Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் EuropeCar நிறுவனம் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் europecar நிறுவனம் 

இரு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் லண்டனில் இருந்து, 74 மைல் தூரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு வார வேலை செய்ய போக வர வேண்டி இருந்தது. தினமும் போய் வரலாம் என்று முடிவு. 148 மைல் ஓட்டம்.

ஒரு மெர்க் காரை புக் பண்ணி காலையில் போய் எடுத்துக் கொண்டு ஹீத்ரோ விமான நிலையம் தாண்டி போகும் போது காத்து போய் விட்டது. 

போன் பண்ணியபோது, மெதுவாக ஓடி பக்கத்தில் உள்ள exit வெளியே போய் ரோடோரமாக நில்லுங்கள் என்றார்கள். தமது recovery வண்டி வரும் என்றார்கள்.

வந்து பக்கத்தில் உள்ள அவர்களது நிறுவனத்துடன் வியாபார தொடர்பு உள்ள, kwikfit நிறுவனத்துக்கு வெளியே கொன்டு போய் விட்டார்கள்.

நிறுவனத்தின் உள்ளே போய், கார் டயர் மாத்தவேண்டுமே என்றேன்.

அவர்களோ, இந்த காருக்கு, £120 வரியுடன் என்றார்கள். காரினை உள்ளே கொண்டு போய், கார் இலக்கத்தினை கணனியில் பதிவு செய்தவுடன், தலையை சொறிந்தவாறே சொன்னார், இது வாடைக்கு எடுத்த கார் அல்லவா என்றார். அதற்கு என்ன என்றேன்.

இல்லை, எமக்கும் அவர்களுக்கு ஒரு வியாபார தொடர்பு உண்டு. நீ பணம் கட்டிட தேவையில்லை. நாம் டயர் மாத்தி தருகிறோம் என்றார்கள்

பொறி தட்டியது. நான் உனக்கு பணத்தினை செலுத்துகிறேன். அவர்களுடன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். இல்லை அவ்வாறு செய்ய முடியாது என்றார்.

நான் கடுப்புடன், எனது வங்கி தரும் ரெகவரி சர்வீஸைக் கூப்பிட்டு, வேறு இடத்துக்கு கொண்டு போவேன் என்றேன்.

வழிக்கு வந்தார்கள். 

வண்டியைக் திருப்பிக் கொடுத்து விட்டு வந்த பின்னர், £260 க்கு பில் வந்தது. டயர் மாத்திய வகையில் செலுத்த வேண்டுமாம்.

நான் நேரே செலுத்தி, ரசீது வைத்திருக்கிறேன். இப்ப எங்கிருந்து பில் வருகிறது என்றேன். அவர்களோ, நீ கட்டி இருக்க கூடாதே. பணக் கொடுப்பனவு எல்லாம் எம்முடன் தானே இருந்திருக்க வேண்டும் என்றார்கள்.

உனது வேலை கார் வாடைக்கு தருவது. போன இடத்தில பெட்ரோல் போடுவது எங்கே என்பது எனது கவலை. அதே போல் எங்கே டயர் மாத்துவது என்பது எனது கவலை என்றேன்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் அதை கான்செல் பண்ணுனார்கள்.

இப்ப பலரது முறைப்பாடுகளின் பின்னர் அதிகாரிகள் முழித்திருக்கிறார்கள். இது ஒரு மோசடி என Trading standard agency களமிறங்கி உள்ளது. இந்த மோசடி அநேகமாக எல்லா வாடைக்கு கார் தரும் நிறுவனங்கள் அனைத்துமே செய்கின்றன. ஆகவே சிக்கல் அனைவருக்கும் தான் என்கிறார்கள்.

சந்தையில் ஒருவர் இருந்தால் monopoly: அவர் நினைத்த பணத்தினை அறவிடுவார். 

பலர் இருந்தால் Oligopoli: போட்டியினால் விலை குறையும். ஆனால் அவர்கள் தமக்குள் பேசி, அதிக விலை அறவிடுவோம் என்று ரகசியமாக தீர்மானித்தால் அது Price Fixing. 

Price Fixing என்பது மிகவும் சீரியஸ் ஆன மோசடி என்று இந்த துறை சார்ந்த நிபுணர்கள் சொல்கின்றனர். இந்த வகை மோசடியினை தடுப்பதில் அரசு மிக கவனமாக இருக்கும். இவ்வகையான ஒரு மோசடியில், விர்ஜின் ஏர்வேய்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் அதிகாரிகள் சிக்கி உள்ளே போனார்கள்.

உதாரணமாக, கொழும்பு போக கத்தார் ஏர் £400, ஏர்லங்கா £800 என்று விலை இருக்கிறது. ஏர்லங்கா அதிகாரிக்கு குறைக்க விருப்பமில்லை என்றால், கத்தார் அதிகாரிக்கு போனை போட்டு, என்ன, இந்த விலை விக்கிறாய், பேசாம இருவருமே £900 ஆக்கி விடுவோம். ரெண்டு பேருக்கும் நல்ல காசு என்று பேசி விலையை நிர்ணயித்தால் அது, சந்தையின் சுஜமான இயக்கத்தினை குலைக்கும் Price fixing மோசடி

http://www.telegraph.co.uk/news/2017/06/24/exclusive-europcar-accused-overcharging-customers-repairs/

**************************

இன்னொமொரு மோசடி விரைவில் சிக்கும். அது கூரியர் கொம்பனிகள்.

முன்னர் இந்தியாவில் இருந்து ஒன்லைன் மூலமாக புடவை வாங்கும் போது, கிபிட் அல்லது வியாபார மாதிரி என்று போடடால் வரி இருக்காது.

இப்ப வரி அடிக்கிறார்கள். தாமதத்தினை தவிர்க்க அந்த வரியை தாம் கட்டிவிட்டதாகவும், டெலிவரி செய்ய முதல், £12 admin சார்ஜ் உடன் வரியையும் சேர்த்துக் காட்டுமாறு ஈமெயில் வரும்.

இரு வேறு கம்பெனிகள் (DHL, Fedex) மூலம் இரு வேறு கடைகள் இருந்து பொருட்கள் ஓர்டர் பண்ண இருவரும் £12 சேர்த்து பில் போட்டு அனுப்பினார்கள்.

VAT வரி அறவிட, கட்டணம் வசூலிக்க, சட்டத்தில் இடமில்லையே, எப்படி என்றேன். அரண்டு போன Fedex அதை கான்செல் பண்ணி விட்டது. DHL ல்  kuldeep என்னும் இந்தியர், பெரிய எடுப்பு எடுத்தார். அவர் இந்தியாவில் கால் சென்றரில் இருந்து ஈமெயில் போட்டுக் கொண்டிருந்ததால், இங்குள்ள சட்டம் புரியவில்லை.

அவசரம், £12 க்கு மினக்கெடுவதா என்று விட்டு விட்டேன். பிறகு நேரம் கிடைக்க வில்லை. அதுக்கும் Trading standard agenc கு முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்னமும் வசூலிக்கிறார்கள். எதிர்ப்பவர்களுக்கு கான்செல் செய்கிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இரு வேறு கம்பெனிகள் (DHL, Fedex) மூலம் இரு வேறு கடைகள் இருந்து பொருட்கள் ஓர்டர் பண்ண இருவரும் £12 சேர்த்து பில் போட்டு அனுப்பினார்கள்.

usலிருந்து சில உதிரிபாககங்கள் வேண்டும்பொழுது இந்த  Fedexகாரன் வேறையா vat டியூட்டி அறவிட்டன் ஆனால் அப்படி கட்டினால் டக்ஸ் ஒபீசில் இருந்து இவ்வளவு டக்ஸ் கட்டியுள்ளாய் என்று சேர்ட்டிபிக்கட் போல் ஒன்றை (பெரிய அலுவா)அனுப்புவாங்கள் இந்த  Fedexகாரனின் டக்ஸ் கடடுனால் ஒன்றும் வராது நாதமுனி சொல்வது இதையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

usலிருந்து சில உதிரிபாககங்கள் வேண்டும்பொழுது இந்த  Fedexகாரன் வேறையா vat டியூட்டி அறவிட்டன் ஆனால் அப்படி கட்டினால் டக்ஸ் ஒபீசில் இருந்து இவ்வளவு டக்ஸ் கட்டியுள்ளாய் என்று சேர்ட்டிபிக்கட் போல் ஒன்றை (பெரிய அலுவா)அனுப்புவாங்கள் இந்த  Fedexகாரனின் டக்ஸ் கடடுனால் ஒன்றும் வராது நாதமுனி சொல்வது இதையா?

ஆமாம், பெருமாள். 

இந்த இணைய வியாபாரம் பெரிசா வளர்ந்த பின்னர், அரசாங்கம் வரி அறிவிடுவதில் மும்மரம்.

VAT சுங்கத்திணைக்களத்தினால் அறவிடப்படுவது.

இதில விஷயம் என்னவெனில், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகள், VAT கட்டினால் தான் பொருட்களை உள்ளே விடும். பிரித்தானியா மட்டும் பொருளை வித்த பின்னர் கடடலாம் என சொல்வதால், ஐரோப்பாவுக்கு வரும் எமது மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் பிரிட்டன் வந்தே ஏனைய ஐரோப்பிய நாடுகள் செல்லும்.

குறைந்தது மூன்று மாதம், cashflow வசதி இருக்கும். 

ஆனால், நீங்கள் US ல் இருந்து பொருள் எடுக்கும் போது, உங்கள் சொந்த பெயரில் என்னும் போது, உங்கள் பாவனைக்கு என கருதி உடனே வரி அறவிட அரசு சொல்கிறது.

இங்கே உள்ள விசயம் என்னெவெனில், உங்கள் பொருள், அங்கே sender கையளிக்கும் போதே, அதன் விலை என்ன என்று குறிப்பிட வேண்டும். அதில் இருந்து கட்டவேண்டிய 20% கணித்து உங்களுக்கு, பொருள் ட்ரான்சிட்டில் இருக்கும் போது, ஈமெயில் அனுப்பி விடுவார்கள். 

இந்த பொருளுக்கான கூரியர் பணத்தினை முதலே, பொருள் விலையுடன் செலுத்தி இருப்பீர்கள். ஆனால் US வியாபாரிக்கு உங்கள் நாட்டு வரி அறவிட அதிகாரம் இல்லை. தேவையும் இல்லை.

ஆகவே இந்த வேலையை கூரியர் தலையில் விட்டு விட்டார்கள். கூரியர் உங்களுக்கு ஈமெயில் அனுப்பி, பொருள் சுங்கச் சாவடியில் தாமதமாவதை தவிர்க்க, உங்களுக்காக, அந்த வரியை நாம் செலுத்துகிறோம். அதன் admin chare £12. சேர்த்துக் கொடுங்கோ என்கிறார்கள்.

அவர்களது கூரியர் சார்ஜ் £7. அட்மின் சார்ஜ் £12 என்றால் எந்த ஊர் நியாயம். இன்னும் மோசம். வரி £4 ஆயின்?

அப்ப நியாயத்தைப் பிளந்தால்,

1.  வரி எவ்வளவு என்று சொல்லு, நான் கட்டுகிறேன். உன்னிடம் நான் கடன் கேட்கவில்லையே. பிறகேன் கொடுத்துவிட்டு என்னிடம் £12 கேட்க்கிறாய்.

2. பிரித்தானியாவில் அரசுக்கான VAT அறவிட கட்டணம் வசூலிப்பது, பாரளுமன்ற சட்டத்தினால் அங்கீகரிக்கப் படவில்லை. இது சட்ட ரீதியானதா?

என்று போட, FEDEX அதைக் cancel பண்ணி விட்டது. DHL இந்தியாவில் இருந்து, இந்தியன் லா கதைச்சார். அந்த ஈமெயில்களை, அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தாலே அவர்களுக்கு சிக்கல். நமக்கு சரி £12 சண்டை போட பிரயோசனமான என்று விட்டு விட்டேன்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.