Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!!

__________________

ரோட்டுல ரெண்டுபேரு கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க.. பக்கத்துலே ஒரு சின்னப் பையன் நின்னுக்கிட்டு "அப்பா... அப்பா.." ன்னு அழுதுக்கிட்டு இருந்தான்.. அந்த வழியா போன ஒருத்தர் அந்தப் பையனை என்னவென்று விசாரித்தார்..

அப்போதும் அப்பா... அப்பா.. என்று அழுதவனை இதிலே யாருடா உங்கப்பா..? என்று கேட்டார்.. பையன் சொன்னான்..

"அதை முடிவு பண்ணத்தான் ரெண்டுபேரும் அடிச்சுக்கறாங்க...!"

----------

ஒருவன் மதுக்கடையில் மூக்கு முட்ட குடித்தான்.. பின்னர் வீட்டுக்கு திரும்ப நினைத்தபோது அவனால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை..குப்புற விழுந்து கிடந்தவன், "சே.. குடித்தாலே இப்படித்தான்.. இனிமேல் குடிக்கக்கூடாது..இப்போது மற்றவர்கள் கேலி செய்யுமுன் எவ்வாறாவது சுதாரித்து எழுந்து வீட்டுக்கு போகவேண்டும்.." என எண்ணியவாறே மீண்டும் எழ முயற்சித்த போது, மறுபடியும் தவறி சேற்றில் விழுந்து விட்டான். முகமெல்லாம் சேறு.. "சரி..இனி தவழ்ந்தாவது வீட்டுக்கு செல்வேன்..இனி விழுந்து மற்றவர்களின் கேலிக்கு இலக்காக மாட்டேன்.." என்று முடிவு செய்து இரவு முழுவதும் தவழ்ந்து வீட்டுக்கு வந்தவன் சோர்வு மிகுதியால் வாசல் படியிலேயே தூங்கி விட்டான்.

காலையில் வாசல் தெளிக்க கதவைத்திறந்த மனைவி அவன் முகத்திலும் தெளித்து எழுப்பினாள்.. கணவன் அசட்டுச் சிரிப்புடன் கண் விழிக்க.. மனைவி கேட்டாள்..

" மறுபடியும் குடிக்க போயிட்டீங்களா..?"

"அட.. எப்படி தெரியும்..?"

" சக்கர நாற்காலியை விட்டுட்டு வந்துருக்கீங்களே.. மதுக்கடையிலே தானே இருக்கு..?

ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள்.. (உங்க கலவரம் எனக்கு புரியுது மக்கா.. இதிலே அசைவமும் இல்லே... அந்தப் பய சின்னாவும் இல்லே.. நிம்மதியா தொடருங்கப்பு.. ) சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..

" கணினி ( என் சந்தேகம் கணிணியா அல்லது கணினியா..?) ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ..

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க..

அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

__________________

  • Replies 764
  • Views 74.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சர்தார் : டாக்டர், என் உடம்பு எல்லாம் வலிக்குது, எந்த இடத்தையும் என்னால தொட முடியல, தொட்டா உயிர் போற மாதிரி வலிக்குது.

டாக்டர் : அப்பட்டியா, எங்க உங்க நெத்திய தொடுங்க.

சர்தார் “அய்யோ, அம்மா” ன்னு கத்தராரு (பஞ்சாபியில)

டாக்டர் : உங்க கண்ணத்த தொடுங்க.

மறுபடியும், “அய்யோ, அம்மா” ன்னு கத்தராரு (பஞ்சாபியில)

டாக்டர் : உங்க வயித்த தொடுங்க.

ரொம்ப சத்தமா, “அய்யோ, அம்மா” ன்னு கத்தராறு (பஞ்சாபியில)

டாக்டர் : சரி, இதுல எழுதியிருக்குற டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க

மறு நாள்.

டாக்டர் : உங்க பிரச்சனை என்னனு கண்டுபுடிச்சாச்சு

சர்தார் : என்ன டாக்டர். ?

டாக்டர் : உங்க ஆள் காட்டி விரல் உடைஞ்சு போயிருக்கு.

சர்தார் : டாக்டர் ஒரு சந்தேகம், ஆள் காட்டி விரல் உடைஞ்சா, உடம்பு எல்லாம் வலிக்குமா ? ? ? ? ? ?

  • தொடங்கியவர்

சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு..

___________________________________________________________________

ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..

"தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்.."

____________________________________________________________________

ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா...சோம்பேறி.

அவராலே செய்யமுடியலேன்னா....." நேரம் இல்லே.."

____________________________________________________________________

எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா..." முட்டாள்தனம்"

அவர் பண்ணினா.." அவரும் மனுஷந்தானே..கடவுளா..?"

--------------------------------------------------------------------

நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்"

அவர் செஞ்சா.." முன்னுதாரணம்"

--------------------------------------------------------------------

நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.."பிடிவாதம்"

அவர் அப்படி நெனைச்சா..." கொள்கையில் உறுதி.."

--------------------------------------------------------------------

நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.." காக்கா பிடிக்கறீங்க."

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.." ஒத்துழைப்பு..பணிவு"

--------------------------------------------------------------------

நீங்க அலுவலக் நேரத்திலே வெளியே இருந்தா.." ஊர் சுத்தறீங்க"

அவர் இருந்தா.. " பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார்.."

--------------------------------------------------------------------

நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க"

அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்.."

சின்னாவுக்கு திடீரென்று ஒரு சக்தி கிடைத்தது.. அதை வைத்து எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தான்..

ஒரு நாள் பூனை அவனை பிராண்டிவிட்டது.. அன்று இரவு படுக்கப் போகும்போது இறைவனை இவ்வாறு வேண்டினான்..

" கடவுளே .. அன்னையைக் காப்பாற்று.. தந்தையை காப்பாற்று.. என் நாய்க்குட்டியைக் காப்பாற்று.. பூனை எக்கேடொ கெட்டுப் போகட்டும்...!"

மறுநாள் கொல்லைப் புறத்தில் பூனை செத்துக் கிடந்தது.

இன்னொரு நாள் நாய் சின்னாவின் நண்பனைக் கடித்து விட்டது. சின்னா இவ்வாறு வேண்டினான்..

" கடவுளே .. அன்னையைக் காப்பாற்று.. தந்தையை காப்பாற்று.. என் நாய்க்குட்டி எக்கேடொ கெட்டுப் போகட்டும்...!"

மறுநாள் நீங்கள் நினைப்பது போலவே நாய் "பணால்...!"

கொஞ்ச காலத்துக்கு எல்லாம் நல்லபடியாகவே போய்க் கொண்டிருந்தது. காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் சின்னாவை அப்பா சுளுக்கு எடுத்துவிட்டார்..

சின்னா இரவு வேண்டுதலில் தன் சக்தியைக் காட்ட, அப்பாவை திகில் ஆட்டிப் படைக்கத் தொடங்கியது.. இரவெல்லாம் தூங்கவில்லை.. வீட்டில் இருந்த தண்ணீரையெல்லாம் குடித்தும் பதற்றம் குறையவே இல்லை.. அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.." உங்களுக்கு ஒண்ணும் ஆகாது.. தூங்குங்க.." ஊஹூம்.. அவர் பைத்தியம் பிடித்தது போல திரிந்துகொண்டுதான் இருந்தார் இரவெல்லாம்..

இரக்கமற்ற அந்த இரவு ஒருவழியாக கழிந்தது.பொழுது புலர்ந்தது..என்ன ஆச்சர்யம்.. அப்பாவுக்கு ஒன்றும் ஆகவில்லை.. பகல் வெளிச்சம் மேலும் தென்பைத் தர, அப்பா கொல்லைக் கதவைத் திறந்து கிணற்றடிக்கு சென்றபோது...

பக்கத்து வீட்டுக்காரன் காம்பவுண்டு சுவரில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தான்..!

( இப்போ என்னை நல்லா திட்டியிருப்பீங்களே... போகட்டும்.. கொஞ்சம் கோபிச்சுக்காம இந்த ஜோக்கை இன்னொரு முறை படியுங்க.. போன தடவை புரியாத ஒரு விஷயம் இப்போ புரியும்..!).

__________________

  • தொடங்கியவர்

நம் சர்தார் வங்கியைக் கொள்ளையிடத் திட்டமிட்டார்.

பூட்டை உடைத்து உட்புகுந்தவர் அதிர்ச்சி அடைந்தார்..

காரணம் கரன்சிக்கு பதில்லாக திரவப் புட்டிகள் தான் இருந்தன.

அயராத நம்மவர் அனைத்தையும் உடைத்து குடித்துவிட்டு திரும்பினார்..

அடுத்த நாள் தினசரிகள் அலறின..

வரலாற்றில் முதன்முறை..

குருதி வங்கி கொள்ளையிடப்பட்டது..!!! :unsure:

  • தொடங்கியவர்

உளுந்தூர் பேட்டை மோட்டல்.. ஒரு கிழட்டு லாரி ஓட்டி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார்.. அப்போ 4 மோட்டார் சைக்கிள்ல ஒரு கும்பல் எங்கேயோ போயிட்டு வந்தானுங்க.. மோட்டலுக்குள்ள நுழைஞ்சவனுங்களுக்கு கிழ ட்ரைவரைப் பார்த்ததும் குஷி கெளம்பிடுச்சு..

ஒருத்தன் வழுக்கை தலையிலே ஒரு தட்டு தட்டுனான்..

இன்னொருத்தன் தான் குடிச்சுட்டு இருந்த சிகரெட் சாம்பலை ட்ரைவர் தண்ணி டம்ளர்லே ஒரு தட்டு தட்டுனான்..

மற்றொருவன் அவர் உக்காந்துருந்த நாற்காலியை ஒரு தட்டு தட்டுனான்..

பிறிதொருவன் அவர் சாப்பிட்டுட்டு இருந்த தட்டை எடுத்து அவர் தலையிலேயே தட்டிக் கவிழ்த்தான்..

ட்ரைவர் ஒண்ணுமே பேசல.. காசக் குடுத்துட்டு கிளம்பிட்டாரூ.

இந்த பசங்கள்ள ஒருத்தன் கல்லாவுல உக்காந்துருந்த பொண்ணுக்கிட்ட போயி சொன்னான்..

என்னா ஆளு இவன்.. எவ்வளவு அட்டகாசம் பண்ணினோம்..? தட்டி கேட்கவே இல்லையே..?

சரியான ஆம்பள இல்ல போலருக்கு.. ஏன் பாப்பா..?

சரியான ஆம்பளை இல்லையோ என்னமோ தெரியலே.. ஆனா சரியான ட்ரைவர் இல்ல போலருக்கு.. இப்பதான் இங்கே நின்னுட்டு இருந்த 4 புது மோட்டார் சைக்கிள தட்டி எறிஞ்சுட்டு போனார்..

நல்லா இருக்கா..? எங்க தட்டுங்க கையை..! :unsure:

  • தொடங்கியவர்

கடவுள் கழுதையைப் படைத்தார்..

நீ பொதி சுமப்பாய்.. காகிதத்தால் பிழைப்பாய்.. உன் ஆயுள் 30 ஆண்டு.

கழுதை அப்படியானால் 20 ஆண்டே போதும் என்றது.

கடவுள் நாயைப் படைத்தார்..

வீட்டைக் காப்பாய்.. மனிதன் போடும் மிச்சத்தை தின்பாய்.. உன் ஆயுள் 30 ஆண்டு.

என் நாய்ப் பிழைப்புக்கு 15 ஆண்டே அதிகம் என்றது நாய்.

கடவுள் குரங்கைப் படைத்தார்..

நீ அங்கும் இங்கும் தாவுவாய்.. சேட்டைகள் செய்வாய்.. உனக்கு ஆயுள் 20 ஆண்டு.

குரங்கு 10 ஆண்டே போதும் என்றது.

கடவுள் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு மனிதனைப் படைத்தார்..

நீ புத்திசாலியாக இருப்பாய்.. அனைத்து மிருகங்களையும் அடக்கி ஆள்வாய்.. உனக்கு 20 ஆண்டுகள் ஆயுள்..

மனிதன் சொன்னான்.. எனக்கு 20 ஆண்டு போதாது.. கழுதை வேண்டாமென்ற 30 ஆண்டுகளையும், நாய் மறுத்த 15 ஆண்டுகளையும், குரங்கு ஒதுக்கிய 10 ஆண்டுகளையும் எனக்குத் தாருங்கள்..

கடவுள் மனசுக்குள் சிரித்தவாறே அப்படியே ஆகட்டும் என்றார்..

அதனால்தானோ என்னவோ.. மனிதனாக முதல் 20 ஆண்டுகள் வாழ்கிறான்..

பின்னர் குடும்பத்துக்காக பொதி சுமக்கிறான்.. அலுவலகக் காகிதத்தால் பிழைப்பு நடத்துகிறான்..

அப்புறம் ஈட்டிய செல்வங்களைக் காக்க நாய் போல சுற்றி சுற்றி வருகிறான்.. எல்லாரிடமும் வள்'ளென்று விழுகிறான்.. டாக்டர் சாப்பிட அனுமதிக்கிற மிச்ச மீதியை தின்று காலத்தை ஓட்டுகிறான்..

கடைசியாக வாழ இடம் கிடைக்காமல் மகன் வீடு, மகள் வீடு, உறவினர் வீடு, என்று தாவிக்கொண்டே இருக்கிறான்.. பேரன் பேத்திகளுக்கு விளையாட்டு காட்டி சிரிக்க வைக்கிறான்..

இதற்குத் தான் ஆசைப்பட்டாயா மனிதகுமாரா..?

சர்தார்ஜி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் தன் நண்பரைப் பார்க்கச் சென்றார்.நண்பரின் உறவினர்கள் அனைவரும் வெளி வராண்டாவில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.மருத்து

  • தொடங்கியவர்

சுட்டி சுட்டி சுட்டி

அந்த நகைச்சுவை ஏற்கணபே ஒட்டியாச்சு

  • தொடங்கியவர்

நண்பர்: உங்களுக்கு தொலைபேசி பில் எவ்வளவு வரும்?

சர்தார்: ஏன் ஒண்ணுதான் வரும்

நண்பர்: ??!!??

--------------------------------------

ஒரு கை பொம்மை வித்தைக்காரன் ( ventriculoist) பஞ்சாப் மாநில நகரமொன்றில் தன் நிகழ்ச்சியை நடத்தினான்.

நிறைய சர்தார்ஜி ஜோக் சொன்னதால் மக்கள் கோபமடைந்து மேடையை நோக்கி படையெடுத்தனர்..

சுதாரித்துக் கொண்ட வித்தைக் காரன் மன்றாடி மன்னிப்புக் கேட்டான்.

ஆனால் மக்கள், " நீங்க ஏன் முதலாளி மன்னிப்புக் கேட்கறீங்க? ஓவராப் பேசினது அந்த வாண்டுப் பயதான்..அவனை எங்க கிட்டே விட்டுட்டு நீங்க ஓரமா உக்காருங்க.. நாங்க அவனுக்கு பாடம் கற்பிக்கறோம்...!!!"

  • தொடங்கியவர்

நண்பர் : என்க்கு தூக்கத்திலே அர்த்தமில்லாத கனவா வருது..

சர்தார் : தலைக்கு கீழே டிக் ஷ்னரி வச்சுகிட்டு படுங்க

நண்பர் : ????????

_________________

சார்தார்ஜி நண்பரிடம்; 50ரூபாய் பணமிருந்தால் கைமாத்தாக கொடுங்கள்.

நண்பர்;சுத்தமாக என்னிடம் பணமில்லை.

சார்தார்ஜி-அழுக்காக இருந்தாலும் பரவாயில்லை.நான் அட்ஜஸ்ட் செஞ்சிக்கிறேன்.

_________________

சர்தார் கிராமத்தில் குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு விழா.

தலைமை ஏற்ற மந்திரி இவ்வாறு உரையாற்றினார்..

" நம்ம இந்தியாவிலே எங்கேயோ ஒரு பொம்பள 10 வினாடிக்கு 1 பிள்ளை வீதம் பெத்துக்கிட்டு இருக்கா".

வெகுண்டெழுந்த சர்தார் கத்தினார்.."மந்திரி அய்யா, அவளை உடனே கண்டுபிடிச்சு புள்ள பெக்குறதை நிறுத்தச் சொல்லுங்க:)

Edited by வானவில்

  • தொடங்கியவர்

இந்திய-பாக் எல்லையில் சர்தார் குடியிருந்தார்.. ஒரு நாள் அவரது கோழி எல்லை தாண்டி ஒரு பாகிஸ்தானியின் கொல்லையில் முட்டை இட்டுவிட்டது.. முட்டையை எடுக்கப்போன சர்தாருக்கும் பாகிஸ்தானிக்கும் வாக்குவாதம்..முட்டை யாருக்கு சொந்தம் என்று..

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.. இருவரும் பலப்பரீட்சை நடத்தி வெற்றி பெறுபவர் அந்த முட்டையை எடுத்துக்கொள்வது என்று..

பாகிஸ்தானி சொன்னான்..முதலில் நீ என்னைத் தாக்கு..பின்னர் நான் உன்னைத் தாக்குகிறேன்..யாருக்கு அடி பலமோ அவரே தோற்றவர்...!

சர்தாரும் ஒப்புக்கொண்டு, பத்து அடி பின்னால் போய், பாய்ந்து வந்து பாகிஸ்தானியின் கால்களுக்கிடையில் உதைத்தார்..பறந்து மல்லாக்க விழுந்த பாகிஸ்தானி 10 நிமிடம் கழித்து மெல்ல எழுந்து பார்த்தான்..

இந்திய எல்லைக்குள் நின்றிருந்த சர்தார் சொன்னார்..அரே..பாகல்..

முட்டையை நீயே வச்சுக்கோ...!

--------------------------

சர்தாரிடம் பணம் இல்லை.. ஒரு பள்ளீச் சிறுவனைக் கடத்தினார்.. ஒரு கடிதம் எழுதினார்.. " உன் மகனை நான் கடத்தி விட்டேன்..இ லட்சம் கொடுத்தால் உன் மகன் பிழைப்பான். ஒழுங்காக பணத்தை ஒரு பையில் போட்டு என் வீட்டுக் கொல்லையில் வீசிவிடு.. என் வீட்டை உன் மகன் அடையாளம் காட்டுவான்" என்று எழுதி அதை அந்தச் சிறுவனிடமே கொடுத்து அனுப்பினார்..

மறுநாள் அவர் வீட்டுக் கொல்லையில் ஒரு பை கிடந்தது..அதில் பணமும், ஒரு கடித்மும் இருந்தது.

கடிதத்தில், " ஒரு சர்தராய் இருக்கும் உனக்கு, உன் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் மகனைக் கடத்தி பணம் பிடுங்க எப்படி மனம் வந்தது?" என்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது..!

  • தொடங்கியவர்

ஒரு சர்தார்ஜியும் அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் பாகிஸ்தானில் இர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றார்கள். பாக். சிப்பாய் தடுத்து நிறுத்தி பைக்கை சோதனையிட்டான். இரு பெட்டிகளும் பூட்டப்பட்டிருந்தன. என்ன என்று கேட்டதற்கு, சர்தார் " மணல்" என்றார்..

கீழே கொட்டி பார்த்தபோது மணல்தான் இருந்தது. இருந்தாலும் அம்மணலை சோதனைச் சாலைக்கு அனுப்பி சோதித்துப் பார்த்தார்கள். முடிவு "மணல்". சர்தார் அனுப்பப்பட்டார்.

மறுநாளும் சர்தார் பைக்கில் மனைவியோடும் மணலோடும் வந்தார். மீண்டும் அதே சோதனை முறை. பலன்..பூஜ்யம்.

இது போல் 3 ஆண்டுகள் நடந்தது. என்றாலும் பாக். சிப்பாயால் எவ்விதக் குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அந்த சிப்பாயும் ஓய்வு பெற்று விட்டான். ஒரு நாள் சர்தாரை வழியில் பார்துக் கேட்டான்," நீ என்னவோ கடத்தறேன்னு தெரியுது.. ஆனா என்னாலே கண்டு பிடிக்கவே முடியல்லே.. இப்போ சொல்லு..என்னத்தை கடத்தினே.?".

சர்தார் சொன்னார்.."பைக்"..!

"பொண்ணு"ன்னு நெனச்சவங்க எல்லாம் அசடு வழியறத தொடச்சிக்கோங்க...!!!!!!!

சர்தார் தூங்கிக்கொண்டு இருக்கும் போது ஒரு கொசு பிடிவாதமாக காதில் பாட்டு பாடி இம்சித்ததுஒரு நாள் எப்படியோ அதே கொசுவை சர்தார் பிடித்து விட்டார்.. கொசு தன் கதை முடிந்ததாக நினைக்க, சர்தாரோ அதற்கு விருந்து வைத்து சிறப்பித்தார்பின்னர் அதற்கு ஒரு மென்மையான படுக்கையை எற்பாடு செய்தார்..உபசரிப்பில் மயங்கிய கொசு, தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அதன் காதருகில் சென்ற சர்தார் பாடினார்.. ங் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ"" அதிர்ச்சி அடைந்த கொசு அதே இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது..!

சர்தார்ஜி, ஒருத்தியைப் பார்த்து 'ஐ லவ் யூ' சொன்னார்.

உடனே கீழேயும் விழுந்தார்.

மீண்டும் 'ஐ லவ் யூ' சொல்லக் கீழே விழுந்தார்.

பெண்: ஏன் இப்படிச் செய்யிறீங்க?

சர்தார்ஜி: ஐ'ம் falling in love :P

  • தொடங்கியவர்

சர்தாருக்கு வாயுத்தொல்லை இருந்தது..

வைத்தியரை அணுகி தம் துன்பத்தைக் கூறினார்..

டாக்டர்.. எனக்கு அடிக்கடி வாயு பிரிகிறது,.. ஆனால் சத்தமோ.., நாற்றமோ இல்லை.. ஏன் இப்படி..?

டாக்டர் ஒரு மருந்து தந்து ஒரு மாதம் கழித்து வரச்சொன்னார்..

ஒரு மாதம் கழித்து வந்த சர்தார்..,

டாக்டர்.. இப்போது சத்தமாக வாயு பிரிகிறது..ஆனால் வாடை இல்லையே..?

பொறு.. இப்போதானே காதைச் சரி பண்ணியிருக்கேன்..அடுத்தது மூக்கைச் சரி பண்றேன்..!!!

பஞ்சாப் எல்லையில் உள்ள சீக்கிய குருத்வாரா ( கோயில்)ஒன்று அடிக்கடி பாகிசஸ்தான் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது..ஒரு முறை பாக். ராணுவம் அதை சுற்றி வளைத்தது. இத்தோடு நாம் காலி என்று எல்லா சீக்கியர்களும் முடிவு கட்டிவிட்டனர். அவர்களின் தலைவனான கஞ்சா சிங் ஒரு கொசு வலையை மேலே போட்டுக்கொண்டு கையில் ஏ.கே. 47 துப்பாக்கியை எடுத்து கண்முடித்தனமாக சுட்ட வண்ணம் பாக். ராணுவத்தை நோக்கி ஊளையிட்டுக் கொண்டு ஓடினார்..

குழப்பமும், திகிலும் கொண்ட பாக். ராணுவம் பின்வாங்கி ஓடிவிட்டது.

கஞ்சா வின் வீரத்தைப் பாராட்டிய மற்ற சர்தார்கள், கொசு வலை ரகசியத்தைக் கேட்டனர்.

கஞ்சா சொன்னார்.." அவ்ளோண்டு கொசுவே நுழைய முடியாத வலைக்குள்ளே அவனுங்க குண்டு எப்படி நுழையும்..?

20 வருடங்கள் ஓடின..

மீண்டும் அதே சூழ்நிலை..இப்போது கஞ்சா சிங்கின் மகன் அஞ்சா சிங் தலைவர்..ஆனால் அஞ்சாவோ கொசுவலை கூட இல்லாமல் புகையும் துப்பாக்கியுடன் புயலென பாக். படையை நோக்கி முன்னேறினார்..பாக். பின்வாங்கி விட்டதென்றாலும், அஞ்சா குண்டடி பட்டு விழுந்து விட்டார்..

மருத்துவ மனையில் ஒரு சர்தார்ஜி கேட்டார்.. உங்கப்பன் கொசுவலையப் போத்திக்கிட்டு போனதுலே கூட ஒரு லாஜிக் இருந்துச்சு.. நீ ஏண்டா தம்பி ஒன்னுமில்லாமப் போனே..?

அப்படி இல்லே சித்தப்பு..நானும் கொசுவத்தி கொளுத்திக்கிட்டு தான் போனேன்...!!!

:lol: :P

  • தொடங்கியவர்

ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கை கழுவப் போனவர் வாஷ் பேசினை கழுவிக்கொண்டிருந்தார்..

பதறிப் போன முதலாளி, அட கடவுளே..! நீ ஏன் சிங்கு இதெல்லாம் கழுவுறே..என்றார்.

சர்தாரோ மேலே இருந்த போர்டை காட்டினார்..

"WASH BASIN" என்று அதில் இருந்தது

ஒரு சிறிய குன்றின் மேல் இருந்த கோயிலுக்கு சர்தார் காரில் சென்றார்..அடிவாரத்தில் இருந்த கடைக்காரன், அவரை ரிவர்ஸிலேயே மலை மீது காரை ஓட்டிக்கொண்டு போகச் சொன்னான். காரணம் கேட்டதற்கு மலை உச்சியில் காரைத் திருப்ப இடம் இல்லையென்றான்.

அப்படியே செய்த சர்தார், சாமி கும்பிட்டு திரும்பும்போதும் ரிவர்ஸ் கியரிலேயே இறங்கினார்..

கடைக்காரன் காரணம் கேட்டதற்கு, மேலே காரைத் திருப்ப போதிய இடம் இருந்தது என்றார்...!!!!

ஒரு பாலைவனத்தின் வழியாக ஒரு அமெரிக்கன், சீனன், சர்தார் மூவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்..திடீரென்று கார் பழுதுபட்டு நின்று விட்டது. மூவரும் இறங்கி நடக்க தீர்மானித்தனர்.

அமெரி ; நான் தண்ணீர் டாங்கியை எடுத்துக் கொள்கிறேன்..

தாகத்துக்கு உதவியாக இருக்கும்..

சீனன் ; நான் இருக்கையை எடுத்துக் கொள்கிறேன்..கால்

வலித்தால் அமர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்..

சர்தார் ; நான் கார் கதவை எடுத்துக் கொள்கிறேன்..

வேர்த்தால் சன்னலை இறக்கிக் கொள்ள சவுகர்யமாக இருக்கும்...!!!

  • தொடங்கியவர்

கணவனும் மனைவியும்..

அன்பே.. உண்மையில் நீங்கள் என் மீது உயிரை வைத்திருக்கிறீர்களா..?

ஆமாம்.. அதில் சந்தேகம் வேறா..?

நான் இறந்தால் அழுவீர்களா..?

கண்டிப்பாக...

எங்கே.. அழுது காட்டுங்கள்..

லேடீஸ் ஃபர்ஸ்ட்...!

  • தொடங்கியவர்

அமெரிக்காவைச் சுற்றிப்பார்க்க ஒரு ரஷ்யர் வந்தார். ஒரு வழிகாட்டி அமெரிக்கப் பெருமைகளை சொல்லி ரஷ்யரை வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தான்.. கடைசியாக வெள்ளை மாளிகைக்கு வந்தார்கள்..

வழிகாட்டி ; இது எங்கள் அதிபரின் இருப்பிடம். இங்கு நின்று "புஷ் ஒரு கழுதை..!" என்று நாங்கள் சொல்லலாம்.. அந்த அளவுக்கு எங்கள் சனநாயகம் உயர்வானது.. உங்களால் உங்கள் நாட்டில் உங்கள் அதிபர் மாளிகையில் இவ்வாறு சொல்ல முடியுமா..?

ரஷ்யர் ; ஓ..சொல்லலாமே.. கிரெம்ளின் மாளிகை முன்பு நின்று "அமெரிக்க அதிபர் புஷ் ஒரு கழுதை" என்று சொன்னால் எல்லோரும் வரவேற்கவே செய்வார்கள்...!

  • தொடங்கியவர்

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம் பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை சொல்லிட்டு போவோம்...!

  • தொடங்கியவர்

ஏன் தாத்தா.. காந்தி நல்லவர் தானே..?

ஆமாம்.

நேர்மையாளர் தானே..?

ஆமாம்.

திருட்டு, ஏமாற்று இதெல்லாம் செய்ய மாட்டார் தானே..?

ஆமாண்டா. ஏன் இதெல்லாம் கேட்கிறே..?

அப்புறம் ஏன் அவர் பிறந்த நாளுக்கு வங்கிகளை மூடி வைக்கிறாங்க..?

  • தொடங்கியவர்

மின் தூக்கியில் (லிஃப்ட்) கணவனும் மனைவியும்.. கணவன் ஒரு அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென்று அழகி அவனை அறைந்தாள். கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?" என, " எதுக்கு என் இடுப்பைக் கிள்ளினே..?" என்றாள். கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் வேறு.

மின் தூக்கி நின்று எல்லோரும் வெளியேற, மனைவி சொன்னாள்..

"அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க.. நாந்தான் அவளைக் கிள்ளினேன்..!"

  • தொடங்கியவர்

பெண்கள் புள்ளிவிபரப் புலிகள்.. கணித மேதைகள்..

தன் வயதில் 7 அல்லது 8 ஆண்டுகளைக் குறைப்பார்கள்..

தோழியின் வயதில் 5 அல்லது 6 வருடத்தை கூட்டி நிவர்த்தி செய்வார்கள்.

தன் புதுப் புடவைக்கு விலையை இரட்டிப்பாக்குவார்கள்..

அடுத்தவளின் புடவையின் மதிப்பை பாதியாக்குவார்கள்..

கணவரின் ஏவலர் வேலையை "இவரில்லாமல் எதுவும் நடக்காது" என்ற வகையில் உயர்த்துவார்கள்..

எதிரியின் கணவர் முதலாளியாக இருந்தால் கூட " என் கணவர் கதவைத் திறந்து அனுமதித்தால்தான் அவர் உள்ளேயே நுழைய முடியும்" என்னும் வகையில் தாழ்த்துவார்கள்.

என்றாலும் நல்லவர்கள்.. (இன்னும் இருக்கு..). :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா பேரனைப் இப்ப எங்கையென அப்பு போறாய்?

எனக்கு காச்சல்காயுது. அதுதான் உந்த ஆசுப்பத்திரியில மருந்து வாங்கப் போறனென.

சரி கவனமாப் போட்டு வா. ( சிறிது நேரத்தின் பின் பேரன் வாறார்)

தாத்தா: என்னன மருந்து தந்தவையே?

பேரன்: ஓமனை அப்பு. காச்சல் குளிசையும் தண்ணி மருந்தும் தந்தவை. பேந்து சிறுநீர் சோதிக்க வேனுமென்டு சொன்னவை. நாளைக்கு வாறன் என்டுட்டு வந்தனான்.

தாத்தா: உத அதில பேஞ்சு குடுக்கிறதுக்கு இஞ்சயென்ன அலுமாரிக்க கிடக்கென்டுட்டே வந்தனி.

:lol::lol: :P :P

  • தொடங்கியவர்

தாத்தா பேரனைப் இப்ப எங்கையென அப்பு போறாய்?

எனக்கு காச்சல்காயுது. அதுதான் உந்த ஆசுப்பத்திரியில மருந்து வாங்கப் போறனென.

சரி கவனமாப் போட்டு வா. ( சிறிது நேரத்தின் பின் பேரன் வாறார்)

தாத்தா: என்னன மருந்து தந்தவையே?

பேரன்: ஓமனை அப்பு. காச்சல் குளிசையும் தண்ணி மருந்தும் தந்தவை. பேந்து சிறுநீர் சோதிக்க வேனுமென்டு சொன்னவை. நாளைக்கு வாறன் என்டுட்டு வந்தனான்.

தாத்தா: உத அதில பேஞ்சு குடுக்கிறதுக்கு இஞ்சயென்ன அலுமாரிக்க கிடக்கென்டுட்டே வந்தனி.

:lol::lol: :P தாத்தா அந்த தாத்தா நீங்களா?

  • தொடங்கியவர்

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?

பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!

பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?

வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே...

  • தொடங்கியவர்

நல்லவேளைப்பா.. மைக்ரோசாஃப்ட் கார் விற்பனை செய்யலே..

ஒருவேளை கார் தயார் பண்ணியிருந்தா, அது..

1.ஒவ்வொரு தடவையும் ஸ்பேர் பார்ட்ஸ் மாத்தி மாத்தி தயார் பண்ணி அதுக்கு தகுந்த காரை அப்பப்போ வாங்க சொல்லுவாங்க.

2.நல்ல மேட்டுல ஏறிக்கிட்டு இருக்கும்போது திடீர்ன்னு ரிப்பேர் ஆயி நின்னுரும். போன் பண்ணி சொன்னா, மறுபடி ஸ்டார்ட் (Re-start)பண்ணுங்கம்பாங்க. ஏன்னு கேட்டா காரணம் அவங்களுக்கே தெரியாது.

4.அப்படியும் சரியா வரலியேன்னா, எஞ்சினைக் கழட்டிட்டு மாட்டுங்க (Re-install) சரியாயிடும்ன்னு சொல்வாங்க.

5.திடீர்ன்னு ஒரு மாடல் கண்டுபிடிப்பாங்க. பெட்ரோல் வேண்டாம்.. இருமடங்கு வேகம்..ஒட்டும் களைப்பு பாதியா குறையும்ன்னு சொல்லிட்டு வெறும் 5 % சாலைகள்ல தான் ஓட்ட முடியும்பாங்க.

6.மக்களும் மைக்ரோசாஃப்ட்ன்கிற பேரைப் பார்த்து மயங்கிடுவாங்க. இதைவிட நல்ல கார் மார்க்கெட்ல கிடைக்கும்ங்கிறதையே மறந்துடுவாங்க.

7.இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா அவசரமா சடன் பிரேக் போட நெனைச்சிங்கன்னா, "உண்மையிலேயே பிரேக் போட விரும்புகிறீர்களா..?" ன்னு புத்திசாலித்தனமா ஒரு கேள்வி கேட்கும்..!

  • தொடங்கியவர்

முதல் முதல்ல பசு மாட்டு மடியப் பிடிச்சு அமுக்கினா பால் கிடைக்கும்ன்னு யோசிச்சவர் யாரா இருக்கும்..?

அதைப் பார்த்துட்டு கழுதைகிட்ட முயற்சி செஞ்சவர் கதி என்னவா இருக்கும்..?

அரளிக் கொட்டை விஷம்ன்னு தெரிய வச்ச தியாகிக்கு தாமிரப் பத்திரம் கொடுத்தோமா..?

என்னென்னவோ கண்டுபிடிக்கிற ஜப்பான் காரன் ஓட்டைப் படகு ஏன் இன்னும் கண்டுபிடிக்கல..?

50/50 விதி சொல்லுது ஒரு செயலைப் புதுசா செய்யும்போது 50% தப்பாகவோ 50% சரியாகவோ வாய்ப்பு இருக்குன்னு.ஆனா நமக்கு மட்டும் 90% தப்பாவே போகுதே எப்படி..?

பேட்டரி லைட்.. அவசரத்துல உபயோகப்படுவதற்கா இல்லே வீணாப்போன பேட்டரி கட்டைகளை வச்சுக்கறதுக்கா..?

தப்பு செஞ்சா அபராதம் கட்டணும்.. உண்மையா நடந்தீங்கன்னா வரி கட்டணும்.. எப்படி வசதி..?

சினிமா தியேட்டர் விதி ; முனை சீட்டுக் காரங்க எல்லாம் முன்னாலேயே வந்து உக்காந்துடுவாங்க.. ஆனா சுவத்தை ஒட்டி சீட்டுக்காரங்க தாமதமாவே வருவாங்க.. அதும் ஒவ்வொருத்தரா..!

நம்ம மாமா பொண்ணு அத்தை பொண்ணெல்லாம் அட்டு ஃபிகரா இருக்கும்.. ஆனா நண்பனோட முறைப்பொண்ணுங்க எல்லாம் நச்ச்' ஃபிகரா இருக்கும்.. நொந்துருக்கீங்களா..?

-----------------------------

நீங்களோ நானோ ஒரு ஆரஞ்சுப் பழத்தை இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்ன்னா சிரிச்சுக்கிட்டே கொடுப்போம்.. அவரும் சிரிச்சுக்கிட்டே வாங்கிப்பாரு.. ஆனா ஒரு வழக்கறிஞர் கொடுத்தா எப்படிக் கொடுப்பார்ன்னு ஒரு சின்னக் கற்பனை...

நாளது ##ம் வருடம் ##ம் நாள் சென்னை வியாசர்பாடி, கொள்ளைக்காரன் பேட்டை, அரிவாள் தூக்கித் தெரு, 13ம் எண் விலாசத்தில் வசிக்கும் தமுக்கடிச்சான் மகன் டமாரம் கொட்டி ஆகிய நான், மேற்படி ஊரில் அதே தெருவில் 14 ம் எண் வீட்டில் வாடகை கொடுக்காமல் குடியிருந்து வரும் ஈயடிச்சான் மகன் கொசு கடிச்சான் அவர்களுக்கு, என்னால் கோயம்பேட்டில் அழு'கிய மணவாளன் கடையில் கடனுக்கு வாங்கப்பட்டிருக்கும் சிட்ரஸ் ஆரண்டியம் என்ற உயிரியல் பெயரும் கொடை ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு என்ற சாதாரணப் பெயர்களையும் கொண்ட இப்பழத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாது, இதன் பேரில் எனக்கிருக்கும் உரிமை, சொந்தம், பாத்தியம்,ஆதாயம் ஆகியவற்றையும் உங்கள் அனைவர் முன்னிலையில், என் சுய புத்தியோடும், முழு மனதோடும், எவ்வித நெருக்குதலுக்கு ஆளாகாமலும், மனமுவந்து அளிக்கிறேன்.

இதை இவர், உடனடியாகவோ அல்லது தான் விரும்பும் போதோ, தனக்காகவோ அல்லது பிறர்க்காகவோ பயன்படுத்தலாம். இதைக் கடித்துத் தின்னவோ, உறித்துத் தின்னவோ, கொட்டையுடனோ அல்லது அவற்றை அகற்றிவிட்டோ தின்னவோ எவ்வித தடையுமில்லை.

இந்தப் பழத்தை நம்மில் இரண்டாவது நபரானவர், அப்படியே ஒரே தடவையிலோ அன்றிப் பகுதியாகவோ, சுளையாகவோ, அல்லது சாறு பிழிந்தோ சுவைக்க உரிமை பெற்றவர் ஆகிறார்.இதன் தோலைத் தின்னவோ தூக்கி எறியவோ அல்லது கண்ணில் பீய்ச்சிக்கொண்டு கத்தவோ பாத்தியப் பட்டவராகிறார்.

இதன் விதைகளைப் பயிராக்க இவருக்கு நான் உரிமையளித்திருப்பதால் இதைப் பயிராக்கி அந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழங்களை இவரோ இவரது வம்சாவளியினரோ சர்வ சுதந்திரமாக விற்பனை செய்யவோ இலவசமாக வழங்கவோ, தூக்கி எறியவோ யாதொரு இடர்ப்பாடும் இல்லை.. அந்த ஆரஞ்சு மரத்தை வெட்டி விறகாகவோ அல்லது...

என்னங்க..நில்லுங்க.. ஏன் இப்படி ஓடறீங்க.. சொன்னாக் கேளுங்க நில்லுங்க..!

Edited by வானவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.