Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சில்க்ஸ் தீவிபத்து: லாக்கரில் இருந்த 400 கிலோ தங்கம் என்னவானது?

Featured Replies

சென்னை சில்க்ஸ் தீவிபத்து: லாக்கரில் இருந்த 400 கிலோ தங்கம் என்னவானது?

 

 
 
தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: க.ஸ்ரீபரத்
தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டிடம் | படம்: க.ஸ்ரீபரத்
 
 

இடிபாடுகளுக்குள் புதைந்துகிடக்கும் கன்டெய்னர்களில் சிக்கியுள்ள 400 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை மீட்பது குறித்து சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை நிர்வாகத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 31-ம் தேதி அதிகாலையில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ பிடித்தது. தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவி 7 மாடி கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது.

தீவிபத்தில் பலத்த சேதமடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ள கன்டெய்னர்களில் உள்ள 400 கிலோ தங்கம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான வைரத்தை மீட்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"தரைத் தளத்தில் உள்ள தங்க நகைக்கடையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகள் உள்ளன. தங்கநகை வியாபாரிகள் பலரும் பொதுவாக நகைக்கடைகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்புப் பேழைகள் கடுமையான தீ போன்ற எத்தகைய இயற்கை பேரழிவையும் தாங்கக் கூடியது எனத் தெரிவிக்கின்றனர்" என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர முதற்கட்ட மதிப்பீட்டின்படி சென்னை சில்க்ஸ் கடையில் ரூ.80 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளன எனத் தெரிகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/சென்னை-சில்க்ஸ்-தீவிபத்து-லாக்கரில்-இருந்த-400-கிலோ-தங்கம்-என்னவானது/article9718243.ece?homepage=true

  • தொடங்கியவர்

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணியில் ராட்சத 'ஜா கட்டர்' வாகனங்கள்!

 

chennai_silks_fire_11469.jpg

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஜா கட்டர் வாகனங்களைக்கொண்டு கட்டடம் இடிக்கப்பட்டுவருகிறது.

சென்னை உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மாடி கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. இரண்டு நாள்கள் போராட்டத்துக்கு பின்னர் தீயணைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 7வது மாடியில் இருந்து 2வது மாடி வரை கட்டடங்கள் திடீரென இடிந்துவிழுந்தது. இதையடுத்து, கட்டடத்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கட்டடம் அரசு சார்பில் இடிக்கப்படும் என்றும், இதற்கான செலவுத்தொகையை சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை சில்க்ஸ் கட்டடம் அருகில் இருக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும்பணியை மேற்கொள்ள ராட்சத இயந்திரம் கொண்டுவரப்பட்டது. கட்டட முன்புற இடிபாடுகளை குவித்து அதன் மீது ராட்சத இயந்திரத்தை நிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கட்டடத்தின் இடிபாடுகளை ஒரே இடத்தில் குவிக்கும்பணியில் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த பணி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கட்டடத்தை இடிக்கும்பணி இன்று காலை 11.15 மணிக்கு தொடங்கியது. இரண்டு ராட்சத ஜா கட்டா வாகனங்கள் கொண்டு இடிக்கப்பட்டு வருகிறது. கட்டடம் மேலிருந்து கீழாக இடிக்கப்படுகிறது. சைதாப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவனம் கட்டட்ததை இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. மூன்று நாள்களில் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு விடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, கட்டடம் இடிப்பு பணி நடப்பதால் மக்கள் யாரும் அருகில் வரவேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/91104-chennai-silks-building-is-getting-demolished.html

  • தொடங்கியவர்

தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு)

 
இன்னும் கட்டடத்திற்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை படத்தில் காணலாம். Image captionஇன்னும் கட்டடத்திற்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை படத்தில் காணலாம். எரிந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டு தோற்றம். Image captionஎரிந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டு தோற்றம். கடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று இடிந்து உள்ளே விழுந்தது. Image captionகடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று இடிந்து உள்ளே விழுந்தது. தி சென்னை சில்க்ஸ் சுற்றியுள்ள பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Image captionதி சென்னை சில்க்ஸ் சுற்றியுள்ள பகுதியில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்டடத்தின் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள குடிநீர் சேமிக்கும் தொட்டிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளன. Image captionகட்டடத்தின் கார் நிறுத்துமிடத்திற்கு அருகில் உள்ள குடிநீர் சேமிக்கும் தொட்டிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளன. கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்றுவரும் இடிப்பு பணிகள் Image captionகார் நிறுத்துமிடத்தில் நடைபெற்றுவரும் கட்டட இடிப்பு பணிகள் தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு) Image captionபுழுதி பறக்கக்கூடாது என்பதற்காக இடிபாடுகளுக்கு தண்ணீர் தெளிக்கப்படும் காட்சி. தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு) தி சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு (புகைப்படத் தொகுப்பு) _96313493_795df7a3-a3fd-4ca3-b618-d18fb2 Image caption"ஜா கட்டர்" என்ற எந்திரம் கொண்டுவரப்பட்டு இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

 

http://www.bbc.com/tamil/india-40130367

  • தொடங்கியவர்

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மீண்டும் தீ!

 

சென்னை உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மாடி கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. இரண்டு நாள்கள் போராட்டத்துக்குப் பின்னர் தீயணைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 7வது மாடியிலிருந்து 2வது மாடி வரை கட்டடங்கள் திடீரென இடிந்துவிழுந்தது. இதையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் கட்டடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

Chennai Silks

கட்டடம் அரசு சார்பில் இடிக்கப்படும் என்றும், இதற்கான செலவுத்தொகையைச் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை சில்க்ஸ் கட்டடம் அருகிலிருக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும்பணியை மேற்கொள்ள ராட்சத இயந்திரம் கொண்டுவரப்பட்டது. கட்டட முன்புற இடிபாடுகளைக் குவித்து அதன் மீது ராட்சத இயந்திரத்தை நிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கட்டடத்தின் இடிபாடுகளை ஒரே இடத்தில் குவிக்கும்பணியில் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தப் பணி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கட்டடத்தை இடிக்கும்பணி இன்று காலை 11.15 மணிக்குத் தொடங்கியது. இரண்டு ராட்சத ஜா கட்டா வாகனங்கள் கொண்டு இடிக்கப்பட்டு வருகிறது.

Chennai Silks Fire
 

மூன்று நாள்களில் கட்டடம் இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 6, 7-வது தளத்தில் மீண்டும் தீ பரவியது. பின், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் கட்டடம் இடிக்கும் பணி சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

http://www.vikatan.com/news/tamilnadu/91138-fire-again-in-chennai-silks-building.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

தி. நகர் தீ விபத்து... என்ன சொல்கிறார்கள் ஊழியர்கள்?

 
 

தீ விபத்து

வ்வொரு விபத்துக்குப் பின்னாலும் ஏதாவது ஓர் அழுத்தமான காரணங்களோ அல்லது அலட்சியங்களோ இருக்கும் என்பது உண்மை. ஆனால், சென்னை தி.நகரில் நடந்துள்ள சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. கட்டடத்தைத்தான் புகை சூழந்திருந்தது என்றால், விபத்துக்கான காரணமும் புகை மண்டலமாகவே உள்ளது. காவல் துறையிலோ, ''மின்கசிவுதான் இந்த விபத்துக்கான காரணம்'' என்கிறார்கள்.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள 7 மாடிகளைக்கொண்ட அந்தக் கட்டடத்தில் கடந்த 31-ம் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதில் மற்ற பகுதிகளையும் அது ஆக்கிரமிக்கத் தொடங்கியது. தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குக் கடையின் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கான வேலைகளில் இறங்கினர். தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் அவர்கள் திணறினர். 

இருந்தாலும், தீயை அணைப்பதற்கான போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது. 30 மணி நேரத்துக்கு மேலாகியும் தீ அணைக்கப்படாததால், விபத்துக்கான காரணம் குறித்து அறிய அந்தப் பகுதிக்குச் சென்றோம். பாதிக்கப்பட்ட கட்டடம் முதல் தி.நகர் பேருந்து நிலையம்வரை காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. பொதுமக்கள் உள்ளே நுழைய அனுமதியில்லை. பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் 600 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டனர். துணிவகைகளின் டிசைன்களைப் பார்த்த ஒட்டுமொத்த கண்களும் தற்போது அந்தக் கடையைச் சோகமாக பார்த்துச் செல்கின்றனர். கடைக்குப் பின்னால் குடியிருப்பவர்களைப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படி போலீஸார் அறிவுறுத்தினர்.

அந்தக் கட்டடத்துக்கு அருகிலிருக்கும் கடைகளுக்குத் தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினரிடமும், காவல் துறையினரிடமும் பேசியபோது... இருவருமே சொல்லிவைத்ததுபோன்று, ''சர்கியூட்டில் ஏற்பட்ட விளைவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தடவியல் துறைக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த முடிவு வந்தால்தான் முழு விபரம் தெரியவரும்'' என்றனர். 

 இதுதொடர்பாக மேலும் சில காவல் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ''ஓய்வில்லாமல் தொடர்ந்து பணியில் இருக்கிறோம். இதுபோன்று தீயை அணைக்க இப்படியான போராட்டம் வேறு எங்காவது நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு இது மிகுந்த சிக்கலைக் கொடுத்துள்ளது. கட்டடக் கட்டுமானப் பணியின்போது விதிகளை மீறிக் கட்டியுள்ளதே இந்த விபத்துக்கான காரணமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும் முழுமையான காரணத்தை அறியமுடிவில்லை'' என்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கட்டடத்தில் வேலைபார்த்த ஊழியர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். அது, முழுவதும் ஆண் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதி. கேட் கதவு பூட்டியிருந்தது. நுழைவாயிலின் அருகே நாம் நின்றிருந்தபோது, அந்தக் கடையில் வேலை பார்த்த சில ஊழியர்கள் அந்த விடுதிக்குள் சென்றனர். அவர்களைத் தடுத்துநிறுத்திப் பேசினோம். அவர்களோ, ''எதுவும் எங்களிடம் கேட்காதீர்கள்" என்று பயந்துகொண்டு உள்ளே சென்றுவிட்டனர். 

தீ விபத்து

சிறிது நேரத்தில் அந்த விடுதியிலிருந்து வெளியேவந்த ஒருவரிடம் நாம் பேச்சு கொடுத்தோம். "அதிகாலை 3.30 மணி இருக்கும். கடையில் நானும் இருந்தேன். புகை வந்ததை அறிந்து அனைவரும் ஓடினோம். எங்கே இருந்து புகை வருகிறது என்பதே தெரியவில்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகுதான் அறிய முடிந்தது. அதற்குள் கடையின் காவலாளிகள் எங்களுடைய மேலாளருக்குத் தகவலைத் தெரிவித்திருந்தனர். நாங்கள், தீப்பற்றியிருக்கும் இடம்தெரிந்து அந்தப் பகுதிக்கு விரைந்தபோது... அங்கே எங்களுடைய மேலாளர்கள் மிகவும் பதற்றத்தில் தீயை அணைப்பதற்கான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுடன் நாங்களும் சேர்ந்துகொண்டோம். இன்னும் கொஞ்சம் துரிதமாக நாங்கள் செயல்பட்டு இருந்தால் அதை ஓரளவுக்குத் தடுத்திருக்க முடியும். ஆனால், அதற்குள்  மிகச் சாதாரணமாக இருந்த தீ போகப்போக வேகம்பிடித்தது. இதனால் அதன் தாக்கம் அதிகமாகியது. அத்துடன் நாங்கள் இருந்த அறை புகை மண்டலமாக மாறத் தொடங்கியது. இதற்குமேல் இங்கே இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்து அங்கிருந்து வெளியேற முயற்சித்தோம். அதற்குள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்து அவர்கள் வந்து தீயை அணைப்பதற்கான பணியில் இறங்கினர். உள்ளே இருந்த ஊழியர்களையும் பத்திரமாக மீட்டனர். தற்போது இந்தக் கடையில் பணிபுரிந்தவர்களை வேளச்சேரியில் இருக்கும் கடைக்கும், வெளியூருக்கும் அனுப்பலாம் என்று கடை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். புதிய கடையில் சேரக்கூடியவர்கள் இங்கிருந்து கடிதம் வாங்கிக்கொண்டு போய் வெளியூரிலிருக்கும் கடையில் கொடுத்தால் சேர்த்துக்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் தொழிலாளர்களுக்கு எந்தப் பிரச்னையும்இல்லை. இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு எங்களுடைய கடை உரிமையாளர் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளார். இந்த நிலையிலும் எங்களுக்கு இங்கிரிமென்ட் போட்டுள்ளார்'' என்றார் கவலையுடன். 

 

அலட்சியமா... விதிமீறலா என்ற உண்மை எப்போது?

http://www.vikatan.com/news/tamilnadu/91180-this-is-what-employees-telling-about-tnagar-fire.html

  • தொடங்கியவர்

சென்னை சில்க்ஸ் கட்டடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது? உரிமையாளர் விளக்கம்

 

 
chennaisilk

சென்னை: சென்னை தியாகராயநகர் பகுதியில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதன் உரிமையாளர் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

தீபாவளிக்குள் புதிய கட்டடம்
சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், அங்கு தீபாவளிக்குள் புதிய கட்டடம் கட்டப்படும். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்து வைத்திருந்தோம். இந்தக் கடையில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்று சென்னை சில்க்ஸ் உரிமையாளர் கே.மாணிக்கம் தெரிவித்தார்.

தரைகீழ் தண்ணீர் தொட்டியினால் சிக்கல்
சென்னை சில்க்ஸ் கட்டட வளாகத்தில் இருந்த, பிரம்மாண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியினால், அக்கட்டடத்தை இடிக்கும் பணி பல மணிநேர தாமாதத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

தீ விபத்தினால் சிதைந்து நிற்கும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கான ஆயத்தப் பணிகள் வியாழக்கிழமை நண்பகலே தொடங்கப்பட்டன. கட்டடத்தின் பின்பகுதியில் இருந்து இடிக்கும் பணியை தொடங்க திட்டமிட்ட அதிகாரிகள், அங்கு தரைத்தளம் முழுவதும் மணல் பகுதியே என நினைத்திருந்தனர்.

ஆனால், பின்பகுதி முழுவதும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டி இருப்பது தெரியவந்தது. இந்த தொட்டியின் மீது கிரேன், பொக்லைன்களை ஏற்றி கட்டடத்தை இடித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இதையடுத்து, தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மேற்பகுதியை உடைத்து, அந்த தொட்டியின் பள்ளமான பகுதியை நிரப்பும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இந்தப் பணியின் காரணமாக, கட்டடத்தை இடிக்கும் பணி திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 19 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.

25 அடிக்கு மணல்மேடு: அதேபோல் முதலில், கட்டடத்தை இடிக்கும் ஜாக் கட்டர் கிரேனை நிறுத்துவதற்காக, சுமார் 15 அடி உயரத்தில் கட்டட கழிவுகளை கொண்ட மணல்மேடு உருவாக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து ஜாக் கட்டர் இயந்திரத்தால் 6- ஆவது தளத்தை இடிக்க முடியாததால், மேலும் 10 அடிக்கு மணல்மேடு உயர்த்தப்பட்டு, நண்பகல் 2.10 மணியளவில் பணி தொடங்கப்பட்டது.

கட்டடம் இடிக்கும் பணிக்காக ஜாக் கட்டர் உள்பட 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கட்டடத்தை இடிக்கும் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், ஒரு நேரத்தில் ஒரு இயந்திரம் மட்டுமே பணி செய்ய முடிந்தது. இதில் ஜாக் கட்டர் இயந்திரம் மட்டும் சுமார் 85 அடி உயரம் வரை பணி செய்யும் திறன் கொண்டது. பெற்றிருந்ததது. இந்த இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20 ஆயிரம் கட்டணமாக வழங்கப்படுகிறது.

75 தொழிநுட்பப் பணியாளர்கள்: கட்டட இடிப்பு பணிக்காக தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் 75 பேர், சென்னை சில்க்ஸ் வளாகத்தில் முகாமிட்டிருந்தனர். பாதுகாப்புக்காக, காவல் இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் சரவணன் ஆகியோர் தலைமையில் 300 போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

ஊழியர்கள்: நூற்றுக்கும் மேற்பட்ட சென்னை சில்க்ஸ் ஊழியர்களும் கட்டட இடிப்பு பணிகளில் உதவி வருகின்றனர்.

பாதுகாப்பு பெட்டகம்: சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் சுமார் 250 கிலோ தங்கநகை, ரூ.30 கோடி மதிப்புள்ள வைர நகைகள், செவ்வாய்க்கிழமை வசூலான பணம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

தீ விபத்து, கட்டட விபத்து என எத்தகைய சூழ்நிலையையும் தாக்கும் வகையில் இந்த பெட்டகம் வடிவமைக்கப்பட்டதாகும். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக இப்பெட்டகம் பாதிக்கப்பட்டிருக்காது என கருதப்படுகிறது.

மேலும், கட்டடத்தை முழுமையாக இடித்த பின்பே பாதுகாப்பு பெட்டகத்தை அங்கிருந்து மீட்பது என காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தூசு நகரான தி.நகர்: சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியதையடுத்து, அங்கிருந்து அதிகப்படியான கட்டட தூசு வெளியேறியது. இந்த தூசு உஸ்மான் சாலை, பிஞ்சால சுப்பிரமணியன் தெரு, மங்கேஷ் தெரு, ரங்கன் தெரு உள்ளிட்ட அந்தப் பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்னையும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் மிகவும் அவதியடைந்தனர்.

மருத்துவ முகாம்கள்: சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணி நடைபெறும் பிஞ்சால சுப்ரமணியம் தெருவிலும், வடக்கு உஸ்மான் சாலையிலும், மருத்துவ உதவிக்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என 15 பேர் அடங்கிய இக்குழுவினர், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவக் குழுக்களிடம் இடிபாடுகளில் இருந்து கிளம்பும் தூசியிலிருந்து காத்துக்கொள்ள முகமூடிகள், காயத்துக்கான தடுப்பூசிகள், கண் எரிச்சல், தோல் அரிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

http://www.dinamani.com/tamilnadu/2017/jun/03/tnagar-chennai-silks-building-2713749.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.