Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் அதிரடி : ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம் : சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் எச்சரிக்கை

Featured Replies

அரசாங்கம் அதிரடி : ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம் : சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் எச்சரிக்கை

 

 

இன, மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் குழுக்கள் மற்றும் தனிநபர்களை கைது செய்ய அரசாங்கத்தினால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.racial-or-religious-hatred.jpg

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை  (INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS (ICCPR) ACT, No. 56 0F 2007)  Article 3. (1) No person shall propagate war or advocate national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence.

அமுல்படுத்துமாறு, நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

இதனடிப்படையில் இனவாத, மதவாத கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனடியாக கைது  செய்யப்படுவதோடு அப்பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளே இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் மூன்றாம் சரத்தின் பிரகாரம், எந்தவொரு நபரும் பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறைக்கு தூண்டுதலாக அமைந்த தேசிய, இன, அல்லது மத வெறுப்பை ஊக்குவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20614

  • கருத்துக்கள உறவுகள்

அக்குரணை ரு டே செய்தி இன் யாழில் வராதோ?

11 hours ago, நவீனன் said:

அரசாங்கம் அதிரடி : ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம் : சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் எச்சரிக்கை

சிங்கள-பௌத்த பயங்கரவாதத்துக்கு உரமூட்டும் முயற்சி!

ஏதோ ஒருவகையில் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசினை சர்வதேச நீதிமன்றுக்கு இழுத்தால் அது தமிழருக்கு மாபெரும் வெற்றியாக அமையும்.

 

  • தொடங்கியவர்

சமூக வலைத்தளங்களில் இனவாதத்தை தூண்ட முயற்சித்தால் தனிப்படை பாயும்

 

சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தலைமையகம் அறிவிப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)

இன, மத மோதல்­களைத் தூண்டும் வண்ணம் சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக திட்­ட­மிட்ட குழுக்கள் மற்றும் தனி நபர்கள் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவ­தா­னித்து சிறப்பு நட­வ­டிக்­கை­களை எடுக்க தனி பொலிஸ் படை அமைக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­விக்­கின்­றது.

 அதி­க­ரிக்கும் இன, மத­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் பொலிஸ் மா அதி­பரின் உத்­தரவுக்கு அமை­வாக இந்த தனிப்­படை அமைக்­கப்பட்­டுள்­ள­தாக பொலிஸ்

ஊடகப் பேச்­சா­ளரும் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லகப் பிர­தானி­யு­மான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். 

இவ்­வா­றான இன, மத­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தை INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS (ICCPR) ACT, No. 56 0F 2007) அமுல் செய்ய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள், உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­க­ளுக்கு பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்தல் விடுத்­துள்­ளது.

அதன்­படி அந்­தந்த பகு­தி­களில் இடம்­பெறும் இன­வாத மத­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பிர­தே­சத்தில் பொலிஸ் அதி­கா­ரி­களே பொறுப்புக் கூற வேண்டி வரும் என பொலிஸ் மா அதிபர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

சமூக வலைத்­தளம் ஊடாக இன­வா­தத்தை தூன்­டுவோர் என நம்­பப்­படும் சிலரை பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்ள நிலை­யி­லேயே தனிப்­படை பொலிஸார் ஊடாக மேல­திக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதன் முதல் கட்­ட­மாக நாரம்­மல பகு­தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுப் பொதி­களில் வலி நிவா­ரண மாத்­தி­ரைகள் கலந்து விர்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக சமூக வலைத்­த­ளங்­களில் செய்­யப்பட்ட பிர­சாரம் தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். அதன்­படி அந்த சமூக வலை­தள பதிவில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்கள் உண்­மைக்கு புறம்­பா­னவை என விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும், அதனால் அந்த பதி­வினை சமூக வலைத்­த­ளத்தில் பதி­வேற்­றி­யோரைக் கைது செய்­யவும் அதன் பின்­ன­ணியில் உள்­ளோரை சட்­டத்தின் முன் நிறுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ள­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

 இந் நிலையில் சமூக வலைத்தளங்களில் இன, மத வெறுப்புணர்வுகளைத் தூண்டும் இதனை ஒத்த ஏனைய பதிவுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்ப்ட்டுள்ளதாகவும் தராதிரம் பார்க்காது அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல் செய்யப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.