிட்ட 100 பேர் வரையில் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு நேற்று முறைப்­பா­டு­களைக் கைய­ளிக்க படை­யெ­டுத்­தி­ருந்த நிலையில், அவர்கள் அனை­வரும் கொதிப்­பு­டனும் ஆவே­சத்­து­டனும் இருப்­ப­தா­கவும் அதனால் ஞான­சார தேரரைக் கைது செய்தால் விளை­வுகள் மோச­மாக இருக்கும் என்றும் அவர் ஊட­க­வி­ய­லாளர் முன்­னி­லையில் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

 ஞான­சார தேரரைக் கைதுச் செய்ய முன்னர், அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன், வடக்கு முதல்வர் சி.வி.விக்­னேஸ்­வரன், பிர­தி­ய­மைச்சர் ஹிஸ்­புல்லாஹ், அசாத் சாலி, சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோரை இந்த அர­சாங்கம் கைது செய்ய வேண்டும் எனவும் அவர்­களைக் கைது செய்து சிறையில் அடைத்து பின்னர் ஞான­சார தேரர் தொடர்பில் பேசு­மாறும் அவர் இதன் போது குறிப்­பிட்டார்.

இதன் போது கெம்­பு­ரே­கொட சந்­த­ரத்­தன தேரர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

கடந்த சில நாட்­க­ளாக இன­வாத செயற்­பா­டு­களைத் தூண்­டி­ய­தாகக் கூறி பொது பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இன­வாதம் மற்றும் மத­வாதம் குறித்து விசேட நிய­மங்­களைக் கொண்ட பிணைப் பெற முடி­யாத சட்­ட­மான 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்கச் சட்­டத்தின் மூன்­றா­வது அத்­தி­யா­யத்தின் கீழ் ஞான­சார தேரரைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

 எமது ஞான­சார தேரர் எந்­த­வொரு தீவி­ர­வா­தத்­தையோ மத­வா­தத்­தையோ மோதல்­க­ளையோ ஆரம்­பிக்க முயற்­சிக்­க­வில்லை என நாம் இந்­நாட்டு மக்­க­ளுக்கு கூற விரும்­பு­கின்றோம். ஜனா­தி­பதி, புத்­த­சா­சன அமைச்சர், நீதி­ய­மைச்சர், தயா கமகே ஏன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச கூட இதனை ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். முஸ்லிம் தீவி­ர­வாதம், கத்­தோ­லிக்க வியா­பாரம், புரா­தன சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்தல் மற்றும் தேசிய வனங்­களை நாசம் செய்­வது என பல விட­யங்கள் பல இன­வாத அர­சி­யல்­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு செயற்­பட்ட பல அர­சி­யல்­வா­தி­களை விட்­டு­விட்­டனர். ஆனால் எமது தேரரை கைது செய்ய முயற்­சிக்­கின்­றனர்.

வடக்கில் முதல்வர் விக்­னேஸ்­வரன் தனி­யான ஈழ­தே­சத்தின் வெற்­றியை சமர்ப்­பிக்­கின்றார். விஜ­ய­கலா மகேஸ்­வரன் தனி­யான இன­வாத அறிக்­கை­க­ளையே வெளி­யி­டு­கின்றார். அசாத் சாலி எமது ஞான­சார தேரரை தற்­கொலை குண்­டுடன் கொல்ல தயார் என்­கிறார். ஹிஸ்­புல்லா இஸ்லாம் இளை­ஞர்கள் கூடி­ய­வி­ரைவில் ஆயுதம் ஏந்த வேண்டி வரும் என்­கின்றார், சிவா­ஜி­லிங்கம் தனி­யான யுத்த வெற்றி விழா போன்ற செயற்­பா­டு­களை மேற்­கொள்­கின்றார்., ரிஷாட் பதி­யுதீன் காணி­களை அழித்து பேர­ழி­வு­களை மேற்­கொண்டு வரு­கின்றார். இத­னை­யெல்லாம் யாரும் தடுத்துக் கேட்­க­வில்லை. அவர்­க­ளுக்­கெ­தி­ராக எந்த நீதியும் செயற்­ப­ட­வில்லை. இவ்­வா­றாக நீதி தவ­றி­ழைக்­கப்­படும் நிலையில் நாம் இனிமேல் பேசு­வ­தற்கு தயா­ராக இல்லை. அதை வெளிப்­ப­டுத்தும் வித­மா­கவே நாம் அனை­வரும் வெள்ளைத் துணி­களால் எமது வாய்­களை மூடி­யுள்ளோம். தற்­பொ­ழுது முடிந்தால் உண்­மை­யா­கவே இன­வாத உணர்ச்­சி­களை தூண்டும் ரிஷாட் பதூய்தீன், ஹிஸ்­புல்லா, சிவா­ஜி­லிங்கம் போன்­றோ­ருக்கு நீதியை சரி­யான முறையில் செயற்­ப­டுத்­துங்கள் என பொலிஸ் மா அதிபர் உட்­பட அனை­வ­ருக்கும் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்றோம்.

முஸ்லீம் தீவி­ர­வா­த­மொன்று இருக்­கின்­றது என புத்த சாசன அமைச்சர், நீதி அமைச்சர், நிதி அமைச்சர், ஜனா­தி­பதி மற்றும் நேற்­றைய தினம் விமல் வீர­வன்ச ஆகியோர் ஏற்­றுக்­கொண்ட நிலை­யிலும் தீர்வு காண வேண்­டிய பிரச்­சி­னையை புறம்­தள்­ளி­விட்டு வேறு பிரச்­சி­னை­களைக் கொண்­டு­வந்து சிங்கள மக்களை இல்லாதொழிக்க செய்யும் சூழ்ச்சிக்கு எதிராகவே சிங்கள பௌத்த ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில் நாம் மற்றும் இந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடுகளை முன்வைத்தோம். என அவர் கூறினார்.

இதன் போது எத்தனை முறைப்பாடுகளை அளித்தீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது, இங்கிருந்த அனைவரும் வெவ்வேறாக சுமார் 200 வரை முறைப்பாடுகளை அளித்ததாக குறித்த தேரர் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.