Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார்

Featured Replies

பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார்

 

 
 

நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

 
 
 
 
பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார்
 
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சாமியார் சந்திராசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன், இந்த வழக்கில் சாமியார் சந்திராசாமியிடம் விசாரிக்கப்பட வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதேபோல் பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்திருக்கிறது.

201705231930201776_cwawdxi7._L_styvpf.gi

இந்நிலையில் நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த சந்திரா சாமிக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிசிசை பெற்று வந்தார். டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்து போன நிலையில், இன்று டெல்லியில் அவர் காலமானார்.

சந்திராசாமி 1948-ம் ஆண்டு பிறந்ததாகவும், அவரது தந்தை ராஜஸ்தானின் பெஹ்ரோர் பகுதியில் இருந்து டெல்லிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/23193015/1086751/Spiritual-guru-Chandraswami-dies-at-66.vpf

  • தொடங்கியவர்

யார் இந்த சந்திரா சாமி? ராஜீவ்காந்தி கொலையில் என்ன சம்மந்தம்..?

 
 

சந்திரா சாமி

றைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியப்புள்ளியாக கருதப்பட்ட பிரபல சாமியார் சந்திரா சாமி உடல்நலக்குறைவால் கடந்த 23-ம் தேதி காலமானார். சி.பி.ஐ.விசாரணையிலும், ஜெயின் கமிஷனிலும் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் இவரையே முக்கிய புள்ளியாக அடையாளப்படுத்தப்பட்டனர். எவ்வளவு தான் விசாரணை வந்தாலும், ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு விடைதெரியாத பல மர்மங்களோடு இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதன் மர்மங்கள் முழுவதும் வெளிவராது என்பதுதான், அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து கவனித்தவர்கள் ஒருமித்த குரலில் சொல்லும் அதிர்ச்சித் தகவல்.

ராஜீவ் கொலை சர்ச்சைகள்

ராஜீவ் காந்தி உடல்

ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்பே பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராஃபத், அன்றைய இந்தியப் பிரதமர் சந்திரசேகரிடம் ''ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது'' என்று எச்சரித்தார். இது வழக்கு விசாரணையில் சி.பி.ஐ உறுதிப்படுத்திய தகவல். 1991-ம் ஆண்டு ராஜீவ் படுகொலையான பின், அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான், ''ராஜீவ் கொலைவழக்கில், புலிகளைத் தவிர உலகநாடுகளின் சதியும் இருக்கிறது'' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதையெல்லாம் ஒரே நேர்கோட்டில், கொண்டுவந்து தீவிரமாக விசாரித்தால், இந்திய அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களும், அவர்களுக்குப் பின்னே உள்ள வெளிநாடுகளின் சதிவேலைகளும் அம்பலமாகும் என்பது ஜெயின் கமிஷனில் சென்று சாட்சி சொன்ன திருச்சி வேலுச்சாமியின் வாக்குமூலம். மேலும் அவர், நிச்சயமாக வெளிநாடுகளின் பின்னணி இல்லாமலும், இந்திய அரசியல் தலைவர்களின் சதிசெயல்கள் இல்லாமலும் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களையும் ஜெயின் கமிஷனில் சமர்பித்தார். சோனியா காந்தியை நேரில் சந்தித்தும் அந்த தகவல்களை அவர் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கூற்றுப்படி, இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்பட்டவர்தான், நேமி சந்த் ஜெயின் என்கிற சந்திரா சாமி. 

சந்திரா சாமி சர்ச்சைகள்

இந்தியாவின் புரியாத புதிர்களில் ஒருவர் சந்திராசாமி. அவர் அரசியல் பேரங்கள், ஆயுத பேரங்கள் நடத்தி வந்ததாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.  சந்திரா சாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமானவர். நரசிம்மராவுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு வி.ஐ.பி-கள் பலருக்கு ஜோதிட ஆலோசகராகவும் இருந்தவர். அந்த அடிப்படையில் அவருக்கும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கும் சந்திரா சாமிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அது குறித்து சி.பி.ஐ எப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சந்திரா சாமியை குற்றம் சாட்டுபவர்கள்,  "ராஜீவ் காந்தியை கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட 'பெல்ட் பாம்' இவரின் மூலம்தான் கொண்டு வரப்பட்டது. மேலும், அந்த பெல்ட் பாம்க்கு சிறப்பு பூஜைகள் செய்தது முதல் சிவராசனை நேபாளம் வழியாக தப்பிக்க வைப்பதற்கு நடந்த பிளான்கள் வரை அனைத்துமே இவரின் ஏற்பாடுகள்தான்" என்று இப்போதும் பல ஆதாரங்களை வைத்து அடித்துச் சொல்கின்றனர். ஜெயின் கமிஷனிலும் இந்த விபரங்கள் பதிவாகி உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

'ராஜீவ் கொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்' என்றப் புத்தகத்திலும் இதை எல்லாம் கேள்வியை எழுப்பியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரும், ''இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியே சந்திரா சாமிதான்'' என்று கூறியுள்ளனர். இந்தத் தகவல் அன்றையப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன."

ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி கொலைவழக்கினை விசாரித்துவந்த ஜெயின் கமிஷனின் விசாரணையின்போது, ''ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் சந்திராசாமி துள்ளிக்குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், 'நரசிம்மராவை பிரதமராக்கியேத் தீர்வேன்' என சந்தோஷக் கூத்தாடினார்'' என்று பப்லு ஶ்ரீவத்சவா என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி ஜெயின் கமிஷன் விசாரணையில் பல்வேறு முக்கியத் தகவல்கள் சந்திரா சாமியைப் பற்றி பதிவாகி உள்ளன. ஆனாலும், இந்தத் தகவல்கள் எல்லாமே 1998-ம் ஆண்டில் 'காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்பட்டது. ''ராஜீவ் காந்தி படுகொலை விசாரணையில், சந்திரா சாமி, சுப்பிரமணியன் சுவாமியையும் விசாரிக்க வேண்டும்'' என்று ஜெயின் கமிஷன் அறிவித்தது. ஆனால், ஏனோ அது நடக்கவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இன்னும் விடை தெரியாத, விடை தேடாத கேள்விகள் நிறைய இருக்கின்றன. விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியை கொன்றிருக்கலாம். ஆனால், அதன் காரணமும், செயல் திட்டமும் அவர்களிடம் மட்டுமல்ல...  வேறு பல தேசங்களில் விரவிக் கிடக்கலாம். அது பற்றி எல்லாம் தெரிந்தவராக கூறப்பட்ட சந்திரா சாமியும் தற்போது இறந்துவிட்டார்.

 

ஆகவே, ராஜீவ் கொலை வழக்கு சம்பந்தப்பட்ட பல மர்மங்களும் சந்திராசாமியோடு சேர்ந்தே இறந்துவிட்டது என இனிமேல் விசாரணை அமைப்புகள் சொல்லிக் கொள்ளலாம். அதற்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது சந்திரா சாமியின் மரணம்!

http://www.vikatan.com/news/india/90313-rajiv-gandhi-assassination-and-chandraswami.html

  • தொடங்கியவர்

சந்திரா சாமி சமாதியில் புதைந்த ராஜீவ் மர்மங்கள்!

 

ர்ச்சைக்குரிய சாமியார் சந்திரா சாமி இறந்து போனார். அவரோடு சேர்ந்து சர்ச்சைகளும் மறைந்து போய்விடுமா?

சாமியார், ஆயுத வியாபாரி, அதிகாரத் தரகர்... இவை அனைத்துக்கும் மேலாக, ‘ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்’ என்றெல்லாம் சந்திரா சாமிக்கு அடைமொழி உண்டு. இவரது திடீர் மறைவே இயற்கையானதுதானா என்ற அளவில் பேசப்படுகிறது.

ரங்கநாத் சொன்னது என்ன?

ராஜீவ் கொலை வழக்கில் தேடப்பட்ட சிவராசன், சுபா உள்ளிட்ட சிலர் பெங்களூரில் தங்கியிருந்தார்கள். அங்கேயே தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தாக பெங்களூரு ரங்கநாத் என்பவரைக் கைது செய்தார்கள். அவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. எட்டாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த ரங்கநாத் சொன்ன பல தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.

“சிவராசன் பெங்களூரில் தங்கியிருந்தபோது அடிக்கடி சந்திரா சாமியோடு போனில் பேசுவார். அதற்கென்றே அங்கிருந்த ஒரு டெலிபோன் பூத்துக்கு அடிக்கடி சென்று வருவார். ‘நாங்கள் நேபாளம் வழியாக வெளிநாடு தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் சாமியார் செய்து வருகிறார்’ என்று என்னிடம் சிவராசன் கூறிவந்தார். இது உள்பட மேலும் பல தகவல்களையும் சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவரான கார்த்திகேயனிடம் கூறினேன். அதைக் கேட்டவுடன் அவர் ஆவேசமானார். பெரிய மனிதர்களைப் பற்றி எல்லாம் பேசாதே. அப்புறம் நடப்பதே வேறு. உன் உயிர் இருக்காது’ என்று கூறியபடியே டேபிளில் இருந்த பேப்பர் வெயிட் குண்டை எடுத்து என் முகத்தில் ஆவேசமாக வீசியடித்தார். அதில் என்னுடைய பல் உடைந்துவிட்டது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரங்கநாத்தின் வாக்குமூலத்தை சி.பி.ஐ ஏற்றுக்கொண்டிருந்தால், அதன் பேரில் விசாரணை நடத்தியிருந்தால், சந்திரா சாமியின் தொடர்புகள் அனைத்தும் அம்பலத்துக்கு வந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மூடி மறைத்து திசை திருப்பும் போக்கிலேயே செயல்பட்டார்கள். அந்தளவிற்கு சந்திராசாமியின் அரசியல் நெட்வொர்க் இருந்தது.

p5b.jpg

இலங்கையும் சிங்கப்பூரும்!

‘ராஜீவ் கொலை வழக்கில் சந்திரா சாமியை விசாரிக்க வேண்டும்’ என்று ஜெயின் கமிஷன் அறிக்கை கூறியது. ஏன் அப்படிச் சொன்னது தெரியுமா?

1987 ஜூலை 29. இலங்கையின் தலைநகர் கொழும்பில் ‘இந்திய- இலங்கை ஒப்பந்தம்’ நிறைவேறியது. ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டு கை குலுக்கிக் கொள்கிறார்கள். அதே சமயம், இலங்கையின் நீலக் கடலுக்கு வெளியே சற்றுத் தள்ளியிருந்த சிங்கப்பூரிலும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சப்தமின்றி நடந்த அந்த ஒப்பந்தம்தான், பின்னாளில் ராஜீவைக் கொல்வதற்கு அச்சாரமிட்டிருந்தது என்றால் அப்போது நம்ப முடியாதுதான்.

அமைதியாக நடந்தேறிய அந்த ஒப்பந்தம், ‘யுனிகார்ன் இன்டர்நேஷனல்’ என்ற அமெரிக்க ஆயுத நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்குமானது. இரண்டு தரப்பும் கையொப்பம் போட்டுக் கொண்டது என்னவோ பச்சை மையில்தான். ஆனால், அது உறைந்தபோது, ராஜீவ் காந்தியின் உடலில் இருந்து சிதறிய சிவப்பு நிறமாக மாறியிருந்தது. ஒப்பந்தப்படி அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில், 25 ஆயிரம் ‘SFG-87’ ரக வெடிகுண்டுகள் இலங்கை சென்று இறங்கியது.

இது அப்படியே இருக்கட்டும்!

ராஜீவைக் கொன்ற பெல்ட் பாமின் தன்மையைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை தரும்படி சி.பி.ஐ கேட்கிறது. யாரிடம் என்றால், மேஜர் சபர்வாலிடம். சர்வதேச அளவில் மிகச் சிறந்த வெடிகுண்டு நிபுணர்களில் இவரும் ஒருவர். இந்திய ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை, தேசிய பாதுகாப்புக் குழுவில் எல்லாம் வெடிகுண்டு நிபுணராகப் பணியாற்றியவர். இவர் தன் குழுவினரோடு எட்டரை மாதங்கள் கடுமையாக உழைத்தார். சர்வதேச தரத்திலான ஆய்வுகளுடன் ஒப்பீடுகளையும் செய்தார். இறுதியாக 5.2.92 அன்று மத்திய அரசுக்கும், சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கும் அறிக்கையை அளித்தார்.

அந்த அறிக்கையில், ‘சுமார் மூன்று ‘SFG-87’ கையெறி குண்டுகள் ‘பெல்ட் பாமில்’ பயன்படுத்தப்பட்டதற்கான பலமான சாத்தியக் கூறுகள் உள்ளன.  இந்த வெடிகுண்டு, RDX மற்றும் TNT உள்ளடக்கிய, ‘Composition-B’ ரகத்திலானது. இதில் பயன்படுத்தப்பட்ட இரும்புச் சன்னங்கள் (pellets) தனித்தன்மை வாய்ந்தவை. அமெரிக்கத் தயாரிப்பான ‘SFG-87’ ரக கையெறி குண்டுகளில் மட்டுமே இவை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன’ என மூன்று முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டினார் அவர்.

p5.jpg

மேஜர் சபர்வாலின் இந்த அறிக்கையைப் பார்த்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினருக்கு அதிர்ச்சி, கலக்கம், கலவரம். ஏனென்றால், அதற்கு நான்கு மாதங்கள் முன்பாகவே இங்கே உள்ள தடயவியல் துறையினர், ‘பெல்ட் பாமில் 400 கிராம் முதல் 500 கிராம் வரையிலான RDX வெடிமருந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதில் இருந்த இரும்பு சன்னங்கள் சாதாரண ரகமானவை’ என அறிக்கை கொடுத்திருந்தனர். இந்நிலையில், சபர்வாலின் அறிக்கையை ஏற்றுக் கொண்டால், விசாரணை சிங்கப்பூர், இலங்கை என்று போக வேண்டியிருக்கும். அப்படிப் போனால், இலங்கையின் முக்கிய நபர்களுக்கும் சந்திரா சாமிக்கும் இருந்த தொடர்புகள் வெளிவந்திருக்கலாம். ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் போது நடைபெற்ற இலங்கையின் ராணுவ மரியாதை அணிவகுப்பில் ராஜீவ் காந்தி தாக்கப்பட்டது வரை போயிருக்கும். எனவே, சபர்வாலின் அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு, தமிழகத் தடயவியல் துறை கொடுத்த ஆய்வு அறிக்கையை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள். மறைக்கப்பட்ட இந்தச் சதிகளை எல்லாம் நீதிபதி ஜெயின் தன் விசாரணை அறிக்கையில் பிடித்து, வாங்கு வாங்கு என வாங்கியிருக்கிறார்.

சரி, இதற்கும் சந்திரா சாமிக்கும் என்ன தொடர்பு?

இப்படி மறைக்கப்பட்ட பல ஆதாரங்களின் பின்னணியில், அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் துணையிருந்தார். அவர், சந்திரா சாமியின் நெருங்கிய நண்பர். அதனால்தான் ராவ் தலைமையிலான மத்திய அரசிடம் இருந்து நீதிபதி ஜெயின் கமிஷனுக்குப் போதிய ஒத்துழைப்புகள் இல்லாமல் போனது என்ற பேச்சும் அன்று இருந்தது. அந்த அளவிற்கு சந்திரா சாமி சக்தி படைத்தவராக இருந்தார். எல்லா வகையிலும் ஜெயின் கமிஷனின் விசாரணை போக்கை திசை திருப்பிக் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் ‘விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர், சுப்பிரமணியன் சுவாமியும் விசாரிக்கப்பட வேண்டிய நபர்’ என்று ஜெயின் கமிஷன் தன் அறிக்கையில் கூறியிருந்தது.

இந்திரா கொலையிலும் குற்றச்சாட்டு!

இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை பற்றி விசாரிக்கப்பட்ட கமிஷனிலும், சந்திரா சாமியின் சதிமுகம் தெரிகிறது. இந்திரா அதிகாரத்தில் இருந்தபோதே, இந்த ‘சாமிகள்’ இருவரும் லண்டன் செல்கிறார்கள். ஒரு விஷயத்திற்காக நிதி திரட்டுகிறார்கள். அப்போது லண்டனில் இருந்த பிரபல ஊறுகாய் நிறுவனத்தின் அதிபரான லக்குபாய் பதக்கைப் பார்த்து, ‘‘உங்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தடையற்ற வர்த்தகத் தொடர்புக்கு ஏற்பாடு செய்கிறோம்’’ என நிதி கேட்கிறார்கள்.

p5a.jpg‘‘இந்திரா காந்தி இருக்கும்வரை அப்படியான விதிமீறல் நடக்காது’’ என்கிறார் லக்குபாய். அதற்கு சந்திரா சாமி, ‘‘இந்திரா பிரதமராக இருக்கமாட்டார். நரசிம்ம ராவ்தான் பிரதமராக இருப்பார்’’ என்று கூறுகிறார். பிறகு இந்திரா படுகொலை செய்யப்படுகிறார். துரதிர்ஷ்டவசமாக அப்போது நரசிம்ம ராவ் பிரதமராக முடியவில்லை. அதற்கு தமிழரான மூப்பனார்தான் காரணம். பெரும்பான்மை எம்.பி-க்களின் கையொப்பத்தோடு ஜனாதிபதியைச் சந்தித்தார் மூப்பனார். ‘‘ராஜீவ் காந்திதான் அடுத்த பிரதமர்’’ என்றார். ‘சாமி’களால் அந்தப் பெரும்பான்மையை உடைக்க முடியவில்லை. ராஜீவ் பிரதமரானார்.

ராஜீவ் பதவிக்கு வந்ததும், சதிமுகத்தின் சூத்ரதாரியான சந்திரா சாமியை அதிகம் கண்காணித்தார். அவரது ஆசிரமங்கள் வருமான வரி சோதனைக்கு உள்ளாகின. பல வழக்குகள் பாய்ந்தன. பாஸ்போர்ட் முடக்கப்படுகிறது. சந்திரா சாமி கொதித்தார். ‘‘சின்னப்பையன். விளையாடுகிறான். என்னாகப் போகிறான் எனத் தெரியவில்லை. அவன் அம்மாவைப் போலவே மடிவான்’’ என்று அவர் பேசியதாக பின்னாளில் ஆசிரமத்தில் இருந்த முக்கிய நபர்களே ஜெயின் கமிஷனில் சாட்சியளித்தார்கள். சந்திரா சாமி கொதித்ததைப் போலவே ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார்.

அதன்பிறகு நடந்த விசாரணையில், சந்திரா சாமியின் ஆசிரமக் கணக்குகள், பணப் போக்குவரத்து எல்லாம் ஆராயப்பட்டன. அவர் வழியாக பல்வேறு இயக்கங்களுக்குப் பணம் போனதாகவும் தெரிய வந்தது. இதையெல்லாம் வைத்துதான் ஜெயின் கமிஷன் அறிக்கை தந்தது. அதன் பேரில்தான் சி.பி.ஐ-யிலேயே ஒரு தனி பிரிவாக ‘பல்நோக்கு புலன் விசாரணைக் குழு’ போடப்பட்டது. அந்தக் குழு போடப்பட்டு 19 ஆண்டுகளாகின்றன. சந்திரா சாமியை ஒரு முறைகூட அழைத்து விசாரிக்கவில்லை. ஒருவேளை சந்திரா சாமி தீவிரமாக விசாரிக்கப்பட்டிருந்தால், பல மர்மங்கள் வெளிவந்திருக்கலாம். அப்போது இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனேவுக்கும் இந்த கொலைக்குமான தொடர்பும் தெரிந்திருக்கலாம்.

எல்லாமும் மண்ணுக்குள் புதைந்து போயிருக்கின்றன.

http://www.vikatan.com/juniorvikatan

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்ரெட் தச்சரையே மயக்கியவர்.
இந்திய றோவின் முக்கிய சாமி.

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்து எனினும் சில நல்ல காரியங்கள் நடந்தது கொண்டு தான் இருக்கின்றன!

மீண்டும் இன்னொரு பிறவி எடுக்கமாட்டார் என்று நம்புவோமாக!

ஆத்மா நிரந்தரமாக சாந்தியடையட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.