Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு சபையில் நேற்றுக் கண்டனம்

Featured Replies

சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு சபையில் நேற்றுக் கண்டனம்

சிறுபான்மையினர் மீதான இனவாதச் செயற்பாடுகளுக்கு  சபையில் நேற்றுக் கண்டனம்
 

சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் இன­வா­தச் செயற்­பா­டு­க­ளுக்கு முதன்மை எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், தமிழ் முற்­போக் குக் கூட்­டணி ஆகி­யன நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கடும் கண்­ட­னம் வெளி­யிட்­டன.

அத்­து­டன் இன­வா­தத்­தைப் பரப்பும் குழுக்களுக்கு எதிராக அரசு உரிய சட்ட நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் வலியுறுத்தின.

சிறுபான்மையினருக்கு எதிராக தலைதூக்கியுள்ள அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

சம்பந்தன்.

“இனம் எதுவாக இருந்தாலும், மதம் எதுவாக இருந்தாலும் அமைதியாக வாழவே மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில்,சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் வகையில் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது. இவ்விதமான நிலமைகள் தொடர்வதற்கு இடமளிக்கமுடியாது.

தனியார் சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாட்டில் அமைதியாக வாழமுடியுமா? என்ற அச்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். கடந்தகால கசப்பான சம்பவங்கள் மீண்டும் தொடர்வதற்கு அனுமதிக்கமுடியாது. எனவே, அனைவரும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்.

ஹக்கீம்

“முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களில் பெரியளவிலான அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இது பற்றிச் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் உரிய கவனம் செலுத்தவில்லை.

அத்துடன், அரச தலைவரின் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரும் அசமந்தமாகவே செயற்பட்டனர். எனவே, உரிய வகையில் இந்தக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

“வடக்கிலும், தெற்கிலும் இனவாதிகள் இருக்கின்றனர். இவர்கள் எல்லாமே மச்சான்மார்கள். எனவே, விளையாட வேண்டாமென இனவாதிகளுக்குக் கூறிக்கொள்கின்றேன். அரச பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, இனவாதிகளுக்கு இடமளிக்கமுடியாது.

இது விடயம் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் துரித நடவடிக்கைகளை எடுப்பார் என உறுதியாக நம்புகின்றேன். இது ப ற்றி அமைச்சரவையிலும் பேசப்பட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்கள் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கச் செய்வதற்கான சூழ்ச்சியாகவே இப்படியான செயல்கள் நடக்கின்றன” என்று அமைச்சர் மனோ கணேசன் கூறினார். (வ-5)

http://uthayandaily.com/story/3924.html

  • தொடங்கியவர்

தலை­தூக்­கி­யுள்ள இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த உடன் நட­வ­டிக்­கைகள் அவ­சியம்

 

சபையில் தமிழ் பேசும் பிர­தி­நி­திகள் அழுத்தம்

(ப.பன்­னீர்­செல்வம், ஆர்.ராம்)

அண்­மைக்­கா­ல­மாக தலை­தூக்­கி­யுள்ள இன­வா­தி­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு உடன் சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு தமிழ் பேசும் பிர­தி­நி­திகள் சபையில் கடு­மை­யான தொனியில் அழுத்­த­ம­ளித்­துள்­ளனர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக தலை­தூக்­கி­யுள்ள அடக்­கு­முறைச் செயற்­பா­டுகள் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பி­ரே­ர­ணையை ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி னர் முஜிபுர் ரஹ்மான் கொண்டு வந்தார்.

இந்தப் பிரே­ரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், முஸ்­லிம்­காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அமைச்­சர்­க­ளான ரிஷாட் பதி­யுதீன், மனோ­க­ணேசன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹுமான், இஷாக் ரஹுமான், உட்­பட அமைச்சர் சாகல ரட்­நா­யக்க மற்றும் ஜே.வி.பியின் பிமல் ரட்­நா­யக்க ஆகி­யோரும் உரை­யாற்­றி­னார்கள்.அவை வரு­மாறு,

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன்

இலங்­கையில் இனம் எது­வாக இருந்­தாலும், மதம் எது­வாக இருந்­தாலும் சரி தற்­போ­தைய நிலையில் மக்கள் அனை­வரும் சமா­தா­ன­மா­கவே வாழ­வி­ரும்­பு­கின்­றார்கள். நாட்­டிலே சிறு­பான்­மை­யி­னங்­களை அச்­சு­றுத்தும் வகையில் குழு­வொன்று செயற்­பட்டு வரு­கின்­றது. இவ்­வி­த­மான நிலை­மைகள் தொடர்­வ­தற்கு தொடர்ந்தும் இட­ம­ளிக்க முடி­யாது.

தனியார் சொத்­துகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. தகாத வார்த்­தைகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்த நாட்டில் சமா­தா­ன­மாக வாழ முடி­யுமா என்ற அச்சம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விடயத்தை முளை­யி­லேயே கிள்ளி எறி­வ­தற்­கான கரு­மங்­களை எடுக்க வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்­பான சம்­ப­வங்கள் மீண்டும் தொடர்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. தற்­போ­துள்ள அனை­வரும் யதார்த்­தத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

மக்­களை அச்­சத்­திற்கு ஊட்டும் வகையில் செயற்­படும் குழு­வுக்கு எதி­ராக அர­சாங்கம் துரி­த­மாக சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். கடமை உணர்­வோடு அர­சாங்கம் இதை செய்ய வேண்டும் என எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கடந்­த ­சில நாட்­களில் பாரி­ய­ளவு அடக்­கு­முறை கட்ட விழ்த்து விடப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக சிங்­கள, ஆங்­கில ஊட­கங்கள் உரிய கவனம் செலுத்­த­வில்லை.

ஜனா­தி­ப­தியின் மாவட்­டத்­தி­லேயே முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் பொலி­ஸாரும் அச­மந்­த­மா­கவே செயற்­பட்­டனர். எனவே, உரிய வகையில் இந்த குழுக்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

இந்த விடயம் சம்­பந்­த­மாக நானும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­தனும் ஜனா­தி­ப­தியை சந்­தித்­துள்ளோம். அவர் உரிய நட­வ­டிக்கை எடுப்பார் என்ற நம்­பிக்கை எமக்­குள்­ளது என்றார்.

அமைச்சர் மனோ கணேசன்

இந்த நாடு பல்­லி­னங்­க­ளுக்குச் சொந்­த­மான நாடு. வடக்­கிலும், தெற்­கிலும் இன­வா­திகள் இருக்­கின்­றனர். இவர்­க­ளெல்லாம் மச்­சான்மார். எங்­க­ளுடன் விளை­யாட வேண்டாம் என்று இன­வா­தி­க­ளுக்கு இந்த சந்­தர்ப்­பத்தில் கூறிக்­கொள்­கின்றேன். அரச பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டுள்­ளது. அதனை மீண்டும் தலை­தூக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை.

அவ்­வா­றி­ருக்­கையில் இன­வா­தி­க­ளுக்கு இட­ம­ளிப்போம் என்று கரு­த­வேண்டாம். இந்த இன­வாத விளை­யாட்டின் பின்னால் யார் இருக்­கின்­றார்கள் என்று எமக்கு நன்கு தெரியும். இந்த விடயம் தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் துரித நட­வ­டிக்­கை­களை எடுப்பார் என உறு­தி­யாக நம்­பு­கின்றேன். இது பற்றி அமைச்­ச­ர­வை­யிலும் பேசப்­பட்­டுள்­ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் அர­சாங்­கத்­துக்கு வழங்கும் ஆத­ரவை விலக்­கச்­செய்­வ­தற்­கான சுழ்ச்­சி­யா­கவே இப்­ப­டி­யான செயல்கள் நடக்­கின்­றன என்றார்.

அமைச்சர் ரிஷாட் பதியுர்தீன்

சகல இனங்­களும் சகோ­த­ரத்­து­வத்­துடன், சமத்­து­வத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே சகல இனத்­த­வர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். தற்­போது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது கொண்­டுள்ள நம்­பிக்கை குறைந்து வரு­கி­றது. ஏப்ரல் 16ஆம் திக­திக்குப் பின்னர் 20இற்கும் அதி­க­மான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. மத­குரு ஒருவர் தீவி­ர­மாக செயற்­ப­டு­கிறார். அவ­ரு­டைய பெயரைக் கூறி அவரை பெரி­ய­ம­னித­ராக்க விரும்­ப­வில்லை.

பயங்­க­ர­வா­தத்தை ஒழித்த புல­னாய்வுப் பிரிவு நாட்டில் உள்­ளது. சிறந்த புல­னாய்வுப் பிரிவு இந்த சம்­ப­வங்­களில் ஒரு­வரைக் கூட இன்­னமும் கைது­செய்­ய­வில்லை என்­பது கவ­லை­ய­ளிக்­கி­றது. ஒரு திருட்டுச் சம்­ப­வங்கள் இருக்­கின்­றன. சகல சம்­ப­வங்­க­ளையும் திருட்டுச் சம்­ப­வங்கள் எனக் கூறி­விட முடி­யாது. இன­வாத சக்­திகள் வன்­மு­றையைத் தூண்­டி­விட்டு சுய­லா­பத்தை அடை­வ­தற்கும், நாட்டில் மீண்டும் பல வரு­டங்கள் இரத்த ஆறு ஓடச் செய்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர். இவர்கள் சண்­டி­யன்கள் போன்று நடித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற கோளை­க­ளாகும். தாம் சிறைக்குச் செல்­லாமல் இருப்­பதைத் தடுக்க உண்­ணா­வி­ரதம் இருந்து, இளை­ஞர்­களை தூண்­டி­விட முயற்­சிக்­கின்­றனர். நாட்டில் இரத்த ஆறு ஓட­வேண்டும் என்­ப­தற்­காக இவர்கள் வீரர்கள் போன்று நடிக்கும் திரு­டர்­க­ளாக இருக்­கின்­றனர். இவர்கள் யாராக இருந்­தாலும் கைது­செய்­யப்­பட வேண்டும் என்றார்.

முஜிபுர் ரஹுமான் எம்.பி.

கடந்த ஆட்­சியில் நாட்டில் இன­வாதம், மத­வாதம், அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்­டது. இதன் உச்­சக்­கட்­ட­மாக அளுத்­க­மவில் வன்­மு­றைகள் தலை­தூக்­கின. குறிப்­பிட்ட மதங்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன.

இவ்­வா­றான ஒரு சுழ்­நி­லை­யி­லேயே கடந்த ஆட்­சியை மாற்­று­வ­தற்­காக அனைத்து இனத் தலை­வர்­களும் ஒன்­று­பட்டு செயற்­பட்டு 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக்கி ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­கினோம்.

இன்­றைய அர­சாங்கம் தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக கடி­ன­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. பல சவால்­க­ளுக்கு மத்­தியில் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான பய­ணத்தை அரசு கடி­ன­மாக முன்­னெ­டுத்து வரு­கி­றது. இந் நிலையில் இதனை சீர்­கு­லைப்­ப­தற்கு இன­வா­தி­களும், மத­வா­தி­களும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவர்கள் யாரென்­பது கண்­ட­றி­யப்­பட வேண்டும். இன­வாதம், மத­வாதம், அடிப்­ப­டை­வாதம் நாட்டில் உரு­வாக்கும் சக்­தி­களை தடுப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

இந்த இன­வா­தி­களும் மத­வா­தி­களும் ஒரு காலத்தில் அமை­தி­யாக இருக்­கின்­றனர். ஆனால் திடீ­ரென இயக்­க செய்­தது போல் இவர்கள் தலை­தூக்­கு­கின்­றனர். இவ்­வா­றான நட­வ­டி­கைகள் நாட்டில் அர­சியல் ஸ்திர­மான நிலை­மை­யையும் பாதிக்கும்.

எனவே கடந்த ஆட்­சி­யின்­போது இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தலை­தூக்கச் செய்து அர­சியல் செய்­ததால் தான் தோல்­வியை கண்­டார்கள். இதனை பாட­மாகக் கொண்டு நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும். எனவே ஆட்­சி­யா­ளர்கள் இப் பிரச்­சி­னையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இஷாக் ரஹ்மான் எம்.பி.

நோன்பு காலம் ஆரம்­பிக்­க­வுள்­ளது. 2014 காலப் பகு­தியில் முஸ்­லிம்கள் நோன்பு நோற்­க­மு­டி­யாத சுழல் காணப்­பட்­டது. இத­னா­லேயே அப்­போ­தைய ஆட்­சிக்கு எமது மக்கள் சிறந்த பாடத்தை புகட்­டி­யி­ருந்­தார்கள். நாட்டில் மீண்டும் ஒரு இன­வா­தத்தை, மத­வா­தத்தை சீர­ழிக்க வேண்டும் என்ற நோக்­கத்­துடன் பின்­னணி சக்­தி­யொன்று செயற்­பட்டு வரு­கி­றது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கா­விட்டால் மீண்டும் பேரு­வ­ளை­போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெறும். பொலிஸார் ஏன் இன்­னமும் மௌன­மாக இருக்­கின்­றனர். மௌன­மாக இருக்­காது விரைந்து நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்ளோம். ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பொலி­ஸுக்கு பொறுப்­பான அமைச்சர் மீது நானும், சக முஸ்லிம் எம்­பிக்­களும் நம்­பிக்­கை­யுடன் இருக்­கின்றோம். எமது நம்­பிக்கை வீண்­போ­கா­த­வாறு சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

பிமல் ரட்­நா­யக்க எம்.பி.

பயங்­க­ர­மான விடு­தலைப் புலி பயங்­க­ர­வா­தி­களை வெற்றி கொண்ட உளவுப் படை­யினர் எம்­மிடம் இருக்­கின்­றார்கள். அவ்­வா­றான உளவுப் படை­யி­னரால் இந்த மத­வாதக் குழுவை தடுப்­பதும் கைது செய்­வதும் பெரிய விட­மல்ல. ஏன் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

எனவே இதன் பின்­ன­ணியில் அரசின் யாரோ ஒரு நபர் இருக்­கின்றார். அரசின் சிலரின் ஆசீர்­வா­தமும் கிடைப்­ப­தா­கவும் நான் சிந்­திக்­கின்றேன். அண்­மையில் வடக்கில் இரா­ணுவ முகா­மொன்றில் கூட்­ட­மொன்று நடந்­தது. இதில் பல தமிழ் மக்கள் கலந்து கொண்­டார்கள். அவர்கள் இரா­ணு­வத்தின் மத்­தியில் கருத்து தெரி­விக்­கையில், வடக்கில் புத்த சிலைகள் உடைப்பின் பின்னர் வட பகு­தியில் யாரும் தொடர்­பு­ப­ட­வில்லை. கொழும்­பி­லி­ருந்து வந்தவர்களே புத்தர் சிலைகளை உடைக்கின்றனர் என்றார்.

அமைச்சர் சாகல ரட்நாயக்க

நாங்கள் இந்த விடயம் தொடர்பில் உயரிய பொலிஸ் அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளது. அதனை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். சட்டம் சரிவர அமுல்படுத்தப்படுவதில்லை என மக்கள் மத்தியில் அவநம்பிக்கை எம்மீது உள்ளது. அந்நிலை தொடர இடமளிக்க முடியாது. சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல்படுத்துவோம் என வாக்குறுதி வழங்கியே நாங்கள் ஆட்சி அமைத்தோம்.

இனவாத பிரச்சினைகளுக்கு பின்னால் வேறு விதமான பிரச்சினைகளும் உள்ளன. முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான கோழி கடையொன்றில் அண்மையில் தீ வைக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்தப்பட்ட போது அங்கு திருட்டு நடைபெற்றுள்ளது. அதேபோன்று கஹவத்தையில் வர்த்தக நிலையமொன்றில் தீக்கிரையாகியது. அதற்கு அப்பால் தமிழ் வர்த்கர் ஒருவருக்கு சொந்தமான கடையொன்றில் விளக்கொன்றின் மூலமே தீ பரவியுள்ளது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.