Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்துவிட வேண்டாம்

Featured Replies

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்துவிட வேண்டாம்

 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை பொறுத்­த­வரை மிகவும் ஒரு இக்­கட்­டான சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வான போக்கை கடைப்­பி­டித்து வரு­கி­றது. காரணம் எவ்­வா­றா­வது நாட்டின் அனைத்து மக்­களும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான ஒரு தீர்வுத் திட்­டத்தை பெற்­று­விட வேண்டும். அதா­வது இரண்டு பிர­தான கட்­சியும் ஒன்­றி­ணைந்த இந்த சந்­தர்ப்­பத்தில் தீர்வை பெற்று விட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது சாணக்­கி­ய­மான அர­சி­யலை மேற்­கொண்டு வரு­கி­றது. எனவே இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அதன் ஆத­ரவைப் பெற்று சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒரு தீர்வைக் காண முன்­வர வேண்டும். 

இலங்கை தற்­போது பல்­வே­று­வி­த­மான அர­சியல் நகர்­வு­க­ளையும் காய்­ந­கர்த்­தல்­க­ளையும் எதிர்­கொண்டு வரு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தி­லி­ருந்து அர­சியல் மற்றும் ஏனைய வகை­யி­லான சவால்­க­ளுக்கு எவ்­வி­த­மான பஞ்­சமும் இல்லை என்றே கூறலாம்.

புதிது புதி­தாக பல்­வேறு அர­சியல் சவால்கள் நாட்டில் ஏற்­பட்­டுக்­கொண்­டே­யி­ருக்­கின்­றன. தற்­போ­தைய நிலை­மையில் கூட நாட்டின் அர­சியல் சூழ­லா­னது மிகவும் பர­ப­ரப்­பா­கவே நகர்ந்­து­வ­ரு­கின்­றது.

நாட்டில் இன­வாத மத­வாத பிரச்­சி­னை­க­ளின்­போது அர­சாங்கம் உரிய முறையில் செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுகள், அர­சியல் தீர்­வுக்­காக எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் இதய சுத்­தி­யுடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை என்ற வடக்கு கிழக்கு மக்­களின் குற்­றச்­சாட்­டுக்கள், புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டை பிரிக்­கப்­போ­வ­தாக தென்­னி­லங்கை கடும்­போக்­கு­வா­தி­களின் குற்­றச்­சாட்­டுக்கள், குப்பை பிரச்­சி­னையை விரைந்து தீர்­வு­கா­ணப்­பட முடி­யாத நிலை, டெங்கு காய்ச்சல் அதி­க­ரித்து செல்­கின்­றமை, அதனால் சுகா­தாரத் துறை எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டிகள், இயற்கை அனர்த்­தங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் அவ­லங்கள், சைட்டம் விவ­கா­ரத்­தினால் நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை, வடக்கில் காணாமல் போனோர் உற­வு­களின் தொடர் போராட்­டங்கள், காணி­களை இழந்­துள்ள மக்­களின் தொடர் போராட்­டங்கள், வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் தொடர்ந்தும் நீடிக்­கின்­றமை, பொறுப்­புக்­கூறல் பிரச்­சினை விட­யத்தில் அர­சாங்கம் சரி­யான பிர­வே­சத்தை எடுக்­காமை, நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் தேக்­க­ம­டை­கின்­றமை, பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதிக்­காக காத்­தி­ருக்­கின்­றமை என பல்­வேறு நெருக்­க­டிகள் சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நாடு பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

எவ்­வா­றெ­னினும் நாட்டின் மிகப்­பி­ர­தான பிரச்­சி­னை­யான நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் விட­யத்­தி­லேயே விரைவில் முன்­னேற்­ற­க­ர­மான நிலைமை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மேற்­கூ­றப்­பட்ட பல்­வேறு சிக்­கல்கள் சவால்கள் பிரச்­சி­னைகள் காணப்­பட்­டாலும் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­யான அர­சியல் தீர்வு பெரும்­பாலும் இந்த அனைத்து விட­யங்­க­ளையும் ஆராயும் ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது.

2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி தேசிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை உள்­ள­டக்கி புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்று வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த­வொரு பிர­தான கட்­சியும் அறுதி பெரும்­பான்­மையை பெறாத நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தை அமைத்­தன.

தேசிய அர­சா­ங்கம் அமைக்­கப்­ப­டு­வ­தற்­கான மிக முக்­கிய கார­ணங்­க­ளாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணுதல், தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைத்தல் மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைத்தல் ஆகி­யன முன்­வைக்­கப்­பட்­டன. இந்த மூன்று விட­யங்­களை பிர­தா­ன­மா­கக்­கொண்டு தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­டு­வ­தாக நாட்­டுக்கு இரண்டு பிர­தான கட்­சி­களும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூறின.

இந்தக் கட்­டத்தில் நாட்டின் தமிழ் பேசும் மக்கள் நீண்­ட­கால அர­சியல் உரிமை பிரச்­சி­னைக்கு தமது அர­சியல் அபி­லா­ஷைகள் நிறை­வேற்­றப்­படும் வகை­யி­லான தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­ப­டு­மென நம்­பிக்கை வைத்­தனர்.

நாட்டின் சகல மக்­க­ளி­னாலும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான தீர்வுத் திட்டம் முன்­வைக்­கப்­படும் என தமிழ் பேசும் மக்கள் நம்­பிக்கை வைத்­தனர். மக்­களின் நம்­பிக்கை மேலோங்­கி­யது. இதற்­கா­கவே இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணை­வ­தாக அப்­போது கூறப்­பட்­டது. இந்த நாட்டின் வர­லாறு முழு­வ­துமே இந்த இரண்டு பிர­தான கட்­சி­க­ளுமே ஆட்சிப் பீடத்­தி­லி­ருந்து வந்­துள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சி­யி­லி­ருக்கும் போது சுதந்­திரக் கட்சி எதிர்க்­கட்­சி­யா­கவும் சுதந்­திரக் கட்சி ஆட்­சி­யி­லி­ருக்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்க்­கட்­சி­யா­கவும் இருந்து வந்­துள்­ளன.

இந்­நி­லையில் சுதந்­திரம் கிடைத்­ததி­லி­ருந்து நாட்டின் தமிழ் மக்கள் தமது அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யப்­படும் வகை­யி­லான தீர்வுத் திட்­ட­மொன்றை கோரி வரு­கின்­றனர். கடந்த காலங்­களில் இந்த போராட்­டங்கள் பல்­வேறு வடி­வங்­களை பெற்­ற­போ­திலும் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு மட்டும் கிடைக்­கவே இல்லை. வடுக்­களும் துய­ரங்­களும் அவ­லங்­களும் போராட்­டங்­க­ளுமே தீர்வை கோரு­கின்ற மக்­களை வாட்டி வதைத்­தன. மாறாக மக்­க­ளுக்கு தீர்வு என்­பது மட்டும் கிடைக்­கவே இல்லை. 1987 ஆம் ஆண்டு இலங்கை, இந்­திய ஒப்­பந்­தத்­தி­னூ­டாக 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது.

ஆனால் அந்த மாகாண சபை முறைமை கூட தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வ­தாக அமை­ய­வில்லை. குறிப்­பாக கூறு­வ­தென்றால் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் இன்று வரை வழங்­கப்­ப­டாத நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. திருத்தச் சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பிர­தான இந்த இரு விட­யங்கள் இது­வரை வழங்­கப்­ப­டாத நிலையில் மாகாண சபை முறை­யா­னது எவ்­வாறு தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை நிறை­வேற்றும் என்ற கேள்வி எழு­கி­றது.

இவ்­வாறு வர­லாறு முழு­வதும் தமிழ் பேசும் மக்கள் தீர்வுத் திட்­டத்­திற்­காக போராடி வந்த நிலையில் நாம் மேலே சுட்­டிக்­காட்­டி­யதைப் போன்று இரண்டு பிர­தான கட்­சி­க­ளுமே மாறி மாறி ஆட்­சிக்கு வந்­து­கொண்­டி­ருந்­தன. இவ்­வா­றான சூழல்­களில் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் ஆட்­சி­யி­லி­ருக்­கின்ற கட்சி ஒரு அணுகு முறையை முன்­னெ­டுக்­கின்­ற­போது எதிர்க்­கட்சி அதனை எதிர்த்து வந்­துள்­ளது. சுதந்­திரக் கட்­சியோ ஐக்­கிய தேசியக் கட்­சியோ எதிர்க்­கட்­சி­யி­லி­ருக்­கின்­ற­போது ஒரு நிலைப்­பாட்­டையும் ஆளும் கட்­சி­யி­லி­ருக்­கின்­ற­போது மற்­றுமோர் நிலைப்­பாட்­டி­னை­யுமே பேணி வந்­துள்­ளன.

அதன் அடிப்­ப­டை­யி­லேயே பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்று சேரும்­வரை இந்த பிரச்­சி­னையை தீர்க்­கவே முடி­யாது என்ற கருத்து கடந்த காலங்­களில் முன்­வைக்­கப்­பட்டு வந்­தது. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து ஆட்­சியை அமைப்­பது என்­பது கடந்த காலங்­களில் ஒரு கன­வா­கவே நீடித்து வந்­தது. 1994 ஆம் ஆண்டு தமிழ் பேசும் மக்­களின் மத்­தியில் பாரிய எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி ஒரு சமா­தானப் புறா­வாக ஆட்­சிக்கு வந்த சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­கூட தேசிய அர­சாங்­கத்தை அமைக்கும் முயற்­சியில் பல தட­வைகள் ஈடு­பட்­டி­ருந்தார்.

இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்தால் மட்­டுமே இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்க முடியும் என்ற நிலைப்­பாட்டில் சந்­தி­ரிகா குமா­ர­துங்க இருந்தார். அது­மட்­டு­மன்றி அவ­ரது காலத்தில் சிறந்த தீர்வுப் பொதிகள் கூட முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக பல்­வேறு தரப்­பி­னரின் எதிர்ப்­புக்கள் கார­ண­மாக அந்த முயற்­சிகள் வெற்றி பெற­வில்லை.

இவ்­வா­றான வடுக்கள் நிறைந்த அர­சியல் பய­ணத்­திற்கு மத்­தி­யி­லேயே 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­திற்கு பின்னர் இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. ஆனால் தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்டு இரண்டு வரு­டங்கள் முடிந்­து­விடப் போகின்ற நிலையில் இது­வரை தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்தில் நம்­பிக்கை அளிக்­கக்­கூ­டிய வகை­யி­லான தீர்வுத் திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

அதற்­கான முயற்­சிகள் கடந்த இரண்டு வருட காலத்தில் பல்­வேறு மட்­டங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போ­திலும் தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடை­யக்­கூ­டிய வகை­யி­லான எந்த நட­வ­டிக்­கையும் இறுதி இணக்­கப்­பாட்டை இன்னும் அடை­ய­வில்லை.

இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்து சிறிது காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் நோக்கில் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக உரு­வாக்­கப்­பட்­டது. அதன் கீழ் பிர­தான வழி­ந­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்டு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. அந்த பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தேர்தல் முறை மாற்றம் மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையில் மாற்றம் ஆகிய விட­யங்­களை ஆராய்­கி­றது.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையில் மாற்றம் தொடர்பில் இது­வரை பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது எந்­த­வி­த­மான இணக்­கப்­பாட்­டிற்கும் வர­வில்லை. தேர்தல் முறை மாற்­றத்தில் பல்­வேறு இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­ட­போதும் இது­வரை இறுதி இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் பல தட­வைகள் வழி­ந­டத்தல் குழுவில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன. ஆனால் இது­வரை எவ்­வி­த­மான இறுதி முடிவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான சூழலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது தற்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­வி­ட­யத்­துக்­கான தனது அணு­கு­மு­றையில் ஒரு திருப்பு முனையை அடைந்­துள்­ளது என்று கூறலாம்.

அதா­வது தற்­போ­தைய நிலை­மையில் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தி பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்கி அதற்கு அப்பால் சென்று செனட் சபை­யைக்­கூட அமைப்­ப­தற்கு சுதந்­திரக் கட்சி தயா­ராக இருப்­ப­தாக அக் கட்­சியின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­துள்­ளனர். கடந்த 10 வருட காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தவோ அதி­லுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கவோ எந்­த­வொரு வகை­யிலும் விருப்­ப­மற்ற கட்­சி­யா­கவே இருந்து வந்­துள்­ளது. இன­வாத போக்­குடன் இருந்த கட்­சி­யா­கவே பார்க்­கப்­பட்­டது.

ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக உரு­வெ­டுத்­ததன் பின்னர் தற்­போது 13 ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தலாம் என்றும் அதி­லுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்­கலாம் என்றும் அறி­வித்­தி­ருக்­கி­றது. அவ்­வாறு பார்க்­கும்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது அர­சியல் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான ஒரு கட்­டத்­திற்கு வந்­தி­ருக்­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது கிட்­டத்­தட்ட கடந்த 10 வரு­டங்­க­ளா­கவே தேசியப் பிரச்­சி­னைக்கு அதி­காரப் பகிர்வின் மூலம் தீர்வுக் காணப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றது. குறிப்­பாக அந்தக் கட்­சியின் ஆட்சிக் காலத்­தி­லேயே 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது. எனினும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­ய­ான கடந்த 10 வரு­டங்­களில் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் வித்­தி­யா­ச­மான நிலைப்­பாட்டை கொண்டு வந்­துள்­ளது. அந்த வகையில் தற்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி எடுத்­துள்ள நிலைப்­பா­டா­னது ஆரோக்­கி­ய­மாக அமைந்­துள்­ளது என்று கூறலாம். ஆனால் இந்த நிலையில் கூட தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் நிறை­வேற்­றப்­ப­டுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும்.

இந்த பின்­ன­ணியில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற்றுக் கொண்டு நீண்­ட­கா­ல­மாக புரை­யோடிப் போயி­ருக்­கின்ற தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண முன்­வ­ருமா என்­பது இங்­குள்ள பிர­தான கேள்­வி­யாகும். இந்த இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இதற்­கான அர்ப்­ப­ணிப்பு இருக்­கி­றதா? அதனை முன்­னெ­டுத்து செல்ல இரண்டு கட்­சி­களும் தயாரா? தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­தற்­கான நோக்­கத்தை அடைய இரண்டு கட்­சி­களும் தயாரா? தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­ட­போது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் இரண்டு கட்­சி­க­ளுக்கும் நினைவில் இருக்­கின்­ற­னவா? இவற்­றி­னூ­டாக இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு நிரந்தர முடிவைக் காண இரண்டு கட்­சி­களும் தயாரா? என்ற கேள்­வி­க­ளுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் பதி­ல­ளித்­தாக வேண்டும்.

2015 ஆம் ஆண்டு இரண்டு வரு­டங்­க­ளுக்­கா­கவே தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்­டது. தற்­போது அந்த இரண்டு வரு­டங்கள் நிறை­வ­டையப் போகின்­றன. ஆனால் இது­வரை தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் எந்­த­வொரு இணக்­கப்­பாடும் எட்­டப்­ப­ட­வில்லை. எந்­த­வொரு பொதியும் மேசையில் வைக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது 13 ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த தயார் என அறி­வித்­துள்­ளமை விசேட அம்சமாகும். எவ்வாறெனினும் தமிழ் பேசும் மக்கள் மகிழ்ச்சியடையக்கூடிய வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பொறுத்தவரை மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவான போக்கை கடைப்பிடித்து வருகிறது. காரணம் எவ்வாறாவது நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை பெற்றுவிட வேண்டும். அதாவது இரண்டு பிரதான கட்சியும் ஒன்றிணைந்த இந்த சந்திப்பத்தில் தீர்வை பெற்று விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சாணக்கியமான அரசியலை மேற்கொண்டு வருகிறது.

எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் ஆதரவைப் பெற்று சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு தீர்வைக் காண முன்வர வேண்டும். இந்த இடத்தில் இனவாத சக்திகள் அனைத்தையும் குழப்பிவிடும் அபாயம் காணப்படுகிறது. தற்போது கூட நாம் அவ்வாறான முயற்சிகளை காண்கிறோம். ஆனால் இனவாத சக்திகள் தடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதற்காக தீர்வுத் திட்டத்தை அடைவதற்காக போராடி வரும் மக்களின் அபிலாஷைகளை குழி தோண்டிப் புதைத்து விடக்கூடாது.

எனவே இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான காரணத்தை உணர்ந்து நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும். தேசிய அரசாங்கம் இதனை உணர்ந்து செயற்படுமா?

ரொபட் அன்­டனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-24#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.