Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை// வித்தியா படுகொலை வழக்கின் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

வித்தியா கொலை: செயலிழந்திருந்த சுவிஸ்குமாரின் கைபேசி!!

 

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட தினம் சந்தேக நபரான சுவிஸ்குமார் எங்கிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. அவரது கையடக்கத் தொலைபேசி அன்று செயலிழந்து இருந்துள்ளது.

இவ்வாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருக்கின்றார். இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக அவர் செயற்பட்டார்.

அவரிடம் சுவிஸ்குமார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.

சுவிஸ்குமார் சம்பவ தினத்தன்று எங்கு இருந்தார் என்பதை விசாரணை மூலம் கண்டறிந்தீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்தபோதே குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு கூறினார்.

சந்தேக நபர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்குக் காரணம் மாணவியின் சடலம் மீட்கப்பட்டபோது உடல் காணப்பட்ட கொடூரமான நிலையாகும்.

சடலம் காணப்பட்ட நிலைமை இன, மத ரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தும் என உறுதியான சந்தேகம் ஏற்பட்டதை அடுத்தே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர் என்றும் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியத்தில் கூறியுள்ளார்.

http://newuthayan.com/story/12584.html

  • Replies 184
  • Views 18.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை: Trial at Bar விசாரணை ஒத்திவைப்பு


 
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுவன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான Trial at Bar  தொடர் விசாரணையின் இரண்டாம் சுற்றின் மூன்றாம் நாள் விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன.

இதன் பிரகாரம் இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக Trial at Bar  நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பான Trial at Bar  விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.

இந்த சம்பவத்தின் 42 ஆம் இலக்க சாட்சியாளரான குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியாகம சிசிர திசேரா இன்று சாட்சியமளித்தார்.

இதனையடுத்து இரண்டாம் சுற்று விசாரணைகள் இன்றுடன் நிறைவுக்கு வந்தன.

25 ஆம் இலக்க சாட்சியான குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வாவின் சாட்சியை நெறிப்படுத்துவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுவதால், அதனை எதிர்வரும் 24 ஆம் திகதி பதிவுசெய்வதற்கு நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.

இவரது சாட்சியம் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு Trial at Bar விசாரணைக் குழாம் முன்னிலையில் ஆஜராகுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். ரியாலுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவரை 24 ஆம் திகதி காலை 9 மணிக்கு மன்றில் ஆஜராகுமாறு இன்று மீண்டும் நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பான Trial at Bar  விசாரணைகள் எதிர்வரும் 24 மற்றும் 26 ஆம் திகதிகளிலும், ஓகஸ்ட் மாதம் 2, 3, 4 ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://newsfirst.lk/tamil/2017/07/வித்தியா-படுகொலை-தொடர்ப-6/

  • தொடங்கியவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு எதிரிகளுக்கு பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்பில்லை

court2.jpg
 
புங்குடுதீவு  மாணவி படுகொலை இன, மத முரண்பாட்டை தோற்றுவிற்க மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகம் வந்தமையால் தான் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணை செய்தோம். என குற்ற புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா  நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை  இன்றைய தினம்  வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
 
 
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் சார்பில்  6 சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
1ம் ,2ம் , 3ம் , மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம்   மற்றும் சட்டத்தரணி லியனகே  , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
அதேவேளை இன்றைய தினம் முதல் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன தான் எட்டாவது எதிரி தரப்பிலும் முன்னிலை ஆவதாக மன்றில் தெரிவித்து இன்றைய தினம் எட்டாவது எதிரி தரப்பிலும் மன்றில் முன்னிலையானார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம்  ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்றைய தின சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
 

குறித்த வழக்கின் 42 ஆவது சாட்சியமான குற்ற புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா சாட்சியம் அளிக்கையில் ,

 
மாணவி கொலை தொடர்பான விசாரணைக்காக யாழ்ப்பாணம் விரைந்தேன். 

 

 
நான் தற்போது காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணை பிரிவில் கடமையாற்றுகிறேன். குற்றபுலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றினேன். 2015ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இரவு யாழ்ப்பணத்தில் மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணம் செல்லுமாறு எனக்கு எனது மேலதிகாரி உத்தரவு இட்டார்.
 
அதன் பிரகாரம் ,மறுநாள் (20 ஆம் திகதி) காலை குற்றபுலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்தசில்வா ,  உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவீர , உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ன உள்ளிட்ட குழுவினருடன் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு மதியம் 2. 20 மணியளவில் யாழ்ப்பாணம் வந்தடைந்தேன்.
 
அன்றைய தினம் யாழ்ப்பணத்திற்கு வரும் போது வீதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டு இருந்தன, கற்கள் பொல்லுகள் வீதிகளில் சிதறி காணப்பட்டன.
 
யாழ்ப்பணத்திற்கு வந்த நான் முதலில் யாழ்.பொலிஸ் நிலையம் சென்று அங்கு அப்போதைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலசூரியவை சந்தித்தேன். அப்போது சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி சென்றமை தொடர்பில் வினாவினேன்.
 
அதற்கு அவர் , 18ஆம் திகதி குறித்த சந்தேக நபர் யாழ்ப்பான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார் எனவும் , அதன் பின்னர் அவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்து விட்டு அவரை விடுவித்ததாகவும் கூறினார்.
 
court.jpg
 
 
சுவிஸ் குமார் தப்பி சென்றமை தொடர்பில் வாக்கு மூலங்களை பெற்றோம். 
 
அதனை தொடர்ந்து அன்றைய தினமே (20ஆம் திகதி) யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலசூரிய , உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் , மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களான அசோக , குணபால , அன்பழகன் , தேசபிரிய ஆகியோரிடம் ஒன்பதாவது சந்தேக நபர் தப்பி சென்றமை தொடர்பில் , வாக்கு மூலங்களை பதிவு செய்தோம்.
 
மறுநாள் (21ஆம் திகதி) ஒன்பதாவது சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை போலீசார் அசாதரணமான செயற்பாடு ஊடாக நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.
 
சுவிஸ் குமார் அசாதாரணமான முறையில் மன்றில் முற்படுத்தப்பட்டார். 
 
அதாவது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் முன்னே வர பின்னால் வாகன தொடரணி ஒன்று வந்தது. ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ்குமார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு , நீதிமன்ற வாளகத்தினுள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக்க பண்டார ஆகியோர் சுவிஸ் குமாரை அழைத்து சென்று நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள்.
 
சாதரணமாக சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்தால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு , பொறுப்பதிகாரியே நீதிமன்றில் முற்படுத்துவார்.
 
அன்றைய தினமே (21ஆம் திகதி) நாம் மாணவியின் தாயாரிடம் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டோம்.  சம்பவம் தொடர்பில் அதுவரை நடைபெற்ற விசாரணைகளின் போக்கு தொடர்பிலும் , விசாரணைகளை மேற்கொண்ட போலீசாரிடம் வாக்கு மூலங்களை பெறவும் , அது தொடர்பிலான ஆவணங்களை பெறவும் , பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு அறிவுறுத்தினேன்.
 
குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதியை ஒன்றரை மணித்தியாலம் பார்வையிட்டேன். 
 
மறுநாள் (22ஆம் திகதி) ஊர்காவற்துறை சென்று குற்றசம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று அவதான குறிப்புக்களை மேற்கொண்டேன். சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அந்த இடத்தினை சூழ பார்வையிட்டேன்.
 
பின்னர் 26ஆம் திகதி வவுனியா சிறைச்சாலைக்கு சென்று அங்கே தடுத்து வைக்கப்பட்டு இருந்த சந்தேகநபர்கள் ஒன்பது பேரிடமும் தனித்தனியே வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டோம். அதன் பின்னர் சுவிஸ் குமார் தப்பி சென்றமை தொடர்பில் சட்டபீடாதிபதி வீ.ரி.தமிழ்மாறன் மற்றும் அவருடைய மகள் ஆகியோரிடமும் வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டோம்.
 
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை. 
 
அதன் பின்னர் சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை ஆவண செய்ய வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதியிடம் அனுமதி பெற்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற அனுமதியுடன் முதலில் 30 நாட்கள் குற்றபுலனாய்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் சந்தேக நபர்களை எடுத்து விசாரணைகளை முன்னெடுத்தோம். அந்த 30 நாட்கள் முடிவடைய கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் சந்தேக நபர்களை முற்படுத்தி மேலும் 30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வாங்கினோம்.
 
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்து 60 நாட்கள் விசாரணைகளை மேற்கொண்டதில், அவர்களுக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து அவர்களை மீண்டும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தொடர் விசாரணைக்கு உட்படுத்தினோம்.
 
சந்தேக நபர்களிடம் குற்றபுலனாய்வு திணைக்களம் ஒன்பது மாதங்கள் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தது. என பிரதான விசாரணையின் போது சாட்சியம் அளித்தார்.
 
court4.jpg
 
குறுக்கு விசாரணை.
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன சாட்சியிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்ட போது ,
 
கேள்வி :- சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் சான்று பொருட்கள் எதாவது கைப்பற்றப்பட்டதா ?
பதில் :- ஆம்.  7ஆம் எதிரி வீட்டில் இருந்து 4 கைத்தொலைபேசிகளை கைப்பற்றி இருந்தோம்.
 
கேள்வி :-  வேறு எதுவும் சான்று பொருளாக கைப்பற்றப்படவில்லையா ?
பதில் :- கைப்பற்றப்பட்டது. மடிக்கணணி ஒன்றும் 8 கையடக்க தொலைபேசிகளும்.
 
கேள்வி :- அவை யாருடையது ?
பதில் :- அவற்றை பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவே கைப்பற்றியது. அது தொடர்பிலான முழு விபரமும் நிஷாந்த சில்வாவிடம் உள்ளது.
 
கேள்வி :- கைப்பற்றப்பட்ட மடிக்கணணி மற்றும் கையடக்க தொலைபேசிகளை தொழிநுட்ப விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா ?
பதில் :- ஆம். அதனை ஆய்வுக்கு உட்படுத்த மொரட்டுவ பல்கலைகழகத்திற்கும் , சேட் எனும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கபப்ட்டது. அதில் உள்ள ஒலி மற்றும் ஒளி பதிவுகளை பரிசோதிக்க. அது ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற அனுமதியுடனேயே அனுப்பி வைக்கப்பட்டது.
 
கேள்வி :- கைத்தொலைபேசி மூலம் எதிரிகள் சம்பவ தினத்தன்று எங்கு நின்றார்கள் என்பது தொடர்பில் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா ?
பதில் :- தகவல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அது தொடர்பான பூரண தகவல்கள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிடம் உள்ளது.
 
கேள்வி :- சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க காரணம் ?
பதில் :- சடலம் கிடந்த நிலையினை பார்த்த போது , மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது போன்று காணப்பட்டது. அதனால் இது இன , மத முரண்பாட்டை தோற்றுவிற்கும் முகமாக புரியப்பட்ட குற்ற சம்பவமாக இருக்கலாம் என மிக உறுதியான சந்தேகம் எழுந்தமையால் , பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்தோம்.
 
கேள்வி :- மாணவிக்கும் , சந்தேக நபர்களுக்கும் இடையில் இன , மத வேறுபாடுகள் காணப்பட்டனவா ?
பதில் :- இல்லை. சடலம் கிடந்த நிலையினை பார்த்த போது எமக்கு இன, மத முரண்பாட்டை தோற்றுவிற்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட குற்ற செயலாக தோன்றியது.
 
கேள்வி :- சாதாரண சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க தடைகள் எதுவும் ஏற்பட்டதா ?
பதில் :- தடைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தமையினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டோம்.
 
கேள்வி :- உங்கள் விசாரணைகளில் சந்தேக நபர்கள் இலஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தனவா ?
பதில் :- விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இப்ரான் எனும் சந்தேக நபரிடம் பெறபட்ட வாக்கு மூலத்தில் ஒன்பதாது சந்தேக நபரான மகாலிங்கம் சசிக்குமார் என்பவர், தானும்,  தனது சகோதரான நான்காவது சந்தேக நபரான மகாலிங்கம் சசிதரனும் அரச தரப்பு சாட்சியாக மாற விரும்புவதாகவும் அதற்கு பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா உதவி புரிந்தால் அவருக்கு 20 மில்லியன் ரூபாய் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தன்னிடம் சுவிஸ் குமார் கூறியதாக கூறி இருந்தார்.
 
கேள்வி :- அது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டதா ?
பதில் :- இல்லை.
 
கேள்வி :- சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை நீர் வாசித்தீரா ?
பதில் :- இல்லை. நான் மேற்பார்வை அலுவலகராக மாத்திரமே. இந்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த அதே கால பகுதியில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை , ஊடகவியலாளர் பிரகீத் கடத்தப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் உபாலி தென்ன கோன் தாக்கப்பட்டமை தொடர்பில் , அமைச்சர் ரவிகருணா நாயக்கவின் ஊர்வலம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் , அவன்கார்ட் விசாரணை என பல விசாரணைகளின் மேற்பார்வை அதிகாரியாக செயற்பட்டேன். அதனால் இந்த சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை நான் வாசிக்கவில்லை. இந்த விசாரணைகளை எனது ஆலோசனை அறிவுத்தல்களின் பிரகாரம் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவே மேற்கொண்டார். என சாட்சியம் அளித்தார்.
 
அதனை தொடர்ந்து , 1ஆம் , 2ஆம் , 3ஆம் , 6ஆம் ,மற்றும் 8ஆம்  எதிரிகள் தரப்பில் நான் சொல்கிறேன் ,  இலங்கையில் மிக பயங்கரமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள கூறிவிட்டு நீர் இந்த வழக்கில் இருந்து ஒதுங்கி கொண்டு விட்டீர் என, எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன கூறினார்.
 
அதற்கு சாட்சியமளித்தவர், இதனை நான் முற்றாக மறுக்கிறேன். நான் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்தோம் என ஏற்கனவே சாட்சியத்தில் குறிப்பிட்டு விட்டேன். என தெரிவித்தார்.
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணையின் போது , தலைமை விசாரணை அதிகாரி சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை வாசிக்க வில்லை எனில் நீர் உமது கடமையை சரியாக செய்யவில்லை. என எதிரிகள் தரப்பில் கூறுகிறேன் என தெரிவித்தார்.
 
அதற்கு சாட்சியம் அளித்தவர் , இதனை நான் முற்றாக மறுக்கிறேன். எனக்கு எனது கடமை குறித்து தெரியும். அது தொடர்பில் தெளிவாக அறிந்து வைத்து இருக்கிறேன். எந்த தடை வந்தாலும் நான் எனது கடமையை சரியாக செய்வேன். என பதிலளித்தார்.
 
அதனை தொடர்ந்து , குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டு , சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டது.
 
பிரதான விசாரணை அதிகாரியின் சாட்சியம் திங்கட்கிழமை.
 
அதேவேளை இன்றைய தினம் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்ட 35ஆவது சாட்சியமான குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா குறித்த வழக்கின் பிரதான விசாரணை அதிகாரி என்பதனால் அவருடைய சாட்சியத்திற்கு நீண்ட நேரம் எடுக்கும் எனும் காரணத்தால் அவரை எதிர்வரும் திங்கட்கிழமை சாட்சி அளிக்க அனுமதிக்குமாறும்
 
அத்துடன் நேற்றைய புதன்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழை திங்கட்கிழமை மதியம் வருமாறு மன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டது. அதனை அன்றைய தினம்(திங்கட்கிழமை)  காலை நீதிவானை வருமாறு கோருமாறும் , 24ஆவது சாட்சியத்திற்கும் அழைப்பாணை விடுக்குமாறும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை மன்று ஏற்றுக்கொண்டது.
 
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கபப்ட்டது. அதுவரையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.

http://globaltamilnews.net/archives/33550

  • தொடங்கியவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. நீதிவான் – குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்:-:-

 
court2.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
 
இன்றைய விசாரணையின் போது குறித்த வழக்கினை நீதிவான் நீதிமன்றில் பல மாதங்களாக விசாரணை செய்த ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் காலை சாட்சியம் அளிக்க உள்ளார்.
 
அதேவேளை இன்றைய தினம் குறித்த வழக்கின் விசாரணை அதிகாரியான குற்ற புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவும் சாட்சியம் அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/archives/33917

  • தொடங்கியவர்

இரத்த மாதிரி ஒத்துப்போகவில்லை – ஊர்காவற்றுறை நீதவான் சாட்சியம்!

 
இரத்த மாதிரி ஒத்துப்போகவில்லை – ஊர்காவற்றுறை நீதவான் சாட்சியம்!
 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட காற்சட்டையில் இருந்த குருதிக் கறை, உயிரிழந்த மாணவியின் குருதி மாதிரியுடன் ஒத்துப் போகவில்லை.

இவ்வாறு ஊர்காவற்றுறை நீதிவான் தீர்ப்பாயத்தின் முன் சாட்சியம் வழங்கினார்.

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சியப் பதிவு தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. அதில் மரபணு அறிக்கை மற்றும் பகுப்பாய்வு அறிக்கை தொடர்பாகச் சாட்சியம் வழங்கும்போதே ஊர்காவற்றுறை நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

http://uthayandaily.com/story/13585.html

  • தொடங்கியவர்

மாணவி கொலை வழக்கு – சிறப்புப் பாதுகாப்புடன் சந்தேகநபர்கள்!

 
மாணவி கொலை வழக்கு – சிறப்புப் பாதுகாப்புடன் சந்தேகநபர்கள்!
 

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு இன்று சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதுவரையில் சந்தேகநபர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்களே தீர்ப்பாயத்தின் முற்படுத்தி வந்தனர்.

இன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக சிறைச்சாலை சிறப்புப் படையினரின் பாதுகாப்புடன் சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டனர்.

http://uthayandaily.com/story/13597.html

  • தொடங்கியவர்

அசாதாரண நிலையால் சாட்சியப் பதிவு நேரத்துடன் முடிந்தது

 
 
அசாதாரண நிலையால் சாட்சியப் பதிவு நேரத்துடன் முடிந்தது
 

தற்போது நிலவும் அசாதாரண நிலமையைக் கருத்தில் கொண்டு இன்று 4.45 மணியுடன் சாட்சியப் பதிவுகளை நிறுத்தியது தீர்ப்பாயம்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியங்கள் யாழ். மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த வழக்கை முழுமையாக விசாரணை மேற்கொண்ட புலனாய்வுப் பொலிஸ் பரிசோதகர் சாந்த சில்வாவிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. அவரின் முதன்மைச் சாட்சியப் பதிவுகளை பி.ப. 4.45 மணியுடன் தீர்ப்பாயம் நிறுத்தியது. தற்போதைய சூழ்நிலையைக் கருந்தில் கொண்டே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவிருந்த அமர்வும் நிறுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் அன்று நடைபெறவுள்ளதை அடுத்தே அமர்வு நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னர் திட்டமிட்டபடி எதிர்வரும் 2ஆம் திகதி தீர்ப்பாயம் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழமையாக இரவு 8 மணிவரையில் சாட்சியப் பதிவுகள் இடம்பெறும். தீர்ப்பாயத்தில் உள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் இடைமறிக்கப்பட்டு இனந்தெரியாதவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவர் காயமடைந்தார்.

இந்தப் பின்னணியில் இன்று சாட்சியப் பதிவுகள் பி.ப. 4.45 மணியுடன் இடைநிறுத்தட்டது.

http://uthayandaily.com/story/13648.html

  • தொடங்கியவர்

புங்குடுதீவு மாணவியின் இரத்தமாதிரி எதிரிகளிடம் இருந்து மீட்கப்பட்ட உடையில் இருந்த இரத்த மாதிரியுடன் ஒத்துபோகவில்லை:-

 

 

புங்குடுதீவு மாணவியின் இரத்த மாதிரியும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆடையில் காணப்பட்ட இரத்த மாதிரியும் ஒத்துப்போகவில்லை என அரச பகுப்பாய்வு திணைக்கள சிரேஸ்ட அதிகாரி வனிதா ஜெயவர்த்தன பண்டரநாயக்க என நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முன்பாக சாட்சியமளித்துள்ளார்.

 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை  இன்றைய தினம் திங்கட்கிழமை  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
 
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார். 
 
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த்,  லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி  மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் சார்பில்  6 சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம்  எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம்   மற்றும் சட்டத்தரணி லியகே  , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
 
ஊர்காவற்துறை நீதவானின் சாட்சியம். 
 
அதனை தொடர்ந்து , வழக்கின் 49ஆவது சாட்சியான   ஊர்காவற்துறை நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் ,   நீதவான் நீதிமன்ற நீதவனுமான ஏ.எம்.எம்.றியாழ் சாட்சியமளிக்கையில் ,
 
ஊர்காவற்துறை  நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் ,   நீதவான் நீதிமன்ற நீதவனுமாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொறுப்பெற்று உள்ளேன்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பில் சாட்சியங்கள் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளேன். புங்குடுதீவை சேர்ந்த நடராஜா புவனேஸ்வரன் என்பவரின் வாக்கு மூலத்தை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி பதிவு செய்தேன்.
 
அரச தரப்பு சாட்சியின் வாக்கு மூலத்தை பதிவு செய்தேன். 
 
இந்த வழக்குடன் தொடர்புடையவர் என 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவரை எனது வாசஸ்தலத்தில் குற்றபுலனாய்வு பிரிவினர் முற்படுத்தினார்கள். அதனை அடுத்து சுரேஷ்கரனை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம்  8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டேன்.
 
பின்னர் 8ஆம் திகதி மீண்டும் சுரேஷ்கரன் நீதிமன்றில் என் முன்னிலையில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் முற்படுத்தப்பட்ட போது அவரது வாக்கு மூலத்தை எனது சமாதன அறையில் வைத்து பதிவு செய்தேன்.
 
அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி இலங்கேஸ்வரன் என்வரின் வாக்கு மூலத்தை பதிவு செய்தேன். பாலசிங்கம் பாலசந்திரன் என்பவரினது வாக்கு மூலத்தை 2016ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி பதிவு செய்தேன்.
 
இந்த வழக்கில் 11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய உறுதியை அடுத்து, அவர் அரச சாட்சியாக மாறுவதற்கு சம்மதித்து இருந்தார்.
 
அது தொடர்பில் அவரது சத்திய கடதாசியுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆவணங்கள் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22திகதி மன்றுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதனை சுரேஷ்காரனுக்கு மன்று உரத்த குரலில் அவருக்கு விளங்கி புரிந்து கொள்ள கூடிய தமிழ் மொழியில் வாசித்து காட்டியது.
 
பின்னர் அதனை விளங்கி கொண்டீரா என மன்று அவரிடம் வினாவியது. அவர் தான் விளங்கி கொண்டேன் என தெரிவித்ததை அடுத்து அவரது கையொப்பத்தை சத்திய கடதாசியில் பெற்றுகொண்டேன். என சாட்சியம் அளித்திருந்தார்.
 
வாக்குமூலத்தின் மூல பிரதி இணைப்பு . 
 
அதேவேளை இன்றைய தினம் நீதிவான் சாட்சியம் அளிக்கும் போது  நீதாய விளக்கத்தின் ( ரயலட் பார் )  மூல வழக்கேட்டில் பாலசிங்கம் பாலசந்திரன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வழங்கிய வாக்கு மூலத்தின் மூல பிரதி இணைக்கப்பட்டு இருக்கவில்லை.
 
அந்நிலையில் குறித்த வாக்கு மூலத்தின் நீதிவானால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட வாக்கு மூலத்தின் பிரதியினை பார்த்தும் , நீதிமன்ற நாட்குறிப்பை பார்த்ததுமே நீதிவான் சாட்சியம் அளித்து இருந்தார்.
 
அதற்கு எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன அதற்கு தமது கடும் எதிர்ப்பினை தெரிவித்தார்.
 
அந்நிலையில் நீதிவானின் சாட்சியம் மன்றினால் முடிவுறுத்தப்பட்டு சாட்சி விடுவிக்கப்பட்டு அடுத்த சாட்சி சாட்சி பதிவுகள் ஆரம்பமானது. அந்நிலையில் பாலசிங்கம் பாலசந்திரன் என்பவரின் வாக்கு மூலத்தின் மூல பிரதி நீதிமன்ற காவலில் இருந்து எடுக்கப்பட்டது.
 
மீண்டும் சாட்சியமளித்தார் நீதவான். 
 
அதனை அடுத்து மன்றில் சாட்சியம் அளித்த சாட்சியம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு மீண்டும் நீதிவான் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து பாலசிங்கம் பாலசந்திரனின் மூல வாக்கு மூலத்தினை பார்த்து மன்றில் சாட்சி அளித்தார். அதனை தொடர்ந்து மூல வாக்கு மூல பிரதி  நீதாய விளக்கத்தின் ( ரயலட் பார் )  மூல வழக்கேடுடன் இணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிவான் சாட்சி மன்றினால் முடிவுறுத்தப்பட்டு சாட்சி விடுவிக்கப்பட்டது.
 
36 சான்று பொருட்கள் 
 
வழக்கின் 52ஆவது சாட்சியான அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி வனிதா ஜெயவர்த்தன பண்டரநாயக்க சாட்சியமளிக்கையில் ,
 
நான் கடந்த 23 வருடங்களாக அங்கு பணியாற்றி வருகிறேன் இரசாயன பகுப்பாய்வு தொடர்பில் பட்டப்படிப்புக்களை முடித்துள்ளேன்.
 
இந்த வழக்கு தொடர்பில , இரத்தம், விந்து மற்றும் உரோமம் ஆகியவை தொடர்பில் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளேன்.
 
எமக்கு மூன்று கட்டங்களாக சான்று பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன, முதலில் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி , 2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் 15ஆம் திகதி ,  2015ஆம் ஆண்டு 10மாதம் 5ஆம் திகதி ஆகிய திகதிகளில் சான்று பொருட்கள் எமக்கு அனுப்பி வைக்கபட்டன.
 
அதில் 36சான்று பொருட்கள் காணப்பட்டன. 6 உரோமங்கள், பாடசாலை சீருடை, சப்பாத்து , தலைப்பட்டி , கழுத்துப்பட்டி , பெண்களின்  உடுப்புகள் , காலுறைகள் , இரத்த மாதிரி, முக்கிய திராவகங்கள்,  2 ரீசேர்ட், 1 சேர்ட், 1 ஜீன்ஸ், 1 அரைக்காற்சட்டை, நகங்கள், பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம்  ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோரின் இரத்த மாதிரிகள் என்பன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 
பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. 
 
அதில் 1 தொடக்கம் 6 வரையிலான உரோமங்களை பகுப்பாய்வு செய்து கண்டறிய முடியவில்லை. ஏனெனில் அவற்றில் வேர்கள் இருக்கவில்லை அதனை நுணுக்குகாட்டி ஊடாக பரிசோதித்தும் அதனை அடையாளம் காணமுடியவில்லை. அது தொடர்பில் குற்றபுலனாய்வு துறையினருக்கு தெரியப்படுத்தினோம்.  திராவகங்களை ஆய்வுக்கு உட்படுத்திய போதிலும் அதனையும் கண்டறிய முடியவில்லை. அது அடையாளம் காண கூடிய நிலைமையில் இருக்கவில்லை.
 
இரத்த மாதிரிகள் ஒத்துப்போகவில்லை. 
 
பாடசாலை சீருடையில் இருந்த இரத்தமும்,  மாணவியின் உடையது என அடையாளம் காண முடிந்தது. அதேவேளை நீள (ஜீன்ஸ்) காற்சட்டையில் இருந்த இரத்த மாதிரி மாணவியின்  இரத்த மாதிரியுடன் ஒத்துபோகவில்லை. என சாட்சியம் அளித்தார்.
 
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டு சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கபட்டது,
 
கலவர பூமியாக இருந்தது யாழ்ப்பாணம். 
 
குறித்த வழக்கின் 35 சாட்சியான  பிரதான விசாரணை அதிகாரி குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சாட்சியமளிக்கையில் ,

 

 
குற்றபுலனாய்வு திணைக்களத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்று கிறேன். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி இரவு ,  யாழில் பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு உள்ளார் அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் குழு ஒன்றுடன் யாழ்ப்பாணம் செல்லுமாறு பணிப்பாளர்  பணித்ததாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேர எனக்கு தொலைபேசி மூலமாக கூறினார்.
 
அதனை அடுத்து நான் மறுநாள் காலை கொழும்பில் இருந்து எனது பொலிஸ் குழுவுடன் புறப்பட்டு மதியம் யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அப்போது யாழ்ப்பணத்தில் கலவரங்கள் நடந்தது போன்று காணப்பட்டது. கலக்கம் அடக்கும் போலீசார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் வீதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.
 
யாழ்.பொலிஸ் நிலையம் வந்த பின்னர் அறிந்து கொண்டேன் , நீதிமன்ற கட்ட தொகுதி , சிறைச்சாலை வாகனம் உள்ளிட்டவை மீதி தாக்குதல்கள் நடத்தபட்டு பொருட் சேதம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக
 
விசாரணைகளை ஆரம்பித்தேன். 
 
எனது விசாரணையின் நோக்கமாக இரு பிரதான விடயங்கள் இருந்தன. ஒன்று மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுதல , மற்றையது பிரதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை.
 
மாணவி கொலை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு தற்சமயம் வருவது பாதுகாப்பில்லை எனவும் அங்கு நிலமை அசாதாரணமாக இருப்பதாகவும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
 
அதனால் அன்றைய தினம் (20 ஆம் திகதி) சந்தேக நபர் யாழ்  பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க தொடங்கினேன். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டேன்.
 
சுவிஸ் குமாரிடம் ஆறு மணிநேர விசாரணை 
 
பின்னர் 21ஆம் திகதி அதிகாலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சந்தேக நபரை வெள்ளவத்தையில் வைத்து வெள்ளவத்தை போலீசார் கைது செய்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினார்கள்.
 
குறித்த சந்தேக நபரிடம் (சுவிஸ்குமார்) அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரையில் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தினை பெற்றுக்கொண்டேன்.
 
பின்னர் அப்போதைய கொடிகாம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சந்தேக நபரை (சுவிஸ் குமாரை) ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தினார்.
 
குற்றம் இடம்பெற்ற இடத்தை ஒன்றரை மணித்தியாலங்கள் அவதானித்தோம்.
 
அன்றைய தினம் (21ஆம் திகதி) நாம் ஊர்காவற்துறைக்கு சென்று கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய், சகோதரர்கள் ஆகியோரிடம் வாக்கு மூலங்களை பெற்றோம்.
 
பின்னர் மறுநாள் (22ஆம் திகதி) ஊர்காவற்துறை சென்று குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதியினை சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவதானித்தோம்.
 
குறித்த இடம் குற்ற செயல்கள் செய்வதற்கு ஏதுவான இடமாக மறைவான இடமாக காணப்பட்டன. சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குள் அந்த இடத்திற்கு நாம் நேரில் சென்றமையால் , அந்த இடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது எனும் எண்ணத்தில் அதனை என்னால் குறிப்பிட முடியும்.
 
ஆரம்பத்தில் இந்த வழக்கினை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தாலும் , நாம் புதிதாகவே விசாரணைகளை முன்னெடுத்தோம். புதிதாகவே வாக்கு மூலங்களையும் பதிவு செய்தோம்.
 
சிறையில் சந்தேக நபர்களின் வாக்கு மூலத்தை பெற்றோம். 
 
பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற அனுமதியுடன் 26ஆம், 27ஆம், மற்றும் 28ஆம் திகதிகளில் வவுனியா சிறைச்சாலைக்கு சென்று அங்கு சந்தேக நபர்கள் ஒன்பது பேரினதும் வாக்கு மூலங்களை பதிவு செய்தோம்.
 
கடற்படையுடன் தொடர்புபடுத்த முயற்சி. 
 
இந்த குற்ற செயல் கலகம் ஒன்றினை ஏற்படுத்தும் எண்ணத்துடன் செய்யபப்ட்டது போன்று எமது விசாரணைகளில் தெரிய வந்தது. குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் கடற்படை முகாம் ஒன்று அமைந்து இருந்ததால், இந்த குற்ற சம்பவத்தை அவர்களுடன் தொடர்பு படுத்தி , கலகத்தை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் , நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவுமே . இந்த குற்ற செயல் புரிந்ததாக சந்தேகம் ஏற்பட்டது.
 
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணை . 
 
அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு சந்தேக நபர்களை எமது தடுப்பு காவலில் எடுத்து விசாரணை செய்ய எதுவாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு வழங்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதியிடம் 2016ஆம் ஆண்டு ஜீன் மாதம் 12ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரையிலான 30 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற்றோம் பின்னர் மீண்டும் மேலும் 30 நாட்களுக்கு அனுமதி பெற்று சந்தேக நபர்களை சிறைச்சாலையில் இருந்து எமது கட்டுப்பாட்டிற்கு எடுத்து எமது தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டோம்.
 
அதன் போது சந்தேக நபர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தில் சிவதேவன் துஷந்த் என்பவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மீண்டும் நாம் புங்குடுதீவுக்கு விசாரணைக்கு வந்தோம். அதன் போது துஷந்தையும் அழைத்து வந்தோம். அவரை எமது வாகனத்தில் மறைத்தே அழைத்து சென்றோம்.
 
மூக்கு கண்ணாடி மீட்பு. 
 
அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று அவரின் வீட்டில் உள்ள சீமெந்து கட்டு ஒன்றின் மேல் இருந்து மனைவியின் உடையது என சந்தேகிக்க கூடிய மூக்கு கண்ணாடி ஒன்றினை மீட்டோம்.
 
அது சோப்பின் பை ஒன்றினுள் சுற்றி அதனை சுற்றி ஒரு பியாம துணி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்டு இருந்தோம்.
 
மூக்கு கண்ணாடியை உறுதிப்படுத்தினோம். 
 
அதனை தொடர்ந்து அந்த மூக்கு கண்ணாடி மாணவியின் உடையதா என்பதனை உறுதிப்படுத்த நாம் மாணவியின் வீட்டுக்கு சென்று தாயிரிடம் விசாரணை செய்தோம்.
 
அப்போது அவர் தனது மகள் சிறுவயதாக இருக்கும் போது சக மாணவி ஒருவர் துடைப்பானால் (டச்சர் ) எறிந்த போது அது மகளின் கண்ணில் பட்டு கண் கரு விழி பாதிக்கபட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டது. அதனால் அவர் மூக்கு கண்ணாடி பாவிக்கின்றவர்.
 
அந்த மூக்கு கண்ணாடி யாழில் கண் வைத்தியரிடம் காட்டி யாழில் உள்ள கடை ஒன்றில் மூக்கு கண்ணாடியினை வாங்கியதாக கூறினார். அப்போது மகளின் மூக்கு கண்ணாடியினை அடையாளம் காட்ட முடியுமா என வினாவி எம்மால் மீட்கப்பட்ட மூக்கு கண்ணாடியினை தாயிடம் காட்டினோம் அவர் அதனை அடையாளம் காட்டினார்.
 
அதனை அடுத்து நாம் அந்த கண்ணாடியினை யாழில் வாங்கிய கடைக்கு சென்று அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டோம் என சாட்சியம் அளித்தார்.
 
சான்று பொருளாக இணைக்க அனுமதி 
 
அதன் போது கண்ணாடி மீட்கப்படும் போது அதனுடன் மீட்கப்பட்ட சோப்பின் பையும் மற்றும் பியாமாவையும் சான்று பொருளாக சேர்த்து கொள்ள பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றின் அனுமதியினை கோரினார்.
 
அதற்கு எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இருந்த போதிலும் மன்றினால் அவை சான்று பொருளாக இணைத்து கொள்ளப்பட்டது..
 
அதனை அடுத்து  குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவை இத்துடன் இடை நிறுத்தி கொள்வதாகவும் , மிகுதி சாட்சி பதிவு எதிர்வரும் 2ஆம் திகதி தொடரும் என மன்று அறிவித்தது.
 
இறுதி சடங்குக்காக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. 
 
அதனை தொடர்ந்து நீதாய விளக்க ( ரயலட் பார் )  நீதிபதிகளில் ஒருவரான மா.இளஞ்செழியன் அவர்களின் உயிரிழந்த மெய் பாதுகாவலரின் இறுதி சடங்கு எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதால் , அன்றைய தினம் நடைபெற உள்ள விசாரணைகள் எதிர்வரும் 2ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கபட்டது.
 
அதன் போது இன்றைய தினம் நிறுத்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவின் சாட்சி பதிவின் மிகுதி அன்றைய தினம் தொடரும் என மன்று அறிவித்தது.
 
அதேவேளை 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க மன்று உத்தரவு இட்டது.

http://globaltamilnews.net/archives/34075

  • தொடங்கியவர்
நாளை கூடுகிறது ட்ரயல் அட் பார்
 

image_1984a7c00b.jpg-எம்.றொசாந்த்

 

யாழ். புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம், நாளை (02) கூடவுள்ளது.

 

நாளை இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைகளில், புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கை விசாரணை செய்து வந்த பிரதான விசாரணை அதிகாரி அலெக்ஸ்ராஜாவின் மீதிச் சாட்சியம் பதிவு செய்யப்படவுள்ளது.

ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகளில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் ஒருவராவார்.

இந்நிலையில், இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த 22ஆம் திகதி நல்லூர் - தெற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில், நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து, கடந்த 26ஆம் திகதி உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திரவின் இறுதிச்சடங்கு இடம்பெற்றமையால், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொலிஸார் இறுத்திச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, ட்ரயல் அட் பார் விசாரணைகள், நாளை வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நாளை-கூடுகிறது-ட்ரயல்-அட்-பார்/71-201642

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை வழக்கு: குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரி சாட்சியம்

 

 

 
 

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர்.

இந்த கொலை வழக்கின் சந்கேநபர்களை விசாரணை செய்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா 35 ஆவது சாட்சியாளராக இன்று தொடர்ந்து சாட்சியமளித்துள்ளார்.

6 அம் இலக்க பிரதிவாதியான துஷாந்தனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவி வித்தியாவின் மூக்குக்கண்ணாடி மீட்கப்பட்டதாக இதன்போது அவர் கூறினார்.

சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலக்கோவையின் முதற்பிரதியின் 145 ஆம் பக்க பிரதிகள் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரையும் தாம் எதேச்சையாக சந்தித்ததாக விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அவருடனான கலந்துரையாடலின் போது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட காணொளிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமா என தான் விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னையும் தனது சகோதரரையும் அரச தரப்பு சாட்சியாளர்களாக மாற்றினால் இரண்டு கோடி ரூபாவை வழங்க முடியும் என 9 ஆம் இலக்க சந்தேகநபரான சுவிஸ்குமார், குறித்த மென்பொருள் பொறியியலாளரிடம் கூறியிருந்ததாகவும் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை வருடங்கள் சந்தேகநபர்களிடம் தாம் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா கூறியுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட அழைப்பு விபரங்களின் அடிப்படையில், 10 பேரிடம் மேலதிகமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களான சந்திரகாசன் மற்றும் துஷாந்தன் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகள் ஊடாக மாப்பிள்ளை எனப்படும் நடராசா குமரேசனுடன் பல தடவைகள் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததால், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரால் எட்டு மாதங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே மாப்பிள்ளை என்பவரிடம் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று குறித்த வீதியால் பயணித்ததாக அறியக்கிடைத்த ஒருவரான பாலசிங்கம் பாலச்சந்திரன் என்பவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவருடைய வீட்டில் வைத்திய வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஞானேஸ்வரன் இளங்கேஸ்வரன் என்பவரிடமும் தனுராம் , தனுஜன் ஆகிய இரண்டு மாணவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவ தினத்திற்கு முதல் நாள் புங்குடுதீவு ஆலடிச்சந்தியில் சுவிஸ்குமார் மற்றும் அவரின் சகோதரன் சசிதரன் , குகநாதன் , கோகிலன் ஆகியோர் வேனில் இருந்ததாக ஞானேஸ்வரன் இளங்கேஸ்வரன் வாக்குமூலம் வழங்கியதாக விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த சந்தேகநபர்கள் மே மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை வௌ்ளவத்தையிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தமைக்கான பதிவு சான்று மாத்திரம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் 13 ஆம் திகதி 2 மணி தொடக்கம் 3 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதியில், கெசினோ சூதாட்ட விடுதி மற்றும் மதுபான விடுதியொன்றில் மது அருந்துவது போன்ற காட்சிகள் CCTV கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் பிரதான விசாரணை அதிகாரி சாட்சியமளித்துள்ளார்.

ஐந்தாம் சந்தேகநபரின் வவுனியாவில் உள்ள வீட்டிலிருந்து கறுப்பு நிறத்திலான ஐபோன் ஒன்றும் , துஷாந்தன் என்ற சந்தேகநபரின் வீட்டிலிருந்து கையடக்க தொலைபேசி ஒன்றும் டெப் ஒன்றும் , மடிக்கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒன்பதாம் இலக்க சந்தேகநபரான சுவிஸ் குமாரின் மனைவி கொழும்பு – 15, முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்த வீட்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சான்றுப்பொருட்கள் , பகுப்பாய்விற்காக நீதிமன்ற அனுமதியுடன் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும், பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

சடலம் கிடந்த விதத்திற்கு அமைய , கடற்படையினரால் குற்றம் இழைக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக குறித்த சந்தேகநபர்கள் முற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, ஒன்பது சந்தேகநபர்களையும் நீதிபதிகள் முன்னிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா இன்று அடையாளம் காட்டியுள்ளார்.

இன்றைய சாட்சியளிப்பின் பின்னர் வழக்கின் 35 ஆவது சாட்சியாளரான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவை நீதிமன்ற விசாரணைகளில் இருந்து விடுவிப்பதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று அறிவித்துள்ளது.

வழக்கு விசாரணை நாளையும் தொடரவுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/08/வித்தியா-படுகொலை-வழக்கு-6/

  • தொடங்கியவர்

தொலைதொடர்பு கோபுரங்கள் ஊடாக குற்றசெயல் நடந்த இடத்தில் நின்றவர்களை கண்டறிந்தோம் – புங்குடு தீவு மாணவி கொலைவழக்கில் சாட்சியம்:-

court2.jpg
 
தொலைதொடர்பு கோபுரங்கள் ஊடாக கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வந்த அழைப்புக்கள் மற்றும் வெளி சென்ற அழைப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து குற்றசெயல் நடந்த நேரத்தில்,  நடந்த சூழலில் இருந்தவர்கள் தொடர்பில் அறிந்து கொண்டேன் என குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்துளார்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை  இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
 

அதன் போது ,  புங்குடுதீவு மாணவி கொலைவழக்கின் பிரதான விசாரணை அதிகாரியான குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியம் அளித்தார்.

 
குறித்த பொலிஸ் பரிசோதகர் கடந்த 24ஆம் திகதி மன்றில் சாட்சி அளித்தார். அதன் போது நேரம் போதாமையினால், பிராதன விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் சாட்சியாளர் இன்றைய தினம் தனது மிகுதி சாட்சியத்தை பிரதான விசாரணையின் போது சாட்சியமளித்தார்.
 
ஆறாம் எதிரியின் வீட்டில் இருந்து மூக்கு கண்ணாடியை மீட்டேன்.
 
அதில் , குறித்த வழக்கின் ஆறாம் எதிரியான சிவதேவன் துஷந்த் குற்றபுலனாய்வு திணைகளத்தில் அளித்த வாக்கு மூலத்தில் , எனது வீட்டின் பின் பக்க கூரையில் , கொங்கிரீட் வீம் மீது , சொப்பின் பை ஒன்றினுள் மூக்கு கண்ணாடியை வைத்து சொப்பின் பையால் சுற்றப்பட்டு அதன் மேல் காற்சாட்டையால் சுற்றி வைக்கப்பட்டு உள்ளது. அதனை என்னால் காட்ட முடியும் என வாக்கு மூலம் அளித்து , அதில் தனது கையொப்பத்தையும் ஆறாவது சந்தேக நபர் வைத்தார்.
 
அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று அவர் கூறிய இடத்தில் இருந்து மூக்கு கண்ணாடியினை மீட்டோம்.
 
கணணி மென்பொருள் அறிவுள்ளவரை சிறையில் சந்தித்தேன். 
 
வவுனியா சிறைச்சாலையில் , சந்தேக நபர்களுடைய வாக்கு மூலத்தினை பதிவு செய்யும் நோக்குடன் 2015ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் , 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் சென்று இருந்தோம்.
 
அதன் போது அங்கு பிரிதொரு வழக்கின் சந்தேக சந்தேக நபரான முஹம்மட் இப்ராஹீம் என்பவரை எதேச்சையாக சந்தித்தேன். அவர் பணமோசடி தொடர்பான வழக்கின் சந்தேக நபராவார். அவருக்கு கணணி அறிவு உண்டு என்பது எனக்கு ஏற்கனவே தெரியும்.
 
எவ்வாறு எனில் அவருடைய வழக்கினை நான் தான் விசாரணை செய்திருந்தேன். அந்நிலையில் ஒருநாள் அவரிடம் விசாரணைக்கு சென்று இருந்த போது , எனது கையடக்க தொலைபேசியும் , என்னுடன் வந்திருந்த சார்ஜென்ட் தர உத்தியோகஸ்தரின் கையடக்க தொலைபேசியும் மேசை மீது இருந்தது.
 
அப்போது சந்தேக நபரான முஹம்மட் இப்ராஹீம் தனது மடிக்கணணி மூலம் எனது கையடக்க தொலைபேசியில் இருந்து சார்ஜென்ட் தர உத்தியோகஸ்தரின் கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பினார். அது எவ்வாறு என அவரிடம் வினாவிய போது அதற்கு தான் ஒரு மென்பொருளை பாவிப்பதாக கூறினார்.
 
இந்த சம்பவத்தின் பின்னர் அவருக்கு கணணி மற்றும் மென்பொருள் தொடர்பிலான அறிவு உண்டு என்பதனை அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் நான் அவரை கண்ட போது , கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளிகளை (வீடியோக்களை ) அழித்தால் மீள எடுக்க முடியுமா என வினாவினேன். அதற்கு அவர் ஆம் என கூறினார்.
2 கோடி இலஞ்சம் தருவதாக கூறினார்கள். 
 
பின்னர் முஹம்மட் இப்ராஹீம்க்கு புதுக்கடை நீதிமன்ற வழக்கு தவணைக்கு வந்த போது குற்றபுலனாய்வு திணைக்கள உத்தியோகஸ்தர் ஒருவரிடம் என்னை சந்திக்க வேண்டும் என தகவல் அனுப்பி இருந்தார். அதனை அறிந்து நான் அவரை சந்தித்தேன்.
 
அதன் போது , நான் அன்றைய தினம் வவுனியாவில் தன்னை சந்தித்து கதைத்து விட்டு சென்ற பின்னர் இந்த வழக்கின் ஒன்பதாவது எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் தன்னுடன் கதைத்ததாகவும், அப்போது தாம் படுகொலை செய்யப்பட்ட மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்ததை காணொளி (வீடியோ)யாக கையடக்க தொலைபேசியில் எடுத்தார்கள் என்றும் , அதனை தற்போது அழித்து விட்டோம். அதனை மீள எடுக்க முடியுமா ? என கேட்டார்கள் எனவும் ,  தற்போது தானும் தன்னுடைய தம்பியான மகாலிங்கம் சசிதரனும் அரச சாட்சியாக மாற விரும்புவதாகவும் , அதற்காக எனக்கு 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க தயார் எனவும் தன்னிடம் சுவிஸ் குமார் கூறியதாக முஹம்மட் இப்ராஹீம் என்னிடம் தெரிவித்தார்.
 
அதனை அடுத்து இது தொடர்பில் முஹம்மட் இப்ராஹீமிடம் வாக்கு மூலம் பெற ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று 24.08.2016ஆம் திகதி கொழும்பு சிறைச்சாலையில் வைத்து முஹம்மட் இப்ராஹீமிடம் வாக்கு மூலம் பெற்றோம்.
 
கையடக்க தொலைபேசிகள்  தொடர்பில் விசாரணை. 
 
குற்ற செயல் நடந்த இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தாலும் , எதேச்சையான மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதனை எனது தனிப்பட்ட உளவாளிகள் மூலம் அறிந்து கொண்டேன். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டேன்.
 
அதன் போது கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலான விசாரணைகளையும் மேற்கொண்டேன். சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டேன்.
 
அத்துடன் குற்ற சம்பவம் நடைபெற்ற கால பகுதியான 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி காலை முதல் 14ஆம் திகதி மதியம் வரையிலான கால பகுதியில் குற்ற சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் கூடாக கையடக்க தொலைபேசிகளுக்கு உள்வந்த அழைப்புக்கள் மற்றும் வெளிசென்ற அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டேன்.
 
அந்த பகுதியில் காணப்பட்ட நான்கு தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு சொந்தமான நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தகவல்களை பெற்றுக்கொண்டேன். அதன் அடிப்படையில் 10 பேர் தொடர்பில் செய்ய தீர்மானித்தோம்.
 
அதன் பிரகாரம் அவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு அழைத்தோம்.
 
குற்ற செயலுடன் தொடர்புடைய ஒருவரை கண்டறிந்தோம்.
 
அதில் மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தோம். அதன் போது அவருக்கு இந்த வழக்கின் 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திஹாசன் மற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் ஆகிய இருவரின் கையடக்க தொலைபேசியில் இருந்து மாப்பிள்ளை என்பவருக்கு குற்ற சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாளான 12ஆம் திகதி மற்றும் குற்ற சம்பவம் நடைபெற்ற தினமான 13ஆம் திகதி அழைப்புக்கள் சென்றுள்ளன.
 
அது தொடர்பில் மாப்பிள்ளையிடம் கேட்ட போது , தான் கள்ளு விற்பனை செய்வதனால் தன்னிடம் , கள்ளு வேண்டும் என கோரி அவர்கள் அழைப்பு எடுத்து இருந்தனர் என கூறினார்.
 
குற்ற சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் 12ஆம் திகதி மதியம் 12.25 மணிக்கும் இரவு 21.56 மணிக்கும் இடையில் சந்திரஹாசன் மற்றும் துஷாந்த் ஆகிய இருவரது தொலைபேசியில் இருந்து அழைப்புக்கள் சென்றுள்ளன.
 
குற்ற சம்பவம் நடைபெற்ற 13ஆம் திகதி மாலை 15.50 மணிக்கு பிறகு மாப்பிள்ளையின் தொலைபேசிக்கு எந்த அழைப்புக்களும் வரவில்லை. இது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்த போது , அன்றைய தினம் (13ஆம் திகதி) தனது தொலைபேசியை நிறுத்த சொல்லி சந்திரஹாசன் கூறியதனால் தான் அதனை நிறுத்தி வைத்ததாக கூறினார்.
 
அதில் இருந்து இந்த குற்ற சம்பவத்திற்கும் மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதனை அறிந்து கொண்டோம்.
 
அதன் பின்னர் தான் நீதவான் முன்னிலையில் வாக்கு மூலம் அளிக்க விரும்புவதாக நடராஜா புவனேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கின் இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  மூன்றாம் எதிரியான  பூபாலசிங்கம் தவக்குமார் ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன்  ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் மற்றும் உதயசூரியன் சுரேஷ்கரன் ஆகியோர் குற்றசம்பவ்வம் இடம்பெற்ற தினத்தன்று மாணவி பாடசாலை செல்லும் பாதையில் காலை 7 மணியளவில் சின்ன ஆலடி எனும் இடத்தில் நின்று இருந்தார்கள் அவர்கள் எதோ காதல் விடயம் பேச போவதாகவே நான் எண்ணி இருந்தேன். ஆனால் திடீரென அவ்வாறு செயற்ப்பட்டார்கள் என என்னிடம் விசாரணையின் போது மாப்பிள்ளை கூறினார்.
 
அதனால் அவர் அந்த இடத்திற்கு எதிர்பாராத விதமாக சென்று இருந்தார் என்பதனை அறிந்து கொண்டேன். அதனால் அவரை கைது செய்யவில்லை. அவர் கேட்டதற்கு இணங்க ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் அவர் வாக்கு மூலம் அளிக்க நீதவானிடம் அனுமதி பெற்று ஏற்பாடு செய்தேன்.
 
குற்றசெயலுடன் தொடர்புடைய இன்னொருவரையும் கண்டறிந்தோம்.
 
அதேவேளை மாப்பிள்ளையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபராக உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் உள்ளார் எனும் தகவலை அறிந்தேன். அதன் பிரகாரம் சுரேஷ்கரனை அரியாலையில் வைத்து கைது செய்தேன்.
 
கைது செய்யப்பட்ட சுரேஷ்கரனிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரமே மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மாணவி  வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் , சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றினுள் வைத்தே மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என அறிந்து கொண்டோம். அதன் பிரகாரம் மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சுரேஷ்கரன் கூறிய இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டோம். அதன் போது எம்மால் மேலதிக தடய பொருட்கள் சான்றுகளை பெற முடியவில்லை.
 
இருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
 
அதேவேளை இந்த வழக்குடன் தொடர்புடையவர் எனும் குற்ற சாட்டில் ஊர்காவற்துறை பொலிசாரால் பத்தாவது சந்தேக நபராக ஜெயவர்த்தன ராஜ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அதேவேளை குற்ற புலனாய்வு திணைக்களத்தால் உதயசூரியன் சுரேஷ்கரன் 11ஆவது சந்தேக நபராகவும் தர்மலிங்கம் ரவீந்திரன் 12ஆவது சந்தேக நபராகவும் கைது செய்யப்பட்டனர்.
 
வன்புணர்வுக்கு உட்படுத்துவதை வீடியோ எடுத்துள்ளனர். 
 
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்வதனை காணொளியாக (வீடியோவாக) பதிவு செய்திருந்தனர் என்பதனை அறிந்து கொண்டு ஆறாவது சந்தேக நபரான சிவதேவன் துஷாந்த் என்பவரின் மடிக்கணணி , மற்றும் ரப் ஆகியவற்றை கைப்பற்றினோம். அவற்றை ஆய்வுக்காக ஊர்காவற்துறை நீதவானின் உத்தரவுக்கு அமைய மொரட்டுவ பல்கலைகழகத்திற்கும் சேர்ட் எனும் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்தோம். அதன் அறிக்கைகள் எமக்கு கிடைக்க பெறவில்லை.
 
குற்றசம்பவம் இடம்பெற்ற நேரத்தில் நான்கு சந்தேகநபர்கள் கொழும்பில் 
 
அதேவேளை எமது விசாரணைகளின் போது , குற்ற சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் குற்ற சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 7ஆம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் , 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கி இருந்தார்கள் என அறிந்து கொண்டேன். அது தொடர்பில் அவர்கள் தங்கி இருந்த தங்குமிட உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டேன்.
 
ஒன்றரை வருடங்கள் விசாரணை செய்தோம்.
 
இந்த வழக்கு தொடர்பில் குற்றபுலனாய்வு திணைக்களம் ஒன்றரை வருடங்கள் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தது. விசாரணைகள் முடிவடைந்ததும் விசாரணை கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.
 
அதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் இந்த வழக்கின் 10ஆவது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் மற்றும் 12ஆம் எதிரியான தர்மலிங்கம் ரவீந்திரன் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதேவேளை 11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார். என பிரதான விசாரணையின் போது 35ஆவது சாட்சியமான குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் ஏ.கே.நிஷாந்த சில்வா சாட்சியமளித்தார்.
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார். அதன் போது ,
 
கேள்வி :-  இந்த வழக்கில் எதிரிகள் சிலர் குற்றசெயல் நடக்கும் போது குற்றசம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்திருக்க வில்லை என சாட்சியம் அளித்தீர் அவர்கள் யார் ? அவர்கள் அந்த நேரம் எங்கு இருந்தார்கள் ?
 
பதில் :- ஆம். 4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன் , 7ஆம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் , 8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் கொழும்பில் நின்றார்கள் அது தொடர்பில் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகளின் ஒளிப்பதிவுகளை (CCTV கரமா காட்சிகளை) குற்றபுலனாய்வு திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் சம்பத் பார்வையிட்டு இருந்தார். அவர் அதனை உறுதிபடுத்தி உள்ளார்.
 
கேள்வி :- குற்ற சம்பவம் இடம்பெற்ற கால பகுதியில் 4 ஆம் எதிரி கசீனோ க்ளப்பில் நின்றாரா ?
பதில் :- ஆம். அதனையும் குற்றபுலனாய்வு திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் சம்பத் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகளின் ஒளிப்பதிவுகளை (CCTV கரமா காட்சிகளை) பார்த்து உறுதிப்படுத்தி உள்ளார்.
 
கேள்வி :- எதிரிகள் குற்ற செயல் நடந்த கால பகுதிக்கு அண்மைய கால பகுதியில் கொழும்பு – யாழ்ப்பாணம் விமானத்தில் பயணம் செய்தார்களா என விசாரணை செய்தீர்களா ?
பதில் :- இல்லை.
 
கேள்வி :- ஆறாவது எதிரியிடம் 8 தரம் வாக்கு மூலம் பெற்று உள்ளீர்கள் என்றால் சரியா ?
பதில் :- ஆம்.
 
கேள்வி :- அவரிடம் எட்டாவது தரம் பெற்ற வாக்கு மூலத்தில் தான் மூக்கு கண்ணாடி பற்றி கூறியுள்ளார் என கூறினால் சரியா ?
பதில் :- ஆம்.
 
நான் எட்டாம் எதிரி சார்பில் கூறுகிறேன். எட்டாவது தரம் வாக்கு மூலம் பெரும் போது , அச்சுறுத்தி , பலாத்தகாரம் பண்ணியே வாக்கு மூலம் பெற்று உள்ளீர் என கூறுகிறேன் என சட்டத்தரணி கூறினார்.
 
அதற்கு சாட்சி , நான் ஆறாம் எதிரியை அச்சுறுத்தியோ , தூண்டியோ , வாக்குஉறுதி கொடுத்தோ வாக்கு மூலம் பெறவில்லை. என தெரிவித்தார்.
 
கேள்வி :- இலங்கேஸ்வரன் என்பவரிடம் பெற்ற வாக்கு மூலத்தில் குற்ற சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள்  12ஆம் திகதி வாகனத்தில் இந்த 9 எதிரிகளுடனும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 நபர்கள் இருந்தார்கள் என கூறி இருந்தார் என்பது சரியா ?
 
பதில் :- ஆம்.
 
கேள்வி :- அவர்கள் யார் ?
பதில் :- எங்கள் விசாரணைகள் மூலம் அதனை அறிந்து கொள்ள முடியவில்லை.
 
கேள்வி :- மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவரை ஏன் கைது செய்யவில்லை ?
 
பதில் :- அவர் இந்த குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு எதேச்சையாக தான் சென்று இருந்தார் என்பதனை விசாரணை ஊடாக அறிந்து கொண்டேன். அதனால் கைது செய்யவில்லை.
 
இந்த குற்ற சம்பவம் தொடர்பில் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்யாமல் விடும் அதிகாரம் உமக்கு இல்லை. நீர் ஏற்கனவே தயார் செய்த வாக்கு மூலத்தை நீதிமன்றில் கூறுமாறு அவரிடம் கூறி அவரை கைது செய்யாமல் விட்டீர் என நான் எதிரிகள் தரப்பில் கூறுகிறேன் என சட்டத்தரணி கூறினார். அதனை சாட்சி தான் முற்றாக மறுக்கிறேன் என கூறினார்.
 
கேள்வி :- சுரேஷ்கரன் முதல் தடவை விசாரணை செய்யும் போது வாக்கு மூலம் தந்தரா ?
பதில் :- இல்லை.
 
 
கேள்வி :- எப்போது தந்தார் ?
 
பதில் :- இரண்டாம் தரம் விசாரணை செய்யும் போது.
 
சுரேஷ்கரனை இரண்டாம் தரம் விசாரணை செய்யும் போது இந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என அவருக்கு வாக்குறுதி வழங்கி , நீர் தயாரித்த வாக்கு மூலத்தை கூற வைத்துள்ளீர் என எதிரிகள் தரப்பில் கூறுகிறேன் என சட்டத்தரணி கூறினார். அதனை சாட்சி முற்றாக மறுக்கிறேன் என்றார்.
 
கேள்வி : சுரேஷ்கரனை அரச தரப்பு சாட்சியாக நீரா மாற்று நீர் ?
 
பதில் :- இல்லை. அதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை
 
கேள்வி :- சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் கூற முடியுமா ?
 
பதில் :- ஆம் . சந்தேக நபர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில், 5ஆம் சந்தேக நபரான தில்லைநாதன் சந்திரஹாசன் என்பவரின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் வசிக்கும் வவுனியாவில் உள்ள வீட்டில் இருந்து, கறுப்பு நிற ஐ போன் ஒன்றும் , ஆறாம் சந்தேக நபரான சிவதேவன் துஷாந்த் வீட்டில் இருந்து நோக்கியா போன் ஒன்று, சாம்சங் ரப் ஒன்று மடிக்கணணி ஒன்றும் கொழும்பு மோதரையில் வைத்து 9 ஆவது சந்தேக நபரான மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் மனைவியிடம் இருந்து சில கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றி இருந்தோம்.
 
கேள்வி :- அவற்றை என்ன செய்தீர்கள் ?
 
பதில் :- ஊர்காவற்துறை நீதவானிடம் பாரப்படுத்தி , அவரின் உத்தரவுக்கு அமைய மொரட்டுவ பல்கலைகழகத்திற்கும் , சேர்ட் எனும் நிறுவனத்திடம் ஆய்வுக்கு அனுப்பி வைத்தோம்.  என சாட்சியம் அளித்தார்.

http://globaltamilnews.net/archives/35252

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கு – வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்கள் முடிவு

 
வித்தியா கொலை வழக்கு – வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியங்கள் முடிவு
 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் முடிவுக்கு வந்துள்ளன என்று பிரதி மன்றாடியார் தெரிவித்தார்.

எதிரி தரப்பு சாட்சியங்களை முன்வைக்கலாம் என்று தீர்ப்பாயம் அனுமதி கொடுத்துள்ளது.

அவர்கள் சாட்சிக் கூண்டில் ஏறி சத்தியப் பிரமாணம் செய்து சாட்சியமளிக்க முடியும். இதன்போது அவர்கள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

எதிரிக் கூண்டில் இருந்து சாட்சியமளிக்க முடியும். அதன்போது குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.

வெளியாள்களைத் தங்களுக்கு சார்பாக சாட்சிங்களாக இணைக்க முடியும்.

எதுவும் மேற்கொள்ளாது மௌனம் காக்கலாம் என்று தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

இவை தொடர்பில் தீர்மானிப்பதற்கு தீர்ப்பாயம் தற்போது 10 நிமிட கால அவகாசம் வழங்கியுள்ளது.

http://uthayandaily.com/story/16106.html

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கு – எதிரி தரப்பு சாட்சியம் 28ஆம் திகதி

 
 
வித்தியா கொலை வழக்கு – எதிரி தரப்பு சாட்சியம் 28ஆம் திகதி
 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரி தரப்புச் சாட்சியங்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் பெறப்படவுள்ளன.

வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியப் பதிவுகள் இன்று முடிவடைந்தன. எதிரி தரப்பு சாட்சியங்கள் முன்வைக்க முடியும் என்று தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.

சார்பான சாட்சியங்கள் முற்படுத்தப்படுத்தவும், சாட்சியங்களை முன்வைக்கவும் எதிரி தரப்பு தீர்மானித்தது. அதையடுத்து தீர்ப்பாயம் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு திகதியிட்டது.

எதிர்வரும் 28, 29, 30 ஆம் திகதிகளிலும், செப்ரெம்பர் 04, 11, 12, 13, 14,15 ஆம் திகதிகளிலும் எதிரி தரப்பு விளங்கங்களை வழங்க தீர்ப்பாயம் நியமித்தது.

http://uthayandaily.com/story/16136.html

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கு – சிறப்புப் பாதுகாப்புடன் வந்த சந்தேகநபர்கள்!

 
வித்தியா கொலை வழக்கு – சிறப்புப் பாதுகாப்புடன் வந்த சந்தேகநபர்கள்!
 

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கு சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோத்தர்களுக்கு மேலதிகமாக சிறைச்சாலை சிறப்புப் பாதுகாப்புப் பிரிவும் பாதுகாப்பு வழங்கியது.

அதேவேளை, வித்தியா படுகொலை வழக்கின் 9 எதிரிகளுக்குமான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் நேற்று அறிவுறுத்தியிருந்தது.

வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் நிறைவடைந்துள்ளது. அதையடுத்தே வழக்கின் எதிரிகளுக்குமான பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பாயம் பணித்தது.

“எதிரிகளுக்கான குடிதண்ணீர், உணவு உள்ளிட்டவை சிறைச்சாலையால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். நீதிமன்ற வளாகத்துக்குள் எதிரிகளை எந்தவொரு நபரும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. எதிரிகளை அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மட்டுமே சந்திக்க முடியும்” என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருந்தது.

http://uthayandaily.com/story/16171.html

  • தொடங்கியவர்

வித்தியா கொலை வழக்கு ; டி.என்.ஏ முடிவில் பெரும் அதிர்ச்சி

ரி.விரூஷன்

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் வித்தியாவின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மயிர் துண்டுகள் மூன்றிலும் உள்ள டி.என்.ஏ யுடன் நான்காவது  சந்தேகநபர் தொடக்கம் ஒன்பதாவது சந்தேகநபர் வரையான யாருடைய டி.என்.ஏ யும் ஒத்துப் போகவில்லை என இவ் வழக்கில் டி.என்.ஏ சான்று பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்த ஜீன்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி ரூவான் இளைய பெரும ரயலட்பார் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற இவரது சாட்சிப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

டி.என்.ஏ சான்று பொருட்களான மயிர் துண்டுகளுக்கு உரிய நபர், முதலாம் இரண்டாம் மூன்றாம் சந்தேகநபர்கள், மற்றும் இறந்த பெண்ணின் தாயார் ஆகிய மூவரும்  ஒரே தாய் வழி மூலத்தை கொண்டவர்கள் என்பது ஆய்வினூடாக கண்டுபிடிக்கப்பட்டது என சாட்சியமளித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/22702

  • தொடங்கியவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. சந்தேகநபர்களின் மரபணுக்கள் ஒத்துபோகவில்லை. – ஜின்டேக் விஞ்ஞானி சாட்சியம்

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை  நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நடைபெற்றது.
 
அதன் போது , குறித்த வழக்கின் 53ஆவது சாட்சியமான ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி றுவான் இளையபெருமா சாட்சியமளிக்கையில் ,
 
மரபணு பரிசோதனைக்காக சான்று பொருட்கள் அனுப்பப்பட்டன.
நான் கடந்த 15 வருடங்களாக ஜின்டெக் நிறுவனத்தில் கடமையாற்றுகிறேன். மரபணு (DNA) பரிசோதனைகள் 4600க்கும் மேல் செய்துள்ளேன். 100க்கும் மேற்பட்ட தடவைகள் நீதிமன்றங்களில் மரபணு(DNA) பரிசோதனைகள் தொடர்பில் சாட்சியங்கள் அளித்துள்ளேன்.
 
குறித்த வழக்கு தொடர்பில் எமது நிறுவனத்திற்கு மூன்று தடவைகள் சான்று பொருட்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இருந்தன.
 
முதலாவதாக அரச பகுப்பாய்வு திணைக்கள முத்திரையிடப்பட்ட பொதி ஒன்றில் 2CM, 1.5CM, 5CM ,  5CM, 6CM மற்றும் 1CM நீளமுடைய உரோம துண்டுகள் 6 அனுப்பப்பட்டு இருந்தன. அத்துடன் பெண்கள் அணியும் உள்ளாடை ஒன்றும் , பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம்
ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது சந்தேக நபர்களினதும்  இரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
 
இரண்டாவதாக ஒரு கண்ணாடி போத்தலில் அடைக்கப்பட்ட இரு மண்ணிற துண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை இரண்டையும் பொலிஸ் பரிசோதகர் சம்பத் ராஜ கருணா என்பவரே எம்மிடம் பாரம் தந்தார்.
 
மூன்றாவதாக சட்ட வைத்திய அதிகாரியினால் உயிரிழந்த மாணவியின் தயாரான சிவலோகநாதன் சரஸ்வதியின் இரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.
 
எமக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது உரோம துண்டுகளே ,  அதனை ஏன் அவ்வாறு சொல்லுகிறேன் என்றால் , உரோமம் என்றால் அது முழுமையாக அதன் வேர்களுடன் இருக்க வேண்டும். ஆனால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டவை , துண்டுகளாகவே காணப்பட்டன. அவற்றில் வேர்கள் காணப்படவில்லை. எனவே அவை வெட்டப்பட்ட அல்லது பிடுங்கி எடுக்கப்பட்ட துண்டுகளாக இருப்பதனால் , அதனை உரோம துண்டுகள் என்றே சொல்லுவோம்.
 
சான்று பொருட்களில் மரபணு பெறுபேறுகளை பெற முடியவில்லை.
 
 
மனித கலங்களில் காணப்படும் மரபணுக்களை பரிசோதனை செய்து அடையாளம் காண முடியும். அந்த வகையில் நாம் உரோம துண்டுகளை பரிசோதனை செய்த போது அதில் வேர்கள் இல்லாமையினால் பெறுபேறுகளை பெறமுடியவில்லை.
 
உள்ளாடையில் இருந்த இரு கறைகளை  பரிசோதனை செய்த போதிலும் அதில் இருந்தும் பெறுபேறுகளை பெற முடியவில்லை.
 
கண்ணாடி போத்தலில் இருந்த இரு துண்டுகளை பரிசோதனை செய்த போது அதில் 4MM நீளமுடைய உரோம துண்டு ஒன்றினை கண்டோம். அவற்றை பரிசோதனை செய்தும் பெறுபேறுகளை அடைய முடியவில்லை.
 
அடுத்ததாக சந்தேக நபர்கள் ஒன்பது பேரினதும் இரத்த மாதிரிகளையும், உயிரிழந்த மாணவியின் தாயாரின் இரத்த மாதிரியையும் பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.
 
நாம் முதலில் 6 உரோம துண்டுகள், உள்ளாடையில் இருந்த இரண்டு கறைகள், இரண்டு துண்டுகள் ஆகியவற்றை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும் அதில் இருந்து மரபணு பெறுபேறுகளை பெற முடியவில்லை. அதற்கு காரணம் சான்று பொருட்களில் இருந்த மரபணுக்கள் அழிந்து போனமையே ..
 
அதி தொழினுட்பம் வாய்ந்த தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தி பரிசோதனை.
 
அதன் பின்னர் நாம் எம்மிடம் இருந்த அதி தொழினுட்பம் வாய்ந்த தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டோம். அதனூடாக 6 உரோம துண்டுகளில் மூன்று உரோம துண்டுகளையும் , கண்ணாடி போத்தலில் அனுப்பப்பட்ட மண்ணிற துண்டுகள் இரண்டில் ஒன்றில் இருந்து பெறுபேறுகளை பெற்றோம்.
 
மரபணுக்கள் அழிவடைய கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு அதற்கு சூழல் காரணிகள் காரணமாகலாம். அதிக வெப்பம் , அதிக ஈரப்பதம் ஆகியனவும் காரணமாக இருக்கலாம். உடலில் இருந்து அகறப்பட்ட பின்னர் மரபணுக்கள் அழிவடைந்து போக கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. என தெரிவித்தார்.
 
கண்ணுக்கு தெரியாத சான்றுகளையும் பரிசோதித்தோம்.
 
அதிநுட்பமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா ? என அதன் போது மன்று கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு ஆம். கண்ணுக்கு தெரியாத சான்றுகள் கூட நுணுக்கு காட்டி ஊடாக பரிசோதிக்கப்பட்டது என சாட்சி அளித்தவர் பதிலளித்தார்.
 
குற்றசம்பவம் நடைபெற்றது மே மாதம் உங்களுக்கு இந்த சான்று பொருட்கள் அனுப்பப்பட்டது செப்ரெம்பர் மாதம். இந்த சான்று பொருட்களை விரைவாக அனுப்பி இருந்தால் பரிசோதனையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்குமா ? என மன்று கேள்வி எழுப்பியது.
 
அதற்கு, சிலவேளைகளில் பரிசோதனையில் அறிக்கையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என பதிலளித்தார்,
 
மரபணுக்கள் ஒத்துபோகவில்லை.
 
அதனை தொடர்ந்து சாட்சியாளர் தொடர்ந்து சாட்சியம் அளிக்கையில் , எம்மால் பெறுபேறுகளை பெற முடிந்த 3 உரோம துண்டுகள் மற்றும் ஒரு மண்ணிற துண்டு என்பவற்றின் மரபணுக்களும்,  மகாலிங்கம்  சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய 6 சந்தேக நபர்களின் மரபணுக்களுடன் ஒத்துபோகவில்லை.
 
முதல் மூன்று சந்தேகநபர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம்
ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்பதனை அறிந்து கொண்டோம்.
 
முதல் மூன்று சந்தேக நபர்களும் மாணவியின் தாயும் , தாய் வழி உறவினர்கள் ?
 
அத்துடன் 3 உரோம துண்டுகள் மற்றும் ஒரு மண்ணிற துண்டு என்பவற்றின் மரபணுக்களும் உயிரிழந்த மாணவியினதும்   உயிரிழந்த மாணவியின் தாய் மற்றும் பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார்
ஆகியோரின் மரபணுக்களும் ஒத்து போகின்றது.
 
ஆகவே முதல் மூன்று சந்தேக நபர்களும் உயிரிழந்த மாணவியின் தாயும், தாய் வழி உறவினர்களாக இருக்கலாம் என்பதனையும் அறிந்து கொண்டோம். என சாட்சியம் அளித்தார். அதனை அடுத்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்ட , சாட்சி மன்றினால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
 
மூக்கு கண்ணாடியினை மீட்கும் போது பார்த்தேன்.
 
அதனை தொடர்ந்து குறித்த வழக்கின் 11ஆவது சாட்சியமான அந்தோனிப்பிள்ளை சாட்சியமளிக்கையில் ,
 
புங்குடுதீவில் நான் வசித்து வருகிறேன். பெரியாம்பி (சிவதேவன் துஷாந்த்) வீட்டுக்கு அருகில் தான் என்னுடைய வீடும் உள்ளது. ஒரு நாள் எனது வீட்டில் நான் நின்றிருந்த போது குற்றப்புலனாய்வு துறையினர் பெரியாம்பி வீட்டில் நின்று வேலிக்கு மேலால் எட்டி என்னை அழைத்து ஏணி இருக்கா என கேட்டனர்.
 
நான் ஓம் என்று சொல்லி வீட்டில் இருந்த ஏணியை வேலிக்கு மேலால் தூக்கி அவர்களிடம் கொடுத்தேன். அதனை அவர்கள் வாங்கி கொண்டு என்னையும் பெரியாம்பி வீட்டுக்கு வருமாறு அழைத்தனர்.
 
ஏணியை அவர்களிடம் வேலிக்கு மேலால் கொடுத்து விட்டு , நான் வாசல் வழியாக சுற்றி பெரியாம்பி வீட்டுக்கு போனேன். அப்போது பெரியாம்பியையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அழைத்து வந்திருந்தனர். பெரியாம்பி வீடு குற்ற சம்பவம் இடம்பெற்று சில நாட்களில் சிலரால் எரிக்கப்பட்டது. அதனால் பயத்தில் பெரியாம்பி வீட்டில் ஒருவரும் இருப்பதில்லை. அன்றைய தினமும் ஒருவரும் வீட்டில் இருக்கவில்லை.
 
நான் நிற்கும் போது தான் பெரியாம்பி வீட்டின் பின்பக்கமாக ஒரு மூலையில் மலசல கூடம் உள்ளது. அதற்கு பக்கத்தில் மேல்பக்கமாக இருந்த கொங்கிரீட் பிளாட் ஒன்றில் ஏணியை சாற்றி விட்டு ஒருவர் ஏறி மேலே பிளாட்டில்  துணியினால் சுற்றப்பட்ட பொட்டலம் (பொதி) ஒன்றினை எடுத்துக்கொண்டு கீழே வந்தார்.
 
கீழே நான் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அந்த பொதியினை பிரித்தார்கள். அது வெளிப்புறம் ரோஸ் கலர் பியாம துணியால் சுற்றப்பட்டு இருந்தது. உள்ளே ஒரு பொருள்  கடதாசி ஒன்றில் சுற்றிய நிலையில் இருந்தது. அதனை பிரித்து பார்த்த போது உள்ளே மூக்கு கண்ணாடி ஒன்று இருந்தது. என சாட்சியம் அளித்தார்.
 
சான்று பொருளை மன்றில் அடையாளம் காட்டினார்.
 
அதன் போது அவற்றை மன்றில் அடையாளம் காட்ட முடியுமா ? என   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் கேட்ட போது , அதற்கு சாட்சி ஆம் என கூறினார்.
 
அதனை அடுத்து சான்று பொருட்கள் சாட்சிக்கு காட்டபட்டது. அதன் போது பொதி சுற்றப்பட்டு இருந்ததாக பெண்களின் பியாம சான்று பொருளாக காட்டப்பட்டது. அதனை பார்த்த சாட்சி இந்த துணியில்லை அது ரோஸ் கலர் பியாம இது அந்த பியாம இல்லை என தெரிவித்தார்.
 
அதன் பின்னர் மூக்கு கண்ணாடி சுற்றப்பட்ட சொப்பின் பையினை சாட்சிக்கு அடையாளம் காட்ட மன்றில் காட்டபப்ட்டது. அதனை பார்வையிட்ட சாட்சி இது சொப்பின் பை , மூக்கு கண்ணாடி சுற்றப்பட்டு இருந்தது கடதாசி தாள் என கூறினார்.
 
சாட்சிக்கு மன்று எச்சரிக்கை.
 
அதனை அடுத்து மன்று அந்த சொப்பின் பையை பரிசோதித்த போது , அதில் சாட்சியம் அளிப்பவரின் கையொப்பம் இருப்பதனை அவதானித்து கையொப்பம் குறித்து வினாவியது. அதன் போது அந்த சொப்பின் பையின் மேல் உள்ள கையொப்பம் தன்னுடையது தான் என சாட்சியாளர் தெரிவித்தார். அதனை அடுத்து மன்று அவரை கடுமையாக எச்சரித்தது. அதன் போது சாட்சியாளர் தான் அன்றைய தினம் கையொப்பம் வைத்தது கடதாசி தாள் போன்றே ஞாபகம் இருந்ததாக தெரிவித்தார்.
 
அதை தொடர்ந்து சாட்சியாளருக்கு மூக்கு கண்ணாடியினை அடையாளம் காட்ட முடியுமா என   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் கேட்ட போது ஆம். அந்த கண்ணாடியின் சட்டகம் (பிரேம்) கறுப்பு நிறம் என கூறினார். அதை அடுத்து சாட்சியாளருக்கு மூக்கு கண்ணாடி காட்டப்பட்டது. அதனை அவர் அடையாளம் காட்டினார்.
அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு சாட்சி மன்றினால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
 
வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டன.
 
அதையடுத்து   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் , வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி விசாரணைகளை முடிவுறுத்துவதாகவும் வ – 01 தொடக்கம் வ – 27 வரையிலான சான்று பொருட்களை வழக்கில் இணைத்துக்கொள்வதாகவும் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
 
எதிரிதரப்பு சாட்சியங்களுக்கு உத்தரவு.
 
அதனை அடுத்து , வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டு உள்ளதாக   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றில் விண்ணப்பம் செய்துள்ளார். ஒன்பது எதிரிகளுக்கும் எதிரான சாட்சியங்கள் மன்றில் எய்ம்பிக்க பட்டுள்ளது. என தெரிவித்து ,  மன்று எதிரி தரப்பு சாட்சியங்களுக்கு உத்தரவு  இட்டது.
 
எதிரிகள் 9 பேரும் தனித்தனியாக சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து அல்லது உறுதி செய்து சாட்சியம் அளிக்க முடியும். அதன் போது அவர்கள் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
 
அல்லது எதிரிகள் 9 பேரும் எதிரி கூண்டில் நின்று கூண்டு வாக்கு மூலம் அளிக்க முடியும். அதன் போது அவர்கள் சத்தியம் செய்யவோ , உறுதி எடுக்கவோ தேவையில்லை. அத்துடன் அவர்களிடம் குறுக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படமாட்டாது.
 
அல்லது 9 பேரும் மௌனமாக இருக்க விரும்பின் இருக்கலாம். அல்லது தமது தரப்பில் சாட்சியங்களை மன்றில் முற்படுத்தி சாட்சியங்களை நெறிப்படுத்த முடியும் என சந்தேக நபர்களுக்கு மன்று அறிவுறுத்தியது.
 
10 நிமிடம் விசாரணை ஒத்திவைப்பு.
 
அதை தொடர்ந்து மன்று சந்தேக நபர்கள் அது தொடர்பில் ஆலோசிக்க 10 நிமிட கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தது.
 
அதன் பின்னர் மீண்டும் மன்று வழக்கு விசாரணைக்காக கூடிய போது , எதிரிகள் தமது தரப்பில் சாட்சியங்களை நெறிப்படுத்த போவதாக எதிரி தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர். அத்துடன் , அதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும் மன்றில் கோரினார்கள்.
 
அதற்கு மன்று அனுமதித்தது. எதிரி தரப்பு சாட்சியங்கள் தொடர்பில் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவித்து அது தொடர்பில் மன்றுக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் கோவையிடப்பட வேண்டும். என மன்று உத்தரவு இட்டது.
 
அதேவேளை வழக்கு தொடுனர் தரப்பு வழக்கில் திருத்தங்கள் செய்ய வேண்டுமாயின் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் எனவும் மன்று உத்தரவு இட்டது.
 
எதிரி தரப்பு சாட்சி பதிவுக்காக 28ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு.
 
 
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சாட்சி பதிவுகளுக்காக எதிர்வரும் 28ஆம் , 29ஆம் ,மற்றும் 30ஆம் திகதிகளிலும் , செப்ரெம்பர் மாதம் 4ஆம் , 11ஆம் , 12ஆம் , 13ஆம் , 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகள் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.
 
அதையடுத்து எதிர்வரும் 28ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்த மன்று அதுவரையில் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டது.
 
அதேவேளை குறித்த வழக்கின் எதிரிகள் ஒன்பது பேரினதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/35391

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
 

மாணவி கொலை வழக்கு. எதிரி தரப்பு சாட்சி பதிவுக்காக நாளை நீதாய விளக்கம் கூடுகிறது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


 

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரி தரப்பு சாட்சி பதிவுகள் நாளை திங்கட்கிழமை  நீதாயவிளக்கம் ( ரயலட் பார்)  முன்னிலையில் ஆரம்பமாக உள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை  நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம் (ரயலட் பார்)  முறைமையில் நடைபெற்று வருகின்றது. கடந்த 4ஆம் திகதியுடன் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி பதிவுகள் முடிவுறுத்தபடுவதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் தெரிவித்தார். அதனை அடுத்து எதிரிகள்  தரப்பில் சாட்சியங்களை நெறிப்படுத்த போவதாக எதிரி தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர் அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுக்காக நாளைய தினம் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்து 29ஆம் , 30 மற்றும் 31ஆம் திகதிகளிலும் , செப்ரெம்பர் மாதம் 4ஆம் , 11ஆம் , 12ஆம் , 13ஆம் , 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகள் எதிரி தரப்பு சாட்சி பதிவுக்காக மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.

http://tamilvalayam.com/மாணவி-கொலை-வழக்கு-எதிரி-த/

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இவன் சுத்த லூசான இருப்பானோ 
என்று நீங்கள் யாரும் யோசித்தாலும் பரவாயில்லை.

இவளவு நாளும் நடந்த விசாரணையிலேயே 
அவர்கள் யாவரும் எது ஒருவகையில் உடன்பட்டு 
பாலியல் கொடுமையை செய்து மாணவியை கொலை 
செய்தது என்பது ........ கண் கண்ட சாட்சி முதல் கொண்டு 
இருக்கிறது ........

இப்ப இவர்கள் ஏன் ஒவ்வரு நாளும் கூடி கூடி கலைகிறார்கள் ?
இப்போ என்னத்துக்கு விசாரணை நடக்குது ? 

  • தொடங்கியவர்

வித்தியாவை கொன்றது கடற்படையே – சுவிஸ்குமாரின் தம்பி சாட்சியம்

 
வித்தியாவை கொன்றது கடற்படையே – சுவிஸ்குமாரின் தம்பி சாட்சியம்
 

கடற்படையினரே புங்குடுதீவு மாணவியை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான ம.சசீந்திரன். இவர் இந்தக் கொலை வழக்கின் மற்றோரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தம்பியாவார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றது. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று எதிரித் தரப்பினரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் இன்று சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

சாரதாம்பாள், தர்சினி கொல்லப்பட்ட சம்பவங்களில் கடற்படையினர் ஏற்கனவே இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் கொலையும் கடற்படையினரே செய்துள்ளனர். அதை மறைக்கவே எம்மைக் கைது செய்துள்ளனர். ஊர் முழுக்க அறிவித்து எமக்கு எதிரான எண்ணப்பாட்டை உருவாக்கிவிட்டனர்.

சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் எமது படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். அதனால் எங்கள் குடும்பம் நஞ்சருந்தி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாம் இந்தக் குற்றத்தைச் செய்யததாலேயே உயிரோடு இருக்கின்றோம் என்று அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

http://newuthayan.com/story/23646.html

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை: பொலிஸாரின் தாக்குதலால் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக சாட்சியம்

 


 
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளின் சாட்சியங்கள் இன்று முதற்தடவையாக யாழ். மேல் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தப்பட்டன.

Trial at Bar தொடர் விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆரம்பமானது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறுகின்றது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார இரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

முதலாம் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இலக்க பிரதிவாதிகள் சாட்சிக்கூண்டில் ஏறி இன்று பிற்பகல வரை சாட்சியமளித்தனர்.

இரண்டாம் மூன்றாம் மற்றும் 04 ஆம் இலக்க பிரதிவாதிகள் சாட்சியம் வழங்கிய போது, பொலிஸார் தங்களின் கைகளை பின்பக்கமாகக்கட்டி, கயிற்றினால் உயர்த்தி, பொல்லுகளால் தாக்கி வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறியுள்ளனர்.

வாக்குமூலம் சிங்களத்தில் எழுதப்பட்டமையால் அதில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தங்களுக்கு தெரியாது எனவும் அவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

பொலிஸாரின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக இரண்டாம் மூன்றாம் மற்றும் 04 ஆம் இலக்க பிரதிவாதிகள் Trial at Bar விசாரணை மன்றில் சாட்சியமளித்துள்ளனர்.

இதன்போது குறுக்கிட்ட வழக்கு தொடுநர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் குமார் குணரட்ணம், எதிரிகளிடம் தாக்குதல் நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகக் கூறப்படுவதை முற்றாக நிராகரிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முறைப்பாடு செய்யப்படவில்லை எனவும் பிரதி சொலிஸிட்ட ஜெனரல், நீதிபதிகள் முன்னிலையில் கூறியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதிவாதிகள், ஊர்காவற்துறை நீதவானின் சமாதான அறையில் இது தொடர்பில் நீதவானிடம் தனிப்பட்ட ரீதியில் தாம் கூறியதாக மன்றில் இன்று கூறியுள்ளனர்.

எனினும், நீதவானின் பதிவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, நான்காம் இலக்க பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மகாலிங்கம் சசிந்திரன் சாட்சியமளித்தார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை தான் கொழும்பிலிருந்ததாகவும், அதற்கான சி.சி.ரி.வி ஔிப்பதிவுகள் ஏற்கனவே வழக்கு தொடுநர் சார்பில் மன்றிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் மே மாதம் 17 ஆம் திகதி சின்னாம்பி எனப்படும் துஷாந்தனுக்கு காசு வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் தனது அண்ணனான சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டதாக தொலைபேசியூடாக தகவல் கிடைத்ததாகவும் நான்காம் இலக்க பிரதிவாதி கூறியுள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் தனக்கும் பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தான் புங்குடுதீவிலிருந்து குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு சென்ற போது பொலிஸ் காவலரணுக்கு பின்பக்கமாக தனது தம்பியான நிஷாந்தன் நிர்வாணமாகக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தார் எனவும் மகாலிங்கம் சசிந்திரன் இன்று சாட்சியமளித்துள்ளார்.

18 வினாக்கள் அடங்கிய வினாக்கொத்து ஒன்றை பொலிஸார் வைத்திருந்ததாகவும், அதற்கான சரியான பதில் வழங்கினால் விடுவிக்கப்படுவீர் எனவும், குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டு கையொப்பமிடுமாறு பணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு கையடக்க தொலைபேசியில் ஔிப்பதிவு செய்யப்பட்டதாகவும் மகாலிங்கம் சசிந்திரன் கூறியுள்ளார்.

பின்னர் ஊர்காவற்துறை நீதவானின் வாசஸ்தலத்திற்கு அழைத்து சென்று 24 மணித்தியால தடுப்புக்காவலுக்கான உத்தரவை பொலிஸார் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்

மறுநாள் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் தங்களை அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் காயங்கள் தொடர்பில் பதிவு செய்துகொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

வித்தியாவின் மூக்குக்கண்ணாடியைப் பெறுவதற்காக நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக்காவலில் இருந்த தம்மை புங்குடுதீவிலுள்ள தமது வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும் மகாலிங்கம் சசிந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள நான்காம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டு தம்மிடம் இரண்டு தடவைகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தனது மனைவியையும் பிள்ளைகளையும் இழக்கும் தருவாயில் தாம் இருப்பதால், இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறும் மகாலிங்கம் சசிந்திரன் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான அதிகாரங்கள் அந்த நீதிமன்றத்திடமே காணப்படுவதாகவும் நீதிபதி இளஞ்செழியன் கூறியுள்ளார்.

ஐந்தாம் இலக்க பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கிட்டு யாழ். சட்ட வைத்திய அதிகாரி மயூரனை மேலதிக விசாரணைக்காக மன்றுக்கு மீள அழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட Trial at Bar விசாரணை மன்றம் சட்ட வைத்திய அதிகாரிக்கான அழைப்பாணையை விடுத்துள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/08/வித்தியா-படுகொலை-பொலிஸா/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வித்தியா படுகொலை வழக்கு: எதிரிகளின் சாட்சிப்பதிவு ஆரம்பம்
 


புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரிகள் தரப்புச் சாட்சிப் பதிவுகள் யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில், நீதாய விளக்கம் (ட்ரயல் அட் பார் ) முறைமையில் நடைபெற்றது.

பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய 9 எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகின. 

எதிரிகள் தரப்பில் சாட்சியமாக, சட்ட வைத்திய அதிகாரியை மன்றுக்கு அழைப்பதற்கு, 5ஆம் எதிரித் தரப்புச் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி முயன்றபோது, வழக்கு தொடுநர் தரப்பு, கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

அதற்குப் பதிலளித்த சட்டத்தரணி ரகுபதி, "சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சி பதிவுகள் முடிவடைந்த பின்னர் தான், ஜின்டெக் நிறுவன விஞ்ஞானியின் சாட்சிப் பதிவு இடம்பெற்றது. அதில் சில மேலதிக தகவல்களை, சட்ட வைத்திய அதிகாரியிடம் பெற வேண்டியுள்ளது.  படுகொலை செய்யப்பட்ட மாணவியின் நகங்கள், பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. மாணவி, நகத்தினால் கீறியுள்ளார். அதில் சில தசைகள் இருந்தமையால், அவை அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.

அவ்வாறு எனில், இந்த எதிரிகள் உடலில் அக்காலப் பகுதியில், நகக் கீறல் அடையாளம் இருந்து இருக்க வேண்டும். ஆனால் அவர்களின் உடலில், அவ்வாறான காயங்கள் இருந்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் இல்லை. அவ்வாறு எனில், நகக் கீறல் காயம் உடைய ஒருவர், வெளியில் உள்ளார். 

"இவ்வாறாக சில மேலதிக தகவல்களை, சட்ட வைத்திய அதிகாரியிடம் பெற வேண்டிய தேவையுள்ளதால் அவரை மீண்டும் சாட்சியமாக அழைக்க வேண்டும்" எனக் கோரினார். 
அதற்கு மன்று அனுமதி அளித்தது. அதேவேளை எதிரிகள் தரப்புச் சாட்சியமாக, 9ஆம் எதிரியான சசிக்குமாரின் மனைவி மகாலக்சுமி சசிக்குமாரையும் மற்றும் குகரூபன் என்பவரும், எதிரிகள் தரப்புச் சாட்சியமாக அழைக்கப்பட்டு உள்ளனர். 

முதலாவது எதிரி சாட்சியம்

முதலாவது எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் சாட்சிமளிக்கையில், "மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த மறுநாளே (14) தெரியும். நான், அந்த மாணவியை இரண்டே இரண்டு தடவைகள் தான் நேரில் கண்டுள்ளேன். 

"என்னை அந்தப் படுகொலையுடன் தொடர்புடையவர் என ஊர்காவற்றுறைப் பொலிஸார், 14ஆம் திகதி கைது செய்தனர். கைது செய்து, என்னுடைய சேர்ட்டைக் கழற்றி, கைகளைப் பின்புறமாகக் கட்டி, கீழே தள்ளி விழுத்தி, என்னுடைய கால்களை, கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் மிதித்து இருக்க, தோள் பட்டையில் மூன்று நட்சத்திரம் உடைய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், என்னைக் கொட்டனால் தாக்கினார்" எனக் கூறி, தான் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விதத்தை, செய்கை மூலம் செய்து காட்டினார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "அவ்வாறு என்னைத் தாக்கிய பின்னர், அவர்களுக்கு மேல் உள்ள பெரிய அதிகாரி ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அங்கு நான் என்னை அவர்கள் தாக்கியது தொடர்பில் கூறிய போது, கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர், என்னைச் சொல்லவிடாது தடுத்தார். அதனையும் மீறி நான் அந்த உயர் அதிகாரியிடம் முறையிட்டேன். 

"பின்னர் என்னை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய போது, அப்போது நீதவானாக இருந்த லெனின்குமார் அவர்களிடமும், நான் இந்த குற்றத்தைச் செய்யவில்லை எனக் கூறினேன். அத்துடன் பொலிஸார் என்னை அடித்துத் துன்புறுத்தல் செய்தமையையும் கூறினேன். நான் சிறைக்குள் இருந்ததால், எனக்குப் புரியப்பட்ட சித்திரவதை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்ய முடியவில்லை. 

"இந்த மாணவி கொலை வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முற்றாக மறுக்கின்றேன்" எனத் தெரிவித்தார். 

இரண்டாம் எதிரி சாட்சியம்

இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார், சாட்சியமளிக்கையில், "மாணவி படுகொலை செய்யப்பட்ட மறுநாள் 14ஆம் திகதி மே மாதம் 2015ஆம் ஆண்டு, காலையில் நான் வேலைக்குச் சென்று விட்டேன். மதியம் 1 மணியளவில் தான் வீட்டுக்குச் சென்றேன். அப்போது எனது மனைவி கூறினார் 'பொலிஸ் உங்களை ஆலடிக்கு வரச் சொல்லிட்டுப் போறாங்க' என்று. அதனால் நான் அங்கே சென்றேன்.

"அங்கே சென்றதும் பொலிஸ் என்னைக் கைது செய்து அழைத்துச் சென்று, எனது முதுக்குக்கு பின் புறமாக இரண்டு கைகளையும் சேர்த்து விலங்கு மாட்டி, என்னை தடிமனான கொட்டான்களால் அடித்துத் துன்புறுத்தினார்கள். 

"என்னிடம் எந்தவிதமான வாக்குமூலங்களையும் பெறாமல், சிங்களத்தில் எழுதிய தாள் ஒன்றில் என்னைக் கையொப்பம் இடச் சொல்லி அடித்தார்கள். அடிதாங்காமல் அதில் என்ன எழுதி இருக்கின்றது எனத் தெரியாமல், அதில் கையொப்பம் இட்டேன். 

"பின்னர் என்னிடம் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் (CID), சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள். கையொப்பம் வாங்கிச் சிறிது நேரத்தில், தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம், தமிழில் எழுதிய வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கினார். ஆனால் அதில் என்னை எழுதி இருக்கின்றது என்பதை, வாசித்துக் காட்டவில்லை.

"என் மீது சுமத்தப்பட்டு உள்ள அனைத்துக் குற்றசாட்டுகளையும் நான் முற்றாக மறுக்கின்றேன்" என்றார்.

அதனையடுத்து, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம், குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார். அதன் போது, "உதயசூரியன் சுரேஷ்கரனை (கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்தவர்) எனக்குத் தெரியும், ஆனால் பழக்கமில்லை. அடுத்ததாக நடராஜா புவனேஸ்வரன் (கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்தவர்) என்பவரைத் தெரியும்.

"கடற்றொழிலுக்குப் போய் வந்த பின்னர், மாலையில் சில வேளை கள் குடிக்கப் போவேன். சிலவேளை வீட்டில் இருப்பேன். நடராஜா புவனேஸ்வரன் வீட்டுக்குக் கள் குடிக்க 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில் தான் இறுதியாகச் சென்றேன். பின்னர் வழக்கு ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மாணவி கொலை செய்யப்படும் காலத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே போவதில்லை. 

"நான் கள் குடிக்கப் போகும் போது, எப்போதும் தனியாகவே போவேன். யாருடனும் கூட்டுச் சேர்ந்து போவதில்லை. இந்த வழக்கில் 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரஹாசன், என்னுடன் பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர். அதனால் அவரை நன்கு தெரியும். 

"ஆறாம் எதிரியான சிவதேவன் துசந்த் என்பவரை, எனக்கு முன்னர் தெரியாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், சிறைச்சாலையில் இருக்கும் போதே பழக்கம். 
"மாணவி கொலை செய்யப்பட்ட 13ஆம் திகதி, நான் வீட்டில் இருந்து பனை மட்டை வெட்டிக்கொண்டு இருந்தேன். எனக்கும் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாருக்கும் இடையில், எந்தப் பிரச்சினையும் இல்லை. 

"ஊர்காவற்றுறை நீதிமன்றில், கதிரை ஒன்று களவாடியமை தொடர்பில் வழக்கு ஒன்று இருந்தது. அது, புங்குடுதீவை சேர்ந்த ஒருவர் கொழும்பில் வசித்து வரும் நிலையில், அவரது வீட்டில் இருந்த கதிரையை களவாடியமை தொடர்பில் அந்த வழக்கின் முறைப்பாட்டாளர், வீட்டின் உரிமையாளர் தான். மாணவியின் வீடு, கதிரை களவாடிய வீட்டுக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது. 15 நிமிடம் நடந்து செல்ல வேண்டும்.படுகொலை செய்யப்பட்ட மாணவியை, நான் ஒரு தடவை கூடக் காணவில்லை. 

"இந்த வழக்கின் 6ஆம் எதிரியான சிவதேவன் துசந்த், மாணவியை ஒருதலையாகக் காதலித்தமை தொடர்பில், எனக்கு எதுவும் தெரியாது. மாணவியைக் கடத்தி தருமாறு, துசந்த் என்னிடம் கேட்டதும் இல்லை, அதற்காக எனக்கு 23 ஆயிரம் ரூபாய் பணம், கப்பமாகத் தரவும் இல்லை. 

"இந்த வழக்கில் உள்ள தவக்குமார், சந்திரஹாசன், துசந்த் ஆகியோருடன் சேர்ந்து, நான் மாணவியை கடத்தவும் இல்லை, வன்புணர்வுக்கு உட்படுத்தவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை. எனக்கும், மனைவி, பாடசாலை செல்லும் மகள் உண்டு. அவ்வாறான செயலில் நான் ஈடுபட மாட்டேன். 

"மாணவியின் படுகொலை, மிகக் கொடூரமாக நடந்துள்ளது. அதனை, இராணுவத்தினர் செய்ததாகவே முன்னர் ஊரில் கதைத்தார்கள். இது தொடர்பில் நான், எனது சட்டத்தரணியிடம் கூறி இருந்தேன். ஆனால் வழக்கின் சாட்சியங்கள் பதியப்படும் போது, அது தொடர்பில் சட்டத்தரணி எந்தச் சாட்சியத்திடமும் கேட்கவில்லை. 

"இந்த வழக்கில் சம்பவ இடத்தில் என்னைக் காலையில் கண்டதாகச் சாட்சியம் அளித்த பாலசிங்கம் என்பவர், எனது மைத்துனர். நான், அவரின் தங்கையைத் தான் திருமணம் முடித்துள்ளேன். அவரும் எனது மனைவியும், ஒருநாள் என்னை வவுனியா சிறைச்சாலையில் சந்தித்து, தம்மை புலனாய்வுத் துறையினர் மிரட்டுவதாகவும், தமது வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து, பொய்ச் சாட்சி கூறுமாறு மிரட்டுவதாகவம் கூறினார்கள். அதனால் பயத்தினால் தான், அன்று எனது மச்சான் எனக்கு எதிராகச் சாட்சியம் அளித்தார். 

"அது தொடர்பிலும் நான் எனது சட்டத்தரணிக்குக் கூறி இருந்தேன். அவர், அது தொடர்பில் மன்றில், எந்தச் சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை. 

"என்னை பொலிஸார் தாக்கியமை தொடர்பில், அப்போதைய ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் லெனின்குமாரிடம் கூறி இருந்தேன். அங்கும் நான் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றார்.

மூன்றாம் எதிரி சாட்சியம்

மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் சாட்சியமளிக்கையில், "14 ஆம் திகதி காலை 10 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சில பொலிஸார், என்னைக் கைது செய்தனர். பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று, ஆடைகளைக் களைந்து, இரண்டரை மணித்தியாலங்களாக அடித்துத் துன்புறுத்தி, சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள். அதேபோலவே புலனாய்வுத் துறையினரும், சிங்களத்தில் எழுதிய தாளில் கையொப்பம் வாங்கினார்கள். 

"நான் இன்னும் திருமணம் செய்யவில்லை. எனக்கு, திருமணம் பேசி முற்றாகி இருந்த சமயத்தில் தான், இந்த வழக்கில் என்னைக் கைது செய்தனர் அதனால், திருமணமும் நின்று விட்டது. 

"புங்குடுதீவில் வசிக்கும் அம்பிகா என்பவர் கொழும்பில் வசித்த வேளை, அவரது வீட்டில் இருந்து கதிரை களவாடப்பட்டமை தொடர்பில் அவர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதில் எனது பெயரையும் எனது அண்ணாவான ஜெயக்குமாரின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.

அந்தக் குற்றத்தை நான் ஏற்றுக்கொண்டேன். படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார், அந்த வழக்குக்காக நீதிமன்றுக்கு சாட்சியம் அளிக்க வந்து இருந்தார், ஆனால் சாட்சியத்தின் போது, தனக்கு எதுவும் தெரியாது என்றே கூறி இருந்தார். 

"எனக்கு, கள் குடிக்கும் பழக்கம் நீண்டகாலமமாக இல்லை. கள் சீசன் நேரம் மட்டுமே குடிப்பேன். புவனேஸ்வரன் வீட்டுக்குக் கள் குடிக்கப் போவதில்லை. மாணவி கொலை செய்யப்படுவதற்கு ஒரு வருடத்துக்கு மேலாக, அங்கு சென்றதில்லை.

"மாணவியைக் கடத்தி, 23,000 ரூபாய் பணத்தைப் பெற வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை. நான் உழைத்துச் சாப்பிடுபவன். அந்தக் கதிரையைக் கூட, நான் களவாடவில்லை. அதனை, ஜெயக்குமார் தான் சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்தார். அதனை நான் இறக்கி, சற்றுத் தூரம் தள்ளி வைத்தேன். அதுவே நான் செய்த குற்றம். 

"மாணவி படுகொலை செய்யப்பட்ட தினமான 13ஆம் திகதி, நான் எனது சகோதரனான இந்திரகுமாருக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு ஒன்று இருப்பதனால், அவரை பஸ்ஸில் ஏற்றி விட காலை 7.30க்கு, சைக்கிளில் அழைத்துச் சென்றேன். அதனை, படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரன் உள்ளிட்டவர்கள் கண்டார்கள். ஆலடிச் சந்தியில் நின்று, காலை 8.20 மணிக்கு பஸ் ஏற்றி விட்டேன். 

"இந்த தகவல்களை நான் பொலிஸாரிடமும் புலனாய்வுத் துறையினரிடமும் தெரிவித்து உள்ளேன். எனது சட்டத்தரணியிடமும் தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர், அது தொடர்பில் மன்றில் தெரிவிக்கவில்லை. 

"என்னை பொலிஸார் அடித்து துன்புறுத்தல் செய்தமை தொடர்பில், பொலிஸ் உயர் அதிகாரி, சட்ட வைத்திய அதிகாரி, புலனாய்வுத் துறையினர், ஊர்காவற்றுறை நீதவான் மற்றும் இந்த நீதிமன்றில் என, 5 இடங்களில் கூறியுள்ளேன். 

"இந்த குற்றத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுக்கின்றேன்" என்றார்.

நான்காம் எதிரி சாட்சியம்

நான்காம் எதிரியான மகாலிங்கம் சசீந்திரன் சாட்சியமளிக்கையில், "இந்தக் குற்றத்துக்கும் எனக்கும், எந்தத் தொடர்பும் இல்லை. முதலில், மாணவியை நான் தான் கடத்தி, வன்புணர்வுக்கு உட்படுத்திப் படுகொலை செய்தேன் என, பொலிஸார் கூறினார்கள்.

தற்போது, அந்தக் குற்றத்துக்கு உடந்தையாகச் செயற்பட்டமை, திட்டம் தீட்டிக் கொடுத்தமை என, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது. 

"இந்த குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுக்கிறேன். என் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டால், எனது அம்மா இறந்து விட்டார், எனது வீடு அழிக்கப்பட்டு விட்டது. 

"இந்த வழக்கில், எனக்கு எதிராக இதுவரையில் எந்த சான்றுப் பொருட்களும் முன்வைக்கப்படவில்லை. சாட்சியங்களும் எனக்கு எதிராக இல்லை 
"ஒருவர் மாத்திரம், மாணவி படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் 12ஆம் திகதி, என்னை புங்குடுதீவில் வான் ஒன்றில் கண்டதாகவும், நாங்கள் வானில் இருந்து மாணவி பஸ்ஸில் வந்து இறங்கிச் செல்வதனை பார்த்ததாகவும் சாட்சியம் அளித்து உள்ளார். 

ஆனால் நான், குற்றச் சம்பவத்துடன் தொடர்பு உள்ளவன் எனச் சாட்சியம் அளிக்கவில்லை. 

"நான், மாணவி கொல்லப்பட்ட தினத்தன்று, கொழும்பில் நின்றேன். அன்றைய தினம் காலை, கோவிலுக்குச் சென்று விட்டு, நாங்கள் தங்கிருந்த லொட்ஜ் முன்பாக உள்ள உணவகத்தில், உணவு அருந்தினேன். காலை 9 மணியளவில் நண்பன் ஒருவன் வந்தான் அவனுடன் சென்று வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த மதுபானசாலைக்குச் சென்று மதுபானங்களை வாங்கிகொண்டு, மீண்டும் நாம் தங்கி இருந்த லொட்ஜுக்கு வந்து, மது அருந்தினோம். 

"அப்போது அங்கு குமார் அண்ணா (சுவிஸ்குமார்) நிசாந்தன், கண்ணா ஆகியோரும் வந்து, எம்முடன் மது அருந்தினார்கள். அப்போது நான், எனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு, அங்கிருந்து கசினோவுக்குச் சென்றேன். அங்கிருந்து மதியம், மீண்டும் லொட்ஜுக்கு வந்தேன். 

"பின்னர் நாம் அங்கிருந்து மோதரைக்குச் சென்றோம். அங்கு, ஒரு மதுபானசாலைக்குச் சென்று மது அருந்தினோம். 

"பின்னர் 14ஆம் திகதி, புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்தோம். கொழும்பில் எமது நண்பனும் ஓட்டோ ஒடுபவருமான காண்டீபன் என்பவரின், ஒன்றுவிட்ட சகோதரி தான் மாணவி. அதனால் நாம், மாணவியின் இறுதிச் சடங்குக்காக, கொழும்பில் இருந்து புங்குடுதீவுக்கு வந்தோம். 

"அதற்கு முன்னர் எனது அண்ணனான சுவிஸ் குமார், 7ஆம் திகதி, சுவிஸ் நாட்டுக்குச் சென்று இருக்க வேண்டும். 5ஆம் திகதி சுவிஸில், வவுனியாவை சேர்ந்தவர் நண்பனாக இருந்தவர் ஒருவர் உயிரிழந்து, அவரது உடல் வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டதனால், அவரது இறுதிச் சடங்குக்குச் சென்றமையால், 7ஆம் திகதி சுவிஸுக்குச் செல்ல முடியாது போய் விட்டது. அதனாலேயே அவர், எம்முடன் கொழும்பில் தங்கி இருந்தார். 

"மாணவியின் இறுதிச் சடங்குக்கு நாங்கள், கொழும்பில் இருந்து வந்து கலந்துகொண்ட பின்னர், புங்குடுதீவில் நின்றோம். 17ஆம் திகதி காலை, புளியங்கூடல் விநாயகர் ஆலய தேர்த் திருவிழாவுக்குச் சென்று, அன்னதானத்தில் சாப்பிட்டு விட்டு கொழும்புக்குச் செல்வதற்கு வாகனத்தில் தயாராக இருந்த வேளை, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து தொலைபேசி ஊடாக, எமது வாகனத்தில் இருந்த நண்பன் ஒருவனுக்கு பொலிஸார் கூறினார்கள், 'துசாந்த் என்பவருக்கு, சசிக்குமார் (சுவிஸ் குமார்) காசு கொடுத்துள்ளார்.

அது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும்' என. நாம் அதற்காக பொலிஸ் நிலையம் வருவதாகக் கூறினோம். அதற்கு அவர்கள், 'இல்லை, நீங்கள் ஆலடி சந்திக்கு மாறுங்கள்' என்று கூறினார்கள். நாங்கள், வாகனத்தில் அங்கு சென்றோம். 

"அங்கு நின்ற இரு பொலிஸார்ஈ குமார் அண்ணனை (சுவிஸ் குமார்) விசாரணை செய்யும் போது, நாங்கள் வாகனத்தில் இருந்தோம். அப்போது அங்கு வந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கோபி எனும் பொலிஸ் உத்தியோகத்தர் வந்து 'என்னடா இங்கே நிற்கிறீங்க?' என எம்மிடம் கேட்டார். நாம், குமார் அண்ணாவை விசாரிப்பதைச் சொன்னோம். பின்னர் கோபி, எம்முடன் மாங்காய் குத்திச் சாப்பிட்டார்.

பிறகு, அங்கிருந்து சென்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மற்றும் மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை அழைத்து வந்து சந்திரஹாசன், நிசாந்தன், பெரியாம்பி, கண்ணா ஆகியோர் கைகளில் விலங்கிட்டுக் கைது செய்து, கொண்டு சென்றனர். 

"அப்போது நான், 'ஏன் கைது செய்கிறீங்க?' எனக் கேட்ட போது, 'சிறிய விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றோம். முடிய விடுகின்றோம்' எனக் கூறி அழைத்துச் சென்றனர். அப்போது, நானும் குமார் அண்ணாவும், வாகனத்தில் பொலிஸாரைப் பின்தொடர்ந்து சென்றோம்.

அப்போது வழியில், சந்திரஹாசன் வீட்டில் சந்திரஹாசனைக் கைது செய்த விடயத்தை கூறிக்கொண்டு இருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், யார் சசி எனக் கேட்டனர். நான் தான் என்றேன். தமக்கு பின்னால் மகா வித்தியாலயம் வருமாறு கூறி சென்றனர். நான் மகா வித்தியாலயம் சென்ற போது, என்னையும் கைது செய்தனர். 

"எங்களை, குறிகட்டுவான் பொலிஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். நான் சென்ற போது, ஏற்கெனவே கைது செய்து கொண்டு சென்று இருந்த நிசாந்தனை, நிர்வாணமாக மரத்தில் கைகள் இரண்டும் பின்புறமாக கட்டித் தூக்கித் தாக்கியவாறு பொலிஸார் இருந்தனர். 

"என்னைக் கொண்டு சென்றதும், நிசாந்தனை இறக்கிவிட்டு, எனது இரண்டு கைகளையும் பின்புறமாகக் கட்டி, மேசை ஒன்றின் மீது ஏற்றி, மரத்தில் கட்டித்தூக்கி அடித்தார்கள்.

அப்போது கயிறு இளகி, எனது கால் தரையில் படத் தொடங்கியதும், கதிரை ஒன்றில் ஏற்றிக் கட்டி, தூக்கி அடித்தார்கள். 

"தாம் கேட்கும் 18 கேள்விகளுக்கு பதில் சொல்லு எனக் கேட்டு அடித்தார்கள். நான் தான் மாணவியைக் கடத்தியதாகவும், நானே முதலில் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் ஒப்புக்கொள்ளுமாறு கூறி, என்னைத் தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் ஒப்புக்கொண்டேன். 

"உடனே அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் பொலிஸார், ஒலிபெருக்கிகளைக் கட்டி, மகாலிங்கம் தயாநிதி ஆகியோரின் மகனே, மாணவியை வன்புணர்ந்து கொலை செய்தார் என ஊருக்கு அறிவித்தார்கள்.

"பின்னர் எம்மை, குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் இருந்து, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்ல பொலிஸார், பொலிஸ் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்ற வேளை, ஊரில் உள்ளவர்கள் நாலைந்து வாகனங்களில் ஏறி வந்து கொண்டு இருந்தார்கள். உடனே ஜீப் லைட்டை நிறுத்தச் சொல்லி, ஜீப்பைத் திருப்பி, மீண்டும் எம்மை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு வந்தனர். 

"பின்னர் அங்கிருந்து கடற்படையின் உதவியுடன், அவர்களின் படகில் ஏற்றி, எம்மை காரைநகர் கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். 

"மறுநாள் எம்மை, சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்றனர். அங்கு நாம் வைத்தியரிடம் தாக்கப்பட்டமை தொடர்பில் முறையிட்டோம். அவர், கையில் ஒரு பேப்பரில் மனித உடல் அமைப்பினைக் கீறி, அதில் தோள் பட்டை, கை மணிக்கட்டு தலை பகுதி போன்ற பகுதிகளைக் குறித்தார்.

அத்துடன் 'நீங்கள் உள்ள உடல் நிலைக்கு? நீங்கள் மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சைப் பெற வேண்டும். ஆனாலும், யாழ்ப்பாணத்தில் உள்ள தற்போதைய சூழலில், அது முடியாது. சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுங்கள்' எனக் கூறி அனுப்பினார். 

"அதன் பின்னர், எம்மை நீதவானிடம் அழைத்துச் சென்றார்கள் நாம் அங்கு எம்மைத் தாக்கிய விடயத்தைத் சொன்னோம். அத்துடன் சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில், நான் கொழும்பில் நின்றேன் எனவும் கூறினேன். 

"அப்போது பொலிஸார், மாணவியின் மூக்குக் கண்ணாடி உட்பட சில சான்றுப் பொருட்களை மீட்க வேண்டும், இவர்களை 24 மணித்தியாலம் தமது பாதுகாப்பில் வைத்து இருக்க அனுமதிக்க வேண்டும் என, நீதவானிடம் கோரினார்கள். அதற்கு, நீதவான் அனுமதி அளித்தார். 

"அதன் பின்னர் மீண்டும் எம்மை பொலிஸ் நிலையம் அழைத்து வந்து, ஏன் நீதவானுடன் கதைத்தாய் எனக் கேட்டுத் தாக்கினார்கள். பின்னர் இரவு 11 மணியளவில், என்னையும் சந்திரஹாசனையும், பொலிஸ் வாகனத்தில், புங்குடுதீவில் உள்ள எமது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 

"அங்கு எமது வீடு, அழிக்கப்பட்டுத் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிலையில் இருந்தது. எரிந்த வீட்டில், எனது அம்மாவின் மூக்குக் கண்ணாடி, பாதி எரிந்த நிலையில் காணப்பட்டது. அதனை, மாணவியின் கண்ணாடி என பொலிஸார் மீட்டனர். 

"பின்னர் மறுநாள் மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்று அறிக்கை பெற்ற பின்னர், எம்மை நீதவானிடம் அழைத்து சென்றனர். நீதவான், எம்மை விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டார். 

"முதலில் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தான் தடுத்து வைத்து இருந்தனர். பின்னர் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றினார்கள். அங்கிருந்து ஒன்றரை மாதம், கொழும்பு நாலாம் மாடிக்கு, புலனாய்வுத் துறையினர் கொண்டு சென்றனர். கொண்டு சென்ற உடனே இரண்டு அடி அடித்து விட்டு, 'நாளை வருவோம், கேட்கிற கேள்விகளுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்' எனக் கூறி சென்றனர். 

"அதன் பின்னர், ஒருநாள் கூட என்னை அவர்கள் அடித்ததும் இல்லை, என்னிடம் எந்தக் கேள்வியையும் கேட்டதும் இல்லை. 

"இந்த வழக்கில் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. இதனால் எனது அம்மா உயிரிழந்து விட்டார். வீடும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது. தற்போது, எனது மனைவி, இரண்டு பிள்ளைகளையும் இழந்து விடுவேனோ என்று பயமாக உள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறேன். 

"ஊர்காவற்றுறை பொலிஸார், நான் தான் மாணவியைக் கடத்தினேன், வன்புணர்வுக்கு உட்படுத்தினேன் என, முதலில் கூறி வாக்குமூலத்தில் கையொப்பம் வைத்தார்கள். ஆனால் இந்த மன்றினால் எனக்கு தரப்பட்ட குற்றப்பகிர்வுப் பத்திரத்தில், அந்த வாக்கு மூலம் இணைக்கப்பட்டு இருக்கவில்லை" எனத் தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/வித்தியா-படுகொலை-வழக்கு-எதிரிகளின்-சாட்சிப்பதிவு-ஆரம்பம்/175-202976

  • தொடங்கியவர்

கட்டி வைத்து அடித்த மக்களிடமிருந்து விஜயகலா காப்பாற்றினார் – சுவிஸ்குமார் சாட்சியம்

கட்டி வைத்து அடித்த மக்களிடமிருந்து விஜயகலா காப்பாற்றினார் – சுவிஸ்குமார் சாட்சியம்
 

வேலணை மக்கள் என்னைக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தபோது விஜயகலா மகேஸ்வரன் வந்து என்னைக் காப்பாற்றினாா். அவா் என்னை எனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வரை என்னுடனேயே இரண்டு மணிநேரமாகக் காத்திருந்தாா்

இவ்வாறு வித்தியா படுகொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான சுவிஸ்குமாா் தீா்ப்பாயத்திடம் சற்று முன் சாட்சியம் அளித்தாா்.

வித்தியா படுகொலை வழக்கின் எதிரி தரப்பு சாட்சியங்கள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற தீா்ப்பாயம் முன்னிலையில் நடைபெறுகின்றன. இந்த வழக்கின் 9 ஆவது எதிரியான மகாலிங்கம் சசிக்குமாா் (சுவிஸ்குமாா்) தற்போது சாட்சியம் அளித்து வருகின்றாா்.

அவா் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது-

எனது தம்பியை ஊா்காவற்றுறை பொலிஸாா் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை குறித்து முறைப்பாடு செய்ய யாழ்ப்பாணம் புறப்பட்டபோது வேலணையில் என்னை வழிமறித்த மக்கள் போஸ்ரில் கட்டி வைத்து அடித்தாா்கள்.

அப்போது அங்கு வந்த விஜயகலா மேடம் என்னை சசியின் அண்ணாவா என்று கேட்டா?. நான் ஓம் என்று சொன்னவுடன் மக்களைக் தாக்க வேண்டாம் என்றும், என்னை அவிழ்த்து விடுமாறும் மக்களிடம் கூறினாா். அதனால் மக்கள் என்னை அவிழ்த்து விட்டாா்கள்.

எனது குடும்பத்தினா் அந்த இடத்துக்கு வரும் வரை 2 மணி நேரமாக விஜயகலா மேடம் என்னுடனேயே இருந்தாா். அப்போது இரவு 12 மணி. பின்னா் எனது மனைவியும் எனது அம்மாவும் அந்த இடத்துக்கு வந்து என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்”- என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தா்ா.

அவரிடம் பிரதி மன்றாடியாா் அதிபதி குறுக்குவிசாரணை மேற்கொண்டுள்ளாா்.

மேலதிக விவரங்கள் விரைவில்…….

http://newuthayan.com/story/23873.html

  • தொடங்கியவர்

பரபரப்பான கட்டத்தில் வித்தியா வழக்கு – எதிரி தரப்பு சாட்சியம் நிறைவு

 
பரபரப்பான கட்டத்தில் வித்தியா வழக்கு – எதிரி தரப்பு சாட்சியம் நிறைவு
 

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் எதிரி தரப்புச் சாட்சியங்கள் நிறைவடைந்துள்ளன.

மாணவி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்பாக நடைபெற்று வருகின்றன. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்படிருந்த நிலையில் நேற்றும், இன்றும் எதிரி தரப்புச் சாட்சியப் பதிவுகள் நடைபெற்றன. 9 சந்தேக நபர்களின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டன.

இன்று எதிரி தரப்புச் சாட்சியங்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை செப்ரெம்பர் 12ஆம் திகதிக்கு வழக்குத் தொகுப்புரைக்காக நியமிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வழக்குத் தொடுநர் தரப்பும், எதிரி தரப்பும் வாய்மொழி மூல மற்றும் எழுத்து மூல தொகுப்புரையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

http://newuthayan.com/story/23895.html

  • தொடங்கியவர்

10 நிமிடத்தில் காப்பாற்றுவேன் – சுவிஸ்குமாருக்கு உறுதியளித்த சிறிகஜன்!!

 
10 நிமிடத்தில் காப்பாற்றுவேன் – சுவிஸ்குமாருக்கு உறுதியளித்த சிறிகஜன்!!
 

எனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றனர். 10 நிமிடத்தில் நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்.

இவ்வாறு சாட்சியமளித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமார்.

மாணவி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்பாக நடைபெற்று வருகின்றன. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்படிருந்த நிலையில் நேற்றும், இன்றும் எதிரி தரப்புச் சாட்சியப் பதிவுகள் நடைபெற்றன.

அதில் சாட்சியமளித்த சுவிஸ்குமார் தெரிவித்தாவது-

புங்குடுதீவில் நின்று மே மாதம் 17ஆம் திகதி சிறிகஜன் எனது நண்பருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். என்னுடன் கதைக்க வேண்டும் என்று கூறினார். நான் அப்போது புளிங்கூடல் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவில் இருந்தேன். எனது நண்பர் நான் கோயிலுக்குள் என்று சிறிகஜனுக்குத் கூறினார். நான் வந்தவுடன் தன்னுடன் கதைக்குமாறு நண்பருக்கு அவர் கூறினார்.

நான் கோயிலால் வந்து திருப்பி அவருக்கு அழைப்பெடுத்தேன். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரைச் சகோதரர்களுடன் சந்திக்கச் சென்றேன். அங்கு வைத்து சகோதர் உட்பட 4 பேரைக் கைது செய்தனர். நான் ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டேன். கைதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சிறிகஜன் கூறினார். வேறொரு தேவைக்காக உங்களைச் சந்திக்கவே தான் வந்தார் என்று சிறிகஜன் கூறினார்.

மறுநாள் காலை சிறிகஜன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குள் வந்தார். நான் வீட்டுக்குள் இருந்தேன். மனைவிதான் வெளியே சென்று அவருடன் பேசினார். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். நான் வீட்டுக்கு வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றார்கள். உங்களைப் 10 நிமிடத்தில் என்னால் காப்பாற்ற முடியும். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார்.

நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தமது வாகனம் வருகின்றது என்றும், தன்னுடன் வருமாறும் கூறினார்.

அதன்படி வாகனத்தில் ஏற்றி என்னை யாழ்ப்பாணம் கொண்டு வந்தார். நான், மனைவி, மனைவியின் தாய் மூவரும் வந்தோம். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மு.ப. 11 மணியளவில் எங்களை விட்டார். அதன்பின்னர் பி.ப. 5 மணியளவில் அவர் வந்தார். நான் அவரிடம் நாங்கள் காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று கூறினார். நான் மறந்துவிட்டேன் என்று கூறிய அவர், மனைவியின் தாயிக்கு கண்ணுக்கு அருகே காயம் ஒன்று இருந்தது. அதற்கு முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு நீங்கள் போகலாம் என்று கூறினார். நான் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். மருத்துவனையில் சேர்வதற்கான துண்டு ஒன்றையும் தந்து என்னை வெளியே விட்டார்.

எங்கள் படங்களை முகநூல், இணையத்தளங்களில் வெளியிட்டு விட்டார்கள். நான் அச்சத்தால் யாழ். போதனா வைத்தியசாலைக்குப் போகவில்லை. பஸ் ஏறி நான் கொழும்புக்குச் சென்றேன். – என்றார்.

http://newuthayan.com/story/23914.html

  • தொடங்கியவர்

வித்தியா படுகொலை: விஜயகலா தன்னை காப்பாற்றி விடுவித்ததாக சுவிஸ் குமார் சாட்சியம்

 

 

வித்தியா படுகொலை: விஜயகலா தன்னை காப்பாற்றி விடுவித்ததாக சுவிஸ் குமார் சாட்சியம்
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளின் சாட்சி நெறிப்படுத்தல்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

Trial at Bar தொடர் விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார இரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளனர்.

7 ஆம், 8 ஆம் மற்றும் 09 ஆம் இலக்க பிரதிவாதிகள், சாட்சியாளர் கூண்டில் ஏறி இன்று பிற்பகல் வரை சாட்சியமளித்தனர்.

7 ஆம் இலக்க பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிஷாந்தன் எனப்படும் குகநாதன் 8 ஆம் இலக்க பிரதிவாதியான கண்ணன் எனப்படும் கோகிலன் மற்றும் பிரதான பிரதிவாதியான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோர் இன்று சாட்சியமளித்தனர்.

மேலும், சுவிஸ் குமாரின் மனைவி மகாலிங்கம் மகாலக்சுமியும் இன்று விசாரணை மன்றில் சாட்சியமளித்திருந்தார்.

இதேவேளை, நேற்று (28) மீள் அழைப்பாணை விடுக்கப்பட்ட யாழ். சட்ட வைத்திய அதிகாரி செந்தில்நாதன் மயூரனிடமும் இன்று சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி தனது கணவரான சுவிஸ் குமார் இலங்கைக்கு வந்ததாகும், மே மாதம் 05 ஆம் திகதி சுவிஸிற்கு திரும்பிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாகவும் மகாலிங்கம் மகாலட்சுமி இன்று சாட்சியமளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததாகவும் , அதன் போது அனைத்து நாட்களும் தனது கணவரான சுவிஸ்குமார் தன்னுடனேயே தங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் உண்டா என அரச தரப்பு சட்டத்தரணியால் குறுக்குக்கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

எனினும், தற்சமயம் தம்மிடம் அதற்கான ஆதாரம் இல்லை என சுவிஸ் குமாரின் மணைவி பதிலளித்துள்ளார்.

இதேவேளை, வழக்கின் 42 ஆவது சாட்சியாளரான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியாகமகே சிசிர திசேரா இன்று மீண்டும் சாட்சியமளித்திருந்தார்.

மே மாதம் 12 ஆம் திகதி காலை முதல் மாலை வரை என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பில் தான் வழங்கிய சாட்சியம் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என 7 ஆம் இலக்க பிரதிவாதியான நிஷாந்தன் ஏற்கனவே சாட்சியமளித்திருந்தார்.

எனினும், இந்த குற்றச்சாட்டிற்கு பதில் வழங்கும் வகையில், அன்றையதினம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தையும் 42 ஆம் இலக்க சாட்சியாளர் இன்று மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார்.

இதேவேளை, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி தாம் கொழும்பில் இருந்ததாகவும், 14 ஆம் திகதியே புங்குடுதீவிற்கு சென்றிருந்ததாகவும் 7 ஆம் மற்றும் 8 ஆம் இலக்க பிரதிவாதிகள் சாட்சியமளித்துள்ளனர்.

இந்த குற்றச்செயலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் பிரதான பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 9 ஆம் இலக்க பிரதிவாதியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் சாட்சியமளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி வேலணையிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றபோது, வேலணை மக்கள் தன்னை மறித்து வைத்து, ”வித்தியா கொலையுடன் தொடர்புடையவன் இவன்தான்” என கூறி மின்கம்பத்தில் கட்டி அடித்ததாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

அன்றிரவு 11.30 அளவில் அமைச்சர் விஜயகலா அவருடைய சாரதியுடன் அங்கு வருகை தந்து தன்னைக் காப்பாற்றி விடுவித்ததாகவும் சுவிஸ் குமார் கூறியுள்ளார்.

இதன்போது அமைச்சர் விஜயகலா ஏன் உங்களைக் காப்பாற்ற வேண்டும் என குறுக்குக்கேள்வி கேட்கப்பட்டது.

அது தொடர்பில் அமைச்சரிடமே வினவ வேண்டும் என சுவிஸ் குமார் பதிலளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன், தன்னைக் காப்பாற்றுவதாகக் கூறி புங்குடுதீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அன்று பகல 11 மணியளவில் கூட்டிச்சென்றதாகவும் மாலை 5 மணி வரை யாழ். பொலிஸ் நிலையத்தில் தன்னை வைத்திருந்ததாகவும் சுவிஸ் குமார் மேலும் சாட்சியமளித்துள்ளார்.

பின்னர் அன்று மாலை 5 மணிக்கு தன்னை வீட்டிற்கு அனுப்பியதாகவும், அன்றிரவு தான் கொழும்பிற்கு சென்றதாகவும் தாம் தப்பித்து செல்லவில்லை எனவும் பொலிஸார் விடுவித்த பின்னரே சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, மொஹமட் இஸ்லாத்தை சந்தித்ததை ஒப்புக்கொண்ட அவர், இரண்டு கோடி ரூபா தருவதாகவும் அரச சாட்சியாளராக மாற விரும்புவதாகவும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தம்மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் சுவிஸ் குமார் இன்று மறுப்புத்தெரிவித்துள்ளார்.

மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் பிரதிவாதிகளின் சாட்சிகள் இன்று நெறிப்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இருதரப்பு தொகுப்புரைகளும் இடம்பெறவுள்ளதாக மன்று அறிவித்துள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/08/வித்தியா-படுகொலை-விஜயகல-3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.