Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களிடம் ஒரு கேள்வி ????????????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது உலகம் பூராக பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையுணர்வு ஏற்படுத்தவேணுமென்றால் என்ன முறையை கையாளவேண்டும்?

அதாவது உலகம் பூராக பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையுணர்வு ஏற்படுத்தவேணுமென்றால் என்ன முறையை கையாளவேண்டும்?

இதை உணர்த்த முடியாது. அவரவராக உணர்ந்தால் சரி. செஞ்சோலை படுகொலை, வாகாரைப் படுகொலை, மூதூர்ப் படுகொலை, மன்னார்ப் படுகொலை என்று பார்த்தவர்கள் பலர் இன்னும் தான் சிங்கிள குண்டர்களிற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் புலி ஏதாவது பெரிய தாக்குதல்களை நடத்தும் போது மாத்திரம் கட்சி மாறிவிடுவார்கள்.

விடுதலை உணர்வு, அடிமைத்தனத்தில் இருந்து மீள வேண்டும் எனும் எண்ணம் ஒருவனது இரத்தத்தில் ஓட வேண்டும்.

நம்மவர்கள் சினிமா, மற்றும் சீரியல் பிரியர்கள். ஆனையிரவு தாக்குதல், கரும்புலித்தாக்குதல்கள், கடற்சமர்கள், ஒளிவீச்சு போன்றவற்றை ஆவர்த்தனமாக வெளியிடலாம். தாயகத்தில் இருந்து தொடர் நாடகங்கள் தயாரிக்கப்பட்டால் கூட இது நம்மவர்களிடையே ஒரு மாற்றத்தை, விழிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் தாயகப் படைப்புக்கள் நம்மவர்களை ஆவர்த்தனமாக போய்ச் சேர்வதில்லை என்பது ஒரு பெரிய குறைபாடு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாவது உலகம் பூராக பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையுணர்வு ஏற்படுத்தவேணுமென்றால் என்ன முறையை கையாளவேண்டும்?

<<<

இங்கிருந்து போனவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்பது நித்திரை கொண்டவன் மாதிரி நடிக்கிறவனை எழுப்புகின்ற கதைதான். ஈழத் தமிழன் என்கின்ற உணர்வு இரத்ததில் ஊறிப்போய் இருக்க வேண்டாமா?!!

ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகளூக்கு கண்டிப்பாக எங்கள் தாய் நாட்டின் நிலவரங்களை உங்களை ஒத்த அதே வயது குழந்தைகளூக்கு ஏற்படும் கலவரங்களைச் சொல்லிப் புரியவைக்கலாம். சுனாமியின் பேரழிவைப் பார்த்தே ஈழத்தை திரும்பிப் பார்த்த இங்கு பிறந்த குழந்தைகளின் உள்ளம் ஏராளம்.

எங்கள் தாயகம் விடிவுபெற வேண்டும் எனில் நிச்சயம் எல்லோரும் ஈழம் என்கின்ற ஒரே மூச்சு/பேச்சு என்கின்ற அண்ணையின் அணியில் ஒன்றாய் ஒற்றுமையாய் எழ வேண்டும் என்பதே!.

இங்குள்ள ஊடகங்கள் களியாட்டங்களிலும் சீரியல்கள் போட்டு நேரத்தை மண்ணாக்குவதிலும் எங்கள் தாயகத்தில் ஏற்படுகின்ற அவலங்களை எங்கள் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை பற்றி இங்குள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

'நல்ல காலம் நாங்க தப்பிச்சிட்டம்" என்கின்றவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் எம் தலைமுறையை நிச்சயம் நம் ஈழத்தை நோக்கி திசைதிருப்பலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை உணர்வை அதிகரிக்க வேண்டுமானால் இனப்பற்றைத் தூண்டுவதே சரியான வழி என்பதே என் கருத்து. உண்மையில் விடுதலை உணர்வு என்றது தாய் நாட்டை மட்டும் விடுவிப்பதல்ல. எம் சந்ததிகள் இனம், மொழி, கலாச்சாரம் என்பவற்றில் அந்நிய ஆதிக்கம் ஊடுருவாமல் தடுப்பதும், அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதும் ஆகும்.

வெறுமனே நாட்டை மட்டும் பெற்றுக் கொண்டு, குழந்தைகள், சந்ததியினர் தாய் மொழி தெரியாமலும், மேலைத்தேசக் கலாச்சாரம் தான் நம்முடையது என்றும் கருதும் அளவிற்கு வாழ வைத்தால் இந்தப் போராட்டம் எமக்குப் பிரியோசமல்லாமல் போய்விடும்.

சிங்கள இனம், எம்மை ஆக்கிரமிக்கக் கூடாது என்று போராட்டத்தை ஆரம்பித்து விட்டு, மற்றய கலாச்சாரங்களை உள்வாங்கி, தமிழை 2ம் தாரமாக்குவது சிங்களதேசம் 50களில் எமக்குச் செய்த அநீதிகளை நாம் உள்வாங்கி வாழவைத்ததற்குச் சமன்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன் டீவி, ஜெயா டீவி, ராஜ் டீவி, விஜய் டீவி (வேறையும் ஏதாவது இருக்கா?) ஆகிய நிறுவனங்களை நாங்கள் வாங்க வேண்டும்.

சுயமரியாதை

தன்னம்பிக்கை

முதலில் தேவை.

அதாவது தங்கள் அடையாளம் என்ன, அதன் தனித்துவம் என்ன என்ற தெளிவு அதில் பெருமை தேவை.

போற நாடுகளில் அந்தந்த நாட்வர்கள் போல் வேசம் போடுவதில் பெருமைப்படுபவர்களிற்கு எப்படி தனது இனம் தேசியம் என்ற உணர்வு வரும். அந்தந்த நாட்டு கலாச்சாரம் வாழ்வு முறைகளை ஏற்றுக் கொள்வது அனுசரித்துப் போவது வேறு அது போன்று தானும் வேசம் போட்டு நடித்து பெருமைப் படுவது வேறு.

இனத்தில் மொழியில் மரியாதை பெருமை தன்னம்பிக்கை இருந்தால் தான் அடுத்த கட்டமாக விடுதலையுணர்வு வரும் சுதந்திர தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற தெளிவு வரும். இல்லாவிட்டால் சண்டை எப்படி என்னத்திற்கு நிண்டாலும் பறாவாயில்லை அது தான் தீர்வாகத் தெரியும். அதற்காக பலத்தின் அடிப்படையில் சினிமா பாணியில் பிரச்சாரம் செய்து விடுதலையுணர்வை ஏற்படுத்தலாமா என்பதற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.

பிறந்த உடன் எப்படி சுவாச்சிக்க ஆரம்பிக்க தொடங்கிறோம்.....? யாரவது சொல்லி கொடுக்கிண்றார்களா? அதே போலத்தான் விடுதலையுணர்வும் நம் இரத்தத்தில் ஓட வேண்டும், விடுதலையுணர்வை மூச்சக சுவாசிக்க வேண்டும். அதுதான் உண்மையன விடுதலையுணர்வு.

விடுதலை உணர்வை ஏற்படுத்த சிறந்த முறை சின்ன வயசில் எருந்தே பெற்றோர் அவர்கள் பிள்ளைகளுக்கு எற்படுத்த வேண்டும். அத்திவாரம் சிற்ப்பாக இருந்தால்தான் கட்டிடம் பலமாக இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bowling Columbine, Farenheit 911 போன்ற Documentary களினை வழங்கிய Michael Moor இனை வைத்து நாம் ஈழப்போராட்டத்தைப் பற்றி ஒன்று தயாரித்து உலக அளவில் வெளியிட வேண்டும்

தமிழனுக்கு தன்னைப் பற்றிக்கூட வேறு யாராவது சொல்லித்தான் தெரியவரவேண்டும் என்பது விதி.. வரலாற்றில் பல உதாரணங்களுள்ளன

தமிழர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட வேண்டிய தேவை என்பதுக்கு அவசியம் இல்லை என்பதே என்கருத்து...

மிக முக்கியமாக ஊரில் இருந்து வந்த போதே தன் உறவுகளின் இன்னல்களை புரிந்தவர்களாய் இருக்கிறார்கள் எல்லாருமே... சொந்த ஊரிலும், தாயிலும் பாசம் வைத்து இருப்பவர் எல்லருமே தன் நாட்டின் மீதும் இனத்தின் மீதும் பற்று கொண்டவர்கள்தான்.... ஆனாலும் எங்களால் சிங்களைத்தை எதிர்த்து வெல்ல முடியாது, ஆயுதமெடுத்து போராட்டுவதை தவிர மக்களால் வேறு வளிகளில் இலக்கை அடையும் தன்மையை ஊக்கு விக்கும் வளிகளை அறியாதவர்களாய் இருக்கிறார்கள்... அப்படி போக தெரியாதவர்களுக் இயற்கையிலேயே இருப்பதை வைத்து திருப்தி படுபவர்களும், அனுசரிச்சு தலைவணங்கி போபவர்களும்தான் போராட்டத்தை நம்புவது கிடையாது... மற்றவர்கள் எல்லாமே இனவெளிச்சி கொண்டவர்கள்...

இப்போ புலம்பெயர் சமூகத்தில் இராணுவத்துக்கு எதிரான தாக்குதலுக்கு இருக்கும் ஆதரவுகூட தமிழர்களின் இறுதி தீர்வை குறியாக கொண்டது....! அது தமிழீழம் அடையக்கூடிய ஒரே வளி என்பதை எங்களின் சமூகம் என்பதில் கொண்டுள்ள நம்பிக்கை... அதை புலம்பெயர் நாட்டில் விசா பெறுவதுக்கான அடித்தளம் எண்று சொல்பவர்கள் கடைசிக்கட்டத்தை விளங்காதவர்கள்...

தாய் நாட்டுக்கான நிதி உதவி என்பதில் தமிழர் தலைமையையும் தாண்டி புலம்பெயர் சமூகத்தில் எல்லாருமே ஊரில் இருக்கும் உறவுகளுக்காய் உதவ வேண்டியவர்களாவர்... இதில் விடுதலைப்போருக்கு எதிரானவர்களால் கூட தவிர்க்க முடியாதது...

ஆனாலும் நாங்கள் இன்னும் அதிகமாக செய்ய வேண்டிய மற்றயதில் முக்கியமாக விடுதலைப்பாதையில் புலம்பெயர் சமூகம் எவ்வளவு அக்கறையாக இருக்கின்றது என்பதை காட்டுதல் ... போர் எண்றாலும் அரசியல் தீர்வு எண்றாலும் எங்களின் தனிநாட்டுகான ஆதரவு எவ்வளவு என்பது சர்வதேசத்துக்கு புரி பட வைக்க பட வேண்டும்... தாயகத்தில் புலிகள் பலமான சக்தியாக இருக்கிறார்கள் அவர்களை அளிப்பது கடினம் என்பதை சர்வதேசம் உணர்ந்தாலும் நிதி உதவிகளை சர்வதேச ரீதியில் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து போகாது தடுத்து விட்டால் புலிகளை நாளடைவில் முடக்கி விடலாம் எண்று சர்வதேசங்கள் நினைக்கின்றன... ( அதுக்காய் புலிகளை தடையும் செய்து இருக்கின்றன) ஆனாலும் தமிழர்களின் ஆதரவு தனிநாடு நோக்கியதே என்பதையும், மறைமுகமான நிதியுதவி புலிகளுக்கு உண்டு என்பதையும், சர்வதேசம் புரிந்து கொள்ள வைக்கப்படுமானால் இரத்தமில்லாத போரில் தமிழர் வெல்லும் நாள் விரைவாக்கப்படும்....!

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தா ஒரு பிள்ளை தாயிடம் அன்பு வைக்க என்ன செய்யவேண்டும் இதே கேள்விக்கான விடையை கண்டு பிடியுங்கள் அதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கும் விடை அதை மற்றவர் சொல்லி புரிய வைக்க முடியாது அப்படி சொல்லி புரிந்து கொள்ள கூடிய நிலைமையில் உள்ள ஒரு ஈழ தமிழர் பேசாமல் புரிந்து கொள்ளாமலே இருப்து நல்லது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வத்துடன் உங்கள் கருத்துக்களை பதிவு செய்த சாத்திரி, தல, பிரசன்னா, குறுக்காலைபோவான், பாலபண்டிதர், தூயவன், தமிழ்தங்கை, மாப்பிளை போன்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு என்னுடைய கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன்.

அதாவது உலகம் பூராக பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையுணர்வு ஏற்படுத்தவேணுமென்றால் என்ன முறையை கையாளவேண்டும்?

எல்லோரும் நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை கூறியிருந்தாலும் நாம் ஒரு விடயத்தை சிந்திக்க மறந்துவிட்டோம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

முக்கியமாக இந்த புலம்பெயர்நாடுகளில் இருக்கின்றவர்களில் பெரும்பான்மையினரின் மனதில் அசைக்கமுடியாத ஒரு தப்பான நம்பிக்கை உள்ளது. அதாவது எங்களுக்கென்ன நாங்கள் வெளிநாடு வந்துவிட்டோம் பிராஜாவுரிமையும் எடுத்துவிட்டால் நாம் ஏன் நாட்டை பற்றி சிந்திக்கவேனும்? அவர்களின் இந்த சிந்தனைக்கு ஊக்கமூட்டுவது போல் அவர்கள் வசிக்கும் நாடுகளில் எங்கள் விடுதலை அமைப்புக்கு எதிரான சட்டமும் துனை போகின்றது என்பதும் ஒரு காரணம்.

இந்த கட்டத்தில் ஒரு உண்மையை அதாவது நடைமுறை சாத்தியமான விடயத்தை நினைவு படுத்தவேண்டியது என்பதை விட எச்சரிக்க வேண்டிய ஒரு கடப்பாடு இருக்கிறது.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எங்க சொந்த மண்ணில் இருந்தே நாங்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளோம். நிலமை அப்படியிருக்க ஒரு அந்நிய நாட்டில் இருந்து எங்களை விரட்டியடிக்க எத்தனை நிமிடம் தேவைப்படும்? அல்லது எங்கள் எல்லோரையும் ஒரு சந்தர்ப்பத்தில் தாயகத்திற்கு திருப்பி எடுக்கவேண்டிய நிலை வந்தால் அதை சாதிப்பதிற்கு அதிக நேரமா தேவைப்படும்?

அதாவது விடுதலை உணர்வை நீங்கள் சொன்னமாதிரியும் முயற்சிக்கலாம், இல்லையென்றால் கண்டிப்பான முறையிலும் முயற்சிக்கலாம் இல்லையா?

ஜயா எந்த ஒரு குறிக்கோளையும் நாம் அடைவதிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருக்கு என்பதை மறவாதீங்க, இதை உங்களுக்கு தெரிந்தவைக்கும் ஞாபகப்படித்துங்கோ அதாவது இந்த பிரஜாவுரிமை, நிரந்தர வதிவிடவுரிமை எல்லாம் வெற்றுப்பேப்பர். நான் இந்த கருத்தை சொல்லுகிறதாலை என்னை தீவிர போக்குடையவன் என்று தீர்மானித்திடாதையுங்கோ ஜயா...

சாத்தியப்படக்கூடியதை சொன்னேன் அவ்வளவு தான்

மீண்டுமொரு நல்ல கருத்துடன் சந்திக்கும் வரை

வல்வை மைந்தன்

கீழ் வருபவை உங்களால் வைக்கப்பட் கருத்துக்கள்.

வல்வை மைந்தா ஒரு பிள்ளை தாயிடம் அன்பு வைக்க என்ன செய்யவேண்டும் இதே கேள்விக்கான விடையை கண்டு பிடியுங்கள் அதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கும் விடை அதை மற்றவர் சொல்லி புரிய வைக்க முடியாது அப்படி சொல்லி புரிந்து கொள்ள கூடிய நிலைமையில் உள்ள ஒரு ஈழ தமிழர் பேசாமல் புரிந்து கொள்ளாமலே இருப்து நல்லது

தமிழர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்ட வேண்டிய தேவை என்பதுக்கு அவசியம் இல்லை என்பதே என்கருத்து

பிறந்த உடன் எப்படி சுவாச்சிக்க ஆரம்பிக்க தொடங்கிறோம்.....? யாரவது சொல்லி கொடுக்கிண்றார்களா? அதே போலத்தான் விடுதலையுணர்வும் நம் இரத்தத்தில் ஓட வேண்டும்இ விடுதலையுணர்வை மூச்சக சுவாசிக்க வேண்டும். அதுதான் உண்மையன விடுதலையுணர்வு.

சுயமரியாதை

தன்னம்பிக்கை

முதலில் தேவை.

அதாவது தங்கள் அடையாளம் என்னஇ அதன் தனித்துவம் என்ன என்ற தெளிவு அதில் பெருமை தேவை.

சன் டீவிஇ ஜெயா டீவிஇ ராஜ் டீவிஇ விஜய் டீவி (வேறையும் ஏதாவது இருக்கா?) ஆகிய நிறுவனங்களை நாங்கள் வாங்க வேண்டும்.

விடுதலை உணர்வை அதிகரிக்க வேண்டுமானால் இனப்பற்றைத் தூண்டுவதே சரியான வழி என்பதே என் கருத்து. உண்மையில் விடுதலை உணர்வு என்றது தாய் நாட்டை மட்டும் விடுவிப்பதல்ல. எம் சந்ததிகள் இனம்இ மொழிஇ கலாச்சாரம் என்பவற்றில் அந்நிய ஆதிக்கம் ஊடுருவாமல் தடுப்பதும்இ அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதும் ஆகும்

இங்கிருந்து போனவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்பது நித்திரை கொண்டவன் மாதிரி நடிக்கிறவனை எழுப்புகின்ற கதைதான். ஈழத் தமிழன் என்கின்ற உணர்வு இரத்ததில் ஊறிப்போய் இருக்க வேண்டாமா?!!

இதை உணர்த்த முடியாது. அவரவராக உணர்ந்தால் சரி. செஞ்சோலை படுகொலைஇ வாகாரைப் படுகொலைஇ மூதூர்ப் படுகொலைஇ மன்னார்ப் படுகொலை என்று பார்த்தவர்கள் பலர் இன்னும் தான் சிங்கிள குண்டர்களிற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் புலி ஏதாவது பெரிய தாக்குதல்களை நடத்தும் போது மாத்திரம் கட்சி மாறிவிடுவார்கள்.

விடுதலை உணர்வுஇ அடிமைத்தனத்தில் இருந்து மீள வேண்டும் எனும் எண்ணம் ஒருவனது இரத்தத்தில் ஓட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் எங்காவது விடுமுறைக்குப் போனால், அல்லது விடுமுறையில் வந்தால் முதலில் பேசப்படும் விடயம் புதிதாக சென்ற அந்த நாட்டைப் பற்றித்தான்.. உதாரணமாக கனடாவில் இருந்து ஒருவர் இங்கிலாந்து வந்தால், அவர் சொல்லுவார் கனடா "திறமான" நாடு என்ரு, அதைப் போல இங்கிலாந்தில் இருந்து ஒருவர் கனடாவுக்கு போனால், தான் வசிக்கும் நாடுதான் "திறம்" என்பார். ஐரோப்பாவுக்குள்ளும் இதேதான் நிலைமை. தாம் இளவயதில் சந்தோசமாக இருந்த தாய்நாடுதான் "திறம்" என்று சொல்லும் நிலை வந்தால்தான் விடுதலை உணர்வு "அவர்"களுக்கு வரும். :rolleyes:

எம்மவர்கள் எங்காவது விடுமுறைக்குப் போனால், அல்லது விடுமுறையில் வந்தால் முதலில் பேசப்படும் விடயம் புதிதாக சென்ற அந்த நாட்டைப் பற்றித்தான்.. உதாரணமாக கனடாவில் இருந்து ஒருவர் இங்கிலாந்து வந்தால், அவர் சொல்லுவார் கனடா "திறமான" நாடு என்ரு, அதைப் போல இங்கிலாந்தில் இருந்து ஒருவர் கனடாவுக்கு போனால், தான் வசிக்கும் நாடுதான் "திறம்" என்பார். ஐரோப்பாவுக்குள்ளும் இதேதான் நிலைமை. தாம் இளவயதில் சந்தோசமாக இருந்த தாய்நாடுதான் "திறம்" என்று சொல்லும் நிலை வந்தால்தான் விடுதலை உணர்வு "அவர்"களுக்கு வரும். :rolleyes:

அதெப்படி அப்படி சொல்லுறது? தாய் நாட்டை நினைக்க அயிடன்ட்டிக் கார்ட்டும் :lol: , ஆமியும் :unsure: , கூலிக்குழுக்களும் :( , கொலைகளும் :( , பசி :( , பட்டினியும் :( , ஷெல் :( , விமானக்கு குண்டுத்தாக்குதல்கள் :( , சிங்களப் பேரினவாதம் :( என்று இவையல்லவா நினைவுக்கு வருகிறது?..............? :(

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி அப்படி சொல்லுறது? தாய் நாட்டை நினைக்க அயிடன்ட்டிக் கார்ட்டும் :rolleyes: , ஆமியும் :lol: , கூலிக்குழுக்களும் :unsure: , கொலைகளும் :( , பசி :( , பட்டினியும் :( , ஷெல் :( , விமானக்கு குண்டுத்தாக்குதல்கள் :( , சிங்களப் பேரினவாதம் :( என்று இவையல்லவா நினைவுக்கு வருகிறது?..............? :(

இவ்வளவு கஸ்டங்களும் நீங்கினால் எப்படி இருக்கும் என்று யோசிக்கவேண்டாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு கஸ்டங்களும் நீங்கினால் எப்படி இருக்கும் என்று யோசிக்கவேண்டாமா?

நீங்க வேண்டும் என்றும் செயலாற்றுவோம்!!....'எங்கள் அண்ணை சொன்ன மாதிரி செயலால் வளர்ந்த பின்பு தான் நாம் பேசத் தொடங்க வேண்டும்!.

வல்வை மைந்தன் அவர்கள் சொன்னது போல், இங்குள்ள வாழ்க்கை நிலையில்லை என்பதையும் 'ஆணிவேர் எங்கள் தாய் மண் என்பதையும் புலம் பெயர்ந்தவர்களுக்கு புரியவைக்க வேண்டும்!.

என்ன செய்யிறது....சிலவற்றை சொல்லி விளங்கப் படுத்த வேண்டித்தான் இருக்கு!. அது தமிழனின் சாபக்கேடுதான்!!....

தாயை மதிப்பவன்(நேசிப்பவன்)

தமிழை மதிப்பான்(நேசிப்பான்)

தமிழை மதிப்பவன்(நேசிப்பவன்)

தமிழீழத்தை மதிப்பான்(நேசிப்பான்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.