Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருவத்தைக் கேலி செய்தவர்களுக்கு நடிகை சரண்யா மோகன் உணர்வுபூர்வமான பதில்!

Featured Replies

உருவத்தைக் கேலி செய்தவர்களுக்கு நடிகை சரண்யா மோகன் உணர்வுபூர்வமான பதில்!

 

 
saranya211

 

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகன் 2015ம் வருடம் செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்தார். 

சரண்யாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை சரண்யா மோகனின் சில புகைப்படங்கள் கேலிக்கும் விமரிசனங்களும் ஆளாகியுள்ளன. குழந்தை பிறந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் கூடுதல் எடையுடன் இருந்தார். இருப்பினும் அத்தகைய புகைப்படங்களைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் கேலியும் விமரிசனங்களும் உருவாகியுள்ளன. 

இதையடுத்து ஃபேஸ்புக்கில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் சரண்யா மோகன். அவர் கூறியதாவது: 

தாய்மையே மகிழ்ச்சி, என் மகனுக்கு அமுதூட்டுவது மகிழ்ச்சி, என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது மகிழ்ச்சி... அதில் நான் பெருமைப்படுகிறேன் ...என்று தனது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுப் பதில் அளித்துள்ளார்.

saranya654.jpg

saranya21.jpg

saranya_kid1.jpg

saranya_mohan1.jpg

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jun/07/actress-saranya-mohan-has-the-perfect-reply-for-fat-shamers-2716132.html

  • தொடங்கியவர்

''தாய்மையின் வலி, வேதனை, பெருமிதம் ட்ரோலர்ஸ்க்கு புரியுமா?'' சரண்யா மோகனுக்காகக் கொதிக்கும் நடிகைகள்!

 

சரண்யா


கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், ட்விட்டர் என பரபரத்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் நடிகை சரண்யா மோகனின் புகைப்படம். அவரின் திருமணத்துக்கு முந்தைய புகைப்படமும், குழந்தைப் பெற்றப்பிறகான அவருடைய தற்போதைய படத்தையும் இணைத்து ட்ரோல் ஆகும் விஷயம்தான். ஒரு நடிகையை பற்றி ட்ரோல் ஆகும் விஷயத்தில் சக நடிகைகள் மெளனம் காக்க, 'யாரடி நீ மோகினி' படப் புகழ் சரண்யா மோகன் சிம்பாளிக்காக தன் ஃபேஸ்புக் பக்கத்தில், 

Happiness is mother hood . 
Happiness is feeding my son . 
Happiness is taking care of my family . 
and I am proud of it :)
“Birth is the epicenter of women’s power.” –Ani DiFranco 

சரண்யா

என்று ஒரு பதிவை போட்டு ட்ரோலர்களை வாயடைத்துப் போக வைத்திருக்கிறார். பல பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் உடல் பருமன் குறித்த டிவி பிரபலங்களிடம் கேட்டோம். 

சரண்யா

 

நளினி நளினி: நடிகை 

''பெண்களுக்கு அழகே தாய்மைதான். கொஞ்சம் பூசனாப்ல இருந்தாதான் அழகு. அம்மாக்கள், கொடி இடையோடு இருப்பது கூடாதுங்கிறது என் கருத்து. தாய்க்கென ஒரு தோற்றம் இருக்கு. என்னைப் பொருத்தவரை, நான் இப்படி இருக்கிறதைத்தான் சந்தோஷமாக நினைக்கிறேன். அப்போதுதான் ஒரு மரியாதையான தோற்றம் கிடைக்கும். உடல் பருமனோடு இருப்பது அசிங்கம் கிடையாது. அந்தந்த வயசுக்குத் தகுந்த மாதிரி இருக்கிறதுதான் அழகு. பிரசவத்திற்குப் பிறகு உடம்பு பூசினாப்ல இருக்கும். அது தனியழகு. இது பல ஆண்களுக்குப் புரியறதுதில்ல. எங்க வீட்ல என்னை யாரும் உடல் மெலியச் சொன்னதில்ல. இன்னும் சொல்லபோனா அப்படி ஒரு பேச்சை எடுத்ததே இல்லை. ஒவ்வொருத்தர் வீட்ல இருக்கவங்களுடைய எண்ணம் வேறுபட்டிருக்கும். அதை நான் குறைகூற விரும்பல. பல பெண்கள், தன்னை யாரும் குறை சொல்லிடக் கூடாதுங்கறதுக்காகவே ஜிம்க்குப் போறதை வழக்கமாக வச்சிருக்காங்க. அப்படி ஒல்லியாகணும்ங்கிறது என்ன அவசியம்... அதில் என்ன பெருமைனு தெரியல. குழந்தை பேறு என்பது பெருமை, பிரசவத்தின்போது புனர்ஜென்மம் எடுக்கிறோம். ஆக மொத்தத்துல ஒவ்வொரு பெண்ணும், தான் எப்படி இருக்கணும்னு நினைக்கிறார்களோ அப்படி இருப்பதுதான் நல்லது. மத்தவங்களுக்காக நாம ஏன் வாழணும். மத்தவங்க நம்மை ஏத்துகிறதும் ஏத்துகாததும் அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம்''. 

அர்ச்சனா: தொகுப்பாளினி 

அர்ச்சனா

''ஆண்கள் வெயிட் போட்டா கம்முனு வாயை மூடிட்டு இருக்கோமே... பெண்கள் வெயிட் போட்டா மட்டும் ஏன் விவாதிக்கிற அளவுக்குப் போகுதுனு தெரியல. நான்கு, ஐந்து நாட்களாக சரண்யா விஷயத்தை இப்படியாப் பேசுவீங்கனு எனக்கு வெறுப்பாகிடுச்சு. ஒல்லியா இருக்கிற ஒரு தொகுப்பாளர், நான் ஒன்றரைக் கிலோ எடைக்குறைச்சுட்டேனு சொல்லி பெருமைப்பட்டுக்கிறாங்க. அதுல என்ன பெருமைனு தெரியல. இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல. நானும் 18 வயசுல இருந்து 24 வயசு வரைக்கும் ஒல்லியாகத்தான் இருந்தேன். 21 வயசுல திருமணம் ஆச்சு. 24 வயசுல குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு வெயிட் போடத்தான் செய்தது. என் குழந்தை இந்த உலகத்தைப் பார்க்க நான் பல தையல்களைப் போட்டுக்க வேண்டியிருந்தது. என்னைக் குண்டா இருக்காங்கனு சொல்ற எல்லாத்துக்கும் என் தையல்களை காட்டினா ஒத்துப்பாங்களா... 


என் வயித்தைக் கிழிச்சு என் குழந்தையை வெளியில கொண்டு வந்த பிறகு போட்ட தையல், எனக்கு வலியா தெரிஞ்சதில்ல. சந்தோஷம்தான் இருந்துச்சு. ஆனா, இப்பவும் என்னை பார்க்கிறவங்க வெயிட் போட்டுட்டனு சொல்லும்போது ஏற்படுற வலிதான் அதிகம். என்னை மாதிரி வெயிட் போட்டிருக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் சொல்றேன், 'நீங்க நீங்களாக இருங்க'. அதே மாதிரி இனி தாய்மையை அனுபவிக்கவிருக்கும் பெண்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை சொல்லிக்கிறேன். 

இதுல இன்னொரு வருத்தம் என்னனா.. ஆண்களைவிடப் பெண்கள்தான் வெயிட் போட்டிருப்பதாகச் சொல்லி பெண்களை புண்படுத்துறாங்க. என் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்டா இருக்கிற ஆண்கள் கூட பெண்களின் வெயிட் பத்திதான் பேசுறாங்க. பெரும்பாலான பெண்கள் திருமணத்துக்குப் பிறகு உடலில் வர்ற மாற்றத்துக்காகவே குழந்தை பேறை தள்ளிப்போடுறதுலாம் நடக்குது. 
இதையெல்லாம் பார்க்கும்போது அவ்வளவு வேதனையா இருக்கும். ஏங்க குழந்தை காத்துல இருந்தா வரும். அல்லது சூரியனைப் பார்த்ததும் கையில வந்து குழந்தை விழுந்திடுமா. ஒரு பெண்ணுடைய வயிற்றில் இருந்துதான் குழந்தையை பிரசவிக்க முடியும். அப்ப அவபடுற வேதனையை எவ்வளவு தூரம் புரிஞ்சுக்கிறீங்கனு தெரியல. ஆம்பிள்ளைங்க முடியில்லாமலும், சொட்டையாகவும், தொப்பையோடும் இருந்தாலும் நாங்க கல்யாணம் பண்ணிக்கிறோம்ல. பெண்களை மட்டும் ஏன் அழகு, கலர், பருமன்னு வேறுபடுத்தி நோகடிக்கிறீர்கள்... இந்த எண்ணத்தை முதலில் தூக்கிப் போடுங்க''. 

கலா மாஸ்டர்

கலா மாஸ்டர்: 

 

''பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருக்கிறது எப்பவுமே ஆபத்துதான். கடந்த சில வருடங்களாக நான் டயட்ல இருந்து இப்போ எட்டுக்கிலோ குறைச்சிருக்கேன். பெண்களைப் பொருத்தவரை வெயிட் அதிகரிக்கும்போது முதுகுவலி, கால் முட்டி வலி, இடுப்பு வலி எனப் பல பிரச்னைகள் பாடாய்ப் படுத்தும். எனக்கு தைராய்டு இருக்கு. அதனால தான் இவ்வளவு வெயிட் போட்டுட்டேன். அதிக அளவு வெயிட் போடும்போது சர்க்கரை, ரத்தக் கொதிப்பு எனப் பல பிரச்னைகள் வரிசை கட்டும். அதனால நம்ம ஆரோக்கியத்தை பாதுகாக்கணும்னா உடலைச் சரியா வச்சுக்கணும். அம்மாவுக்கான தோற்றத்தில் இருப்பதைவிட, இளமையாக இருக்கும்போது நம்மளால பாசிட்டிவ் எனர்ஜியை உணர முடியும். எனக்கு இப்போ நாற்பத்தியேழு வயசாகுது. என் பையனுக்கு பத்து வயசுதான் ஆகுது. இப்பவே எனக்கு இவ்ளோ பிரச்னை இருக்குனு நினைக்கும் போது கவலையாயிருக்கு. என் பையனை எப்படி பார்த்துப்பேன் என நினைக்கும் போது மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனாலதான மூன்று மாசத்துக்கு ஒரு முறையாவது ரத்தப் பரிசோதனை பண்ணிப்பேன். எனக்காக இல்லைனாலும் என்னை சுத்தியிருக்கவங்களுக்காகவாவது என்னை ஆரோக்கியமாக வச்சிருக்கேன். பிரசவத்துக்குப் பிறகு வெயிட் போடுவது சாதாரணமான விஷயம்தான். இதை நினைச்சு மனதளவுல வருத்தப்படக்கூடாது. எப்போது நம்மை கன்ட்ரோலா வச்சுக்க முடியுமோ அப்போ நம் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வரலாம்.'' என்கிறார். 

http://www.vikatan.com/news/tamilnadu/91635-actors-come-forward-to-support-saranya-mohan-and-blast-trollers.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.